24.2.10

காதலிப்பார் யாருமில்லை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காதலிப்பார் யாருமில்லை!

கேள்வியும் நானே! பதிலும் நானே!

காதல் திருமணத்திற்கு உரிய முக்கிய கிரக அமைப்பைச் சொல்லமுடியுமா?

காதல் திருமணங்களுக்கான கிரக அமைப்புக்கள்!

(Indications of love marriages)

ஜாதகத்தில் காதல் திருமணத்திற்கான வாய்ப்பைக் கோடிட்டுக் காட்டும் கிரக அமைப்புக்கள்:
1
ஐந்தாம் வீட்டதிபதியும், லக்கின அதிபதியும் கூட்டாக ஒரு வீட்டில் இருக்கும் நிலைமை!

2
ஐந்தாம் வீட்டதிபதியும், லக்கின அதிபதியும் வலிமையுடன் இருப்பதுடன், ஒருவரை ஒருவர் பார்வையில் வைத்திருக்கும் நிலைமை!

3
ஐந்தாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகி இருத்தல்

4
சந்திரன் அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் ஆகிய மூவரில் ஒருவர் வலிமையாக இருந்து ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அல்லது பார்க்கும் நிலைமை

5
ஒன்பதாம் வீட்டில் ஒரு தீய கிரகம் வலிமையுடன் இருப்பது. (ஒன்பதாம் வீடு குடும்ப மரபுகளுக்கு உரிய வீடு. அதை நினைவில் வைக்கவும். அதை உடைத்து, ஜாதகனை மரபுகளைக் கடந்து காதல் திருமணம் செய்துகொள்ள வைக்கும் நிலைப்பாடு இது)

6
சுக்கிரனும், செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கும் நிலைமை!

ஒரு நாட்டிற்கான ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது, வெளிவிவகாரங்களையும், (External affairs) சந்திக்கவிருக்கும் யுத்தங்களையும் காட்டும் (In Mundane Astrology, the Seventh House represents diplomacy & War) தனி மனிதர்களின் ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது மனைவியையும், அவளால் அடையவிருக்கும் இன்ப/துன்பங்களையும் காட்டும். என்னவொரு பொருத்தம் பாருங்கள்.

தீயகிரகங்களால் ஏழாம்வீடு பாதிக்கப்பெற்றிருந்தால், திருமணவாழ்க்கை அவலத்தில் முடிந்துவிடும். அதே நேரத்தில் சுபக்கிரகங்களால் மேன்மை பெற்றிருந்தால், இல்லற வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்!

காதல் கனிவதற்கும், கனிந்து பலன் தருவதற்கும் 5ஆம் வீடு முக்கியமானதாகும். 5ஆம் வீடும் அதன் அதிபதியும் வலுவாக இருந்தாம் மட்டுமே உண்டாகும் காதல் கூடிவரும் அல்லது கனிந்து வரும், உனக்கு நான், எனக்கு நீ எனும் வாழ்க்கையையும் பெற்றுத் தரும்.

அப்படி 5ஆம் வீடு சரியாக இல்லையென்றால், காதலை நினைத்துப் பார்க்கக் கூடாது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றின் துவக்க வரிகளை அடிக்கடி பாடிவிட்டுச் சும்மா இருக்க வேண்டியதுதான்.

என்ன வரி அது?

ஆகா, உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

”காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

49 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,

    காதல் காதல் அது இல்லேயல் சாதல்!
    காதலாய் கசிந்து உருகும் கனிவானப் பாடம் கற்றேன்.
    இப்போது தான் புரிகிறது நிறைய விண்ணப்பங்கள் வந்ததன் காரணம்.
    "இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பார்ப்போம்"
    "நான் வெண்மேகமாக, விடி வெள்ளியாக வானத்தில் பிறந்திருப்பேன்"
    என்று ஆறுதலாக கூறி தப்பித்துக் கொண்டேன்.
    வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்ததால்,
    காதல் என்னும் பூம் புனழில் உலா வந்தாலும்,
    செவ்வான வீதியில் சிறகடித்துப் பறந்தாலும்,
    குளத்துக்கரை மரங்களில் எல்லாம் இதயம் செதுக்கப்பட்டுஅதனுள்ளே பெயர்கள் குடிபுகுந்தாலும்,
    மனம் அல்ல புத்தி மட்டும் நெருப்புச் சாலையில் நடப்பதாகவே உணர்ந்திர்ற்று.

    நெறி படுத்தியது எதுவாக இருக்கும் சந்திரனுடன் இருக்கும் நீசச் சனியோ?

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. Dear Sir,

    You've said earlier that Venus conjunct with rahu or ketu in navamsa is an indicator for love marriage.. i had checked this combination come true with analysis of three of my friends and relatives horoscope.Now the factors given would also be taken for further study.
    Thanks

    ReplyDelete
  3. அய்யா,

    சுக்கிரனும், செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கும் நிலைமையில் காதலா,

    Shukra-kuja Exchange பற்றி தாங்கள் பாடத்தில் படித்த ஞாபகம் !!!
    If Venus and Mars exchange their divisions, the female will go after other males.If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. :(

    ReplyDelete
  4. வணக்கம் சார்,
    என்னுடைய லக்னாதிபதி குருவும், ஐந்தாம் வீட்டு சந்திரனும் ஒருத்தர் ஒருத்தர் பார்கீனம்.....ஆனால் அப்படி ஒண்டும் எனக்கு அமையவில்லையே?
    அதுக்கு காரணம் எனக்கு சனி தசா நடக்குது plus ஆறாம் அதிபதி குருவுடன் சேர்ந்து இருக்கிறார் எண்டு நினைக்கிறன்.......

    நன்றி
    தனுஜா

    ReplyDelete
  5. வணக்கம்...

    நேற்று பின்னூட்டத்தில் இரண்டு கேள்விகள் கேட்டுள்ளேன் ஐயாவின் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.

    நன்றி..

    காதல்....

    ”காதலிக்க நேரமில்லை
    காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் வழியுமில்லை!”

    கண்ணதாசன்...

    அவ்வக் காலக்கட்டங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும், வழக்குகளுக்கும் ஏற்ப எல்லா சூழ்நிலைகளுக்கும் பாட்டெழுதி உள்ளார்...

    எல்லோருமே கவியரசர் ஆகிவிட முடியாது. அவரைப் போல எழுத முடியாது. அதற்குக் கடவுள் அருள் வேண்டும். அந்த அருள் அவரிடம் நிறையவே இருந்தது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்,

    நேற்றைய தினம் மன மகிழ்ச்சிக்கு இன்றோ மனதை மயக்குவது பற்றி ....பாடம் அருமை ...தாங்கள் சொன்ன அமைப்பில் எனது தனுசு லக்னம் 5 ம் அதிபதி 7 இல் உடன் சந்திரன் மற்றும் புதன்....சுக்ரன் 5இல் (6பரல் ,5இடம் 35 பரல்)9 ம் இடத்தை சனி 12 இல் இருந்து பார்கின்றது ....இதுவரை காதல் இல்லை ....இந்த அமைப்பு காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படுத்துமா(சற்றே பயத்துடன்)?
    நன்றி வணக்கம்,,,,,

    ReplyDelete
  7. அய்யா,
    குரு பகவான்தான் அனைத்திற்கும் முதல் கரணம். ஆனால் சில லக்னகல்லுக்கு அவர் நன்மை செய்வதில்லையே?
    உதாரணம் 3 & 6 க்கு அதிபதி ஆகிறார் துலா லக்னத்திற்கு, அவர் 10 இல் உச்சம் அடைகிறார், சுய வர்கத்தில் 8 marks.
    10 இல் 31 பரல்கள். நீங்கள் கூறிய அறிவு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், நிதி, நீதி ... etc அனைத்தும் குடுப்பார அய்யா? இந்த அமைப்பு எனக்கு :-)

    நன்றி
    சரவணா
    கோவை

    ReplyDelete
  8. Very true....For me 5th house has 19 paral and Raghu in 7th place.I had a relationship break after 8years of intimate relationship.However Guru aspects the 7th place from 11th place through his 9th parvai.

    I still don't know, whether I will get into love marriage or arranged marriage.

    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  9. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    காதல் காதல் அது இல்லேயல் சாதல்!
    காதலாய் கசிந்து உருகும் கனிவானப் பாடம் கற்றேன்.
    இப்போது தான் புரிகிறது நிறைய விண்ணப்பங்கள் வந்ததன் காரணம்.
    "இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பார்ப்போம்"
    "நான் வெண்மேகமாக, விடி வெள்ளியாக வானத்தில் பிறந்திருப்பேன்"
    என்று ஆறுதலாக கூறி தப்பித்துக் கொண்டேன்.
    வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்ததால்,
    காதல் என்னும் பூம் புனழில் உலா வந்தாலும்,
    செவ்வான வீதியில் சிறகடித்துப் பறந்தாலும்,
    குளத்துக்கரை மரங்களில் எல்லாம் இதயம் செதுக்கப்பட்டுஅதனுள்ளே பெயர்கள் குடிபுகுந்தாலும்,
    மனம் அல்ல புத்தி மட்டும் நெருப்புச் சாலையில் நடப்பதாகவே உணர்ந்திர்ற்று.
    நெறி படுத்தியது எதுவாக இருக்கும் சந்திரனுடன் இருக்கும் நீசச் சனியோ?
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. /////CUMAR said...
    Dear Sir,
    You've said earlier that Venus conjunct with rahu or ketu in navamsa is an indicator for love marriage.. i had checked this combination come true with analysis of three of my friends and relatives horoscope.Now the factors given would also be taken for further study.
    Thanks/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  11. /////vj said...
    அய்யா,
    சுக்கிரனும், செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கும் நிலைமையில் காதலா,
    Shukra-kuja Exchange பற்றி தாங்கள் பாடத்தில் படித்த ஞாபகம் !!!
    If Venus and Mars exchange their divisions, the female will go after other males.If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. :(////

    இன்று அது நடந்து கொண்டுதானே இருக்கிறது. சென்ற மாதம் ஜீ.வி.யில் கவர் ஸ்டோரி போட்டிருந்தார்கள்
    வாடகை மனைவிகள் எனும் தலைப்பில்!

    ReplyDelete
  12. /////Thanuja said...
    வணக்கம் சார்,
    என்னுடைய லக்னாதிபதி குருவும், ஐந்தாம் வீட்டு சந்திரனும் ஒருத்தர் ஒருத்தர் பார்கீனம்.....ஆனால் அப்படி ஒண்டும் எனக்கு அமையவில்லையே?
    அதுக்கு காரணம் எனக்கு சனி தசா நடக்குது plus ஆறாம் அதிபதி குருவுடன் சேர்ந்து இருக்கிறார் எண்டு நினைக்கிறன்.......
    நன்றி
    தனுஜா/////

    நான் சொல்லியுள்ளது பொது விதி. உங்கள் ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களைவைத்து, அது உங்களுக்கு இல்லாமல் போகலாம்!

    ReplyDelete
  13. /////Success said...
    வணக்கம்...
    நேற்று பின்னூட்டத்தில் இரண்டு கேள்விகள் கேட்டுள்ளேன் ஐயாவின் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.
    நன்றி..
    காதல்....
    ”காதலிக்க நேரமில்லை
    காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் வழியுமில்லை!”
    கண்ணதாசன்...
    அவ்வக் காலக்கட்டங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும், வழக்குகளுக்கும் ஏற்ப எல்லா சூழ்நிலைகளுக்கும் பாட்டெழுதி உள்ளார்...
    எல்லோருமே கவியரசர் ஆகிவிட முடியாது. அவரைப் போல எழுத முடியாது. அதற்குக் கடவுள் அருள் வேண்டும். அந்த அருள் அவரிடம் நிறையவே இருந்தது.
    வாழ்க வளமுடன்/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    நேற்றைய தினம் மன மகிழ்ச்சிக்கு இன்றோ மனதை மயக்குவது பற்றி ....பாடம் அருமை ...தாங்கள் சொன்ன அமைப்பில் எனது தனுசு லக்னம் 5 ம் அதிபதி 7 இல் உடன் சந்திரன் மற்றும் புதன்....சுக்ரன் 5இல் (6பரல் ,5இடம் 35 பரல்)9 ம் இடத்தை சனி 12 இல் இருந்து பார்கின்றது ....இதுவரை காதல் இல்லை ....இந்த அமைப்பு காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படுத்துமா(சற்றே பயத்துடன்)?
    நன்றி வணக்கம்,,,,,////

    லக்கினாதிபதியைப் பற்றி நீங்கள் சொல்ல்வில்லையே? அவர் முக்கியமில்லையா?

    ReplyDelete
  15. /////Jeevanantham said...
    No lover
    No wife...
    what to do...//////

    வயது என்ன என்று சொல்லவில்லையே?

    ReplyDelete
  16. //////Saravana said...
    அய்யா,
    குரு பகவான்தான் அனைத்திற்கும் முதல் காரணம். ஆனால் சில லக்கினங்களுக்கு அவர் நன்மை செய்வதில்லையே? உதாரணம் 3 & 6 க்கு அதிபதி ஆகிறார் துலா லக்னத்திற்கு, அவர் 10 இல் உச்சம் அடைகிறார், சுய வர்கத்தில் 8 marks.
    10 இல் 31 பரல்கள். நீங்கள் கூறிய அறிவு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், நிதி, நீதி ... etc அனைத்தும் குடுப்பார அய்யா? இந்த அமைப்பு எனக்கு :-)
    நன்றி
    சரவணா
    கோவை/////

    இதுவரை கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  17. /////Rathinavel.C said...
    Very true....For me 5th house has 19 paral and Raghu in 7th place.I had a relationship break after 8years

    of intimate relationship.However Guru aspects the 7th place from 11th place through his 9th parvai.
    I still don't know, whether I will get into love marriage or arranged marriage.
    Thanks
    Rathinavel.C//////

    எல்லாம் ஒருதடவைதான். பிறப்பு, இறப்பு, காதல், என்று எல்லாம் ஒருதடவைதான். ஒழுங்காக இருக்கும்

    அமைப்பு இருந்தால் அது அந்த ஒருதடவையிலே வெற்றி பெற்றிருக்கும்! ஆகவே பெற்றோர்களிடம் சொல்லி ஒரு பெண்ணைத் தேடி மணம் செய்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  18. ஐயா!!!

    பாடத்திற்கு நன்றி...ஒரு ஜோதிட இணைய தளத்தில் எனக்கு கிடைத்த ஒரு பக்கத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களின் அனுமதியுடன்...

    Love Marriages

    A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
    male and a female. The fifth house and the lord of the tenth and second houses
    have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
    a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
    Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
    acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
    and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
    either by association or by sight, there definitely becomes a chance for a love affair
    with the opposite sex.
    Any chart having similar combinations definitely has the ingredients for a love
    affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
    affair.
    If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
    be a heartbreaking experience for the native.
    The association of Mars and Venus increases the tendency for having love affairs,
    as the attraction towards the opposite sex increases. If such a combination
    aspects or has sight of Saturn, then the attraction increases even more.
    One must note that the Rashi and the Navamsha chart have equal importance, so
    both charts must be consulted.
    If the sixth lord makes aspects or associations in the above combinations, the
    affair is restricted and does not lead to marriage.
    When Saturn or Mars is in the 2nd, 7th or 12th house, this also
    indicates the discontinuation of such relationships. Mars in the
    fourth house gives similar results as well as if Rahu is situated in either the 1st, 5th, 7th, 9th or 12th houses from
    Venus, it gives similar results.
    The above rules are universal. There are also many other combinations, but they
    have many “if’s and but's”.

    ReplyDelete
  19. அய்யா நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் 7ம் வீட்டு அதிபதியும் 5ம் வீட்டு அதிபதியும் சந்தித்தால் அல்லது பரிவர்த்தனை ஆகி இருந்தால் காதல் திருமணம் என்று. அப்படி திருமணம் நடைபெற்றால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது இல்லை என்று உண்மையா அய்யா?

    ReplyDelete
  20. வாத்தியார் ஐயா!
    வணக்கம்.

    ”காதலிக்க நேரமுண்டு
    காதலிப்பார் யாருமில்லை!

    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் (தற்சமயம்) வழியுமுண்டு!”

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு நன்றாக இருந்த்து,
    எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்).
    இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை.

    பரிகாரம் ஏதும் உண்டா? :-)

    ReplyDelete
  22. Dear Sir

    Please accepts & unblock my comments.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  23. காதல் திருமணத்திற்கு முதலில் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மன காரகன் சந்திரன். காதல் மற்றும் மெல்லிய உணர்வு. காரகன் சுக்கிரன். அதை வெளிப் படுத்தும் துணிவு. எத்துணை எதிர்ப்பு வந்தாலும் போராடி வெல்வது. காரகன் செவ்வாய். இவை மட்டுமல்ல. இன்னும் நிறைய இருக்கின்றன. சிலருடைய பின்னூட்டத்தைப் பார்த்து இதைச் சொல்ல தோன்றியது. மேலும் காதல் திருமணத்திற்கான கிரக நிலைகள் என்று 4ம் மற்றும் 6ம் எண்ணில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கிரகங்கள் இதன் காரணமாக என்றும் புரிந்தது.

    ReplyDelete
  24. Wednesday, February 24, 2010 10:56:00 AM
    Blogger SP.VR. SUBBIAH said...

    ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    நேற்றைய தினம் மன மகிழ்ச்சிக்கு இன்றோ மனதை மயக்குவது பற்றி ....பாடம் அருமை ...தாங்கள் சொன்ன அமைப்பில் எனது தனுசு லக்னம் 5 ம் அதிபதி 7 இல் உடன் சந்திரன் மற்றும் புதன்....சுக்ரன் 5இல் (6பரல் ,5இடம் 35 பரல்)9 ம் இடத்தை சனி 12 இல் இருந்து பார்கின்றது ....இதுவரை காதல் இல்லை ....இந்த அமைப்பு காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படுத்துமா(சற்றே பயத்துடன்)?
    நன்றி வணக்கம்,,,,,////

    லக்கினாதிபதியைப் பற்றி நீங்கள் சொல்ல்வில்லையே? அவர் முக்கியமில்லையா?

    அய்யா லக்னாதிபதி குரு பகவான் இருப்ப்து மீனத்தில் (4 ம் இடத்தில்)ஆட்சி பலம் (6பரல்,4இம் இடம் 32 பரல்)உடன் ராகு .....

    தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன்
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  25. Arul said...
    ஐயா!!!
    பாடத்திற்கு நன்றி...ஒரு ஜோதிட இணைய தளத்தில் எனக்கு கிடைத்த ஒரு பக்கத்தையும் பகிர்ந்து

    கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களின் அனுமதியுடன்...
    Love Marriages
    A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
    male and a female. The fifth house and the lord of the tenth and second houses
    have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
    a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
    Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
    acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
    and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
    either by association or by sight, there definitely becomes a chance for a love affair
    with the opposite sex.
    Any chart having similar combinations definitely has the ingredients for a love
    affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
    affair.
    If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
    be a heartbreaking experience for the native.
    The association of Mars and Venus increases the tendency for having love affairs,
    as the attraction towards the opposite sex increases. If such a combination
    aspects or has sight of Saturn, then the attraction increases even more.
    One must note that the Rashi and the Navamsha chart have equal importance, so
    both charts must be consulted.
    If the sixth lord makes aspects or associations in the above combinations, the
    affair is restricted and does not lead to marriage.
    When Saturn or Mars is in the 2nd, 7th or 12th house, this also
    indicates the discontinuation of such relationships. Mars in the
    fourth house gives similar results as well as if Rahu is situated in either the 1st, 5th, 7th, 9th or 12th

    houses from
    Venus, it gives similar results.
    The above rules are universal. There are also many other combinations, but they
    have many “if’s and but's”./////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. //////rajesh said...
    அய்யா நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் 7ம் வீட்டு அதிபதியும் 5ம் வீட்டு அதிபதியும் சந்தித்தால் அல்லது பரிவர்த்தனை ஆகி இருந்தால் காதல் திருமணம் என்று. அப்படி திருமணம் நடைபெற்றால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது இல்லை என்று உண்மையா அய்யா?///////

    பரிவர்த்தனையாகியிருக்கும்போது எப்படி வெற்றிபெறாமல் போகும்? அதில் ஏதோ தவறு இருக்கிறது!

    ReplyDelete
  27. /////kannan said...
    வாத்தியார் ஐயா!
    வணக்கம்.
    ”காதலிக்க நேரமுண்டு
    காதலிப்பார் யாருமில்லை!
    வாலிபத்தில் காதலிக்க
    ஜாதகத்தில் (தற்சமயம்) வழியுமுண்டு!”/////

    உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணைப் பிடியுங்கள்.காதல் வசப்படாமலா போய்விடும்?

    ReplyDelete
  28. /////Naresh said...
    வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு நன்றாக இருந்த்து, எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்).
    இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை. பரிகாரம் ஏதும் உண்டா? :-)/////

    திருமணம் செய்து கொண்டு, கரம் பிடிக்கும் மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதுதான் பரிகாரம்:-)))

    ReplyDelete
  29. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Please accepts & unblock my comments.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    அடிக்கடி இதுபோல எழுதுகிறீர்கள். நான் எதையும் நிறுத்திவைப்பதில்லை. மீண்டும் ஒருமுறை பின்னூட்டமிடுங்கள்.சரி பார்க்கிறேன்!

    ReplyDelete
  30. /////ananth said...
    காதல் திருமணத்திற்கு முதலில் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். மன காரகன்

    சந்திரன். காதல் மற்றும் மெல்லிய உணர்வு. காரகன் சுக்கிரன். அதை வெளிப் படுத்தும் துணிவு. எத்துணை

    எதிர்ப்பு வந்தாலும் போராடி வெல்வது. காரகன் செவ்வாய். இவை மட்டுமல்ல. இன்னும் நிறைய இருக்கின்றன.

    சிலருடைய பின்னூட்டத்தைப் பார்த்து இதைச் சொல்ல தோன்றியது. மேலும் காதல் திருமணத்திற்கான கிரக நிலைகள் என்று 4ம் மற்றும் 6ம் எண்ணில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கிரகங்கள் இதன் காரணமாக என்றும்
    புரிந்தது./////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. //////astroadhi said...
    Blogger SP.VR. SUBBIAH said...
    ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    நேற்றைய தினம் மன மகிழ்ச்சிக்கு இன்றோ மனதை மயக்குவது பற்றி ....பாடம் அருமை ...தாங்கள் சொன்ன அமைப்பில் எனது தனுசு லக்னம் 5 ம் அதிபதி 7 இல் உடன் சந்திரன் மற்றும் புதன்....சுக்ரன் 5இல்
    (6பரல் ,5இடம் 35 பரல்)9 ம் இடத்தை சனி 12 இல் இருந்து பார்கின்றது ....இதுவரை காதல் இல்லை ....இந்த அமைப்பு காதல் வயப்பட வாய்ப்பு ஏற்படுத்துமா (சற்றே பயத்துடன்)?
    நன்றி வணக்கம்,,,,,////
    லக்கினாதிபதியைப் பற்றி நீங்கள் சொல்ல்வில்லையே? அவர் முக்கியமில்லையா?
    அய்யா லக்னாதிபதி குரு பகவான் இருப்பது மீனத்தில் (4 ம் இடத்தில்)ஆட்சி பலம் (6பரல்,4இம் இடம் 32 பரல்)உடன் ராகு .....
    தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மாணவன்
    நன்றி வணக்கம்/////

    லக்கினாதிபதி குரு 4ல் தன்னுடைய சொந்தவீட்டில், 5ற்குரிய செவ்வாய் 7ல் மிதுனத்தில்.ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை. ஆகவே உங்களுக்குக் காதல் திருமணம் புரியும் வாய்ப்பு இல்லை. பயப்பட வேண்டாம்:-)))

    ReplyDelete
  32. /////Naresh said...
    வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு நன்றாக இருந்த்து, எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்).
    இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை. பரிகாரம் ஏதும் உண்டா? :-)/////

    //SP.VR. SUBBIAH said...
    திருமணம் செய்து கொண்டு, கரம் பிடிக்கும் மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதுதான் பரிகாரம்:-))) ////

    ஓ ஓ! 7ல் இருக்கும் குரு துனை நிற்பார் என்கிறீர்களா! அதுவும் சரிதான் ஐயா.

    ReplyDelete
  33. எனக்கு பதில் கூறியதற்க்கு மிக்க நன்றி அய்யா நான் பார்த்தவரை காதல் மண முடிப்பவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாகத்தான் அமைகிறது. இருவரும் சண்டை சச்சரவுடன்தான் குடும்பம் நடத்துகிறhர்கள் இது எதனால் அய்யா ? இதற்கும் ஜhதகத்திற்க்கும் சம்மந்தம் உள்ளதா அய்யா ?

    ReplyDelete
  34. Dear Sir

    my son birth chart-Lagnadhibhadi(Kadaga-moon) 9il (meenam) with Sukkiran uchham(4ikkuriyavar).

    Anal 9ikkuriyavan 7il Neecham(Guru) - 5ikkuriyavan & 10ikkuriyavan(Sevvai -Uchham) - Neechabangam.

    Love Confirma?

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  35. //// Arul said...
    Love Marriages
    A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
    male and a female. The fifth house and the lord of the tenth and second houses
    have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
    a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
    Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
    acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
    and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
    either by association or by sight, there definitely becomes a chance for a love affair
    with the opposite sex.
    Any chart having similar combinations definitely has the ingredients for a love
    affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
    affair.
    If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
    be a heartbreaking experience for the native.
    The association of Mars and Venus increases the tendency for having love affairs,
    as the attraction towards the opposite sex increases. If such a combination
    aspects or has sight of Saturn, then the attraction increases even more.////
    5ஆம் ஆதி(குரு) மூலத்த்ரிகோணம்.(2ஆம் ஆதியும் அவரே.) 5ஆம் இடத்தில் 33பரல்.. சுய வர்க்கம் 5பரல்..
    10ஆம் ஆதி சூரியன் ..10ஆம் இடத்தில் 32 பரல்.. இருவரும் 2லே சேர்ந்து அவர்களுடன் ராகுவும்.

    அப்புறம் லக்னத்திலே சுக்கிரன்..7லே சந்திரன்,சனி...so ... டைரக்ட் லுக் of சனி..
    அப்புறம் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை.
    நீங்க சொல்ற எல்லாமே செட் ஆகுது..அபிடித்தான் பலன்களுமே கூட..
    ரொம்ப சந்தோசம்..ஆனால் எது காமம் எது காதல் என்று இன்னும் பிரித்து வரையறைக்குள் கொண்டு வர முடியவில்லை.புரிய ஆரம்பிக்குரதுக்குள்ளே அடுத்த மேட்டர் ஆரம்பிச்சுடுது..
    இதுதான் ரொம்ப குழப்படியான மேட்டரா இருக்கு.
    ஓகே..தகவலுக்கு நன்றி..

    இன்றைய பாடம் படித்தும் புரியாத விஷயம் நான் மேலே சொன்ன விஷயம்தான்..ஆசிரியர் அய்யா சொந்த அனுபவத்தில் வரும் பதிவுகளில் புரியவைக்கமுடியுமா?

    ReplyDelete
  36. Sir, I'm meena lagna , For me Moon is in 5th place ( Cancer own house)and he is aspected by Mars from 10th place and Venus is also in his own house.Please tell me your views.
    Thanks
    With Luv,
    Ashok

    ReplyDelete
  37. /////Naresh said...
    /////Naresh said...
    வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு நன்றாக இருந்த்து, எனக்கோ கன்னி லக்கனம், ஐந்தாம் வீட்டதிபதி சனி, அவர் 3ல் அமர்வு. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்(30 பரல்கள்) உடன் லக்கினாதிபதி புதன். ஆனால் செவ்வாய் 8ல்(மேஷ ராசியில்). இதுவரை காதல் வரவில்லை. ஆனால் ஆசையும் என்னை விட்டபாடில்லை. பரிகாரம் ஏதும் உண்டா? :-)/////
    //SP.VR. SUBBIAH said...
    திருமணம் செய்து கொண்டு, கரம் பிடிக்கும் மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதுதான் பரிகாரம்:-))) ////
    ஓ ஓ! 7ல் இருக்கும் குரு துனை நிற்பார் என்கிறீர்களா! அதுவும் சரிதான் ஐயா.///////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  38. /////rajesh said...
    எனக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி அய்யா நான் பார்த்தவரை காதல் மண முடிப்பவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாகத்தான் அமைகிறது. இருவரும் சண்டை சச்சரவுடன்தான் குடும்பம் நடத்துகிறார்கள் இது எதனால் அய்யா ? இதற்கும் ஜாதகத்திற்கும் சம்மந்தம் உள்ளதா அய்யா?//////

    இருவரும் வெவ்வேறு லக்கினம் எனும்போது, ஒத்துப்போக முடியாது. ஒத்துப்போக முடியாத இடத்தில் சண்டைவராமல் இருக்குமா?

    ReplyDelete
  39. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    my son birth chart-Lagnadhibhadi(Kadaga-moon) 9il (meenam) with Sukkiran uchham(4ikkuriyavar).
    Anal 9ikkuriyavan 7il Neecham(Guru) - 5ikkuriyavan & 10ikkuriyavan(Sevvai -Uchham) - Neechabangam.
    Love Confirma?
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்கள் மகனின் வயது என்ன?

    ReplyDelete
  40. //////minorwall said...
    //// Arul said...
    Love Marriages
    A “Love Marriage” may be viewed as a mutual agreement or contract between a
    male and a female. The fifth house and the lord of the tenth and second houses
    have an important role over the lovemaking. Therefore, their influence will be felt in
    a marriage resulting out of love and affection. When Venus is aspected by Saturn or
    Rahu, or if Venus is situated with them, the person has opportunities to be
    acquainted with females as a result of sexual attraction. When the lords of the 4th
    and the 12th houses become linked with the lords of 2nd and the 10th houses,
    either by association or by sight, there definitely becomes a chance for a love affair
    with the opposite sex. Any chart having similar combinations definitely has the ingredients for a love
    affair. If in such a case Venus is aspected by Saturn, there will be more than one
    affair. If Mars were to have sight or association with Saturn, the end of such an affair will
    be a heartbreaking experience for the native.
    The association of Mars and Venus increases the tendency for having love affairs,
    as the attraction towards the opposite sex increases. If such a combination
    aspects or has sight of Saturn, then the attraction increases even more.////
    5ஆம் ஆதி(குரு) மூலத்த்ரிகோணம்.(2ஆம் ஆதியும் அவரே.) 5ஆம் இடத்தில் 33பரல்.. சுய வர்க்கம் 5பரல்..
    10ஆம் ஆதி சூரியன் ..10ஆம் இடத்தில் 32 பரல்.. இருவரும் 2லே சேர்ந்து அவர்களுடன் ராகுவும்.
    அப்புறம் லக்னத்திலே சுக்கிரன்..7லே சந்திரன்,சனி...so ... டைரக்ட் லுக் of சனி..
    அப்புறம் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை.
    நீங்க சொல்ற எல்லாமே செட் ஆகுது..அபிடித்தான் பலன்களுமே கூட..
    ரொம்ப சந்தோசம்..ஆனால் எது காமம் எது காதல் என்று இன்னும் பிரித்து வரையறைக்குள் கொண்டு வர முடியவில்லை.புரிய ஆரம்பிக்குரதுக்குள்ளே அடுத்த மேட்டர் ஆரம்பிச்சுடுது..
    இதுதான் ரொம்ப குழப்படியான மேட்டரா இருக்கு.
    ஓகே..தகவலுக்கு நன்றி..
    இன்றைய பாடம் படித்தும் புரியாத விஷயம் நான் மேலே சொன்ன விஷயம்தான்..ஆசிரியர் அய்யா சொந்த அனுபவத்தில் வரும் பதிவுகளில் புரியவைக்கமுடியுமா?///////

    காதல் வேறு, காமம் வேறு இல்லை ஸ்வாமி. இரண்டும் ஒன்றெனக்கலந்ததுதான் காதல். ஒன்றில்லாமல் ஒன்றில்லை!

    ReplyDelete
  41. /////Ashok said...
    Sir, I'm meena lagna , For me Moon is in 5th place ( Cancer own house)and he is aspected by Mars from 10th place and Venus is also in his own house.Please tell me your views.
    Thanks
    With Luv,
    Ashok/////

    கேள்வி என்ன? அதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  42. 50 %:50 % என்று இரண்டுமே கலந்தால்தான் இனிக்கும் என்பது என் அனுபவம்..என்ன இருந்தாலும் அனுபவசாலி பெரியவுங்க நீங்க ஏன்னா சொல்றீங்கன்னு பார்த்தேன்..நீங்க சொன்னா சரிதான்..

    ReplyDelete
  43. /////minorwall said...
    50 %:50 % என்று இரண்டுமே கலந்தால்தான் இனிக்கும் என்பது என் அனுபவம்..என்ன இருந்தாலும் அனுபவசாலி பெரியவுங்க நீங்க ஏன்னா சொல்றீங்கன்னு பார்த்தேன்..நீங்க சொன்னா சரிதான்../////

    உண்மை அதுதான். உண்மையை யார் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் மைனர்!

    ReplyDelete
  44. வணக்கம் வாத்தியாரே..
    என் லக்னாதிபதி குரு நாலாம் வீட்டில் 6 பரல்களுடன் உள்ளார்,5 ஆம் அதிபதி சந்திரன் மூன்றாம் வீடான ரிஷபத்தில் 8 பரல்களுடன் உள்ளார்,மூன்றாம் வீட்டில் 36 பரல்கள்.ஐந்தாம் வீட்டில் 25 பரல்கள் தான்.ஏழாம் அதிபதி புதன் ஆறாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் உள்ளார்.புதன் சுய வர்க்க பரல்கள் 2 தான்.
    என் காதல் ஆசை குறையவும் மாட்டேன்கிறது ,காதலும் கனிய மறுக்கிறது.இதற்கு காரணம் சூரியன் புதன் சேர்ந்து 5 வீட்டில் இருப்பது தானா.பரிகாரம் ஏதும் உள்ளதா காலம் முழுவதும் இப்படி தான் இருக்குமா???

    ReplyDelete
  45. ////Gresilz said...
    வணக்கம் வாத்தியாரே..
    என் லக்னாதிபதி குரு நாலாம் வீட்டில் 6 பரல்களுடன் உள்ளார்,5 ஆம் அதிபதி சந்திரன் மூன்றாம் வீடான ரிஷபத்தில் 8 பரல்களுடன் உள்ளார்,மூன்றாம் வீட்டில் 36 பரல்கள்.ஐந்தாம் வீட்டில் 25 பரல்கள் தான்.ஏழாம் அதிபதி புதன் ஆறாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் உள்ளார்.புதன் சுய வர்க்க பரல்கள் 2 தான். என் காதல் ஆசை குறையவும் மாட்டேன்கிறது ,காதலும் கனிய மறுக்கிறது.இதற்கு காரணம் சூரியன் புதன் சேர்ந்து 5 வீட்டில் இருப்பது தானா.பரிகாரம் ஏதும் உள்ளதா காலம் முழுவதும் இப்படி தான் இருக்குமா???/////

    வீட்டில் சொல்லி, ஒரு பெண்ணை மணந்து கொண்டு, வரும் அந்த மங்கை நல்லாளைக் காதலியுங்கள். அதில் என்ன பிரச்சினை?

    ReplyDelete
  46. ஐய வணக்கம்
    லக்னாதிபதி(சிம்மம்) 4+9+2+11ம் அதிபர்களோடு 11ல், 5ம் அதிபதி 9ல்.
    7ம் அதிபதி சனி 4ல், 10ல் சுக்கிரன்+சந்திரன்.
    இதனால் காதல் திருமணம், ஆனால் முதல் காதல் தோல்வி பெறும், இரண்டாவது காதல் தான் திருமணத்தில் முடியும் என்று ஒரு ஜோசியர் சொல்லிவிட்டார்..பயமாக உள்ளது..இது உண்மையா?

    ReplyDelete
  47. Aachi said...
    ஐய வணக்கம் லக்னாதிபதி(சிம்மம்) 4+9+2+11ம் அதிபர்களோடு 11ல், 5ம் அதிபதி 9ல்.
    7ம் அதிபதி சனி 4ல், 10ல் சுக்கிரன்+சந்திரன். இதனால் காதல் திருமணம், ஆனால் முதல் காதல் தோல்வி பெறும், இரண்டாவது காதல் தான் திருமணத்தில் முடியும் என்று ஒரு ஜோசியர் சொல்லிவிட்டார்..பயமாக உள்ளது..இது உண்மையா?////

    காதல் எவ்வளவு புனிதமானது. காதல் வந்துவிட்ட பிறகு ஜோதிடமெல்லாம் எதற்கு? இதையெல்லாம் மூட்டைகட்டிவைத்து விட்டு, தீவிரமாக, உண்மையாகக் காதலில் ஈடுபடுங்கள். மற்றதை இறைவனிடம் விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  48. ////Bogy.in said...
    புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
    இவன்
    http://www.bogy.in/////

    நல்லது.பார்க்கிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com