16.2.10

கடலை போடுவதற்குக் காலம் பார்க்க வேண்டுமா?


ராகு பகவானின் அழகிய தோற்றம்!:-))))
படம் உதவி: இங்கே பார்க்கவும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே!

நாட்டுக்கு நாடு ராகுகாலம் வேறுபடுமா? வேறுபட்டால், அதைக் கண்டுபிடிப்பது எப்படி? பயன்படுத்துவது அல்லது அதைத்
தவிர்ப்பது எப்படி?


முதலில் ராகுகாலம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

நவகோள்களில் ராகுவிற்கும் கேதுவிற்கும் சொந்த வீடுகள் கிடையாது. சொந்த தினங்களோ அல்லது நாட்களோ கிடையாது.

சூரியனுக்கு - ஞாயிற்றுக்கிழமை (Sunday), சந்திரனுக்குத் திங்கட்கிழமை (Monday), செவ்வாய்க்கு செவ்வாய்க்கிழமை (Tuesday), புதனுக்குப் புதன்கிழமை (Wednesday), குருவிற்கு வியாழக்கிழமை (Thursday), சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை (Friday), சனிக்கு சனிக்கிழமை (Saturday) என்று அவைகள் ஆதிக்கம் செய்யும் நாட்கள் உள்ளன.

அவ்வாறு ராகுவிற்கும் கேதுவிற்கும் தனியாக நாட்கள் கிடையாது.

ஆனால் தினமும் ராகுவிற்கு ஒன்றரை மணி நேரமும், கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் ஆதிக்கம் செலுத்தும் என்று அந்த நேரம் அவைகளின் காலமாக ஒதுக்கப்பட்டுள்ளது.அவைகளுக்கு யார் அந்த நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள்? எந்த அடிப்படையில் ஒதுக்கிக் கொடுத்தார்கள்?
என்று வீணாக மண்டையைப் போட்டு யாரும் உருட்டிக்கொள்ள வேண்டாம். இந்திய ரிஷிகள் கொடுத்துள்ளார்கள். கேள்விகேட்டுப் பதிலைப் பெறலாம் என்றால் அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

நூற்றாண்டுகளாக வாழ்ந்த ‘பெரிசுகளும்’ அவற்றைத் தவிர்க்கும்படி தங்கள் அனுபவத்தின் மூலம் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்கள். ஆகவே முடிந்தவர்கள் அவர்கள் சொற்படி நடப்போம்.

தினமும் ராகுவிற்கு உரிய ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் எனப்படும். தினமும் கேதுவிற்கு உரிய ஒன்றரை மணி நேரம் எமகண்டம் எனப்படும்.

அந்த நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் புதிய செயல்களைத் தவிர்க்க வேண்டும். வழக்கமாகச் செய்யும் தினசரி அலுவல்களைச் செய்யலாம். That is your routine work. அதாவது காஃபி அல்லது
டீ குடிப்பதற்கும், தம் அடிப்பதற்கும், அலுவலகத்தில் கடலை போடுவதற்கும், ராகு காலம் பார்க்க வேண்டாம்.

தவிர்க்காமல் சுப காரியங்களைச் செய்தால் என்ன ஆகும்?
செய்து பாருங்கள், தெரியும்.

Rahu Kalam is the inauspicious time slot of the day.
It is the most dreaded time of the day as per Astrology
and must be avoided in all ventures for success.

ஒரு இடத்தின் சூரிய உதயத்தை வைத்து ராகு காலத்தை அறிய வேண்டும். அட்சரேகை, தீர்க்க ரேகையை வைத்து ஒரு இடத்தின் நேரம் மாறுபடும்.

ராகு காலத்தை அறியும் வழி:

ஒரு நாளின் பகல் நேரத்தின் அளவைக் கண்டு பிடியுங்கள். அதை எட்டு சமமான பகுதிகளாகப் பிரியுங்கள். பிரித்த பிறகு கீழே உள்ளபடி ஒவ்வொரு தினத்திற்கும் உரிய ராகுகாலம் தெரியவரும்

ஞாயிற்றுக்கிழமை = சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள நேரத்தில் எட்டாவது பகுதி அந்தக் கிழமையின் ராகுகாலம் ஆகும்.

திங்கட்கிழமைக்கு = இரண்டாவது பகுதி

செவ்வாய்க்கிழமைக்கு = ஏழாவது பகுதி

புதன்கிழமைக்கு = ஐந்தாவது பகுதி

வியாழக்கிழமை = ஆறாவது பகுதி

வெள்ளிக்கிழமை = நான்காவது பகுதி

சனிக்கிழமை = மூன்றாவது பகுதி.
==================================================================
உங்களுக்குப் புரியும் வகையில் விரிவாக இரண்டு அட்டவணைகளைக் கீழே கொடுத்துள்ளேன். அட்டவணைகளின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், அட்டவணைகள் பெரிதாகத் தெரியும்.


1


2

நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ராகுகாலம் சூரிய உதயம் 6:00 மணிக்கு என்று கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. தை, மாசி மாதங்களில் சூரியன் 6:30 மணிக்கு உதிக்கும். அப்போது நாட்காட்டிகளில் குறிப்பிடப் பட்டுள்ள பொது நேரம் மாறுபடும். அர்த்தம் ஆனதா?
++++++++++++++++++++++++++++++++++++++++
தன்னுடைய சொந்தத் தொழில் வேலையாக வாத்தியார் இரண்டு தினங்கள் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு இரண்டு தினங்கள் விடுமுறை. அனைவரும் சமர்த்தாக பழைய பாடங்களை ஒருமுறை திரும்பப்
படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

34 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    ராகு காலம் பற்றியப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா.
    ராகுவின் கம்பீரத் தோற்றம் காட்டியப் படம் நன்றாகவுள்ளது.
    ராகு காலத்தின் எட்டுப்பிரிவுகளை "திங்கள் முதல் சனி வரை"
    நான் இப்படி ஞாபகம் வைத்துக் கொள்கிறேன் 27, 56, 43 என்று.
    இ மங்கள வார லசனு சால பாகுந்தி குருகாரு!

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு,
    வணக்கம். ராகுகாலம் - எமகண்டங்கள் சுலபமாக பார்ப்பதற்கு நான் ஏற்கனவே இந்த தளத்தில் http://velang.blogspot.com/2009/02/blog-post_13.html பதிவிட்டுள்ளேன். நமது வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று படித்துகொள்ளவேண்டுகின்றேன்.நன்றி. வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா!
    வணக்கம்.

    'தண்டாயுதபாணி தெய்வமே'! நீ எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே உள்ளாய்!

    நாள் என்செயும்! வினைதான் என்செயும்!
    எனை நாடி வந்த கோள் என்செயும்,
    கொடும் கூற்று என்செயும் - தோலும்
    சிலம்பும், தண்டையும் என்கண்முன்னே தோன்றிடனே!

    நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ ஆனாலும் பரவாயில்லை,

    எப்பெருமான் 'கருநீல வண்ணன்'!
    'நாராயணின்'! நாமத்தை, சொல்லி
    உள்ள காலத்தை பயன் உள்ளதாக கடப்பது தான்
    'சத்தியத்தில் சாலசிறந்தது'! என்று தோன்றுகின்றது.

    ராகும் வேண்டாம், கேதும் வேண்டாம்

    'சங்கரநாராயணனும்'! எம் மூல குருநாதன் 'மயில் வேலவனும்'! மதி

    ReplyDelete
  4. ராகு,கேதுவை பல்லாண்டுகாலம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று
    ஒரு கருத்து உண்டு.அவை பிற்சேர்க்கை என்பாரும் உளர். ஆனால் தமிழகத்தில் 1300 ஆண்டுகளாக ராகு கேது சோதிடத்தில் உண்டு. ஆதாரம்:கோளறு திருப்பதிகம்! "சனி பாம்பிரண்டுமுடனே...."
    பாம்பு இரண்டு= ராகு+கேது.

    ReplyDelete
  5. sir, i am not able to send u the mail as there is problem in my gmail id. will send u soon. otherwise, everyday i am reading your lessons, thanks.

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ராகு காலம் பற்றியப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா. ராகுவின் கம்பீரத் தோற்றம் காட்டியப் படம் நன்றாகவுள்ளது. ராகு காலத்தின் எட்டுப்பிரிவுகளை "திங்கள் முதல் சனி வரை"
    நான் இப்படி ஞாபகம் வைத்துக் கொள்கிறேன் 27, 56, 43 என்று.
    இ மங்கள வார லசனு சால பாகுந்தி குருகாரு!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.///

    நல்லது நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. /////வேலன். said...
    ஆசிரியருக்கு,
    வணக்கம். ராகுகாலம் - எமகண்டங்கள் சுலபமாக பார்ப்பதற்கு நான் ஏற்கனவே இந்த தளத்தில் http://velang.blogspot.com/2009/02/blog-post_13.html பதிவிட்டுள்ளேன். நமது வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று படித்துகொள்ளவேண்டுகின்றேன்.நன்றி. வாழ்க வளமுடன் வேலன்.////

    தகவலுக்கு நன்றி வேலன்!

    ReplyDelete
  8. /////kannan said...
    வாத்தியார் ஐயா!
    வணக்கம்.
    'தண்டாயுதபாணி தெய்வமே'! நீ எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே உள்ளாய்!
    நாள் என்செயும்! வினைதான் என்செயும்!
    எனை நாடி வந்த கோள் என்செயும்,
    கொடும் கூற்று என்செயும் - தோலும்
    சிலம்பும், தண்டையும் என்கண்முன்னே தோன்றிடனே!
    நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ ஆனாலும் பரவாயில்லை,
    எப்பெருமான் 'கருநீல வண்ணன்'!
    'நாராயணின்'! நாமத்தை, சொல்லி
    உள்ள காலத்தை பயன் உள்ளதாக கடப்பது தான்
    'சத்தியத்தில் சாலசிறந்தது'! என்று தோன்றுகின்றது.
    ராகும் வேண்டாம், கேதும் வேண்டாம்
    'சங்கரநாராயணனும்'! எம் மூல குருநாதன் 'மயில் வேலவனும்'! மதி///////

    அப்படியே நடப்பதாக! நானும் உங்கள் பொருட்டு ஆறுமுகனுக்கு மனுப்போட்டு விடுகிறேன்!

    ReplyDelete
  9. //////kmr.krishnan said...
    ராகு,கேதுவை பல்லாண்டுகாலம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று ஒரு கருத்து உண்டு.அவை பிற்சேர்க்கை என்பாரும் உளர். ஆனால் தமிழகத்தில் 1300 ஆண்டுகளாக ராகு கேது சோதிடத்தில் உண்டு. ஆதாரம்:கோளறு திருப்பதிகம்! "சனி பாம்பிரண்டுமுடனே...."
    பாம்பு இரண்டு= ராகு+கேது.//////

    உண்மை. அதோடு நமது பஞ்சாங்களிலும் அவைகள் உள்ளன. நமது பஞ்சாங்கங்களுக்கும் பல நூற்றாண்டு வரலாறு உண்டு.

    ReplyDelete
  10. ////jee said...
    Very good photo sir......////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  11. /////Uma said...
    sir, i am not able to send u the mail as there is problem in my gmail id. will send u soon. otherwise, everyday i am reading your lessons, thanks.////

    அதனால் என்ன பரவாயில்லை! நீங்கள் படிப்பதுதான் முக்கியம். பின்னூட்டம் அவசியம் என்று நீங்கள் நினைக்கும்போது எழுதினால் போதும்!

    ReplyDelete
  12. Dear Sir,

    thanks for todays lesson, the pictures is really a good and nice one

    ReplyDelete
  13. ஐயா வணக்கம்

    ராகு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தாங்கள் கொடுத்த சுட்டியில் ராகு பற்றிய விவரங்கள் ராகு திசை நடக்கும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. Good evening sir,
    Thanks for ur today lesson sir. one side raghu picture is very very nice
    other side it is threatening. Today lesson is very very nice sir.
    HAPPY JOURNEY TO U SIR.
    sundari

    ReplyDelete
  15. //////Ram said... Dear Sir,
    thanks for todays lesson, the pictures is really a good and nice one/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  16. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    ராகு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தாங்கள் கொடுத்த சுட்டியில் ராகு பற்றிய விவரங்கள் ராகு திசை நடக்கும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  17. //////sundari said...
    Good evening sir,
    Thanks for ur today lesson sir. one side raghu picture is very very nice
    other side it is threatening. Today lesson is very very nice sir.
    HAPPY JOURNEY TO U SIR.
    sundari//////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. காலை வணக்கம் ஆசானே,
    பாடம் அருமை, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது, மிக்க நன்றி.

    ராகு ருபம்- சர்பத்தின் தலை பொருந்திய மனித உடல்.
    கேது மனித தலை - சர்பத்தின் வால்
    just to confirm Sir.

    ReplyDelete
  19. thank you sir,

    Our friends can also download a free software to find out the raghu, kethu and all the horai's in www.agnisiksha.com.

    thanks

    Raavi

    ReplyDelete
  20. அன்பு அய்யா வணக்கம் , தங்களின் ராகு காலம் பற்றிய பாடம்
    மிகவும் அருமை, வாழ்த்துக்கள்
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  21. ராகு காலம் கண்டுபிடிக்க எளிய வழியொன்றை என் தாயார் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்!அதை இங்கே பகிர்ந்து கொள்வது சிறப்பாய் இருக்கும் என நினைகிறேன்!

    'திருவிழா சந்தடியில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா'

    இந்தப் பாட்டை மனனம் செய்தால் போதும்.இதில் வரும் முதல் எழுத்துக்கள் அந்தந்த நாட்களைக் குறிப்பவை!முதல் நாள் 7.30-9.00 பின் அதிலிருந்து 1.30 மனிக் கூட்டிக் கொண்டே சென்றால் போதும்!

    ReplyDelete
  22. நீங்கள் கிரகங்களை பற்றி பாடம் நடத்தினீர்கள் .நச்சதிரத்தை பற்றி எடுக்கவில்லையே ஏன்? அது முக்கியம் இல்லாததா? ஒரு திருத்தும் ஏன் நண்பரின் லக்னம் துலாம் இல்லை ,தனுசு

    ReplyDelete
  23. Day time Saving காக இருந்தாலும் கதிரவன் தோற்றம் - மறைவு இவற்றை 1\8 ஆக கொண்டு இராகு, எமகண்டத்தை கண்க்கிட வேண்டும் அல்லவா. 1\8 என்பது புது சங்கதி. தங்களின் விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  24. ஒருவருக்கு சர்வ அஷ்டவர்க்கத்தில் பரல்கள் குறைந்து காணப்பட்டு அதன் அதிபதி அதிக சுய வர்க்க பரல்களுடன் இருந்தால் என்ன பலன் ? யே- மேஷ லக்னம் இரண்டில் சுக்கிரன் ஆட்சி பரல்கள் 24 சுக்கிரன் சுய வர்க்க பரல்கள் 7 , 7 இல் குரு பகை பரல்கள் 24 ,சுய வர்க்க பரல்கள் 6.

    ReplyDelete
  25. அன்புள்ள வாத்தியாரே..

    வணக்கம்.. உங்கள் பக்கங்களை (முக்கியமாக ஜோதிடம் பக்கங்களை - 2007 இல் இருந்து ) படித்துக்கொண்டு வருகிறேன்.. ராகு காலத்தை ஞாபகத்தில் வைத்துகொள்ள எளிய முறை ஒன்று உள்ளது..

    இந்த வாக்கியத்தை மனனம் செய்தால் போதும்..

    திருநாள் சந்தடியில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

    திருநாள் - திங்கள் (முதல் எழுத்து).. அதே போல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கிழமை வரும்..

    நன்றி - ராமுடு..

    ReplyDelete
  26. /////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    பாடம் அருமை, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது, மிக்க நன்றி.
    ராகு ருபம்- சர்பத்தின் தலை பொருந்திய மனித உடல்.
    கேது மனித தலை - சர்பத்தின் வால்
    just to confirm Sir./////

    பழைய கதைப்படி இரண்டாகப் பிளந்ததில் தலைப்பகுதி ராகு என்றும் தலையில்லாத வால் பகுதி கேது என்றும் அழைக்கப்பெற்றதாகச் சொல்வார்கள். Head was called 'Rahu' and his torso 'Ketu'. அதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லாததால் ஸீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  27. /////RAVI said...
    thank you sir,
    Our friends can also download a free software to find out the raghu, kethu and all the horai's in www.agnisiksha.com.
    thanks
    Raavi/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  28. ///////ஜீவா said...
    அன்பு அய்யா வணக்கம் , தங்களின் ராகு காலம் பற்றிய பாடம்
    மிகவும் அருமை, வாழ்த்துக்கள்
    அன்புடன் ஜீவா//////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  29. //////நேசன்..., said...
    ராகு காலம் கண்டுபிடிக்க எளிய வழியொன்றை என் தாயார் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்!அதை இங்கே பகிர்ந்து கொள்வது சிறப்பாய் இருக்கும் என நினைகிறேன்!
    'திருவிழா சந்தடியில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா'
    இந்தப் பாட்டை மனனம் செய்தால் போதும்.இதில் வரும் முதல் எழுத்துக்கள் அந்தந்த நாட்களைக் குறிப்பவை!முதல் நாள் 7.30-9.00 பின் அதிலிருந்து 1.30 மனிக் கூட்டிக் கொண்டே சென்றால் போதும்!//////

    நானும் இதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. /////ngs said...
    நீங்கள் கிரகங்களை பற்றி பாடம் நடத்தினீர்கள் .நச்சதிரத்தை பற்றி எடுக்கவில்லையே ஏன்? அது முக்கியம் இல்லாததா? ஒரு திருத்தும் என் நண்பரின் லக்னம் துலாம் இல்லை ,தனுசு//////

    நீங்கள் நினைவு படுத்திவிட்டீர்கள். எழுதுகிறேன்!

    ReplyDelete
  31. //////குறும்பன் said...
    Day time Saving காக இருந்தாலும் கதிரவன் தோற்றம் - மறைவு இவற்றை 1\8 ஆக கொண்டு இராகு, எமகண்டத்தை கண்க்கிட வேண்டும் அல்லவா. 1\8 என்பது புது சங்கதி. தங்களின் விளக்கத்திற்கு நன்றி.//////

    ஆமாம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  32. //////Prakaash Duraisamy said...
    ஒருவருக்கு சர்வ அஷ்டவர்க்கத்தில் பரல்கள் குறைந்து காணப்பட்டு அதன் அதிபதி அதிக சுய வர்க்க பரல்களுடன் இருந்தால் என்ன பலன் ? யே- மேஷ லக்னம் இரண்டில் சுக்கிரன் ஆட்சி பரல்கள் 24 சுக்கிரன் சுய வர்க்க பரல்கள் 7 , 7 இல் குரு பகை பரல்கள் 24 ,சுய வர்க்க பரல்கள் 6./////

    சுயவர்க்கப்பரல்கள், அந்தக் கிரகத்தின் தனிப்பட்ட வேலைகளை (portfolio) மேம்படுத்தி, ஜாதகனுக்குப் பல நன்மைகளைத் தன் தசாபுத்திகளில் வாரி வழங்கும்.

    ReplyDelete
  33. /////ராமுடு said...
    அன்புள்ள வாத்தியாரே..
    வணக்கம்.. உங்கள் பக்கங்களை (முக்கியமாக ஜோதிடம் பக்கங்களை - 2007 இல் இருந்து ) படித்துக்கொண்டு வருகிறேன்.. ராகு காலத்தை ஞாபகத்தில் வைத்துகொள்ள எளிய முறை ஒன்று உள்ளது..
    இந்த வாக்கியத்தை மனனம் செய்தால் போதும்..
    திருநாள் சந்தடியில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
    திருநாள் - திங்கள் (முதல் எழுத்து).. அதே போல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கிழமை வரும்..
    நன்றி - ராமுடு..//////

    நானும் இதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com