++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 3
திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?
திருமணம் தள்ளிக்கொண்டே போவதற்கு ஜாதகப்படி உள்ள காரணங்களில் சில:
1. ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
2. ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி வந்து குடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் தாமதப்படும்.
3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.
4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம்
வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)
5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.
8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்!
10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி வந்து டென்ட் அடித்து இருந்தால் திருமணம் தாமதப்படும்.
11.சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் ஜாதகி திருமண வாழ்வு
வேண்டாம் எனக் கூறிவிடுவாள்.
12. சனி அல்லது செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமணம் தாமதப்படுவதோடு, அவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவரைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்.
இந்த அவலங்களில் இருந்து ஜாதகனை மீட்டு, அவனுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். ஆகவே உரிய காலத்தில் திருமணமாகாமல் தவிப்பவர்கள். தினமும் குரு பகவானை
வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
இதெல்லாம் பொதுவிதிகள். தனி நபர்களின் ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் தள்ளுபடியாகிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
குறிப்பாகப் பெண் வாசகர்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

ம்....இந்த வருசமாவது நடக்குதா பார்க்கலாம்.. ?!!
ReplyDeleteவணக்கம் குருவே..
ReplyDeleteநலம் நலம் அரிய ஆவழ்...நல்ல விளக்கம்.
நன்றி..
வாழ்க வளமுடன்
திருமணம் ஆகும் போது எனக்கு 31 வயது. என் மனைவிக்கு 29 வயது. எனக்கு 7ம் அதிபர் குரு வக்கிரமாக சனி பார்வையில் இருந்தார். என் மனைவிக்கு 7ல் (மகரம்) குரு மற்றும் செவ்வாய். இன்னும் சில காரணங்கள் இருந்தன. திருமணம் நிச்சயம் என்ற கிரக நிலை இருக்கும் போது அனுக்கூலமற்ற கோச்சார கிரக நிலையாலோ தசா புத்தியாலோ அது தாமதமாகும். Delayed not denied. சரிதானே ஆசிரியரே. குழந்தை பாக்கியத்திற்கும் இது போல் பார்க்க வேண்டும்.
ReplyDeleteநன்றி குருவே, இனி குருவை ஒரு கை பார்த்து விடுகின்றேன். தினமும் பூஜைதான். நன்றி.
ReplyDeleteநல்ல பயனுள்ள பட்டியல். நன்றி.
ReplyDeleteஇன்னும் சில திருமணத்தடை அமைப்புக்கள்:
லக்னத்தில் கிரஹயுத்தம் பெற்ற கிரஹம் இருப்பது.
நவாம்ச லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருப்பது.
சூரியன் மிதுனத்தில் சனி தனுசுவில் இருப்பது.
சந்திரன்,சனி,சுக்கிரன்,கேது அம்சத்தில் இணைவது.
லக்னத்திற்கு 2,12ல்செவ்வாய் கேது இருந்து பாவகர்த்தாரி யோகம் பெறுவது.
"ANCIENT INDIA; Upavedas are literature which are the subsidiary of the Vedas. In India we used to say that for each of the spiritual books there will be a scientific subsidiary book too. Tthus for Rig-Veda , the subsidiary is Artha Saastra, for yajurveda the subsidiary is dhanurveda, for Saama Veda the subsidiary is Gaandharva veda and for Atharva Veda, the subsidiaries are Ayurveda and sthaapathya veda. Artha Saastra gives economics and the rules for the governance of the nation. Koutilya / Chanakya has given the best knowledge on all aspects of the ruling of the nation, role of the king, ministers, financial aspects of governance etc. Kamandaka Artha Saastra gives yet another set of documentation on the same subject, still older compilation can be seen. Sukra neetisaara is also an Artha Saastra book. The Koutilya Artha Saastra is being accepted world over and more than 1500 foreign delegates participated in an international conference held on Koutilya Artha Saastra, last year. This shows the interest on the contents of the book written 2300 yrs ago".
ReplyDeletecopy pasted from INDIAN INSTITUTE OF SCIENTIFIC HERITAGE NEWS LETTER. DT.10-FEB 2010
வணக்கம் அய்யா,
ReplyDeleteசூரியனும், சுக்கிரனும் கூட்டாக சிம்மம் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும்.
சிம்மம் ராசியில் சூரியன் ஆட்சி,அது போல சூரியன் உச்ச்ம் ஆன மேஷ ராசியில் இந்த கூட்டனி (சூரியனும், சுக்கிரனும்) இருந்தாலும் திருமணம் தாமதப்படுமா ?
நன்றி.
கடக லக்னம், சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி ஏழில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், முழு பலத்துடன் உள்ள செவ்வாய் திருமணத்தை மிகவும் தாமத படுத்துவாரா ஐயா?
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteதிருமணம் தாமதம் ஆவதற்க்கான அமைப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி...
அய்யா 7 ம் அதிபதி நீசம் பெற்று குரு பார்வை பெற்றால் நீசம் கேன்சல் ஆகுமா?அல்லது திருமணம் தாமதம் ஆகுமா?
நன்றி வணக்கம்....
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார் (அதாங்கய்யா நீச்சமாயிட்டார், தாங்கள் அவரை லஞ்சம் கொடுத்து இழுக்க ஒரு வழி சொல்லுங்க). முடிஞ்சா உங்களையும் கவனிச்சுடுரன் (என்னடா எனக்கே லஞ்சமான்னு கேக்குரீங்க, அதான் நன்றி சொல்லி தப்பித்துடுவோமில்ல...தப்பித்துடுவோமில்ல...)
;-)))
நன்றி..
Dear sir,
ReplyDeleteGuru in vakram placed in sixth position from kadaga lagna, till marriage is ????????????
//எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார்//
ReplyDeleteOxygen cylinder வைத்து drips ஏற்றுங்கள். ஒரு வேளை சரியாகலாம். Seriously அதுதான் நீச்ச பங்கம், சுய வர்க பரல், நவாம்சத்தில் கிரக நிலை போன்ற Boostகள் இருக்கின்றனவே. இதோடு காரகர் சுக்கிரன் இருக்கிறரே கவலை எதற்கு. சாத்வீக குணம் கொண்டவர் தேவ குரு. அதனால்தான் தாமச குணமுள்ள ராசியான மகரத்தில் நீச்சமாகிறார் ஒன்று சொல்வோரும் உண்டு. அவருக்கே லஞ்சமா.
குருநாதரே!!!
ReplyDeleteதனது சுய விருப்பம் கொண்டு, குருநாதனை போற்றி துதித்த பாடல்கள் எல்லாம் மீண்டும்,
நன்கு மனதிற்கு வரும் பொருட்டு ஒரு நல்வழி காட்டுங்களேன், ஐயா!
தாய்!!!
தாயானவள், தனது மழலை செல்வம்! திக்கி திணங்கி,
தப்பு தப்பாக பேசுவதை கண்டு,எல்லை
இல்லாத ஆனந்தம் படுவதை போல்
'குரு'! ஆகிய 'வியாழபகவானும்'!
மகிழ்ச்சி சொல்லுவார்.அப்படிதானே ஐயா !
முழுதுணர் முனிவர் தேற! மூவகை பாசமாய
பலிதொரு ஆன்மாக்கள் பதில் நிழல் அடங்க்கும் முன்மை
செழுமலர் பெருவும் அங்க விரல்களால் தெரிந்த யாவரும்
தொல் தொளுகளால் வழிபவர் தலைத்தாள் போற்றி !
/////யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteம்....இந்த வருசமாவது நடக்குதா பார்க்கலாம்.. ?!!//////
நல்லதேநினையுங்கள். நடக்கும். நடக்கட்டும்!
////Success said...
ReplyDeleteவணக்கம் குருவே..
நலம் நலம் அரிய ஆவல்...நல்ல விளக்கம்.
நன்றி.. வாழ்க வளமுடன்/////
நல்லது.நன்றி!
/////ananth said...
ReplyDeleteதிருமணம் ஆகும் போது எனக்கு 31 வயது. என் மனைவிக்கு 29 வயது. எனக்கு 7ம் அதிபர் குரு வக்கிரமாக சனி பார்வையில் இருந்தார். என் மனைவிக்கு 7ல் (மகரம்) குரு மற்றும் செவ்வாய். இன்னும் சில காரணங்கள் இருந்தன. திருமணம் நிச்சயம் என்ற கிரக நிலை இருக்கும் போது அனுக்கூலமற்ற கோச்சார கிரக நிலையாலோ தசா புத்தியாலோ அது தாமதமாகும். Delayed not denied. சரிதானே ஆசிரியரே. குழந்தை பாக்கியத்திற்கும் இது போல் பார்க்க வேண்டும்.//////
ஆமாம். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////பித்தனின் வாக்கு said...
ReplyDeleteநன்றி குருவே, இனி குருவை ஒரு கை பார்த்து விடுகின்றேன். தினமும் பூஜைதான். நன்றி.////
நல்லது. அப்படியே செய்யுங்கள்!
////kmr.krishnan said...
ReplyDeleteநல்ல பயனுள்ள பட்டியல். நன்றி.
இன்னும் சில திருமணத்தடை அமைப்புக்கள்:
லக்னத்தில் கிரஹயுத்தம் பெற்ற கிரஹம் இருப்பது.
நவாம்ச லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருப்பது.
சூரியன் மிதுனத்தில் சனி தனுசுவில் இருப்பது.
சந்திரன்,சனி,சுக்கிரன்,கேது அம்சத்தில் இணைவது.
லக்னத்திற்கு 2,12ல்செவ்வாய் கேது இருந்து பாவகர்த்தாரி யோகம் பெறுவது./////
மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////kmr.krishnan said...
ReplyDelete"ANCIENT INDIA; Upavedas are literature which are the subsidiary of the Vedas. In India we used to say that for each of the spiritual books there will be a scientific subsidiary book too. Tthus for Rig-Veda , the subsidiary is Artha Saastra, for yajurveda the subsidiary is dhanurveda, for Saama Veda the subsidiary is Gaandharva veda and for Atharva Veda, the subsidiaries are Ayurveda and sthaapathya veda. Artha Saastra gives economics and the rules for the governance of the nation. Koutilya / Chanakya has given the best knowledge on all aspects of the ruling of the nation, role of the king, ministers, financial aspects of governance etc. Kamandaka Artha Saastra gives yet another set of documentation on the same subject, still older compilation can be seen. Sukra neetisaara is also an Artha Saastra book. The Koutilya Artha Saastra is being accepted world over and more than 1500 foreign delegates participated in an international conference held on Koutilya Artha Saastra, last year. This shows the interest on the contents of the book written 2300 yrs ago". copy pasted from INDIAN INSTITUTE OF SCIENTIFIC HERITAGE NEWS LETTER. DT.10-FEB 2010//////
பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////vj said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
சூரியனும், சுக்கிரனும் கூட்டாக சிம்மம் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும்.
சிம்மம் ராசியில் சூரியன் ஆட்சி,அது போல சூரியன் உச்சம் ஆன மேஷ ராசியில் இந்த கூட்டனி (சூரியனும், சுக்கிரனும்) இருந்தாலும் திருமணம் தாமதப்படுமா ?
நன்றி./////
இல்லை. மேஷம் சொல்லப்படவில்லை!.
////vidhya said...
ReplyDeleteகடக லக்னம், சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகி ஏழில் செவ்வாய் உச்சத்தில் இருந்தால், முழு பலத்துடன் உள்ள செவ்வாய் திருமணத்தை மிகவும் தாமதப் படுத்துவாரா ஐயா?/////
கடகத்திற்கு செவ்வாய் 5 & 10ற்குரியவர். உச்சமானதால் அவரால் உபத்திரவம் அதிகம் இருக்காது. பரிவர்த்தனையாகியுள்ள சனியால் மட்டுமே உபத்திரவம் இருக்கும். தினமும் கோளறு திருப்பதிகம் படியுங்கள். அதுதான் பரிகாரம். சிவனை வணங்குங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
திருமணம் தாமதம் ஆவதற்க்கான அமைப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி...
அய்யா 7 ம் அதிபதி நீசம் பெற்று குரு பார்வை பெற்றால் நீசம் கேன்சல் ஆகுமா?அல்லது திருமணம் தாமதம் ஆகுமா?
நன்றி வணக்கம்....//////
பார்வையால் நீசம் கேன்சல் ஆகாது. ஆனால் அவருடைய பார்வை நன்மைகளைச் செய்யத்தூண்டும்!
/////Thirumal said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார் (அதாங்கய்யா நீச்சமாயிட்டார், தாங்கள் அவரை லஞ்சம் கொடுத்து இழுக்க ஒரு வழி சொல்லுங்க). முடிஞ்சா உங்களையும் கவனிச்சுடுரன் (என்னடா எனக்கே லஞ்சமான்னு கேக்குரீங்க, அதான் நன்றி சொல்லி தப்பித்துடுவோமில்ல...தப்பித்துடுவோமில்ல...)
;-))) நன்றி..///////
பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்
/////jee said...
ReplyDeleteDear sir,
Guru in vakram placed in sixth position from kadaga lagna, till marriage is ?///////
குரு 6 & 9 ற்கு உரியவர். கடக லக்கினம் எனும்போது, ஏழாம் அதிபதி சனியைப் பாருங்கள்.
////ananth said...
ReplyDelete//எனக்கு 7ம் அதிபதியே குருதான், அவர் மகரத்தில் மல்லாந்து படுத்து மயக்கமாயிட்டார்//
Oxygen cylinder வைத்து drips ஏற்றுங்கள். ஒரு வேளை சரியாகலாம். Seriously அதுதான் நீச்ச பங்கம், சுய வர்க பரல், நவாம்சத்தில் கிரக நிலை போன்ற Boostகள் இருக்கின்றனவே. இதோடு காரகர் சுக்கிரன் இருக்கிறரே கவலை எதற்கு. சாத்வீக குணம் கொண்டவர் தேவ குரு. அதனால்தான் தாமச குணமுள்ள ராசியான மகரத்தில் நீச்சமாகிறார் ஒன்று சொல்வோரும் உண்டு. அவருக்கே லஞ்சமா./////
தீவிர பிரார்த்தனைதான் லஞ்சம்!:-)))))
/////kannan said...
ReplyDeleteகுருநாதரே!!!
தனது சுய விருப்பம் கொண்டு, குருநாதனை போற்றி துதித்த பாடல்கள் எல்லாம் மீண்டும்,
நன்கு மனதிற்கு வரும் பொருட்டு ஒரு நல்வழி காட்டுங்களேன், ஐயா!
தாய்!!!
தாயானவள், தனது மழலை செல்வம்! திக்கி திணங்கி,
தப்பு தப்பாக பேசுவதை கண்டு,எல்லை
இல்லாத ஆனந்தம் படுவதை போல்
'குரு'! ஆகிய 'வியாழபகவானும்'!
மகிழ்ச்சி சொல்லுவார்.அப்படிதானே ஐயா !
முழுதுணர் முனிவர் தேற! மூவகை பாசமாய
பலிதொரு ஆன்மாக்கள் பதில் நிழல் அடங்க்கும் முன்மை
செழுமலர் பெருவும் அங்க விரல்களால் தெரிந்த யாவரும்
தொல் தொளுகளால் வழிபவர் தலைத்தாள் போற்றி !///////
வைத்தஒரு கல்வி மனப்பழக்கம் என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார். திரும்பத் திரும்ப மனம் செய்யுங்கள்
எல்லாம் மனதில் நிற்கும்!
///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்////
ReplyDeleteமிக்க நன்றிங்கய்யா....
வணக்கம் சார்,
ReplyDeleteஅப்பா இவ்வளவு வளையலா கையில போட்டுக்குணு இருக்குறங்க நல்லாயிருக்குது படம். பாடமும் நன்றாக இருக்கிறது விவகாரத்து, விதவைக்கான(மிக இளம் வயதில் மட்டும்)காரணத்தையும் எழுதுங்கள் ஐயா.
சுந்தரி
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteவகுப்பறை சக தோழர்களுக்கும் வணக்கம்,
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வந்து
வருகைப் பதிவிலாது கையெழுத்துப்போட்டு
விட்டு போவது வழக்கம்,
நான் அதைக் கூட செய்யாது;
காலையிலே வந்துப் பார்த்துவிட்டு
பதியாது சென்றுவிட்டேன்.
பாடத்தேன் இனித்தது என்பது வழக்கம் இன்று
பாடம் சீம்பாலோடு ( இதன் சுவை சிலருக்குத்
தெரியாது என நினைக்கிறேன்; தெரிந்திராதவர்கள்
இப்பாடம் படித்தபின்பு தெரிந்திருக்கும் )
தேன் கலந்தது போன்று
ஒரு அமுதமானது என்றேக் கூறவேண்டும்...
குருவே தங்களுக்கு மின்- மடல் அனுப்பியுள்ளேன்.
பிழை இருப்பின் பொருத்தருள வேண்டும்:
உரிமையில் வந்த ஒருமைக்கும்
மன்னித்தருள வேண்டுகிறேன்.
நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
/////Thirumal said...
ReplyDelete///பிரார்த்தனை ஒன்றுதான் லஞ்சம்! அதை லஞ்சமாக நினைக்காமல் முழு மனதோடு பிரார்த்தனை செய்யுங்கள்////
மிக்க நன்றிங்கய்யா....///
புரிதலுக்கு நன்றி!
////sundari said...
ReplyDeleteவணக்கம் சார்,
அப்பா இவ்வளவு வளையலைக் கையில போட்டுக்குணு இருக்குறங்க நல்லாயிருக்குது படம். பாடமும் நன்றாக இருக்கிறது விவகாரத்து, விதவைக்கான(மிக இளம் வயதில் மட்டும்)காரணத்தையும் எழுதுங்கள் ஐயா.
சுந்தரி///
பொறுத்திருங்கள். எல்லாம் தொடர்ந்து வரும்!
///Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
வகுப்பறை சக தோழர்களுக்கும் வணக்கம்,
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வந்து
வருகைப் பதிவிலாது கையெழுத்துப்போட்டு
விட்டு போவது வழக்கம்,
நான் அதைக் கூட செய்யாது;
காலையிலே வந்துப் பார்த்துவிட்டு
பதியாது சென்றுவிட்டேன்.
பாடத்தேன் இனித்தது என்பது வழக்கம் இன்று
பாடம் சீம்பாலோடு ( இதன் சுவை சிலருக்குத்
தெரியாது என நினைக்கிறேன்; தெரிந்திராதவர்கள்
இப்பாடம் படித்தபின்பு தெரிந்திருக்கும் )
தேன் கலந்தது போன்று
ஒரு அமுதமானது என்றேக் கூறவேண்டும்...
குருவே தங்களுக்கு மின்- மடல் அனுப்பியுள்ளேன்.
பிழை இருப்பின் பொருத்தருள வேண்டும்:
உரிமையில் வந்த ஒருமைக்கும்
மன்னித்தருள வேண்டுகிறேன்.
நன்றிகள் குருவே!
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நல்லது.நன்றி!
வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைக்கு வந்து இருக்கிறேன். எல்லா பாடங்களையும் படித்து வருகிறேன் ஐயா
ReplyDeleteசேர்மராஜ்
2ம் அதிபதி,ஏழாம் அதிபதி,சுக்கிரன் லக்னத்தில் (சிம்மம்) அஸ்தமனம் கூடவே லக்னத்தில் (குரு,சூரிய,ராகு) கிரஹயுத்தம், இந்த அமைப்புக்கு தாமதமான திருமணமா அலலது மறுக்கப்ட திருமணமா?
ReplyDeleteநன்றி குரு
ReplyDeleteகும்பம் லக்கினம் துலாம் ராசி
7ம் அதிபதி 9ல் நீசம் 10ல் சுக்கிரன்
எனக்கு பலன் இருக்கா
அல்லது திருமண தடையா