4.1.10

ஓட்டுப்போட்டீங்களா கண்மணிகளா?

+++++++++++++++++++++++++++++++++++++++
ஓட்டுப்போட்டீங்களா கண்மணிகளா?

தமிழ்மணம் விருதுகள் 2009 - இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு

அதற்கான சுட்டி (Link) இங்கே!

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கி சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இடுகைகள் இந்த இரண்டு கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்

சுட்டி (Link) இங்கே!

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.
சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம் தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009 - விரிவான அறிவிப்பு
-------------------------------------------------------------
நமது வகுப்பறை மாணவர்கள் வேலன், டாக்டர் ப்ரூனோ, உண்மைத்தமிழர், சகோதரி புதுகைத் தென்றல், செந்தழல் ரவி ஆகியோர்களின் கட்டுரைகளுடன் நமது நண்பர்கள் கோவி.கண்ணன்,மாதவிப்பந்தல் KRS, குசும்பன், மயுரேசன்,என்னுடைய ஆதர்சன எழுத்தாளர் ஆசிப் மீரான் போன்றோரின் அரிய கட்டுரைகள் உள்ளன.அத்துடன் 5வது பிரிவு.பயண அனுபவங்கள், ஊர், வாழ்வு நினைவோடைகள் பகுதியில் வாத்தியாரின் கட்டுரையும் உள்ளது (ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்)

தமிழ்மணத்தில் எழுதும் அனைவருமே நமது நண்பர்கள்தான். மொத்தம் 16 பிரிவுகளில் உங்களுக்குப் பிடித்த ஆக்கங்களுக்கு நீங்கள் வாக்கு அளிக்கும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்பைத் தவற விடாதீர்கள். உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள். ஆனால் சும்மா இருந்து விடாதீர்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
”வாத்தி (யார்), இன்றையப் பாடம் எங்கே?”

“ஓட்டுப் போடுவதற்காக இன்று உங்களுக்கு விடுமுறை! பாடம் 6.1.2010 (Morning 6:15 AM) அன்று காலையில் வரும்!
--------------------------------------------------------------------



வாழ்க வளமுடன்!

36 comments:

  1. ஓட்டு விவரம் சொன்னதற்கு நன்றி.நேரத்துடன் ஓட்டளித்து விடுகிறேன்.

    வகுப்பறை மாணவர்கள் அனைவரும் நம் ஆசானின் பதிவுக்குத் தவறாமலும்,பிற நண்பர்களின் பதிவுகளுக்கு விருப்பம் போலும் ஓட்டு அளிக்கக் கோருகிறேன்.இந்த மூத்தவனின் வேண்டுகளைப் புறம் தள்ளிவிட வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. //நமது வகுப்பறை மாணவர்கள் வேலன், டாக்டர் ப்ரூனோ, உண்மைத்தமிழர், சகோதரி புதுகைத் தென்றல், செந்தழல் ரவி ஆகியோர்களின் கட்டுரைகளுடன் நமது நண்பர்கள் கோவி.கண்ணன்,மாதவிப்பந்தல் KRS, குசும்பன், மயுரேசன்,என்னுடைய ஆதர்சன எழுத்தாளர் ஆசிப் மீரான் போன்றோரின் அரிய கட்டுரைகள் உள்ளன.அத்துடன் 5வது பிரிவு.பயண அனுபவங்கள், ஊர், வாழ்வு நினைவோடைகள் பகுதியில் வாத்தியாரின் கட்டுரையும் உள்ளது (ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்)

    தமிழ்மணத்தில் எழுதும் அனைவருமே நமது நண்பர்கள்தான். மொத்தம் 16 பிரிவுகளில் உங்களுக்குப் பிடித்த ஆக்கங்களுக்கு நீங்கள் வாக்கு அளிக்கும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்பைத் தவற விடாதீர்கள். உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள். ஆனால் சும்மா இருந்து விடாதீர்கள்

    அன்புடன்
    வாத்தியார்//

    வாக்களிக்கச் சொல்லி சில பெயர்களையும் பரிந்துரைத்து, விருப்பம் போல் வாக்களிக்கச் சொல்லும் உங்கள் பண்பு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  3. எனக்கு வகுப்பறைக்கு வந்து பாடம் படித்து பின்னூட்டம் இடுவதற்கு நேரம் கிடப்பது கடினமாக இருக்கிறது. இதில் இத்தனை பதிவுகளையும் படித்து பிடித்தது அல்லது சிறப்பானது என்று நான் நினைக்கும் பதிவிற்கு ஓட்டு போடுவது இயலாத காரியம். இருப்பினும் தாங்கள் சொன்ன ஒரு வார்த்தைக்காக முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. தமிழ்மணம் பார்க்கும்போது இவ்வளவு பேர் எழுதுகிறார்களா என்ற மலைப்பு ஏற்பட்டது.நண்பர்கள் பெயரை குறிப்பிட்டதற்கு நன்றி. உங்கள் தந்தை கதை மனதில் பதிந்த கதை.வாக்கு அதற்கு தான். மற்றவற்றை படித்து வாக்களிக்கிறேன். ரூபாய் 500, பிரியாணி,குவாட்டர் யார் கொடுப்பார்கள் என்று தான் தெரியவிலை.

    ReplyDelete
  5. நிச்சயம் வாக்களிக்கிறோம்!

    நீங்கள் உங்கள் அனுபவத்தில் சிலருக்கு ஜோதிடம் தவிர, வாழ்க்கை கவுன்சலிங் தரலாமே!

    ஒருவருக்கு சரியான வழிகாட்டி ( படித்திருந்தும் ) கிடைக்காமல் எவ்வளவு பேர் ஏங்குகிறார்கள்!

    பெயரில்லாமல் சில கேள்வி, சில பதில்கள்.

    ReplyDelete
  6. ஐயா !!!

    "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் ! குற்றமே" !!!

    ( பொருள் விளன்கிருக்கும் என்று நினைகின்றேன் ஐயா )

    என்ற நக்கீரனின் தமிழ் பரம்பரையில் வந்த, எம் ஆஸ்தான புலவருக்கு

    அதிகாலை வணக்கம் !!!

    ReplyDelete
  7. Dear sir,
    Thanks for your kind information. Voted already.

    ReplyDelete
  8. ஓட்டளித்தாகிவிட்டது அய்யா.

    ReplyDelete
  9. அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் .
    ஏன் தம்பிக்கு துலா லக்னம்,விருச்சிக ராசி. 10'ல் ,கடகத்தில் குரு,செவ்வாய் .குரு உச்சம் பெற்று விட்டான்.செவ்வாய் நீச்ச பங்கம் .செவ்வியும் சந்திரனும் பரிவர்த்தனம் பெற்றுவிட்டனர். அனால் இருவரும் நீச்சம்.செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றதால் சந்திரனும் நீச்ச பங்கம் பெறுவானா?? பரிவர்த்தனை ஆனதால் நீச்ச பலன்கள் இல்லாமல் போகுமா?? எப்படி இருக்கும். சற்று விளக்கி கூறுங்கள்.

    ReplyDelete
  10. kmr.krishnan said...
    ஓட்டு விவரம் சொன்னதற்கு நன்றி.நேரத்துடன் ஓட்டளித்து விடுகிறேன்.
    வகுப்பறை மாணவர்கள் அனைவரும் நம் ஆசானின் பதிவுக்குத் தவறாமலும்,பிற நண்பர்களின் பதிவுகளுக்கு
    விருப்பம் போலும் ஓட்டு அளிக்கக் கோருகிறேன்.இந்த மூத்தவனின் வேண்டுகளைப் புறம் தள்ளிவிட வேண்டாம் என்று வேண்டுகிறேன்.////

    உங்களின் பரிந்துரைக்கும், பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. //////கோவி.கண்ணன் said...
    //நமது வகுப்பறை மாணவர்கள் வேலன், டாக்டர் ப்ரூனோ, உண்மைத்தமிழர், சகோதரி புதுகைத் தென்றல், செந்தழல் ரவி ஆகியோர்களின் கட்டுரைகளுடன் நமது நண்பர்கள் கோவி. கண்ணன்,மாதவிப்பந்தல் KRS,
    குசும்பன், மயுரேசன்,என்னுடைய ஆதர்சன எழுத்தாளர் ஆசிப் மீரான் போன்றோரின் அரிய கட்டுரைகள்
    உள்ளன.அத்துடன் 5வது பிரிவு.பயண அனுபவங்கள், ஊர், வாழ்வு நினைவோடைகள் பகுதியில் வாத்தியாரின் கட்டுரையும் உள்ளது (ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்) தமிழ்மணத்தில் எழுதும் அனைவருமே நமது நண்பர்கள்தான். மொத்தம் 16 பிரிவுகளில் உங்களுக்குப் பிடித்த ஆக்கங்களுக்கு நீங்கள் வாக்கு அளிக்கும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்பைத் தவற விடாதீர்கள். உங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள். ஆனால் சும்மா இருந்து விடாதீர்கள்
    அன்புடன்
    வாத்தியார்//
    வாக்களிக்கச் சொல்லி சில பெயர்களையும் பரிந்துரைத்து, விருப்பம் போல் வாக்களிக்கச் சொல்லும் உங்கள் பண்பு பாராட்டத்தக்கது./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கோவியாரே!

    ReplyDelete
  12. ////ananth said...
    எனக்கு வகுப்பறைக்கு வந்து பாடம் படித்து பின்னூட்டம் இடுவதற்கு நேரம் கிடப்பது கடினமாக இருக்கிறது. இதில் இத்தனை பதிவுகளையும் படித்து பிடித்தது அல்லது சிறப்பானது என்று நான் நினைக்கும் பதிவிற்கு ஓட்டு போடுவது இயலாத காரியம். இருப்பினும் தாங்கள் சொன்ன ஒரு வார்த்தைக்காக முயற்சிக்கிறேன்.///

    உங்களால் முடியும் ஆனந்த்! செய்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  13. /////சிங்கைசூரி said...
    Done :-)

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  14. /////krish said...
    தமிழ்மணம் பார்க்கும்போது இவ்வளவு பேர் எழுதுகிறார்களா என்ற மலைப்பு ஏற்பட்டது.நண்பர்கள் பெயரை குறிப்பிட்டதற்கு நன்றி. உங்கள் தந்தை கதை மனதில் பதிந்த கதை.வாக்கு அதற்கு தான். மற்றவற்றை படித்து க்களிக்கிறேன். ரூபாய் 500, பிரியாணி,குவாட்டர் யார் கொடுப்பார்கள் என்று தான் தெரியவில்லை.//////

    அதெல்லாம் எதற்கு க்ரீஷ்? உண்மையான போதை வங்கி இருப்பில் இருக்கிறது. கடுமையாக உழைத்துப் பொருள் ஈட்டி வங்கி இருப்பை உயர்த்துங்கள் நண்பரே! ஒரு கட்சித்தலைவர் சொல்வார்: மக்களுடன் மட்டுமே எனக்குக் கூட்டணி!

    நமது தாரக மந்திரம்: ”கடவுளுடன் மட்டுமே நமக்குக் கூட்டணி!”

    ReplyDelete
  15. /////Vijayashankar said...
    நிச்சயம் வாக்களிக்கிறோம்! நீங்கள் உங்கள் அனுபவத்தில் சிலருக்கு ஜோதிடம் தவிர, வாழ்க்கை கவுன்சலிங் தரலாமே! ஒருவருக்கு சரியான வழிகாட்டி ( படித்திருந்தும் ) கிடைக்காமல் எவ்வளவு பேர் ஏங்குகிறார்கள்! பெயரில்லாமல் சில கேள்வி, சில பதில்கள்.////

    அடுத்த செமஸ்டரில் அதை வைத்துக்கொள்வோம்.ஆலோசனைக்கு நன்றி!

    ReplyDelete
  16. /////kannan said...
    ஐயா !!!
    "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் ! குற்றமே" !!!
    ( பொருள் விளங்கியிருக்கும் என்று நினைகின்றேன் ஐயா)
    என்ற நக்கீரனின் தமிழ் பரம்பரையில் வந்த, எம் ஆஸ்தான புலவருக்கு
    அதிகாலை வணக்கம் !!!/////

    காலை வணக்கத்திற்கும் இத்துடன் விட்டதற்கும் நன்றி முருகா!

    ReplyDelete
  17. ////jee said...
    Dear sir,
    Thanks for your kind information. Voted already.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  18. ////Alasiam G said...
    ஓட்டளித்தாகிவிட்டது அய்யா.

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  19. /////sundinesh1 said...
    அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் .
    ஏன் தம்பிக்கு துலா லக்னம்,விருச்சிக ராசி. 10'ல் ,கடகத்தில் குரு,செவ்வாய் .குரு உச்சம் பெற்று விட்டான்.செவ்வாய் நீச்ச பங்கம் .செவ்வியும் சந்திரனும் பரிவர்த்தனம் பெற்றுவிட்டனர். அனால் இருவரும் நீச்சம்.செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றதால் சந்திரனும் நீச்ச பங்கம் பெறுவானா?? பரிவர்த்தனை ஆனதால் நீச்ச
    பலன்கள் இல்லாமல் போகுமா?? எப்படி இருக்கும். சற்று விளக்கி கூறுங்கள்.////

    பதிவில் சொந்த ஜாதகத்தை வைத்துக் கேட்கும் கேள்விகளுக்கு இடமில்லை. மின்னஞ்சல் மூலமாக
    வாருங்கள். இக்கேள்வியைக் கேளுங்கள்.நேரம் கிடைக்கும்போது பதில் எழுதுகிறேன்:
    classroom2007@gmail.com

    ReplyDelete
  20. ====================
    நீங்கள் உங்கள் அனுபவத்தில் சிலருக்கு ஜோதிடம் தவிர, வாழ்க்கை கவுன்சலிங் தரலாமே!

    ஒருவருக்கு சரியான வழிகாட்டி ( படித்திருந்தும் ) கிடைக்காமல் எவ்வளவு பேர் ஏங்குகிறார்கள்!
    ===================

    // அடுத்த செமஸ்டரில் அதை வைத்துக்கொள்வோம்.ஆலோசனைக்கு நன்றி! //

    ==================

    கேட்ட நண்பர் விஜயசங்கர் அவர்களுக்கும், அன்புடன் இசைந்த ஆசிரியப் பெருமகனாருக்கும் நன்றிகள்! இதை நான் வகுப்பறைக்கு வந்தநாள் முதல் கூற எண்ணியிருந்தேன். வாழ்க்கை வழிப்போக்கர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல "வழிகாட்டி"யாக இருக்க முடியும் என நம்புகிறேன். அடுத்தவர் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் திறன் பலர் திருக்கணிதத்தை கணித்த தங்களுக்கு நிச்சயம் உண்டு. இறைவன் கூற விரும்புவதை தங்கள் மூலம் கூறுவார். செமஸ்டரில் நாமினல் ரோல் எகிறும் பாருங்கள்!

    நன்றி!

    ReplyDelete
  21. ////லலித் said...
    ====================
    நீங்கள் உங்கள் அனுபவத்தில் சிலருக்கு ஜோதிடம் தவிர, வாழ்க்கை கவுன்சலிங் தரலாமே!
    ஒருவருக்கு சரியான வழிகாட்டி ( படித்திருந்தும் ) கிடைக்காமல் எவ்வளவு பேர் ஏங்குகிறார்கள்!
    ===================
    // அடுத்த செமஸ்டரில் அதை வைத்துக்கொள்வோம்.ஆலோசனைக்கு நன்றி! //
    ==================
    கேட்ட நண்பர் விஜயசங்கர் அவர்களுக்கும், அன்புடன் இசைந்த ஆசிரியப் பெருமகனாருக்கும் நன்றிகள்! இதை நான் வகுப்பறைக்கு வந்தநாள் முதல் கூற எண்ணியிருந்தேன். வாழ்க்கை வழிப்போக்கர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல "வழிகாட்டி"யாக இருக்க முடியும் என நம்புகிறேன். அடுத்தவர் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் திறன் பலர் திருக்கணிதத்தை கணித்த தங்களுக்கு நிச்சயம் உண்டு. இறைவன் கூற விரும்புவதை தங்கள் மூலம் கூறுவார். செமஸ்டரில் நாமினல் ரோல் எகிறும் பாருங்கள்!
    நன்றி!/////

    நாமினல் ரோல் எகிறுவதைப் பற்றியோ அல்லது குறைவதைப் பற்றியோ கவலைப்படும் வயதை நான் தாண்டிவிட்டேன்! எது நடந்தாலும் இறைவனின் சித்தம்! எனக்கு மகிழ்ச்சியே. உங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  22. ஓட்டளித்தாகிவிட்டது அய்யா

    ReplyDelete
  23. ///Ezhil said...
    ஓட்டளித்தாகிவிட்டது அய்யா////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  24. ////rama said...
    i put my vote for you sir....////

    என் பதிவிற்கு ஓட்டளித்தமைக்கு நன்றி. மற்ற பகுதிகளிலும் உங்கள் ஓட்டைச் செலுத்தினீர்களா? அதுதான் முக்கியம்!

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. Dear Brothers and sisters,
    Idonot know that how will i enter into "userdashboard". But i got account activation no.by my mail.
    i will have to vote for thousand hector land story pl help me i will be waiting for ur reply.
    your lovingly
    sundari.p

    ReplyDelete
  27. ///KARTHIK said...
    OK SIR.. I WILL..////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  28. ////sundari said...
    Dear Brothers and sisters,
    Idonot know that how will i enter into "userdashboard". But i got account activation no.by my mail.
    i will have to vote for thousand hector land story pl help me i will be waiting for ur reply.
    your lovingly
    sundari.p////

    தமிழ்மணத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் புரிந்து கொண்டு ஓட்டுப்போட முடிந்தவர்கள், போடுங்கள். முடியாதவர்கள் விட்டு விடுங்கள். எதற்கு வீண் சிரமம்?

    ReplyDelete
  29. When you login in the main page of tamilmanam just below the login there are instructions to go to the voting page.I also had the problem as I was looking for it elsewhere.
    தமிழ்மணம் விருதுகள் 2009 இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு.அதன் மேல் கிளிக் செய்யவும். வாக்கெடுப்பு பக்கம் வரும்.

    ReplyDelete
  30. Ideally u should get 1000+ votes in all categories, because you have 1000 followers.
    My advance wishes for your success.

    ReplyDelete
  31. வணக்கம் ஆசிரியர் அவர்களே

    சிறப்பான பணி, வாழ்த்துகள்,

    நேற்று நீங்க‌ள் ப‌திவில் குறிப்பிட்ட‌ பாட‌த்தில் என‌க்கும் சந்தேக‌ம் உள்ளது.

    நான் பிறந்த நாள் மற்றும் நேரம்,

    ஐப்பசி மாதம் 3ம் தேதி ஞாயிற்று கிழமை 1986, இரவு 2.20 க்கு பிறந்தேன், அதில் எனக்கு ஆங்கில தேதி சரியாக தெரியவில்லை. ஜாதகத்தில் 19.10.1986 என குறிப்பிட பட்டு உள்ளது. வாக்கிய கணிதபடி சரியான ஆங்கில தேதியை சொல்லவும்.

    நன்றி

    ReplyDelete
  32. ////sasi said...
    வணக்கம் ஆசிரியர் அவர்களே
    சிறப்பான பணி, வாழ்த்துகள்,
    நேற்று நீங்க‌ள் ப‌திவில் குறிப்பிட்ட‌ பாட‌த்தில் என‌க்கும் சந்தேக‌ம் உள்ளது.
    நான் பிறந்த நாள் மற்றும் நேரம்,
    ஐப்பசி மாதம் 3ம் தேதி ஞாயிற்று கிழமை 1986, இரவு 2.20 க்கு பிறந்தேன், அதில் எனக்கு ஆங்கில தேதி சரியாக தெரியவில்லை. ஜாதகத்தில் 19.10.1986 என குறிப்பிட பட்டு உள்ளது. வாக்கிய கணிதபடி சரியான ஆங்கில தேதியை சொல்லவும்.
    நன்றி////

    அக்‌ஷய வருடம் ஐப்பசி மாதம் 3ஆம் தேதி திங்கட்கிழமையல்லவா? முதலில் தமிழ்த்தேதியை உறுதிப்படுத்துங்கள்! (அன்று கார்த்திகை நட்சத்திரம்)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com