30.11.09

Lessons on Astrology: Moolaththrikonam: மூலத்திரிகோணம்!

”வாத்தி(யார்), எத்ற்காக இந்தப் படம்?”
”மனிதனின் மூலத்திரிகோணம் இவர்தானே?”
”சரி, கையில் ஏன் பாட்டிலோடு?”
”அண்ணனுக்கு இன்னும் வீக்என்ட் முடியவில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Moolaththrikonam: மூலத்திரிகோணம்!

திரிகோணம் என்றால் தெரியும். அது என்ன மூலத்திரிகோணம்?

மூலத்திரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கு வேர்ப் பகுதி. ஒரு மரத்தின் வேர்ப்பகுதி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் நமக்குத் தெரியும். அதுபோல ஒரு கிரகத்தின் வேர்ப் பகுதி மூலத்திரிகோணம் எனப்படும்!

புதன், சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் சொந்தம். அந்த இரண்டு வீடுகளில் எது வேர்ப்பகுதியோ அதுதான் அந்த கிரகத்தின் மூலத்திரிகோணம்!சந்திரனுக்கு மட்டும் அதன் உச்ச வீடான ரிஷபம் வேர்ப்பகுதி. அதாவது அதன் மூலத்திரிகோணம்.

மற்ற கிரகங்களுக்கான மூலத்திரிகோண வீட்டைக் கீழே கொடுத்துள்ளேன்:

சூரியன் - சிம்மம்
சந்திரன் - ரிஷபம்
செவ்வாய் - மேஷம்
புதன் - கன்னி
குரு - தனுசு
சுக்கிரன் - துலாம்
சனி - கும்பம்
---------------------
ராகுவிற்கு - கன்னி
கேதுவிற்கு - மீனம்

(ராகு, கேதுவிற்கு சொந்த வீடு கிடையாதே? அவைகளுக்கு எப்படிக் கன்னியும், மீனமும் வேர்ப்பகுதிகளாக இருக்க முடியும் என்று யாரும் கேட்க வேண்டாம். பழைய ஜோதிட நூல் ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். எடுத்துக் கொண்டால், வாழ்க்கை முழுவதும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதை மனதில் வையுங்கள்)
++++++++++++++++++++++++++++++++

மூலத்திரிகோணத்தில் இருக்கும் கிரகம் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் அரைத் தூக்கத்தில் வேலை செய்யும் சிகாமணிகளுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். அவர்கள் பதிவைவிட்டு விலகவும்!

மூலத்திரிகோணத்தில் இருக்கும் சுக்கிரன் இயற்கையாகவே ஜாதகனுக்கு நல்ல மனைவியைப் பிடித்துத் தருவார் (அட, இது நன்றாக இருக்கிறதே!) ராசி வரிசையில்/கிரகச்சுற்றில் இது ஏழாம் இடம். அதை மனதில் வையுங்கள்.

மூலத்திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான் இயற்கையாகவே ஜாதகனுக்குத் தர்மப்படி நடக்கும் சூழ்நிலையையும், உரிய காலத்தில் குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார் (அட, இதுவும் நன்றாக இருக்கிறதே!)

மூலத்திரிகோணம் என்பது உச்சத்திற்கு நிகரானது. அதோடு பாதுகாப்பானது. சொந்த வீட்டில் அக்கிரகம் இருப்பதால் பாதுகாப்பானது. அக்கிரகம் வலிமையாக இருப்பதுடன், ஜாதகனுக்குப் பல நன்மைகளையும் அள்ளித்தரும்!
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதைவிட, மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தமத்தில் பலன்கள் இரட்டிப்பாகும். நல்லதும் இரட்டிப்பாகும், தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமைகளும் இரட்டிப்பாகும். மூலத்திரிகோணத்தில் அந்தப் பிரச்சினை இல்லை! அதை மனதில் வையுங்கள்

நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! 

88 comments:

  1. ஐயா,

    சந்திரனுக்கு மூலத்திரிகோணம் கடகம் அல்லவா ? ரிஷபத்தில் அது உச்சம் அல்லவா பெறுகிறது?

    அன்புடன்,
    ஆனந்தி

    ReplyDelete
  2. அய்யா, காலை வணக்கம்

    பதிவு மிகவும் விளக்கமாகவும் அருமையாகவும் இருந்தது. எனக்கு ரிஷபத்தில் சந்திரன் (3 ஆம் இடம்) என்ன பலன்? குரு தனுசில் (10 ஆம் இடம்)

    நன்றி.
    லெட்சுமணன்

    ReplyDelete
  3. தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி. அய்யா சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக மற்றும் மூலத்திரிகோணம் பெற்றால் என்ன பலன் என்பதைக் கூறவும். நன்றி.

    ReplyDelete
  4. /////Lakshmanan said...
    அய்யா, காலை வணக்கம்
    பதிவு மிகவும் விளக்கமாகவும் அருமையாகவும் இருந்தது. எனக்கு ரிஷபத்தில் சந்திரன் (3 ஆம் இடம்) என்ன பலன்? குரு தனுசில் (10 ஆம் இடம்)
    நன்றி.
    லெட்சுமணன்/////

    உங்களுக்கு மீன லக்கினம். 5ஆம் இடத்திற்கு உரிய சந்திரன், உச்சம் பெற்றதோடு, மூலத்திரிகோணத்திலும் இருப்பதால், நீங்கள் உங்கள் குழந்தைகளால் மேன்மை பெறுவீர்கள். இது பொதுப்பலன்!

    ReplyDelete
  5. /////Blogger Anandhi said...
    ஐயா,
    சந்திரனுக்கு மூலத்திரிகோணம் கடகம் அல்லவா ? ரிஷபத்தில் அது உச்சம் அல்லவா பெறுகிறது?
    அன்புடன்,
    ஆனந்தி////

    சந்திரனுக்கு மட்டும் அதன் உச்ச வீடான ரிஷபம் வேர்ப்பகுதி. அதாவது அதன் மூலத்திரிகோணம். இதைப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேனே சகோதரி!

    ReplyDelete
  6. ////Blogger பித்தனின் வாக்கு said...
    தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி. அய்யா சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக மற்றும் மூலத்திரிகோணம் பெற்றால் என்ன பலன் என்பதைக் கூறவும். நன்றி.////

    விருதுகளுக்கு உகந்த வயதை நான் தாண்டிவிட்டேன். ஆகவே விருதுகளில் எனக்கு மயக்கமில்லை!

    மொட்டையாகக் கேள்வி கேட்டால் எப்படி? சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறுவதன் பலன் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அதனதன் லக்கினத்தை வைத்து மாறுபடும்!

    ReplyDelete
  7. நல்ல விளக்கம். ந்ன்றி.

    ReplyDelete
  8. ஐயா காலை வணக்கம்.

    எனக்கு துலா லக்கினம். லக்கினதில் சுக்கிரன் ஆட்சி. மூலத்திரிகோணம்...
    மகிழ்சியாக உணர்கிறேன்.

    நீங்கள் கருத்து கூரினால் இன்னும் மகிழ்சி. நன்றி

    ReplyDelete
  9. எனக்கு எந்த கிரகமும் ராசி சக்கரத்தில் மூலத்திரிகோணத்தில் இல்லை. நவாம்சத்தில் புதனும் சனியும். இந்த கிரகங்களில் புதனுக்கு ஒரு விஷேசம் உண்டு. கன்னியில் அவர் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் என்ற மூன்று நிலைகளில் இருக்கிறார். வேறு எந்த கிரகத்திற்கும் இந்த விஷேச நிலை இல்லை.

    ReplyDelete
  10. மூலதிரிகோணத்திற்கும் உச்சத்திற்கு இருப்பது போல் பாகை கணக்கு இருப்பதாக படித்திருக்கிறேன். உதாரணத்திற்கு புதன் கன்னியில் 15 பாகை வரையில் உச்ச பலமும், அடுத்த 5 பாகை வரையில் மூலத்திரிகோண பலமும், மீதம் 10 பாகை ஆட்சி பலமும் பெறுகிறார் அல்லது இதற்கான பலனைக் கொடுக்கிறார். தங்கள் கருத்து என்ன ஆசிரியரே.

    ReplyDelete
  11. காலை வணக்கம் ஆசானே,
    பாடம் அருமை, மிக்க நன்றி.

    சந்திரன் பாவியாக or யோகமில்லாதவராக இருக்க(ரிஷப லக்னம்),சந்திரன் வர்கோத்தமம் அடைய, அவரது தசா/புத்தியில் அது நல்ல பலனை தருமா தீய பலனை தருமா ஆசானே ?

    ReplyDelete
  12. Ayya,

    Pathivu migavum Arumai.

    Karagan Pava Nasam enru oru idathil koori ullirgal.So oru Simha Lagna Jathagathil Guru MoolaTrikonathil (5th House) irunthal 5th idathil irupathaiyum meeri kulanthai bakiyathai porutha varaiyil avar nanmai seivara?

    ReplyDelete
  13. Dear Sir

    Moolathirikonam padam Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  14. அய்யா இனிய காலை வணக்கம்,


    எனக்கு விருசிக லக்னம். 2ல் குரு ஆட்சி (மேலும் சந்திரன் செவ்வாய் கூட்டனி 2 ல்). மூலத்திரிகோணம்...
    மகிழ்சியாக உணர்கிறேன்.

    நீங்கள் கருத்து கூரினால் இன்னும் மகிழ்சி. நன்றி

    ReplyDelete
  15. ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றி.
    ராசியில் சுக்கிரனும்
    அம்சத்தில் புதனும், சூரியனும்
    திரிகோணத்தில் அய்யா.

    ReplyDelete
  16. வணக்கம் அய்யா.
    மூலத்திரிகோணம் பற்றிய பாடம்
    நன்றாக புரிந்தது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  17. அய்யா இனிய காலை வணக்கம்
    எனக்கு ராசி இல் எந்த கிரகமும் மூலத்திரிகோணத்தில் இல்லை ....அனால் அம்சத்தில் சுக்ரன் மட்டும் மூலத்திரிகோணத்தில் ....

    அருமயான பாடத்திர்க்கு நன்றிகள் வணக்கம்

    ReplyDelete
  18. அய்யா!!!

    காலை வணக்கம்.
    எனக்கு மின்னஞ்சல் பாடம் 12-க்கு அப்புறம் வேறு பாடங்கள் மின்னஞ்சலில் வரவில்லை.மற்றவர்களுக்கு அனுப்பி இருந்தால் எனக்கும் அனுப்பவும்.

    நன்றி!!!

    ReplyDelete
  19. ////krish said...
    நல்ல விளக்கம். நன்றி./////

    நல்லது.நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  20. /////Success said...
    ஐயா காலை வணக்கம்.
    எனக்கு துலா லக்கினம். லக்கினத்தில் சுக்கிரன் ஆட்சி. மூலத்திரிகோணம்...
    மகிழ்சியாக உணர்கிறேன்.
    நீங்கள் கருத்து கூரினால் இன்னும் மகிழ்சி. நன்றி/////

    சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு எல்லா சுகங்களையும் தருவான். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் அதைவிட வேறு என்ன வேண்டும்?

    ReplyDelete
  21. //////ananth said...
    எனக்கு எந்த கிரகமும் ராசி சக்கரத்தில் மூலத்திரிகோணத்தில் இல்லை. நவாம்சத்தில் புதனும் சனியும். இந்த கிரகங்களில் புதனுக்கு ஒரு விஷேசம் உண்டு. கன்னியில் அவர் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் என்ற மூன்று நிலைகளில் இருக்கிறார். வேறு எந்த கிரகத்திற்கும் இந்த விஷேச நிலை இல்லை./////

    உண்மைதான்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  22. /////ananth said...
    மூலதிரிகோணத்திற்கும் உச்சத்திற்கு இருப்பது போல் பாகை கணக்கு இருப்பதாக படித்திருக்கிறேன். உதாரணத்திற்கு புதன் கன்னியில் 15 பாகை வரையில் உச்ச பலமும், அடுத்த 5 பாகை வரையில் மூலத்திரிகோண பலமும், மீதம் 10 பாகை ஆட்சி பலமும் பெறுகிறார் அல்லது இதற்கான பலனைக் கொடுக்கிறார். தங்கள் கருத்து என்ன ஆசிரியரே./////

    பொதுவாக ராசியில் 3 பகைகளுக்குமேல் இருக்கும் கிரகங்கள் உரிய பலனைக் கொடுக்கும்!

    ReplyDelete
  23. ////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    பாடம் அருமை, மிக்க நன்றி.
    சந்திரன் பாவியாக or யோகமில்லாதவராக இருக்க(ரிஷப லக்னம்),சந்திரன் வர்கோத்தமம் அடைய, அவரது தசா/புத்தியில் அது நல்ல பலனை தருமா தீய பலனை தருமா ஆசானே ?//////

    கலவையான பலன்கள்! mixed results

    ReplyDelete
  24. /////Strider said...
    Ayya,
    Pathivu migavum Arumai.
    Karagan Pava Nasam enru oru idathil koori ullirgal.So oru Simha Lagna Jathagathil Guru MoolaTrikonathil (5th House) irunthal 5th idathil irupathaiyum meeri kulanthai bakiyathai porutha varaiyil avar nanmai seivara?/////

    குழந்தை பாக்கியத்தைப் பற்றித் தனிப் பதிவு ஒன்று உள்ளது. படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  25. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Moolathirikonam padam Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  26. /////KKK said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    எனக்கு விருசிக லக்னம். 2ல் குரு ஆட்சி (மேலும் சந்திரன் செவ்வாய் கூட்டணி 2 ல்). மூலத்திரிகோணம்...
    மகிழ்சியாக உணர்கிறேன்.
    நீங்கள் கருத்து கூரினால் இன்னும் மகிழ்சி. நன்றி/////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  27. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றி.
    ராசியில் சுக்கிரனும்
    அம்சத்தில் புதனும், சூரியனும்
    திரிகோணத்தில் அய்யா.////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  28. //////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    மூலத்திரிகோணம் பற்றிய பாடம்
    நன்றாக புரிந்தது.
    நன்றி அய்யா./////

    புரிதலுக்கு நன்றி நாராயணன்!

    ReplyDelete
  29. ///////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்
    எனக்கு ராசி இல் எந்த கிரகமும் மூலத்திரிகோணத்தில் இல்லை ....அனால் அம்சத்தில் சுக்ரன் மட்டும் மூலத்திரிகோணத்தில் ....
    அருமயான பாடத்திற்கு நன்றிகள். வணக்கம்//////

    சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு எல்லா சுகங்களையும் தருவான்!

    ReplyDelete
  30. ////Blogger Arul said...
    அய்யா!!!
    காலை வணக்கம்.
    எனக்கு மின்னஞ்சல் பாடம் 12-க்கு அப்புறம் வேறு பாடங்கள் மின்னஞ்சலில் வரவில்லை.மற்றவர்களுக்கு அனுப்பி இருந்தால் எனக்கும் அனுப்பவும்.
    நன்றி!!!////

    மின்னஞ்சல் பாடம் 12-ற்குப் பிறகு இனிமேல்தான் எழுத வேண்டும். வந்தால் அனைவருக்கும் ஒன்றாகத்தான் வரும்.கவலைப் படாதீர்கள்!

    ReplyDelete
  31. Dear Sir,

    மீன லக்னம், லக்னத்தில் கேது, கன்னி ராசி, ராசியில் ராகு மூல திரிகோணத்தில் இருக்கின்றது இதன் பலன் என்ன?
    Rgds
    Nainar

    ReplyDelete
  32. எனக்கும் இல்லை (ராசி & அம்சம் 2 லும்)

    ReplyDelete
  33. Dear Sir,

    Present for the today's lesson.

    Unexpectatly and today I had Moolathrikonam in Rasi and Amsam

    in rasi i had the same for Raghu and kethu
    and in Amsam its guru in Dhanush.

    ReplyDelete
  34. Dear Sir,

    Thanks for the lessons.

    Balakumaran

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்

    பின்னூட்டம் இட்டு வெகு நாட்களாகிவிட்டது. இன்றைய பாடம் அருமை. இன்றுதான் நீங்கள் சொல்லிய யோகம் அல்லது பாடத்தில் உள்ள அமைப்பு எனக்கு வந்துள்ளது. கன்னி லக்னம், துலாமில புதனும் சுக்கிரனும் - சுக்கிரன் மூலத்திரிகோனத்தில், மேலும் தனுசில் குரு, சனி சந்திரன் - குரு மூலத்திரிகோனத்தில். அருமையான மனைவி, சரியான வயதில் மகன் - தர்மப்படி நடக்கிறேன். - இது போதும். வேறென்ன வேண்டும் - மிக்க மகிழ்ச்சி
    இனி சிவ பெருமான் கிருபை வேண்டும்

    நன்றி

    வணக்கம்

    ReplyDelete
  36. This lesson wss presented in more simple terms understandable to common person like me. I have saturn in its moolathrikonam and is in 9th position from lagna. and guru in ascendant mithuna. I am studying back log of lessons and taking notes also. BALA

    ReplyDelete
  37. பாடம் மிக அருமை ..
    நன்றி அய்யா .
    ஒரு கேள்வி .தனுசுவில் சூரியனும் குருவும் இருக்க இருவருக்கும் 5 பாகை இடைவெளி இருக்கும் போதும் குரு அஸ்தமனம் ஆவாரா?
    வர்கோதமம் பெற்றாலும் அஸ்தமனம் ஆவாரா?

    ReplyDelete
  38. Vathiyariya,

    Good Lesson and thanks for this information.

    It is new information regarding Ragu & Kethu placement in Kanni and Meenam considered to be Moolathirigonam.

    Guru in Miduna Laknam(1), Raghu in Kanni (4), Moon in Dhanus (7) and Kethu in Meenam ( 10 )

    I was thinking that I didnt have the GejaKesari Yoga (or may be it is a weak one ) since Guru in Midunam. But atleast this Ragu / Kethu's Kendiram looks to be good.Anyway, 337 is the magic number..


    Thanks
    Rajan

    ReplyDelete
  39. மூலத்திருகோணம் கன்னியில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் ப‌லரைச் சந்தித்து
    உள்ளேன்.உச்சம்,மூலத்திருகோணம் இரண்டும் சேர்ந்து அபார நினைவாற்ற‌லும்,உயர் கல்வியும் பெற்று மேதாவிகளாக விளங்குகிற‌ர்கள்.

    ReplyDelete
  40. ஐயா வணக்கம்,
    குரங்கு நீர் குடிக்கின்றது என்க்கு பறவைகள்,மிருகங்கள் ரொம்ப பிடிக்கும் பட்ம் ரொம்ப நல்லாயிருக்குது. ஐயா எனக்கு முலதிரிகோண யோகமில்லை சுக்கிரன் ம்ட்டும் துலத்தில் கேதுவுடன் சேர்ந்து இருக்கிறார். பாடம் மிகவும் நனறாக இருந்தது. ரொம்ப நன்றி ஐயா.
    சுந்தரி.

    ReplyDelete
  41. Ayya,

    Moola thri konathil irukkum giragam thoongamal work puriyum.

    Sir , So Here , Can i consider this moola thri kona giragam will give good effects even it's dasa & bukthi is not running?

    Regards

    NSK.

    ReplyDelete
  42. அன்புள்ள அய்யா,
    இதுவரை நான் மூலத்திரிகோணம் என்பதை மூலை=corner என்று ஏதோ angular related என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
    இன்றுதான் அதன் உண்மை விளக்கம் root = மூலம் என்று புரிந்துகொண்டேன்.இன்றைய பாடத்தில் எல்லா விஷயங்களுமே எனக்கு புதிதுதான். மிக்க நன்றி.
    விருச்சிக லக்கினம் 9ஆம் ஆதி சந்திரன் உச்சமாகி மூலத்திரிகோணம், (தலைவர் அவர்
    வேலையை கரெக்ட்டாப் பண்ணிட்டாரு.)
    2க்கும் ,5க்கும் அதிபதி குரு தனுசில் மூலத்திரிகோணம்.சுயவர்க்கத்திலும் 5பரல்.10ஆம் ஆதி சூரியனும் கூடவே இருந்தாலும் 17டிகிரி distanceலே silentடா வேடிக்கை பார்க்குறாரு.
    ஆனால் ராகு கூட சேர்ந்து குட்டையை குழப்பினதிலே (12டிகிரி கணக்கிலே) 5 டிகிரிநெருக்கத்திலே குருவை காலி பண்ணிட்டார் என்றுதான் நினைக்கிறேன்.ஏனென்றால் நீங்கள் சொன்ன மூலத்திரிகோண பவர் இருந்தும் கூட இந்த குரு தசையே முடிகிற கடைசி வருடம் வரைக்கும் முக்கிய பலன்கள் இல்லாமல் பண்ணிவிட்டார். குரு முட்டி மோதி கடைசி வருடத்திலாவது ராகுவை வெல்வாரா என்று WWF பார்ப்பது போலே finale round ஐ ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  43. /////arumuga nainar said...
    Dear Sir,
    மீன லக்னம், லக்னத்தில் கேது, கன்னி ராசி, ராசியில் ராகு மூல திரிகோணத்தில் இருக்கின்றது இதன்

    பலன் என்ன?
    Rgds
    Nainar//////

    பொதுவாக 7ல் இருக்கும் ராகு, சிலருக்கு (அவர்களின் ஜாதக அமைப்பை வைத்து) மண வாழ்வில் சில பிரச்சினைகளை உண்டாக்கும். சிலரை விவகாரத்து வரை கொண்டுபோய் விடும். சிலருக்கு அதிகார மனப்பான்மை மிக்க இல்லாள் கிடைப்பாள். திரிகோண அமைப்பில் உள்ளதால். இவைகள் இல்லாமல் இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கலாம். எப்படியுள்ளது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் நைனா(ர்)

    ReplyDelete
  44. /////Uma said...
    எனக்கும் இல்லை (ராசி & அம்சம் 2 லும்)/////

    இல்லாவிட்டால் போகிறது. வேறு ஏதாவது நன்மை செய்யும் அமைப்பு இருக்கும். வரும் பாடங்களைப்

    பொறுத்திருந்து படியுங்கள் சகோதரி!

    ReplyDelete
  45. //////Ram said...
    Dear Sir,
    Present for the today's lesson.
    Unexpectatly and today I had Moolathrikonam in Rasi and Amsam
    in rasi i had the same for Raghu and kethu
    and in Amsam its guru in Dhanush.//////

    தகவலுக்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  46. //////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the lessons.
    Balakumaran//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  47. //////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    பின்னூட்டம் இட்டு வெகு நாட்களாகிவிட்டது. இன்றைய பாடம் அருமை. இன்றுதான் நீங்கள் சொல்லிய

    யோகம் அல்லது பாடத்தில் உள்ள அமைப்பு எனக்கு வந்துள்ளது. கன்னி லக்னம், துலாமில புதனும் சுக்கிரனும்

    - சுக்கிரன் மூலத்திரிகோணத்தில், மேலும் தனுசில் குரு, சனி சந்திரன் - குரு மூலத்திரிகோணத்தில்.

    அருமையான மனைவி, சரியான வயதில் மகன் - தர்மப்படி நடக்கிறேன். - இது போதும். வேறென்ன வேண்டும்

    - மிக்க மகிழ்ச்சி
    இனி சிவ பெருமான் கிருபை வேண்டும்
    நன்றி
    வணக்கம்/////

    சிவமைந்தனின் பெயரைக் கொண்டுள்ளீர்கள் - சிவகிருபை வேண்டிய அளவு கிடைக்கும்!

    ReplyDelete
  48. //////Balasubramanian Pulicat said...
    This lesson was presented in more simple terms understandable to common person like me. I have saturn

    in its moolathrikonam and is in 9th position from lagna. and guru in ascendant mithuna. I am studying back

    log of lessons and taking notes also. BALA///////

    அப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  49. //////saravanan said...
    பாடம் மிக அருமை ..
    நன்றி அய்யா .
    ஒரு கேள்வி .தனுசுவில் சூரியனும் குருவும் இருக்க இருவருக்கும் 5 பாகை இடைவெளி இருக்கும் போதும்

    குரு அஸ்தமனம் ஆவாரா?
    வர்கோதமம் பெற்றாலும் அஸ்தமனம் ஆவாரா?/////

    ஆகமாட்டார்!

    ReplyDelete
  50. //////rama said...
    Moolaththrikonam lesson was good.///////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  51. /////Rajan said...
    Vathiyaraiya,
    Good Lesson and thanks for this information.
    It is new information regarding Ragu & Kethu placement in Kanni and Meenam considered to be

    Moolathirigonam.
    Guru in Miduna Laknam(1), Raghu in Kanni (4), Moon in Dhanus (7) and Kethu in Meenam ( 10 )
    I was thinking that I didnt have the GejaKesari Yoga (or may be it is a weak one ) since Guru in Midunam.

    But atleast this Ragu / Kethu's Kendiram looks to be good.Anyway, 337 is the magic number..
    Thanks
    Rajan//////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  52. //////kmr.krishnan said...
    மூலத்திருகோணம் கன்னியில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் ப‌லரைச் சந்தித்து
    உள்ளேன்.உச்சம்,மூலத்திரிகோணம் இரண்டும் சேர்ந்து அபார நினைவாற்ற‌லும்,உயர் கல்வியும் பெற்று

    மேதாவிகளாக விளங்குகிற‌ர்கள்.//////

    உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  53. //////kannan said...
    Guru!
    vanakkam
    yes sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  54. //////sundari said...
    ஐயா வணக்கம்,
    குரங்கு நீர் குடிக்கின்றது என்க்கு பறவைகள்,மிருகங்கள் ரொம்ப பிடிக்கும் பட்ம் ரொம்ப நல்லாயிருக்குது.

    ஐயா எனக்கு முலதிரிகோண யோகமில்லை சுக்கிரன் ம்ட்டும் துலத்தில் கேதுவுடன் சேர்ந்து இருக்கிறார்.

    பாடம் மிகவும் நனறாக இருந்தது. ரொம்ப நன்றி ஐயா.
    சுந்தரி.//////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  55. //////NSK said...
    Ayya,
    Moola thri konathil irukkum giragam thoongamal work puriyum.
    Sir , So Here , Can i consider this moola thri kona giragam will give good effects even it's dasa & bukthi

    is not running?
    Regards
    NSK./////

    தசா, புத்திகளில்தான் செய்யும்!

    ReplyDelete
  56. /////Blogger minorwall said...
    அன்புள்ள அய்யா,
    இதுவரை நான் மூலத்திரிகோணம் என்பதை மூலை=corner என்று ஏதோ angular related என்று

    நினைத்துக்கொண்டிருந்தேன்.
    இன்றுதான் அதன் உண்மை விளக்கம் root = மூலம் என்று புரிந்துகொண்டேன்.இன்றைய பாடத்தில் எல்லா

    விஷயங்களுமே எனக்கு புதிதுதான். மிக்க நன்றி.
    விருச்சிக லக்கினம் 9ஆம் ஆதி சந்திரன் உச்சமாகி மூலத்திரிகோணம், (தலைவர் அவர்
    வேலையை கரெக்ட்டாப் பண்ணிட்டாரு.)
    2க்கும் ,5க்கும் அதிபதி குரு தனுசில் மூலத்திரிகோணம்.சுயவர்க்கத்திலும் 5பரல்.10ஆம் ஆதி சூரியனும்

    கூடவே இருந்தாலும் 17டிகிரி distanceலே silentடா வேடிக்கை பார்க்குறாரு.
    ஆனால் ராகு கூட சேர்ந்து குட்டையை குழப்பினதிலே (12டிகிரி கணக்கிலே) 5 டிகிரிநெருக்கத்திலே

    குருவை காலி பண்ணிட்டார் என்றுதான் நினைக்கிறேன்.ஏனென்றால் நீங்கள் சொன்ன மூலத்திரிகோண பவர்

    இருந்தும் கூட இந்த குரு தசையே முடிகிற கடைசி வருடம் வரைக்கும் முக்கிய பலன்கள் இல்லாமல்

    பண்ணிவிட்டார். குரு முட்டி மோதி கடைசி வருடத்திலாவது ராகுவை வெல்வாரா என்று WWF பார்ப்பது

    போலே finale round ஐ ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறேன்../////

    தசையின் முடிவில் வென்று நன்மைகளைச் செய்வார். பொறுமையுடன் இருங்கள் மைனர்வாள்!

    ReplyDelete
  57. ayya enakku, virichiga lagnam, danusu rasi. pala naatkalaaga... ethachum nalla visayam namakku match aguthannu pathuttey irunthen. appaada... innikkuenakku sukkiran, sooriyan, rahu, kethu naalu perum moolathirikonathula irunthu arul paalichittanga. aana sukkiran 12-il maraiyirathaala onnum pirachinai illaya.

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. Dear Sir,

    Vanthuviten!!! Preesnt Sir!!!

    For me also Sukran is in Thulam and that is my lagnam. Now Iam 31sir, no marriage so far. Will I get a good wife in Sukara Budhi starts next year(Sani dhisai Now.

    In Addition to that I have Kethu in Meenam and raghu in kanni.

    Now Kethu budhi in sani dhisai. please let know the effects sir?

    Thanks
    Saravana
    Coimbatore

    ReplyDelete
  61. அன்புள்ள அய்யா,
    இதுவரை நான் மூலத்திரிகோணம் என்பதை மூலை=corner என்று ஏதோ angular related என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
    இன்றுதான் அதன் உண்மை விளக்கம் root = மூலம் என்று புரிந்துகொண்டேன்.இன்றைய பாடத்தில் எல்லா விஷயங்களுமே எனக்கு புதிதுதான். மிக்க நன்றி.
    விருச்சிக லக்கினம் 9ஆம் ஆதி சந்திரன் உச்சமாகி மூலத்திரிகோணம், (தலைவர் அவர்
    வேலையை கரெக்ட்டாப் பண்ணிட்டாரு.)
    2க்கும் ,5க்கும் அதிபதி குரு தனுசில் மூலத்திரிகோணம்.சுயவர்க்கத்திலும் 5பரல்.10ஆம் ஆதி சூரியனும் கூடவே இருந்தாலும் 17டிகிரி distanceலே silentடா வேடிக்கை பார்க்குறாரு.
    ஆனால் ராகு கூட சேர்ந்து குட்டையை குழப்பினதிலே (12டிகிரி கணக்கிலே) 5 டிகிரிநெருக்கத்திலே குருவை காலி பண்ணிட்டார் என்றுதான் நினைக்கிறேன்.ஏனென்றால் நீங்கள் சொன்ன மூலத்திரிகோண பவர் இருந்தும் கூட இந்த குரு தசையே முடிகிற கடைசி வருடம் வரைக்கும் முக்கிய பலன்கள் இல்லாமல் பண்ணிவிட்டார். குரு முட்டி மோதி கடைசி வருடத்திலாவது ராகுவை வெல்வாரா என்று WWF பார்ப்பது போலே finale round ஐ ஆவலுடன் எதிபார்த்துக் காத்திருக்கிறேன்..///
    சகோதரர் மைன்ர் வாளுக்கு,
    எந்த விதமான டிகிரியிலிருந்தலும் குரு பகவான் தங்கள் லகன‌த்திற்கு சுபன் ஆவான் எனவேதான் நீங்கள் ஜப்பானில் நல்ல வேலையில் ஒரள்வு வ்ருமான‌த்தில் இருக்கிறீர்கள் நான் விரைய அதிபதி சந்திர தசையில் எவ்வள்வு முயற்சி செய்தும் வேலையில்லை. அடுத்து வரும் சனி மகாதசையிலும் த்ங்களுக்கு லாபமும் நஷ்டமும் இல்லாமல் சமநிலையிலிருக்கும் சனி அசுப், சுப நிலை இல்லாம்ல் இருக்கிறார் விருச்சிக லக்னத்திற்கு. எதாவது தப்ப சொல்லியிருந்த ம்ன்னித்துவிடுங்கள்.
    சுந்தரி///
    ஐயா தங்கள் கருத்து என்ன இதற்காக.

    ReplyDelete
  62. ////Priya said...
    A simple lession..........////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  63. ////aadhirai said...
    ayya enakku, virichiga lagnam, danusu rasi. pala naatkalaaga... ethachum nalla visayam namakku match

    aguthannu pathuttey irunthen. appaada... innikkuenakku sukkiran, sooriyan, rahu, kethu naalu perum

    moolathirikonathula irunthu arul paalichittanga. aana sukkiran 12-il maraiyirathaala onnum pirachinai illaya.////

    சுக்கிரன் பன்னிரெண்டிற்கு உரியவன்தானே! அவன் 12ல் இருப்பதால் பெரிய பிரச்சினை ஒன்றும் இருக்காது!

    ReplyDelete
  64. ////Saravana said...
    Dear Sir,
    Vanthuviten!!! Preesnt Sir!!!
    For me also Sukran is in Thulam and that is my lagnam. Now Iam 31sir, no marriage so far. Will I get a

    good wife in Sukara Budhi starts next year(Sani dhisai Now.
    In Addition to that I have Kethu in Meenam and raghu in kanni.
    Now Kethu budhi in sani dhisai. please let know the effects sir?
    Thanks
    Saravana
    Coimbatore//////

    ஜாதகத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, முதலில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள்ளுங்கள்! ஜாதகம் பொருந்தினால் பெண்ணைப் பிடிக்காது. பெண்னைப் பிடித்தால், ஜாதகம் பொருந்தி வராது. இரண்டும் சேர்ந்து கண்ணாம் பூச்சி ஆட்டம் காட்டும். ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஜாதகத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பிடிக்கிற பெண்ணை மணந்து கொள்ளுங்கள்.
    முதலில் உங்கள் வயதை நினைத்துப் பாருங்கள்!

    ReplyDelete
  65. வணக்கம் ஆசிரியரே
    எனக்கு மீன லக்னம்,மூன்றாம் வீட்டில் சந்திரன் மூலத்திரிகோணம் அடைகிறார் ,அனால் மாந்தி உடன் இருக்கிறார்.இதற்கு பலன் என்ன வாத்தியாரே ..பாடம் அருமை..மிக்க நன்றி..
    அன்புடன் ,
    ராஜ்

    ReplyDelete
  66. Sir,
    Little confused with the last paragrapg of the lesson. I have a chart where Mecury is retrograting in Kanni. Is this Moolathirikona and will get double effect?

    thanks!

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. வணங்கம் சார்,
    I want to ask this question abt sukran in 12th house? Because I have this also and for meena lagnam venus rules 3rd and 8th house and hiding in 12th house? From what I know this makes people non expressive with their emotions. Will it affect marriage life? Venus is in makaram and saturn is in libra? I think this is a vibareetha yogam? Is it for good or bad...can u pls tell me the effect sir?

    Also sir, I have mandi in 3rd house with rahu in taurus, but with 30 parals in that house...will the parals help me a little from mandi? Sorry sir too much question...next lesson naan kelvi ketka villai. Thank u sir!

    ReplyDelete
  69. /////prithvi said...
    வணக்கம் ஆசிரியரே
    எனக்கு மீன லக்னம்,மூன்றாம் வீட்டில் சந்திரன் மூலத்திரிகோணம் அடைகிறார் ,அனால் மாந்தி உடன் இருக்கிறார்.இதற்கு பலன் என்ன வாத்தியாரே ..பாடம் அருமை..மிக்க நன்றி..
    அன்புடன் ,
    ராஜ்//////

    மாந்தி உடன் இருப்பதால் சந்திரனின் வலிமை குறைந்து விடும்!

    ReplyDelete
  70. ///////ceylonstar said...
    Sir,
    Little confused with the last paragrapg of the lesson. I have a chart where Mecury is retrograting in Kanni. Is this Moolathirikona and will get double effect?
    thanks!/////

    வக்கிரகதியில் இருக்கும் கிரகத்தின் வலிமை குறைந்துவிடும்!

    ReplyDelete
  71. /////Thanuja said... வணக்கம் சார்,
    I want to ask this question abt sukran in 12th house? Because I have this also and for meena lagnam venus rules 3rd and 8th house and hiding in 12th house? From what I know this makes people non expressive with their emotions. Will it affect marriage life? Venus is in makaram and saturn is in libra? I think this is a vibareetha yogam? Is it for good or bad...can u pls tell me the effect sir?
    Also sir, I have mandi in 3rd house with rahu in taurus, but with 30 parals in that house...will the parals help me a little from mandi? Sorry sir too much question...next lesson naan kelvi ketka villai. Thank u sir!

    என்ன குழப்பம்? மீன லக்கினத்திற்கு 12ஆம் வீடு கும்பம் அல்லவா? நீங்கள் சுக்கிரன் மகரத்தில் இருப்பதாக அல்லவா குறிபிட்டுளீர்கள்? மகரம் என்ன வீடு என்பதை நீங்களே மறுபடியும் ஒருமுறை பாருங்கள்!

    ReplyDelete
  72. நீங்க சொன்ன மாதிரி சுக்ரன் கும்பத்தில் இருக்கிறார்!Sorry for that confusion...ippa sollunga sir?

    ReplyDelete
  73. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    நன்றி.நம்பிக்கையை விதைத்ததற்கு.நாளையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  74. தங்களின் கருத்துக்கு நன்றி சுந்தரி அவர்களே,
    எதிர்பாக்கும் விஷயத்தை வைத்துத்தான் எல்லாமே.எதிர்பார்ப்பு அதிகமாக,நமது மனது இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று திட்டமிட்டபடி அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வி நேரும்போது கிரகங்கள் நடத்திவைக்காதா என்ற ஆதங்கமும் சேர்ந்து விடுகிறது.
    சுபன் என்ற அடிப்படையிலே அவனிடம் மிகவும் அதிகமாக எதிர்பார்த்துவிட்டேன்.அந்த அளவுக்கு இந்த 15வருடங்களை ஒரு முக்கியமான காலகட்டமாக பார்க்கிறேன்.ஏகப்பட்ட அனுபவங்கள்.
    மீண்டும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  75. Thanuja said...
    நீங்க சொன்ன மாதிரி சுக்ரன் கும்பத்தில் இருக்கிறார்!Sorry for that confusion...ippa sollunga sir?//////

    கும்பம் சுக்கிரனுக்கு நட்பு வீடு.ஒன்றும் பாதகம் இருக்காது. கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  76. /////minorwall said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    நன்றி.நம்பிக்கையை விதைத்ததற்கு.நாளையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்./////

    நாளை காலை எழுவோம் என்ற நம்பிக்கையுடந்தான் அனைவரும் படுக்கச் செல்கிறோம். அதுதான் இருப்பதிலேயே பெரிய நம்பிக்கை - என்ன சொல்கிறீர்கள் மைனர்வாள்?

    ReplyDelete
  77. வணக்கம் ஆசிரியரே
    பாடம் அருமை.
    மிக்க நன்றி.
    அன்புடன் ,
    முரளி.கி
    (துபாய்)

    ReplyDelete
  78. Dear sir,

    Suppose if planets in moola thrikonasthana get retrograde then will it do good thing...foreg if retrograde jupiter in third house from thulam lagna...will it do good aspects in guru dasa...pls clarify my doubts

    ReplyDelete
  79. /////K.MURALI said...
    வணக்கம் ஆசிரியரே
    பாடம் அருமை.
    மிக்க நன்றி.
    அன்புடன் ,
    முரளி.கி (துபாய்)////

    நல்லது. நன்றி முரளி1

    ReplyDelete
  80. ////Vinodh said...
    Dear sir,
    Suppose if planets in moola thrikonasthana get retrograde then will it do good thing...foreg if retrograde jupiter in third house from thulam lagna...will it do good aspects in guru dasa...pls clarify my doubts////

    வக்கிரகதி அடையும் கிரகங்கள் வலிமையை இழந்துவிடும். பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்!

    ReplyDelete
  81. ஐயா மன்னிக்கவும்

    ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதை விட,மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தம த்தில் பலன்கள் இரட்டிப்பாகும். தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமை களும் இரட்டிப்பாகும் என்று குறிப்பிடுகிறீர்கள்

    ஆனால் வர்கோத்தமம் பாடத்தில் வர்கோத்தமம் பெறும் கிரகம் இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

    ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்
    கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
    சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்
    செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்
    சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

    என்று குறிப்பிட்டிருந்தீர்களே
    சற்று குழப்பமாக உள்ளது தெளிவு படுத்தவும் ஐயா

    என் சந்தேகம் தவறாக இருந்தால் உங்கள் நேரத்தை வீணடித்ததட்கு மன்னிக்கவும் ஐயா

    ReplyDelete
  82. Sir,

    Enaku rishaba lagnam, 8th veetil (dhanush) guru, budhan, sukiran irukinranar. Ennudaya Guru disai epadi irukum ? Thangaludaya saevaiku mikka nandri..

    Nandri,
    Pattabiraman.

    ReplyDelete
  83. /////Kumares said...
    ஐயா மன்னிக்கவும்
    ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதை விட,மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தம த்தில் பலன்கள் இரட்டிப்பாகும். தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமை களும் இரட்டிப்பாகும் என்று குறிப்பிடுகிறீர்கள்
    ஆனால் வர்கோத்தமம் பாடத்தில் வர்கோத்தமம் பெறும் கிரகம் இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.
    ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்
    கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
    சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும் செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும் சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.
    என்று குறிப்பிட்டிருந்தீர்களே சற்று குழப்பமாக உள்ளது தெளிவு படுத்தவும் ஐயா
    என் சந்தேகம் தவறாக இருந்தால் உங்கள் நேரத்தை வீணடித்ததட்கு மன்னிக்கவும் ஐயா////

    கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில்
    Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம்.வரிசைப்படி வரும்!

    ReplyDelete
  84. /////Pattabiraman said...
    Sir,
    Enaku rishaba lagnam, 8th veetil (dhanush) guru, budhan, sukiran irukinranar. Ennudaya Guru disai epadi irukum ? Thangaludaya saevaiku mikka nandri..
    Nandri,
    Pattabiraman./////

    கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில்
    Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com