31.10.09

Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொல்லும் கண்ணன் எனும் மன்னன், ஒரு நாள், தர்மரை அழைத்துச் சொன்னார்:

“தர்மா, தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!”

அதை உடனே செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.

அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்:

“துரியோதனா, நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!”

துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான்.

பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்
நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:

“மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு
வெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”

புன்னகைத்த கண்ணன், அவரைப் பிறகு வரச் சொல்லி அனுப்பி விட்டார்.

சற்று நேரத்தில் அங்கே வந்த துரியோதனனும், அதையே சொன்னான். ஒரு நல்லவன் கூடக் கண்ணில் படவில்லை என்றான்.

புன்னகைத்த கண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,”துரியோதனா, உன் தாய் மாமன் சகுனி, உனக்கு எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர்கூட உனக்கு நல்லவராகத் தெரியவில்லையா?”

துரியோதனன் வெட்கித் தலைகுனிந்தான்.

அடுத்து, தர்மரை அழைத்த பரந்தாமன் சொன்னார்,” உங்களுக்குப் பல தீங்குகளைச் செய்த துரியோதனன், உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா? உங்கள் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா?”

தர்மர் ஒன்றும் சொல்லாமல் திகைத்துப்போய் நின்றார்.

நடந்ததை முழுவதுமாகத் தர்மரிடம் சொன்ன பரந்தாமன், முத்தாய்ப்பாக இப்படிச்
சொன்னார்.

“நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் ஒரு நாள் விடுப்பில் ஊருக்குச் செல்வதால், திங்கட்கிழமை வகுப்பறைக்கு விடுமுறை!

அடுத்த வகுப்பு 3.11.2009 செவ்வாயன்று!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

63 comments:

  1. வணக்கம் அய்யா.

    “நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”

    ஒவ்வொரு மனிதரின் பார்வையும்
    ஒவ்வொரு கோணம்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  2. எல்லோரும் நமது பிரதிபலிப்பே என்பதை உங்கள் மூலம் கண்ணன் எங்களுக்கு உணர்த்தினான்.

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்ட ஆசிரியருக்கு
    காலை வணக்கங்கள்.

    எண்ணம் ஒருக் கண்ணாடி
    அது தன் எண்ணத்தையே
    பிரதிப் பலிக்கிறது என்று
    பிறிது மொழிதல் அணியிலே
    சொல்லிவிட்டீர்கள்.

    சுருங்கச் சொன்னாலும்
    அணுவை பிளந்து அண்டத்தை
    நுளைத்துள்ளீர்கள் என்பதே நிதர்சனமான
    உண்மை.

    மற்ற புலன்களை எல்லாம் விட
    எண்ணமே அதிக ஆளுமைக் கொண்டது
    அது கெட்டுப் போனபிறகு மற்றப் புலன்கள்
    அதன் ஆணைப் படியே நடக்கும் என்று
    சொல்லல் சொல்லிவிட்டீர்கள்.

    அய்யா இன்றைய நீதி போதனைப்
    பதிவு அருமை.

    உங்கள் அனைத்துப் புத்தகங்களும்
    எனக்கு ஒரு நகல் வேண்டும் மறந்து விடாதீர்கள்.
    நன்றிகள் ஆசானே.

    அன்புடன்.
    மாணவன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் அய்யா...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா....
    - சேர்மராஜ்

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா.

    “நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”

    The way you think, day in day out, affects all aspects of your life. Learning to listen to your "internal dialogue" will help you recognize your thought patterns and how they may be affecting the way you handle the stressful situations of daily living.

    பாதாள புவனேஸ்வர், இது இமயமலையில் உள்ள ஒரு மிக சிறந்த புண்ணிய பூமி..(உத்ரகாண்ட் மாநிலத்தில் புவனேஸ்வர்)
    இந்த சனதில் இதை நான் ஏன் இங்கு கூறவேண்டும்.??? மேற்கொண்டு பயணிக்க வேண்டுகிறேன்...பாண்டவர்கள் இங்கு தங்கியதாக நம்ப படுகின்றது..அதற்கான ஆதாறங்களும் இருக்கின்றன...

    Legend and folklore have it that this underground cave enshrines Lord Shiva and sixty four crore Gods. The cave is 160 m long and 90 feet deep from the point of entrance.

    There is a folklore that the Pandava brothers passed their time here during banishment.It is built due to the flow of water. It cut the rocks in such a fascinating way that it looks like that any artist had mode those entire statues within the cave & on its wall. It has some cave opening and it is believed that these opening will be close as the centuries pass on. The scientific fact is it still being developed due to crystallization of the minerals which are dissolved in the water. As per believe, some doors which are now closed were opened thousand of years back. It is yet not been fully explored. It is also believed that the this cave is internally connected to the four abodes /seats (Char Dham).

    அந்த இடத்தினை பற்றிய அறிய சுட்டி இங்கே...http://www.patalbhuvaneshwar.org/

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இன்றைய வீட்டுபாடம்

    இந்திய அறிவியலின் உலக கொடை& சோதிட வரலாறு, http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_31.html

    நேரம் கிடைக்கும் போது கருத்து கூறவும்.

    நன்றி

    ReplyDelete
  9. /////Blogger subscription said...
    Present Sir////

    வருகைப்பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    “நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”
    ஒவ்வொரு மனிதரின் பார்வையும்
    ஒவ்வொரு கோணம்.
    நன்றி அய்யா./////

    உண்மைதான்! நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  11. /////krish said...
    எல்லோரும் நமது பிரதிபலிப்பே என்பதை உங்கள் மூலம் கண்ணன் எங்களுக்கு உணர்த்தினான்./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Alasiam G said...
    அன்புள்ளம் கொண்ட ஆசிரியருக்கு
    காலை வணக்கங்கள்.
    எண்ணம் ஒரு கண்ணாடி
    அது தன் எண்ணத்தையே
    பிரதிப் பலிக்கிறது என்று
    பிறிது மொழிதல் அணியிலே
    சொல்லிவிட்டீர்கள்.
    சுருங்கச் சொன்னாலும்
    அணுவை பிளந்து அண்டத்தை
    நுளைத்துள்ளீர்கள் என்பதே நிதர்சனமான
    உண்மை.
    மற்ற புலன்களை எல்லாம் விட
    எண்ணமே அதிக ஆளுமைக் கொண்டது
    அது கெட்டுப் போனபிறகு மற்றப் புலன்கள்
    அதன் ஆணைப் படியே நடக்கும் என்று
    சொல்லால் சொல்லிவிட்டீர்கள்.
    அய்யா இன்றைய நீதி போதனைப்
    பதிவு அருமை.
    உங்கள் அனைத்துப் புத்தகங்களும்
    எனக்கு ஒரு நகல் வேண்டும் மறந்து விடாதீர்கள்.
    நன்றிகள் ஆசானே.
    அன்புடன்.
    மாணவன்,
    ஆலாசியம் கோ.////

    நன்றி ஆலாசியம். அடுத்த மாதம் 10ஆம் தேதி எனது புதிய நூல் ஒன்று வெளிவர உள்ளது. முறையான அறிவிப்பு பின்னால் வரும்!

    ReplyDelete
  13. ////வேலன். said...
    அருமையான விளக்கம் அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  14. ////சிங்கைசூரி said...
    நன்றி ஆசானே.////

    நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  15. ////tamiltemples said...
    உள்ளேன் ஐயா....
    - சேர்மராஜ்////

    வருகைப்பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  16. /////Blogger Success said...
    வணக்கம் அய்யா.
    “நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”
    The way you think, day in day out, affects all aspects of your life. Learning to listen to your "internal dialogue" will help you recognize your thought patterns and how they may be affecting the way you handle the stressful situations of daily living.
    பாதாள புவனேஸ்வர், இது இமயமலையில் உள்ள ஒரு மிக சிறந்த புண்ணிய பூமி..(உத்ரகாண்ட் மாநிலத்தில் புவனேஸ்வர்)
    இந்த சனதில் இதை நான் ஏன் இங்கு கூறவேண்டும்.??? மேற்கொண்டு பயணிக்க வேண்டுகிறேன்...பாண்டவர்கள் இங்கு தங்கியதாக நம்ப படுகின்றது..அதற்கான ஆதாறங்களும் இருக்கின்றன...
    Legend and folklore have it that this underground cave enshrines Lord Shiva and sixty four crore Gods. The cave is 160 m long and 90 feet deep from the point of entrance.
    There is a folklore that the Pandava brothers passed their time here during banishment.It is built due to the flow of water. It cut the rocks in such a fascinating way that it looks like that any artist had mode those entire statues within the cave & on its wall. It has some cave opening and it is believed that these opening will be close as the centuries pass on. The scientific fact is it still being developed due to crystallization of the minerals which are dissolved in the water. As per believe, some doors which are now closed were opened thousand of years back. It is yet not been fully explored. It is also believed that the this cave is internally connected to the four abodes /seats (Char Dham).
    அந்த இடத்தினை பற்றிய அறிய சுட்டி இங்கே...http://www.patalbhuvaneshwar.org//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger Sabarinathan Arthanari said...
    இன்றைய வீட்டுபாடம்
    இந்திய அறிவியலின் உலக கொடை& சோதிட வரலாறு, http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_31.html
    நேரம் கிடைக்கும் போது கருத்து கூறவும்.
    நன்றி////

    பார்க்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  18. ஊர்ல எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க.....

    ReplyDelete
  19. பள்ளிக்குப் போக ஆசை.....
    பாலர்ப் பள்ளியில் இருந்து
    தொடக்கப் பள்ளி சென்ற முதல் நாளன்று...

    தொடக்கப் பள்ளியில் இருந்து
    உயார்நிலைப் பள்ளி சென்ற முதல் நாளன்று....

    பத்தாம் வகுப்பில்
    புதிதாக வந்துச் சேர்ந்த மாணவி
    எனக்குப் பிடித்தப் பின்பு அது தினமானது....

    அதன் பிறகு
    இன்றும் நினைவில் இருப்பது,
    திருமணப் பத்திரிக்கையுடன்
    தொடக்கப் பள்ளிப் மீண்டும் போனது.....

    அய்யா உங்கள் வகுப்பிற்கு வருவது
    அனிச்சை ஆனது சுவாசத்தைப் போல இப்போது.......

    இன்னும் இரண்டு நாட்கள்
    கழித்து எனும்போது....

    சரி, சரி என்ன செய்வது
    தங்களுக்கும்
    சற்று ஓய்வும் அவசியமானதல்லவே.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  20. Each person itself lord krishna is there.

    But because of our karma,all are different nature.

    But the content below was good.

    “நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”

    thanks for the lesson.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் ,

    அனைவரும் மனதில் இருத்த வேண்டிய கருத்து ,அய்யா அவர்களின் பயணம் இனிமயாக அமைய இறைவனை வேண்டும் தங்கள் அன்பு மாணவன் ....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  23. நம்முடைய இதிஹாஸ நிகழ்வுகள் அனைத்திலுமே வில்லன் பல நல்ல அம்சங்களுடன் இருந்ததாகவே சொல்ல‌ப்படுகிறது. 1000 யானை பலம் கொண்டவனாகவே துரியோதனன் சித்திரிக்கபடுகிறான்.சீரிய சிவபக்தனாகவே
    இராவணன் சித்தரிக்கப்படுகிறான். அவ‌ர்களிடம் இருந்த‌ ஒரே ஒரு கெட்ட குண‌த்தால் அழிந்ததாகவே கூற‌ப்பட்டுள்ள‌து.பாடம் மிக அருமை. தெரிந்த சம்பவம் என்றாலும், வாத்தியார் கை வண்ணத்தால் மெருகேரியது.
    "ஹாட்கேட்" சங்கர் திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. நேரில் சென்று வாழ்த்தினேன். அய்யாவின் சேவையைப் பலவாகப்
    புகழ்ந்தார்.

    ReplyDelete
  24. ஐயா காலை வணக்கம்

    மகாபாரத நிகழ்வுகள் - அதைவிட ஆசிரியரின் எழுத்து நடை - அருமை. கண்ணதாசன் வரிகளுடன் அபாரம். உலகின் எல்லா நிகழ்வுகளுக்கும் திருக்குறளில் இருந்து குறள் எடுத்து விளக்கலாம். அதுபோல கண்ணதாசனும் எல்லா நிகழ்வுகளுக்கும் சொல்லுகிற மாதிரி பாடல்கள் எழுதி உள்ளார்.

    நம் எதிரில் இருப்பவர் நம் முகம் பார்க்கும் கண்ணாடி. நாம் அழாகாக இருந்தால் அவர்களும் அழாகாக தெரிவார்கள். நாம் எப்படியோ அது போல தான் நம் எதிரில் இருப்பவரும்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. ////ceylonstar said...
    ஊர்ல எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க.....///

    ஆகா, நிச்சயம் நானே வலியைபோய் சொல்லிவிடுகிறேன்!

    ReplyDelete
  26. ////Alasiam G said...
    பள்ளிக்குப் போக ஆசை.....
    பாலர்ப் பள்ளியில் இருந்து
    தொடக்கப் பள்ளி சென்ற முதல் நாளன்று...
    தொடக்கப் பள்ளியில் இருந்து
    உயார்நிலைப் பள்ளி சென்ற முதல் நாளன்று....
    பத்தாம் வகுப்பில்
    புதிதாக வந்துச் சேர்ந்த மாணவி
    எனக்குப் பிடித்தப் பின்பு அது தினமானது....
    அதன் பிறகு
    இன்றும் நினைவில் இருப்பது,
    திருமணப் பத்திரிக்கையுடன்
    தொடக்கப் பள்ளிப் மீண்டும் போனது....
    அய்யா உங்கள் வகுப்பிற்கு வருவது
    அனிச்சை ஆனது சுவாசத்தைப் போல இப்போது.......
    இன்னும் இரண்டு நாட்கள்
    கழித்து எனும்போது....
    சரி, சரி என்ன செய்வது
    தங்களுக்கும்
    சற்று ஓய்வும் அவசியமானதல்லவே.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    அது ஓய்வுக்கணக்கில் வராது!. உறவுக் கணக்கில் வரும். ஊரில் ஒரு விஷேசம். அதற்காகப் போய் திரும்பவேண்டியதாய் உள்ளது.

    ReplyDelete
  27. /////Rama said...
    Each person itself lord krishna is there.
    But because of our karma,all are different nature.
    But the content below was good.
    “நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”
    thanks for the lesson./////

    நன்றி ராமா!

    ReplyDelete
  28. ////astroadhi said...
    அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் ,
    அனைவரும் மனதில் இருத்த வேண்டிய கருத்து ,அய்யா அவர்களின் பயணம் இனிமயாக அமைய இறைவனை வேண்டும் தங்கள் அன்பு மாணவன் ....
    நன்றி வணக்கம்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////kmr.krishnan said...
    நம்முடைய இதிஹாஸ நிகழ்வுகள் அனைத்திலுமே வில்லன் பல நல்ல அம்சங்களுடன் இருந்ததாகவே சொல்ல‌ப்படுகிறது. 1000 யானை பலம் கொண்டவனாகவே துரியோதனன் சித்திரிக்கபடுகிறான்.சீரிய சிவபக்தனாகவே
    இராவணன் சித்தரிக்கப்படுகிறான். அவ‌ர்களிடம் இருந்த‌ ஒரே ஒரு கெட்ட குண‌த்தால் அழிந்ததாகவே கூற‌ப்பட்டுள்ள‌து.பாடம் மிக அருமை. தெரிந்த சம்பவம் என்றாலும், வாத்தியார் கை வண்ணத்தால் மெருகேரியது.
    "ஹாட்கேட்" சங்கர் திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. நேரில் சென்று வாழ்த்தினேன். அய்யாவின் சேவையைப் பலவாகப்
    புகழ்ந்தார்./////

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  30. /////T K Arumugam said...
    ஐயா காலை வணக்கம்
    மகாபாரத நிகழ்வுகள் - அதைவிட ஆசிரியரின் எழுத்து நடை - அருமை. கண்ணதாசன் வரிகளுடன் அபாரம். உலகின் எல்லா நிகழ்வுகளுக்கும் திருக்குறளில் இருந்து குறள் எடுத்து விளக்கலாம். அதுபோல கண்ணதாசனும் எல்லா நிகழ்வுகளுக்கும் சொல்லுகிற மாதிரி பாடல்கள் எழுதி உள்ளார்.
    நம் எதிரில் இருப்பவர் நம் முகம் பார்க்கும் கண்ணாடி. நாம் அழாகாக இருந்தால் அவர்களும் அழாகாக தெரிவார்கள். நாம் எப்படியோ அது போல தான் நம் எதிரில் இருப்பவரும்.
    நன்றி
    வாழ்த்துக்கள்/////

    நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஆறுமுகம்!

    ReplyDelete
  31. ஐயா!!!

    என் இரு குழந்தைகளுக்கும் லக்னாதிபதி நன்றாக உள்ளார்.சிறு வயதில் இருந்தே நல்ல நீதிக்கதைகள் சொல்லி வளர்க்க ஆசை.உங்கள் சிறுகதைகள் அப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன்.எப்போது அனுப்புவீர்கள்??? முகவரி ஏற்கனவே கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  32. ஐயா!!!

  33. ஐயா வணக்கம்,
    தர்மருக்கு ஏன் தெரியவில்லை? கதை மிகவும் நன்றாக இருந்தது. என்ககு பகவான் கண்ணனின் அருளுரை ரொம்ப பிடிக்கும் முடிந்தள்வுக்கு என்க்கு கண்ணனின் அமுதவாக்கை சொல்லுங்க பகவத் கீதைகள் எல்லாத்தையும் புத்தகமா வெளியிடுங்கள். உங்கள் பயணம் இனிதாக அமைய எல்லாம் வ்ல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    சுந்தரி

    ReplyDelete
  34. Dear Sir

    Indha Kadhai Naan 6th std padikum podhu Ramakrishnavijayam endra bookilum padithirukkirean.

    Mahabharadhathilum padithirukkirean. practical agave irunthirukirean.Nanbargalidam solliyum ullen.

    Nalla Nanneri kadhai. Thank you Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  35. நல்ல நடை ஐயா.....முன்பு எங்கோ கேட்டது போல் இருந்தாலும் உங்கள கை வனத்தில் படிக்க இனிமை ஆக இருக்கிறது ...

    ReplyDelete
  36. excellent punch story.....wonderful...

    kalakuringa vathiyar....

    thanks and warm regards,
    ramalingam

    ReplyDelete
  37. எதுவுமே பார்க்கும் பார்வையில் உள்ளது .....சமூகம் என்பது பிம்பம் நீ எப்படி இருக்கிறாயோ அதையே காட்டும்

    ReplyDelete
  38. ஆசிரியரே! நமஸ்கரிக்கிறேன்.
    சிறப்பான பதிவுகள் உள்ள இந்த வலைப் பதிவை இவ்வளவு நாட்கள் தவற விட்டுவிட்டேனே என்று வருத்தமாக உள்ளது. வலையுலகில் ஒரு நல்ல விஷயம் - பழைய பதிவுகளை - இழக்காமல் எப்பொழுதும் படிக்கலாம். படிப்பேன்; பயன் அடைவேன். நன்றி.

    ReplyDelete
  39. வணக்கம் வாத்தியார் ஐயா,

    பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்
    நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:

    மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு
    வெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”

    ===> கண்ணன் எனும் மன்னன் தர்மருக்கு மைத்துனன் உறவு முறை, தாங்கள் மாமா உறவு முறை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்! எது சரியான உறவு முறை?

    நன்றி.
    - சுபா

    ReplyDelete
  40. சனி பிரதோஷம் பார்க்க நான் சதுரகிரி மலைக்கு சென்றதால் இரு நாட்களும் என்னால் பதிவிருக்கு வர இயல வில்லை அய்யா varukai pathivirkaakave intha pinnoottam

    ReplyDelete
  41. பகவத் கீதை கருது அற்புதம் , உங்களுடைய கருத்து வரிகள் நிறைய படிக்கும் பொழுது சில சமயம் அவ்வை சொன்னது போல கற்றது கை மண் அளவு என்ற வாக்கியம் நாபகத்துக்கு வருகிறது . சில சமயம் என்ன எப்பொழுது அதுதான் உண்மையும் . நன்றி அய்யா இது போன்ற கருத்துகளை

    ReplyDelete
  42. (தாமதமாக வந்து) உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  43. Super Sir,
    Neengalum & Kadaiyum!

    -kimu-

    ReplyDelete
  44. aryboy.
    vanakkam ssar.
    kadantha kaala vakuppukal mikavum suvarasyamaaka ullathu. mikka nantry
    saar,valkavalamudan.
    aryboy.

    ReplyDelete
  45. Arul said...
    ஐயா!!!
    என் இரு குழந்தைகளுக்கும் லக்னாதிபதி நன்றாக உள்ளார்.சிறு வயதில் இருந்தே நல்ல நீதிக்கதைகள் சொல்லி வளர்க்க ஆசை.உங்கள் சிறுகதைகள் அப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன்.எப்போது அனுப்புவீர்கள்??? முகவரி ஏற்கனவே கொடுத்துள்ளேன்./////

    ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  46. ////sundari said...
    ஐயா வணக்கம்,
    தர்மருக்கு ஏன் தெரியவில்லை? கதை மிகவும் நன்றாக இருந்தது. என்ககு பகவான் கண்ணனின் அருளுரை ரொம்ப பிடிக்கும் முடிந்தளவுக்கு எனக்கு கண்ணனின் அமுதவாக்கை சொல்லுங்க பகவத் கீதைகள் எல்லாத்தையும் புத்தகமா வெளியிடுங்கள். உங்கள் பயணம் இனிதாக அமைய எல்லாம் வ்ல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    சுந்தரி///

    எழுதுகிறேன். நன்றி சகோதரி!

    ReplyDelete
  47. /////jadam said...
    Present sir,
    Nice theme
    Sankar////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Indha Kadhai Naan 6th std padikum podhu Ramakrishnavijayam endra bookilum padithirukkirean.
    Mahabharadhathilum padithirukkirean. practical agave irunthirukirean.Nanbargalidam solliyum ullen.
    Nalla Nanneri kadhai. Thank you Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  49. /////Priya said..
    நல்ல நடை ஐயா.....முன்பு எங்கோ கேட்டது போல் இருந்தாலும் உங்கள கை வண்ணத்தில் படிக்க இனிமை ஆக இருக்கிறது .../////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  50. //////Padmapriya said...
    excellent punch story.....wonderful...
    kalakuringa vathiyar....
    thanks and warm regards,
    ramalingam/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. ////வெண்ணிற இரவுகள்....! said...
    எதுவுமே பார்க்கும் பார்வையில் உள்ளது .....சமூகம் என்பது பிம்பம் நீ எப்படி இருக்கிறாயோ அதையே காட்டும்///

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  52. ////Kasu Sobhana said...
    ஆசிரியரே! நமஸ்கரிக்கிறேன்.
    சிறப்பான பதிவுகள் உள்ள இந்த வலைப் பதிவை இவ்வளவு நாட்கள் தவற விட்டுவிட்டேனே என்று வருத்தமாக உள்ளது. வலையுலகில் ஒரு நல்ல விஷயம் - பழைய பதிவுகளை - இழக்காமல் எப்பொழுதும் படிக்கலாம். படிப்பேன்; பயன் அடைவேன். நன்றி./////

    ஆகா படியுங்கள். உங்களுக்கு வேண்டியவர்களையும் படிக்கச்சொல்லுங்கள்!

    ReplyDelete
  53. /////SUBA said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்
    நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:
    “மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு
    வெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”
    ===> கண்ணன் எனும் மன்னன் தர்மருக்கு மைத்துனன் உறவு முறை, தாங்கள் மாமா உறவு முறை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்! எது சரியான உறவு முறை?
    நன்றி.
    - சுபா//////

    சகோதரின் கணவர், வயதில் இளையவரென்றால் ‘மச்சான்’ என்று கூப்பிடுவோம். வயதில் மூத்தவராக இருந்தால் ‘மாமா’ என்று கூப்பிடுவோம் . அப்படி எடுத்துக்கொள்ளுங்கள். அத்தை மகனை, அத்தான் என்றோ அல்லது அய்த்தான் என்றோ கூப்பிடுவோம். சில ஊர்களில் அத்தை மகன் இளையவனாக இருந்தால், மாப்பிள்ளை என்றோ அல்லது மச்சான் என்றோ கூப்பிடுவார்கள். அவரே வயதில் பெரியவராக இருந்தால்
    மாமா என்று கூப்பிடுவர்கள். கோவையில் சில வீடுகளில் பார்த்திருக்கிறேன். நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  54. /////prabakar.l.n said...
    சனி பிரதோஷம் பார்க்க நான் சதுரகிரி மலைக்கு சென்றதால் இரு நாட்களும் என்னால் பதிவிருக்கு வர இயல வில்லை அய்யா varukai pathivirkaakave intha pinnoottam//////

    நல்லது! நன்றி!

    ReplyDelete
  55. ////prabakar.l.n said...
    பகவத் கீதை கருத்து அற்புதம் , உங்களுடைய கருத்து வரிகள் நிறைய படிக்கும் பொழுது சில சமயம் அவ்வை சொன்னது போல கற்றது கை மண் அளவு என்ற வாக்கியம் நாபகத்துக்கு வருகிறது . சில சமயம் என்ன எப்பொழுது அதுதான் உண்மையும் . நன்றி அய்யா!//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  56. ////ananth said...
    (தாமதமாக வந்து) உள்ளேன் ஐயா.//////

    தமதமாக வந்தாலும், உங்களைக் கண்டால் ஆனந்தம்தான்!

    ReplyDelete
  57. /////NEMILI BALA said...
    Super Sir,
    Neengalum & Kathaiyum!
    -kimu-////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  58. Sir vanakkam,
    How was ur journey? How is everyone there. I hope that all are good there. Goodnight sir.
    your lovingly
    sundari.p

    ReplyDelete
  59. ///aryboy said...
    aryboy.
    vanakkam ssar.
    kadantha kaala vakuppukal mikavum suvarasyamaaka ullathu. mikka nantry
    saar,valkavalamudan.
    aryboy.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  60. ///Blogger sundari said...
    Sir vanakkam,
    How was ur journey? How is everyone there. I hope that all are good there. Goodnight sir.
    your lovingly
    sundari.p////

    பயணம் இனிதாக இருந்தது. நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com