10.8.09

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

சிங்காரப் புன்னகையும், சங்கீத வீணையும்!

"சிங்கார புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா?
மங்காத விழிகளில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் எதுக்கமா?"
----கவியரசர் கண்ணதாசன்
-----------------------------------------------
"தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனசே பித்தம்மா
பிள்ளை மனசே கல்லம்மா!"
-----இதுவும் கவியரசர் கண்ணதாசன்

ஆனால் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக அவர் எழுதிய வரிகள்
பதிவிற்கு இந்த வரிகள் முக்கியம். அவற்றை மனதில் வைத்துக்
கொண்டு மேலே தொடர்ந்து படியுங்கள்!
=================================================================
தமிழில் ’அவஸ்தை’ என்று ஒரு சொல் இருக்கிறது. அருமையான சொல்.
அதற்கு இப்படிப் பொருள் கொள்வார்கள்: அவதி, துன்பம் distress,
suffering, vexation. அதாவது இருக்கவும் முடியாமல் அல்லது போகவும்
முடியாமல் இருக்கும் சூழ்நிலை. சொல்லவும் முடியாமல் அல்லது சொல்லாமல்
இருக்கவும் முடியாமல் ஏற்படுகின்ற சூழ்நிலை!

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் இந்த அவஸ்தையை அதிகம்
அனுபவித்திருப்பார்கள். அதுவும் தம்பதிகள் இருவரில், மனைவிதான்
அதிகமாக அனுபவித்திருப்பாள்.

அவள் சும்மா இருந்தாலும், சந்திக்கும் உறவினர்களும், தோழிகளும் சும்மா
இருக்க மாட்டார்கள். நோண்டுவார்கள்.தோண்டுவார்கள். அவளுடைய
மனநிலையைக் (Mood) கெடுத்து விடுவார்கள்.

“ஏன்டி... ஏதாவது விஷேசம் உண்டா?”

அட, கிறுக்கே! இருந்தால் அவள் சொல்லித் தொலைக்க மாட்டாளா?

கேட்டதற்காக, மன வருத்தம் shoot up ஆகி அவள் பதில் சொல்வாள்.

“இனிமேல்தான்....!”

“என்னடி கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. பிறகு பெற்றுக்
கொள்ளலாம் என்று ஒத்தி வைத்திருக்கிறீர்களா? அப்படியெல்லாம்
ஒத்திவைக்கக்கூடாது. காலாகாலத்தில் அததைச் செய்துவிட வேண்டும்!”

அவளால் என்ன சொல்ல முடியும்?

மேட்னி ஷோ, நைட் ஷோ என்று தம்பதியர் பல ஷோக்களைப் பார்த்து
விட்டார்கள். ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை. அதற்கு அவர்கள்
என்ன செய்வார்கள்?

சிலருக்குத் திருமணமாகி ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்திலேயே
குழந்தை பிறந்து விடும். சிலருக்குத் தாமதமாக ஆறு அல்லது எட்டு
வருடங்கள் கழித்துக் கூடப் பிறக்கலாம்.

எனக்குத் தெரிந்த செட்டிநாட்டுப் பெண்மணி ஒருவருக்கு, ’ரயில்வண்டி ஆச்சி’
என்ற அடையாளப்பெயர் இருந்தது. அந்த ஆச்சிக்குத் திருமணமாகி
20 ஆண்டுகளில் 18 குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகள் இறந்தது
போக மிச்சம் 16 குழந்தைகள் உயிரோடு இருந்தன. அத்தனை குழந்தைகளையும்
வளர்த்து ஆளாக்கி நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்தார்.
அந்தப் பதினாறில் பதினொன்று பெண் குழந்தைகள் என்பது உபரித் தகவல்.
அதெல்லாம் நடந்தது 1940 - 1960 ஆண்டு காலகட்டமாகும்.

அப்போது ஏது குடும்பக்கட்டுப்பாடு? ஒரு ரூபாய்க்கு 3 கிலோ அரிசி விற்ற
காலம். குரங்கு மார்க் மண்ணெண்ணெய், 15 லிட்டர் டின்னின் விலை வெறும்
பத்து ரூபாய்க்கு விற்ற காலம். அந்த அம்மையாரின் பேரன் என்னுடைய
பள்ளித் தோழன்.

பின் ஒரு நாளில் ஏதேட்சையாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது,
அவன் இப்படிச் சொன்னான்:

“கல்யாணமான பிறகு, எங்கள் அப்பத்தா, தூரமாகி (வீட்டிற்கு விலக்காகி)
உட்கார்ந்ததே இல்லை”

அதாவது 3 நாள் பீரியடில் விலக்கானதே இல்லை என்று விளையாட்டாகச்
சொல்வான்.
----------------------------------------------------------------------------
இதே போல பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு.

இரண்டு பெரிசுகள் வாக்கிங் போகும் இடத்தில் நட்பாகிப் பேசிக் கொள்கின்றன:

“Sir,I am blessed with 3 children. They are now in states.
They are pouring money in dollars. Investing them in good
stock is my present task!"

பீற்றிக் கொண்டதோடு நிறுத்தியிருக்கலாம் இல்லையா?தொடர்ந்து கேட்பார்:

”உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

உடனே நம்ம ஆள் பதில் சொல்வார்.

"I am cursed with two children!" (எனக்கு சாபமாகக் கிடைத்தது இரண்டு)

"அடடா? என்ன ஆயிற்று?”

அடுத்தவனுடைய கதையைக் கேட்பதில்தான் நமக்கு எத்தனை ஆர்வம்!

“என்னுடைய வருமானத்திற்குள் அவர்களைப் படிக்க வைக்க முடியா
தென்று, இருந்த வீட்டை விற்று அவர்களைப் படிக்க வைத்தேன்.
இருவருமே ’இஞ்சி’ னியர்கள். ஒருவன் புனேயில் இருக்கிறான்.
இன்னொருவன் ஷாம்ஷெட்பூரில் இருக்கிறான். கை நிறையச் சம்பாதிக்
கிறார்கள்.ஆனால் எனக்குக் காலணா பிரயோசனமில்லை. என்னுடைய
பென்சன் பணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

”ohh... my god, thankless people! ஏன் அப்படி?”

"படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தவுடன்,
அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பெண்ணைப் பார்த்து உடனே திருமணத்
தையும் செய்து வைத்தேன். அதுதான் நான் செய்த தவறு. செலவழித்த
பணத்தை எல்லாம் கறந்து கொண்டு, அவர்களுக்குக் கல்யாணத்தைப்
பண்ணியிருக்க வேண்டும். அப்படிச் செய்ய மனம் வரவில்லை.
பெற்றவர்களைக் கவனிக்காவிட்டால் போகட்டும். நல்லாயிருந்தால் சரி!”

“நீங்கள் விடக்கூடாது சார், நீங்கள் உங்கள் கடமையைச் செய்ததுபோல,
அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டாமா?”

“அவர்கள் இருவரும் பெண்டாட்டிதாசர்கள். சுயமாக சிந்திக்கும் திறன்
அவர்களுக்கு இல்லை! எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. என்
சுயமரியாதையை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா?”

ஆமாம், அவர் சொன்னது நிதர்சனமான உண்மை! அரை வயிறு கஞ்சி
குடித்தாலும் பரவாயில்லை. தன்மானமும், சுதந்திர உணர்வும் முக்கியம்
இல்லையா?
-----------------------------------------------------------------------------
இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். ஜஸ்ட் உதாரணத்திற்காக
இரண்டு வித நிலைப்பாட்டைச் சுற்றிக் காட்டியிருக்கிறேன்.

குழந்தை என்பது வரமாகவும் இருக்கலாம், சாபமாகவும் இருக்கலாம்.

குழந்தைகள் முக்கியமில்லை. அவர்கள் நல்ல குழந்தைகளா என்பதுதான் முக்கியம்.

இப்போதெல்லாம், ”உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? என்று கேட்கக்கூடாது!
எத்தனை தொல்லைகள்? என்றுதான் கேட்க வேண்டும். குழந்தைகளை
வளர்த்து ஆளாக்குவதில் அத்தனை தொல்லைகள். L.K.G யிலிருந்து Plus2
படிக்க வைப்பதற்குள் ஆண்டு ஒன்றிற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும்.
தொழில் கல்வி, மேல் நிலைக் கல்வி படிக்க வைப்பதென்றால் லட்சக்
கணக்கில் செல்வாகும்.

அப்படியே படிக்க வைத்து ஆளாக்கினாலும், எத்தனை குழந்தைகள்
பெற்றோர்கள் மீது விசுவாசமாக இருக்கின்றன சொல்லுங்கள்?

இருக்கின்றன என்று 10 குழந்தைகளை நீங்கள் அடையாளம் காட்டினால்,
இல்லை என்று என்னால் 100 குழந்தைகளை அடையாளம் காட்ட முடியும்!

ஆகவே நல்ல குழந்தைகளைப் பெற்றோம் எனும் திருப்திதான் முக்கியமானது.
------------------------------------------------------------------------------
சரி, பாடத்திற்கு வருகிறேன்.

குழந்தை பாக்கியத்திற்கு முக்கியமான இடம் 5ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.

அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.

கல்யாணமாகி, எப்போது நமக்குக் குழந்தை பிறக்கும் என்று ஆதங்கத்தோடு,
ஏக்கத்தோடு இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு நல்ல தீர்வைச் சொல்வதற்காகத்தான்
இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.

எப்போது பிறக்கும்?
எதனால் தாமதம்?
பணம் செலவாகாத பரிகாரம் உண்டா?’ என்பது போன்ற விஷயங்களை
அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும்
அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.

அதென்ன சார், ஈஸியாக?

ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!

பொறுத்திருங்கள். இரண்டு நாட்களில் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!

இங்கே ஏன் ஏழுதக் கூடாது?

தேவையில்லாத கேள்விக்கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!
முன் பாடங்களைப் படித்திராதவர்கள், இந்தத் தலைப்பில் ஆர்வமாகி
தங்கள் ஜாதகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு என்னைப் பிறாண்டிக்
கொண்டிருப்பார்கள்.

புதிய வரவுகளுக்கு ஒன்று சொல்ல் விரும்புகிறேன். நீங்கள் பழைய
பாடங்களைப் படிக்காமல் இப்போது நடத்துவது எதுவுமே புரியாது.
ஆகவே அவற்றைப் படியுங்கள்.

Okayயா

அன்புடன்,
வாத்தியார்

--------------------
வாழ்க வளமுடன்!

42 comments:

  1. Iyya,

    I think you have mentioned couple of these things in the previous lessons...like 5th house, 5th house depoister and jupiter parals.

    I hope this will be advance lesson!

    Thanks
    Shankar

    ReplyDelete
  2. சார் ரொம்ப சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிரீர்கள் like ஷங்கர் லால் கதை போல. Very interesting.
    Thanks.
    Maalaa

    ReplyDelete
  3. குழந்தை இன்பத்தைப் பற்றி பாரதியாரின் வரிகளில் தான் என்ன ஒரு வாத்சல்யம்:

    "ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ள‌ம் குளிருதடி!
    ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி!
    சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பஙகள் தீர்த்திடுவாய்!
    முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!"

    பிற்காலத்தில் தனக்கு உத‌வாத பிள்ளை என்று தாய் தள்ளுவது இல்லை!‌
    மற்ற ஜீவராசிகளுக்கு மனிதனைப் போல கணக்குப்போடும் புத்தி இல்லை!‌
    Your foreword for the lesson is good!
    KMR.KRISHNAN
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  4. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த Topic.

    மிகவும் நன்றி அய்யா..

    ReplyDelete
  5. பார்க்க:


    பதிவர் சுப்பையாவின் வலைதளத்தில் இச்செய்தி வருகிறது.
    The website at devakottai.blogspot.com contains elements from the site tamileditor.org, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
    For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for tamileditor.org.
    Learn more about how to protect yourself from harmful software online.

    ReplyDelete
  6. ////Blogger hotcat said...
    Iyya,
    I think you have mentioned couple of these things in the previous lessons...like 5th house, 5th house depoister and jupiter parals.
    I hope this will be advance lesson!
    Thanks
    Shankar////

    ஒரு வீட்டைப் பற்றி பல செய்திகள் உள்ளன. அதனால் பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  7. ////Blogger sridhar said...
    okay sir.
    b. sridhar////

    நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  8. நீங்கள் எழுதியிருக்கிற அப்பத்தா மாதிரி நம் தாத்தா ஜெனரேஷனில் நிறைய பேர் உண்டு. என் அப்பாவோடு பிறந்தவர்கள் ஐந்து பேர். இன்றைக்கு எங்கள் குடும்பத்தினர் மட்டும் நடத்தும் யாகூ குரூப்பில் நூறு அங்கத்தினர்கள். பஞ்ச பாண்டவர்கள் கௌரவர்கள் ஆன கதை இதுதான்!

    இன்னொரு விஷயம், குழந்தைகள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது ஏற்கக்கூடிய விஷயமல்ல(எனக்கு). ஓரிரு நாட்கள் அவர்கள் வீட்டுக்குப் போனால் கூட பழம்,பால்,காய்கறி,நொறுக்குத் தீனி என்று வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் நமக்கு மரியாதை. தீபாவளி பொங்கல் என்றால் மகன்களுக்கும்,மருமகள்களுக்கும் உடை வாங்கி விட வேண்டும்!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  9. ////Blogger MALA said...
    சார் ரொம்ப சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிரீர்கள் like ஷங்கர் லால் கதை போல. Very interesting.
    Thanks.
    Maalaa////

    சுவரசியமும், சஸ்பென்சும் இருப்பதால்தான் உங்களைப் போல பலர் இங்கே வந்து படிக்கின்றனர்.
    இல்லையென்றால் வருவார்களா? சொல்லுங்கள் சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    குழந்தை இன்பத்தைப் பற்றி பாரதியாரின் வரிகளில் தான் என்ன ஒரு வாத்சல்யம்:
    "ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ள‌ம் குளிருதடி!
    ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி!
    சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பஙகள் தீர்த்திடுவாய்!
    முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!"
    பிற்காலத்தில் தனக்கு உத‌வாத பிள்ளை என்று தாய் தள்ளுவது இல்லை!‌
    மற்ற ஜீவராசிகளுக்கு மனிதனைப் போல கணக்குப்போடும் புத்தி இல்லை!‌
    Your foreword for the lesson is good!
    KMR.KRISHNAN
    http://parppu.blogspot.com////

    நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. Blogger minorwall said...
    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த Topic.
    மிகவும் நன்றி அய்யா..

    பலரும் எதிர்பார்க்கும் Topic அது. சற்று விரிவாக எழுதவுள்ளேன்

    ReplyDelete
  12. /////Blogger ரமணா said...
    பார்க்க:
    பதிவர் சுப்பையாவின் வலைதளத்தில் இச்செய்தி வருகிறது.
    The website at devakottai.blogspot.com contains elements from the site tamileditor.org, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
    For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for tamileditor.org.
    Learn more about how to protect yourself from harmful software online./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!
    கூகுளின் சேஃப் சர்ச் ப்ரெளசரில் போய் சோதனை செய்து பார்த்தேன். tmaileditor.org எனும் தளம் இல்லை என்கிறது.

    நமது வலைப்பதிவைப் பிடிக்காத க்ராக் (மனநிலை சரியில்லாதவனின்) ஒன்றின் வேலையாக அது இருக்கும்.
    என்ன செய்யலாம் என்று தொழில்நுட்ப அறிவுள்ள நமது வகுப்பறையின் மாணவக் கண்மணிகள் சொல்லித்தர வேண்டுகிறென்

    ReplyDelete
  13. Blogger Jawarlal said...
    நீங்கள் எழுதியிருக்கிற அப்பத்தா மாதிரி நம் தாத்தா ஜெனரேஷனில் நிறைய பேர் உண்டு. என் அப்பாவோடு பிறந்தவர்கள் ஐந்து பேர். இன்றைக்கு எங்கள் குடும்பத்தினர் மட்டும் நடத்தும் யாகூ குரூப்பில் நூறு அங்கத்தினர்கள். பஞ்ச பாண்டவர்கள் கௌரவர்கள் ஆன கதை இதுதான்!
    இன்னொரு விஷயம், குழந்தைகள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது ஏற்கக்கூடிய விஷயமல்ல(எனக்கு). ஓரிரு நாட்கள் அவர்கள் வீட்டுக்குப் போனால் கூட பழம்,பால்,காய்கறி,நொறுக்குத் தீனி என்று வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் நமக்கு மரியாதை. தீபாவளி பொங்கல் என்றால் மகன்களுக்கும்,மருமகள்களுக்கும் உடை வாங்கி விட வேண்டும்!
    http://kgjawarlal.wordpress.com////

    நானும் அதைத்தான் வலியுறுத்த வருகிறென் நண்பரே! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா

    பாடத்திற்காக காத்திருக்கிறோம்....

    ReplyDelete
  15. படத்தின் பெயர் பாகபிரிவினை
    நன்றி அய்யா

    குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு
    எப்பொழுது குழந்தை பிறக்கும்
    நல்ல விஷயந்தான்.

    நன்றி அய்யா.

    ReplyDelete
  16. Sir,
    I have read all your blogs atleast 2 or 3 times. I hope you will send me the special lessons to my inbox as well. My mail id is rajiprem72@yahoo.com. I have sent my mail id couple of times earlier.I think you have already started sending the lessons. Pls add my mail id too. also send the previous lessons as well.

    Regards,
    Prem Anand

    ReplyDelete
  17. classroom2007@gmail.com.

    prem send your details to this
    email address.
    Then only you will get lessons thorough e mail

    thanks

    ReplyDelete
  18. /////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    பாடத்திற்காக காத்திருக்கிறோம்....////

    தன்னிச்சையாக அதுவாகவே வரும் நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger thirunarayanan said...
    படத்தின் பெயர் பாகபிரிவினை
    நன்றி அய்யா
    குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு
    எப்பொழுது குழந்தை பிறக்கும்
    நல்ல விஷயந்தான்.
    நன்றி அய்யா./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger Prem said...
    Sir,
    I have read all your blogs atleast 2 or 3 times. I hope you will send me the special lessons to my inbox as well. My mail id is rajiprem72@yahoo.com. I have sent my mail id couple of times earlier.I think you have already started sending the lessons. Pls add my mail id too. also send the previous lessons as well.
    Regards,
    Prem Anand////

    மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பாருங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger thirunarayanan said...
    classroom2007@gmail.com.
    prem send your details to this
    email address.
    Then only you will get lessons thorough e mail
    thanks////

    சக நண்பருக்கு உதவும் உங்கள் பண்பிற்கு நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  22. Singara veenaiyum song is in movie Mahadevi. As per story P.S.Veerappa kills his own toddler thinking that it is MGR's child. Savithri is the mother. The real mother of the child sings a pathoes song. Then Savithri thinking that it is her own child, says my son had a death of a soldier and I do not want you to sing a sad song. Then comes this song. When we hear song we will think that it is a pleasant song, but when we know the context,we will appreciate the genius of Kaviarasar.

    ReplyDelete
  23. ullen ayya. aynthaam idam patrip pathivu migavum aavaludan edirpaarkiren. nandrigal pala.

    ReplyDelete
  24. ////Blogger krish said...
    Singara veenaiyum song is in movie Mahadevi. As per story P.S.Veerappa kills his own toddler thinking that it is MGR's child. Savithri is the mother. The real mother of the child sings a pathoes song. Then Savithri thinking that it is her own child, says my son had a death of a soldier and I do not want you to sing a sad song. Then comes this song. When we hear song we will think that it is a pleasant song, but when we know the context,we will appreciate the genius of Kaviarasar.///

    பாடல் மட்டுமல்ல! அந்தப் படத்திற்கு, கதை, திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியவரும் கவியரசரே! ’மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’ என்று வில்லன் சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது அக்காலத்தில்!

    ReplyDelete
  25. ///Blogger kulo said...
    ullen ayya. aynthaam idam patrip pathivu migavum aavaludan edirpaarkiren. nandrigal pala.////

    பாடத்தைப் படித்தவுடன் நன்றியைச் சொல்லுங்கள் குலோத்துங்கன்!

    ReplyDelete
  26. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டான் என்பார்கள்..

    ஆனால் பிள்ளைகள் இருக்கும் வீட்டிலேயே துள்ளி விளையாண்டவர்கள் நம்முடைய முன்னோர்கள்..!

    கொடுத்து வைச்சவங்கப்பா..!

    ReplyDelete
  27. உள்ளேன் ஐயா
    (உ.தமிழரின் காமெண்டை நான் வழிமொழிகின்றேன்)

    ReplyDelete
  28. என்ட படத்தை நீங்கள் எப்படி என்னை கேட்காமல் பதிவு செய்யலாம்.. :--) . (தொடர்பே இல்லை) எதிர்பாக்கிறோம் உங்கள பதிவை எதிர்காலத்தை பற்றி அறிய. இன்னும் அந்த நின்ட சஸ்பென்ஸ் கதை வரவே இல்லையே :(... ஆனால் உங்கள் பதிவு இடும் நேரத்தை பார்த்தால் ஒன்றையும் கேட்காமல் விட்டு விடலாம் போல இருக்கு (பாவமா இருக்கு)

    ReplyDelete
  29. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டான் என்பார்கள்..
    ஆனால் பிள்ளைகள் இருக்கும் வீட்டிலேயே துள்ளி விளையாண்டவர்கள் நம்முடைய முன்னோர்கள்..!
    கொடுத்து வைச்சவங்கப்பா..!/////

    அதோடு மட்டுமில்லை. அந்தக் காலத்து அம்மணிகள் எல்லாம், அம்மி, ஆட்டுக்கல், உரல், திரிகை, வாளியில் சேந்தும்படியாக கிணற்றுத் தண்ணீர் என்று கடுமையாக வேலை செய்தார்கள். எல்லாமே சுகப்பிரசவம்.
    இன்று அப்படியா? எல்லாம் சிசேரியன் மயம்!

    ReplyDelete
  30. ////Blogger தம்பி கிருஷ்ணா said...
    உள்ளேன் ஐயா
    (உ.தமிழரின் காமெண்டை நான் வழிமொழிகின்றேன்)////

    அவருக்குப் போட்டுள்ள பின்னூட்டப் பதிலையே நீங்களும் படித்துக் கொள்ளவும்!
    இதுவும் வழிமொழிதல்தான்!

    ReplyDelete
  31. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    என்ட படத்தை நீங்கள் எப்படி என்னை கேட்காமல் பதிவு செய்யலாம்.. :--) . (தொடர்பே இல்லை) எதிர்பாக்கிறோம் உங்கள பதிவை எதிர்காலத்தை பற்றி அறிய. இன்னும் அந்த நின்ட சஸ்பென்ஸ் கதை வரவே இல்லையே :(... ஆனால் உங்கள் பதிவு இடும் நேரத்தை பார்த்தால் ஒன்றையும் கேட்காமல் விட்டு விடலாம் போல இருக்கு (பாவமா இருக்கு)/////

    பதிவிடும் நேரத்தை நீங்கள் ஒருவர்தான் பார்க்கிறீர்கள். வேறு யாரும் பார்ப்பது மாதிரித் தெரியவில்லை இமானுவேல்!

    ReplyDelete
  32. உள்ளேன் அய்யா, ஈ-மெயில் பாடத்துக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  33. ////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா, ஈ-மெயில் பாடத்துக்காக வெயிட்டிங்.////

    எதற்காக வெயிட்டிங்?
    தன்னிச்சையாக அதுவாகவே வரும்!

    ReplyDelete
  34. anbula ayya nan niraya vimarsankalil ungalai min anjal thrumpadi kettu kondan, tharavillai, enn email id lionsudhakar.sudha@gmail.com, enn jathagam oru nalla vidhthiyasamana jathagam, nallatha kettatha enna parthu sollavum. thankalin minanjalil details tharukiran

    ReplyDelete
  35. anbula ayya nan niraya vimarsankalil ungalai min anjal thrumpadi kettu kondan, tharavillai, enn email id lionsudhakar.sudha@gmail.com, enn jathagam oru nalla vidhthiyasamana jathagam, nallatha kettatha enna parthu sollavum. thankalin minanjalil details tharukiran

    ReplyDelete
  36. anbula ayya nan niraya vimarsankalil ungalai min anjal thrumpadi kettu kondan, tharavillai, enn email id lionsudhakar.sudha@gmail.com, enn jathagam oru nalla vidhthiyasamana jathagam, nallatha kettatha enna parthu sollavum. thankalin minanjalil details tharukiran

    ReplyDelete
  37. ////Blogger PITTHAN said...
    anbula ayya nan niraya vimarsankalil ungalai min anjal thrumpadi kettu kondan, tharavillai, enn email id lionsudhakar.sudha@gmail.com, enn jathagam oru nalla vidhthiyasamana jathagam, nallatha kettatha enna parthu sollavum. thankalin minanjalil details tharukiran////

    எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  38. one sms received today:



    Few things i would like to share with u about swine flu.
    please read
    symptoms are fever,cough@ cold sometimes accompanied with headache,vomitting and loose motions.In case anybody suffers from the above they need to immediately go to doctor .It takes only 5 days to become fatal.also this virus sustains in humid climate so for the next 10-15 days if(.....)pune.Also small kids feeding mothers and elders specially with diabeties or anyother chronic disease are most prone. please create the awareness take care.

    ReplyDelete
  39. Sir, thank u so much for ur service.its really a gift for us to get a teacher like you.Waiting to learn more.could you please email the lessons for us.thank u

    ReplyDelete
  40. ////Blogger நக்கீரன் பாண்டியன் said...
    one sms received today:
    Few things i would like to share with u about swine flu.
    please read
    symptoms are fever,cough@ cold sometimes accompanied with headache,vomitting and loose motions.In case anybody suffers from the above they need to immediately go to doctor .It takes only 5 days to become fatal.also this virus sustains in humid climate so for the next 10-15 days if(.....)pune.Also small kids feeding mothers and elders specially with diabeties or anyother chronic disease are most prone. please create the awareness take care.////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. /////Blogger santhiganesh said...
    Sir, thank u so much for ur service.its really a gift for us to get a teacher like you.Waiting to learn more.could you please email the lessons for us.thank u/////

    உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன? What is your email ID? இந்த முகவரிக்கு எழுதுங்கள். classroom2007@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com