ஜோதிடக் கதை: போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!
தினமும் ஜோதிடத்தையே பேசிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால்
நமது வகுப்பறை மாணவர் இமானுவேல் கோபிநாத் அவர்கள் பின்னூட்டத்தில்
சுட்டிக் காட்டியபடி நமக்கும் தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.
அதனால் இன்று பாடமாக ஒரு ஜோதிடக் கதை. கதையின் முடிவில் ஒரு நீதி
இருக்கும். what is the moral of the story? என்று ஆரம்பப் பாடசாலை
வாத்தியார் போல நானும் கேட்க உள்ளேன். விடை தெரிந்தவர்கள்
சொல்லலாம். தெரியாதவர்கள் பதில் சொல்லாமல் போய்விடலாம்.
இணைய வகுப்புதானே? யார் வருகிறீர்கள் - யார் போகிறீர்கள் என்று
வாத்தியாருக்குத் தெரியவா போகிறது?
Over to story!
------------------------------------------------------------------
ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் செழிப்பாக இருந்தான்.
அவனுடைய நாடும் செழிப்பாக இருந்தது. ஆனால் மன்னனின் மனம் மட்டும்
வறண்டுபோய்க் கிடந்தது. உள் மனதில், வெளியே சொல்ல முடியாத
கவலை ஒன்று அவனை வாட்டிக் கொண்டிருந்தது.
என்ன கவலை?
அதை இப்போதே சொல்லி விட்டால் கதையின் சஸ்பென்ஸ் போய்விடும்.
ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
மன்னன் படு கஞ்சன். எல்லாவற்றையும் சேர்த்து வைப்பான்; பூட்டி வைப்பான்.
அதோடு கோபக்காரன்.
ஒரு நாள், வெளி தேசத்தில் இருந்து குதிரை வியாபாரியொருவன் மன்னனைப்
பார்க்க வந்தான்.
வந்தவன் சும்மா வரவில்லை. மன்னன் தலையில் கட்டிவிட்டு, நல்ல
வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போவோம் என்று பத்து வெள்ளைக்
குதிரைகளையும் கொண்டு வந்திருந்தான்.
வந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசனைப் பூலோக இந்திரன்,
சந்திரன் என்று புகழ்ந்து தள்ளினான். நம் நாயகன் அதற்கெல்லாம் மசிபவனா
என்ன? மசியவில்லை.
கடைசியில் வியாபாரி வந்த மேட்டரைச் சொல்லிக் குதிரைகளைப் பார்க்கும்படி
வேண்டிக் கொண்டான்.
மன்னனும் போய்ப் பார்த்தான். அவனுடன் அவனுடைய கஞ்சத்தனமும் உடன்
சென்று பார்த்தது.
பத்துக் குதிரைகளுமே நன்றாகத்தான் இருந்தன.
வியாபாரி ஒரு குதிரையின் விலை ஆயிரம் ரூபாய் என்றான். ஒரு மூட்டை அரிசி
இரண்டு பணம் விற்ற காலம் அது!
கெளரவம் கருதி ஒரே ஒரு குதிரையை மட்டும் வாங்கிக் கொள்ள முடிவு செய்த
மன்னன், “ஒரு குதிரை போதும். இருப்பதில் நல்ல குதிரையாக ஒரு குதிரையை
நீயே காட்டு என்றான்!”
அவனும் காட்டினான். மன்னன் குதிரையின் காலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பினான்.
திரும்பியவன், தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, விற்பனைக்கு வந்திருக்கும் குதிரைகளில், நல்ல குதிரையாக ஒரு குதிரையைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினான்.
மந்திரி சட்டென்று யோசித்தவர், நாம் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளக்
கூடாது என்று எண்ணியவர், மெதுவாகச் சொன்னார்:
“மன்னர்மன்னா, நமது நகரச் சிவன் கோவில் வாசலில், இரண்டு கண்களும்
தெரியாத ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். அவனுக்குக் கண்பார்வை இரண்டு
ஆண்டுகளுக்கு முன்புதான் பறிபோனது. பெரிய ஞானி அவன். அவனுடைய
பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே
கிடையாது. அவனை அழைத்து வந்து, குதிரைகளைப் பார்க்கச் சொன்னால்,
அவன் நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பான்.”
மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்
படுத்தாமல், ஆட்களை அனுப்பி, அவனை அழைத்துவரச் செய்தான்.
வந்தவன், 5 நாழிகை நேரம் குதிரைகளைப் பரிசோதித்துவிட்டு, மன்னனை
அழைத்து, இருப்பதில் இதுதான் உயர்வான குதிரை என்று சொல்லி ஒரு
குதிரையைக் காட்டினான்.
வியாபாரி சொல்லி, மன்னன் அடையாளப் படுத்தி வைத்திருந்த குதிரைதான்
அந்தக் குதிரை!
மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம்.
“எப்படிச் சொல்கிறாய்?”
“எல்லாக் குதிரைகளுக்கும் பைகளில் கொள்ளைப் போட்டு வாயில் கட்டிவிடச்
சொன்னேன். அம்சமுள்ள குதிரை நிதானமாகத்தான் திங்கும். மேலும் அதன்
சுவாசமும் சீராக இருக்கும். இன்னொன்று அதன் உடம்பில் இருந்து அதிக
துர்நாற்றம் வீசாது. இதுபோன்று குதிரைக்கென்று உரிய சில லட்சணங்களை
வைத்து அதைத் தெரிவு செய்தேன்”
மன்னனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தன்னுடைய முதன் மந்திரியை அழைத்து, அந்த ஞானிக்குப் பரிசு வழங்கி,
அனுப்பிவைக்கும்படி சொன்னான்.
என்ன பரிசு?
தினமும் ஒருவேளை உணவு. அதிகாலை உணவு. உங்கள் மொழியில் சொன்னால் ப்ரேக்ஃபாஸ்ட். அவனுக்கு அடையாள லட்சினை (Identity Card) வழங்கப் பெற்றது. அரசானையிடப்பெற்று, அதன் நகலும் (Copy palm leaf)
வழங்கப் பெற்றது.
கோவிலுக்கு அருகில் இருந்த வேதவிற்பன்னர்கள் விடுதியில், அவனுக்கு
அனுதினமும் காலைப் பலகாரம் வழங்கப்பெற்றது.
---------------------------------------------------------------
கதையின் நீளத்தையும், உங்கள் பொறுமையையும் கருதி, கதை இனிச்
சுருக்கமாகச் சொல்லப்படவுள்ளது. விவரிப்புக்கள் இருக்காது.
-----------------------------------------------------------------------
இதேபோன்று அடுத்தமாதம் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அது ஒரு வைர
வியாபாரியை வைத்து. அதிலும், தன் திறமையைக் காட்டி மன்னனை
அசத்தினான் அந்தப் பிச்சைக்கார ஞானி.
மன்னனின் உத்தரவின் பேரில், அவனுக்கு அடுத்து ஒரு பரிசும்
கிடைத்தது.
ஆமாம் அடுத்த வேளை உணவு. மதிய உணவு. அதே விடுதியில்.
அதற்கான உத்தரவையும் மன்னன் பிறப்பித்தான்
--------------------------------------------------------------------
ஒருமாதம் சென்றது.
தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முடிவைத்
தேடும் முகமாக, அந்தப் பிச்சைக்கார ஞானியை அழைத்து வரச் செய்த
மன்னன், தன்னுடைய பிரத்தியேக அறையில் அவனை அமரச் செய்து,
அவனுடன், பேசலுற்றான்.
“நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்கப்போகிறேன். அது வேறு
யாருக்கும் தெரியக்கூடாது. உனக்குப் பதில் தெரிந்தால் சொல்லு.
இல்லையென்றால் அதை நீ உடனே மறந்து விட வேண்டும்”
“உத்தரவு மன்னா!” என்று பதில் சொன்னான் அவன். வேறு என்ன
சொல்ல முடியும்?
”உனக்கு ஜோதிடம் தெரியுமா?”
”தெரியும் மன்னா!”
“என் பிறப்பைப் பற்றி நாட்டில் சிலர் கேவலமாகப் பேசுகிறார்கள்
என்று கேள்விப்பட்டேன். அரசல் புரசலாக என் காதில் விழுந்தது.
அது பற்றி உன் கருத்து என்ன? என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து,
அதைப் பற்றி நீ சொல்ல முடியுமா?”
“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே
என்னால் சொல்ல முடியும்!”
மன்னனுக்குப் பயங்கர அதிர்ச்சி!
“ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணாதியங்களில் ஒன்றுகூட
உங்களுக்கு இல்லை. அதைவைத்துச் சொல்கிறேன். உங்கள்
பிறப்பில் கோளாறு இருக்கிறது. உங்கள் தந்தை உயிரோடு
இல்லாததால், உங்கள் தாயாரைக் கேளுங்கள். சும்மா மேம்போக்காகக்
கேட்காதீர்கள். மிரட்டிக் கேளுங்கள். உண்மை தெரியவரும்”
அதிர்ந்துபோன மன்னன், உடனே அதைச் செய்தான்
---------------------------------------------------------------
முதலில் உண்மையைச் சொல்ல மறுத்த மன்னனுடைய அன்புத் தாயார்,
தன் மகன், தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி
மிரட்டிக் கேட்டவுடன், கண்களில் நீரோடு உண்மையைச் சொல்லி
முடித்தாள்.
தனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டு காலம் குழந்தைப் பேறு
இல்லாமலிருந்ததையும், வேறு ஒரு ஆடவனுடன் கூடி, குழந்தை
ஒன்றைப் பெற்றுக் கொண்ட கதையையும் ரத்தினச் சுருக்கமாகச்
சொன்னாள். அவனுடைய உண்மையான தந்தை தங்களுடைய
அரண்மனையில் முன்பு வேலைபார்த்த சிப்பாய் என்றும் சொன்னாள்
எல்லாவற்றையும் போட்டு உடைத்தாள்.
கலங்கிப்போன மன்னன், தன்னிலைக்கு வர இரண்டு நாழிகை
நேரம் பிடித்தது
----------------------------------------------------------------------
தன்னிலைக்கு வந்த மன்னன், திரும்பவும் வந்து அந்த ஞானியிடம்
பேசலுற்றான்.
“ நீ சொல்வது உண்மைதான். என் தாயை விசாரித்துவிட்டேன்.
இப்போது சொல். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?”
“நானோ கண் தெரியாதவன். என் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவன்.
கோவில் வாசலில் அமர்ந்து, என்னைப் படைத்த ஆண்டவன் திருவடிகளில்
விழுந்து, என்னை உய்வித்து, அவனுடன் என்னைச் சேர்த்துக் கொள்ளூம்படி
மன்றாடிக்கொண்டிருப்பவன். கிடைக்கும் உணவையே உண்டு
கொண்டிருந்தவன். வெய்யிலோ மழையோ, கோவில் வாசலிலேயே படுத்து
உறங்குபவன். என்னுடைய மேன்மையை, இரண்டு முறைகள் உங்களுக்கு
உணரவைத்திருக்கிறேன். அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, இவ்வளவு பெரிய அரண்மனையில்
எங்காவது ஒரு ஓரத்தில் தங்கிக் கொள்ள என்னை அனுமதித்திருக்க
வேண்டும். செய்தீர்களா? முதலில் ஒருவேளை உணவிற்கு வழி செய்தீர்கள்.
அடுத்த சந்தர்ப்பத்தில் எனக்கு இரண்டாவது வேளை உணவிற்கும்
உத்தரவு கொடுத்தீர்கள். உண்மையான அரச வாரிசென்றால் இந்த நீச
குணமெல்லாம் இருக்காது. அதைவைத்துத்தான் சொன்னேன்!”
-----------------------------------------------------------------------
"வாத்தி (யார்) கதையின் முடிவு என்ன ஆயிற்று?”
“அதைத்தான் படமாகப் போட்டுள்ளேன். இடுகையின் துவக்கத்தில்
உள்ளது”
----------------------------------------------------------------------------
கதை எப்படி உள்ளது?
படித்தவர்கள் ஒரு வரி எழுதுங்கள்
கதையின் நீதி என்ன?
அதையும் எழுதுங்கள்.
அன்புடன்
வாத்தியார்.
வாழ்க வளமுடன்!

வழக்கம் போல கதையின் போக்கு அருமை.
ReplyDeletemoral of the story:
ஜாதகம் என்பது நடைமுறைக் குணாம்சத்துடன் ஒத்துப் போகின்ற விஷயம்.கண்ணாடி போல.பாரம்பரிய குணம் என்பது மாறுவதில்லை.
அன்பு, இரக்கம், கருணை இவை எல்லாம் பயற்சியில் அடைய முடியாது. பிறப்பில் வர வேண்டும். வாத்தியார் சொல்வது போல வாங்கி வந்த வரம்.
ReplyDeleteபெற்றோரின் குணங்கள் பிள்ளைக்கு வந்தே தீரும், சரிங்களா !!
ReplyDeleteBlogger minorwall said...
ReplyDeleteவழக்கம் போல கதையின் போக்கு அருமை.
moral of the story:
ஜாதகம் என்பது நடைமுறைக் குணாம்சத்துடன் ஒத்துப் போகின்ற விஷயம்.கண்ணாடி போல.பாரம்பரிய குணம் என்பது மாறுவதில்லை./////
நல்ல பதில்!
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்பார்களே அதுதான் இது!
நன்றி மைனர்வாள்.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பபழக்கம்
வைத்ததொருகல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
தயை, ஈகை, கொடை மூன்றும்
குடிப்பழக்கம்
-ஒளவையார்
பரம்பரைக் குணம் மற்றும் குடும்ப குணம் ஒருவரை விட்டு போகாது என்கிறீர்கள். ஆனால் தன் இனத்தையே வெட்டும் கோடரி காம்புகள் போல் சிலர் இருக்கத்தான் (பிறக்கத்தான்) செய்கிறார்கள்.
ReplyDeleteஎன்ன தான் மன்னனாக இருந்தாலும் அவனின் பிச்சைக்கார புத்தி போகாது.
ReplyDelete"பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை-மனம் கொண்டவர்களிடம் பொருள் சேர்வதில்லை" என திரைப்படபாடல் உள்ளது.
பழைய வகுப்பறைபாடத்தில் நான்கு வித குணங்களை பற்றி தாங்கள் எழுதியுள்ளீர்கள்.மகாபாரத்தில் இரண்டு தங்க மலைகளை தானமாக கொடுக்க கண்ணன் சொன்னால் மற்றவர்கள் மலையை வெட்டிவெட்டி கொடுத்தார்கள். ஆனால் கர்ணன் ஆளுக்கு ஒரு மலை என கொடுத்ததாக கதை உண்டு.
கொடுப்பதற்கும் மனம் வேண்டும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Finally the moral is simple. Do not seek the advise of beggers. Go to experts or rely on your own judgement.
ReplyDeleteI find the story intersting and I think moral of the story would be that a child will show the characters of the parents...from my understanding...
ReplyDeleteசூப்பர். மிகவும் அருமையான கதை.
ReplyDelete//படித்தவர்கள் ஒரு வரி எழுதுங்கள்
ReplyDeleteகதையின் நீதி என்ன?
அதையும் எழுதுங்கள்.//
பிறப்பினால் நல்ல/கெட்ட குணம் இயற்கையாகவே வரும் என்கிற (அ)நீதி !
குலத்தலவே ஆகும் குணம் இதுவே நீதி.
ReplyDeleteஅன்புடன்
புதுகைக்காரன்
Moral is :சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்.
ReplyDeleteகதை சொன்ன விதம் நன்றாக இருந்தாலும், கதையின் நீதி / கருத்துடன் முரண்படுகின்றேன். பிறப்பை காட்டிலும் ஒருவரின் சூழல் அவரது குணாதிசயங்களை பாதிக்கும் என்பது எனது கருத்து.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
முடியல!
ReplyDeleteஆனா கதை நல்லாத்தான் இருக்கு!
மக்கள் சொல்ற நீதி தான் முடியல!
//வால்பையன் said...
ReplyDeleteமுடியல!
ஆனா கதை நல்லாத்தான் இருக்கு!
மக்கள் சொல்ற நீதி தான் முடியல!
//
'Glass' Room ன்னு நினச்சு வால் வந்துட்டார் !
:)
விசயம் தெரிந்தவர்களை கவுரவிக்க தவறக்கூடாது.
ReplyDeleteஉயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவிதான்.
பருந்து ஆக முடியாது.
நன்றி அய்யா
அய்யா 17.7.09 அன்று ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன்
ReplyDeleteஎன்று ஒரு கதை பதிவு எழுதி இருந்தீர்கள்.அதனுடைய தொடர் மின்னஞ்சலில்
அனுப்பிவிட்டீர்களா?
நன்றி அய்யா.
Dear Sir,
ReplyDeleteகதை சூப்பர், கதைக்கு எற்த நீதி
Rgds
Nainar
வணக்கம் ஐயா,
ReplyDeleteகதை அருமை.:-)
கதை கூறும் கருத்து..
////////“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே
என்னால் சொல்ல முடியும்!”///////
ஒருவரைபற்றி கூற அவரின் ஜாதகம் தேவைஇல்லை, அவரின் நடத்தைகளே கூறிவிடும் என்பதுதான் இந்த கதை கூறும் கருத்து. ஜாதகத்தில் உள்ளதுதான் அவரின் நடத்தையில் தெரிந்துவிடுமே :)))))
என் கருத்து...
///சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பபழக்கம்
வைத்ததொருகல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
தயை, ஈகை, கொடை மூன்றும்
குடிப்பழக்கம்
-ஒளவையார///////////////////
///////தயை, ஈகை, கொடை மூன்றும்
குடிப்பழக்கம///////////////
நான் இந்த கருத்தில் மாறுபடுகிறேன். அன்பு, இரக்கம், கருணை இவைஎல்லாம் பிறப்பில் வரலாம், ஆனால் குடியில்,பரம்பரையில் வருவதில்லை.
பல வள்ளல்களின் வாரிசுகள் அவர்களைபோல் இருப்பதில்லையே. :))) அதற்க்காக கதையில் அமைந்தது போலெல்லாம் பலர்(அந்த ராணி) இருப்பதில்லை :))
எந்தக் குடியனாலும் அவனவனுக்கு கொடுக்கபட்டது நிச்சயம். அதற்க்காக அந்த குடியில் உள்ள அனைவருக்குமே இந்த குணங்கள் இருக்க வாய்ப்பில்லையே.பலர் மாறுபடலாம்..
நன்றி அன்புடன்,
ரிஷப்-நாகராஜன்
மகாத்மா காந்தி என்று அன்போடு அழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் புதல்வர்களில் ஒருவரான ஹரிதாஸ் காந்தி ஒரு மொடாக் குடிகாரராகவே வாழ்ந்தார்.குடிகாரராகவே இறந்தார்.
ReplyDeleteஇன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியின் புதல்வர்களில் ஒருவரான முத்து இன்றைக்கும் தமிழகத்தின் மிகப்பெரும் குடிகாரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
அப்படி இருக்கும்போது தாங்கள் குறிப்பிட்டுக் காட்டிய "அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்"என்ற பழமொழி தவறாகிவிடுகிறது அல்லவா!
அவ்வையாரின் பாடலில்"...தயை,ஈகை,கொடை இம்மூன்றும் 'குடி'ப்பழக்கம் என்று சொன்னதும் சரி இல்லை என்றே எண்ணுகிறேன்.
வழக்கம் போல் அருமையான கதை.
ReplyDelete"சித்திரமும் கைப்பழக்கம் ;
ReplyDeleteசெந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
தானம் , தயை , நட்பு , பிறவி
குணப்பழக்கம் .!"
/////Blogger sridhar said...
ReplyDeleteஅன்பு, இரக்கம், கருணை இவை எல்லாம் பயற்சியில் அடைய முடியாது. பிறப்பில் வர வேண்டும். வாத்தியார் சொல்வது போல வாங்கி வந்த வரம்.//////
Thanks Sridhar!
/////Blogger நிகழ்காலத்தில்... said...
ReplyDeleteபெற்றோரின் குணங்கள் பிள்ளைக்கு வந்தே தீரும், சரிங்களா !!/////
Not all the gunangkal!
//////Blogger ananth said...
ReplyDeleteபரம்பரைக் குணம் மற்றும் குடும்ப குணம் ஒருவரை விட்டு போகாது என்கிறீர்கள். ஆனால் தன் இனத்தையே வெட்டும் கோடரி காம்புகள் போல் சிலர் இருக்கத்தான் (பிறக்கத்தான்) செய்கிறார்கள்.//////
Thanks my dear friend!
/////Blogger வேலன். said...
ReplyDeleteஎன்ன தான் மன்னனாக இருந்தாலும் அவனின் பிச்சைக்கார புத்தி போகாது.
"பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை-மனம் கொண்டவர்களிடம் பொருள் சேர்வதில்லை" என திரைப்படபாடல் உள்ளது.
பழைய வகுப்பறைபாடத்தில் நான்கு வித குணங்களை பற்றி தாங்கள் எழுதியுள்ளீர்கள்.மகாபாரத்தில் இரண்டு தங்க மலைகளை தானமாக கொடுக்க கண்ணன் சொன்னால் மற்றவர்கள் மலையை வெட்டிவெட்டி கொடுத்தார்கள். ஆனால் கர்ணன் ஆளுக்கு ஒரு மலை என கொடுத்ததாக கதை உண்டு.
கொடுப்பதற்கும் மனம் வேண்டும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
Thanks Velan for your valuable comments!
////Blogger krish said...
ReplyDeleteFinally the moral is simple. Do not seek the advise of beggers. Go to experts or rely on your own judgement.////
That is also fine Mr..Krish!
/////Blogger Thanuja said...
ReplyDeleteI find the story intersting and I think moral of the story would be that a child will show the characters of the parents...from my understanding.../////
Thanks for your comments ,dear sister!
/////Blogger முருகன் அடிமை said...
ReplyDeleteசூப்பர். மிகவும் அருமையான கதை.////
Thanks Muruga!
////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//படித்தவர்கள் ஒரு வரி எழுதுங்கள்
கதையின் நீதி என்ன?
அதையும் எழுதுங்கள்.//
பிறப்பினால் நல்ல/கெட்ட குணம் இயற்கையாகவே வரும் என்கிற (அ)நீதி !/////
Straight away you can say your opinion in your words without slashes & brackets!:-)))
///Blogger pudukaikaran said...
ReplyDeleteகுலத்தலவே ஆகும் குணம் இதுவே நீதி.
அன்புடன்
புதுகைக்காரன்/////
Thanks my dear friend
//////Blogger ceylonstar said...
ReplyDeleteMoral is :சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்./////
Thanks my dear Ceylon Star!
////Blogger இராசகோபால் said...
ReplyDeleteகதை சொன்ன விதம் நன்றாக இருந்தாலும், கதையின் நீதி / கருத்துடன் முரண்படுகின்றேன். பிறப்பை காட்டிலும் ஒருவரின் சூழல் அவரது குணாதிசயங்களை பாதிக்கும் என்பது எனது கருத்து.
அன்புடன்
இராசகோபால்//////
There will always be two opinions like the two side of a coin. I respect your views! Thanks
/////Blogger வால்பையன் said...
ReplyDeleteமுடியல!
ஆனா கதை நல்லாத்தான் இருக்கு!
மக்கள் சொல்ற நீதி தான் முடியல!//////
There will always be two opinions like the two side of a coin. I respect your views! Thanks Vaal Paiyan
/////Blogger கோவி.கண்ணன் said...
ReplyDelete//வால்பையன் said...
முடியல!
ஆனா கதை நல்லாத்தான் இருக்கு!
மக்கள் சொல்ற நீதி தான் முடியல!
// 'Glass' Room ன்னு நினச்சு வால் வந்துட்டார் ! :)/////
Avar Mattumaa?
/////Blogger thirunarayanan said...
ReplyDeleteவிசயம் தெரிந்தவர்களை கவுரவிக்க தவறக்கூடாது.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவிதான்.
பருந்து ஆக முடியாது.
நன்றி அய்யா/////
Thank you Mr.Thirunarayanan!
//////Blogger thirunarayanan said...
ReplyDeleteஅய்யா 17.7.09 அன்று ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன்
என்று ஒரு கதை பதிவு எழுதி இருந்தீர்கள்.அதனுடைய தொடர் மின்னஞ்சலில்
அனுப்பிவிட்டீர்களா?
நன்றி அய்யா./////
It will come next week. No time to write it now!
/////Blogger arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
கதை சூப்பர், கதைக்கு எற்ற நீதி
Rgds
Nainar/////
Thank you Nainar Sir!
//////Blogger ரிஷப்-நாகராஜன் said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
கதை அருமை.:-)
கதை கூறும் கருத்து..
////////“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே
என்னால் சொல்ல முடியும்!”///////
ஒருவரைபற்றி கூற அவரின் ஜாதகம் தேவைஇல்லை, அவரின் நடத்தைகளே கூறிவிடும் என்பதுதான் இந்த கதை கூறும் கருத்து. ஜாதகத்தில் உள்ளதுதான் அவரின் நடத்தையில் தெரிந்துவிடுமே :)))))
என் கருத்து...
///சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பபழக்கம்
வைத்ததொருகல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
தயை, ஈகை, கொடை மூன்றும்
குடிப்பழக்கம்
-ஒளவையார///////////////////
///////தயை, ஈகை, கொடை மூன்றும்
குடிப்பழக்கம///////////////
நான் இந்த கருத்தில் மாறுபடுகிறேன். அன்பு, இரக்கம், கருணை இவைஎல்லாம் பிறப்பில் வரலாம், ஆனால் குடியில்,பரம்பரையில் வருவதில்லை.
பல வள்ளல்களின் வாரிசுகள் அவர்களைபோல் இருப்பதில்லையே. :))) அதற்க்காக கதையில் அமைந்தது போலெல்லாம் பலர்(அந்த ராணி) இருப்பதில்லை :))
எந்தக் குடியனாலும் அவனவனுக்கு கொடுக்கபட்டது நிச்சயம். அதற்க்காக அந்த குடியில் உள்ள அனைவருக்குமே இந்த குணங்கள் இருக்க வாய்ப்பில்லையே.பலர் மாறுபடலாம்..
நன்றி அன்புடன்,
ரிஷப்-நாகராஜன்//////
The main characters of a person will be as per his lagna, the position of lagna lord and other aspects concerned with the lagna. No doubt about it. But some features of the native will be like his father or his mother (You can take it as one resembles like his parents)
/////Blogger திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ReplyDeleteமகாத்மா காந்தி என்று அன்போடு அழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் புதல்வர்களில் ஒருவரான ஹரிதாஸ் காந்தி ஒரு மொடாக் குடிகாரராகவே வாழ்ந்தார்.குடிகாரராகவே இறந்தார்.
இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியின் புதல்வர்களில் ஒருவரான முத்து இன்றைக்கும் தமிழகத்தின் மிகப்பெரும் குடிகாரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
அப்படி இருக்கும்போது தாங்கள் குறிப்பிட்டுக் காட்டிய "அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்"என்ற பழமொழி தவறாகிவிடுகிறது அல்லவா!
அவ்வையாரின் பாடலில்"...தயை,ஈகை,கொடை இம்மூன்றும் 'குடி'ப்பழக்கம் என்று சொன்னதும் சரி இல்லை என்றே எண்ணுகிறேன்.//////
There may be some exemptions.But exemptions will not be general examples!
/////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteவழக்கம் போல் அருமையான கதை./////
Thanks my dear Raghavan!
["பிறப்பினைப் பெறுவா ரெல்லாம்
ReplyDeleteபிறந்தவரில் சிறந்தா ரில்லை;
இறப்பினை அடைந்தா ரெல்லாம்
இறந்ததில் உயர்ந்தாரில்லை;
பெறப்படும் பிறப்பை நாட்டின்
பெருமைக்கு அளித்தார் மட்டும்
சிறப்புறு புகழும் பெற்றார்;
தெய்வத்தோ டிடமும் பெற்றார்!
– கவியரசர்]
நன்றி.
-கிமூ-
Dear Sir
ReplyDeleteSuper and Kalakkal Moral Story...
Manam Eppoludhu Visalamaga Irukkiradho Angu Manam Sandhosamag Irukkum...
Thanks sir....
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
ம்ம்.. நல்ல கதை. நன்றி உங்கள் நேரத்திற்கு. நான் கருத்து சொல்ல போய் பிரச்சனையில் மாட்டி கொள்ள விரும்ப வில்லை . ஆமாம் ஜயா எந்த நாளும் படிக்க முடியாதே.
ReplyDeleteAyya intha kadhaikku jodhida reedhiyaga solvadhenral vibareedha rajayogathinal mannan aaga irunthalum avanudia gunam migavum thaalntha nilaiyileye ulladhu enbhadhaiye kaattugiradhu.Gunaththil thaayai pola pillai noolai pola selai.nanri
ReplyDelete¯û§Çý ³Â¡
ReplyDeleteஇதுதான் விதியின் விளையாட்டு. நல்ல ஞானமும் அறிவும் உள்ள ஒருவனின் கண்களை குருடாக்கி கோவில் வாசலில் உட்கார வைத்துவிட்டு, கஞ்சனும், அறிவிலியுமான ஒருவனை சிம்மாசனத்தில் உட்கார வைத்து இருக்கிறது. நல்ல கதையை கூறி மனசுக்கு RELAX கொடுத்த ஆசிரியருக்கு வந்தனங்கள்.
ReplyDelete- அன்புடன்
லலித்.
நல்ல நீதி கதை...நன்றி அய்யா!!!
ReplyDeleteகுருடன் ஒரு அனுமானத்தில் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்..!
ReplyDeleteபரம்பரையாக சில குணங்கள் பலருக்கும் ஒட்டிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவு..
அப்படியொரு நம்பிக்கையில் அந்தக் குருடன் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கலாம்..!
ஆமா.. வாத்தியார் ஏன் இன்னிக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்..?
ReplyDeleteஎனி பிராப்ளம்..?
வணக்கம் வாத்தியார் ஐயா,
ReplyDeleteகடந்த 18-08-2009 அன்று,
"அடுத்த பாடம் அதுதான். ஆனால் அது மேல் நிலைப்பாடம். மின்னஞ்சல் வழியாக வரும். எப்போது வரும்?
எழுதி, தட்டச்சி, பிழை நீக்கிப்பதிய வேண்டாமா?
நாளை உதயத்தில் வரும்
பொறுத்திருந்து படியுங்கள்.
அன்புடன்
வாத்தியார்"
1. ............ ............. ...................
சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே!
சம்மதம்தானா ............ ............. ...................
2. ............ ............. ...................
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா! மார்பு துடிக்குதடி!
............ ............. ................... ............ ............. ...................
இதில் எந்த பாடலை உங்கள் மாணவர்கள் பாடலாம் சொல்லுங்கள் வாத்தியார் ஐயா! சக மாணவர்களும் சொல்லலாம்!
ஹீ! ஹீ!! ஹீ!!!
Eagle அண்ணே/அக்கா/அக்கு,
ReplyDeleteபோனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தது ...............
(அல்லது)
போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு ..............
என்ற பாடலை மாணவர்கள் பாடலாம்
Eagle அண்ணே/அக்கா/அக்கு,
ReplyDeleteபோனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தது ...............
(அல்லது)
போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு ..............
என்ற பாடலை மாணவர்கள் பாடலாம்
ஹா! ஹா! ஹா!
அருமை அய்யா.
ReplyDeleteDo you read others blogs?
////Blogger kimu said...
ReplyDelete["பிறப்பினைப் பெறுவா ரெல்லாம்
பிறந்தவரில் சிறந்தா ரில்லை;
இறப்பினை அடைந்தா ரெல்லாம்
இறந்ததில் உயர்ந்தாரில்லை;
பெறப்படும் பிறப்பை நாட்டின்
பெருமைக்கு அளித்தார் மட்டும்
சிறப்புறு புகழும் பெற்றார்;
தெய்வத்தோ டிடமும் பெற்றார்!
– கவியரசர்]
நன்றி.
-கிமூ-////
நன்றி கிருஷ்ணமூர்த்தி!
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Super and Kalakkal Moral Story...
Manam Eppoludhu Visalamaga Irukkiradho Angu Manam Sandhosamag Irukkum...
Thanks sir....
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நன்றி ராஜாராமன்!
/////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteம்ம்.. நல்ல கதை. நன்றி உங்கள் நேரத்திற்கு. நான் கருத்து சொல்ல போய் பிரச்சனையில் மாட்டி கொள்ள விரும்ப வில்லை . ஆமாம் ஜயா எந்த நாளும் படிக்க முடியாதே.////
எதற்கும் பயப்படாமல் உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம் இமானுவேல்!
////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
ReplyDeleteAyya intha kadhaikku jodhida reedhiyaga solvadhenral vibareedha rajayogathinal mannan aaga irunthalum avanudia gunam migavum thaalntha nilaiyileye ulladhu enbhadhaiye kaattugiradhu.Gunaththil thaayai pola pillai noolai pola selai.nanri////
ராஜாராம்காரு மீக்கு பாடாலு அன்னி ஒச்சிந்தா?
////Blogger Ram said...
ReplyDelete¯û§Çý ³Â¡ (உள்ளேன் ஐயா)////
எழுத்துருவைக் கவனியுங்கள் ரமேஷ்!
////Blogger லலித் said...
ReplyDeleteஇதுதான் விதியின் விளையாட்டு. நல்ல ஞானமும் அறிவும் உள்ள ஒருவனின் கண்களை குருடாக்கி கோவில் வாசலில் உட்கார வைத்துவிட்டு, கஞ்சனும், அறிவிலியுமான ஒருவனை சிம்மாசனத்தில் உட்கார வைத்து இருக்கிறது. நல்ல கதையை கூறி மனசுக்கு RELAX கொடுத்த ஆசிரியருக்கு வந்தனங்கள்.
- அன்புடன்
லலித்.////
நன்றி லலித்!
////Blogger Mohan said...
ReplyDeleteநல்ல நீதி கதை...நன்றி அய்யா!!!////
நன்றி நண்பரே!
/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteகுருடன் ஒரு அனுமானத்தில் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன்..!
பரம்பரையாக சில குணங்கள் பலருக்கும் ஒட்டிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவு..
அப்படியொரு நம்பிக்கையில் அந்தக் குருடன் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கலாம்..!///////
நீங்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும்
////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஆமா.. வாத்தியார் ஏன் இன்னிக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்..?
எனி பிராப்ளம்..?////
ஈகலப்பை இடக்குப் பண்ணியது. இப்போது சரியாகிவிட்டது. (சரி செய்தேன்)
////Blogger Eagle said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா,
கடந்த 18-08-2009 அன்று,
"அடுத்த பாடம் அதுதான். ஆனால் அது மேல் நிலைப்பாடம். மின்னஞ்சல் வழியாக வரும். எப்போது வரும்?
எழுதி, தட்டச்சி, பிழை நீக்கிப்பதிய வேண்டாமா?
நாளை உதயத்தில் வரும்
பொறுத்திருந்து படியுங்கள்.
அன்புடன்
வாத்தியார்"///////
அப்படியே பாடத்தையும் நீங்களே எழுதிவிடுங்கள்:-))))
////Blogger SUBA said...
ReplyDeleteEagle அண்ணே/அக்கா/அக்கு,
போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தது ...............
(அல்லது)
போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு ..............
என்ற பாடலை மாணவர்கள் பாடலாம்//////
சைலன்ஸ்!!!!! (ஒரே இரைச்சலா இருக்கு):-))))
///////Blogger Ramesh said...
ReplyDeleteஅருமை அய்யா.
Do you read others blogs?//////
படிப்பேன். பின்னூட்டம் போடுவதற்கு நேரமில்லை!
வகுப்புக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
ReplyDelete"ஏன்டா லேட்?"
"லேட்டாயிடிச்சி சார்!"
கதையில் வரும் பிட்சைக்காரருக்கு,அரண்மனைக்குள் போக வாய்ப்பு கிடைத்தும் நிரந்தர வாசம் கிடைக்கலை என்பது அவர் ஜாதக பலன் தானே?
அயுசுக்கும் பிட்ஷை என்பது பூர்வபுண்யமல்லவா?
kmr.krishnan(s.no.158)
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteவகுப்புக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
"ஏன்டா லேட்?"
"லேட்டாயிடிச்சி சார்!"
கதையில் வரும் பிட்சைக்காரருக்கு,அரண்மனைக்குள் போக வாய்ப்பு கிடைத்தும் நிரந்தர வாசம் கிடைக்கலை என்பது அவர் ஜாதக பலன் தானே?
அயுசுக்கும் பிட்ஷை என்பது பூர்வபுண்யமல்லவா?
kmr.krishnan(s.no.158)////
Early/Late என்பதெல்லாம் இங்கே கிடையாது! இணைய வகுப்பு (Internet Class).
இணையத்திற்கு ஏது நேரம் காலம்?
நன்றி கிருஷ்ணன் சார்!
//பிறப்பினால் நல்ல/கெட்ட குணம் இயற்கையாகவே வரும் என்கிற (அ)நீதி !
ReplyDelete//
ம்ம்ம்ம்
கதை சூப்பர் சார்.
ReplyDeleteபரம்பரையாக சில வியாதிகள் தொடரும்போது, சில குணங்களும் தொடரலாம்.
/////Blogger புருனோ Bruno said...
ReplyDelete//பிறப்பினால் நல்ல/கெட்ட குணம் இயற்கையாகவே வரும் என்கிற (அ)நீதி !
//
ம்ம்ம்ம்////
ப்ரூனோ சார்..இந்த ம்ம்ம்ம் ற்குப் பொருள் விளக்கம் சொல்லுங்களேன்!
///Blogger chaks said...
ReplyDeleteகதை சூப்பர் சார்.
பரம்பரையாக சில வியாதிகள் தொடரும்போது, சில குணங்களும் தொடரலாம்.////
ஆம், தொடரலாம்!
//எதற்கும் பயப்படாமல் உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம் இமானுவேல்!//
ReplyDeleteஅடி வாங்கிறது நானல்லோ.. ?
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - வள்ளுவர் சொன்னதை இக் கதையும் சொல்கிறது.
ReplyDeleteபான்டுரங்கன் கதையே நினைவிற்க்கு வருகீறது
ReplyDeleteகுலத்தளவே ஆகுமாம் குணம்
ReplyDeleteRamesh Babu
Neither place nor position.
ReplyDeleteIndeed, only the behaviour will reveal either high class or low class - I mean the value of family not the useless caste.
very good story, you cannot change ur birth gunam :)
ReplyDeleteதாங்கள் முன்பு ஒரு இடுகையில் கூறியது போல் "...கொடை, தயை, ஈயை மூன்றும் குடிப்பழக்கம்."
ReplyDelete