18.8.09

எப்போது தீரும் என் கஷ்டம்?

எப்போது தீரும் என் கஷ்டம்?

சார், எப்போது தீரும் என் கஷ்டம்? எனக்கு வரும் மின்னஞ்சலில்
பாதி இப்படித்தான் துவங்கும்.

உண்மையைச் சொன்னால் எப்போது உங்கள் ஆசைகளும்,
எதிர்பார்ப்புக்களும் உங்களை விட்டு நீங்குகிறதோ அப்போது
உங்கள் கஷ்டங்களில் பாதி நீங்கிவிடும்.

முழுதாக நீங்காதா?

நீங்காது!

அதெல்லாம் pre programmed - destined - விதிக்கப்பட்டது.
ஒருபோதும்
முழுதாக நீங்காது. நீங்கியிருந்தால் அதைச்
சொல்லி மகிழ சம்பந்தப்பட்டவன்
உயிரோடு இருக்கமாட்டான்.
சனீஷ்வரன் அவனை அள்ளிக் கொண்டு
போயிருப்பார்.

எப்போது கடலில் அலைகள் ஓய்கின்றனவோ அப்போது தீரும் நம் கஷ்டங்கள்! எப்போது இலைகள், தளிர்களாகவே, முதிராமல்,
பழுக்காமல், மரத்தைவிட்டு
உதிராமல் அப்படியே இருக்கின்றனவோ அப்போது தீரும் நம் கஷ்டங்கள்! எப்போது சூரியன் தனது உதயத்தை நிறுத்துகிறதோ அப்போது தீரும் நம் கஷ்டங்கள்!
---------------------------------------------------------------------
சரி, தொலையட்டும். கஷ்டங்கள் வரவர ஒன்றைத் தீர்த்தால் அடுத்தடுத்து
ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறதே?

அதுதான் வாழ்க்கை!

”முடிந்தகதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்தகதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே”
என்று கவியரசர் கண்ணதாசன் பாடி வைத்தாரே - நினைவில் இல்லையா?

சிரமங்களும், சந்தோஷங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை.

சந்தோஷத்தை மட்டும் மனிதன் அடுத்தவனுடன் பகிர்ந்துகொள்ள மாட்டான்
ஆனால் சிரமப்படும்போது மட்டும் யாராவது வந்து தோள் கொடுத்தால்
பரவாயில்லை என்று நினைப்பான்.

சிலருக்குத் தோள் கொடுக்க உறவுகளும், நண்பர்களும் இருப்பார்கள்.
பலருக்கு அப்படி ஆள் இருக்காது.

அதற்கு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கைமுறைதான் காரணமாக இருக்கும்.

’தன்னைப் போணி’ எங்கள் பகுதில் ஒரு சொல் உண்டு. தன்னை மட்டும்
பேணிப் பாதுகாத்துக் கொள்பவன் என்று அதற்குப் பொருள்.

உங்கள் மொழியில் சொன்னால் சுயநலவாதி (selfish fellow) அப்படிப்பட்ட
ஆசாமிக்கு ஒருவனும் உதவிக்கு வரமாட்டான்.

சுயநலவாதிக்கு, இறைவன் கூட உதவிக்கு வரமாட்டார்

நல்லவனுக்கு சோதனை மேல் சோதனையாக வரும்.
ஆனால் இறைவன் கைவிட மாட்டார்.
கெட்டவனுக்கு எந்த சோதனையும் வராது.
வரும்போது இறைவன் அவனுக்குக் கைகொடுக்க மாட்டார்

ஆகவே சுயநலத்தை, அது உங்களிடம் இருந்தால், இன்றோடு விட்டுவிடுங்கள்
------------------------------------------------------------------------------
இரவு, பகல் போல,இன்பமும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியவையாகும்

எப்போது இன்பம் வரும், எப்போது துன்பம் வரும் என்பதை அறிந்து கொள்ள
ஜாதகத்தில் ஒரு வழியிருக்கிறது. சுலபமான வழி அது.

அடுத்த பாடம் அதுதான். ஆனால் அது மேல் நிலைப்பாடம்.
மின்னஞ்சல் வழியாக வரும்.

எப்போது வரும்?

எழுதி, தட்டச்சி, பிழை நீக்கிப் பதிய வேண்டாமா?
நாளை உதயத்தில் வரும்
பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

69 comments:

  1. //சார், எப்போது தீரும் என் கஷ்டம்? எனக்கு வரும் மின்னஞ்சலில்
    பாதி இப்படித்தான் துவங்கும்.//

    எப்போது நான் ஓட்டாண்டி ஆகி நடுத்தெருவுக்கு வருவேன் ? என்ற கேள்வியை யாருமே ஏன் கேட்பது இல்லை !
    :)

    ReplyDelete
  2. எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று வேண்டும். கோவியாரே நீங்களே இந்த கேள்வி கேட்டு ஆரம்பித்து வையுங்கள். நான் பின் தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. ///////Blogger கோவி.கண்ணன் said...
    //சார், எப்போது தீரும் என் கஷ்டம்? எனக்கு வரும் மின்னஞ்சலில்
    பாதி இப்படித்தான் துவங்கும்.//
    எப்போது நான் ஓட்டாண்டி ஆகி நடுத்தெருவுக்கு வருவேன் ? என்ற கேள்வியை யாருமே ஏன் கேட்பது இல்லை !
    :)////////

    இட் ஈஸ் ஸிம்பிள் கோவியாரே! கேள்வி கேட்பவன் அப்படி ஆகமாட்டான்.
    கேள்வி கேட்காமல் செலவழிப்பவன் மட்டுமே அப்படி ஆகிவிடுவான்.
    ஆன பிறகு கேட்பான் - ஏன் இப்படியானேன்? என்று!
    அந்தமாதிரி ஆசாமிகளுக்கு நீங்கள் உதவலாம்!:-))))

    ReplyDelete
  4. ///Blogger ananth said...
    எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று வேண்டும். கோவியாரே நீங்களே இந்த கேள்வி கேட்டு ஆரம்பித்து வையுங்கள். நான் பின் தொடர்கிறேன்./////

    இரண்டுபேருமே கிழக்கு ஆசிய நாடுகளில். தொடர்வது பொருத்தம்தான்!

    ReplyDelete
  5. தேவையான அறிவுரைதான் வாத்தியாரே..!

    பட்ட பின்பே தெரியுமென்பார்.. படுவதற்கு முன்பாக தெரிந்துவிட்டால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாமே என்றால்.. யாருக்குத் தெரிய வரும் கஷ்டம் காத்திருக்கிறது என்று..!

    இங்கேதான் மனிதன் தன் மமதையை விட்டு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்புகிறான்..!

    ReplyDelete
  6. நல்லவனுக்கு சோதனைமேல் சோதனை வரும் - ஆனால் இறைவன் கைவிட மாட்டான்.
    கெட்டவர்களுக்கு சோதனை கொடுக்க மாட்டான்..... ஆனால் இறுதியில் கைவிட்டு விடுவான்...

    ஆண்டவன் எனக்கு கை கொடுப்பார் என நினைக்கின்றேன்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. துன்பங்கள் எப்போதும் தீராது என்ற ஆசிரியரின் கூற்று சரி, ஆனால் துன்பங்களை குறைக்க என்ன வழி எனச் சொல்வதுதான் ஒரு ஜோதிடனின் அழகு, அதுதான் அவன் தர்மம். மக்களின் துன்பத்தை கடவுள் மட்டுமோ போக்க முடியும் அதற்க்கான வழியை சொல்வது அவர் கடமை.

    ஒரு தாழ்மையான வேண்டுகோள், நமது ஆசிரியர், விடாத வேலைப்பளூ காரணமாக கொஞ்சம் பொறுமையை இழந்து விடுகிறார். அவரின் வயது. பணிச்சுமை மற்றும் வாசகரின் புரிந்துணர்தல் இல்லாத கேள்விகளாள் அவர் சிறீது பொறுமை இழந்து விடுகிறார். இது அவரின் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

    அவரை சிறிது பணி அல்லது டென்சன் குறைப்பது அவருக்கு நன்மை பயக்கும்.

    இது அவரின் மேல் கொண்ட அக்கரை காரனமாக எனது தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  8. ///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தேவையான அறிவுரைதான் வாத்தியாரே..!
    பட்ட பின்பே தெரியுமென்பார்.. படுவதற்கு முன்பாக தெரிந்துவிட்டால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாமே என்றால்.. யாருக்குத் தெரிய வரும் கஷ்டம் காத்திருக்கிறது என்று..!
    இங்கேதான் மனிதன் தன் மமதையை விட்டு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்புகிறான்..!////

    நிதர்சனமான உண்மை! நன்றி உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  9. Blogger வேலன். said...
    நல்லவனுக்கு சோதனைமேல் சோதனை வரும் - ஆனால் இறைவன் கைவிட மாட்டான்.
    கெட்டவர்களுக்கு சோதனை கொடுக்க மாட்டான்..... ஆனால் இறுதியில் கைவிட்டு விடுவான்...
    ஆண்டவன் எனக்கு கை கொடுப்பார் என நினைக்கின்றேன்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  10. /////Blogger PITTHAN said...
    துன்பங்கள் எப்போதும் தீராது என்ற ஆசிரியரின் கூற்று சரி, ஆனால் துன்பங்களை குறைக்க என்ன வழி எனச் சொல்வதுதான் ஒரு ஜோதிடனின் அழகு, அதுதான் அவன் தர்மம். மக்களின் துன்பத்தை கடவுள் மட்டுமோ போக்க முடியும் அதற்கான வழியை சொல்வது அவர் கடமை.
    ஒரு தாழ்மையான வேண்டுகோள், நமது ஆசிரியர், விடாத வேலைப்பளூ காரணமாக கொஞ்சம் பொறுமையை இழந்து விடுகிறார். அவரின் வயது. பணிச்சுமை மற்றும் வாசகரின் புரிந்துணர்தல் இல்லாத கேள்விகளாள் அவர் சிறீது பொறுமை இழந்து விடுகிறார். இது அவரின் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.
    அவரை சிறிது பணி அல்லது டென்சன் குறைப்பது அவருக்கு நன்மை பயக்கும்.
    இது அவரின் மேல் கொண்ட அக்கரை காரனமாக எனது தாழ்மையான வேண்டுகோள்.//////

    எனது எழுத்து நடையே அப்படித்தான். பொறுமை இருப்பதால்தான் பைசா பிரயோஜனம் இல்லாத பதிவுகளில்
    மொத்தம் 2 பதிவுகள்- மூன்று ஆண்டுகளாக எழுதிவருகிறேன். சுமார் 800 இடுகைகள் இதுவரை பதிந்துள்ளேன்.

    எனக்கு சில சமயங்களில் எரிச்சல் வருவதுண்டு. அது எப்போது என்றால், புதிதாக வருகிறவர்களிடம் பழைய பாடங்களை முதலில் படியுங்கள், மனதில் ஏற்றுங்கள் என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் இப்போது எழுதப்படும் அலசல் பாடங்களைப் படித்து விட்டு அபத்தமாகக் கேள்விகள் கேட்கும்போதுதான்.

    “லக்கினகாரகன் பத்தில் இருந்தால்’ என்று எழுதும்போது, ஐயா லக்கினத்திலிருந்து பத்தாம் வீடு வலது சுற்றா, அல்லது இடது சுற்றிலா? லக்கினத்தையும் சேர்த்து எண்ண வேண்டுமா? அல்லது லக்கினத்திற்கு அடுத்த வீட்டிலிருந்து எண்ணிக்கையைத் துவக்க வேண்டுமா? விளக்கம் தாருங்கள்!”

    “கிரகங்கள் உச்சமானதையும்,, நீசமானதையும் எப்படித் தெரிந்து கொள்வது?”

    220 பாடங்களுக்குப் பிறகு வந்து இப்படிக் கேட்டால் நான் என்ன செய்வது?
    பழைய பாடங்களைப் படிக்க வைக்க என்ன செய்வது?
    அவற்றைப் படிக்காமல் வந்து அவற்றில் உள்ளதைப் பற்றியே கேள்விகள் கேட்பதை எப்படித் தடுப்பது?

    வகுப்பறையில் சேர்ந்த அன்றே என்ன பாடம் என்று பார்க்காமல், தன் ஜாதகத்தை நீட்டி, என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்டுத் துளைப்பவர்களை என்ன செய்வது?

    எதிர்காலம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

    நீங்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள் பித்தன்!

    ReplyDelete
  11. Pathivu nanru ayya.............

    ONE Question onli....

    enathu nanbaruku mesha lagnam......

    lagnathipathy ucham magarathil.......

    antha veetin athipathiyudan parivarthanai....ie:saturn.

    Guru kumbathil in 11th house......

    Question is:guru desai nadakirathu avarku....nanraaga irukuma..........

    Note:guruvai entha bad grahasum paarkavillai...

    ReplyDelete
  12. கண்ணதாசன் பாடல் எடுத்து phd
    பண்ணி இருக்கீகளா அய்யா.
    பாடத்தை எதிர்பார்க்கிறோம் .
    நன்றி அய்யா

    ReplyDelete
  13. பித்தன் அவர்களுக்கு ஆசிரியர் எழுதிய பதிலில் அவர் பிரச்சினை என்னவென்று புரிகிறது. மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். காலம் பொன் போன்றது. ஆசிரியரின் நேரம் ஒரு சிலருக்காக அன்றி எல்லோருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.

    இங்கே பலர் சேருவது பாடம் படிப்பதற்கு/ஜோதிடத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அல்லாமல் தங்கள் ஜாதக பலனை தெரிந்து கொள்வதற்காக என்பது போல் ஒரு தோற்றம் தெரிகிறது. எனது இந்த கணிப்பு தவறானது என்றால் மகிழ்ச்சியே. பாடங்களை எப்படி படிப்பது, ஜோதிடம் வசப்பட வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆசிரியரே பல முறை சொல்லியிருக்கிறார். நான் மீண்டும் அதைச் சொல்லி மொக்கை போட விரும்பவில்லை.

    ReplyDelete
  14. உன்மைதான் அய்யா, இது நீங்கள் மட்டும் அல்ல, பல ஜோசியர்களும் அனுபவிக்கும் கஸ்டம் இதுதான்.

    ஒன்றும் அறியாதவனுக்கு பலன் சொல்லி விடலாம், ஆனால் அறைகுறைகளுக்கு பதில் சொல்லுவது மிகவும் சிரமம். சில மாத ஜோதிட நூல்களை படித்து பொது பலன் அறிந்து, அது எனக்கு ஏன் நடக்க வில்லை அல்லது ஜோதிடம் பொய் என போசுபவனை நம்மால் திருத்த முடியாது.

    ஜோதிட விசயத்தில் நம்மவர்களுக்கு ஆர்வம் அதிகம், ஆனால் கத்துகொள்வதில் பொறுமை கிடையாது.

    அவரவர் தமது ஜாதகத்தில் தெரிய ஆசைபடுவார்கள் ஆனால் முளுமையாக கத்து கொள்ளமாட்டார்கள்.

    இது போன்ற மாணக்கர்களை சிறிது பொறுமையாக கையாள வேண்டும். இது அவர்களின் அறியாமை என்று நாம் நினைத்தால் போதும் நமது கோவம் பரந்துவிடும். ஒரு முறை காஞ்சி பொரியவர் சொன்னது:

    செய்யும் பாவம் அனைத்தும் செய்து ஊழ்வினை அலுத்தும் போது காப்பாத்து என்று நம்மிடம் வந்தால் என் செய்வது, அவர் கஸ்டம் குறைக்க இறைவனை பிரார்த்தனை செய்வதை தவிர வேறு எதும் செய்ய முடியயாது.

    ஆனால் நம்மிடம் வந்துவிட்டால் போதும் கஸ்டம் போய்விடும் எங்கின்ற அறியாமை நாம் மாற்றமுடியாது.

    எனவே அறியாமையால் இந்த கேள்வி என அறிந்தால் நம் கோவம் குறைந்துவிடும்.

    பல பின்னூட்டம் மற்றும் தொடர் மின்னஞ்சல் செய்து நம்மை தொந்திரவு செய்தால் அப்போது கோவம் கொள்வது முறை. தங்களின் தொடர் பணிச்சுமை தங்களுக்கு இரத்தகொதிப்பு உருவாக வழி செய்யும். (ஏற்கனவே இருக்கும் என ஊகிக்கின்றேன்). பார்த்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. அய்யா தங்களை பொறுமை அற்றவர் என்ற கருத்தில் நான் விமர்சனம் எளுத வில்லை.

    இதுவரை யாரும் எளுததா பரல்கள், பாகைகள் பற்றி எளுதிஉள்ளீர்கள்.

    அவற்றை விளக்குவற்கு மட்டும் நிறைய பொறுமை வேண்டும், நிறைய பொறுமையாக எளுதிஉள்ளிர்கள். அதை படித்துதான் அறைகுறையான நான் தங்களின் மாணவனாக இனைந்தென்.
    தாங்களின் பணிதொடர வேண்டும் என நல்ல எண்ணத்தில் தான் அப்படி எளுதினென்.

    தவறு இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
  16. ////Bala said...
    Pathivu nanru ayya.............
    ONE Question onli....
    enathu nanbaruku mesha lagnam......
    lagnathipathy ucham magarathil.......
    antha veetin athipathiyudan parivarthanai....ie:saturn.
    Guru kumbathil in 11th house......
    Question is:guru desai nadakirathu avarku....nanraaga irukuma..........
    Note:guruvai entha bad grahasum paarkavillai...////

    மேஷ லக்கினத்திற்கு குரு 9 & 12ற்கு உரியவன்
    பாக்கியம் & விரையம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் உரியவன்
    ஆகவே Mixed Result!
    9ற்குரிய குரு அந்த வீட்டிற்கு 3ல்
    12ற்குரிய அவனே அந்த வீட்டிற்குப் 12ல்
    ஆகவே Mixed Result!

    ReplyDelete
  17. ///thirunarayanan said...
    கண்ணதாசன் பாடல் எடுத்து phd
    பண்ணி இருக்கீகளா அய்யா.
    பாடத்தை எதிர்பார்க்கிறோம் .
    நன்றி அய்யா/////

    நன்றி திருநாராயணன்.

    ReplyDelete
  18. Blogger ananth said...
    பித்தன் அவர்களுக்கு ஆசிரியர் எழுதிய பதிலில் அவர் பிரச்சினை என்னவென்று புரிகிறது. மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். காலம் பொன் போன்றது. ஆசிரியரின் நேரம் ஒரு சிலருக்காக அன்றி எல்லோருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
    இங்கே பலர் சேருவது பாடம் படிப்பதற்கு/ஜோதிடத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அல்லாமல் தங்கள் ஜாதக பலனை தெரிந்து கொள்வதற்காக என்பது போல் ஒரு தோற்றம் தெரிகிறது. எனது இந்த கணிப்பு தவறானது என்றால் மகிழ்ச்சியே. பாடங்களை எப்படி படிப்பது, ஜோதிடம் வசப்பட வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆசிரியரே பல முறை சொல்லியிருக்கிறார். நான் மீண்டும் அதைச் சொல்லி மொக்கை போட விரும்பவில்லை./////

    புரிதலுக்கு நன்றி ஆனந்த்!
    ”தங்கள் ஜாதக பலனை மட்டும் தெரிந்து கொள்வதற்காக என்பது போல் ஒரு தோற்றம் தெரிகிறது” என்று
    எழுதியுள்ளீர்கள் பாருங்கள். அவர்களால்தான் பிரச்சினைகள்!
    அவர்களுக்கு பாடங்களின் மேல் அக்கறையில்லை.
    மீனைத்தராமல், மீனைப் பிடிப்பதற்குச் சொல்லித் தருகிறேன்.
    அதை அவர்கள் உணர்ந்தால் நல்லது!

    ReplyDelete
  19. ////Blogger PITTHAN said...
    உன்மைதான் அய்யா, இது நீங்கள் மட்டும் அல்ல, பல ஜோசியர்களும் அனுபவிக்கும் கஸ்டம் இதுதான்.
    ஒன்றும் அறியாதவனுக்கு பலன் சொல்லி விடலாம், ஆனால் அறைகுறைகளுக்கு பதில் சொல்லுவது மிகவும் சிரமம். சில மாத ஜோதிட நூல்களை படித்து பொது பலன் அறிந்து, அது எனக்கு ஏன் நடக்க வில்லை அல்லது ஜோதிடம் பொய் என போசுபவனை நம்மால் திருத்த முடியாது.
    ஜோதிட விசயத்தில் நம்மவர்களுக்கு ஆர்வம் அதிகம், ஆனால் கத்துகொள்வதில் பொறுமை கிடையாது.
    அவரவர் தமது ஜாதகத்தில் தெரிய ஆசைபடுவார்கள் ஆனால் முளுமையாக கற்றுக் கொள்ளமாட்டார்கள்.
    இது போன்ற மாணக்கர்களை சிறிது பொறுமையாக கையாள வேண்டும். இது அவர்களின் அறியாமை என்று நாம் நினைத்தால் போதும் நமது கோபம் பறந்துவிடும். ஒரு முறை காஞ்சி பெரியவர் சொன்னது:
    செய்யும் பாவம் அனைத்தும் செய்து ஊழ்வினை அழுத்தும் போது காப்பாற்று என்று நம்மிடம் வந்தால் என்ன செய்வது, அவர் கஷ்டம் குறைக்க இறைவனை பிரார்த்தனை செய்வதை தவிர வேறு எதும் செய்ய முடியாது.
    ஆனால் நம்மிடம் வந்துவிட்டால் போதும் கஷ்டம் போய்விடும் எங்கின்ற அறியாமையை நாம் மாற்றமுடியாது.
    எனவே அறியாமையால் இந்த கேள்வி என அறிந்தால் நம் கோபம் குறைந்துவிடும்.
    பல பின்னூட்டம் மற்றும் தொடர் மின்னஞ்சல் செய்து நம்மை தொந்திரவு செய்தால் அப்போது கோபம் கொள்வது முறை. தங்களின் தொடர் பணிச்சுமை தங்களுக்கு இரத்தகொதிப்பு உருவாக வழி செய்யும். (ஏற்கனவே இருக்கும் என ஊகிக்கின்றேன்). பார்த்துகொள்ளுங்கள்.////

    எந்தக் கொதிப்பும் வராது. இயற்கையில் நான் தமாஷான ஆள்.

    ”ஒலியும் ஒளியில் கரண்ட் போன டேக் இட் ஈசி பாலிசி
    ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
    தண்ட சோறுன்னு அப்பன் சொன்ன டேக் இட் ஈசி பாலிசி
    வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
    ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி”

    என்னும் கொள்கையுடையவன். என் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படிப்பவர்களுக்கு அது தெரியும்
    மேலும் என் நண்பன் பழநி அப்பன் என்னைப் பார்த்துக்கொள்வான்.
    ஒரேஒரு குறை அவனுக்கு சொல்போனும் கிடையாது. மெயில் ஐடியும் கிடையாது:-))))))

    ReplyDelete
  20. ////Blogger PITTHAN said...
    அய்யா தங்களை பொறுமை அற்றவர் என்ற கருத்தில் நான் விமர்சனம் எழுத வில்லை.
    இதுவரை யாரும் எழுததா பரல்கள், பாகைகள் பற்றி எழுதிஉள்ளீர்கள்.
    அவற்றை விளக்குவற்கு மட்டும் நிறைய பொறுமை வேண்டும், நிறைய பொறுமையாக எழுதிஉள்ளீர்கள். அதை படித்துதான் அறைகுறையான நான் தங்களின் மாணவனாக இணைந்தேன்.
    தாங்களின் பணிதொடர வேண்டும் என நல்ல எண்ணத்தில் தான் அப்படி எழுதினேன்.
    தவறு இருப்பின் மன்னிக்கவும்.////

    மன்னிப்பெல்லாம் எதற்கு?
    வாத்தியார் - மாணவன் உறவு அதெற்கெல்லாம் அப்பாற்பட்டது!

    ReplyDelete
  21. //ஒன்றும் அறியாதவனுக்கு பலன் சொல்லி விடலாம், ஆனால் அறைகுறைகளுக்கு பதில் சொல்லுவது மிகவும் சிரமம். //You would better ignore them, sir :-)

    ReplyDelete
  22. Sir,

    Your articles are very good.

    The kind of Astrology shows the way ahead, such that a person can prepare himself ( cushion ) the effects. Astakavarga shows even the sub periods, where in a person can take it easy, while the income pours in... Simple!

    Mars in 10th, as per Vedic gives Government job or contracts or business dealing with Govt. Holds good for me. I was fortunate to leave the Govt. job and start my business... timed it with Astrology and earnt more than what I earnt in 13 years as Govt. servant in 12 months.

    If someone is born at the same time of Dhirubai Ambani may not have died as rich as him. It would be the opportunities, that he converted and the risk taking ability and the social setup he came from and the wife he married ( elder, with money )... and the friends he cultivates in the society and the courage to bribe the Politicians and system of red tape...

    I have also got on English blog, where I write about Astrology and Ayurveda

    Regards
    Ramesh

    ReplyDelete
  23. ஜாதகங்கள் பலவற்றை பார்க்கும்போது இந்து லக்னம் சில விசேடமான யோகங்களை தருகிறது. இதைப்பற்றி சற்று விரிவாக விளக்குமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்

    ReplyDelete
  24. அட போகப்பா

    ஒங்களுக்கு எல்லாமே கிண்டலாத்தான் இருக்கும். ஒடம்புல வலி வந்தாத்தான் டாக்டர தேடி போக முடியும்.

    ReplyDelete
  25. செல்லி said...
    //ஒன்றும் அறியாதவனுக்கு பலன் சொல்லி விடலாம், ஆனால் அறைகுறைகளுக்கு பதில் சொல்லுவது மிகவும் சிரமம். //You would better ignore them, sir :-)

    ************************************

    அம்மா செல்லியம்மா

    எங்கள மாதிரி அரைகுரைங்களுக்குதான் சந்தேகம்லாம் வரும். எல்லாருமே தங்களைப்போல் "முழுமையாக" இருந்துவிட்டால் சந்தேகமே வராது.

    கொஞ்சம் விட்டா வாத்தியாரை கல்நெஞ்சக்காரராக மாற்றி விடுவீர்கள் போல.

    ReplyDelete
  26. ஆஹா

    நான் ஒரு முட்டாள்ன்க்ரத என் வாயாலேயே ஒளரிட்டேனே. செரி. பரவாயில்லை.

    வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவருமே நண்பர்கள்தானே.

    நண்பர்களுக்குள் ஒளி மறைவெதற்கு?

    ReplyDelete
  27. Dear Sir,

    Thanks a lor for your wonderful service to the society. It is much useful to the people like me who would like to know more about astrology.

    Thanks and Regards
    K Jaishankar

    ReplyDelete
  28. ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தேவையான அறிவுரைதான் வாத்தியாரே..!

    பட்ட பின்பே தெரியுமென்பார்.. படுவதற்கு முன்பாக தெரிந்துவிட்டால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாமே என்றால்.. யாருக்குத் தெரிய வரும் கஷ்டம் காத்திருக்கிறது என்று..!

    இங்கேதான் மனிதன் தன் மமதையை விட்டு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்புகிறான்..!///

    repeateyyy

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா ..
    இ மெயில் பாடங்களுக்கு நன்றி.

    கிரகண தோசம் என்று ஒன்று உள்ளதா? இதுவும் கால சர்ப்ப தோசமும் இணைந்திருந்தால் நல்லதா? கெட்டதா? சூல தோசத்தை அடித்துவிடக்கூடிய பலமான யோகங்கள் உள்ளதா ? நீங்கள் யோகங்களை பற்றி விரிவாக எழுதுவதாக குறிப்பிட்டிருப்பதனால் சில வரிகளில் பதில் போதுமானது.

    தங்களது பொன்னான நேரத்துக்கு மிகவும் நன்றி ...

    ReplyDelete
  30. Dear Vathiyare,

    I got a horoscope of a Bride, I saw Kalasarba Dhosa starts from lagna Raghu to 7 Kethu.

    All the other planets got arrested between Mesha to thula.

    I my horoscope, I don't have this structure.

    Should I Look for a Match? Any suggestions?

    In her astavarga, I saw 22 parals in lagna. Now she is 23.

    Need your valuable words.

    Thanks
    Saravana

    ReplyDelete
  31. Dear Vathiyare,

  32. முருகன் அடிமையாரே,
    //அம்மா செல்லியம்மா

    எங்கள மாதிரி அரைகுரைங்களுக்குதான் சந்தேகம்லாம் வரும். எல்லாருமே தங்களைப்போல் "முழுமையாக" இருந்துவிட்டால் சந்தேகமே வராது.

    கொஞ்சம் விட்டா வாத்தியாரை கல்நெஞ்சக்காரராக மாற்றி விடுவீர்கள் போல.//
    நான் "முழுமை"யின்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?
    நானும் உங்க மாதிரி அரைகுறைதான்!

    வாத்தியார் கல்நெஞ்சக்காரர் இல்ல என்பதை சொல்லிட்டீங்க, சந்தோசம்! அது யாவரும் அறிந்ததே!அதனால தான் இப்பிடி எல்லாம் பாடம் நடத்துறார்.
    முருகன் அடிமயாரே ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க, "ஒருவருடைய நல்ல சுபாவத்தையும் யாராலும் மாத்த முடியாது:அதுமாதிரி ஒருவருடைய கெட்ட சுபாவத்தையும் யாராலும் மாத்த முடியாது! அது அவரவர் கொண்டுவந்த வரம்!" :-))
    எப்பிடி இந்த பஞ் டயலொக்? இது நம்மளோடது!

    ReplyDelete
  33. Blogger செல்லி said...
    //ஒன்றும் அறியாதவனுக்கு பலன் சொல்லி விடலாம், ஆனால் அறைகுறைகளுக்கு பதில் சொல்லுவது மிகவும் சிரமம். //You would better ignore them, sir :-)////

    வாத்தியார் வேலைக்கு (சம்பளம் இல்லாத வேலைதான் என்றாலும் வேலை வேலைதானே?) வந்துவிட்டேன். சிரமத்தைப் பாராமல் அவர்களையும் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான் வாத்தியாரின் கடமை!

    ReplyDelete
  34. Blogger Ramesh said...
    Sir,
    Your articles are very good.
    The kind of Astrology shows the way ahead, such that a person can prepare himself ( cushion ) the effects. Astakavarga shows even the sub periods, where in a person can take it easy, while the income pours in... Simple!
    Mars in 10th, as per Vedic gives Government job or contracts or business dealing with Govt. Holds good for me. I was fortunate to leave the Govt. job and start my business... timed it with Astrology and earnt more than what I earnt in 13 years as Govt. servant in 12 months.
    If someone is born at the same time of Dhirubai Ambani may not have died as rich as him. It would be the opportunities, that he converted and the risk taking ability and the social setup he came from and the wife he married ( elder, with money )... and the friends he cultivates in the society and the courage to bribe the Politicians and system of red tape...
    I have also got on English blog, where I write about Astrology and Ayurveda
    Regards
    Ramesh////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. ///Blogger omvijay said...
    ஜாதகங்கள் பலவற்றை பார்க்கும்போது இந்து லக்னம் சில விசேடமான யோகங்களை தருகிறது. இதைப்பற்றி சற்று விரிவாக விளக்குமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்.//////

    பின்னால் எழுதுகிறேன்!

    ReplyDelete
  36. ////Blogger முருகன் அடிமை said...
    அட போங்கப்பா
    உங்களுக்கு எல்லாமே கிண்டலாத்தான் இருக்கும். உடம்புல வலி வந்தாத்தான் டாக்டரைத் தேடிப் போக முடியும்.//////

    நீங்களோ முருகனடிமை. உங்களுக்கு வலி வரக்கூடாதே?
    மன வலியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்!

    ReplyDelete
  37. /////Blogger முருகன் அடிமை said...
    செல்லி said...
    //ஒன்றும் அறியாதவனுக்கு பலன் சொல்லி விடலாம், ஆனால் அறைகுறைகளுக்கு பதில் சொல்லுவது மிகவும் சிரமம். //You would better ignore them, sir :-)//////
    அம்மா செல்லியம்மா
    எங்கள மாதிரி அரைகுரைங்களுக்குதான் சந்தேகம்லாம் வரும். எல்லாருமே தங்களைப்போல் "முழுமையாக" இருந்துவிட்டால் சந்தேகமே வராது.
    கொஞ்சம் விட்டா வாத்தியாரை கல்நெஞ்சக்காரராக மாற்றி விடுவீர்கள் போல./////

    ஜோதிடத்தில் யாருமே முழுமை பெறமுடியாது. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்! கற்றது கையளவு!

    ReplyDelete
  38. ///Blogger முருகன் அடிமை said...
    ஆஹா
    நான் ஒரு முட்டாள்ங்கிறதை என் வாயாலேயே உளரிவிட்டேனே. சரி. பரவாயில்லை.
    வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவருமே நண்பர்கள்தானே.
    நண்பர்களுக்குள் ஒளி மறைவெதற்கு?/////

    இந்தப் பண்பு இருந்தால் போதும். சண்டை சச்சரவு இருக்காது! நன்றி!

    ReplyDelete
  39. ////Blogger Kavidasan said...
    Dear Sir,
    Thanks a lor for your wonderful service to the society. It is much useful to the people like me who would like to know more about astrology.
    Thanks and Regards
    K Jaishankar////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. ////Blogger T.V.Radhakrishnan said...
    ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தேவையான அறிவுரைதான் வாத்தியாரே..!
    பட்ட பின்பே தெரியுமென்பார்.. படுவதற்கு முன்பாக தெரிந்துவிட்டால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாமே என்றால்.. யாருக்குத் தெரிய வரும் கஷ்டம் காத்திருக்கிறது என்று..!
    இங்கேதான் மனிதன் தன் மமதையை விட்டு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்புகிறான்..!///
    repeateyyy////

    உங்கள் ரிப்பீட்டிற்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  41. //////Blogger தம்பி கிருஷ்ணா said...
    வணக்கம் ஐயா ..
    இ மெயில் பாடங்களுக்கு நன்றி.
    கிரகண தோசம் என்று ஒன்று உள்ளதா? இதுவும் கால சர்ப்ப தோசமும் இணைந்திருந்தால் நல்லதா? கெட்டதா? சூல தோசத்தை அடித்துவிடக்கூடிய பலமான யோகங்கள் உள்ளதா ? நீங்கள் யோகங்களை பற்றி விரிவாக எழுதுவதாக குறிப்பிட்டிருப்பதனால் சில வரிகளில் பதில் போதுமானது.
    தங்களது பொன்னான நேரத்துக்கு மிகவும் நன்றி ...//////

    கிரகண தோசம் என்று ஒன்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. யோகங்களையும், தோஷங்களையும் பற்றிய பாடம் வரவுள்ளது.அப்போது பார்ப்போம்

    ReplyDelete
  42. ////Blogger Saravana said...
    Dear Vathiyare,
    I got a horoscope of a Bride, I saw Kalasarba Dhosa starts from lagna Raghu to 7 Kethu.
    All the other planets got arrested between Mesha to thula.
    I my horoscope, I don't have this structure.
    Should I Look for a Match? Any suggestions?
    In her astavarga, I saw 22 parals in lagna. Now she is 23.
    Need your valuable words.
    Thanks
    Saravana//////

    காலசர்ப்ப தோஷம் இருந்தால் என்ன? மற்ற அம்சங்களையும், பொருத்தங்களையும்
    பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  43. ////Blogger செல்லி said...
    முருகன் அடிமையாரே,
    //அம்மா செல்லியம்மா
    எங்கள மாதிரி அரைகுரைங்களுக்குதான் சந்தேகம்லாம் வரும். எல்லாருமே தங்களைப்போல் "முழுமையாக" இருந்துவிட்டால் சந்தேகமே வராது.
    கொஞ்சம் விட்டா வாத்தியாரை கல்நெஞ்சக்காரராக மாற்றி விடுவீர்கள் போல.//
    நான் "முழுமை"யின்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?
    நானும் உங்க மாதிரி அரைகுறைதான்!
    வாத்தியார் கல்நெஞ்சக்காரர் இல்ல என்பதை சொல்லிட்டீங்க, சந்தோசம்! அது யாவரும் அறிந்ததே!அதனால தான் இப்பிடி எல்லாம் பாடம் நடத்துறார்.
    முருகன் அடிமயாரே ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க, "ஒருவருடைய நல்ல சுபாவத்தையும் யாராலும் மாத்த முடியாது:அதுமாதிரி ஒருவருடைய கெட்ட சுபாவத்தையும் யாராலும் மாத்த முடியாது! அது அவரவர் கொண்டுவந்த வரம்!" :-))
    எப்பிடி இந்த பஞ் டயலொக்? இது நம்மளோடது!/////

    ஆமாம் பாகற்காயின் கசப்பையும், மிளகாயின் காரத்தையும் யாரால் மாற்றமுடியும்?
    அறிவு, குணம் எல்லாம் வாங்கி வந்த வரம்!

    ReplyDelete
  44. //நல்லவனுக்கு சோதனைமேல் சோதனை வரும் - ஆனால் இறைவன் கைவிட மாட்டான்.//

    :)

    எதை கைவிடமாட்டான் சோதனையையா ?

    ReplyDelete
  45. ////Blogger கோவி.கண்ணன் said...
    //நல்லவனுக்கு சோதனைமேல் சோதனை வரும் - ஆனால் இறைவன் கைவிட மாட்டான்.// :) எதை கைவிடமாட்டான் சோதனையையா ?////

    எதைத்தான் நக்கலடிப்பது என்ற கணக்குக் கிடையாதா?
    பழநிஅப்பனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்!
    சாபமிடச் சொல்லட்டுமா?:-)))))

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. மனிதர்களுக்கு ஜாதகம் தலைஎழுத்தை நிர்ணயம் செய்தாலும் சிலருக்கு (எனக்கும்தான்) நல்லமுறையில் ஜாதகம் அமைவதில்லை. ஜாதகத்திற்கு அப்பால் இறைவனது கோட்டா என்று உள்ளது. இறைவனை மனதார வழிபடுங்கள். ஜோதிடர்கள் கைவிட்ட ஜாதகரை இறைவன் காப்பாற்றுவான். இறைவன் மிகப்பெரியவன்.

    ReplyDelete
  48. //எதைத்தான் நக்கலடிப்பது என்ற கணக்குக் கிடையாதா?
    பழநிஅப்பனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்!
    சாபமிடச் சொல்லட்டுமா?:-)))))

    Wednesday, August 19, 2009 7:03:00 AM
    //

    திருவிளையாடல் படத்தில் ஏபி நாகராஜன் வசனத்தில், முருகன் பேசுவதாக,

    "அப்பாவின் சோதனைகளை பக்தர்களோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா, என்னிடமும் காட்ட வேண்டுமா ?" என்கிற வசனம் இடம் பெறும்.

    படம் பார்க்கும் கும்பலில் இருந்து ஒரு குரல்,

    "கொய்யாலே......பக்தர்கள் மட்டும் இளிச்ச வாயர்களா ?" ன்னு கேட்டது.

    ReplyDelete
  49. Blogger செல்லி said...
    //ஆஹா
    நான் ஒரு முட்டாள்ன்க்ரத என் வாயாலேயே ஒளரிட்டேனே. செரி. பரவாயில்லை.
    வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவருமே நண்பர்கள்தானே.
    நண்பர்களுக்குள் ஒளி மறைவெதற்கு?//
    ஒரு வகுப்பறைன்னா சச்சரவு, வாக்கு வாதம் எல்லாம் சகஜப்பா.. அதுவும் ஒத்துக்கிட்டீங்க பாருங்க you are really great!......be my friend again? :-)//////

    :-)))))

    ReplyDelete
  50. வாத்தியார் எப்பதான் ஜோதிடத்தை பற்றி புத்தகமா வெளியிடுவார்னு அந்த ஆண்டவருக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.

    நேத்து திடீர்னு ஒரு ஆர்வம். நம்ம வாத்தியார் கொஞ்சம் கொஞ்சமாத்தானே பாடம் நடத்துறாங்க. ஒரே நாள்ல முழுசா தெரிஞ்சிக்கிட்டா என்ன? அப்டின்னு என் மரமண்டை ஒரு ஐடியா டியூப் லைட் மாதிரி பளீர்னு பிரகாசிக்க, ஒடனே கடைல போய் ஆர்வக் கோளாறுல "ஜோதிஷ சாஸ்திரம்" அப்டிங்கற புக்க வாங்கினேன் (நான் போன நேரத்துக்கு கடைல ஜோதிடம் பற்றி அந்த புக்குதான் இருந்துச்சி). ஒரு ஆர்வத்துல லைட்டா பொரட்டி பாத்துட்டு வாங்கிட்டேன். வீட்ல வந்து படிச்சி பாத்தேன். மூணு பக்கத்துக்கு மேல தாண்டி போக முடியலை. காரணம் அதில் உள்ள ஒரு வார்த்தையும் (தமிழ் தான்) என் மரமண்டையில் பதிய மாட்டேன் என்றது. ஆங்கிலத்திற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் டிக்சனரியை பார்த்து விடுவேன். ஆனால் தமிழுக்கே டிக்சனரியை தேடும் நிலை ஏற்பட்டது. அதோட சரி. ஒரு முடிவு பண்ணிட்டேன். எதுலயும் அவசரப்படக் கூடாதுன்னு.

    ReplyDelete
  51. ////Blogger முருகன் அடிமை said...
    மனிதர்களுக்கு ஜாதகம் தலைஎழுத்தை நிர்ணயம் செய்தாலும் சிலருக்கு (எனக்கும்தான்) நல்லமுறையில் ஜாதகம் அமைவதில்லை. ஜாதகத்திற்கு அப்பால் இறைவனது கோட்டா என்று உள்ளது. இறைவனை மனதார வழிபடுங்கள். ஜோதிடர்கள் கைவிட்ட ஜாதகரை இறைவன் காப்பாற்றுவான். இறைவன் மிகப்பெரியவன்.//////

    சிலருக்கு நல்ல முறையில் அமைவதில்லையா?
    விடிய விடிய ராமாயண கதாகாலட்சேபத்தைக் கேட்டு மகிழ்ந்தவன், விடிந்தவுடன்
    சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா!
    அது போல இருக்கிறது உங்கள் கூற்று!

    எத்தனை நூறு முறை சொல்லியிருக்கிறேன். அனைவரும் சமம். அனைவருக்கும் 337தான் பரல்கள்

    உங்களுக்கு எது நல்லதாக அமைந்துள்ளது என்று உங்களுக்கே தெரியவில்லை!
    இது அடுத்ததாக உள்ள உங்கள் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது
    (அது பதிவிற்கு ஏற்றதாக இல்லை. ஆகவே நீக்கிவிட்டேன்.)

    ReplyDelete
  52. வாத்தியார் ஐயா

    சீக்கிரமா புத்தகம் வெளியிடுரத பத்தி சொன்னீங்கன்னா சந்தோசமாக இருக்கும். ஒவ்வொரு பாகமாக தனித்தனியாக வெளியிட்டாலும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  53. Blogger கோவி.கண்ணன் said...
    //எதைத்தான் நக்கலடிப்பது என்ற கணக்குக் கிடையாதா?
    பழநிஅப்பனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்!
    சாபமிடச் சொல்லட்டுமா?:-)))))
    திருவிளையாடல் படத்தில் ஏபி நாகராஜன் வசனத்தில், முருகன் பேசுவதாக,
    "அப்பாவின் சோதனைகளை பக்தர்களோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா, என்னிடமும் காட்ட வேண்டுமா ?" என்கிற வசனம் இடம் பெறும்.
    படம் பார்க்கும் கும்பலில் இருந்து ஒரு குரல்,
    "கொய்யாலே......பக்தர்கள் மட்டும் இளிச்சவாயர்களா ?" ன்னு கேட்டது.////

    எந்த ஊரில் கேட்டது? நாகப்பட்டினத்திலா?

    ReplyDelete
  54. சிலருக்கு நல்ல முறையில் அமைவதில்லையா?
    விடிய விடிய ராமாயண கதாகாலட்சேபத்தைக் கேட்டு மகிழ்ந்தவன், விடிந்தவுடன்
    சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா!
    அது போல இருக்கிறது உங்கள் கூற்று!

    எத்தனை நூறு முறை சொல்லியிருக்கிறேன். அனைவரும் சமம். அனைவருக்கும் 337தான் பரல்கள்

    உங்களுக்கு எது நல்லதாக அமைந்துள்ளது என்று உங்களுக்கே தெரியவில்லை!
    இது அடுத்ததாக உள்ள உங்கள் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது
    (அது பதிவிற்கு ஏற்றதாக இல்லை. ஆகவே நீக்கிவிட்டேன்.)
    *******************************

    ஆஹா

    எனக்கு இப்பதான் கொஞ்சம் திருப்தியாக இருக்கிறது. ஏனெனில், வாத்தியார்ட்ட அடி வாங்கிட்டே படிக்கனும்னு ஒரு ஆசை இருந்தது. இப்பதான் நிறைவேரிட்டு. வாத்தியை ஐயா, அடியேன் ஏதும் உளறினால் அடியேனை மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete
  55. //எந்த ஊரில் கேட்டது? நாகப்பட்டினத்திலா?//

    எங்கூரு ஆளுங்க நல்லவங்க, சென்னையில் இரண்டாம் முறையாக ஒரு மோசமான திரையரங்கில் மீண்டும் பார்த்த போது தான்.....அவ்வ்வ்வ்வ்வ்வசனம் !

    ReplyDelete
  56. ///Blogger முருகன் அடிமை said...
    வாத்தியார் ஐயா
    சீக்கிரமா புத்தகம் வெளியிடுரத பத்தி சொன்னீங்கன்னா சந்தோசமாக இருக்கும். ஒவ்வொரு பாகமாக தனித்தனியாக வெளியிட்டாலும் நன்றாக இருக்கும்.////

    வாத்தியாரின் ஜோதிட நூல்கள் பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளிவரும்!

    ReplyDelete
  57. Blogger முருகன் அடிமை said...
    சிலருக்கு நல்ல முறையில் அமைவதில்லையா?
    விடிய விடிய ராமாயண கதாகாலட்சேபத்தைக் கேட்டு மகிழ்ந்தவன், விடிந்தவுடன்
    சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா!
    அது போல இருக்கிறது உங்கள் கூற்று!
    எத்தனை நூறு முறை சொல்லியிருக்கிறேன். அனைவரும் சமம். அனைவருக்கும் 337தான் பரல்கள்
    உங்களுக்கு எது நல்லதாக அமைந்துள்ளது என்று உங்களுக்கே தெரியவில்லை!
    இது அடுத்ததாக உள்ள உங்கள் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது
    (அது பதிவிற்கு ஏற்றதாக இல்லை. ஆகவே நீக்கிவிட்டேன்.)
    *******************************
    ஆஹா
    எனக்கு இப்பதான் கொஞ்சம் திருப்தியாக இருக்கிறது. ஏனெனில், வாத்தியார்ட்ட அடி வாங்கிட்டே படிக்கனும்னு ஒரு ஆசை இருந்தது. இப்பதான் நிறைவேறிட்டு. வாத்தியை ஐயா, அடியேன் ஏதும் உளறினால் அடியேனை மன்னித்து விடுங்கள்.////

    வகுப்பறை பொது இடம். உங்கள் மரியாதையை ஏன் நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள்? விளையாட்டை எல்லாம் வாத்தியாருக்கு அனுப்பும் தனி மின்னஞ்சல்களில் வைத்துக் கொள்ளுங்கள்! புரிகிறதா?

    ReplyDelete
  58. ////Blogger கோவி.கண்ணன் said...
    //எந்த ஊரில் கேட்டது? நாகப்பட்டினத்திலா?//
    எங்கூரு ஆளுங்க நல்லவங்க, சென்னையில் இரண்டாம் முறையாக ஒரு மோசமான திரையரங்கில் மீண்டும் பார்த்த போது தான்.....அவ்வ்வ்வ்வ்வ்வசனம் !////

    சென்னைவாசிகள் அப்படிக் கேட்கக்கூடியவர்கள்தான்!:-))))

    ReplyDelete
  59. Dear Sir,

    ஒரு ஜாதகத்தை பார்த்த உடன் இந்த ஜாதகத்தில் பிதுர் திதி தோஷம் உள்ளது என்று சொல்ல முடியுமா? நட்சத்திரம் கார்த்திகை 2 பாதம்

    Rgds
    Nainar

    ReplyDelete
  60. Dear Sir,

    I haven't received the latest lessons(epothu theerum kashtam).

    Regards,
    Mohan

    ReplyDelete
  61. வகுப்பறை பொது இடம். உங்கள் மரியாதையை ஏன் நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள்? விளையாட்டை எல்லாம் வாத்தியாருக்கு அனுப்பும் தனி மின்னஞ்சல்களில் வைத்துக் கொள்ளுங்கள்! புரிகிறதா?
    ////////////////////////////////////

    நானே ஒரு சின்னப்பொடியந்தான். எனக்கெதுக்கு மரியாதை. நான் சும்மா ஏதாவது ஒளருவேன். ஆனா மத்தவங்க திட்டினால் அதை நான் ரசிப்பேன். எனக்கு நன்மைகள் செய்ய முருகப்பெருமான் இருக்கிறார். ஆனால் என்னை திட்டுவது நண்பர்களால் அதாவது அன்பு சகோதர சகோதரிகளால் மட்டுமே முடியும். பொது வாழ்விலும் சரி, யார் என்னை தூற்றினாலும் நான் அவர்களை போற்றுவேன். இது எனது வீக்னெஸ்

    ReplyDelete
  62. ஜெகன்னதாரான்க்ற மென்பொருளைக் கொண்டு கணிக்கையில் M என்ற இனிசியல் மட்டும் (மாந்தி) புதிதாக ஒரு சக்கரத்தில் தெரிகிறதே?

    ReplyDelete
  63. வணக்கம் வாத்தியார் ஐயா,

    கடந்த 18-08-2009 அன்று,
    "அடுத்த பாடம் அதுதான். ஆனால் அது மேல் நிலைப்பாடம். மின்னஞ்சல் வழியாக வரும். எப்போது வரும்?

    எழுதி, தட்டச்சி, பிழை நீக்கிப்பதிய வேண்டாமா?
    நாளை உதயத்தில் வரும்
    பொறுத்திருந்து படியுங்கள்.

    அன்புடன்
    வாத்தியார்"

    1. ............ ............. ...................
    சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே!
    சம்மதம்தானா ............ ............. ...................

    2. ............ ............. ...................
    வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா! மார்பு துடிக்குதடி!
    ............ ............. ................... ............ ............. ...................

    இதில் எந்த பாடலை உங்கள் மாணவர்கள் பாடலாம் சொல்லுங்கள் வாத்தியார் ஐயா! சக மாணவர்களும் சொல்லலாம்!

    ஹீ! ஹீ!! ஹீ!!!

    ReplyDelete
  64. Blogger arumuga nainar said...
    Dear Sir,
    ஒரு ஜாதகத்தை பார்த்த உடன் இந்த ஜாதகத்தில் பிதுர் திதி தோஷம் உள்ளது என்று சொல்ல முடியுமா? நட்சத்திரம் கார்த்திகை 2 பாதம்
    Rgds
    Nainar/////

    அதைத் தனிப்பாடமாக எழுதவேண்டும். பிறகு எழுதுகிறேன்!

    ReplyDelete
  65. ////Blogger Mohan said...
    Dear Sir,
    I haven't received the latest lessons(epothu theerum kashtam).
    Regards,
    Mohan////

    அடுத்து வரும். பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  66. Blogger முருகன் அடிமை said...
    வகுப்பறை பொது இடம். உங்கள் மரியாதையை ஏன் நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள்? விளையாட்டை எல்லாம் வாத்தியாருக்கு அனுப்பும் தனி மின்னஞ்சல்களில் வைத்துக் கொள்ளுங்கள்! புரிகிறதா?
    ////////////////////////////////////
    நானே ஒரு சின்னப்பொடியந்தான். எனக்கெதுக்கு மரியாதை. நான் சும்மா ஏதாவது ஒளருவேன். ஆனா மத்தவங்க திட்டினால் அதை நான் ரசிப்பேன். எனக்கு நன்மைகள் செய்ய முருகப்பெருமான் இருக்கிறார். ஆனால் என்னை திட்டுவது நண்பர்களால் அதாவது அன்பு சகோதர சகோதரிகளால் மட்டுமே முடியும். பொது வாழ்விலும் சரி, யார் என்னை தூற்றினாலும் நான் அவர்களை போற்றுவேன். இது எனது வீக்னெஸ்/////

    :-(((((

    ReplyDelete
  67. ///Blogger முருகன் அடிமை said...
    ஜெகன்னத ஹோராங்கிற மென்பொருளைக் கொண்டு கணிக்கையில் M என்ற இனிசியல் மட்டும் (மாந்தி) புதிதாக ஒரு சக்கரத்தில் தெரிகிறதே?/////

    உற்றுப் பார்க்காதீர்கள். மேலும் பலசக்கரங்கள் தெரியும்:-))))))

    ReplyDelete
  68. Blogger Eagle said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    கடந்த 18-08-2009 அன்று,
    "அடுத்த பாடம் அதுதான். ஆனால் அது மேல் நிலைப்பாடம். மின்னஞ்சல் வழியாக வரும். எப்போது வரும்?
    எழுதி, தட்டச்சி, பிழை நீக்கிப்பதிய வேண்டாமா?
    நாளை உதயத்தில் வரும்
    பொறுத்திருந்து படியுங்கள்.
    அன்புடன்
    வாத்தியார்"
    1. ............ ............. ...................
    சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே!
    சம்மதம்தானா ............ ............. ...................
    2. ............ ............. ...................
    வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா! மார்பு துடிக்குதடி!
    ............ ............. ................... ............ ............. ...................
    இதில் எந்த பாடலை உங்கள் மாணவர்கள் பாடலாம் சொல்லுங்கள் வாத்தியார் ஐயா! சக மாணவர்களும் சொல்லலாம்!
    ஹீ! ஹீ!! ஹீ!!!/////

    காலம் ஒருநாள் மாறும்
    நம்கவலைகள் யாவும் தீரும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com