14.8.09

வாத்தியாருக்கு வந்த கடிதம்!

வாத்தியாருக்கு வந்த கடிதம். அப்படியே கொடுத்துள்ளேன். படித்து முடிந்தவர்கள் ஆவன செய்யுங்கள்!






////மதிப்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு,

நம் சக பதிவர்--சிங்கை நாதன் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான சில பதிவர்களின் இடுகைகளின் லிங்க்கைக் கீழே கொடுத்துள்ளேன்.

http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html

http://www.narsim.in/2009/08/blog-post_13.html

http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

http://www.maraneri.com/2009/08/blog-post.html

http://www.nilaraseeganonline.com/2009/08/blog-post_13.html

http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html

http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html


படித்தவுடன் தங்களின் 'வகுப்பறை' மற்றும் 'பல்சுவை' பதிவுகளில் சக கண்மணிகளுக்கும்,வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இடுகை இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் இடுகை பெரும்பான்மையோருக்குப் போய்ச் சேரும்.

மேலும் விவாரிக்க நேரம் போதவில்லை. மன்னியுங்கள்.

உங்கள் அன்புள்ள
திண்டுக்கல் சர்தார்.
sks_anu@hotmail.com //////
=====================================================
வாழ்க வளமுடன்!

15 comments:

  1. Sir,

    if you request your students/followers/readers will be helpful to Senthilnathan. pls write to your students/followers/readers in your style and also you send email to your advanced study students.

    -Victor

    ReplyDelete
  2. விரைவில் நலமடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. ம்!

    இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

    இந்த வலையிலேயே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.

    - இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.

    -Suba

    ReplyDelete
  4. //Suba said...
    ம்!

    இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

    இந்த வலையிலேயே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!//...


    என்ன செய்வது?அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை.யதார்த்தம் என ஒன்றிருக்கிறது அல்லவா!

    என் பங்கிற்கு இரண்டாயிரம் சிங்கப்பூர் வெள்ளி-இந்திய ரூபாய்க் கணக்கில் சுமார் அறுபதாயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன்.என் சார்பில் என் மகன் கொடுத்தான்.

    ReplyDelete
  5. Is there any way to help from my side. Please let me know, if you arrange for any fund to contribute.

    ReplyDelete
  6. நன்றி ஐயா,

    திண்டுக்கல் சர்தார் தாங்கள் செய்து இருப்பது மிகப்பெரிய உதவி, நன்றி!

    சுபா இங்கு பின்னூட்டம் போடவில்லை என்பதால் நம் வலைபதிவு நண்பர்களுக்கு மனிதநேயம் இல்லை என்று அனைவர் பதிவிலும் குறை கூறுவதை நிறுத்துங்கள், தெரிந்த பலர் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்,பின்னூட்டம் போட்டுதான் மனிதநேயத்தை நிருப்பிக்கனும் என்று அவசியம் இல்லை!

    ReplyDelete
  7. Congrates திண்டுக்கல் சர்தார்.


    தம்பி குசும்பா, குறைசொல்வதற்காக அனைவர் பதிவிலும் அதை நான் போடவில்லை.
    பின்னூட்டம் வழியே தெரியாத நண்பர்கள் தெரிந்து கொள்ளவும், தெரிந்தும் தெரியாதவர்போலிருக்கும்
    சில கு........ தெரிந்து கொள்ளவும் அனைவர் பதிவிலும் அதை நான் எழுதினேன். இன்னும் உமக்கு புரியவில்லை என்றால் அந்த ஆண்டவன்தான் / இங்குள்ள வாத்தியார்தான் உமக்கு புரியவைக்கவேண்டும்.

    ReplyDelete
  8. சுபா..

    பாலோயர்ஸ் என்பது, உங்களது டேஷ்போர்டில் பதிவு தெரியும் அவ்வளவு தான். அது தவிர, இந்த விஷயம் இரண்டு நாட்களாக அனைத்து திரட்டிகளிலும் வருகிறது, மேலும் இன்றைக்கு விடுமுறை நாள் வேறு.

    பின்னூட்டம் போட்டால்தான் நமது பங்களிப்பை செலுத்தியதாக அர்த்தம் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது.

    வளரவும். அது சரி, நீங்கள் என்ன வகையில் உங்கள் பங்களிப்பை செலுத்தினீர்கள் என்று திண்டுக்கல் சர்தார் அய்யா போல வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள இயலுமா ?

    ReplyDelete
  9. வீண் சர்ச்சைகள் வேண்டாம்..!

    நம்மால் முடிந்ததை நாம் தொடர்ந்து செய்வோம்..

    ReplyDelete
  10. //பின்னூட்டம் வழியே தெரியாத நண்பர்கள் தெரிந்து கொள்ளவும், தெரிந்தும் தெரியாதவர்போலிருக்கும்
    சில கு........ தெரிந்து கொள்ளவும் அனைவர் பதிவிலும் அதை நான் எழுதினேன்.//

    பின்னூட்டம் வழியே தெரியாதவர்கள் தெரிஞ்சுக்க வைக்கனும் என்றால் ஏன் இரண்டே இரண்டு பேர்தான் மனிதநேயத்துடன் பின்னூட்டம் போட்டு இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும், மனித நேயத்துடன் வாத்தியார் ஐயா போட்ட பதிவு என்று சொல்லி இருந்தாலே போதுமே!

    //மனித நேயத்துடன் பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!//

    நான் தெளிவாக புரிந்துதான் பேசுகிறேன்,தாங்கள் எழுதிய பின்னூட்டத்தை திரும்ப படிச்சு பார்க்கவும்! நான் என்ன சொல்கிறேன் என்று புரியவில்லை என்றாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை, மற்றவர்களை குறை கூறுவது போல் பேசாமல் இருங்கள் அதுபோதும்.

    ReplyDelete
  11. செத்தழல் ரவி,

    என் பங்கிற்கு 300 சிங்கப்பூர் வெள்ளி-இந்திய ரூபாய்க் கணக்கில் சுமார் பத்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன்.என் சார்பில் என் கணவர் கொடுத்தார். எவ்வளவு கொடுத்தோம் என்பது முக்கியமில்லை. இந்தமாதிரி நேரத்தில் கொடுக்கவேண்டும் / உதவவேண்டும் என்ற மனிதநேயம்தான் முக்கியம்.


    குறிப்பு : அடுத்தவர் எவ்வளவு செலுத்தினார் என கேட்டுக்கொண்டிருக்காமல் நம்மால் செய்ய முடிந்ததை செய்தால் பெரிய உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  12. For those who want to contribute in hundreds, if not in thousnads, in Indian Rupees, is there any bank account number to which we can deposit from our towns via core banking? ICICI OR SBI a/c will be ideal. Will any one enlighten me?
    KMR.KRISHNAN(S.No.,158)

    ReplyDelete
  13. /////////Blogger Suba said...
    ம்! இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?
    இந்த வலையிலேயே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.
    - இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்./////

    சகோதரி, உங்கள் கருத்துக்களை மட்டும் எழுதுங்கள். சக மாணவர்களை விமர்சிக்க வேண்டாம்.

    மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமென்றான் முண்டாசுக் கவிஞன்.
    மாதவம் செய்து பிறந்த பிறப்பில் எதற்கு இத்தனை கோபம்?
    பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்.

    ”பொருள்கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை”
    என்று அற்புதமாகச் சொன்னார் ஒரு திரைக் கவிஞர்.

    வகுப்பறையில் வேலை கிடைக்காதவர்கள், வேலை சரியாக அமையாதவர்கள், வேலையில் இருந்து லே ஆஃப் கொடுக்கப்பட்டவர்கள் என்று பலவிதமான அன்பர்கள் இருக்கிறார்கள். அததனை பேர்களுடைய பொருளாதார நிலைமையும் ஒன்றல்ல. ஆகவே முடிந்தவர்கள் உதவுவார்கள். முடியாதவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

    வீண் சர்ச்சைகள். வாதங்கள் வேண்டாம்!
    வகுப்பறை அதற்கு அப்பாற்பட்ட இடம். அதை அறிக!

    ReplyDelete
  14. வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும்.
    வழங்குபவர்கள் வழங்கட்டும்.
    எதற்கு பிரட்சனை.
    வீண்விவாதங்கள் தேவையற்றது

    ReplyDelete
  15. பிரார்த்தனையின் பலன் மிகப்பெரியது. பிரார்த்திப்போம். நலம் பெறுவார் செந்தில்நாதன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com