Lesson No.215. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா?
லக்கினம், ஒன்பது கோள்கள், பன்னிரெண்டு ராசிகள் ஆகியவற்றை வைத்து எத்தனை விதமான ஜாதகங்களை எழுதலாம்?
1+9 = 10 to the power of 12 = One followed by 12 zeros = 1,00,000,00,00,000 = ஒரு லட்சம் கோடி
ஜாதகங்களை எழுதலாம். இன்றைக்கு உலக ஜனத்தொகை வெறும் எழுநூறு கோடிகள்
மட்டும்தான் லக்கினம் என்பது 2 மணி நேரக் கணக்கு, 4 நிமிடக் கணக்கு நமக்கு வேண்டும்.
ஆகவே அதை 30 பாகைகளுக்காக மீண்டும் 30 ஆல் பெருக்கினால் என்ன வரும்? தலை சுற்றல் வரும்! ஜோதிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
இதைப்போன்று இன்னும் பல ஆச்சர்யமான உதாரணங்கள் உள்ளன. அதற்கான பாடம்
வரும்போது அவற்றைச் சொல்கிறேன்.
அதைப்போன்றே ஒவ்வொருவரின் லக்கினத்தை வைத்தும், அவரவருடைய ஜாதகத்தில் கோள்களின் அமைப்பை வைத்தும் ஜோதிடப் பலன்களும் பல்லாயிரக் கணக்கில் மாறுபடும்.
நானும் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று ஒரு ஜோதிட நூலை வாங்கிக் கொண்டுபோன என் நண்பர் ஒருவர், ஒரு நாள் குஷியாக வந்து என்னிடம் சொன்னார்.
“என் ஜாதகத்தில் வில்லத்தனத்திற்கும், வில்லங்கத்திற்கும் வழியே இல்லை!”
“எப்படிச் சொல்கிறாய்?” இது நான்.
“ஆறாம் வீடும் 12ஆம் வீடும் காலியாக இருக்கிறது! எந்தக் கருமாந்திரம் பிடித்த கிரகமும்
இல்லை. முக்கியமாக சனி இல்லை. ஆகவே நான் தப்பித்து விட்டேன்” என்றார்.
நான் ஒரு புன்னகையோடு விட்டுவிட்டேன். அவருடைய சந்தோஷத்தை எதற்காகக்
கெடுக்க வேண்டும்? என்று ஒன்றும் சொல்லவில்லை!
--------------------------------------------------------
திருப்பூரில் உள்ள தொழிலதிபர்களின் சட்டைப் பை காலியாகத்தான் இருக்கும். எதையும்
அவர்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லா வேலைகளுக்கும் உடன் எடுபிடிகள்.
வாகனத்தை ஓட்ட ஓட்டுனர். வரும் தொலைபேசி அழைப்பை வடிகட்டிக் கொடுக்க,
கொஞ்சும் குரல் மங்கைகள். கைபேசிகள், Hand Bag, சிகரெட் பாக்கெட், லைட்டரை,
வைத்துக்கொள்ள உடன் ஒரு வேலையாள் என்று அம்சமாக இருப்பார்கள். சட்டைப்
பையைப் பார்த்துவிட்டு மேட்டர் ஓவர் என்று நினைக்க முடியுமா? பின்பலத்தைப்
பார்க்க வேண்டாமா?
அதைப்போல ஜாதகத்தில் காலியாக இருக்கும் கட்டங்களைப் பார்த்துவிட்டு மேட்டர்
ஓவர் என்று நினைக்கலாமா? திருப்பூர் தொழிலதிபருக்கே அத்தனை பின்பலம்
இருக்கும் போது கிரகங்களுக்கு எத்தனையோ கோடி மடங்கு பின்பலம் இருக்காதா?
முகேஷ் அம்பானி ”சரக்கு” வேண்டுமென்றால் வாங்குவதற்கு அவரா போவார்? கண் பார்வையிலேயே எல்லாம் நடக்காதா?
அதுபோலத்தான் கிரகங்களுக்கும் பல விஷயங்கள் பார்வையிலேயே நடக்கும்.
ஓட்டுனர் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும், வாகனம் எவ்வளவுதான்
அருமையாக இருந்தாலும், விபத்து நேர வேண்டுமென்று இருந்தால் நடந்தே தீரும்.
நாம் நன்றாக ஓட்டினாலும் எதிரில் வருபவன் ஒரு சாத்து சாத்தினால் என்ன செய்வது?
அதுவும், நெடுஞ்சாலையில் படு வேகமாக வரும் டிப்பர் லாரிக்காரன் சாத்தினால்
என்ன ஆகும்?
அதுபோல ஒரு கிரகம் எவ்வளவுதான் வலுவாக இருந்தாலும், வேளை வந்தால்
இன்னொரு கிரகம் உள்ளே நுழைந்து நம்மை முடக்கிப் போட்டுவிட்டுப் போய் விடும்.
ஒரு விதிமுறையை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது!
அலச வேண்டும்!
ஏழிற்கு உரிய கிரகம் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் கலப்புத்
திருமணம் செய்துகொள்வான் என்பது ஜோதிட விதி.
உடனே, ”மாப்ளே, உனக்குக் கலப்புத் திருமணம்டா, பொள்ளாச்சியிலே பொண்ணு
பார்க்காதேடா, கூட ஆணி பிடுங்குகிற பொண்ணுங்கள்ள (அதாவது உடன் வேலை
பார்க்கும் பெண்களில்) திருவரங்கம் அல்லது மைலாப்பூர் டிக்கட்டா ஒன்னு
செட்டாகுமான்னு பாருடா. வாழ்க்கை கலர்ஃபுல்லா இருக்கும்டான்னு” கூட
இருக்கிறவன் சொன்னால் அவனை என்ன செய்வது?
முதலில் ஜாதகனுக்கு உரிய வயசில் திருமணம் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.
ஏழிற்கு உரியவன் 12ல் இருந்து தொலைக்கட்டும். அதுவா முக்கியம்?
7ல் ராகுவும், சனியும் பாய் விரித்துப் படுத்திருந்தால் என்ன செய்வது? அதோடு
ஜாதகத்தில் சுக்கிரனும் அடிபட்டு கை கால் உடைந்து மருத்துவ மனையில்
படுத்திருந்தால் என்ன செய்வது? (அதாவது சுக்கிரன் நீசமாகி இருந்தால் என்ன செய்வது?) திருமணஞ்சேரி, கூடுவாஞ்சேரி என்று பல ஊர்க் கோவில்களுக்கு ஜாதகன் காவடி எடுக்க வேண்டியதிருக்கும். அப்படி எடுத்தாலும் கணிசமான தொகை காலியாகுமே தவிர
ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் ஆகாது!
உரிய காலத்தில் அல்லவா திருமணம் ஆக வேண்டும்?
ஆசாமி அஜீத்குமார் போல இருந்தாலும் 50 வயதில் திருமணம் செய்து கொண்டு
என்ன பயன்?
பெண் ஐஷ்வர்யா பச்சனைப்போல அம்சமாக இருந்தாலும் உரிய காலத்தில் அல்லவா
அவளுக்கு மண வாழ்க்கை கூடி வரவேண்டும். 21 to 32ற்குள் நடக்கவேண்டாமா?
பெண்ணிற்கான (awarded) வசந்த காலம் 36 ஆண்டுகள். ஒரு பெண் 12 வயதில்
பூப்படைகிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள், 48 வயதில் அவளுக்கு
(90% பெண்களுக்கு) வசந்த காலம் முடிந்து விடும். அதற்குப் பிறகு வெய்யில்
(Summer Period) காலம். அப்போது அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதால்
என்ன பயன்?
ஆகவே ஒரு விதியை வைத்து மட்டும் எதையும் முடிவு செய்யாதீர்கள்.
ஒரு வீட்டிற்கு 3 செயல்பாடுகள். 12 வீடுகளுக்கும் சேர்த்து மொத்தம் 36 செயல்
பாடுகள். இந்த 36ல் பாதிதான் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். எனக்கு
25 கிடைக்கும் உங்களுக்கு 10தான் கிடைக்கும் என்றெல்லாம் கிடையாது.
எல்லோருக்கும் சம எண்ணிக்கையில்தான் கிடைக்கும். இல்லையென்றால்
எல்லோருக்கும் பொதுவான மதிப்பெண் மட்டும் 337 ஆக இருக்க முடியும்?
அந்த 36ல் உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? என்ன கிடைக்கவில்லை என்பதைப்
பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஜாதகத்தை நன்றாக அலச வேண்டும்.
(தொடர்ந்து அலசுவோம்)
வாழ்க வளமுடன்!
நன்றாகச்சொன்னிர்கள் அய்யா!!!
ReplyDeleteஒரு லட்சம் கோடி மாறுதல்களில் மனிதன் பிறப்பது எப்போது???
அதற்குள் கலி காலியாகிவிடும்.
kmr.krishnan
http://parppu.blogspot.com
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteநன்றாகச்சொன்னிர்கள் அய்யா!!!
ஒரு லட்சம் கோடி மாறுதல்களில் மனிதன் பிறப்பது எப்போது???
அதற்குள் கலி காலியாகிவிடும்.
kmr.krishnan
http://parppu.blogspot.com/////
ஆமாம் கலியுகம் முடிந்து விடும்!
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சார்!
ஒவ்வோரு கதையும் அதற்கு தங்களின் ஜோதிட விளக்கமும் அருமை.
ReplyDeleteதொடருங்கள்....
தொடர்கின்றோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
எனக்கும் 6ல், 12ல் எந்த கிரகமும் இல்லை. அதற்காக சந்தோசமாக துள்ளி குதிக்க முடியாதுதான். இந்த இரு ஸ்தானாதிபதிகளும் (சனி/சூரியன்) ஒரே வீட்டில், 9ல் இருக்கிறார்கள். சற்று ஏடாகூடமான நிலைதான். விபரீத ராஜயோகம். சற்று விபரீதமான ராஜயோகம்தான். என் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
ReplyDelete////Blogger வேலன். said...
ReplyDeleteஒவ்வோரு கதையும் அதற்கு தங்களின் ஜோதிட விளக்கமும் அருமை.
தொடருங்கள்....
தொடர்கின்றோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்./////
நன்றி வேலன்!
////Blogger ananth said...
ReplyDeleteஎனக்கும் 6ல், 12ல் எந்த கிரகமும் இல்லை. அதற்காக சந்தோசமாக துள்ளி குதிக்க முடியாதுதான். இந்த இரு ஸ்தானாதிபதிகளும் (சனி/சூரியன்) ஒரே வீட்டில், 9ல் இருக்கிறார்கள். சற்று ஏடாகூடமான நிலைதான். விபரீத ராஜயோகம். சற்று விபரீதமான ராஜயோகம்தான். என் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
உங்கள் அனுபவங்களை அடிக்கடி சொலுங்கள் சொல்லுங்கள் ஆனந்த்! நன்றி!
sir,
ReplyDeleteenakku 6 and 8 houses kaali, but 12 house filled with 2 subha graha....going through dasa for the 12th house....
-Shankar
Ayya........
ReplyDelete6th housil Chandran........
What will be the benefit but 6th lord is Aatchi(bhutan).......
அலசுவோம் அலசுவோம் .. ஏனென்றால் ராகு பாய் போட்டு படுத்திருக்கிறார் . அனால் ஏதோ சுக்கிரன் உச்சம் அடைந்திருக்கிறார் நவாம்சத்தில். அய்யா இன்னும் 125 பேர் தான் email அனுப்பி இருக்கிறார்களா.. ஆனால் 400 ஜ விரவாக அடைந்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு லக்னதிபதி புதன் 6ல் சூரியனுன் சேர்ந்து உள்ளார் என்ன செய்ய
ReplyDeleteஅருமையான விளக்கம் அய்யா.
ReplyDeleteநம் விதி நம்மோடு.மாற்ற யாராலும் முடியாது,
இறைவனை தவிற
Dear Sir,
ReplyDeleteYour explanation is excellant.
we have to live the life as its come everyday.vizhigal erundhal podharu, vizhipodu erukka vendrum.
Dear Sir
ReplyDeleteCan u please confirm , whether you have added my name in your list.
One request,if possible, kindly give the list of users who are registered for advanced lessons. So that everyone will be clear, whether their name is available in the list or not
ஐ! ஜாலி,என் பெயரும்,நான் வைத்த படமும் வகுப்பு அறையில் வந்திடுச்சு!ஐயா என் மின் அஞ்சல் தங்களிடம் உள்ளதா என தயவு செய்து கூறவும்.நன்றி
ReplyDeleteSir, I saw this matter in one site:
ReplyDelete"PLANETS AND EDUCATION
-----------------------------------
SURYA: POLITICAL SCIENCE. SOCIAL SCIENCE
CHANDRA: ARTS. PSYCOLOGY, CHEMISTRY, HOTEL MANAGEMENT
KUJA: ENGINEERING, PHYSICS
BUDHA: MATHS, STATISTICS, DRAWING
GURU: AUDIT AND ACCOUNTS, PHILOSOPHY
SUKRA:COMMERCE,MARKETING,HOUSEKEEP
SANI: MINING
RAHU: CHEMICAL, NUCLEAR PHYSICS
KETHU: MEDICAL,THEOLOGY,ASTROLOGY, LAW
Ayya! I am Kataka lagnam Kataka Rasi.Chandran is both Lagna lord and Rasi lord. Chandra in Kataka.
I studied and passed BSc., Chemistry and MA.,(PSYCHOLOGY.)
HOW IS IT, SIR?
//முகேஷ் அம்பானி ”சரக்கு” வேண்டுமென்றால் வாங்குவதற்கு அவரா போவார்? கண் பார்வையிலேயே எல்லாம் நடக்காதா?
ReplyDeleteஅதுபோலத்தான் கிரகங்களுக்கும் பல விஷயங்கள் பார்வையிலேயே நடக்கும்.
//
சூப்பருருருருஉஉஉஉ
Dear Sir,
ReplyDeleteDid you get my details.Plz confirm.
Endrum anbudan,
Ungal Maanavi
////Blogger hotcat said...
ReplyDeletesir,
enakku 6 and 8 houses kaali, but 12 house filled with 2 subha graha....going through dasa for the 12th house....
-Shankar///
”என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் கிரகங்கள் மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!”
தலைவன் என்பதற்கு இறைவன் என்று பொருள் கொள்ளுங்கள் சங்கர்!
////Blogger Bala said...
ReplyDeleteAyya........
6th housil Chandran........
What will be the benefit but 6th lord is Aatchi(bhutan).......////
அண்ணாசாலையில் நிற்கிறான் என்று சொன்னால் போதுமா?
நிற்பவன் எந்த வீட்டைச் சேர்ந்தவன். அவன் கையில் என்ன வைத்திருக்கிறான் (சுயவர்க்கப் பரல்கள்), அவனைக் குறிவைப்பவன் யார் என்று எல்லாம் தெரிய வேண்டாமா?
215 பாடங்களையும் முதலில் படியுங்கள் பாலா! உங்களுக்கே உங்கள் ஜாதகத்தில் உள்ள பல விஷயங்கள் தெரிய வரும்! படிப்பதற்கு நேரமில்லை என்றால் உங்கள் ஊரில் உள்ள நல்ல ஜோதிடரைப் பார்த்து எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வைக் கேளுங்கள். மேட்டர் ஓவராகிவிடும்!
/////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஅலசுவோம் அலசுவோம் .. ஏனென்றால் ராகு பாய் போட்டு படுத்திருக்கிறார் . அனால் ஏதோ சுக்கிரன் உச்சம் அடைந்திருக்கிறார் நவாம்சத்தில். அய்யா இன்னும் 125 பேர் தான் email அனுப்பி இருக்கிறார்களா.. ஆனால் 400 ஜ விரைவாக அடைந்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.////
எல்லாம் உங்களைப் போன்ற அன்புக் கண்மனிகளால்தான். என் கையில் என்ன இருக்கிறது?
////Blogger dbalaas said...
ReplyDeleteஎனக்கு லக்னதிபதி புதன் 6ல் சூரியனுன் சேர்ந்து உள்ளார் என்ன செய்ய?//////
ஒன்றும் செய்ய வேண்டாம். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கவலையை விடுங்கள். மற்ற கிரகங்கள் கை கொடுக்க வரும். ஏனென்றால் மன்மோகனுக்கும் 337தான். நம்ம ஊர்
டின் மோகனுக்கும் 337தான்! அப்பனுக்கும் 337தான். ஆண்டி சுப்பனுக்கும் 337தான்!
/////Blogger thirunarayanan said...
ReplyDeleteஅருமையான விளக்கம் அய்யா.
நம் விதி நம்மோடு.மாற்ற யாராலும் முடியாது,
இறைவனைத் தவிர!//////
நன்றி திருநாராயணன்!
////Blogger arumuganainar said...
ReplyDeleteDear Sir,
Your explanation is excellant.
we have to live the life as its come everyday.vizhigal erundhal podharu, vizhipodu erukka vendrum.////
நன்றாகச் சொன்னீர்கள் நைனா(ர்)
////Blogger chennainewfriend said...
ReplyDeleteDear Sir
Can u please confirm , whether you have added my name in your list.
One request,if possible, kindly give the list of users who are registered for advanced lessons. So that everyone will be clear, whether their name is available in the list or not////
உங்கள் பெயர் சேர்ந்துவிட்டது. விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி கொடுத்திருக்கிறேன்.
நிறைய குத்து விளக்குகள் லிஸ்ட்டில் உள்ளன. ஆகவே வெளியிடுவதற்கில்லை!
/////Blogger Ramesh said...
ReplyDeleteஐ! ஜாலி,என் பெயரும்,நான் வைத்த படமும் வகுப்பு அறையில் வந்திடுச்சு!ஐயா என் மின் அஞ்சல் தங்களிடம் உள்ளதா என தயவு செய்து கூறவும்.நன்றி////
நீங்கள் அனுப்பாமல் அது எப்படி இருக்கும்? முகப்பில் உள்ள உங்கள் கவனத்திற்கு எனும் அறிவிப்பைப் படியுங்கள்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteSir, I saw this matter in one site:
"PLANETS AND EDUCATION
-----------------------------------
SURYA: POLITICAL SCIENCE. SOCIAL SCIENCE
CHANDRA: ARTS. PSYCOLOGY, CHEMISTRY, HOTEL MANAGEMENT
KUJA: ENGINEERING, PHYSICS
BUDHA: MATHS, STATISTICS, DRAWING
GURU: AUDIT AND ACCOUNTS, PHILOSOPHY
SUKRA:COMMERCE,MARKETING,HOUSEKEEP
SANI: MINING
RAHU: CHEMICAL, NUCLEAR PHYSICS
KETHU: MEDICAL,THEOLOGY,ASTROLOGY, LAW
Ayya! I am Kataka lagnam Kataka Rasi.Chandran is both Lagna lord and Rasi lord. Chandra in Kataka.
I studied and passed BSc., Chemistry and MA.,(PSYCHOLOGY.)
HOW IS IT, SIR?/////
உங்கள் ஜாதக அமைப்பிற்கான படிப்பைத்தான் படிதுள்ளீர்கள் அன்பரே!
/////Blogger புருனோ Bruno said...
ReplyDelete//முகேஷ் அம்பானி ”சரக்கு” வேண்டுமென்றால் வாங்குவதற்கு அவரா போவார்? கண் பார்வையிலேயே எல்லாம் நடக்காதா?
அதுபோலத்தான் கிரகங்களுக்கும் பல விஷயங்கள் பார்வையிலேயே நடக்கும்.
//
சூப்பருருருருஉஉஉஉ////
”சூப்பர் சூப்பர்தான்
டாக்டர் டாக்டர்தான்”
கலக்கல் வரிகள் உங்கள் கண்களுக்குத் தப்புவதில்லை டாக்டர். உங்கள் பணிகளுக்கு நடுவில் வந்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி டாக்டர்!
/////Blogger உங்கள் மாணவி said...
ReplyDeleteDear Sir,
Did you get my details.Plz confirm.
Endrum anbudan,
Ungal Maanavi/////
வந்துவிட்டது அம்மணி! (அம்மணி means சகோதரி!)
SP.VR. SUBBIAH said...
ReplyDelete/////Blogger Ramesh said...
ஐ! ஜாலி,என் பெயரும்,நான் வைத்த படமும் வகுப்பு அறையில் வந்திடுச்சு!ஐயா என் மின் அஞ்சல் தங்களிடம் உள்ளதா என தயவு செய்து கூறவும்.நன்றி////
நீங்கள் அனுப்பாமல் அது எப்படி இருக்கும்? முகப்பில் உள்ள உங்கள் கவனத்திற்கு எனும் அறிவிப்பைப் படியுங்கள்!
Monday, July 20, 2009 3:18:00 PM
அனுப்பி உள்ளேன் ஐயா,இருந்தாலும் தங்களிடம் confirm செய்து கொண்டாள் ஒரு திருப்தி
Dear Sir,
ReplyDeleteVery nice lesson, those who are getting confused over the empty house will get clear now.
But one things, you said the world population is just only 700 core, but who will account for the died persons so far in this kali yuga, so, we don't know how faraway from the 1lakh crore no.
recently i read an article i.e the kali yuga is near to end by around 2015-25 and as per the ancient calender in American natives, there calender will end by 2012.
is this is co-incidence or just hype like July 22 Tsunami associated with lunar ecslibe
AYYA VANAKKAM,NAN INTHA VAGUPPIL PUTHIYAVAN.THARPOTHUTHAN NAN JATHAGATHAI PADITHU VARUGIREN.UNGAL AARUMAI.YEN PEYAR PADHU AGI VITTATHA.ARIYA AAVALAI ULLEN.
ReplyDeleteMEENDUM VANAKKAM
படிச்சாச்சு. ஓட்டும் போட்டாச்சு சார்
ReplyDeleteDear sir,
ReplyDeleteWhile reading this post , Some of important points noted in the past 210 lessons are comming to our mind.
Nice abreast information.
Even i started to give lot of points & advices to my wife.
Regards
NSK
Ayya.........
ReplyDeleteThangal vilakkam anaithum super...............
Thaangal neenda ayulai pera ALMIGHTYai prarthikiren...........
Dear Master Blaster,
ReplyDeleteYou, always been saying that 337 comes to all. But i also know that it will compensate with in 12 houses to get 337.For ex you take begars begging any where in india with physical defects such as visually challenged,with one hand or one leg etc. So this 337 rule applies to everyperson means atleast one house could be higher in value to get 337 then why they are suffering what is their fate. Pls make a brief explanation bec this is my longlasting findings in my life.
Thanks & Regards
Big B
////Blogger Ramesh said...
ReplyDeleteஅனுப்பி உள்ளேன் ஐயா,இருந்தாலும் தங்களிடம் confirm செய்து கொண்டாள் ஒரு திருப்தி////
நீங்கள் திருப்தியானதில் எனக்கும் மகிழ்ச்சியே!
////Blogger Ram said...
ReplyDeleteDear Sir,
Very nice lesson, those who are getting confused over the empty house will get clear now.
But one things, you said the world population is just only 700 core, but who will account for the died persons so far in this kali yuga, so, we don't know how faraway from the 1lakh crore no.
recently i read an article i.e the kali yuga is near to end by around 2015-25 and as per the ancient calender in American natives, there calender will end by 2012.
is this is co-incidence or just hype like July 22 Tsunami associated with lunar ecslibe////
உலகம் ஒரே நாளில் உருவாகவில்லை. அதுபோல ஒரே நாளில் அழிவதற்கும் வாய்ப்பில்லை!
இறைவன் கருணை மிக்கவன். கவலை எதற்கு?
////Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
ReplyDeleteAYYA VANAKKAM,NAN INTHA VAGUPPIL PUTHIYAVAN.THARPOTHUTHAN NAN JATHAGATHAI PADITHU VARUGIREN.UNGAL AARUMAI.YEN PEYAR PADHU AGI VITTATHA.ARIYA AAVALAI ULLEN.
MEENDUM VANAKKAM////
நமஸ்காரமண்டி. மீரு ஏமி பாதபடக்கண்டி. அன்னி பாடாலு மீக்கு தப்பக்குண்டா ஒஸ்ததண்டி!
சால சந்தோஷங்கா உன்னதண்டி!
/////Blogger chaks said...
ReplyDeleteபடிச்சாச்சு. ஓட்டும் போட்டாச்சு சார்//////
நன்றி சக்ஸ்!
/////Blogger NSK said...
ReplyDeleteDear sir,
While reading this post , Some of important points noted in the past 210 lessons are comming to our mind.
Nice abreast information.
Even i started to give lot of points & advices to my wife.
Regards
NSK/////
நீங்கள் பாடங்களை ஆழமாகப் (ஆழ்ந்து) படித்துள்ளது தெரியவருகிறது.
மற்ற கண்மணிகளும் இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே!
/////Blogger Bala said...
ReplyDeleteAyya.........
Thangal vilakkam anaithum super...............
Thaangal neenda ayulai pera ALMIGHTYai prarthikiren.........../////
நாம் வேண்டுவதற்காக சனீஷ்வரன் விட்டுவைப்பானா சுவாமி?
/////Blogger Big B said...
ReplyDeleteDear Master Blaster,
You, always been saying that 337 comes to all. But i also know that it will compensate with in 12 houses to get 337.For ex you take begars begging any where in india with physical defects such as visually challenged,with one hand or one leg etc. So this 337 rule applies to everyperson means atleast one house could be higher in value to get 337 then why they are suffering what is their fate. Pls make a brief explanation bec this is my longlasting findings in my life.
Thanks & Regards
Big B/////
என்ன ராஜா, என்னை Master Blaster என்கிறீர்கள்?
உங்களை Big B என்கிறீர்கள்?
ஓவராகத் தெரியவில்லையா ராஜா?
சச்சின் டெண்டூல்கர் ஒருவர்தான் Master Blaster!
அமிதாப் பச்சன் ஒருவர்தான் Big B!
சிவாஜி கணேசன் ஒருவர்தான் நடிகர் திலகம்!
நான் நடிகர் திலகம் என்று என்னை அழைத்துக் கொண்டால் நன்றாகவா இருக்கும்?
நீங்கள் வேண்டுமென்றால் Small B என்று வைத்துக்கொள்ளூங்கள்! Super ஆக இருக்கும்!
மேலோட்டமாக பார்த்து சொல்பவர்களிடம் இருந்து தெரிந்தி கொள்பவர்களுக்கு இது நல்ல பாடம். அருமையாக எழுதியுள்ளீர்கள், நகைச்சுவை உடன்!
ReplyDelete///Blogger Dinesh babu said...
ReplyDeleteமேலோட்டமாக பார்த்து சொல்பவர்களிடம் இருந்து தெரிந்தி கொள்பவர்களுக்கு இது நல்ல பாடம். அருமையாக எழுதியுள்ளீர்கள், நகைச்சுவை உடன்!////
ஜோதிடம் மருந்து. அதை நகைச்சுவை எனும் தேன் கலந்து கொடுத்தால்தான் வகுப்பறைக்கு வரும் குழுந்தைகள் சாப்பிடும். அதற்காகத்தான் கதைகள், நகைச்சுவையான நடை எல்லாம்! வெறும் ஜோதிடத்தைப் படித்தால் மண்டை காய்ந்துவிடும். வேண்டுமென்றால் தமிழ் ஜோதிட நூல் ஒன்றை வாங்கிப்படித்துப் பாருங்கள் நண்பரே!
This comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு ஜாதகப்படி அகண்ட சாம்ராஜ்ய யோகம் மற்றும் கஜகேசரி யோகம் இருக்கிறது. அதன் பலன்கள் என்ன?
ReplyDelete////Blogger naan said...
ReplyDeleteஎனக்கு ஜாதகப்படி அகண்ட சாம்ராஜ்ய யோகம் மற்றும் கஜகேசரி யோகம் இருக்கிறது. அதன் பலன்கள் என்ன?/////
அகண்ட சாம்ராஜ்யமா? என்ன சாமி பயமுறுத்துகிறீர்?
பழநி அப்பனைத்தான் கேட்க வேண்டும்!
அவருக்கு மெயில் ஐ.டி இல்லை; செல்போனும் இல்லை!
அதுதான் பிரச்சினை!
வணக்கம் அய்யா,
ReplyDeleteசரியாக சொன்னால், ரொம்ப நாட்களாக உங்கள் பதிவிற்கு காத்துக்கொண்டு இருந்தேன்.
உங்கள் மேல் நிலை வகுப்பிற்காக காத்து கொண்டு இருக்கிறேன்
மிக்க நன்றி,
சென்னை ஸ்ரீதர்
////Blogger Sridhar of Chennai said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
சரியாக சொன்னால், ரொம்ப நாட்களாக உங்கள் பதிவிற்கு காத்துக்கொண்டு இருந்தேன்.
உங்கள் மேல் நிலை வகுப்பிற்காக காத்து கொண்டு இருக்கிறேன்
மிக்க நன்றி,
சென்னை ஸ்ரீதர்////
ரொம்ப நாட்களாகவா..........? என்ன சாமி சொல்கிறீர்கள்?
இந்த மாதத்தில் 21 தேதிகளுக்குள் 10 பதிவுகள் போட்டிருக்கிறேனே கண்ணா!!!!!!