27.6.09

இறைவன் எதைக் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை?

இறைவன் எதைக் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை?

1
மக்களால் இன்றிருப்பதைப் போல என்றும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
மனதையும் அப்படியே வைத்திருந்தால்!

2
எல்லோருக்கும் பிரச்சினைகள் உள்ளன; சிலர் மற்றுமே அவற்றை
மறைப்பதில் கெட்டிக்காரர்கள்.

3
வாழ்க்கையில் பத்து சதவிகிதம் நமக்கு நடப்பதை வைத்து அல்லது
கிடைப்பதை வைத்து; மீதம் 90% அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்
என்பதை வைத்துத்தான்!

4
சிலசமயம் மகிழ்ச்சி புன்னகையை வரவழைக்கும்; பல சமயங்களில்
புன்னகைதான் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து நிறுத்தும்!

5
தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள்; தோல்விகள்தான் உங்களுக்கு
வெற்றிக்கான பாதையை அடையாளம் காட்டும்!

6
நமக்குக் கிடைத்துள்ளவைகள் அவற்றை இழக்கும்போது மட்டுமே
நம் கண்ணில் படும்; நமக்குக் கிடைக்காதவைகளின் மதிப்பு அவைகள்
கிடைத்த பிறகே நம் கண்ணில் படும்!

7
மற்றவர்களின் தவறுகளில் இருந்து நீ கற்றுக்கொள்;
உன் தவறுகளில் இருந்து ஒவ்வொன்றையும் நீ கற்றுக் கொள்ளலாம்
என்றால் உன் ஆயுள் பற்றாது!

8
ஒருவரை உதாசீனப் படுத்த ஒரு விநாடி போதும்
ஒருவரை விரும்பி ஏற்றுக் கொள்ள சில மணி நேரம் ஆகும்
ஒருவரை நேசிக்கச் சில நாட்கள் ஆகும்;
ஒருவரை மறக்க வாழ்நாள் முழுமையும் ஆகும்!

9
உன்னைச் சமாளிக்க மூளையைப் பயன்படுத்து;
மற்றவர்களைச் சமாளிக்க இதயத்தைப் பயன் படுத்து!

10
பணத்தை இழந்தால் அது குறைவான இழப்பே!
நண்பனை இழந்தால் அது குறையுள்ள இழப்பே!
விசுவாசத்தை இழந்தால் மீண்டும் பெறமுடியாத இழப்பு!

11
ஒருவன் ஒருமுறை உங்களுக்கு துரோகம் இழைத்தால் அது
அவனுடைய தவறு!; அவனே உங்களுக்கு இரண்டாவதுமுறை
துரோகம் இழைத்தால் அது உங்களுடைய தவறு!

12
கடவுள் எல்லா பறவைகளுக்கும் உணவைக் கொடுக்கிறார்.
ஆனால் அதை, அவர் பறவைகளின் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை!

---------------------------------------------------------------------
எது மிகவும் நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்!

33 comments:

  1. ஐயா,

    வணக்கம். நமது வகுப்பறை மாணவர்களுக்காக ஜாதக பொரு்த்தம் சுலபமாக பார்ப்பது எப்படி என பதிவிட்டுள்ளேன்.பார்க்கவும்.

    முகவரி:-
    http://velang.blogspot.com/2009/05/blog-post_31.html

    நன்றி..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. மற்றவர்களின் தவறுகளில் இருந்து நீ கற்றுக்கொள். உன்னுடைய தவறுகளில்இருந்து கற்றுக்குக்கொள்வதானால் உனக்கு ஆயுள் பத்தாது...

    இந்த வரிகள் தான் சூப்பர்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. எனது தேர்வு 2,5,12 என்றாலும் அனைத்தும் நன்று.

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. எனது ஒட்டு 11 மற்றும் 7.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  5. பணத்தை இழந்தால் அது குறைவான இழப்பே!
    நண்பனை இழந்தால் அது குறையுள்ள இழப்பே!
    விசுவாசத்தை இழந்தால் மீண்டும் பெறமுடியாத இழப்பு!

    MIGA CHIRANTHA MOZHI.

    ReplyDelete
  6. 7 & 8 எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

    ReplyDelete
  7. நமக்கு பிடிச்சது 7 & 8 -ம்
    எல்லாமே அருமை..

    ReplyDelete
  8. Blogger வேலன். said...
    ஐயா,
    வணக்கம். நமது வகுப்பறை மாணவர்களுக்காக ஜாதக பொரு்த்தம் சுலபமாக பார்ப்பது எப்படி என பதிவிட்டுள்ளேன்.பார்க்கவும்.
    முகவரி:-
    http://velang.blogspot.com/2009/05/blog-post_31.html
    நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    பார்க்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger வேலன். said...
    மற்றவர்களின் தவறுகளில் இருந்து நீ கற்றுக்கொள். உன்னுடைய தவறுகளில்இருந்து கற்றுக்குக்கொள்வதானால் உனக்கு ஆயுள் பத்தாது...
    இந்த வரிகள் தான் சூப்பர்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  10. /////Blogger ananth said...
    எனது தேர்வு 2,5,12 என்றாலும் அனைத்தும் நன்று./////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  11. ////Blogger இராசகோபால் said...
    அனைத்தும் அருமை. எனது ஒட்டு 11 மற்றும் 7.
    அன்புடன்
    இராசகோபால்/////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  12. /////Blogger thirunarayanan said...
    பணத்தை இழந்தால் அது குறைவான இழப்பே!
    நண்பனை இழந்தால் அது குறையுள்ள இழப்பே!
    விசுவாசத்தை இழந்தால் மீண்டும் பெறமுடியாத இழப்பு!
    MIGA CHIRANTHA MOZHI./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////////Blogger புதுகைத் தென்றல் said...
    7 & 8 எனக்கு மிகவும் பிடித்திருக்கு./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. /////Blogger கலையரசன் said...
    நமக்கு பிடிச்சது 7 & 8 -ம்
    எல்லாமே அருமை..//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. வாழ்கையில் துவண்டு விழும்போதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தியவை கண்ணதாசன் கட்டுரைகள். தங்களது நடையும் எழுத்தும் எனக்கு அவற்றையே மீண்டும் நினைவுபடுத்துகின்றன. "கூட்டிற்கு கொண்டுவந்து கொடுப்பதில்லை" என்கிற வரிகள் "கைகாட்டி வழியைத்தான் காட்டும், கூடவே வராது" என்கிற கண்ணதாசனின் வரிகளை நினைவூட்டுகின்றன.

    மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவனே புத்திசாலி. தன் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறவனுக்கு காலமும், பணமும் விரயமாகும்.

    நன்றி

    ReplyDelete
  16. 1, 9 1 வாழ்க்கையின் உண்மை 9 பது நமது தொழிலின் உதவுவது..

    ReplyDelete
  17. என் தேர்வு 9. அருமை!அருமை!அருமை!

    கே.எம்.ஆர்.கிருஷ்ணன்
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  18. எனக்குப் பிடித்தது 4ம் 12ம்!

    ReplyDelete
  19. Dear Sir

    Ellamae Attakasamana (Super Ana..)
    Varigal Sir.. Valkaikku miga mukkiyamana varigal...

    Aiyya ..Neengal Avvapodho Moral lines include panni mansai lesakkukireergal..

    Thank Sir

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  20. தலைப்பே புரியவில்லை. கூட்டிற்கு வந்து - அப்படின்னா என்ன?

    மற்றபடி எழுதிய்வையனைத்தும் பெந்தோகோஸ்தோ மீட்டிங்கில் சொல்வார்கள்.

    புதியதாக சிந்தியும்.

    ReplyDelete
  21. /////Blogger Krushna Cumaar said...
    வாழ்கையில் துவண்டு விழும்போதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தியவை கண்ணதாசன் கட்டுரைகள். தங்களது நடையும் எழுத்தும் எனக்கு அவற்றையே மீண்டும் நினைவுபடுத்துகின்றன. "கூட்டிற்கு கொண்டுவந்து கொடுப்பதில்லை" என்கிற வரிகள் "கைகாட்டி வழியைத்தான் காட்டும், கூடவே வராது" என்கிற கண்ணதாசனின் வரிகளை நினைவூட்டுகின்றன.
    மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவனே புத்திசாலி. தன் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறவனுக்கு காலமும், பணமும் விரயமாகும்.
    நன்றி////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger Nisha said...
    enaku pidithathu 8//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. /////Blogger kmr.krishnan said...
    என் தேர்வு 9. அருமை!அருமை!அருமை!
    கே.எம்.ஆர்.கிருஷ்ணன்
    http://parppu.blogspot.com/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger அன்புடன் அருணா said...
    எனக்குப் பிடித்தது 4ம் 12ம்!/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ellamae Attakasamana (Super Ana..)
    Varigal Sir.. Valkaikku miga mukkiyamana varigal...
    Aiyya ..Neengal Avvapodho Moral lines include panni mansai lesakkukireergal..
    Thank Sir
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  26. /////Blogger கொற்கை said...
    தலைப்பே புரியவில்லை. கூட்டிற்கு வந்து - அப்படின்னா என்ன?
    மற்றபடி எழுதியவையனைத்தும் பெந்தோகோஸ்தோ மீட்டிங்கில் சொல்வார்கள்.
    புதியதாக சிந்தியும்.//////

    நீங்கள் மீட்டிங்கிற்கெல்லாம் போயிருக்கிறீர்கள்!
    இவைகள் போகாதவர்களுக்கு எழுதியதாக வைத்துக் கொள்ளுங்களேன்!
    கையில் ஏ.கே47 இருந்தால்தான் புதிதாகச் சிந்திக்க முடியும்!:-)))))

    ReplyDelete
  27. மிகவும் இரசித்தேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  28. அய்யா, பன்னிரெண்டாவது கூற்று மிகவும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  29. ////Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
    மிகவும் இரசித்தேன். மிக்க நன்றி ஐயா.//////

    எதை இரசித்தீர்கள் சாமி?
    அதைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  30. /////Blogger Dinesh babu said...
    அய்யா, பன்னிரெண்டாவது கூற்று மிகவும் அருமையாக உள்ளது.////

    நன்றி தினேஷ் பாபு!

    ReplyDelete
  31. அனைத்துமே மிகத் தேவையானதுதான்..!

    நன்றி வாத்தியாரே..!

    ReplyDelete
  32. ////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அனைத்துமே மிகத் தேவையானதுதான்..!
    நன்றி வாத்தியாரே..!/////

    அனைத்துமே உங்களுக்குப் பிடித்திருந்தால் சரிதான்!
    நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com