15.6.09

நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை!

நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை!

ஒரு விவசாயி தன் வீட்டின் அருகில் இருந்த பேக்கரிக்குத்
(ரொட்டிக் கடைக்காரனுக்கு) தினமும் இரண்டு கிலோ வெண்ணெயை விலைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடைக்காரன் வெண்ணெயை எடை போட்டுப் பார்க்க,
வந்தது பிரச்சினை.

வெண்ணெய் 100 கிராம் அளவு எடை குறைவாக இருந்தது.

கோபமடைந்த பேக்கரிக்காரன், அன்றே பிரச்சினையை நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று விட்டான்.

விசாரனை நடந்தது.

விவசாயி, தன் பதிலை நீதிபதியிடம் இப்படிச் சொன்னான்.

“சாமி, என்னிடம் முறையான படிக்கற்கள் இல்லை. தராசு மட்டுமே உண்டு. ஆரம்பகாலம் முதல் நான் கடைப் பிடிக்கும் வழக்கம் இதுதான். பேக்கரிடம் இருந்து இரண்டு கிலோ ப்ரெட் வாங்கிக் கொண்டுவருவேன். அதைப் பயன்படுத்தி, அதற்குச் சமமான அளவு வெண்ணேயை, அவருக்குக்
கொடுத்து வருகிறேன். இதில் தில்லிமுல்லுவிற்கெல்லாம் எந்த இடமும் இல்லை”

அதிரடியாக, பேக்கரிடமிருந்து இரண்டு கிலோ ப்ரெட் பாக்கெட் எடுத்துக்
கொண்டு வரப்பட்டு நீதி மன்றத்தில் எடை போட்டுப் பார்க்கப் பெற்றது.

அதன் அளவில் 100 கிராம் எடை குறைவாக இருந்தது.

நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, பேக்கருக்கு ஆயிரம் டாலர்
அபராதம் விதித்து அனுப்பினார்
--------------------------------------------------
ஆகவே யாரையும், குறைகூறும் முன்பு நம் பக்கம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது அவசியம்.

வாழ்க வளமுடன்!

34 comments:

  1. வகுப்பறை பழைய நிலையை அடையுது... ம்ம் நம் பிழைகள் நமக்கு தெரிவதில்லை :(

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியாரய்யா!
    *** யாரையும் குறைகூறும் முன்பு நம் பக்கம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது அவசியம். ***

    இன்று அனைவருக்கும் தேவையான ஒன்றை சிறிய நீதி கதையின் மூலம் விளக்கிய விதம் அருமை.....

    ReplyDelete
  3. எனது லக்னம் மேஷம் , எனக்கு லக்னத்தில் 37 பரல்கள் உள்ளன , ஆனால் செவ்வாய் ஆறில் சனியோடு சேர்ந்து உள்ளது, இதற்கு பலன் என்ன , ஆறில் 25 பரல்கள் உள்ளன .

    ReplyDelete
  4. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    வகுப்பறை பழைய நிலையை அடையுது... ம்ம் நம் பிழைகள் நமக்கு தெரிவதில்லை :(/////

    வகுப்பறையின் நிலையைப் பற்றிய உங்களது விமர்சனத்திற்கு நன்றி!

    ReplyDelete
  5. ////Blogger கோமாளி said...
    வணக்கம் வாத்தியாரய்யா!
    *** யாரையும் குறைகூறும் முன்பு நம் பக்கம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது அவசியம். ***
    இன்று அனைவருக்கும் தேவையான ஒன்றை சிறிய நீதி கதையின் மூலம் விளக்கிய விதம் அருமை.....////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger பிரகாஷ் துரைசாமி said...
    எனது லக்னம் மேஷம் , எனக்கு லக்னத்தில் 37 பரல்கள் உள்ளன , ஆனால் செவ்வாய் ஆறில் சனியோடு சேர்ந்து உள்ளது, இதற்கு பலன் என்ன , ஆறில் 25 பரல்கள் உள்ளன ./////

    மேஷ லக்கினத்திற்கு சனி 10 & 11ஆம் இடங்களுக்கு உரியவன். அவனும் லக்கினாதிபதியும் சேர்ந்திருப்பது நன்மையான அமைப்பு!. ஆனால் ஆறாம் இடம் என்பதால் தாமதமாகத்தான், பல தடைகளுக்குப் பிறகுதான் பலன்கள். பலன் நிச்சயமாக உண்டு. கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  7. அய்யா,

    நீண்டநாள் வகுப்பறை விடுமுறை என் பள்ளி பருவ கோடை விடுமுறையை நினைவு படுத்தியது!

    நன்றி!

    ஸ்ரீதர்

    ReplyDelete
  8. nice story with good point, thanks.

    ReplyDelete
  9. ///////Blogger அன்புடன் அருணா said...
    நல்ல நீதி!//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger Sridhar said...
    அய்யா,
    நீண்டநாள் வகுப்பறை விடுமுறை என் பள்ளி பருவ கோடை விடுமுறையை நினைவு படுத்தியது!
    நன்றி!
    ஸ்ரீதர்/////

    நினைவுகள் இனியதாக இருந்தால் சரிதான்! நன்றி!

    ReplyDelete
  11. ////////Blogger saadu said...
    nice story with good point, thanks.////

    நன்றி சாது!

    ReplyDelete
  12. நல்லதொரு நீதிக் கதை. இமைக் குற்றம் கண்ணுக்கு தெரியாது என்பார்கள். அதுபோல் நம்மில் பலருக்கு நம் குற்றத்தைத் தவிர மற்ற எல்லோர் குற்றமும் கண்ணுக்கு தெரியும்.

    ReplyDelete
  13. வாத்தியார் அய்யா,
    இந்த கதையில் உள்ள கருத்து நம் வாழ்வில் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒத்து போகும். இவ்வாறு நேர்மைக்கு ஏற்படும் சோதனைகளுக்கும் எப்படி கிரக சூழ்நிலைகள் காரணமாகும். எந்த விதமான கிரக நிலைகளில் ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், நிரபராதியாக இருந்தாலும் கோர்ட் படி ஏற வேண்டியிருக்கும்?
    இடையறாத பணிகளுக்கு இடையில் இந்த பதிவினை வலையேற்றி இருக்கும் ஆசானுக்கு நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா,
    என்னுடைய ஜாதக குறிப்பு
    - விருச்சிக லக்னம் , மகர ராசி

    வீடு முறையே
    1. செவ்வாய் (லக்னம்)
    2. SURIYAN, BUTHAN
    3. SUKKIRAN, CHANDRAN
    6. KETHU, GURU
    9. சனி
    12. ராகு

    எனுடுய வேலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லே. பதவி உயர்வும் இல்லை. என்னை விரும்பதவர்கவல் அதிகம்.

    எனக்கு எப்பொழுது நல்ல காலம் வரும்.

    எனக்கு இப்பொழுது ராகு திசை, சுக்கிர புத்தி.

    தயவு சைது எனக்கு எதுனா சொல்லுங்க.

    இருக்குற COMPANYA விட்டு வேற COMPANY க்கு மாறலாமா?

    ReplyDelete
  15. Dear Sir

    Aduthavarkalai kurai sollum munbu naan nammai patri oru murai Alasinal podhum (pala thavaru nammidam irukkum)....

    Kadugu siruthalum Karam Kurayadhu...Chinna Kadhai narukkendra porul..Adhu Ungalal Mattume mudiyum Aiyya....

    Nice Story(Lesson)- Short and Script...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. http://www.vedicastro.com/article-tara-lagna-dasha.asp

    sir could you read this article and explain its significance to us ?

    and how is your health coping with you ?

    ReplyDelete
  17. short story....good point!

    -Shankar

    ReplyDelete
  18. /////Blogger ananth said...
    நல்லதொரு நீதிக் கதை. இமைக் குற்றம் கண்ணுக்கு தெரியாது என்பார்கள். அதுபோல் நம்மில் பலருக்கு நம் குற்றத்தைத் தவிர மற்ற எல்லோர் குற்றமும் கண்ணுக்கு தெரியும்.////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  19. /////Blogger Guru said...
    வாத்தியார் அய்யா,
    இந்த கதையில் உள்ள கருத்து நம் வாழ்வில் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒத்து போகும். இவ்வாறு நேர்மைக்கு ஏற்படும் சோதனைகளுக்கும் எப்படி கிரக சூழ்நிலைகள் காரணமாகும். எந்த விதமான கிரக நிலைகளில் ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், நிரபராதியாக இருந்தாலும் கோர்ட் படி ஏற வேண்டியிருக்கும்?/////

    ஆறாம் இடத்து அதிபதியின் தசா புத்தியில் இது போன்ற சோதனைகள் ஏற்படும்!
    அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி காலங்களிலும் இது போன்ற சூழ்நிலைகள் உருவாகும்!

    ReplyDelete
  20. /////Blogger saravanan said...
    வணக்கம் ஐயா,
    என்னுடைய ஜாதக குறிப்பு
    - விருச்சிக லக்னம் , மகர ராசி
    வீடு முறையே
    1. செவ்வாய் (லக்னம்)
    2. SURIYAN, BUTHAN
    3. SUKKIRAN, CHANDRAN
    6. KETHU, GURU
    9. சனி
    12. ராகு
    என்னுடைய வேலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லே. பதவி உயர்வும் இல்லை. என்னை விரும்பதவர்கள் அதிகம்.
    எனக்கு எப்பொழுது நல்ல காலம் வரும்.
    எனக்கு இப்பொழுது ராகு திசை, சுக்கிர புத்தி.
    தயவு செய்து எனக்கு எதுனா சொல்லுங்க.
    இருக்குற COMPANYA விட்டு வேற COMPANY க்கு மாறலாமா?///////

    ராகுதிசை முடிந்த பிறகு நல்ல காலம். அதோடு அஷ்டமத்துச் சனி 26.9.2009 வரை
    அதற்குப் பிறகு சற்று ஆறுதலாக இருக்கும்.
    தினமும் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். He will give you standing power!

    ReplyDelete
  21. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Aduthavarkalai kurai sollum munbu naan nammai patri oru murai Alasinal podhum (pala thavaru nammidam irukkum)....
    Kadugu siruthalum Karam Kurayadhu...Chinna Kadhai narukkendra porul..Adhu Ungalal Mattume mudiyum Aiyya....
    Nice Story(Lesson)- Short and Script...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  22. ////Blogger mike said...
    http://www.vedicastro.com/article-tara-lagna-dasha.asp
    sir could you read this article and explain its significance to us ?/////

    நான் ஒரு ஆர்டரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்!

    ReplyDelete
  23. ////Blogger hotcat said...
    short story....good point!
    -Shankar/////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  24. வணக்கம் ஐயா,ந‌ல்ல கதை,நல்ல கருத்து.நன்றிகள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. வாத்தியாரே..

    வழக்கம் போல கதை குத்தூசி மாதிரி குத்துகிறது..

    நன்றி..!

    ReplyDelete
  27. Jagannatha Hora Programல் 21 ராசி தசாக்கள் இருப்பதாக அதன் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதில் tara lagna dasha என்று வேறு ஒன்றா. எனது கருத்து/அபிப்பிராயம். ஜோதிடம் என்பது கடல். தாங்கள் அந்த கடலின் ஒரு பகுதியில் இருக்கிறீர்கள். இது வேறொரு பகுதி. அங்கும் இங்குமாக தாவினால் நன்றாக இருக்காது. இல்லாவிட்டால் தங்கள் பதிவைப் படிப்பவர்கள் குழம்பி போய் .... தங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  28. ////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,ந‌ல்ல கதை,நல்ல கருத்து.நன்றிகள்.
    அன்புடன்,
    மதுரை தனா.///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    வழக்கம் போல கதை குத்தூசி மாதிரி குத்துகிறது..
    நன்றி..!/////

    உங்களை எதுவும் குத்ததே ஊனா தானா!
    நீங்கள் பழநியப்பனின் சிநேகிதர் ஆயிற்றே!

    ReplyDelete
  30. /////Blogger ananth said...
    Jagannatha Hora Programல் 21 ராசி தசாக்கள் இருப்பதாக அதன் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதில் tara lagna dasha என்று வேறு ஒன்றா. எனது கருத்து/அபிப்பிராயம். ஜோதிடம் என்பது கடல். தாங்கள் அந்த கடலின் ஒரு பகுதியில் இருக்கிறீர்கள். இது வேறொரு பகுதி. அங்கும் இங்குமாக தாவினால் நன்றாக இருக்காது. இல்லாவிட்டால் தங்கள் பதிவைப் படிப்பவர்கள் குழம்பி போய் .... தங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.////

    ஜகன்நாத ஹோராக்காரர்கள் ஆந்திரர்கள். அவர்களுடைய ஜோதிடப்பிரிவுகள் சில குழப்பமாக இருக்கும். அதனால் அவற்றை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.
    சனிக்கிழமைகளில் நாம் திருமணங்களைச் செய்ய மாட்டோம். அவர்கள் செய்வார்கள்.
    காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் சூரியன் வலுவாக இருக்கும்போதுதான் நாம் சுபகாரியங்களைச் செய்வோம். அவர்கள் இரவில் கூட சுபக்காரியங்களைச் செய்வார்கள்
    நான் பல சமயங்களில் திகைத்திருக்கிறேன். எனக்கு நிறைய ஆந்திர நண்பர்கள் இருக்கிறார்கள்
    அதனால் நேரடியாகப் பார்த்த அனுபவம் உண்டு!

    ReplyDelete
  31. அய்யா, சில நாட்களாக உங்கள் ஜோதிட பாடம் பதிவை படித்து வருகிறேன். மிகவும் எளிய நடையில் புரியும் படியாக அழகாக எழுதுகிறீர்கள். ஜோதிடம் எப்போதும் ஒரு மர்மமான ஒரு விஷயம் என்றே நான் எண்ணி இருந்தேன். உங்கள் பதிவுகளை படித்து, அதில் கணக்கு, அலசல் தான் மிகவும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். மிகவும் உபயோகமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. ஐயா எனக்கு மேஷ லக்னம் , 2 - சுக்கிரன் , 3 - புதன் , சூரியன், ராகு, 6- சனி, செவ்வாய் ,
    7- குரு , 9- கேது , 11- சந்திரன் , நடப்பு திசை - புதன் திசை புதன் புத்தி , ஆறாம் இடத்தவரின் திசை புத்தி நடை பெறுகிறது . முன்பு ஒருவரிடம் இதில் மோசமான சம்பவங்கள் நடக்கும் என்று சொல்லி இருந்தீர்கள் . எனக்கும் வாய்பு இருகிறதா, அதேபோல் புதன் திசை சனி புத்தி மிகவும் அபயகறமானதா? குறிப்பாக மேஷ லக்னத்திற்கு , என்னுடைய ஆயுள் பலமாக உள்ளதா? எனக்கு மிகவும் ஜோதிடத்தில் ஆர்வம் வந்து விட்டது உங்களால், மிகவும் நன்றி ஐயா .

    ReplyDelete
  33. பலர் இணையத்திலும் ஜோதிட மாத இதழ்களிலும் பல வகையான தசா புத்தி சம்பந்தமாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் கணக்கில் எடுத்தால் அல்லது அதைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் ஒரு முடிவே இருக்காது. இறுதியில் வீண் குழப்பம்தான் மிஞ்சும். உதாரணத்திற்கு Jagannatha Horaவில் உள்ளதைச் சொன்னேன். இதுதான் நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் சொல்ல வந்தது. தாங்கள் தவறாக புரிந்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com