நந்தலாலா பாட்டு - நியூ வெர்சன்!
காந்தி நோட்டினிலே நந்தலாலா - எங்கள்
காலம் நடக்குதையே நந்தலாலா
(காந்தி)
பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா - பந்த
பாசம் இல்லையே நந்தலாலா
(காந்தி)
தேடிய பொருளிலெல்லாம் நந்தலாலா - ஒரு
திருப்தி இல்லையே நந்தலாலா
தேடுதலை விடுவதற்கு நந்தலாலா - மனம்
தேறுதல் கொள்வதில்லை நந்தலாலா
(காந்தி)
காசைப் பார்த்தால் நந்தலாலா - நின்னைக்
காணும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
ஆசையை விடுவதற்கு நந்தலாலா - வேண்டிய
அறிவு இல்லையே நந்தலாலா!
(காந்தி)
வாழும் வகை அறியோம் நந்தலாலா - நல்ல
வாழ்க்கை முறை தெரியோம் நந்தலாலா
பாழும் மனதை வசப்படுத்த நந்தலாலா - ஏன்
பக்குவம் நீ தரவில்லை நந்தலாலா!
(காந்தி)
==================
வாழ்க வளமுடன்!
:)... but the song sound sad :(
ReplyDeleteஇன்னைக்கு நாடு இருக்குற நிலமைய சொல்லி இருக்கீங்க.. வருத்தப்பட வேண்டிய விஷயம்..:-(
ReplyDeleteபாரதியார் உயிரோடு இருந்து இப்போதுள்ள நிலையை பார்த்திருந்தால் இப்படித்தான் வேதனையோடு எழுதியிருப்பாரோ என்னவோ.
ReplyDeleteவாத்தியாரே..
ReplyDeleteதூள்.. தூள்.. தூள்..
எப்படித்தான் இப்படியெல்லாம் ஐடியோ தோணுதுன்னு தெரியலை..
வீட்ல நீச்சல் குளம் இருக்கோ..?!!!!
Simply fentastic
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteஇப்போது இருக்கும் மனிதனின் நிலமையை,பாரதியார் ல் சொல்லி இருக்கிறீர்கள் ,நன்று !
வணக்கம் ஐயா
ReplyDeleteஇப்போது இருக்கும் மனிதனின் நிலமையை,பாரதியார் style ல் சொல்லி இருக்கிறீர்கள் ,நன்று !
/////Blogger மதி said...
ReplyDelete:)... but the song sound sad :(/////
உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்!
////Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
ReplyDeleteஇன்னைக்கு நாடு இருக்குற நிலமைய சொல்லி இருக்கீங்க.. வருத்தப்பட வேண்டிய விஷயம்..:-(//////
வருத்ததோடுதான் எழுதியுள்ளேன்!
/////Blogger ananth said...
ReplyDeleteபாரதியார் உயிரோடு இருந்து இப்போதுள்ள நிலையை பார்த்திருந்தால் இப்படித்தான் வேதனையோடு எழுதியிருப்பாரோ என்னவோ./////
இதைவிட நன்றாக எழுதியிருப்பார்!
//////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
தூள்.. தூள்.. தூள்..
எப்படித்தான் இப்படியெல்லாம் ஐடியோ தோணுதுன்னு தெரியலை.
வீட்ல நீச்சல் குளம் இருக்கோ..?!!!!//////
நீச்சல் குளம் இருக்கிறது. வீட்டில் அல்ல: மனதில்!
////////Blogger RAJA said...
ReplyDeleteSimply fentastic//////////
நன்றி ராஜா!
///////////Blogger sundar said...
ReplyDeleteவணக்கம் ஐயா
இப்போது இருக்கும் மனிதனின் நிலமையை,பாரதியார் style ல் சொல்லி இருக்கிறீர்கள் ,நன்று !//////
நன்றி சுந்தர்!
இது பாரத நாட்டை பற்றியதால் யான் எதுவும் கூற முடியாது நமது நாடோ சொல்ல தேவையில்லை சொன்னால் காலன் பின்னால் வருவான் :). ஜயா அடுத்த பாடம் எப்போழுது ?
ReplyDelete/////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஇது பாரத நாட்டை பற்றியதால் யான் எதுவும் கூற முடியாது நமது நாடோ சொல்ல தேவையில்லை சொன்னால் காலன் பின்னால் வருவான் :). ஜயா அடுத்த பாடம் எப்போழுது ?/////
உங்கள் அவஸ்தை புரிகிறது. இறையருளால் அந்த நிலைமை மாறட்டும்
அடுத்த பாடம் பதிவிடப்பட்டுள்ளது!சென்று பாருங்கள்