22.4.09

Bucket with a hole - ஓட்டை வாளி

Bucket with a hole - ஓட்டை வாளி

வகுப்பறையைப் பொறுத்தவரையில் எனக்கு மூன்று வேலைகள்.

1. பதிவதற்கான கட்டுரைகளை எழுதித் தட்டச்சி வலையில் ஏற்றுவது.
2. வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது.
3. பின்னூட்டங்களுக்கு சம எண்ணிக்கையில் வரும் தனி மின்னஞ்சல்
களுக்குப் பதில் எழுதுவது.

நேரமின்மையால், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவதை ஒத்தி
வைத்தால், அதை நினைவுறுத்தி மீண்டும் மின்னஞ்சல்கள் வரும்.
தப்பிக்க முடியாது.

வரும் மின்னஞ்சல்களைப் பொதுவாக இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

1.சார், எனது திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால்
நிச்சயிக்கப்பெறும் திருமணமா?

2.சார், நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்.
எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?
--------------------------------------------------------------
இங்கே பணக் கஷ்டத்தை எடுத்துக்கொள்வோம்.

பணக்கஷ்டத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை விவாதித்தால்
பதிவு 100 பக்கங்களுக்குப் போய்விடும். ஆகவே விவாதிக்காமல்
பணக்கஷ்டத்திற்கான அல்லது பணப் பற்றக் குறைக்கான காரணத்தை
ஜாதக ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்
--------------------------------------------------------------
இன்றைய சூழ்நிலையில் பணம் இல்லாமல் யாராலும் மகிழ்ச்சியாக
வாழ முடியாது. நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே
போகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிலோ 20 ரூபாய் விற்ற பொன்னி
அரிசியின் இன்றைய விலை 40 ரூபாய். துவரம் பருப்பு கிலோ
32 ரூபாயிலிருந்து இன்று 60 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி எல்லாமே
அநியாயத்திற்கு ஏறியிருக்கிறது.

அதே போல நமது வருமானமும் இரண்டு மடங்கு ஏறியிருக்கிறதா
என்றால் இல்லை!

தேவைக்குச் சம்பாதிப்பது வேறு; ஆசைக்குச் சம்பாதிப்பது வேறு.

ஆசைக்குச் சம்பாதிப்பதாகட்டும் அல்லது தேவைக்குச் சம்பாதிப்பதாகட்டும்
பணம் வரவேண்டுமல்லவா?

பணம் நினைத்தபடி வருமா? அல்லது வராதா?

நினைத்தபடி வந்தால் கஷ்டம் ஏது?

நினைத்தபடி ஏன் வரமாட்டேன் என்கிறது?

அதுதான் ஜாதகப் பலன்!

நீ இவ்வளவு உயரம்தான் பறக்கலாம் என்று ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ளது.
அந்த உயரத்திற்குத்தான் நீ பறக்க முடியும். குருவி பறக்கும் உயரம் வேறு.
புறா பறக்கும் உயரம் வேறு. கழுகு பறக்கும் உயரம் வேறு.

நீ சைக்கிளில்தான் போகவேண்டும் என்றால் சைக்கிள் மட்டுமே கிடைக்கும்
நீ பல்சர் மோட்டார் சைக்கிளில் அதுவும் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது
மாதமே போகலாம் என்றால் அது கிடைக்கும். நீ காரில். அதுவும்
ஹோண்டா சிட்டி காரில் போக வேண்டும் என்றால், அது தானாக வந்து
சேரும்.

முயற்சி செய்தால் முடியாதா என்று கேட்காதீர்கள்!
ஜாதகத்தில் வழியில்லை என்றால் முடியாது!

சரி, ஜாதகத்தில் அதைத் தீர்மானிக்கும் வீடுகள் எவை?
இரண்டாம் வீடு மட்டுமா? அல்ல!
இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு
ஜாதகனின் பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக
இருந்தால் ஜாதகனுக்கு நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான்.
இல்லையென்றால் இல்லை

அந்த மூன்று வீடுகளும் கெட்டிருந்தால் ஜாதகன் அன்றாடம் காய்ச்சி!
==========================================
வெற்றிகரமான வருமானத்திற்கான பாதையை மூன்று விதமாகப்
பிரிக்கலாம்.

1. ஜாதகன் பார்க்கும் வேலை அல்லது செய்யும் தொழில்
2. அதன் மூலம் ஜாதகனுக்குக் கிடைக்கவிருக்கும் பணம்
3. அப்படி வரும் பணத்தில் செலவு போக மீதியைச் சேர்த்து
வைப்பானா? சேர்த்துவைத்தைப் பெருக்குவானா?

முதல் கேள்விக்கான பதிலைப் பத்தாம் வீட்டை வைத்துச்
சொல்வார்கள். ஆனால் அதைத் தொடர்ந்துள்ள கேள்விகளுக்கு
பதில்களுக்கு வேறு வீடுகளை அலச வேண்டும்.

ஜோதிடத்தில் உள்ள சிக்கல் இதுதான். அத்தனை பலன்களும்
ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை.

பத்தாம் வீட்டையும், செவ்வாயையும் வைத்து ஒருவன் கிரிக்கெட்
ஆட்டத்தில் சிறப்படைவான் என்று சொல்லலாம். ஆனால் அவனுடைய
ஆட்டம் ரஞ்சி ட்ராப்பியுடன் முடிந்துவிடுமா? அல்லது உலகளவில்
தோனிபோல கலக்கல் ஆட்டமாடி பெரும்பொருள் குவிப்பானா
என்பதை மற்ற வீடுகள் நிர்ணயம் செய்யும்.

ஜோதிடத்தில் ஒரு மனிதனின் பணபலத்தை நிர்ணயம் செய்பவை
மூன்று வீடுகள். அவைகள் முறையே ஐந்தாம் வீடு, பதினொன்றாம் வீடு
மற்றும் இரண்டாம் வீடுகள் ஆகும்.

இரண்டாம் வீடுதான் House of finance என்றாலும், அங்கே பணத்தைக்
கொண்டுவந்து கொட்டுபவை மற்ற இரண்டு வீடுகள். அதை மனதில்
கொள்க!

அது எப்படி?

வெறும் வேலை. அதன் மூலம் வரும் சம்பளம் என்றால் பத்தாம் வீடும்
இரண்டாம் வீடும் போதும்.

நமக்குச் சம்பளம் மட்டும் பற்றாதே! மற்ற வருமானங்களும் வேண்டுமே!

The three main houses that govern wealth in a chart are the 2nd house,
11th house and the 5th house.
=============================================
ஐந்தாம் வீட்டை லெட்சுமிகரமான வீடு என்று சொல்லலாம்.
எதிர்பாராத பண வரவுக்கெல்லாம் இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம்.
பங்கு வணிகத்தில் சிலர் லட்சம் லட்சமாக அல்லது கோடி கோடியாகச்
சம்பாதிப்பதற்கெல்லாம் இந்த வீடுதான் காரணம்.

The house which governs the money coming from speculation
- shares, stock market and related instruments.

வலிமையான ஐந்தாம் வீடும், வலிமையான ஒன்பதாம் வீடும் இருக்கும்
ஜாதகனுக்குப் பணம் மழையாகக் கொட்டும்.

அண்டாக்களில் பிடித்துவைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே அவனுடைய
வேலை. ஒன்பதாம் வீட்டிற்கு அதிலிருந்து ஒன்பதாம் இடம் ஐந்தாம் வீடு
அதை மனதில் கொள்க

A powerful 5th house along with 9th house will bring luck to an individual.
9th house is called as bhagyasthana. 5th being 9th from 9th also represents
luck in the horoscope.
=================================================
பதினொன்றாம் வீடு லாபஸ்தானம். House of profit
ஒரு ஜாதகனின் வாழ்க்கை முறைக்கு, உங்கள் மொழியில் சொன்னால்
Life Styleற்கு இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம்.

உங்களுக்குப் பல ஆசைகள் இருக்கலாம்.
அந்த அசைகளை நிறைவேற்றிவைப்பது இந்த வீடுதான்.
பதினொன்றாம் வீடும், அதன் அதிபதியும்தான் உங்களுக்குக் கொட்டும்
பணமழையின் அளவை நிர்ணயிப்பவர்கள்.

11th house alone will determine what a person will earn from.
The strength of the house and ruler would determine the size of source
of income.
This house represents gains of all kinds.
================================================
2ஆம் வீடு. இதற்குத் தனஸ்தானம் என்று பெயர்
ஒரு ஜாதகனுக்கு என்ன தேறும் என்பதை அது சொல்லும்.
அதே போல ஜாதகனுக்கு என்ன தங்கும் என்பதையும் அது சொல்லும்

2nd House: Financially, house number 2 (dhanasthana)
This house represents the net worth of an individual.
It also denotes the extent to which the individual will be able to retain
the money earned through sources represented by 5th and 11th house.

அந்த இரண்டு வீடுகள் மட்டும் நன்றாக இருந்து அதாவது
5ம் 11ம் நன்றாக இருந்து, இந்த வீடு கெட்டிருந்தால் பணம் வரும்,
ஆனால் வரும் பணம் கையில் தங்காது. பல வழிகளில்
செலவாகிவிடும்.

அதை ஓட்டைக் கை ஜாதகன் என்பார்கள்.
ஓட்டைக் கையில் என்ன தங்கும்?
ஓட்டை வாளியில் என்ன தங்குமோ அதுதான் தங்கும்!
=================================================
பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை
வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம்.

11th house can be thought of as a tap and 2nd house as a bucket.
The bucket is filled with water flowing from the tap.
How much water will accumulate depends on the rate water flows
from the tap and size of the bucket.

நான்காம் வீடு சுகஸ்தானம். பணம் இன்றி சுகமேது? ஆகவே ஒரு
ஜாதகன் சுகமாக வாழ்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க
வேண்டும். இங்கே ஒரு அதிசய ஒற்றுமையைப் பாருங்கள் இரண்டாம்
வீடு, பதினொன்றாம் வீட்டிலிருந்து நான்காம் வீடு.

Second house represents the accumulated wealth of the individual.


ஜாதகனின் கையில் தங்கும் செல்வத்திற்கான வீடு இரண்டாம் வீடு!
அதை மனதில் கொள்க!
===================================================
பணவரவு எப்படி வேறுபடுகிறது?

இந்த மூன்று வீட்டு அதிபதிகளின் வலிமை முக்கியம்.
அதோடு அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதகத்தில் இணைந்து கூட்டாக
அல்லது பரிவர்த்தனையாக அல்லது பரஸ்பர பார்வையோடு இருப்பதும்
முக்கியம்.

அந்தக் கூட்டணி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு ஸீட்
கிடைக்கும்:-))))))

Planetary combinations of wealth, are formed when rulers of these
houses are associated with each other and with rulers of 1st, 5th and
9th house.

This association could be through conjunction in good houses, exchange
and through mutual aspect. Involvement of Jupiter as benefic planet
in these combinations is considered extremely auspicious.

இது தவிர, ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்களும் பெரும் செல்வத்தைப்
பெற்றுத் தரும். அதைப் பற்றி விரிவாக யோகங்களுக்கான பாடவகுப்பில்
பார்ப்போம்

===========================================
பணமின்றி வறுமையில் வாடுவதேன்?
அல்லது பணக்கஷ்டத்தில் உழல்வதேன்?

இந்த மூன்று வீட்டு அதிபதிகளும், 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது
12ஆம் வீட்டதிபதிகளுடன் சகவாசம் வைத்திருந்தால் எப்போதும்
பணக் கஷ்டம்தான்

சகவாசம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.
நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

அந்த தீய வீட்டதிபர்கள் பைப்பில் தண்ணீர் வருவதை நிறுத்தி விடுவார்கள்
அல்லது உங்கள் வீட்டு வாளி அல்லது அண்டாக்களை ஓட்டையாக்கி
விடுவார்கள். அல்லது தண்ணீர் பிடிக்கும் நிலையில் உங்களை விட்டு
வைக்காமல் படுக்க வைத்துவிடுவார்கள்.

படுக்கவைப்பது என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
====================================================
2ஆம் வீட்டதிபர், பதினொன்றாம் வீட்டதிபர் ஆகிய இருவரும்
வலிமை இல்லாமல் இருந்தால் (அதாவது சுயவக்கத்தில் குறைந்த
பரல்களுடன் இருந்தால்) ஜாதகனுக்கு வறுமை என்பது நிரந்தர
நண்பனாகிவிடும். பணக்கஷ்டம் என்பது பகல் பொழுதாகிவிடும்.
------------------------------------------------------------------------------------------------
அந்தந்த வீட்டதிபர்களின் தசா புத்திகளில் பலன்கள் கைகூடிவரும்!

நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்



வாழ்க வளமுடன்!

73 comments:

  1. ஐயா,வணக்கம்.
    விளக்கம் அருமையாக உள்ளது.
    ஜாதகப் பலன்களில் ஒரு முக்கிய பாகத்தை பார்க்கிறோம்.
    கொஞ்சம் விரிவாக தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. பணம்-இன்னைக்கு போனால் நாளைக்கு வரும் so dont worry bout that...

    5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் அதனால போன பிறவியில் விட்டதை இந்த பிறவில் கிடைக்கும் பரல்கள் அதிகம இருந்தால்....

    ReplyDelete
  3. பாடம் மிகவும் அருமை
    2ம வீட்டிற்கும் 11ம வீட்டிற்கும் அதிபதி குரு ,6ல் உச்சம்.
    5ம வீடிற்கு அதிபதி புதன் 3ல்
    எனக்கு எப்போதும் பண கஷ்டம் தானா அய்யா ?

    ReplyDelete
  4. ஐயா இன்றைய பாடம் அருமை. எனது ஜாதகத்தில் 2க்குரியவர் புதன் (5 பரல்கள்) 11லும், 11க்குரியவர் குரு(4 பரல்கள்) 2லும் இருந்து பரிவர்த்தனை அடைந்துள்ளனர்.மேலும் 5க்குரியவர் 11ல் இருந்து 7ம் பார்வையாக தன் வீட்டை(கன்னி) பார்க்கிறார்.ஏதேனும் விஷேச பலன் உண்டா?

    ReplyDelete
  5. kumba lagam for you right , saravanan ? guru is exalted in 6th cancer ?right ? what about 5th place ?where is mercury(buddha placed ? seems like ur positions are really good . waiting for our masters comment .sir, did you goto any painting classes or learned it on your own ? publish some of ur paintings too...

    ReplyDelete
  6. ஐயா, எனக்கு இரண்டில் ராகு, ஐந்தில் வளர்பிறை சந்திரன், பதினொன்றில் சுக்கிரன். இதில் இரண்டாம் வீடு ரிஷபம். அப்படி என்றால் சுக்கிரனின் பலமும் இரண்டாம் வீட்டின் பலமும் பாதிப்படைந்து உள்ளது எனக் கொள்ள வேண்டுமா?

    ReplyDelete
  7. பதிவு மிகவும் அருமை. எனது நீண்ட நாளைய கேள்விகளுக்கு (என் மனதிற்குள் எழுந்த கேள்வி) இந்த ஒரு பதிவின் மூலம் விடை கிடைத்தது. எனது ஜாதகத்தில் 5ம் இடத்தில் வில்லன்கள் ராகுவும் செவ்வாயும் இருக்கிறார்கள். 11ல் கேது, குட்டி வில்லன்கள் குளிகனும், மாந்தியும் இருக்கிறார்கள். இதில் சனி பார்வை வேறு. தாங்கள் என்ன சொல்வீர்கள் என்று புரிகிறது. மற்ற அம்சங்களையும் தீர ஆராய்ந்து விட்டு ஒரு முடிவுக்கு வருகிறேன்.

    ReplyDelete
  8. Dear Sir

    Sir 2ikkuriyavan , 5kkuriyavan (Guru) 7il(rishabam)-11 ikuriyvar 11il(kanni)..viruchiga lagnam palan eppadi Sir?

    Ananth -- Kuliganum Mandhiyum ondru ....

    Thank you.

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  9. sir,
    Now only I understood who are my villans.I have three villans in my chart

    ReplyDelete
  10. நான் படித்த வரையில் மாந்தி வேறு குளிகன் வேறு. இருவரும் சனியின் உப கிரகங்கள். ஒருவருக்கொருவர் சுமார் 10 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள். எனது கருத்து சரியா தவறா என்று ஆசிரியரே சொல்லட்டும். ஒரு வேளை நான் படித்தது தவறாக கூட இருக்கலாம். Jagannatha Horaவிலும் இருவரும் தனித் தனியாக குறிப்பிடப் பட்டிருக்கிறர்கள்.

    ReplyDelete
  11. ம்ம் நமக்கு 2,5 குரு அதிபதி அவர் லக்கினத்தில், 11 ல் சூரியன் . பணத்திற்கு குறை இன்னும் இல்லை இப்பதான் உழைப்பு தொடங்கியது பார்ப்போம்... ஆனா இந்த முறை ஜயா சொல்லியபடி புதன் கிழமை வந்திட்டார். ;) நன்றி உங்கள் அருமையான நேரத்திற்கு!

    ReplyDelete
  12. ///////Blogger Geekay said...
    Present Sir,
    :-))/////

    வருகைப் பதிவு போட்டாச்சு ஜீக்கே!

    ReplyDelete
  13. /////////Blogger தியாகராஜன் said...
    ஐயா,வணக்கம்.
    விளக்கம் அருமையாக உள்ளது.
    ஜாதகப் பலன்களில் ஒரு முக்கிய பாகத்தை பார்க்கிறோம்.
    கொஞ்சம் விரிவாக தர வேண்டுகிறேன்.///////////

    இன்றையப் பதிவை விவரமாக எழுதியுள்ளேன் தியாகராஜன்!
    இன்னும் விரிவாக வேண்டுமா? சொல்லுங்கள்!

    ReplyDelete
  14. /////////Blogger மதி said...
    பணம்-இன்னைக்கு போனால் நாளைக்கு வரும் so dont worry bout that...
    5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் அதனால போன பிறவியில் விட்டதை இந்த பிறவில் கிடைக்கும் பரல்கள்

    அதிகம இருந்தால்..../////////

    போனபிறவியில் விட்டதை அல்ல! போனபிறவியில் செய்த நற்காரியங்களுக்கான பலன்களே புண்ணியமாக வரும்!

    ReplyDelete
  15. ////////Blogger புதுகைத் தென்றல் said...
    present sir/////

    வருகைப் பதிவு போட்டாச்சு சகோதரி!

    ReplyDelete
  16. //////Blogger YOGANANDAM M said...
    present sir,///////////

    வருகைப் பதிவு போட்டாச்சு யோகானந்தம்!

    ReplyDelete
  17. ////////Blogger dubai saravanan said...
    பாடம் மிகவும் அருமை
    2ம வீட்டிற்கும் 11ம வீட்டிற்கும் அதிபதி குரு ,6ல் உச்சம்.
    5ம வீட்டிற்கு அதிபதி புதன் 3ல்
    எனக்கு எப்போதும் பண கஷ்டம்தானா அய்யா ?////////

    3ற்கு இரண்டு நன்றாக இருக்கிறதே - அதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
    உச்சமான குரு 6ல் அமர்ந்தாலும், உச்சமானதன் பலனைத் தன்னுடைய தசாபுத்தியில் தருவார்.
    முழுமையாகத்தராவிட்டாலும் பாதியையாவது தருவார். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  18. /////////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா இன்றைய பாடம் அருமை. எனது ஜாதகத்தில் 2க்குரியவர் புதன் (5 பரல்கள்) 11லும், 11க்குரியவர்

    குரு(4 பரல்கள்) 2லும் இருந்து பரிவர்த்தனை அடைந்துள்ளனர்.மேலும் 5க்குரியவர் 11ல் இருந்து 7ம் பார்வையாக

    தன் வீட்டை(கன்னி) பார்க்கிறார்.ஏதேனும் விஷேச பலன் உண்டா?///////

    நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்றுமே விஷேசம்தான்!

    ReplyDelete
  19. ////////Blogger mike said...
    kumba lagam for you right , saravanan ? guru is exalted in 6th cancer ?right ? what about 5th place ?

    where is mercury(buddha placed ? seems like ur positions are really good . waiting for our masters comment

    .sir, did you goto any painting classes or learned it on your own ? publish some of ur paintings too...///////

    வாத்தியாரின் குறிப்பு, அவருடைய பின்னூட்டத்தில் கீழ் உள்ளது!

    ReplyDelete
  20. ///////////Blogger VIKNESHWARAN said...
    ஐயா, எனக்கு இரண்டில் ராகு, ஐந்தில் வளர்பிறை சந்திரன், பதினொன்றில் சுக்கிரன். இதில் இரண்டாம் வீடு

    ரிஷபம். அப்படி என்றால் சுக்கிரனின் பலமும் இரண்டாம் வீட்டின் பலமும் பாதிப்படைந்து உள்ளது எனக்

    கொள்ள வேண்டுமா?///////

    இரண்டாம் வீட்டு ராகு நீசம் பெற்றுள்ளார். அதோடு உச்சமான கேதுவின் பார்வையும் அதன் மீது விழுவதால் பாதிப்பு இருக்காது!

    ReplyDelete
  21. //////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sir 2ikkuriyavan , 5kkuriyavan (Guru) 7il(rishabam)-11 ikuriyvar 11il(kanni)..viruchiga lagnam palan eppadi Sir?
    Ananth -- Kuliganum Mandhiyum ondru ....
    Thank you.
    Loving Student
    Arulkumar Rajaraman////////////

    இரண்டாம் வீட்டதிபதியும், ஐந்தாம் வீட்டதிபதியும், மேலும் தனகாரகனுமான குரு 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்ப்பது நன்மையானது. ஆகவே எதற்குக் கவலை?
    குரு பார்த்தால் கோடி நன்மை! அதை மனதில் வையுங்கள்

    ReplyDelete
  22. ///////////Blogger ananth said...
    பதிவு மிகவும் அருமை. எனது நீண்ட நாளைய கேள்விகளுக்கு (என் மனதிற்குள் எழுந்த கேள்வி) இந்த ஒரு

    பதிவின் மூலம் விடை கிடைத்தது. எனது ஜாதகத்தில் 5ம் இடத்தில் வில்லன்கள் ராகுவும் செவ்வாயும்

    இருக்கிறார்கள். 11ல் கேது, குட்டி வில்லன்கள் குளிகனும், மாந்தியும் இருக்கிறார்கள். இதில் சனி பார்வை வேறு.

    தாங்கள் என்ன சொல்வீர்கள் என்று புரிகிறது. மற்ற அம்சங்களையும் தீர ஆராய்ந்து விட்டு ஒரு முடிவுக்கு

    வருகிறேன்.////////////

    மற்ற அம்சங்களுடன் சுயவர்க்கப்பரல்களையும் பாருங்கள்

    ReplyDelete
  23. ///////////Blogger RAJA said...
    sir,
    Now only I understood who are my villans.I have three villans in my chart//////////

    கவலைப் படாதீர்கள். ஜாதகத்தில் அதற்கான நஷ்ட ஈடு வேறு இடத்தில் கொடுக்கப்பெற்றிருக்கும்!

    ReplyDelete
  24. ///////////Blogger ananth said...
    நான் படித்த வரையில் மாந்தி வேறு குளிகன் வேறு. இருவரும் சனியின் உப கிரகங்கள். ஒருவருக்கொருவர்

    சுமார் 10 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள். எனது கருத்து சரியா தவறா என்று ஆசிரியரே சொல்லட்டும்.

    ஒரு வேளை நான் படித்தது தவறாக கூட இருக்கலாம். Jagannatha Horaவிலும் இருவரும் தனித் தனியாக

    குறிப்பிடப் பட்டிருக்கிறர்கள்.///////////

    நீங்கள் படித்ததெல்லாம் சரிதான். அவைகள் எல்லாம் உபகிரகங்கள். பெரும்பாலும் உபகிரகங்கள் பிரசன்ன ஜோதிடத்திற்கு மட்டுமே பயன்படும். தனி மனித ஜாதகங்களுக்கு ஒன்பது கிரகங்களை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். கேரள ஜோதிடர்கள் மட்டும் அந்த ஒன்பதுடன் மாந்தியையும் சேர்த்து எடுத்துக்கொள்வார்கள்.
    மற்றதையெல்லாம் விட்டுவிடுங்கள். அந்த 9 +1 மட்டுமே நீங்களும் எடுத்துக்கொள்ளுங்கள். அதிகமான குழப்பம் நமக்கு எதற்கு? நமக்குக் கைகொடுப்பதற்கு இருக்கவே இருக்கிறது அஷ்டகவர்க்கம்!

    ReplyDelete
  25. //////////Blogger Emmanuel Arul Gobinath said...
    ம்ம் நமக்கு 2,5 குரு அதிபதி அவர் லக்கினத்தில், 11 ல் சூரியன் . பணத்திற்கு குறை இன்னும் இல்லை

    இப்பதான் உழைப்பு தொடங்கியது பார்ப்போம்... ஆனா இந்த முறை ஜயா சொல்லியபடி புதன் கிழமை

    வந்திட்டார். ;) நன்றி உங்கள் அருமையான நேரத்திற்கு!////////////

    லக்கினத்தில் குரு இருந்தாலும் 7ல் இருந்து லக்கினத்தைக் குரு பார்த்தாலும் அது Blessed Horoscope
    ஆகவே மகிழ்ச்சியோடு இருங்கள்!

    ReplyDelete
  26. வாத்தியார் ஐயா !

    வணக்கம், எனது ஜாதகத்தில் 2 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 2 ஆம் வீட்டின் அதிபதி சனி . மொத்தம் பரல்கள் 29.

    5 ஆம் வீட்டில் செவ்வாய், சனி மற்றும் சுக்கிரன் . 5 ஆம் வீட்டின் அதிபதி சுக்கிரன் . மொத்தம் பரல்கள் 24.

    11 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 11 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் . மொத்தம் பரல்கள் 35.

    மிதுன ராசி, மகர லக்னம்.

    ஐயா, உங்களுடைய கணிப்பின் படி , இந்த ஜாதகம்

    a) bucket with a hole ?.
    b) good bucket with no water ?
    c) bucket with water?

    இது எந்த வகை சார்ந்தது . எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?

    தச , புத்தி சரி இல்லை என்றால் ,யோகங்கள் வேலை செய்யாதா ?

    நன்றியுடன்
    பிரேமானந்தன்

    ReplyDelete
  27. vanakkam aiya

    indru thamatham aagi vittathu manikkavum,tamililum thatachida mudiyavillai.indru miga mukkiyamana paadam.oru murai alla
    pala murai padikka vendum.muthalil
    jothidaridam anaivarum ketkum kelvi
    ithudan selvathai patriyathu.
    migavum vilakamaga irundathu nandri ayya...

    ReplyDelete
  28. உள்ளேன் அய்யா. பாடம் வழக்கம் போல விளக்கமாக இருந்தது. 9ம் வீட்டின் அதிபதியே 12ம் வீட்டின் அதிபதியாகவும் இருந்தால் என்ன செய்வது?

    //லக்கினத்தில் குரு இருந்தாலும் 7ல் இருந்து லக்கினத்தைக் குரு பார்த்தாலும் அது Blessed Horoscope// குரு ஆறாம் வீட்டதிபதியாக இருந்தாலுமா?

    ReplyDelete
  29. ///லக்கினத்தில் குரு இருந்தாலும் 7ல் இருந்து லக்கினத்தைக் குரு பார்த்தாலும் அது Blessed Horoscope
    ஆகவே மகிழ்ச்சியோடு இருங்கள்!/// நீங்கள் சொன்னால் சரி தான் :).

    ReplyDelete
  30. Blogger Prem said...
    வாத்தியார் ஐயா !
    வணக்கம், எனது ஜாதகத்தில் 2 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 2 ஆம் வீட்டின் அதிபதி சனி . மொத்தம் பரல்கள் 29.
    5 ஆம் வீட்டில் செவ்வாய், சனி மற்றும் சுக்கிரன் . 5 ஆம் வீட்டின் அதிபதி சுக்கிரன் . மொத்தம் பரல்கள் 24.
    11 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 11 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் . மொத்தம் பரல்கள் 35.
    மிதுன ராசி, மகர லக்னம்.
    ஐயா, உங்களுடைய கணிப்பின் படி , இந்த ஜாதகம்
    a) bucket with a hole ?.
    b) good bucket with no water ?
    c) bucket with water?
    இது எந்த வகை சார்ந்தது . எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?
    தச , புத்தி சரி இல்லை என்றால் ,யோகங்கள் வேலை செய்யாதா ?
    நன்றியுடன்
    பிரேமானந்தன்///////

    மகர லக்கினம். லக்கினாதிபதி திரிகோணம் பெற்றுள்ளார். 11ஆம் அதிபதியின் பார்வை அந்த வீட்டின்மேல் விழுகிறது. அதோடு பதினொன்றில் 35 பரல்கள். ஆகவே விடை = b) = good bucket தண்ணீர் தசா புத்தி காலங்களில் வரும். அப்போது பிடித்து வைத்துக்கொள்ளூங்கள்

    ReplyDelete
  31. Blogger sundar said...
    vanakkam aiya
    indru thamatham aagi vittathu manikkavum,tamililum thatachida mudiyavillai.indru miga mukkiyamana paadam.oru murai alla
    pala murai padikka vendum.muthalil
    jothidaridam anaivarum ketkum kelvi
    ithudan selvathai patriyathu.
    migavum vilakamaga irundathu nandri ayya...////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்!

    ReplyDelete
  32. /////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா. பாடம் வழக்கம் போல விளக்கமாக இருந்தது. 9ம் வீட்டின் அதிபதியே 12ம் வீட்டின் அதிபதியாகவும் இருந்தால் என்ன செய்வது?//////

    இரண்டுவிதமான பலன்களையும் அவர் கொடுப்பார். மிக்ஸட் ரிசல்ட்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //லக்கினத்தில் குரு இருந்தாலும் 7ல் இருந்து லக்கினத்தைக் குரு பார்த்தாலும் அது Blessed Horoscope// குரு ஆறாம் வீட்டதிபதியாக இருந்தாலுமா?///////

    நல்லவர் எங்கிருந்தாலும் நல்லவரே!. கொடுக்கும் அளவு மட்டும் இடத்திற்குத்தகுந்தாற்போல குறையும்

    ReplyDelete
  33. //////Blogger Emmanuel Arul Gobinath said...
    ///லக்கினத்தில் குரு இருந்தாலும் 7ல் இருந்து லக்கினத்தைக் குரு பார்த்தாலும் அது Blessed Horoscope
    ஆகவே மகிழ்ச்சியோடு இருங்கள்!///

    நீங்கள் சொன்னால் சரி தான் :).//////


    அதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்!

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா,இது வாழ்வீன் ஆதாரத்திற்க்கான பாடமாதலால் அனைவரும் கவனமாக படிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.பாடங்கள் எளிமையாக புரிகிறது. தாங்கள் வலையேற்றூம் நேரத்தை பார்த்தாலே பணீச்சுமை தெரிகிறது. தொடர்ந்து எழுதுவதற்க்கு நன்றிகள் ஐயா.

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍மதுரை தனா.

    ReplyDelete
  35. SP.VR. SUBBIAH said...
    மகர லக்கினம். லக்கினாதிபதி திரிகோணம் பெற்றுள்ளார். 11ஆம் அதிபதியின் பார்வை அந்த வீட்டின்மேல் விழுகிறது. அதோடு பதினொன்றில் 35 பரல்கள். ஆகவே விடை = b) = good bucket தண்ணீர் தசா புத்தி காலங்களில் வரும். அப்போது பிடித்து வைத்துக்கொள்ளூங்கள்///

    ஐயா,வணக்கம்.
    விளக்கம் கிடைத்தது நன்றி.

    எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?

    தச , புத்தி சரி இல்லை என்றால் ,யோகங்கள் வேலை செய்யாதா ?

    என்று கேட்டு இருந்தேன்.இதற்கும் விடை கிடைத்தால் நன்றாக இருக்கும்

    நன்றிவுடன்
    பிரேமானந்தன்

    ReplyDelete
  36. Sir Thanks for the lesson. I have found the transit planets are more powerful than dasa planets over the rasi charts. My friend uses KP stellar system and is capable of prediting accurately. In my horoscope Jupiter is in the 11 house in transit. he predicted that Jupiter will give the results of Mars which is the lord of Avitam star. From the date of transit of Jupiter to Avitam I could see improvement in my affairs. But stellar astrology is bit difficult to understand for me with my limited knowledge and experience. You may go through the books on stellar astrolgy and explain the nusances for the students.

    ReplyDelete
  37. எனக்கு நன்மை, நல்ல மாற்றங்கள் 1,5,9 அதிபர்களின் தசா, புத்தி, அந்தர, சூட்சும அந்தர காலங்களில் நடந்திருக்கிறது. அதிகமாக 9ம் அதிபதி (அவர் 2ம் இடத்திற்கும் அதிபதி - சுக்கிரன்) காலங்களில் நடந்திருக்கிறது. 1,5,9,11 அதிபதிகள் முறையே. 7,2,5,6 பரல்களுடன் (சுய அஷ்டவர்கத்தில்) இருக்கிறார்கள். என்ன குறை என்றால் இவர்கள் யாவரும் அதிகபட்சமாக நட்பாகதான் இருக்கிறார்கள். எனக்கு இரட்டை (நைசர்கிக மற்றும் ஆதிபத்திய) வில்லனான செவ்வாய்தான் உச்சமாக இருக்கிறார்.

    ReplyDelete
  38. வணக்கம் ஐயா
    அருமையானதொரு படத்தை தொடங்கி இருகிறீர்கள் ,எனக்கு இரண்டாம் வீடு கும்பம் அதில் சந்திரன் பரல்கள் 25 ஐந்தாம் வீடு ரிஷபம் தில் குரு பரல்கள் 25 பதிநோன்றம் வீடு விருச்சிகம் அதில் செவ்வாய்,புதன் சூரியன் பரல்கள் 29.என் ஐந்தாம் ,பதினொன்றாம் அதிபதி சுக்கரன் பனிரெண்டில் இருக்கிறார் ,அனால் இதை மறைவாக கொள்ளலாமா சுக்கிரன் பனிரெண்டில் இருந்தால் மறைவு இல்லை என்று சொல்கிறார்களே ,இதன் பலன் எப்படிஇருக்கும்
    thanks
    ganesan

    ReplyDelete
  39. choli ganesan said...
    வணக்கம் ஐயா
    அருமையானதொரு படத்தை தொடங்கி இருகிறீர்கள் ,எனக்கு இரண்டாம் வீடு கும்பம் அதில் சந்திரன் பரல்கள் 25 ஐந்தாம் வீடு ரிஷபம் தில் குரு பரல்கள் 25 பதிநோன்றம் வீடு விருச்சிகம் அதில் செவ்வாய்,புதன் சூரியன் பரல்கள் 29.என் ஐந்தாம் ,பதினொன்றாம் அதிபதி சுக்கரன் பனிரெண்டில் இருக்கிறார் ,அனால் இதை மறைவாக கொள்ளலாமா சுக்கிரன் பனிரெண்டில் இருந்தால் மறைவு இல்லை என்று சொல்கிறார்களே ,இதன் பலன் எப்படிஇருக்கும்
    thanks
    ganesan///

    Ganesan your 11th house lord is Chevvai and not sukiran as per the detail you furnished.

    Am i right Subbiah Sir?

    ReplyDelete
  40. ஆசிரியரே ஒரு வேண்டுகோள் ஐயா. பின்னாட்களில் உங்கள் பாடங்களில் கிரக காரகத்துவம் பற்றியும் எழுதுங்கள். ஆத்மகாரகன், அமத்திய காரகன், புத்திரகாரகன் என்கிறார்க்ளே அதுதான். அப்போதுதான் பாடம் முழுமையடையும்.

    ReplyDelete
  41. //பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை
    வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம்.
    //

    அட்டகாசமான உவமை சார்

    ReplyDelete
  42. ////////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,இது வாழ்வின் ஆதாரத்திற்க்கான பாடமாதலால் அனைவரும் கவனமாக படிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.பாடங்கள் எளிமையாக புரிகிறது. தாங்கள் வலையேற்றூம் நேரத்தை பார்த்தாலே பணிச்சுமை தெரிகிறது. தொடர்ந்து எழுதுவதற்கு நன்றிகள் ஐயா.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍மதுரை தனா.////////

    உங்கள் அன்பிற்கும், புரிதலுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. ///////Blogger Premanandhan said...
    SP.VR. SUBBIAH said...
    மகர லக்கினம். லக்கினாதிபதி திரிகோணம் பெற்றுள்ளார். 11ஆம் அதிபதியின் பார்வை அந்த வீட்டின்மேல் விழுகிறது. அதோடு பதினொன்றில் 35 பரல்கள். ஆகவே விடை = b) = good bucket தண்ணீர் தசா புத்தி காலங்களில் வரும். அப்போது பிடித்து வைத்துக்கொள்ளூங்கள்///
    ஐயா,வணக்கம்.
    விளக்கம் கிடைத்தது நன்றி.
    எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?
    தச , புத்தி சரி இல்லை என்றால் ,யோகங்கள் வேலை செய்யாதா ?
    என்று கேட்டு இருந்தேன்.இதற்கும் விடை கிடைத்தால் நன்றாக இருக்கும்
    நன்றிவுடன்
    பிரேமானந்தன்///////////

    யோக அமைப்புடன் இருக்கும் கிரகங்கள், அவற்றின் தசா புத்திகளில் அவற்றைக் கொடுக்கும்.
    அவைகள் தங்கள் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால்
    நிறைவான பலன்களைக் கொடுக்கும்
    4 பரல்களுடன் இருந்தால் சராசரியான பலன்களைக்கொடுக்கும்
    3 அல்லது அதற்குக் கீழான பரல்களுடன் இருந்தால் குறைந்த அளவே பலன்களைக்கொடுக்கும்
    நூற்றுக்கணக்கில் வருமா? அல்லது லட்சக் கணக்கில் வருமா? என்பது அவற்றின் வலுவைப் பொறுத்த மேட்டர்!

    ReplyDelete
  44. ///////////Blogger krish said...
    Sir Thanks for the lesson. I have found the transit planets are more powerful than dasa planets over the rasi charts. My friend uses KP stellar system and is capable of prediting accurately. In my horoscope Jupiter is in the 11 house in transit. he predicted that Jupiter will give the results of Mars which is the lord of Avitam star. From the date of transit of Jupiter to Avitam I could see improvement in my affairs. But stellar astrology is bit difficult to understand for me with my limited knowledge and experience. You may go through the books on stellar astrolgy and explain the nusances for the students.//////////

    நமது ஜோதிடத்திலும் அது உண்டு. அதைத்தான் நட்சத்திரசாரம் என்பார்கள். தனது சுயநட்சத்திர சாரத்தில் பயணிக்கும் கோச்சாரக் கிரகம் நன்மையைச் செய்யும் என்பதை இங்கே உள்ள ஜோதிடர்களும் அறிவார்கள் நண்பரே!அறிந்து சொல்வார்கள் நண்பரே!

    ReplyDelete
  45. ///////////Blogger ananth said...
    எனக்கு நன்மை, நல்ல மாற்றங்கள் 1,5,9 அதிபர்களின் தசா, புத்தி, அந்தர, சூட்சும அந்தர காலங்களில் நடந்திருக்கிறது. அதிகமாக 9ம் அதிபதி (அவர் 2ம் இடத்திற்கும் அதிபதி - சுக்கிரன்) காலங்களில் நடந்திருக்கிறது. 1,5,9,11 அதிபதிகள் முறையே. 7,2,5,6 பரல்களுடன் (சுய அஷ்டவர்கத்தில்) இருக்கிறார்கள். என்ன குறை என்றால் இவர்கள் யாவரும் அதிகபட்சமாக நட்பாகதான் இருக்கிறார்கள். எனக்கு இரட்டை (நைசர்கிக மற்றும் ஆதிபத்திய) வில்லனான செவ்வாய்தான் உச்சமாக இருக்கிறார்./////////

    தகவலுக்கு நன்றி. இந்தத் தகவல்கள் மற்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்!

    ReplyDelete
  46. ////////////////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    அருமையானதொரு படத்தை தொடங்கி இருகிறீர்கள் ,எனக்கு இரண்டாம் வீடு கும்பம் அதில் சந்திரன் பரல்கள் 25 ஐந்தாம் வீடு ரிஷபம் அதில் குரு பரல்கள் 25 பதினொன்றாம் வீடு விருச்சிகம் அதில் செவ்வாய்,புதன் சூரியன் பரல்கள் 29.என் ஐந்தாம் ,பதினொன்றாம் அதிபதி சுக்கரன் பனிரெண்டில் இருக்கிறார் ,அனால் இதை மறைவாக கொள்ளலாமா சுக்கிரன் பனிரெண்டில் இருந்தால் மறைவு இல்லை என்று சொல்கிறார்களே ,இதன் பலன் எப்படிஇருக்கும்
    thanks
    ganesan//////////////

    சுக்கிரன் உங்களுக்குப் ஐந்து மற்றும் பத்தாம் இடங்களின் அதிபதி. 12ஆம் இடம் மறைவு ஸ்தானம்தான். அதற்கு எந்த கிரகமும் விதிவிலக்கல்ல!

    சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் வலுவாக இருந்தால் பிரச்சினைகள் அதிகம் இருக்காது!

    ReplyDelete
  47. ////////////Blogger Prem said...
    choli ganesan said...
    வணக்கம் ஐயா
    அருமையானதொரு படத்தை தொடங்கி இருகிறீர்கள் ,எனக்கு இரண்டாம் வீடு கும்பம் அதில் சந்திரன் பரல்கள் 25 ஐந்தாம் வீடு ரிஷபம் அதில் குரு பரல்கள் 25 பதினொன்றாம் வீடு விருச்சிகம் அதில் செவ்வாய்,புதன் சூரியன் பரல்கள் 29.என் ஐந்தாம் ,பதினொன்றாம் அதிபதி சுக்கரன் பனிரெண்டில் இருக்கிறார் ,அனால் இதை மறைவாக கொள்ளலாமா சுக்கிரன் பனிரெண்டில் இருந்தால் மறைவு இல்லை என்று சொல்கிறார்களே ,இதன் பலன் எப்படிஇருக்கும்
    thanks
    ganesan///
    Ganesan your 11th house lord is Chevvai and not sukiran as per the detail you furnished.
    Am i right Subbiah Sir?////////

    மகர லக்கினத்திற்குப் பதினொன்றாம் அதிபதி செவ்வாய். நீங்கள் சொல்வது சரிதான் பிரேம்.
    அந்த அன்பர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  48. /////////////Blogger ananth said...
    ஆசிரியரே ஒரு வேண்டுகோள் ஐயா. பின்னாட்களில் உங்கள் பாடங்களில் கிரக காரகத்துவம் பற்றியும் எழுதுங்கள். ஆத்மகாரகன், அமத்திய காரகன், புத்திரகாரகன் என்கிறார்க்ளே அதுதான். அப்போதுதான் பாடம் முழுமையடையும்.//////////

    ஆகா, நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எழுதிவிடுகிறேன்!

    ReplyDelete
  49. ///Blogger புருனோ Bruno said...
    //பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை
    வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம். //
    அட்டகாசமான உவமை சார்////////

    அந்த உவமையை நீங்கள் ஒருவர்தான் ரசித்து, சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்!

    ReplyDelete
  50. //////Blogger MarmaYogi said...
    I am also present sir/////

    வருகைப்பதிவு போட்டாயிற்று யோகி!

    ReplyDelete
  51. Dear Sir

    I read one 8 questions and it is related to Astro only. but it is not related to present class. Shall I ask (whatever i read)?

    Thank you

    Loving Student
    Arulumar Rajaraman

    ReplyDelete
  52. Dear Sir

    Please dont Scold me ... Please answer these Questions:

    Question1: Which horoscope system is best or right or perfect -> Vakiya panchangam or Tirukanitha Panchangam

    Question 2: Here in Tamil Nadu, off late many astrologers are starting to say Only tirukanitha is right and vakiya is wrong. why?

    Question 3. If Vakiya is wrong -> these guys were using it to predict for several centuries and now why they are not using - > it will mean they were wrong in predicting for several centuries because of using a wrong system.

    Question 4. Tirukanitha panchang was authored by Aryabatta and baskara in early 4 Century AD. Actually they were using Vakiya panchang but they mixed it with mathematics to calculate all scientifically.

    Question 5: During last few years say last 17 years only this tirukanitha phanchangam is used every where to cast horoscopes because a software is developed to cast horoscopes in Computer. An at that time computers in India were just a fundamental devices so they understood only tirukanitha system

    Question 6. Because computers are eliminating the problem of painful calculation of horoscopes by astrologers using a paper and pen to cast a entire horoscope in paper from beginning -> can it be a reason for astrologers to say tirukanitha system is correct because it was drafted by a computer at a input of minor details as computer is idiot box with no knowledge on its own.

    Question 7. For last few years say 18 years I am seeing lot of broken-down marriages, wrong predictions etc, is it because of this so called computer horoscopes as they were cast using tirukanitha system

    Question 8. Why is this difference? If One astrologer says his predictions based on tirukanitha then the palans may entirely different from one told as per vakiya system.

    In my opinion, the reasons for wrong predictions is using Tirukanitha charts, as our rishis who devised the astrology in Veda, were using only Vakiya system, and their predictions were correct, even now, see nadi -> the nadi predictions are nearly 95 % correct. But once when people (astrologers ) started using Tirukanitha panchangam stating simple to cast using computer, I think all predictions were starting going wrong.


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  53. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    I read one 8 questions and it is related to Astro only. but it is not related to present class. Shall I ask (whatever i read)?
    Thank you
    Loving Student
    Arulumar Rajaraman/////

    Why hesitation? You can ask!

    ReplyDelete
  54. ///////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Please dont Scold me ... //////

    I never scold!!!!!!!!!!!!!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>
    //////Please answer these Questions:
    Question1: Which horoscope system is best or right or perfect -> Vakiya panchangam or Tirukanitha Panchangam///////

    Nothing is perfect expect The Almighty!!!!!!!!!!!!!
    Both system are right!
    >>>>>>>>>>>>>>>>>>
    Question 2: Here in Tamil Nadu, off late many astrologers are starting to say Only tirukanitha is right and vakiya is wrong. why?

    It is very simple!
    Because they don't know much about vakkiyam or don't like vakkiyam!!!!!!!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Question 3. If Vakiya is wrong -> these guys were using it to predict for several centuries and now why they are not using - > it will mean they were wrong in predicting for several centuries because of using a wrong system.

    Please read the answer given for the question number one!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Question 4. Tirukanitha panchang was authored by Aryabatta and baskara in early 4 Century AD. Actually they were using Vakiya panchang but they mixed it with mathematics to calculate all scientifically.//////

    Correct! Vakkiyam takes 360 days per year and the dasa system are also based on 360 days per year
    In thirukkanitham, the number of days per year is 365.25 and dasa system is on year based and not on day based
    >>>>>>>>>>>>>>>>>>>>>
    Question 5: During last few years say last 17 years only this tirukanitha phanchangam is used every where to cast horoscopes because a software is developed to cast horoscopes in Computer. An at that time computers in India were just a fundamental devices so they understood only tirukanitha system////

    100% correct!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Question 6. Because computers are eliminating the problem of painful calculation of horoscopes by astrologers using a paper and pen to cast a entire horoscope in paper from beginning -> can it be a reason for astrologers to say tirukanitha system is correct because it was drafted by a computer at a input of minor details as computer is idiot box with no knowledge on its own./////

    Why do you worry about astrologer? You can follow Thirukkanitham, since it is based fully on mathematics
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Question 7. For last few years say 18 years I am seeing lot of broken-down marriages, wrong predictions etc, is it because of this so called computer horoscopes as they were cast using tirukanitha system

    This is not correct! Planetary position in a chart will not change for both the system. The problem is only for the border births between 2 rasis or 2 lagnas
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Question 8. Why is this difference? If One astrologer says his predictions based on tirukanitha then the palans may entirely different from one told as per vakiya system.

    Forget the astrologers. Learn your self astrology. That is why I am teaching astrology to the next generation
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    In my opinion, the reasons for wrong predictions is using Tirukanitha charts, as our rishis who devised the astrology in Veda, were using only Vakiya system, and their predictions were correct, even now, see nadi -> the nadi predictions are nearly 95 % correct. But once when people (astrologers ) started using Tirukanitha panchangam stating simple to cast using computer, I think all predictions were starting going wrong.

    This is not correct. Please go through the answers given for the previous questions once again!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  55. திருக்கணிதமா வாக்கியமா என்பது என்னைப் பொறுத்த வரை தேவையற்ற சர்ச்சை. அவரவர் அனுபவத்தில் எது சரியாக வருகிறதோ அதை எடுத்து கொள்ள வேண்டியதுதான். ஆசிரியர் சொன்னது போல் Nothing is wrong, nothing is perfect. எனது தந்தையாரும் பல காலமாக, ஏன் இன்று வரையிலும் வாக்கிய பஞ்சாங்கம்தான் பயன்படுத்தி வருகிறார். 1990களில் எனக்கு Computer Astrology Software அறிமுகமான பிறகுதான் நான் திருக்கணிதத்திற்கு தாவினேன்.

    ReplyDelete
  56. வணக்கம்,
    எனக்கு மகர லக்னம் மீன ராசி . எனது ஜாதகத்தில் 2 -ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 2 ஆம் வீட்டின் அதிபதி சனி . 2 -ஆம் வீட்டின் பரல்கள் 31.
    சனி (பரல் 1) 7 ஆம் வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.

    5 ஆம் வீட்டில் புதன் . 5 ஆம் வீட்டின் அதிபதி சுக்கிரன் . 5 ஆம் வீட்டின் பரல்கள் 29.
    சுக்ரன் சூரியனோடு சேர்ந்து 6 ஆம் வீட்டில் அஸ்தமனம் ஆகி விட்டார் .

    11 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 11 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் 7 ஆம் வீட்டில் நீசம் அடைந்து விட்டார்.. 11 ஆம் வீட்டின் பரல்கள் 30.

    ஐயா, உங்களுடைய கணிப்பின் படி , இந்த ஜாதகம்

    a) bucket with a hole ?.
    b) good bucket with no water ?
    c) bucket with water?

    இது எந்த வகை சார்ந்தது . எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?

    தச , புத்தி சரி இல்லை என்றால் ,யோகங்கள் வேலை செய்யாதா ?

    ReplyDelete
  57. //நல்லவர் எங்கிருந்தாலும் நல்லவரே!. கொடுக்கும் அளவு மட்டும் இடத்திற்குத்தகுந்தாற்போல குறையும்//

    ஐயா,
    இந்த மாதிரி ஆணித்தரமாகச் சொல்லுகையில் எங்களின் நெடுநாள் ஐயங்கள் நீங்கி விடுகின்றன. நன்றி.


    தாங்கள் சொல்லிய வழிமுறைகளில் சிந்திக்கும்போது,
    5-ஆம் வீட்டுக்கு 5-ஆம் வீடு 9 ஆவது போல, 11-க்குப் 11-ம் 9-தான் என்றும்....
    அதுபோலவே 11-க்கு 4-ம் வீடுதான் 2 என்பதுபோல், 2-க்கு 2-ம் வீடு 4-ஆம் வீடு என்றும் உள்ள நெருங்கிய தொடர்புகள் புரிகின்றன.


    -அன்புடன் சீனு

    ReplyDelete
  58. ///2-க்கு 2-ம் வீடு 4-ஆம் வீடு என்றும் உள்ள நெருங்கிய தொடர்புகள் புரிகின்றன.


    -அன்புடன் சீனு///

    2kku 2m idam, 3m veedu aaghum.
    4m veedu alla.... sari thane Vathiyar iyya ?
    -anbumanavan,kandhiah

    ReplyDelete
  59. ஐயா
    வணக்கம். என் பெயர் மோகன். பிறந்த தேதி 7-4-1983 . நேரம் காலை 4-40 am. இடம் காரைக்குடி. நான் தங்களின் classroom2007 இன் மாணவன். எனக்கு ஒரு சந்தேகம். என் ஜாதகத்தில் 5 இல் ராகுவும் 11 இல் கேதுவும் வுள்ளனர். லக்னம் கும்பம். இதை எப்படி எடுத்துக்கொள்வது , ராகு கேது இரண்டும் பகை வீட்டில் வுள்ளனர். எனவே கேட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என எடுத்துக்கொள்வதா அல்லது இரண்டு வீட்டிலும் தீய கிரகங்கள் இருப்பதால் அது கெடுதல் என எடுத்துக்கொள்வதா?. 5 ஆம் வீட்டில் பரவல் 27. 11 ஆம் வீட்டில் பரவல் 31. தயவுசெய்து விளக்கவும் .

    ReplyDelete
  60. Blogger உங்கள் மாணவி said...
    வணக்கம், எனக்கு மகர லக்னம் மீன ராசி . எனது ஜாதகத்தில் 2 -ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 2 ஆம் வீட்டின் அதிபதி சனி . 2 -ஆம் வீட்டின் பரல்கள் 31.
    சனி (பரல் 1) 7 ஆம் வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.
    5 ஆம் வீட்டில் புதன் . 5 ஆம் வீட்டின் அதிபதி சுக்கிரன் . 5 ஆம் வீட்டின் பரல்கள் 29.
    சுக்ரன் சூரியனோடு சேர்ந்து 6 ஆம் வீட்டில் அஸ்தமனம் ஆகி விட்டார் .
    11 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை . 11 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் 7 ஆம் வீட்டில் நீசம் அடைந்து விட்டார்.. 11 ஆம் வீட்டின் பரல்கள் 30.
    ஐயா, உங்களுடைய கணிப்பின் படி , இந்த ஜாதகம்
    a) bucket with a hole ?.
    b) good bucket with no water ?
    c) bucket with water?
    இது எந்த வகை சார்ந்தது . எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?
    தச , புத்தி சரி இல்லை என்றால் ,யோகங்கள் வேலை செய்யாதா ?///////

    நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று வீடுகளுமே சராசரிக்கும் மேலான பரல்களுடன் இருக்கின்றன
    ஆனால் 2ஆம் அதிபதி தனது சுய வர்க்கத்தில் ஒரு பரலுடன் மட்டும் இருப்பதாலும். 11ஆம் அதிபதி நீசம் பெற்றுள்ளதாலும், தண்ணீர் அதுவாக வாராது. நீங்கள்தான் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து பக்கெட்டில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  61. ////////Blogger ananth said...
    திருக்கணிதமா வாக்கியமா என்பது என்னைப் பொறுத்த வரை தேவையற்ற சர்ச்சை. அவரவர் அனுபவத்தில் எது சரியாக வருகிறதோ அதை எடுத்து கொள்ள வேண்டியதுதான். ஆசிரியர் சொன்னது போல் Nothing is wrong, nothing is perfect. எனது தந்தையாரும் பல காலமாக, ஏன் இன்று வரையிலும் வாக்கிய பஞ்சாங்கம்தான் பயன்படுத்தி வருகிறார். 1990களில் எனக்கு Computer Astrology Software அறிமுகமான பிறகுதான் நான் திருக்கணிதத்திற்கு தாவினேன்./////

    தங்கள் கருத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  62. Blogger Cheenu said...
    //நல்லவர் எங்கிருந்தாலும் நல்லவரே!. கொடுக்கும் அளவு மட்டும் இடத்திற்குத்தகுந்தாற்போல குறையும்//
    ஐயா,
    இந்த மாதிரி ஆணித்தரமாகச் சொல்லுகையில் எங்களின் நெடுநாள் ஐயங்கள் நீங்கி விடுகின்றன. நன்றி.
    தாங்கள் சொல்லிய வழிமுறைகளில் சிந்திக்கும்போது,
    5-ஆம் வீட்டுக்கு 5-ஆம் வீடு 9 ஆவது போல, 11-க்குப் 11-ம் 9-தான் என்றும்....
    அதுபோலவே 11-க்கு 4-ம் வீடுதான் 2 என்பதுபோல், என்றும் உள்ள நெருங்கிய தொடர்புகள் புரிகின்றன.
    -அன்புடன் சீனு/////

    2-க்கு 2-ம் வீடு 4-ஆம் வீடு = சரியல்ல
    2-க்கு 2-ம் வீடு 3ஆம் வீடு ஆகும்!

    ReplyDelete
  63. Blogger kandhiah said...
    ///2-க்கு 2-ம் வீடு 4-ஆம் வீடு என்றும் உள்ள நெருங்கிய தொடர்புகள் புரிகின்றன.
    -அன்புடன் சீனு///

    2kku 2m idam, 3m veedu aaghum.
    4m veedu alla.... sari thane Vathiyar iyya ?
    -anbumanavan,kandhiah

    நீங்கள் சொல்வது சரிதான்.

    ReplyDelete
  64. ////Blogger indianm12 said...
    ஐயா
    வணக்கம். என் பெயர் மோகன். பிறந்த தேதி 7-4-1983 . நேரம் காலை 4-40 am. இடம் காரைக்குடி. நான் தங்களின் classroom2007 இன் மாணவன். எனக்கு ஒரு சந்தேகம். என் ஜாதகத்தில் 5 இல் ராகுவும் 11 இல் கேதுவும் வுள்ளனர். லக்னம் கும்பம். இதை எப்படி எடுத்துக்கொள்வது , ராகு கேது இரண்டும் பகை வீட்டில் வுள்ளனர். எனவே கேட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என எடுத்துக்கொள்வதா அல்லது இரண்டு வீட்டிலும் தீய கிரகங்கள் இருப்பதால் அது கெடுதல் என எடுத்துக்கொள்வதா?. 5 ஆம் வீட்டில் பரல் 27. 11 ஆம் வீட்டில் பரவல் 31. தயவுசெய்து விளக்கவும் .

    11ஆம் வீட்டில் 31 பரல்கள் உள்ளது நன்மை பயக்கும். அந்த வீட்டு அதிபதியின் தசா புத்தியில் லாபத்தைத் தருவான்.

    ReplyDelete
  65. i'm lucky from paris

    ella kiragamum ketu to ragu irukku but, guru maddum out la irukku ithu k.s.d ?


    guru in 7th position, natchathiram (ardr)
    ketu in 8th
    ragu in 2nd

    ReplyDelete
  66. /////Blogger LUCKY said...
    i'm lucky from paris
    ella kiragamum ketu to ragu irukku but, guru maddum out la irukku ithu k.s.d ?
    guru in 7th position, natchathiram (ardr)
    ketu in 8th
    ragu in 2nd////

    லக்கினமும், குருவைத் தவிர மற்ற ஆறு கிரகங்களும் ராகு & கேதுவின் பிடிக்குள் இர்ப்பதால் காலசர்ப்ப தோஷம்/ யோகம் உண்டு. குரு 7ல் இருப்பதால் பல நன்மைகள் உண்டு. He will give you standing power!

    ReplyDelete
  67. meendum lucky,

    ithu en friend yathagam iya,

    7 th guru (ardr)
    8 th ketu
    10 th sun and etc...
    11 th moon etc
    12 th venus etc ...
    lagna saturn
    2 nd ragu
    so lagnam ulla thané irukku, guru maddum thané out la irukku ?
    ithu k.s.d thané ? yogam irukka ?
    sani maha dasa, ithu mudiya 7 years irrukku and thulam rasi and danush lagnam so 7 1/2 start eppady irukkum ?

    than my self :

    langnam : ethuvum illai
    2nd ragu
    8th ketu
    ella kirakamum ragu ketuvukkulla maddidichu ? naan simma rasi, mithuna lagnam, ippa mars dasa mudiyira time, mars dasa ennai romba pirichu eduthiduthu apuram 7 1/2 nadakuthu vera ? apuram 2010 piraku ragu dasa starts so eppady irukkum aya ?

    intha 2 yathakamum life la sera poorunthuma ?

    nanri

    ReplyDelete
  68. ஜயா வணக்கம், எனக்கு மகர லக்னம் சிம்ம ராசி. எனது ஜாதகத்தில் 2 -ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை. 2 ஆம் வீட்டின் அதிபதி சனி. 2 -ஆம் வீட்டின் பரல்கள் 30.
    சனி (பரல் 4) 7 ஆம் வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.
    5 ஆம் வீட்டில் செவ்வாய். 5 ஆம் வீட்டின் அதிபதி சுக்கிரன். 5 ஆம் வீட்டின் பரல்கள் 28.
    சுக்ரன் ராகுவோடு சேர்ந்து 10 ஆம் வீட்டில். தனது சொந்த வீட்டில் ஆட்சி
    7 பரல்கள், 38
    11 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை. 11 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய் 5 ஆம் வீட்டில். 11 ஆம் வீட்டின் பரல்கள் 27.
    ஐயா, உங்களுடைய கணிப்பின் படி , இந்த ஜாதகம்
    a) bucket with a hole ?.
    b) good bucket with no water ?
    c) bucket with water?
    இது எந்த வகை சார்ந்தது . எனது ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எப்போது வேலை செய்யும்.?
    இதற்கு முதல் பல திரடியான சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன.

    ReplyDelete
  69. http://psssrf.org.in/ctcastro/match.aspx?tmdd=23&tmmm=07&tmyyy=1971&tmbh=22&tmbm=55&tmbs=0&tmbp=PONDICHERY&tfdd=11&tfmm=11&tfyyy=1984&tfbh=12&tfbm=25&tfbs=0&tfbp=TINDIVANAM



    இந்த இணையதள ஜாதக கணிக்கும் முறை சரியா?
    http://psssrf.org.in

    ஆன் லைன் ஜாதக கணிக்கும் முறை தமிழில்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com