16.3.09

கண்ணாடியும் முகச் சவரமும்!

கண்ணாடியும் முகச் சவரமும்!

ஒரு ஆசிரமம். அது மிகவும் புகழ்பெற்ற மகான் வசித்த இடம்.
நாட்டின் பிரதமாராக இருந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள்
மன அமைதி வேண்டி, பல சமயம், அந்த ஆசிரமத்திற்கு வந்து
சென்றிருக்கிறார்.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள் அந்த மகான் எவ்வளவு
பிரபலமானவர் என்று!

அந்த ஆசிரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், அவர்
யாரென்று உங்களால ஊகிக்க முடியும்.

ஊகம் செய்து சொல்லுங்கள்

அந்த ஆசிரமம் இருப்பது திருவண்ணாமலையில்!

அவர் வாழ்ந்த காலம் : December 30th, 1879 to 14 April 1950
(சுமார் 70 ஆண்டுகள்)

59 ஆண்டுகள் சென்று விட்டன. ஆனாலும் அந்த ஆசிரமத்திற்கு
வந்து செல்வோர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை!
--------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அந்த மகான் இருந்த சமயம், ஒரு நாள், பல வேதவிற்பன்னர்கள்
கூட்டாகப் படையெடுத்து வந்தார்கள். அவர் முன்னிலையில்
வேத பாடங்களை மனனமாகச் சொன்னார்கள்.

உபநிடதங்களைப் பற்றி விவாதித்தார்கள்.

மகானும் அதில் கலந்து கொண்டார்.

அவருக்குப் பணிவிடைகள் செய்யும் பக்தன் ஒருவனும் அங்கே
சற்றுத் தள்ளி அமர்ந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்தப் பக்தன் அதிகம் படிக்காதவன்.அவன் மனதில் ஒரு ஏக்கம்.
"நாமும் இவர்களைப் போல வேதங்களையும், உபநிடதங்களையும்
படித்திருந்தால், மகானுடன் நெருங்கி உரையாடும் பாக்கியம்
நமக்கும் கிடைத்திருக்குமே! படிக்காததால் அது கிடைக்காமல்
போய்விட்டதே. வெறும் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருக்க
வேண்டியதிருக்கிறதே!" என்று பலவாறாக வருந்தினான். ஏங்கினான்.

அவனுடைய ஏக்கத்தைக் கண்ணுற்றார் அந்த மகான்.

வந்த பண்டிதர்கள் அனைவரும் சென்ற பிறகு, தனக்குப் பணிவிடை
செய்யத் துவங்கிவனை, அருகில் அழைத்த மகான் கேட்டார்.

"இன்று முகச் சவரம் செய்து கொண்டாயா?"

"ஆமாம், செய்து கொண்டேன் சுவாமி!" இது அவன்.

"எதிரே உள்ள கண்ணாடியில் முகத்தைப் பார்த்து சவரம் செய்து
கொண்டாய் இல்லையா?"

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை."ஆமாம் சுவாமி" என்று பணிவுடன்
பதில் அளித்தான்.

"கண்ணாடி வழிகாட்டுகிறது. அதைப் பார்த்து முகச் சவரம் செய்து
கொள்கிறாய்! அந்தப் பணி முடியும் வரையில் உனக்குக் கண்ணாடி
உதவுகிறது. அந்தக் கண்ணாடியால், உனக்காக, தானாக அது உன்
முகத்தைச் சவரம் செய்துவிட முடியுமா?"

"முடியாது சுவாமி!"

"வேதங்களும், உபநிடதங்களும், சாஸ்திரங்களும் அப்படிப்பட்டவைதான்.
நீ சிரமம் கொள்ளாமல், காயம் அடையாமல் முக்தி அடைய அவைகள்
உதவும். அவ்வளவுதான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர
முடியாது. தீவிர பக்தியும், இறை வழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைக்
கொடுக்கும். உன்னை இறைவனடி சேர்க்கும். கவலை கொள்ளாமல்
அதை மட்டும் நீ செய்தால் போதும்.

பக்தனின் கண்கள் பனித்து விட்டன!
-------------------------------------------------------------------------------
"Bhakthi, Karma, Jnana and (Raja) Yoga, all these paths are one.
You cannot love God without knowing Him nor know him without loving
him. Love manifests itself in everything you do and that is Karma.
The development of mental perception (Yoga), is the necessary preliminary
before you can know or love God..."

"Peace can reign only when there is no disturbance by thought.
When the mind has been annihilated there will be perfect peace."
வாழ்க வளமுடன்!

32 comments:

  1. //
    "வேதங்களும், உபநிடதங்களும், சாஸ்திரங்களும் அப்படிப்பட்டவைதான்.
    நீ சிரமம் கொள்ளாமல், காயம் அடையாமல் முக்தி அடைய அவைகள்
    உதவும். அவ்வளவுதான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர
    முடியாது. தீவிர பக்தியும், இறை வழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைக்
    கொடுக்கும். உன்னை இறைவனடி சேர்க்கும். கவலை கொள்ளாமல்
    அதை மட்டும் நீ செய்தால் போதும்.//

    அருமையான வாசகங்கள்.
    இறை வழிபாடே உலகில் தலை சிறந்தது.அதி உன்னதமானது.

    தெய்வப்புலவரும்
    இதை

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்
    பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

    ReplyDelete
  2. இறைவழிபாடும் தீவிர பக்தியையும்
    அருமையான விளக்கினீர்கள்.

    வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. Dear Sir

    Eppadi sir ungalal mattum ippadi eludha mudigradhu..Acharyamana visham than...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  4. ஆஹா.. நல்லதொரு விளக்கம் வாத்தியாரே..

    படிப்பறிவு ஆர்வத்தையும், வழிச்செயலையும் யோசிக்க வைக்கிறது.. இறை வேண்டுதலும், பக்தியும்தான் அந்தப் பாதையில் மனிதனை செலுத்துகிறது..

    பின்னுறீங்க வாத்தியாரே..!

    ReplyDelete
  5. Great Article. When we love our duties in this world and perform them, we love the God and fulfills his purpose of creation....Nice

    ReplyDelete
  6. //ஆஹா.. நல்லதொரு விளக்கம் வாத்தியாரே..

    படிப்பறிவு ஆர்வத்தையும், வழிச்செயலையும் யோசிக்க வைக்கிறது.. இறை வேண்டுதலும், பக்தியும்தான் அந்தப் பாதையில் மனிதனை செலுத்துகிறது..

    பின்னுறீங்க வாத்தியாரே..!//

    Repeettu!1

    ReplyDelete
  7. Blogger திருநெல்வேலி கார்த்திக் said... //
    "வேதங்களும், உபநிடதங்களும், சாஸ்திரங்களும் அப்படிப்பட்டவைதான்.
    நீ சிரமம் கொள்ளாமல், காயம் அடையாமல் முக்தி அடைய அவைகள்
    உதவும். அவ்வளவுதான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர
    முடியாது. தீவிர பக்தியும், இறை வழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைக்
    கொடுக்கும். உன்னை இறைவனடி சேர்க்கும். கவலை கொள்ளாமல்
    அதை மட்டும் நீ செய்தால் போதும்.//
    அருமையான வாசகங்கள்.
    இறை வழிபாடே உலகில் தலை சிறந்தது.அதி உன்னதமானது.
    தெய்வப்புலவரும்
    இதை
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்
    இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்
    பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது//////

    அறியாமைக்காக கவலைகொள்ளல் ஆகாது என்பதை வலியுறுத்தும் செய்திக்காவே இதை எழுதினேன் நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger வேலன். said...
    இறைவழிபாடும் தீவிர பக்தியையும்
    அருமையான விளக்கினீர்கள்.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  9. ///////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Eppadi sir ungalal mattum ippadi eludha mudigradhu..Acharyamana visham than..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    இந்த செய்தியை யார் எழுதினாலும் மனதில் பதியும்படியாகத்தான் இருக்கும். செய்தியின் தன்மை அப்படி!

    ReplyDelete
  10. /////Blogger krish said...
    Excellent./////

    பாராட்டிற்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  11. /////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஹா.. நல்லதொரு விளக்கம் வாத்தியாரே..
    படிப்பறிவு ஆர்வத்தையும், வழிச்செயலையும் யோசிக்க வைக்கிறது.. இறை வேண்டுதலும், பக்தியும்தான் அந்தப் பாதையில் மனிதனை செலுத்துகிறது..
    பின்னுறீங்க வாத்தியாரே..!///////

    உங்களை (கண்மணிகளை) நினைத்தவுடன் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது தமிழரே! எழுத்தின் அழுத்ததிற்கு அதுதான் காரணம்!

    ReplyDelete
  12. //////Blogger Ragu Sivanmalai said...
    Great Article. When we love our duties in this world and perform them, we love the God and fulfills his purpose of creation....Nice////////

    நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  13. /////Blogger Geekay said...
    //ஆஹா.. நல்லதொரு விளக்கம் வாத்தியாரே..
    படிப்பறிவு ஆர்வத்தையும், வழிச்செயலையும் யோசிக்க வைக்கிறது.. இறை வேண்டுதலும், பக்தியும்தான் அந்தப் பாதையில் மனிதனை செலுத்துகிறது..
    பின்னுறீங்க வாத்தியாரே..!//
    Repeettu!1/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  14. அருமையான விளக்கம்

    நன்றி ஐயா

    ReplyDelete
  15. என்னைப் பொறுத்த வரை நாம் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி மேலும் சில அடிகள் எடுத்து வைப்பார். இறைவனை அடைவதற்கான வழி நமக்கு தெரியாவிட்டாலும் கூட நமக்கு அந்த எண்ணம் இருந்தாலே போதும். அவர் நமக்கு யார் மூலமாகவாவது வழி காட்டுவார். பகவத்கீதையும் அதைத் தான் சொல்கிறது.

    ReplyDelete
  16. ஹலோ சார்,

    அது சரி நான் இது பற்றி உங்களோட நிறைய்ய்ய்ய பேச விரும்ம்புகிறேன்.
    அதுக்கெல்லாம் தான் உங்களுக்கு நேரமில்லையே. பாக்கலாம் எப்போதாவது ஒரு நாள் கிடைக்காமலா போய்விடும்?
    நல்லதொரு விளக்கம்.

    ReplyDelete
  17. எளிமையான நிறைவான விளக்கம் வாத்தியாரையா. அருமை. அறியாதவனாக இருப்பதில் தவறில்லை. ஆனால் கற்றுக்கொள்ள முயர்ஸி செய்ய வேண்டும். மேலும் அறியாமையை பெருமையாக நினைத்துக்கொண்டு அறிந்தவர்களை ஏகடியம் செய்வதும் தவறு.

    ReplyDelete
  18. அன்புள்ள ஐயா!

    ரமண மகரிஷியை பற்றி தானே கூறுகிறீர்கள்!!

    பாடம் அருமை, முன்னம் ஒரு முறை படித்திருந்தாலும், உங்களின் நடை சுவையாக உள்ளது.

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  19. sir,Article about the Pious very nice...
    I always impressed with you lore...
    Thank you

    ReplyDelete
  20. Ayya, 2,61,600 avadhu hit enudayadhu :)

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா
    இன்றைய பக்தியும் வழிபாடும் எப்படி இருக்கிறது என்பது இல்லாருக்கும் தெரியும் .உண்மையான பக்தி ஒருவனை நிச்சயம் கடவுளிடம் சேர்க்கும் .அனால் நமக்கு அது என்னவென்று தெரிய ஒரு குரு அருள் நிச்சியம் தேவை .எனென்றால் கடவுளுக்கும் நமக்கும் ஒரு பாலமாக இருந்து நம்மை கரை தேற்றி விடுவார்.எப்படி என்றால் கடவுளை அறியும் வழி தெறிந்து அந்த வழியில் வரும் இடர் குழிகளைஎல்லாம் தாண்டி நம்மை அவரிடம் சேர்க்கும் திறமை அவரிடம் மட்டுமே உண்டு .அன்புதான் கடவுளை அடைய மிகச்சிறந்த சாதனம் அனால் உலகத்தில் பல பேருக்கு அது எப்படி என்றோ என்ன வென்றோ தெரியாது.உலகத்தில் அன்பு ஒன்றேதான் எல்லோரும் விரும்பும் ஒன்றாக இருக்கும் ,எனென்றால் அன்பு ஒன்றுதான் அன்பை மட்டுமே கொண்டுவரும் .அன்பிற்காகவே அன்பு என்பதனை நம் வாழ்வில் கடைபிடிக்க எல்லோர்க்கும் ஒரு நல்ல குரு துணை கிடைக்க ஆண்டவன் அருள்புரிவாராக
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  22. //////Blogger thirunarayanan said...
    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா///////

    நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  23. /////////Blogger ananth said...
    என்னைப் பொறுத்த வரை நாம் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி மேலும் சில அடிகள் எடுத்து வைப்பார். இறைவனை அடைவதற்கான வழி நமக்கு தெரியாவிட்டாலும் கூட நமக்கு அந்த எண்ணம் இருந்தாலே போதும். அவர் நமக்கு யார் மூலமாகவாவது வழி காட்டுவார். பகவத்கீதையும் அதைத் தான் சொல்கிறது.///////

    உண்மை. புரிதலுக்கும் அதை பகிர்ந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. ///////////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    அது சரி நான் இது பற்றி உங்களோட நிறைய்ய்ய்ய பேச விரும்ம்புகிறேன்.
    அதுக்கெல்லாம் தான் உங்களுக்கு நேரமில்லையே. பாக்கலாம் எப்போதாவது ஒரு நாள் கிடைக்காமலா போய்விடும்?
    நல்லதொரு விளக்கம்./////////////

    கிடைக்கும். பெங்களூர் வரும்போது நமது வகுப்பறை மாணவர்களுக்கு ஒரு சந்திப்பு வைத்துவிடலாம்!

    ReplyDelete
  25. ///////////////Blogger அமர பாரதி said...
    எளிமையான நிறைவான விளக்கம் வாத்தியாரையா. அருமை. அறியாதவனாக இருப்பதில் தவறில்லை. ஆனால் கற்றுக்கொள்ள முயர்ஸி செய்ய வேண்டும். மேலும் அறியாமையை பெருமையாக நினைத்துக்கொண்டு அறிந்தவர்களை ஏகடியம் செய்வதும் தவறு.///////////

    இதில் ஏகடியத்திற்கு வாய்ப்பு இல்லை. விளக்கம் சொன்ன மகான் ரமண மகரிஷி! வருத்தம் கொண்டவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்

    ReplyDelete
  26. /////////////Blogger SP Sanjay said...
    அன்புள்ள ஐயா!
    ரமண மகரிஷியை பற்றி தானே கூறுகிறீர்கள்!!
    பாடம் அருமை, முன்னம் ஒரு முறை படித்திருந்தாலும், உங்களின் நடை சுவையாக உள்ளது.
    என்றும் அன்புடன்////////

    இத்தனை பேர்களில் நீங்கள் ஒருவர்தான் அதைச் சொன்னவர் ரமணர் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  27. //////////Blogger VA P RAJAGOPAL said...
    sir,Article about the Pious very nice...
    I always impressed with you lore...
    Thank you///////////

    நன்றி ராஜகோபால்!

    ReplyDelete
  28. ///////////Blogger Prabhu said...
    Ayya, 2,61,600 avadhu hit enudayadhu :)////////

    எண்ணிக்கை முக்கியம் இல்லை. உங்கள் வருகை போதும்!

    ReplyDelete
  29. ////////////Blogger choli ganesan said...
    வணக்கம் ஐயா
    இன்றைய பக்தியும் வழிபாடும் எப்படி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும் .உண்மையான பக்தி ஒருவனை நிச்சயம் கடவுளிடம் சேர்க்கும் .அனால் நமக்கு அது என்னவென்று தெரிய ஒரு குரு அருள் நிச்சியம் தேவை .எனென்றால் கடவுளுக்கும் நமக்கும் ஒரு பாலமாக இருந்து நம்மை கரை தேற்றி விடுவார்.எப்படி என்றால் கடவுளை அறியும் வழி தெறிந்து அந்த வழியில் வரும் இடர் குழிகளைஎல்லாம் தாண்டி நம்மை அவரிடம் சேர்க்கும் திறமை அவரிடம் மட்டுமே உண்டு .அன்புதான் கடவுளை அடைய மிகச்சிறந்த சாதனம் அனால் உலகத்தில் பல பேருக்கு அது எப்படி என்றோ என்ன வென்றோ தெரியாது.உலகத்தில் அன்பு ஒன்றேதான் எல்லோரும் விரும்பும் ஒன்றாக இருக்கும் ,எனென்றால் அன்பு ஒன்றுதான் அன்பை மட்டுமே கொண்டுவரும் .அன்பிற்காகவே அன்பு என்பதனை நம் வாழ்வில் கடைபிடிக்க எல்லோர்க்கும் ஒரு நல்ல குரு துணை கிடைக்க ஆண்டவன் அருள்புரிவாராக
    நன்றி
    கணேசன்////////////////

    உங்கள் பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி கணேசன்!

    ReplyDelete
  30. aah..ramanahh right..? nice post , sir. i heard smt indrah used to visit j.k as well.

    ReplyDelete
  31. ////Blogger mike said...
    aah..ramanahh right..? nice post , sir. i heard smt indrah used to visit j.k as well.////

    J.கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துவிட்டுச் செல்வார் என்பது பற்றித் தெரியவில்லை. நன்றி மைக்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com