கம்பங்களி தின்றவனும் தங்கபஸ்பம் தின்றவனும்!
எல்லா மனிதனும் அலைவது பணத்திற்கு. பணம் கிடைத்தவுடன் அலைவது
கிராமமாக இருந்தால் சிட்டுக்குருவி லேகியம், சிறு நகரமாக இருந்தால்
தங்கபஸ்பம். மாநகரமாக இருந்தால் வயாக்ரா.
அதற்குப் பிறகு அலைவது?
அதைப் பதிவில் எழுத முடியாது!
நேரில் சந்திக்கும்போது பேசுவோம்.
இப்போது கட்டுரையைப் படியுங்கள்
சும்மா, ஜோதிடத்தையே எழுதிக்கொண்டிருந்தால் எழுதும் எனக்கும்
அலுத்துவிடும். படிக்கும் அருப்புக்கோட்டை பாஸ்கருக்கும் அலுத்துவிடும்.
ஆகவே இது ஜோதிடம் கலந்த ஆன்மீக மற்றும், மனவளக் கட்டுரை!
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
படித்துவிட்டு எப்படி இருந்தது என்று மட்டும் ஒரு வரி சொல்லுங்கள்.
Over to Katturai
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இறைவன் வகுத்த நியதி!
(இதுதான் உண்மையான தலைப்பு சாமிகளா)
அப்போ முதலில் உள்ள தலைப்பு?
அது நமது வகுப்பிற்கு வராதவர்களை உள்ளே பிடித்து இழுத்து
வருவதற்காகக் கொடுக்கப்பட்டது:-)))
---------------------------------------------------------------------------------------------
"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."
என்றார் வள்ளுவப் பெருந்தகை!
"The Almighty is void of desire or aversion and one who meditate his feet
never gets evil" என்று டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் அதற்கு
ஆங்கிலத்தில் ஒற்றை வரியில் விளக்கம் எழுதினார்.
விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாமல்
நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை என்று
சொல்லிய வள்ளுவர், அதைவிட முக்கியமான செய்தியையும் இந்தக்
குறளில் வெளிப்படுத்தியுள்ளார்
இறைவன் விருப்பு, வெறுப்பு அற்றவர். likes & dislikes இல்லாதவர்
என்கிறார். அவர்முன் அனைவரும் சமம்.
ஆமாம், இறைவன் எல்லோரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறார்.
ஜோதிடக்கலையைப் பயின்றவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இந்த
உண்மை சற்று விபரமாகத் தெரியும்.
எப்படி?
ஜாதகத்தில் 4 வகைகள்.12 வீடுகள், 36 பாக்கியங்கள் என்று பிரிவுகள்
இருந்தாலும், ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பு எண் 337 தான்.
அதாவது 337 பரல்கள் மட்டுமே.
நாட்டை ஆளுகின்ற பிரதமருக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
அலுவலகத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியருக்கும் 337
பரல்கள்தான். அம்பானிகளுக்கும், பிர்லாக்களுக்கும் 337 தான்.
அவர்களின் வாகன ஓட்டிகளுக்கும் 337 தான். ஆஸ்கார் விருது
வாங்கிய ஏஆர்.ரஹ்மானுக்கும் 337 தான். அவருடைய குழுவில்
வயலின் வாசிக்கும் இசைக் கலைஞருக்கும் 337தான்.
அது எப்படி சாத்தியம்?
வாழ்க்கைத் தரம் (Status in life) ஏன் வேறுபடுகிறது?
செல்வம் நிறைந்து இருக்கும் இடத்தில் உடல் வலு அல்லது உடல்
நலம் முழுமையாக இருக்க்காது. அது முழுமையாக இருக்கும் இடத்தில்
செல்வம் அடிபட்டுப்போயிருக்கும்.
கடைநிலை ஊழியன் தன் வேலை முடிந்ததும், மாலையில் பஸ் ஏறி
வீட்டிற்குப் போய்விடுவான். பிரபலங்கள் பாதுகாவலர்கள் இன்றித்
தனியாக வெளியே செல்ல முடியாது.
கைவண்டி இழுப்பவனும் அல்லது மூட்டை தூக்கிப் பிழைப்பவனும்
எதைக் கொடுத்தாலும் நன்றாகச் சாப்பிடுவான். சர்க்கரை வியாதி, இரத்த
அழுத்தம், இருதயக்கோளாறு போன்ற நோய்கள் அவனை எட்டிக்
கூடப் பார்க்காது. அவனுக்கு இருக்கும் தூக்கமும், அச்சமின்மையும்
பிரபலங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் இருக்காது.
உடல் வலிமை, மன வலிமை, அறிவு வலிமை இம்மூன்றும் ஒன்றாகச்
சேர்ந்து படைக்கப்பெற்ற ஜீவன் என்பது அபூர்வம்.
இம்மூன்றையும் ஒன்றாகப் பெற்ற ஆதிசங்கரர், விவேகானந்தர்
போன்றோர்கூட நீண்ட ஆயுளைப் பெறவில்லை!
அதுதான் இறைவனின் படைப்பு!
ஆடு, மாடு, மான் இவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன்,
குதிரைக்கு ஏன் அதைக் கொடுக்கவில்லை?
குதிரைக்கு உடல் வலிமையும் வேகத்தையும் கொடுத்த இறைவன்
கொம்பைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் என்ன நடக்கும்
என்று அவருக்குத் தெரியாதா என்ன? ஆகவே கொடுக்கவில்லை.
கழுதையும் நான்கு கால் பிராணிதானே, அதற்குக் கொம்பில்லையே
என்று சிலர் கேட்கலாம். கழுதைக்கு அதன் கால்களில் பலம்
கொடுக்கப்பட்டுள்ளது. உதை வாங்கியவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
குயிலுக்கு இனிமையான குரலைக் கொடுத்த இறைவன், உருவத்தில்
அதைச் சிறியதாக, கறுப்பாகப் படைத்து விட்டார். மயில்
அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிய குரல் இல்லையே?
மொத்தமுள்ள 36 பாக்கியங்களில், சரிபாதியைக்கூட எந்த
மனிதனுக்கும் இறைவன் கொடுக்கவில்லை!
ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது!
ஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன:
1. 'தர்ம' ஜாதகம்
2. 'தன' ஜாதகம்
3. 'காம' ஜாதகம்
4. 'ஞான' ஜாதகம்
தர்ம ஜாதகம் என்பது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய வீடுகள் நன்றாக
அமையப்பெற்ற ஜாதகம். 1ஆம் வீடு (லக்கினம்) 5ஆம் வீடு
(பூர்வ புண்ணியம்) 9ஆம் வீடு(பாக்கிய ஸ்தானம்) ஆகிய மூன்றும்
நன்றாக இருக்க வேண்டும். அந்த ஜாதகன் தான் பல தர்மங்களைச்
செய்வான். கோவில் கட்டுவான் அல்லது கோவில்களுக்குத் திருப்பணிகள்
செய்வான். குளங்கள் வெட்டுவான். இருக்கும்போதும், பெயரோடும்,
புகழோடும் விளங்குவான்.இறந்த பின்னும் அவன் பெயர் நிலைத்து
நிற்கும்.
'தன' ஜாதகத்தில் இரண்டு, ஆறு, பத்து ஆகிய வீடுகள் நன்றாக
அமைந்திருக்கும். (House of Finance, House of Servants and House
of Profession). இந்த ஜாதகன்தான் நிறைய சம்பாதிப்பன். நிறையப்
பொருள் சேர்ப்பான். செல்வந்தனாகத் திகழ்வான். ஆனால் அந்தப்
பணம் அவனுக்கு முழுமையாகப் பயன்படாது. அவனைச் சார்ந்தவர்கள்
அல்லது சேர்ந்தவர்கள் அதை அனுபவிப்பார்கள். சேர்க்கும் பாக்கியம்
அவனுக்கு. அனுபவிக்கும் பாக்கியம் வேறு ஒருவனுக்கு.
He will earn lot of money and leave it for others to enjoy.
வைத்துவிட்டு சிவனடிக்குச் சென்று விடுவான்.
மூன்றாவது 'காம' ஜாதகம். இவர்கள் வாழ்க்கையின் எல்லா
இன்பங்களையும் ருசித்துவிட்டு அல்லது ஒரு கை பார்த்துவிட்டுப்
போகிறவர்கள். இவர்கள் சம்பாதித்துத்தான் செலவழிக்க வேண்டும்
என்பதில்லை. யாருடைய பணமோ அல்லது பொருளோ
இவர்களைத் தேடிவரும். அது அப்பச்சி தேடிவைத்த பணமாக
இருக்கலாம் அல்லது அய்யா தேடிவைத்த பணமாக இருக்கலாம்
(Father or Grandfather) அல்லது அம்மான் தேடிவைத்த பணமாக
இருக்கலாம். அம்மான் என்பதை இங்கே மாமனார் என்று பொருள்
கொள்க! இவர்களுக்கான ஜாதக வீடுகள். மூன்று, ஏழு, பதினொன்று.
(House of courage, House of women and House of Gains)
'ஞான' ஜாதகம் என்பது நான்காவது வகையைச் சேர்ந்தது. நான்கு,
எட்டு, பன்னிரெண்டு ஆகிய வீடுகளின் கூட்டணி. அதாவது அந்த
மூன்று வீடுகளும் வலுவாக இருக்கும்.(House of Comforts,
House of Difficulties and House of Losses) இந்த நான்காம் பிரிவு
ஆசாமிகள்தான் ஞானிகள். வாழ்க்கையின் எல்லா சுகங்களும்
சரிவரக் கிடைக்காமல் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, பல விரையங்கள்,
நஷ்டங்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துரோகங்கள், சோகங்கள்
என்று அனைத்தையும் சந்தித்துவிட்டு அல்லது உணர்ந்து அனுபவித்து
விட்டு,"இதுதான் உலகம்' என்று முடிவிற்கு வருபவர்கள்.
"தென்னையைப்பெத்தா இளநீரு, பிள்ளையைப்பெத்தாக் கண்ணீரு'
என்றோ, அல்லது'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான
உலகத்திலே" என்றோ, அல்லது "போனால் போகட்டும் போடா,
இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா"
என்றோ தங்கள் மனதிற்குள் பாடிக்கொண்டு இருப்பார்கள்.
அவர்களுடைய மனம் பக்குவப்பட்டிருக்கும். "கம்பங்களி தின்னவனும்
மண்ணுக்குள்ளே; தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே'
எனும் வாழ்க்கைத் தத்துவம் அவர்களுக்குப் பிடிபட்டிருக்கும்.
இறந்தபிறகு ஒவ்வொரு மனிதனையும் பற்றித் தொடர்வது இருவினைப்
பாவமும், புண்ணியமுமே என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.
இறைவன் படைப்பில், மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும்
கவலையின்றி இருக்கின்றன. படைத்தவன் படைத்தபடியே இருக்கின்றன.
படைத்தவன் படைத்தபடியே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றன.
மனிதன்தான் துன்பத்திலும், கவலையிலும் உழன்று போகின்றான்.
தெருவில் அடிபட்டுக்கிடக்கும் நாயின் எச்சத்தை ஒரு காகம் கொத்தித்
தின்னும் காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே எச்சத்தை ஒரு
குருவியோ அல்லது புறாவோ திரும்பிக்கூடப் பார்க்காது. அதுதான்
படைப்பு.
எந்தப் பறவையாவது தான் கடித்துபோட்ட பழங்களைக் கொண்டுபோய்
அடுத்த வேளைக்கு ஆகுமே என்று சேர்த்து வைக்கிறதா? அல்லது
தானியங்களை அள்ளிக்கொண்டுபோய் தனது கூட்டில் சேர்த்து வைக்கிறதா?
மனிதன் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. கடைசிபட்சம் வற்றலாக
மாற்றியாவது வைத்துவிடுவான்.
எந்தப் பறவையாவது வெய்யில் காலத்தில் ஐஸ் வாட்டரும்,
குளிர்காலத்தில் போர்வையும் கேட்கிறதா?
சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்துவிட்டுப் போகிறது.
ஸாட்டிலைட், ராடார், கண்ட்ரோல் ரூம் என்று வழிகாட்டல் வசதி
அவைகளுக்கு இருக்கின்றனவா?
இல்லையே!
இறைவனின் படைப்பு அப்படி!
அதைப்பார்த்து வியந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தன்
பாடல் ஒன்றில் அதை உணர்த்தி எழுதினார்.
"அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்"
நாமும் பறவைகளைப் போல கவலையின்றி வாழ்வோம்
"இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி"
இதுவும் கவியரசர் எழுதியதுதான்.
இரவு பகலைப்போல இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை.
வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொண்டு அல்லது அதன்
போக்கிலேயே ஏற்றுக்கொண்டு வாழ்வோம்.
வாழ்க்கை வாழ்வதற்கே; கவலையில் மாய்வதற்கல்ல!
நமக்கு என்ன வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும்.
அவர் பார்த்துக்கொள்வார்.
அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
வாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்!
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

Present Sir.
ReplyDelete///அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
ReplyDeleteவாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்!///
சத்தியமான வார்த்தை ஐயா.
விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்.
கட்டுரை யதார்த்ததை விளக்குகிறது.
மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
வணக்கம் ஐய்யா
ReplyDeleteகேது கிரகம் பற்றி பாடம் நடத்தும் போது ஆன்மீக தகவல்கள் ஞான
கதைகள் கூறினீர்கள்.அது போல இப்போது சனி பற்றிய பாடத்திலும்
தொடர்கிறது.நான்கு வகை ஜாதகங்கள். நல்ல பாடம் இதற்கு முன்
இதை பதிவு செய்தீர் இது நிஜமாகவே அறிய தகவல் தான்
நன்றி!!.....
வாத்தியாரே இன்றைய பாடம் மனதை தொட்டுவிட்டது. Really you are a great man (no words to expressing).
ReplyDeleteவாத்தியாரே..
ReplyDeleteஎனக்கு சந்தேகமேயில்லை.. ஞான ஜாதகம்தான்..
4-ல் கேது, 8-ல் புதன், 12-ல் சனி.. இதுக்கு மேலேயும் வேறென்ன வேண்டும்..?
ஆனாலும் கடைசி வரிகளில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே.. அது போதும்.
எனக்கு என்ன வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும்.. கொடுப்பான்..! காத்திருப்பேன்..!
தகுந்த நேரத்தில் வெளிப்படும் தங்களது அறிவுரைகள் என்னைப் போன்ற மாணாக்கர்களுக்கு மன நிம்மதியையும், உறுதியையும் அளிக்கிறது வாத்தியாரே..
வாழ்க வளமுடன்..
We should take a print out of this and read whenever we are worried about anything. Thanks for this wonderful advise, which every one needs at one time or another.
ReplyDeleteதாங்கள் பாடம் நடத்தும் விதம் ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட ஆர்வம் வரவைத்துவிடும் . !
ReplyDeleteஅப்படியிருக்கும்போது எங்களைப்போன்ற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு போரடிக்குமா என்ன ?
அன்புடன்,
பாஸ்கர்
Thanks for Lesson..sir oru santhegam, jadhaga catagory yennanu theriya... antha rasiyin astavarga paralgalai kooti yethu athigam yena parkalama?
ReplyDeleteBlogger Geekay said...
ReplyDeletePresent Sir./////
வருகைப்பதிவு போட்டாயிற்று ஜீக்கே!
//////Blogger தியாகராஜன் said...
ReplyDelete///அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
வாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்!///
சத்தியமான வார்த்தை ஐயா.
விதிப்படி உரியதை ஒருவன் அடைந்தே தீருவான்.
கட்டுரை யதார்த்ததை விளக்குகிறது.
மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.//////
நன்றி தியாகராஜன்!
//////Blogger sundar said...
ReplyDeleteவணக்கம் ஐய்யா
கேது கிரகம் பற்றி பாடம் நடத்தும் போது ஆன்மீக தகவல்கள் ஞான
கதைகள் கூறினீர்கள்.அது போல இப்போது சனி பற்றிய பாடத்திலும்
தொடர்கிறது.நான்கு வகை ஜாதகங்கள். நல்ல பாடம் இதற்கு முன்
இதை பதிவு செய்தீர் இது நிஜமாகவே அறிய தகவல் தான்
நன்றி!!.....//////
இதில் ஒரு குறிப்ப்ட்ட செய்தியை மட்டும் முன்பு எழுதினேன். மற்றபடி இது இன்று எழுதியது!
////////Blogger N.K.S.Anandhan. said...
ReplyDeleteவாத்தியாரே இன்றைய பாடம் மனதை தொட்டுவிட்டது. Really you are a great man (no words to expressing)./////
மனதை தொட்டுவிட்டது என்று எழுதியதற்கு நன்றி! மனிதர்களில் கிரேட் என்று எவரும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை நான் சாமானியன் அவ்வளவுதான்!
/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
எனக்கு சந்தேகமேயில்லை.. ஞான ஜாதகம்தான்.
4-ல் கேது, 8-ல் புதன், 12-ல் சனி.. இதுக்கு மேலேயும் வேறென்ன வேண்டும்..?
ஆனாலும் கடைசி வரிகளில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே.. அது போதும்.
எனக்கு என்ன வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும்.. கொடுப்பான்..! காத்திருப்பேன்..!
தகுந்த நேரத்தில் வெளிப்படும் தங்களது அறிவுரைகள் என்னைப் போன்ற மாணாக்கர்களுக்கு மன நிம்மதியையும், உறுதியையும் அளிக்கிறது வாத்தியாரே..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்../////
நமக்குள் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள் உண்மைத்தமிழரே. என்னுடைய ஜாதகமும் ஞான ஜாதகம்தான்!
/////Blogger krish said...
ReplyDeleteWe should take a print out of this and read whenever we are worried about anything. Thanks for this wonderful advise, which every one needs at one time or another./////
உண்மை நண்பரே. நானும் இப்படி எழுதிவைத்துள்ளதைப் படித்துத்தான் என்னைச் சமாதானம் செய்துகொள்வேன்!
////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteதாங்கள் பாடம் நடத்தும் விதம் ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட ஆர்வம் வரவைத்துவிடும் . !
அப்படியிருக்கும்போது எங்களைப்போன்ற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு போரடிக்குமா என்ன ?
அன்புடன்,
பாஸ்கர்//////
இல்லை, பாஸ்கர் நடுவில் ஒரு மாறுதல் வேண்டும். அதற்காகவே இப்படி ஒரு பதிவை இடையில் எழுதி வருகிறேன்!
/////Blogger VA P RAJAGOPAL said...
ReplyDeleteThanks for Lesson..sir oru santhegam, jadhaga catagory yennanu theriya... antha rasiyin astavarga paralgalai kooti yethu athigam yena parkalama?/////
அது சரியாக இருக்காது. ஒவ்வொரு வீட்டின் அதிபதிக்கும் சுயவர்க்கப் பரல்களை எழுதிவைத்துக்கொண்டு பாருங்கள்.
உதாரணத்திற்கு முதல் பிரிவா என்று தெரிந்துகொள்ள 1, 5, 9 ஆகிய வீட்டு அதிபதியின் பரல்களைப் பாருங்கள். மூன்று வீட்டு அதிபதிகளுமே 5ம் அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப்பரல்களைக் கொண்டிருந்தால், நீங்கள் முதல் பிரிவு. அப்படியே ஒவ்வொரு பிரிவாகப் பார்க்க வேண்டியதுதான்.
//அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
ReplyDeleteவாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்// அருமை வாத்தியாரையா.
"எங்க சுத்தியும் ரங்கனைச் சேரு (அல்லது சேவி)" என்று சொல்வார்கள். "காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று பட்டினத்தடிகளும் சொல்லி வைத்திருக்கிறார்.
அய்யா,
ReplyDeleteநாலு வகை ஜாதகங்களை பற்றிய நல்ல விளக்கம். நான் ஞான ஜாதகன் போல் உள்ளது! வாழ்கையில் ஒரே போராட்டம் தான்! நான், என் கேது தசை ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய ஒரு சிறிய கதையை (கிறுக்கன் எழுதிய கிறுக்கல் என்று என் நண்பர்கள் கிண்டலாக கமெண்ட் வாங்கியது) உங்களுக்கு மின்-அஞ்சல் செய்து இருக்கிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்
Ayya paadam vazhakkam pol arumai..
ReplyDeleteUngal gknanam yekgal vazhkaikku oli vilakkagattum..
Nanbar srithar'n kirukkal kathayai veliyedavum..(kethu thasail yenna yeluthinar yena therinthu kolla arvamaaierukiren.)
///அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
ReplyDeleteவாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்!///
Indha Varigalaeyum Idharkku mun "Inbham Thunbam -enbadhu Iravu Pagal Pola varum" ..
Naan Solla Ninaitha "Great" - Idharkkumunnal pinnutamitta Nks Anandhan Sollivitar.
This is Arulkumar Rajaraman Words "Neengal Always GREAT SIR(Mr.Sp.V.Subbiah)". Ungal Meethu Enakku Thanipatta Anbu Kalandh Mariyadhai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
கட்டுரை நன்று ஐயா...மிக்க நன்றி.
ReplyDeleteஐயா,
ReplyDeleteகருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு - என்றாலும் ரஜினியை பிடிதது போடுகிறீர்கள்.,
கம்பங்களி தின்றவனும் தங்க பஸ்பம் தின்றவனும் என்றாலும் ரஜினியை பிடித்து போடுகிறீர்கள் ...
நீங்கள் என்ன என்னைமாதிரி ரஜினி ரசிகரா?
வாழ்க வளமுடன்,
வேலன்.
////Blogger அமர பாரதி said...
ReplyDelete//அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
வாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்//
அருமை வாத்தியாரையா. "எங்க சுத்தியும் ரங்கனைச் சேரு (அல்லது சேவி)" என்று சொல்வார்கள். "காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று பட்டினத்தடிகளும் சொல்லி வைத்திருக்கிறார்.//////
நன்றி அமரபாரதி!
Blogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
நாலு வகை ஜாதகங்களை பற்றிய நல்ல விளக்கம். நான் ஞான ஜாதகன் போல் உள்ளது! வாழ்கையில் ஒரே போராட்டம் தான்! நான், என் கேது தசை ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய ஒரு சிறிய கதையை (கிறுக்கன் எழுதிய கிறுக்கல் என்று என் நண்பர்கள் கிண்டலாக கமெண்ட் வாங்கியது) உங்களுக்கு மின்-அஞ்சல் செய்து இருக்கிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்//////
அதைத் தட்டச்சிய தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) யும் அனுப்பிவையுங்கள்
////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
ReplyDeleteAyya paadam vazhakkam pol arumai..
Ungal gknanam yekgal vazhkaikku oli vilakkagattum..
Nanbar srithar'n kirukkal kathayai veliyedavum..(kethu thasail yenna yeluthinar yena therinthu kolla arvamaaierukiren.)/////
அதைத் தட்டச்சிய தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) யும் அனுப்பிவையுங்கள் என்று அவரிடம் கேட்டுள்ளேன். அது வந்தவுடன் உங்களுக்கு அறியத்தருகிறேன்
//////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDelete///அவர் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரைச் சரணடைந்து,
வாழ வேண்டியது ஒன்று மட்டுமே நாம் செய்ய வேண்டிய செயலாகும்!///
Indha Varigalaeyum Idharkku mun "Inbham Thunbam -enbadhu Iravu Pagal Pola varum" ..
Naan Solla Ninaitha "Great" - Idharkkumunnal pinnutamitta Nks Anandhan Sollivitar.
This is Arulkumar Rajaraman Words "Neengal Always GREAT SIR(Mr.Sp.V.Subbiah)". Ungal Meethu Enakku Thanipatta Anbu Kalandh Mariyadhai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி! அன்பிற்கு எல்லை கிடையாது!
/////Blogger மதி said...
ReplyDeleteகட்டுரை நன்று ஐயா...மிக்க நன்றி./////
நன்றி மதி!
/////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு - என்றாலும் ரஜினியை பிடிதது போடுகிறீர்கள்.,
கம்பங்களி தின்றவனும் தங்க பஸ்பம் தின்றவனும் என்றாலும் ரஜினியை பிடித்து போடுகிறீர்கள் ...
நீங்கள் என்ன என்னைமாதிரி ரஜினி ரசிகரா?
வாழ்க வளமுடன்,
வேலன்./////
எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். நடிகர்களில் சிறந்த ஆன்மிகவாதி ரஜினி. அதனால் ஆன்மிகக் கட்டுரைகளுக்கு அவருடைய படத்தைப் போடுகிறேன்.Okay யா?
Today I come very late. Last bench today.For me Dharma and Thana has equally high paral. Below these is kama but last one is the worst. Not even half of the first 2. How to interpret 2 equal paral.
ReplyDeleteSir,
ReplyDeletePresent sir. Can we sum the scores of the points (rasiyin adipathi)for 1, 5,9th houses to compare and find out which one we belong?
-Shankar
வணக்கம் அய்யா ,
ReplyDeleteஎனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (18) சமமாக உள்ளது , அப்படிஎன்றால் இரண்டும் கலந்த வாழ்க்கையா?
வணக்கம் அய்யா ,
ReplyDeleteஎனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (18) சமமாக உள்ளது , அப்படிஎன்றால் இரண்டும் கலந்த வாழ்க்கையா?
அய்யா, நாலு வகை ஜாதகம் பற்றி நல்ல பாடம். நன்றி!
ReplyDeleteநீங்கள் பின்னூட்டத்தில் சொன்னது //முதல் பிரிவா என்று தெரிந்துகொள்ள 1, 5, 9 ஆகிய வீட்டு அதிபதியின் பரல்களைப் பாருங்கள். மூன்று வீட்டு அதிபதிகளுமே 5ம் அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப்பரல்களைக் கொண்டிருந்தால், நீங்கள் முதல் பிரிவு.// நான் பார்த்த 4 ஜாதகங்களில், எந்த பிரிவிலுமே, மூன்று அதிபதிகளும் 5 அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப் பரல்கள் வரவில்லை. புரியவில்லையே?
Uyirthiru Ayya,
ReplyDeleteMigavum arumaiyana katturai. Manathai negila veythathu. Mikka Nandri. Kannadasanin Puthagam paditha oru niraivu.
Heartfelt thanks,
Navaneetha Krishnan
யாருக்கும் எதுவும் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை,ஒருவேளை தேவையில்லையோ என்னவோ!!இருப்பதை கொண்டு நிறைவு கொண்டால் என்றும் சந்தோஷமே.
ReplyDeleteஎனக்கு ஞான ஜாதகம் என்று நினைக்கிறேன் மகர லக்நம். 4 ல் சந்திரன் ,மாந்தி . 12 ல் குரு ,சூரியன்.இருந்தாலும் 11 சனி ,கேது ,புதன் குழப்பமாக உள்ளது.
ReplyDeleteBlogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
நாலு வகை ஜாதகங்களை பற்றிய நல்ல விளக்கம். நான் ஞான ஜாதகன் போல் உள்ளது! வாழ்கையில் ஒரே போராட்டம் தான்! நான், என் கேது தசை ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய ஒரு சிறிய கதையை (கிறுக்கன் எழுதிய கிறுக்கல் என்று என் நண்பர்கள் கிண்டலாக கமெண்ட் வாங்கியது) உங்களுக்கு மின்-அஞ்சல் செய்து இருக்கிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்//////
அதைத் தட்டச்சிய தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) யும் அனுப்பிவையுங்கள்//
அய்யா,
நன்றி,
இந்த வில்லங்கம் வரும் என தெரிந்தே, உங்களுக்கு PDF ஆக கன்வெர்ட் செய்து அனுப்பி உள்ளேன். இதை கோப்பை "Shree-Tam-0802.ttf" வைத்து உருவாக்கியது.
Shree-Tam-0802.ttf - டவுன்லோட் செய்ய http://dinamalar.in/fonts/Shree-Tam-0802.ttf
இந்த தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) உங்களுக்கு மின்-அஞ்சல் மூலமாக அனுப்புகிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்
ஹலோ சார்,
ReplyDeleteஆமாம் எனக்கு கூட ஞான ஜாதகம் தான் போலிருக்கு. 4-லில் கேதுவும் சனியும், 8ல் புதன், போதாகுறைய்க்கு இன்னும் பாக்கி எதுவும் இல்ல அனுபவிக்க. ம்ம்ம் எல்லாம் அவன் செயல்.காத்துட்டு இருக்க வேண்டியது தானே..பாப்போம்.
கிரகங்கள் எல்லாம் 1,7,9,10,11 ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. எனக்கு 4,8, 12 ஆகிய இடங்களில் கிரகமே இல்லை. அப்படியென்றால் ஞானமே கடைசி வரை வராதா ..
ReplyDeleteSir
ReplyDeleteThank u very much. It is really a timely published article. I was in a confused state and thought I was in a quagmire and your article worked as a stimulator
/////Blogger ananth said...
ReplyDeleteToday I come very late. Last bench today.For me Dharma and Thana has equally high paral. Below these is kama but last one is the worst. Not even half of the first 2. How to interpret 2 equal paral./////
1, 5, 9 ஆம் வீட்டு அதிபர்களின் சுயவர்க்கப்பரல்களின் கூட்டல்
அதேபோல 2, 6, 10 ஆம் வீட்டு அதிபர்களின் சுயவர்க்கப்பரல்களின் கூட்டல்
இரண்டில் எது அதிகமாக வருகிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்
//////Blogger hotcat said...
ReplyDeleteSir,
Present sir. Can we sum the scores of the points (rasiyin adipathi)for 1, 5, 9th houses to compare and find out which one we belong?
-Shankar/////
வீட்டு அதிபதிகளின் பரல்களைக் கூட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்
அதே போல மொத்தப் பரல்களின் கூட்டலையும் வைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்
Blogger Geekay said...
ReplyDeleteவணக்கம் அய்யா ,
எனக்கு தர்மம் மற்றும் தன பரல்கள் (18) சமமாக உள்ளது , அப்படி என்றால் இரண்டும் கலந்த வாழ்க்கையா?
ஆமாம், சிலருக்கு இப்படி மிக்ஸட் ரிசல்ட் வருவது உண்டு!
Blogger கெக்கே பிக்குணி said...
ReplyDeleteஅய்யா, நாலு வகை ஜாதகம் பற்றி நல்ல பாடம். நன்றி!
நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னது //முதல் பிரிவா என்று தெரிந்துகொள்ள 1, 5, 9 ஆகிய வீட்டு அதிபதியின் பரல்களைப் பாருங்கள். மூன்று வீட்டு அதிபதிகளுமே 5ம் அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப்பரல்களைக் கொண்டிருந்தால், நீங்கள் முதல் பிரிவு.// நான் பார்த்த 4 ஜாதகங்களில், எந்த பிரிவிலுமே, மூன்று அதிபதிகளும் 5 அல்லது அதற்கு அதிகமான சுயவர்க்கப் பரல்கள் வரவில்லை. புரியவில்லையே?
ஒரு குறுக்குவழி உள்ளது. ஒவ்வொரு வீட்டு அதிபதியாக சென்று அமர்ந்திருக்கும் இடத்தை, அது கேந்திரமா அல்லது திரிகோணமா என்று பார்த்து அப்படி இருந்தால் டிக் செய்து கொள்ளுங்கள் அப்படி இல்லாவிட்டால், இல்லை என்று குறித்துக்கொள்ளுங்கள். அப்படி ஒவ்வொரு பிரிவிற்காக பார்த்துக்கொண்டே வாருங்கள் எந்தப் பிரிவு என்று தெரியவரும்!
//////Blogger amudkrishnan said...
ReplyDeleteUyirthiru Ayya,
Migavum arumaiyana katturai. Manathai negila veythathu. Mikka Nandri. Kannadasanin Puthagam paditha oru niraivu.
Heartfelt thanks,
Navaneetha Krishnan/////
பாராட்டிற்கு நன்றி நவநீதன்!
/////Blogger வடுவூர் குமார் said...
ReplyDeleteயாருக்கும் எதுவும் முழுமையாக கொடுக்கப்படுவதில்லை,ஒருவேளை தேவையில்லையோ என்னவோ!!இருப்பதை கொண்டு நிறைவு கொண்டால் என்றும் சந்தோஷமே./////
உண்மைதான் வடுவூராரே!
/////Blogger sundar said...
ReplyDeleteஎனக்கு ஞான ஜாதகம் என்று நினைக்கிறேன் மகர லக்னம். 4 ல் சந்திரன் ,மாந்தி . 12 ல் குரு ,சூரியன்.இருந்தாலும் 11 சனி ,கேது ,புதன் குழப்பமாக உள்ளது.////
இன்றைய பின்னூட்டங்களில் வழிமுறைகளை எழுதியுள்ளேன். அதன்படி பாருங்கள்!
Blogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
நாலு வகை ஜாதகங்களை பற்றிய நல்ல விளக்கம். நான் ஞான ஜாதகன் போல் உள்ளது! வாழ்கையில் ஒரே போராட்டம் தான்! நான், என் கேது தசை ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய ஒரு சிறிய கதையை (கிறுக்கன் எழுதிய கிறுக்கல் என்று என் நண்பர்கள் கிண்டலாக கமெண்ட் வாங்கியது) உங்களுக்கு மின்-அஞ்சல் செய்து இருக்கிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்//////
அதைத் தட்டச்சிய தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) யும் அனுப்பிவையுங்கள்//
அய்யா,
நன்றி,
இந்த வில்லங்கம் வரும் என தெரிந்தே, உங்களுக்கு PDF ஆக கன்வெர்ட் செய்து அனுப்பி உள்ளேன். இதை கோப்பை "Shree-Tam-0802.ttf" வைத்து உருவாக்கியது.
Shree-Tam-0802.ttf - டவுன்லோட் செய்ய http://dinamalar.in/fonts/Shree-Tam-0802.ttf
இந்த தமிழ் எழுத்துரு'வை (Tamil Font) உங்களுக்கு மின்-அஞ்சல் மூலமாக அனுப்புகிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்////
PDFஐ நான் மட்டும்தான் படிக்க முடியும். மற்ற வகுப்பறை மாணவர்களுக்கு அறியப்படுத்த யுனிகோடில் வேண்டும். நீங்கள் கொடுத்துள்ள தளத்தில் இருந்து எழுத்துருவை இறக்கிக்கொள்கிறேன்
//////Blogger Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
ஆமாம் எனக்கு கூட ஞான ஜாதகம் தான் போலிருக்கு. 4-லில் கேதுவும் சனியும், 8ல் புதன், போதாக்குறைக்கு இன்னும் பாக்கி எதுவும் இல்ல அனுபவிக்க. ம்ம்ம் எல்லாம் அவன் செயல்.காத்துட்டு இருக்க வேண்டியது தானே..பாப்போம்./////
நன்றி சகோதரி!
////Blogger Ragu Sivanmalai said...
ReplyDeleteகிரகங்கள் எல்லாம் 1,7,9,10,11 ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. எனக்கு 4,8, 12 ஆகிய இடங்களில் கிரகமே இல்லை. அப்படியென்றால் ஞானமே கடைசி வரை வராதா?///////
4 8,12 ஆகிய இடங்களில் கிரகமே இல்லையென்றால் என்ன? அந்த இடங்களுக்கு உரிய அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்
/////Blogger MarmaYogi said...
ReplyDeleteSir
Thank u very much. It is really a timely published article. I was in a confused state and thought I was in a quagmire and your article worked as a stimulator//////
உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
வணக்கம் ஐயா
ReplyDeleteதங்கள் சொல்வதுபோல் இன்பம் மற்றும் துன்பம் இவ்விரண்டும் ஆண்டவன் நமக்களிக்கும் ஒரு தூண்டுகோல் மட்டுமே .அவன் நினைவோடு நம் பிறவிக்கான கர்மங்களை தீர்ப்பதற்கு இப்பிறவியை ஒரு வாய்ப்பாக கருதி நம் செயலை செய்வதே இந்த பிறவியின் நோக்கம் .இதற்க்கு நம் அவனுடைய நினைவில் "நிலையான நினைவில் " இருப்பதே நம் மேலும் கர்மபதிவுகளை நம் ஆன்மாவில் சேர்ப்பதை தடுத்து அடுத்த பிறவிக்கான சூழ்நிலையை உருவாக்குவதை தடை செய்யும் . சாட்சியாக இருந்து செயல்களை பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் இறைவனை காண்பது.
எல்லோர்க்கும் இந்த புரிதலை அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி
அன்பு சகோதரன்
கணேசன்
ஆசிரியர் ஐயா அவர்களே
ReplyDeleteபாடம் அருமை . முதல் நான்கு வீடுகளிலும் எல்லாக் கிரகங்களும் நிற்கின்றன. அப்பா வாழ்க்கை மசாலா படம்தான்.
தலைவர் பிரபாகரனின் ஜாதகத்தை தாங்கள் அலசக்கூடாதா ?
ஆவலுடன் பல மாணவர்கள்
Blogger choli ganesan said...
ReplyDeleteவணக்கம் ஐயா
தங்கள் சொல்வதுபோல் இன்பம் மற்றும் துன்பம் இவ்விரண்டும் ஆண்டவன் நமக்களிக்கும் ஒரு தூண்டுகோல் மட்டுமே .அவன் நினைவோடு நம் பிறவிக்கான கர்மங்களை தீர்ப்பதற்கு இப்பிறவியை ஒரு வாய்ப்பாக கருதி நம் செயலை செய்வதே இந்த பிறவியின் நோக்கம் .இதற்க்கு நம் அவனுடைய நினைவில் "நிலையான நினைவில் " இருப்பதே நம் மேலும் கர்மபதிவுகளை நம் ஆன்மாவில் சேர்ப்பதை தடுத்து அடுத்த பிறவிக்கான சூழ்நிலையை உருவாக்குவதை தடை செய்யும் . சாட்சியாக இருந்து செயல்களை பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் இறைவனை காண்பது.
எல்லோர்க்கும் இந்த புரிதலை அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி
அன்பு சகோதரன்
கணேசன்////
நன்றி சகோதரரே!
///////Blogger sarupraba said...
ReplyDeleteஆசிரியர் ஐயா அவர்களே
பாடம் அருமை . முதல் நான்கு வீடுகளிலும் எல்லாக் கிரகங்களும் நிற்கின்றன. அப்ப வாழ்க்கை மசாலா படம்தான்.
தலைவர் பிரபாகரனின் ஜாதகத்தை தாங்கள் அலசக்கூடாதா ?
ஆவலுடன் பல மாணவர்கள்////
சென்ட்டிமென்டும் கலந்து வரும் கவலைப்படாதீர்கள் சகோதரி.. ஸ்கீரின் ப்ளேயை ஒன்பது பேர்கள் சேர்ந்து எழுதுவார்கள்.
அவரின் ஜாதகம் கிடைத்தால் வாங்கிக் கொடுங்கள்!