இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
"இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்"
என்று அசத்தலாகத் துவங்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடலில்
வரும் வரி ஒன்றைத்தான் தலைப்பாக்கியிருக்கிறேன்.
கார் ஒன்றுதான். அது வாங்கும்போது புதுசாக இருக்கிறது. இருபது ஆண்டுகள்
சென்றால், அது பழைய காராகி விடுகிறது.
அதுபோல மனித உடம்பும் இளமையில் புதிய காரைப்போல பளபளப்பாக
இருக்கிறது. வயதாக வயதாக பழசாகி படுத்தி எடுக்கிறது. வராத நோய்கள்
எல்லாம் வந்து வாட்டி எடுக்கிறது. அந்த நிலைப்பாட்டைத்தான் கவியரசர்
'முதுமை' என்று ஒரே சொல்லில் அடக்கி விட்டார்.
சில வண்டிகள் இளமையிலேயும் தகறாறு செய்யும். அப்படிச் செய்தால் அது
ஜாதகக் கோளாறு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
-----------------------------------------------------------------------------------------------------
கேதுவும் சூரியனும் சேர்ந்திருந்தால் கிடைக்கும் பலன்கள் அல்லது நடக்கும் தீமைகள்!
ஆமாம், இருவரும் சேர்ந்திருந்தால் நன்மைகள் அதிகம் இல்லை. தீமைகளே அதிகம்.
ஜாதகத்தில் கேது சூரியனை விடுத்துத் தனித்திருந்தால் சந்தோஷப்படுங்கள்
சூரியன் உடல் காரகன் அதோடு தந்தைக்கும் காரகன். அவனோடு சேரும்
கேது நல்ல ஆரோக்கியமான உடம்பைக் கொடுப்பதில்லை. அதோடு நல்ல
ஆதரவான தந்தையையும் ஜாதகனுக்குக் கொடுப்பதில்லை!
பிறக்கும் அனைவருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரிதான் உள்ளது.
ஆனால் உடல் நலம் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அரண்மனை போன்ற வீடுகளில் இருக்கும் குழந்தைக்குச் சுகாதாரமில்லாத
எந்த இடமும், உணவும் சூழ்நிலையும் ஒத்துக்கொள்வதில்லை. ஜலதோஷம்,
சளி, காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு, வாந்தி, பேதி என்று எதுவேண்டுமென்றாலும்
ஏற்பட்டு அந்தக் குழந்தையைப் பாதிக்கக்கூடும்.
அதே நேரத்தில், சேரிகளிலும், குடிசைகளிலும், சாக்கடை ஒரங்களிலும்
மொத்தமாக சுகாதாரமற்ற சூழலில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும்,
வலுவாகவும் இருக்கும்.
என்ன காரணம்?
some people have a better immune system than others, why?
Diseases are denoted by sixth house and its ruler
நோய்களுக்குக் காரணம், ஆறாம் வீடும் அதன் அதிபதியும்தான் என்கின்றன
பல ஜோதிட நூல்கள். அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். நம்புவோம்.
ஒருவருக்கு சயரோகம் (tuberculosis) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அது ஒட்டிக்கொள்ளூம் நோய் என்கிறது விஞ்ஞானம் (tuberculosis is a
communicable and infectious disease) ஆனால் அந்த நோயாளியுடன் சேர்ந்து
வாழுகின்ற கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அந்த நோய் வருவதில்லை.
அங்கேதான் ஜாதகம் நிற்கும்!
ஒரு வீடும், அதன் அதிபதியும், தீய கிரகங்களால் பார்க்கப் பெற்றால், அந்த
அதிபதிக்கு உரிய உடல் உறுப்பு அல்லது உடல் அப்பகுதி எதுவோ அது
பாதிக்கப்படும் அல்லது அதில் அடிக்கடி நோய் உண்டாகும்.
மேஷ லக்கினக்காரர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவருடைய ஆறாம்
வீடு கன்னி. அதன் அதிபதி புதன். அந்த வீடு தீய கிரகங்களின் பார்வையில்
இருந்தால் ஜாதகனுக்கு ஹெர்னியா வியாதி வந்து அவதியுறுவான்
(இந்த வியாதிக்குச் சரியான தமிழாக்கம் இருந்தால், யாராவது சொல்லுங்களேன்.
குடல் இறக்கம் என்று ஒருமுறை படித்திருக்கிறேன். அந்தப் பெயர் சரிதானா
என்று தெரியவில்லை!)
A hernia occurs when the contents of a body cavity bulge out of the area
where they are normally contained. These contents, usually portions of
intestine or abdominal fatty tissue, are enclosed in the thin membrane
that naturally lines the inside of the cavity. Although the term hernia
can be used for bulges in other areas, it most often is used to describe
hernias of the lower torso - abdominal wall hernias
சிம்மமும், அதன் அதிபதி சூரியனும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் கல்லீரல்
(liver) கோளாறுகள் ஏற்படும்
மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய்.
செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
என்னென்ன வீட்டிற்கு என்னென்ன உறுப்பு, எந்தக் கிரகம் அதன் காவலன்
என்கின்ற விபரத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பயப்படாதீர்கள். மற்றவர்களைப் பயமுறுத்தாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் இறைவன்!
If sixth house gets strong by having a malefic positioned there,
it should be considered good for health!
Strong Saturn in sixth house, shows the ability to face trouble
and fight diseases
ஆறாம் வீட்டு ராகு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைத் தரும் என்பார்கள்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
அவை இரண்டும் பாதிப்பிற்குள்ளான மனிதன் சாதனை புரிவதோ
அல்லது வெற்றிகளைப் பெறுவதோ இயலாத செயல்!
--------------------------------------------------------------------
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
1ஆம் வீடு: தலைப் பகுதி
2ஆம் வீடு: முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு
இடது கண், வாய், நாக்கு,
3ஆம் வீடு: காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய்
4ஆம் வீடு: நுரையீரல், இதயம் (Lungs and Heart)
5ஆம் வீடு இரைப்பை, கணையம் (Stomach,Liver )
6ஆம் வீடு: Small Intestine
7ஆம் வீடு.:உட் பிறப்பு உறுப்புக்கள்,சிறுநீரகம்
Internal Sexual Organs, Kidneys
8.வெளி பிறப்பு உறுப்புக்கள்(ஆண்குறி, பெண்குறி), குதம்
External Sexual Organs, Large Intestine, Anus
9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்
10ஆம் வீடு: தொடைகள், கால்களின் மேற்பகுதி
11ஆம் வீடு: கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை
12ஆம் வீடு: பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்
----------------------------------------------------------------------------------
ஆறாம் வீடு, அதன் அதிபதி என்கின்ற கணக்கின்றி சூரியனுடன் சேர்கின்ற
கேதுவும் அதே வேலையை அதே பலனைச் செய்யக்கூடியவன் ஆவான்.
சூரியன் உடல்காரகன் (Authority for body) அவனுடன் கேது சேர்வது
விரும்பத்தக்கதல்ல!
அவர்கள் இருவரும் சேர்ந்து சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை
என்றால் ஜாதகனுக்கு உடற் கோளாறுகள் ஏற்படும். அது உடலின் எந்தப்
பகுதி என்பது, லக்கினத்தில் இருந்து அவர்கள் அமர்ந்திருக்கும் வீட்டைப்
பொறுத்ததாகும்.
லக்கினத்தில் என்றால் தலையில் கட்டிகள் ஏற்படும், மூளைக்குச் செல்லும்
ரத்த நாளங்களில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்குப் பக்கவாதம் ஏற்படலாம்.
இவ்வாறு தலை சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.
இரண்டில் என்றால் கண்களில் கோளாறு ஏற்படும். கண்ணில் கட்டிகள்,
கண்பார்வைக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நான்கில் என்றால் இருதயக் கோளாறுகள் ஏற்படும்
எட்டில் இருந்தால் மறைவிடங்களில் கட்டிகள் ஏற்படும். சிறுநீரகக் கோளாறுகள்
ஏற்படும்.
இவ்வாறாக அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளில் அவற்றிற்கு உரிய பகுதிகளில்
நோய்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும். அவைகள் என்னென்ன பகுதிகள்
என்பதை முன் வரிகளில் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பதற்கு உகந்த ஒரே இடம் பதினொன்றாம் வீடு.
ஜாதகனின் பின் வாழ்க்கை யோகமாக இருக்கும். செளகரியமாக வாழ்வான்.
இந்த பாதிப்புக்கள் கேது அல்லது சூரியனுடைய Major Dasa or Sub-period
களில் உண்டாகும்.
அஷ்டகவர்கத்தில் அந்த வீடு அதிகப் பரல்களைப் பெற்றிருந்தாலும் அல்லது
சூரியன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருந்தாலும் ஜாதகனுக்கு மேற்கூரிய பாதிப்புக்கள் இருக்காது.
ஆகவே உங்கள் ஜாதகத்தை அலசும் போது பொறுமையாக அலசுங்கள்.
அலசுகிறேன் என்று கிழித்து விடாதீர்கள்:-))))
(தொடரும்)
வாழ்க வளமுடன்!

அது சரி ஆசிரியரே...என் ஜாதகத்தைக் கிரகங்கள் கிழித்துப் போட்டபிறகு, நான் வேறு தனியாய்க் கிழித்துப் போட என்ன இருக்கிறது....கேதுவைக் கொஞ்சம் நம்பினேன்...ஊகூம்....தேறாது போலிருக்கிறதே....மற்றபடி வாத்தியாருக்கு வணக்கங்கள்
ReplyDeletepresent sir
ReplyDeleteஅன்புள்ள ஐயா,
ReplyDeleteராகு 4ல், கேது 10 ல் இதில் எது வலுவுடன் இருக்கிரது என பார்க்க இருக்கும் வீடு
கிரகங்களின் சேர்க்கை,பார்வையை வைத்து பார்த்தால் காணுமா?
கணணியில் ஜாதகம் கணிக்கும் போது jagannatha hora ம் நீங்கள் கொடுத்திருக்கும் site லும்
சிலவேளை கிரகங்கள் மாரி வருகிரது எது சரியானது? இந்த முரை திருகணித பஞ்சாங்கத்தை சேர்ந்ததா? வாக்கிய பஞ்சாங்கம் இல்லையா? கேள்வியில் தவரெனில் மன்னிக்கவும்.
Hernia -என்றால் குடல் இறக்க வியாதிதான் ஆசிரியரே. அது சரி தலைப்பில் உள்ள படத்தில் நர்ஸ்வுடன் பேசி கொண்டிருக்கும் நமது வகுப்பறை மாணவர் யார் என்று தெரியவில்லையே...
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
காலை வணக்கம்.
ReplyDeleteபாடம் எளிமையாக இருந்தது.
Hernia என்பது குடல் இறக்கம் என்று நானும் படித்துள்ளேன்.
>>>அலசும் போது பொறுமையாக அலசுங்கள்.
ReplyDeleteஅலசுகிறேன் என்று கிழித்து விடாதீர்கள்<<<<
சரி குருவே பொறுமையாக அலசுகிறேன் அப்பொழுதுதான் பிடி படும்...
Thanks for the lesson. Kethu is related to medical field both illness and cure.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteLesson is good sir(It is like a short and Script - "Kadugu Siruthalum Karam Kurayadhu").
"Neengal Aasan", "Naan Seedan". Guruvai Minchum Sishyanaga Valara ungal Asivadham Enakku Vendum Sir." Adhu Podhum
Anbilladha manaivi, Olukkamilladha Kalvi Waste like that "GURUvilla Manavanum Waste".
"YOU ARE A GURU, IAM A STUDENT".
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
////Blogger படித்துறை.கணேஷ் said...
ReplyDeleteஅது சரி ஆசிரியரே...என் ஜாதகத்தைக் கிரகங்கள் கிழித்துப் போட்டபிறகு, நான் வேறு தனியாய்க் கிழித்துப் போட என்ன இருக்கிறது....கேதுவைக் கொஞ்சம் நம்பினேன்...ஊகூம்....தேறாது போலிருக்கிறதே....மற்றபடி வாத்தியாருக்கு வணக்கங்கள்/////
கிரகங்கள் கிழித்துப்போடாது. மனிதர்கள் அனைவரும் அவற்றிற்குச் சமமானவர்களே! மொத்த மதிப்பெண்கள் அனைவருக்கும் 337 தானே? மனிதன்தான் அதை நினைத்துப்பார்ப்பதில்லை!
//////Blogger Dr.Vinothkumar said...
ReplyDeletepresent sir/////
என்ன டாக்டர் - இன்று வருகைப் பதிவு மட்டும்தானா?
நீங்கள் பதில் சொல்வீர்கள் என்று பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்!
///////Blogger vino, canada said...
ReplyDeleteஅன்புள்ள ஐயா,
ராகு 4ல், கேது 10 ல் இதில் எது வலுவுடன் இருக்கிறது என பார்க்க இருக்கும் வீடு
கிரகங்களின் சேர்க்கை,பார்வையை வைத்து பார்த்தால் காணுமா?
கணணியில் ஜாதகம் கணிக்கும் போது jagannatha hora ம் நீங்கள் கொடுத்திருக்கும் site லும்
சிலவேளை கிரகங்கள் மாறி வருகிறது எது சரியானது? இந்த முறை திருக்கணித பஞ்சாங்கத்தை சேர்ந்ததா? வாக்கிய பஞ்சாங்கம் இல்லையா? கேள்வியில் தவறெனில் மன்னிக்கவும்.//////
கணினிகள் அனைத்துமே திருக்கணிதப்படிதான் இயங்கும்!
எது வலு என்பதைப் பார்க்க அஷ்டகவர்க்கம் உதவுமே!
/////Blogger வேலன். said...
ReplyDeleteHernia -என்றால் குடல் இறக்க வியாதிதான் ஆசிரியரே. அது சரி தலைப்பில் உள்ள படத்தில் நர்ஸ்வுடன் பேசி கொண்டிருக்கும் நமது வகுப்பறை மாணவர் யார் என்று தெரியவில்லையே..
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
அது நீங்கள்தான்! நன்றாகப் பாருங்கள்!
/////Blogger SP Sanjay said...
ReplyDeleteகாலை வணக்கம்.
பாடம் எளிமையாக இருந்தது.
Hernia என்பது குடல் இறக்கம் என்று நானும் படித்துள்ளேன்.//////
தகவலுக்கு நன்றி!
Blogger மதி said...
ReplyDelete>>>அலசும் போது பொறுமையாக அலசுங்கள்.
அலசுகிறேன் என்று கிழித்து விடாதீர்கள்<<<<
சரி குருவே பொறுமையாக அலசுகிறேன் அப்பொழுதுதான் பிடி படும்...///////
பிடிபட்டால் சரிதான்!
/////Blogger observer said...
ReplyDeleteவணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html/////
பார்க்கிறேன்
/////Blogger krish said...
ReplyDeleteThanks for the lesson. Kethu is related to medical field both illness and cure./////
க்ரெக்ட்! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir,
Lesson is good sir(It is like a short and Script - "Kadugu Siruthalum Karam Kurayadhu"
"Neengal Aasan", "Naan Seedan". Guruvai Minchum Sishyanaga Valara ungal Asivadham Enakku Vendum Sir." Adhu Podhum
Anbilladha manaivi, Olukkamilladha Kalvi Waste like that "GURUvilla Manavanum Waste".
"YOU ARE A GURU, IAM A STUDENT".
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நான் நல்ல ஆசானா இல்லையா என்பது முக்கியமில்லை! நீங்கள் நல்ல மாணாக்கர்தான்.ஒப்புக்கொள்கிறேன்!
வணக்கம் அய்யா,
ReplyDeleteஇன்றிய பாடம் மிகவும் எளிதாக புரியும் படியுள்ளது நன்றி.
எனக்கு பத்தில் (மிதுனத்தில்) கேதுவுடன் சனி ,
சனியுடன் கேது கூட்டணி என்ன மாதிரி பலன் கொடுக்கும் ?
ஐயா அவர்களுக்கு
ReplyDeleteஎனக்கு மேஷத்தில் (4-ல்) கேது குருவுடன் . 4-ம் வீட்டின் பரல் 36. குரு தனித்து 6 பரல்களுடன் உள்ளார். மேஷ அதிபதி செவ்வாய் நீசம் . தற்பொழுது கேது திசை சுக்ர புக்தி நடக்கிறது, கேது தசா பலன்கள் எப்படி இருக்கும். தய கூர்ந்து பதில் அளிக்க வேண்டுகிறேன்.
ஐயா எப்பவும் போல் உங்கள் கைவண்ணம் அருமை. என் ஜாதகத்தில் பதினொன்றாம் இடத்தில் கேதுவும் சூரியனும் மற்றும் புதனும் அஷ்ட வர்க்க பரல்கள் 31. சூரியனின் சுய வர்க்கம் 6. தப்பித்தேன் என்று எண்ணுகிறேன்.
ReplyDeleteSir
ReplyDeleteI did not read the lesson yesterday as i was on 24 hrs duty
Hernia is a general medical term.Kudal irakkam is also a general translation.
The definition u have given in the blog is correct.Hernia means (Content coming out of the cavity).
Regarding why some people whi closely live with the patient do not get Tuberculosis is genetic.Their immune system would be strong and would have suppressed the expression.But still if he is tested with a skin test He will show positivity.When his immunity goes down of coexisting diseases,he will definitely develop Tuberculosis.
This is not true in other infectious diseases where u cannot prevent yourself from being infected.Different set of immune cells participate in that.
Apart from all this,Immune reaction is of four types depending upon the rapiditidy of response.
அய்யா,
ReplyDeleteநல்ல விளக்கமான பாடம். ஒரு விளக்கம் தேவை அய்யா.
"மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய்.
செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்."
இதையே, தனுசு லகினக்காரர்களுக்கும் எடுத்து கொள்ளலாமா? தனுசுக்கு ஆறாம் இடம் ரிஷபம் (செவ்வாயின் வீடு) தானே?
நன்றி
ஸ்ரீதர் S
நல்ல விளக்கமான பாடம். ஒரு விளக்கம் தேவை அய்யா.
ReplyDelete"மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய்.

Dear sir
with your permission i am answering this.
6th house for Dhanus rasi is rishabam.Ruler is Venus and not mars.

Dr. Vinodkumar,சிறிய தவறு, நான் விருச்சிக ராசியை தனுசு என்று தவற்ரக குறிப்பிட்டமைக்கு வருந்துகிறேன்.
தவறை சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி.
ஸ்ரீதர் S
/////Blogger கனிமொழி said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
இன்றிய பாடம் மிகவும் எளிதாக புரியும் படியுள்ளது நன்றி.
எனக்கு பத்தில் (மிதுனத்தில்) கேதுவுடன் சனி ,
சனியுடன் கேது கூட்டணி என்ன மாதிரி பலன் கொடுக்கும்?//////
சனி, கேது கூட்டணி பற்றிய படம் வர உள்ளது. சற்றுப் பொறுத்திருங்கள்!
Blogger Sakkubai said...
ReplyDeleteஐயா அவர்களுக்கு
எனக்கு மேஷத்தில் (4-ல்) கேது குருவுடன் . 4-ம் வீட்டின் பரல் 36. குரு தனித்து 6 பரல்களுடன் உள்ளார். மேஷ அதிபதி செவ்வாய் நீசம் . தற்பொழுது கேது திசை சுக்ர புக்தி நடக்கிறது, கேது தசா பலன்கள் எப்படி இருக்கும். தய கூர்ந்து பதில் அளிக்க வேண்டுகிறேன்.
கேது திசைப் பலன்கள் mixed results (நலதும் கெட்டதும் கலந்ததாக) ஆகத்தான் இருக்கும்!
Blogger N.K.S.Anandhan. said...
ReplyDeleteஐயா எப்பவும் போல் உங்கள் கைவண்ணம் அருமை. என் ஜாதகத்தில் பதினொன்றாம் இடத்தில் கேதுவும் சூரியனும் மற்றும் புதனும் அஷ்ட வர்க்க பரல்கள் 31. சூரியனின் சுய வர்க்கம் 6. தப்பித்தேன் என்று எண்ணுகிறேன்./////
ஆமாம், அப்படித்தான் நானும் நம்புகிறேன்!:-))))
/////Blogger Dr.Vinothkumar said...
ReplyDeleteSir
I did not read the lesson yesterday as i was on 24 hrs duty
Hernia is a general medical term.Kudal irakkam is also a general translation.
The definition u have given in the blog is correct.Hernia means (Content coming out of the cavity).
Regarding why some people whi closely live with the patient do not get Tuberculosis is genetic.Their immune system would be strong and would have suppressed the expression.But still if he is tested with a skin test He will show positivity.When his immunity goes down of coexisting diseases,he will definitely develop Tuberculosis.
This is not true in other infectious diseases where u cannot prevent yourself from being infected.Different set of immune cells participate in that.
Apart from all this,Immune reaction is of four types depending upon the rapiditidy of response.//////
விரிவான தகவல்களுக்கு நன்றி டாக்டர்!
//////Blogger Sridhar said... அய்யா,
ReplyDeleteநல்ல விளக்கமான பாடம். ஒரு விளக்கம் தேவை அய்யா.
"மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய்.
செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்."
இதையே, தனுசு லகினக்காரர்களுக்கும் எடுத்து கொள்ளலாமா? தனுசுக்கு ஆறாம் இடம் ரிஷபம் (செவ்வாயின் வீடு) தானே?
நன்றி
ஸ்ரீதர் S///////
ரிஷபம் செவ்வாயின் வீடல்ல! அது சுக்கிரனின் வீடு!
Blogger Dr.Vinothkumar said...
ReplyDeleteநல்ல விளக்கமான பாடம். ஒரு விளக்கம் தேவை அய்யா.
"மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய்.
செவ்வாய் திசை அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்."
இதையே, தனுசு லகினக்காரர்களுக்கும் எடுத்து கொள்ளலாமா? தனுசுக்கு ஆறாம் இடம் ரிஷபம் (செவ்வாயின் வீடு) தானே?
நன்றி
ஸ்ரீதர் S
Dear sir
with your permission i am answering this.
6th house for Dhanus rasi is rishabam.Ruler is Venus and not mars.//////
அவருடைய கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி டாக்டர்
நீங்கள் சொன்னது சரிதான்!