13.1.09

எப்போது ஞானம் வரும்?

எப்போது ஞானம் வரும்?

ஆசை இல்லாத மனிதனே கிடையாது. சிலருக்கு நியாயமான ஆசைகள்
இருக்கும். சிலருக்கு நியாமில்லாத ஆசைகள் இருக்கும்.

நியாயமான ஆசைகள் எவையென்று எழுதினால் அறுவையாக இருக்கும்.
நியாயமில்லாத ஆசைகளை எழுதினால் சுவையாக இருக்கும்.

அந்த சுவையான ஆசைகளைப் பதிவில் எழுத முடியாது. வகுப்பறைக்கு
வரும் பெண் வாசகர்களின் கண்டனத்திற்கு நான் ஆளாக நேரிடும்.
ஆகவே எழுதவில்லை. யாரும் பின்னூட்டத்தில் வேண்டுகோள்களை வைக்க
வேண்டாம் நோ சான்ஸ். எழுதப்போவதில்லை!:-))))

ஒன்று மட்டும் நிச்சயம். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்!

ஆசையால் துன்பங்கள் ஏற்படும். துன்பங்களால் அனுபவங்கள் ஏற்படும்
அனுபவங்களால் ஞானம் ஏற்படும்

உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு,
ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு
ஞானத்தைக் கொடுப்பவன் கேது.

இரண்டு கோள்களுக்கும் உள்ள வேலையை, இப்போது உங்களுக்குச்
சுருக்கமாகவும், தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

சரிதானா? பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள்!

வாருங்கள், இப்போது பாடத்திற்குப் போவோம்!
------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய பாடத்தின் மூன்றாம் பகுதி இது!

பன்னிரெண்டு வீடுகளிலும் ராகு அமர்ந்திருப்பதற்கான பலன்கள்.
இவை எல்லாமே பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க!

1
லக்கினத்தில் ராகு

ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன்.
அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம்.
அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும்,
வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை
வைத்து மாறுபடும்

ஜாதகனுக்குப் (பொதுவாக) இரக்க குணமே இருக்காது. இந்தப் "பொதுவான"
என்ற சொல்லை நான் உபயோகிக்கக் காரணம், நான் தப்பித்துக்கொள்ள!
இல்லையென்றால், "சார், இந்த அமைப்பு இருந்தும் கூட நான் இரக்கமானவன்.
வருடத்திற்கு இரண்டு முறைகள் ரத்ததானம் செய்கிறேன் தெரியுமா?" என்று
யாராவது சண்டைக்கு வரக்கூடும்.

சண்டை போடவெல்லாம் எனக்கு நேரமில்லை. என் போதாத நேரம்
வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:-))))

ஆனாலும் இங்கே எழுதுவதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது. அதற்கும்
மேலாக எண்ணற்ற வகுப்பறைக் கண்மணிகளின் அன்பு மழை இருக்கிறது.
அந்த அன்புமழைக் குளியல்தான் என்னைத் தொடர்ந்து உற்சாகமாக எழுத
வைக்கிறது!!!!!!!

அது மிகையல்ல! மாசற்ற உண்மை!

ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை
களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது.
சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும்
வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப்
பரலோகத்திற்கு அனுப்பிவிடுவான். அல்லது வைகுண்டத்திற்கு அனுப்பிவிடுவான்.
சிவபக்தர்களை சிவலோகத்திற்கு அனுப்பிவிடுவான். எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக்கொள்ளுங்கள்.

போட்டது போட்டபடி ஒருநாள் போய்ச் சேரவேண்டும்.

ஐடென்ட்டி கார்டு, ரேசன் கார்டு, வங்கி இருப்பு, தங்க நகைகள்,சொத்துப் பத்திரங்கள்,
பங்குப் பத்திரங்கள், இரண்டு கிரவுண்டில் கட்டிய வீடு அல்லது அண்ணாசாலையில்
வாங்கிய அடுக்குக் குடியிருப்பு, வண்டி, வாகனங்கள் என்று எதுவும் உடன் வராது!

அவைகளெல்லாம் மனைவியின் கையில் தங்கி விடும். அல்லது சிலருக்கு
விசுவாசமில்லாத பிள்ளைகள் கையில் அவைகள் தங்கி விடும்.

பிள்ளைகள் வருடம் ஒருமுறை அவன் இறந்த நாளான்று பன்னீர்ப்பூ மாலை
ஒன்றை வாங்கி, அவனுடைய படத்திற்குப் போட்டு, அன்று மட்டும் அவனை
நினைத்து மகிழ்வார்கள்.

சிலர் வீட்டில் அதுவும் நடக்காது. மேற்கொண்டு. It is total nonsense! என்று
திட்டு வேறு கிடைக்கும்.(அதாவது அப்பனுக்குத் திதி செய்வது)

அதுதான் வாழ்க்கை. அதை உயிருடன் இருக்கும்போதே உணரும்படியான
சூழ்நிலைகளை, ராகு ஏற்படுத்துவான். கேது அதை அடையாளம் காட்டுவான்.

சிலர் அதை உணர்வார்கள். பலர் அதை உணரமாட்டார்கள். மேலும் மேலும்
சம்பாதிப்பதில் மும்மரமாக இருப்பார்கள்.

அதை உணர, அவர்களுக்கு நேரம் ஏது?

ஆமாம் சிலர் தலை எழுத்து அப்படி இருக்கும். அவன் சம்பாதித்து வைத்து
விட்டுப்போவான். அவனுக்கு அனுபவ பாத்தியம் இருக்காது.

He will earn money only for others. May be his kith and kins or someone!

இந்த அமைப்பு ஜாதகன் பெண்பித்து உள்ளவனாக இருப்பான். பித்து என்றால்
அடிக்க வருவீர்கள். ஆகவே இப்படி வைத்துக் கொள்ளுங்கள. பெண் மேல்
தீராத மோகம் உடையவனாக இருப்பான். ஜாதகியாக இருந்தால் அவளுக்கும்
அந்த மோகம் இருக்கும். ஆனால் பெண்ணிற்கென்று சில விசேஷ உடல்
அமைப்பும் குணங்களும் உண்டு. அதனால் அதை அவள் அடக்கி வைத்திருப்பாள்

அது என்ன சார்? பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும் குணங்களும்
உண்டா? ஆமாம் அது பெரிய பாடம். பின்னால் வரும்!

மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால்
மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம்
ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
==============================================================
2.
ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும்
ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில்
சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று
கோபம் வரக்கூடியவன்.

பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது
சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும்
ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

அதிலிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருக்கிறது. திருமணமாகாத நிலையில் காசு
வந்தால் அம்மா கையில் கொடுத்துப்போடு செல்லக்கண்ணு! மணமாகி இருந்தால்
மனைவி கையில் கொடுத்துவிடு மாப்ளே! அதுதான் வழி!

==============================================================
3.
+++++++++ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான்.
பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான்?
சாய்த்த பிறகு என்ன செய்வான் என்பதைப் பதிவில் எழுத முடியாது!

தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?)

தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான்
உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் தூள் கிளப்பி
விடுவான்.

பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று
அவளும் தூள் கிளப்பி விடுவாள்

இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல
பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!
============================================================
3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய
கிரகங்களுக்கு உகந்த இடங்கள் அதை மனதில் கொள்க!
============================================================
4.
ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்:

மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு
இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இருதயம்
சம்பந்தப் பட்ட நோய்கள் என்னனென்ன வென்று நமது மதிப்பிற்குரியவரும்
சக பதிவருமான டாக்டர் ப்ரூனோ அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை
இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான்.

மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி
வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக
வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும்.

உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி
விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது!

இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப்
போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.

என் உறவினர்களின் ஜாதகங்களில் சிலருடைய ஜாதகம் இந்த அமைப்பில்
இருப்பதையும், அவர்கள் மீள முடியாத சுகக்கேடுகளில் இருப்பதையும் நான்
கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த பெண் திருமணமாகி, ஒரு செல்வந்தர் வீட்டிற்கு மருமகளாகப்
போனார். ராகுவும் கூடவே போனான். அவர்கள் வீட்டில் அவநம்பிக்கை
காரணமாக எந்த வேலைக்கும் ஆட்களை நியமிக்கும் வழக்கமில்லை. போன
இந்தப் பெண்மணிதான் கடைசிவரை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவர்கள்
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார். இப்போது வேலை ஒப்பந்தம்
முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறார். ஆமாம் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
================================================================
5.
ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய
அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன்.

உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக்
கண்டால் ஒதுங்கி விடுவார்கள்

சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும்
ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை
இருக்காது.
================================================================
6.
************ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும்
ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது
வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள்.

ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான்
anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான்.
அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல
ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான்.

அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில்
பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான்.

பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான்.
நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
==================================================================
7.
ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச்
செலவு செய்பவனாக இருப்பான்.

சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு
தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான்
அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான்,

இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர்
அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் ஏச்சுக்கு ஆளாக நேரிடும்.
அதீத நோயால், உடல் சீர்கெடும்.

சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.
==================================================================
8.
ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும்
வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும்.

இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!)
சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும் (அர்த்தம் புரிகிறதா?) முன் கர்ம வினை
தொடர்கிறது என்று பொருள்.

சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும்
அதிகமாக இருக்கும்.

பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்
சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும்

அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச்
செல்வி விலகிப் போய்விடுவாள்.

ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint)
பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------
9.
ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு
ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை!

ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று
எல்லாம் அசத்தலாக இருக்கும்

ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக
ஜாதகன் இருப்பான்.

இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச்
சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!
=============================================================
10.
++++++ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே
தொழில்நுட்ப அறிவு இருக்கும். Blessed with professional skill என்று வைத்துக்
கொள்ளுங்கள்.

சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.

சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்

மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக
ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் (comforts) பெற்றவனாக இருப்பான்

அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின்
வாழ்க்கை அமைந்து சிறக்கும்!
==================================================================
11.
++++++++++++ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்:
பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக
இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக
இருப்பான்.

செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும்
தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு
செயல்படுபவனாக இருப்பான்.

வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும்
அல்லது அமையும்.

அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன்
இருப்பான்
=================================================================
12.
ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத
வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள்
உண்டாகலாம்.

சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். அதாவது மறுக்கப்
பட்டிருக்கும்.

ஆசாமி வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன்.

பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும்

இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்)
சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி சர்வ நிச்சயமாக உண்டு! அந்த பாதிப்பைத் தாக்குப்
பிடிக்க இறைவழிபாடு ஒன்று மட்டுமே உதவும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
======================================================
(தொடரும்)

வாழ்க வளமுடன்!

52 comments:

  1. கிரஹங்கள் பற்றி எழுதும் போது அந்த கிரஹங்களின் பெயர்களையும் குறி சொல்லில் சேருங்கள், பிற்காலத்தில் படிப்பவர்களுக்கு நீங்கள் ராகுவைப் பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள 'ராகு'குறி சொல் சேர்க்கப்பட்டு இருந்தால் அதை தேடி படிப்பது எளிமையாக இருக்கும்

    ReplyDelete
  2. நீண்ட பதிவு. அருமையான பலன்கள்.
    ராகு எனக்கு துரோகம் செய்துவிட்டாடர்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. Dear Sir,
    Thanks for the lesson. Please write about the effect of various grahas when they combie with ragu in various houses.

    ReplyDelete
  4. Ayya Padhivu mikavum arumai...

    Nandri ayya.

    ReplyDelete
  5. It's my fate sir. what can i do sir? my star belongs to rahu(sadhayam). rahu in 4th house(simma) with sani. very good. very good. Eventhough God never do a mistake. am i right sir?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Thanks for the long post.your post is excellent.

    I have a Rahu in 8th Taurus.i am ruing my faith.My lagna lord and 8th lord are same and is in lagna.Hopefully my Lagna lord is stronger than Rahu

    Kindly clear my doubts

    1.What are Badhakstanas.What happens if Rahu sits in Badhakasthanam or associated with badhak lord?

    Prasna marga says it constitutes sarpa dosha.

    2.what are the effects for men and women?

    3.Is it different from Kaala sarpa yoga.

    4.what are the remedies?

    I wouldnt mind if ur next few posts are on Rahu itself.I like Rahu very much.

    5.What are Moolatrikona signs for Rahu?

    6.I saw a chart of a female(not my girlfriend) where Rahu is 2nd from upapada lagna.I read somewhere that it is not good.I know you havent covered this portion,but still please let me know what can happen escpecially when Rahu dasha is going on?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. In the above post .please read "i am ruing my faith" as "i am ruing my fate"

    I have couple of questions sir

    1.Does rahu being in lagna with weak 8th house apply also to navamsa?

    2.Will Rahu totally eclipse Sun and moon if they are present with Rahu

    3.Rahu is considered planet for foreign travel?what are the placements it will be give yoga for foreign travel?

    4.normally if i feel difficult to find out planet strength,i used to see its own ashtavarga?As Rahu does not have asthavarga,how to tackle this situation?

    ReplyDelete
  10. Nice to see Dr.Bruno as your follower.i see his blog frequently for updates about PG medical entrance.

    To Dr.Bruno

    nice meeting you here Dr.Bruno.

    ReplyDelete
  11. /ஆசையால் துன்பங்கள் ஏற்படும் //

    ஆசையே அலைபோலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே வாழ்ந்திடுவோமே
    வாழ் நாளிலே

    என ப் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

    நிற்க. ராகு முதல், இரண்டு, மூன்று, நான்கு எட்ஸட்ரா ஆகிய இடங்களில் இருப்பது மட்டுமன்றி, அந்த ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு எனப்படுபவை
    மேடம், ரிஷபம், மிதுனம், கடகம் எட்ஸட்ரா ஆகியவையாக இருப்பின் பலன் எப்படி என்பதை அடுத்த பாடத்தில் சொல்வீர்கள் என‌
    நினைக்கிறேன். அடுத்து, ராகு எத்தனாவது இடம், எந்த ராசி என்பதைத் தவிர எந்த நக்ஷத்திரத்தின் காலில் உள்ளார், அந்த நக்ஷத்திரத்தின்
    அதிபதி யார் ? அவருக்கும் ராகுவுக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் எப்படி என்பதெல்லாமும் கவனிக்கவேண்டும் என்கிறார்களே ?

    உதாரணமாக, ராகு சிம்ம ராசியில். லக்னத்திலிருந்து 4வது இடம். இருப்பது பூரம் 1ம் பாதத்தில். 4க்கு உடைய சூரியனோ லக்னத்தில்.
    பூர நக்ஷத்திரத்திற்கு அதிபதியான சுக்ரன் லக்னாதிபதி, அவர் பாவம் 12ல் இருக்கிறார். போதாக்குறைக்கு எல்லாக் கோள்களுமே
    சிம்மத்திற்கும் கும்பத்திற்கும் நடுவில் சிறைப்பட்டு இருக்கின்றன. ( கால சர்ப்ப யோகம் ? )

    ராகு தசை எப்படி இருந்திருக்கும் ? இவையெல்லாமும் அடுத்தடுத்த பாடங்களில் தருவீர்களென நினைக்கிறேன்.

    You are doing a great job.
    God Bless you
    பொங்கல் வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  12. ஐயா ஞான காரகன் மோட்ச காரகன் பற்றியப் பதிவு அருமை. ஐயா ராகு இருக்கும் வீட்டின் அதிபதியும் அவ்வீட்டின் காரகனும் பரிவர்த்தனை ஆகி இருந்தால் ராகுவால் ஏற்படும் பாதிப்பு குறையுமா? தயவு செய்து விளக்கவும்.

    ReplyDelete
  13. Nantri...Nantri...Nantri...

    I REQUEST you sir, if you can also indicate any remidies, if there is problem.

    Like if Rahu in 2nd house, 8th house, etc..what are all the remidies to reduce its affect... which God to workship and any special slogams etc.

    Not only to Rahu in general if you can give us a seperate leesson on "Problems & Remedies", i feel it will more usefull.

    I hope similar classes will be conducted for Planet Kethu.

    Again main thanks for sharing your knowledge sir and also for your efforts.

    Anbudan,
    Kamesh

    ReplyDelete
  14. Blogger கோவி.கண்ணன் said...
    கிரஹங்கள் பற்றி எழுதும் போது அந்த கிரஹங்களின் பெயர்களையும் குறி சொல்லில் சேருங்கள், பிற்காலத்தில் படிப்பவர்களுக்கு நீங்கள் ராகுவைப் பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள 'ராகு'குறி சொல் சேர்க்கப்பட்டு இருந்தால் அதை தேடி படிப்பது எளிமையாக இருக்கும்////

    ஜோதிடப் பாடங்கள் என்கின்ற குறிச்சொல் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் சொல்வது போன்ற குறிச்சொற்களைக் கொடுத்தால், தேடுபவர்களுக்கு அது வசதிதான். செய்து விடுகிறேன் கோவியாரே!

    ReplyDelete
  15. Blogger வேலன். said...
    நீண்ட பதிவு. அருமையான பலன்கள்.
    ராகு எனக்கு துரோகம் செய்துவிட்டார்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    கவலைப் படாதீர்கள், கேது நன்மைகளைச் செய்வார்:-)))))

    ReplyDelete
  16. ////Blogger krish said...
    Dear Sir,
    Thanks for the lesson. Please write about the effect of various grahas when they combie with ragu in various houses.////

    That will be the next lesson, Krish!

    ReplyDelete
  17. ///Blogger Prabhu said...
    Ayya Padhivu mikavum arumai...
    Nandri ayya./////

    It is all right Prabhu!

    ReplyDelete
  18. ////Blogger sridhar said...
    It's my fate sir. what can i do sir? my star belongs to rahu(sadhayam). rahu in 4th house(simma) with sani. very good. very good. Eventhough God never do a mistake. am i right sir?////

    ஒரு வீடு கெட்டிருந்தால், இன்னொரு வீடு நன்றாக இருக்கும். முன்பே சொல்லியிருக்கிறேன். 12 வீடுகளும் நன்றாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை. மொத்தம் 36 பாக்கியங்களில் 18 பாக்கியங்கள் மட்டுமே கிடைக்கும். எந்தப் பதினெட்டு என்பதுதான் முக்கியமானது. அனைவருக்கும் 337 பரல்கள் மட்டுமே. அனைவரும் சமம். அதைப் பலர் உணர்வதில்லை!

    ReplyDelete
  19. Blogger vinoth said...
    Thanks for the long post.your post is excellent.
    I have a Rahu in 8th Taurus.i am ruing my faith.My lagna lord and 8th lord are same and is in lagna.Hopefully my Lagna lord is stronger than Rahu
    Kindly clear my doubts////

    ஒரு வீடு கெட்டிருந்தால், இன்னொரு வீடு நன்றாக இருக்கும். முன்பே சொல்லியிருக்கிறேன். 12 வீடுகளும் நன்றாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை. மொத்தம் 36 பாக்கியங்களில் 18 பாக்கியங்கள் மட்டுமே கிடைக்கும். எந்தப் பதினெட்டு என்பதுதான் முக்கியமானது. அனைவருக்கும் 337 பரல்கள் மட்டுமே. அனைவரும் சமம். அதைப் பலர் உணர்வதில்லை!

    ///////1.What are Badhakstanas.What happens if Rahu sits in Badhakasthanam or associated with badhak lord?
    Prasna marga says it constitutes sarpa dosha.
    2.what are the effects for men and women?
    3.Is it different from Kaala sarpa yoga.
    4.what are the remedies?
    I wouldnt mind if ur next few posts are on Rahu itself.I like Rahu very much.
    5.What are Moolatrikona signs for Rahu?
    6.I saw a chart of a female(not my girlfriend) where Rahu is 2nd from upapada lagna.I read somewhere that it is not good.I know you havent covered this portion,but still please let me know what can happen escpecially when Rahu dasha is going on?
    In the above post .please read "i am ruing my faith" as "i am ruing my fate"
    I have couple of questions sir
    1.Does rahu being in lagna with weak 8th house apply also to navamsa?
    2.Will Rahu totally eclipse Sun and moon if they are present with Rahu
    3.Rahu is considered planet for foreign travel?what are the placements it will be give yoga for foreign travel?
    4.normally if i feel difficult to find out planet strength,i used to see its own ashtavarga?As Rahu does not have asthavarga,how to tackle this situation?/////

    மொத்தம் பத்துக் கேள்விகள் உள்ளன. பதில்களை அடுத்த பதிவில் தருகிறேன். எனது அலுவலகப் பணி காரணமாக இப்போது எழுத நேரம் இல்லை!

    ReplyDelete
  20. Blogger Dr.Vinothkumar said...
    Nice to see Dr.Bruno as your follower.i see his blog frequently for updates about PG medical entrance.
    To Dr.Bruno
    nice meeting you here Dr.Bruno.

    நம் வகுப்பில் டாக்டர் ப்ரூனோ அவர்கள் மூத்த மாணவர் (சீனியர் ஸ்டூடண்ட்)

    ReplyDelete
  21. Blogger sury said...
    /ஆசையால் துன்பங்கள் ஏற்படும் //
    ஆசையே அலைபோலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே வாழ்ந்திடுவோமே
    வாழ் நாளிலே
    எனப் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
    நிற்க. ராகு முதல், இரண்டு, மூன்று, நான்கு எட்ஸட்ரா ஆகிய இடங்களில் இருப்பது மட்டுமன்றி, அந்த ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு எனப்படுபவை
    மேடம், ரிஷபம், மிதுனம், கடகம் எட்ஸட்ரா ஆகியவையாக இருப்பின் பலன் எப்படி என்பதை அடுத்த பாடத்தில் சொல்வீர்கள் என‌ நினைக்கிறேன். அடுத்து, ராகு எத்தனாவது இடம், எந்த ராசி என்பதைத் தவிர எந்த நக்ஷத்திரத்தின் காலில் உள்ளார், அந்த நக்ஷத்திரத்தின்
    அதிபதி யார் ? அவருக்கும் ராகுவுக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் எப்படி என்பதெல்லாமும் கவனிக்கவேண்டும் என்கிறார்களே ?
    உதாரணமாக, ராகு சிம்ம ராசியில். லக்னத்திலிருந்து 4வது இடம். இருப்பது பூரம் 1ம் பாதத்தில். 4க்கு உடைய சூரியனோ லக்னத்தில்.
    பூர நக்ஷத்திரத்திற்கு அதிபதியான சுக்ரன் லக்னாதிபதி, அவர் பாவம் 12ல் இருக்கிறார். போதாக்குறைக்கு எல்லாக் கோள்களுமே சிம்மத்திற்கும் கும்பத்திற்கும் நடுவில் சிறைப்பட்டு இருக்கின்றன. ( கால சர்ப்ப யோகம் ? )
    ராகு தசை எப்படி இருந்திருக்கும் ? இவையெல்லாமும் அடுத்தடுத்த பாடங்களில் தருவீர்களென நினைக்கிறேன்.
    You are doing a great job.
    God Bless you
    பொங்கல் வாழ்த்துக்கள்.
    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com//////

    நன்றி சார்! நீங்கள் கேட்டுள்ளவைகளுக்கு அடுத்த பதிவில் விவரம் தருகிறேன்.எனது அலுவலகப் பணி காரணமாக இப்போது எழுத நேரம் இல்லை!

    ReplyDelete
  22. Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா ஞான காரகன் மோட்ச காரகன் பற்றியப் பதிவு அருமை. ஐயா ராகு இருக்கும் வீட்டின் அதிபதியும் அவ்வீட்டின் காரகனும் பரிவர்த்தனை ஆகி இருந்தால் ராகுவால் ஏற்படும் பாதிப்பு குறையுமா? தயவு செய்து விளக்கவும்.//////

    வீடுள்ள கிரகங்கள் மட்டுமே பரிவர்த்தனை செய்து கொள்ளும். அவற்றிற்கு மட்டுமே பலன்கள். காரகன் வீடுகளுக்கு அப்பாற்பட்டவன். அவன் தன்னுடைய பலத்தை வேறு ஒரு கிரகம் அல்லது வேறு ஒரு காரகனுடன் பரிவர்த்தனம் செய்து கொள்ள மாட்டான்!

    ReplyDelete
  23. Blogger Kamesh said...
    Nantri...Nantri...Nantri...
    I REQUEST you sir, if you can also indicate any remidies, if there is problem.
    Like if Rahu in 2nd house, 8th house, etc..what are all the remidies to reduce its affect... which God to workship and any special slogams etc.
    Not only to Rahu in general if you can give us a seperate leesson on "Problems & Remedies", i feel it will more usefull.
    I hope similar classes will be conducted for Planet Kethu.
    Again main thanks for sharing your knowledge sir and also for your efforts.
    Anbudan,
    Kamesh/////

    பொருள் வைத்து அல்லது கொடுத்துச் செய்யும் பரிகாரம் எல்லாம் ஏமாற்று வேலை.
    கிரக வழிபாடு, ஆத்மார்ந்தமான இறை வழிபாடு இரண்டும் நன்மை அளிக்கும்.

    ராகுவிற்கு உரிய ஸ்தலங்கள்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில்,
    திருப்பதிக்கு அருகில் திருக்காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்கள்! அங்கே சென்று மனம் உருக
    வழிபட்டு வருவதும் பயனளிக்கும்!

    வழிபடுவதால், உங்கள் துன்பங்கள் முற்றிலும் நீங்காது அல்லது குறையாது. வருவதை நீங்கள்
    அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் வழிபாடுகள், அவற்றைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும்!
    Yes, It will give you standing power. That is important!

    ReplyDelete
  24. அருமையான பதிவு,

    நன்றி ஐயா,

    5ல் ராகு இருந்தால் அந்தப் பெண்ணின் திருமண வாழ்வு பாதிக்கும் என்கிறார்களே? அதை குறித்து சற்று விரிவாக சொல்ல முடியுமா? பரிகாரம் ஏதும் உண்டா?

    (திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண்ணிற்கு உதவ கேட்கிறேன்)

    ReplyDelete
  25. Blogger புதுகைத் தென்றல் said...
    அருமையான பதிவு,
    நன்றி ஐயா,
    5ல் ராகு இருந்தால் அந்தப் பெண்ணின் திருமண வாழ்வு பாதிக்கும் என்கிறார்களே? அதை குறித்து சற்று விரிவாக சொல்ல முடியுமா? பரிகாரம் ஏதும் உண்டா?
    (திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண்ணிற்கு உதவ கேட்கிறேன்)////

    5ல் இருக்கும் ராகுவால் சிலருக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும். அவ்வளவுதான்.
    திருமணத்திற்கும் அந்த அமைப்பிற்கும் சம்பந்தம் இல்லை சகோதரி!

    ReplyDelete
  26. /////Blogger Geekay said...
    Present Sir,
    GK, BLR////

    வருகை, பதிவு செய்யப்பட்டது!:-))))

    ReplyDelete
  27. உங்களின் ராகு தோஷம் நீங்க படியுங்கள் JKR பற்றிய பதிவு.

    http://kaveriganesh.blogspot.com/

    ReplyDelete
  28. ஜயா,

    நான் தனுசு லக்னம், எனக்கு 2 ல் ராகு, மனைவிக்கு 10 ல் ராகு. நான் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுத்து வைக்கலாமா?.

    மனைவி விருச்சிக லக்னம், 10 ல் ராகு, இன்னும் 2 வருடத்தில் ராகு திசை வரும். ராகு திசை எப்படி இருக்கும்?

    ReplyDelete
  29. Dear Sir,

    Adada... Arputham..Excellent Sir.

    How Sir? ....

    you told me "you are a good reader and then you are good writer".Sure sir 100% is true.

    "You are the excellent writer sir."

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  30. ராகு பகவான் பற்றிய படம் சிறப்பாக அமைந்தது
    தெளிவாகவும் சுவையாகவும் படிக்க படிக்க ஆர்வமாகவும் இருந்தது அய்யா நன்றி அடுத்த பாடத்தை ஆவளுடன் எதிர் பார்க்கும் அன்பு மாணவர்

    ReplyDelete
  31. /////Blogger Kamesh said...
    Nantri...Nantri...Nantri...
    I REQUEST you sir, if you can also indicate any remidies, if there is problem.
    Like if Rahu in 2nd house, 8th house, etc..what are all the remidies to reduce its affect... which God to workship and any special slogams etc.
    Not only to Rahu in general if you can give us a seperate leesson on "Problems & Remedies", i feel it will more usefull.
    I hope similar classes will be conducted for Planet Kethu.
    Again main thanks for sharing your knowledge sir and also for your efforts.
    Anbudan,
    Kamesh/////

    பொருள் வைத்து அல்லது கொடுத்துச் செய்யும் பரிகாரம் எல்லாம் ஏமாற்று வேலை.கிரக வழிபாடு, ஆத்மார்ந்தமான இறை வழிபாடு இரண்டும் நன்மை அளிக்கும்.

    ராகுவிற்கு உரிய ஸ்தலங்கள்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில்,திருப்பதிக்கு அருகில் திருக்காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்கள்! அங்கே சென்று மனம் உருக வழிபட்டு வருவதும் பயனளிக்கும்!

    வழிபடுவதால், உங்கள் துன்பங்கள் முற்றிலும் நீங்காது அல்லது குறையாது. வருவதை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் வழிபாடுகள், அவற்றைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும்! Yes, It will give you standing power. That is important!

    கடவுள் ஒருவர்தான். நாம் அவரைப் பலவடிவங்களில் வணங்குகிறோம். நான் பழநியில் இருக்கும். தண்டாயுதபாணியை இறைவடிவாக நினைத்து நாளும் - இருக்கின்ற இடத்தில் இருந்து வணங்குவேன். பிரார்த்திப்பேன்

    நீங்களும் உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை மனதில் நினைத்து வணங்குங்கள்.பிரார்த்தனை செய்யுங்கள். அதுதான் பொதுப் பரிகாரம்

    Okay யா?

    ReplyDelete
  32. ////Blogger KaveriGanesh said...
    உங்களின் ராகு தோஷம் நீங்க படியுங்கள் JKR பற்றிய பதிவு.
    http://kaveriganesh.blogspot.com////

    படித்தால் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும். படித்தேன். எனக்கு நீங்கிவிட்டது!:-)))))

    ReplyDelete
  33. ////Blogger KaveriGanesh said...
    ஜயா,
    நான் தனுசு லக்னம், எனக்கு 2 ல் ராகு, மனைவிக்கு 10 ல் ராகு. நான் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுத்து வைக்கலாமா?.
    மனைவி விருச்சிக லக்னம், 10 ல் ராகு, இன்னும் 2 வருடத்தில் ராகு திசை வரும். ராகு திசை எப்படி இருக்கும்?//////

    அம்மையாருக்குப் பத்தில் ராகு இருக்கிறதே! பிறகென்ன? தையமாகக் கொடுத்துவையுங்கள். வாத்தியார் சொன்னார் என்று
    சொல்லுங்கள். அப்படியாவது என் புகழ் பரவட்டும்!:-))))

    ReplyDelete
  34. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir,
    Adada... Arputham..Excellent Sir.
    How Sir? ....
    you told me "you are a good reader and then you are good writer".Sure sir 100% is true.
    "You are the excellent writer sir."
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    பத்து டன் ஐசைத் தூக்கித் தலையில் வைத்து விட்டீர்களே ராஜாராமன்!
    அது எப்போது கரைவது? எப்போது அதைவிட்டு நான் வெளியே வருவது?
    அடுத்த பதிவை எப்படி எழுதுவது?

    ReplyDelete
  35. ///Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    ராகு பகவான் பற்றிய படம் சிறப்பாக அமைந்தது
    தெளிவாகவும் சுவையாகவும் படிக்க படிக்க ஆர்வமாகவும் இருந்தது அய்யா நன்றி அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர் பார்க்கும் அன்பு மாணவர்////

    உப்பு காரம் எல்லாம் சரியாக இருந்தது என்கிறீர்கள். சமைத்தது ஓக்கே என்கிறீர்கள். பக்குவம் தெரிந்துவிட்டது.
    அடுத்தடுத்து வரும் சாப்பாடும் அப்படியே இருக்கும்!

    ReplyDelete
  36. /////Blogger Kamesh said...
    Nantri...Nantri...Nantri...
    I REQUEST you sir, if you can also indicate any remidies, if there is problem.
    Like if Rahu in 2nd house, 8th house, etc..what are all the remidies to reduce its affect... which God to workship and any special slogams etc.
    Not only to Rahu in general if you can give us a seperate leesson on "Problems & Remedies", i feel it will more usefull.
    I hope similar classes will be conducted for Planet Kethu.
    Again main thanks for sharing your knowledge sir and also for your efforts.
    Anbudan,
    Kamesh/////

    பொருள் வைத்து அல்லது கொடுத்துச் செய்யும் பரிகாரம் எல்லாம் ஏமாற்று வேலை.கிரக வழிபாடு, ஆத்மார்ந்தமான இறை வழிபாடு இரண்டும் நன்மை அளிக்கும்.

    ராகுவிற்கு உரிய ஸ்தலங்கள்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில்,திருப்பதிக்கு அருகில் திருக்காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்கள்! அங்கே சென்று மனம் உருக வழிபட்டு வருவதும் பயனளிக்கும்!

    வழிபடுவதால், உங்கள் துன்பங்கள் முற்றிலும் நீங்காது அல்லது குறையாது. வருவதை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் வழிபாடுகள், அவற்றைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும்! Yes, It will give you standing power. That is important!

    கடவுள் ஒருவர்தான். நாம் அவரைப் பலவடிவங்களில் வணங்குகிறோம். நான் பழநியில் இருக்கும். தண்டாயுதபாணியை இறைவடிவாக நினைத்து நாளும் - இருக்கின்ற இடத்தில் இருந்து வணங்குவேன். பிரார்த்திப்பேன்

    நீங்களும் உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை மனதில் நினைத்து வணங்குங்கள்.பிரார்த்தனை செய்யுங்கள். அதுதான் பொதுப் பரிகாரம்

    Okay யா?

    -------------------------------
    -------------------------------

    Thanks for the response & clarification.

    Eagerly awaiting for the next class.

    Anbudan,
    Kamesh

    ReplyDelete
  37. நெல்மணிகள் முற்றத்தில் பளபளக்க
    நிலவழகாய்க் கொத்துமஞ்சள் குலுகுலுக்க
    புல்லினத்துச் செங்கரும்பு மடலவிழ
    புதுப்பானை கழுத்ததனில் மலர்இணைய
    சொல்லரிய இயற்கைத்தாய் புன்சிரிப்பால் சுழல்
    பூமி பசுமையாய் விழிபறிக்க
    மல்லிகையாய்ப் பொங்கியதே வெண்பொங்கல்!
    மனப்பானை பொங்கட்டும் மகிழ்வாக!

    பொங்கல் ஓ பொங்கல் !!!!!

    ReplyDelete
  38. Focus Lanka திரட்டியில் இணைக்க...

    http://www.focuslanka.com

    ReplyDelete
  39. /////Blogger Kamesh said...
    /////Blogger Kamesh said...
    Nantri...Nantri...Nantri...
    I REQUEST you sir, if you can also indicate any remidies, if there is problem.
    Like if Rahu in 2nd house, 8th house, etc..what are all the remidies to reduce its affect... which God to workship and any special slogams etc.
    Not only to Rahu in general if you can give us a seperate leesson on "Problems & Remedies", i feel it will more usefull.
    I hope similar classes will be conducted for Planet Kethu.
    Again main thanks for sharing your knowledge sir and also for your efforts.
    Anbudan,
    Kamesh/////
    பொருள் வைத்து அல்லது கொடுத்துச் செய்யும் பரிகாரம் எல்லாம் ஏமாற்று வேலை.கிரக வழிபாடு, ஆத்மார்ந்தமான இறை வழிபாடு இரண்டும் நன்மை அளிக்கும்.
    ராகுவிற்கு உரிய ஸ்தலங்கள்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில்,திருப்பதிக்கு அருகில் திருக்காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்கள்! அங்கே சென்று மனம் உருக வழிபட்டு வருவதும் பயனளிக்கும்!
    வழிபடுவதால், உங்கள் துன்பங்கள் முற்றிலும் நீங்காது அல்லது குறையாது. வருவதை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் வழிபாடுகள், அவற்றைத் தாங்கும் சக்தியைக் கொடுக்கும்! Yes, It will give you standing power. That is important! கடவுள் ஒருவர்தான். நாம் அவரைப் பலவடிவங்களில் வணங்குகிறோம். நான் பழநியில் இருக்கும். தண்டாயுதபாணியை இறைவடிவாக நினைத்து நாளும் - இருக்கின்ற இடத்தில் இருந்து வணங்குவேன். பிரார்த்திப்பேன்
    நீங்களும் உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை மனதில் நினைத்து வணங்குங்கள்.பிரார்த்தனை செய்யுங்கள். அதுதான் பொதுப் பரிகாரம்
    Okay யா?
    Thanks for the response & clarification.
    Eagerly awaiting for the next class.
    Anbudan,
    Kamesh//////

    Next posting will be after Pongal! That is on 16th Jan' 2009 Friday morning!

    ReplyDelete
  40. Blogger Kamesh said...
    நெல்மணிகள் முற்றத்தில் பளபளக்க
    நிலவழகாய்க் கொத்துமஞ்சள் குலுகுலுக்க
    புல்லினத்துச் செங்கரும்பு மடலவிழ
    புதுப்பானை கழுத்ததனில் மலர்இணைய
    சொல்லரிய இயற்கைத்தாய் புன்சிரிப்பால் சுழல்
    பூமி பசுமையாய் விழிபறிக்க
    மல்லிகையாய்ப் பொங்கியதே வெண்பொங்கல்!
    மனப்பானை பொங்கட்டும் மகிழ்வாக!
    பொங்கல் ஓ பொங்கல் !!!!!//////

    பாடல் நன்றாக உள்ளது. எழுதியவர் யாரென்று சொல்லவில்லையே நீங்கள்?

    ReplyDelete
  41. /////Blogger நிலா பிரியன் said...
    Focus Lanka திரட்டியில் இணைக்க...
    http://www.focuslanka.com/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. விரிவான பதிவிற்கு நன்றி

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  43. தங்களின் பதிலுக்கு நன்றி.

    அந்தப் பெண்ணிற்கு பொருத்தம் பார்க்க ஜாதகம் கொடுத்த பொழுது அவர்கள் சொன்னதுதான் கொஞ்சம் பயமுறித்தியது. அதனால்தான் கேட்டேன்.

    ஜாதகியின் ஜாதகம் தோஷ ஜாதகம். சுத்த ஜாதகத்துடன் ஒத்துப் போகாது.

    திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்குள் சச்சரவு, பிளவு போன்றவை வர வாய்ப்பிருக்கிறது.
    5ஆம் இடம் களஸ்திர ஸ்தானம் என்றார்.

    தங்களின் பதிலால் நிம்மதி அடைந்தேன்.

    நன்றி

    ReplyDelete
  44. Dear Sir and friends,
    Happy Pongal and Happy New Year.
    Swami Omkar is beginning his astrology lessons from today.

    ReplyDelete
  45. ////Blogger இராசகோபால் said...
    விரிவான பதிவிற்கு நன்றி
    அன்புடன்
    இராசகோபால்////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  46. ////Blogger புதுகைத் தென்றல் said...
    தங்களின் பதிலுக்கு நன்றி.
    அந்தப் பெண்ணிற்கு பொருத்தம் பார்க்க ஜாதகம் கொடுத்த பொழுது அவர்கள் சொன்னதுதான் கொஞ்சம் பயமுறித்தியது. அதனால்தான் கேட்டேன்.
    ஜாதகியின் ஜாதகம் தோஷ ஜாதகம். சுத்த ஜாதகத்துடன் ஒத்துப் போகாது.
    திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்குள் சச்சரவு, பிளவு போன்றவை வர வாய்ப்பிருக்கிறது.
    5ஆம் இடம் களஸ்திர ஸ்தானம் என்றார்.
    தங்களின் பதிலால் நிம்மதி அடைந்தேன்.
    நன்றி////

    ஐந்தாம் இடம் களஸ்திர ஸ்தானம் என்று சொன்னாரா?
    அவர் வீட்டில் பொன்னாக விளைக!

    களஸ்திரம் எனப்படும் திருமண பாக்கியத்திற்கு உள்ள இடம் ஏழாம் வீடு! அவருக்குத் தெரிந்த ஜோதிடத்தில் ஏழாம் வீடு எதற்கு உரியது? என்று கேளுங்கள்

    ReplyDelete
  47. //////Blogger krish said...
    Dear Sir and friends,
    Happy Pongal and Happy New Year.
    Swami Omkar is beginning his astrology lessons from today./////

    Thanks for the information and also for your greetings!

    ReplyDelete
  48. அய்யா, அருமையான பதிவுகள். இப்பொழுதுதான் ராகு தொடர்பான அனைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன்.

    எனக்கு 12 இல் ராகு :-( (ரிஷபத்தில்). வீட்டின் அதிபதி சுக்ரன் 5 இல் இருக்கிறார். இதனால் ஏதும் தீங்கு ஏற்படுமா?

    நடிகர் அஜீத்திற்கு பத்தில் ராகு + செவ்வாய் (மகரம்). தல அதனால் தான், கார் ரேஸ், டைவிங் அது இதுன்னு விபத்து, உடல்நலக்குறைவு என பல வந்தாலும் சாகசம் செய்கிறார் போல.

    ReplyDelete
  49. ////Blogger selva said...
    அய்யா, அருமையான பதிவுகள். இப்பொழுதுதான் ராகு தொடர்பான அனைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன்.
    எனக்கு 12 இல் ராகு :-( (ரிஷபத்தில்). வீட்டின் அதிபதி சுக்ரன் 5 இல் இருக்கிறார். இதனால் ஏதும் தீங்கு ஏற்படுமா?////

    ரிஷபம் ராகுவிற்கு உகந்த இடம். அதோடு அந்த வீட்டின் அதிபதி திரிகோணத்தில் உள்ளார். நல்லதே நடக்கும். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  50. ayya in my horoscope rahu is in 12th place with guru. will guru give good fortune or will rahu overlead him and ruin? thanks for the lessons

    ReplyDelete
  51. The combination of Ragu and Mars in Raju's horoscope and its effect. Please see the link.
    http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=HomePage&id=c609e6ca-f116-4fec-96c9-846d37f1be3e&ParentID=79db7938-064c-4fa1-bb61-c63f0d0310ff&&Headline=Raju%3a+Rise+and+fall+of+planets

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com