8.1.09

அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்!


"இன்பம் எங்கே? இன்பம் எங்கே? என்று தேடு
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!"

என்று பாட்டு எழுதி மக்களைப் பரவசப் படுத்தினான் ஒரு கவிஞன்.

எல்லா மக்களின் விருப்பமும் அதுதான்.

இன்பம்! இன்பம்! இன்பம்!

எங்கே கிடைக்கும் அது?

முதலில், இன்பம் என்பது என்ன?

மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவது இன்பம்! மனதைத் துள்ள வைப்பது இன்பம்.
மனதைக் கிறங்க வைப்பது இன்பம். கவலைகளை மறக்க வைப்பது இன்பம்!
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஐந்து வயது சிறுவனுக்கு பத்து எக்ளேர் மிட்டாய் கிடைத்தால் இன்பம்
பத்து வயதுப் பையனுக்கு ரிமோட்டில் ஓடும் விளயாட்டுக் கார் கிடைத்தால் இன்பம்

பதினெட்டு வயதுப் பெண்ணிற்கு அனார்கலி மற்றும் பாட்டியாலா சுடிதாரில்
இருபது செட் சுடிதார் எடுத்துக்கொடுத்தால் இன்பம்.

இருபத்தோரு வயதுப் பையனுக்குத் தினமும் கடலைபோட ஜெனிலியாவைப் போல
அழகுள்ள ஒரு பெண் கிடைத்தால் இன்பம்.

இருபத்தைந்து வயது இளைஞனுக்கு பல்சர் மோட்டார் சைக்கிளும், பில்லியனில்
ஏறி அவனோடு ஒட்டியமர்ந்து ஊர்சுற்ற நயனைப்போல ஒரு பெண்ணும் கிடைத்தால்
அது இன்பம்.

முப்பது வயதுப் பெண்ணிற்கு போத்தீஸில், பத்து ரிவர்சபிள் பட்டு சேலை
எடுத்துக் கட்டிக்கச் சொல்லிக் கொடுத்தால் அது இன்பம்.

முப்பத்தைந்து வயது மனிதனுக்கு வணிகம் செய்ய கொலேட்டரல் செக்யூரிட்டி
இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வங்கிக் கடன் கிடைத்தால் இன்பம்

குடிமகனுக்கு சீவாஸ் ரீகல் விஸ்கி ஒரு ஃபுல் பாட்டில் இலவசமாகக் கிடைத்தால்
இன்பம். (கூடவே பிரியாணியும், சிகரெட் பாக்கெட்டுகளும் கிடைத்தால் டபுள் இன்பம்.)

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்

எல்லாம் கிடைக்குமா? தொடர்ந்து கிடைக்குமா?

அதெப்படிக் கிடைக்கும்?

இன்பம் என்பது ரேசன் கடைச் சரக்கைப் போன்றது.ரேசன் கடைச் சரக்குகள்
உங்களுக்கு என்று குறிப்பிடப் பட்டுள்ள பொருளில், ஒரு குறிப்பிடப்பெற்ற
அளவு, ஒரு குறிப்பிடப் பெற்ற காலத்தில் கொடுக்கப் படுகிறதல்லாவா ?
அதுபோல இன்பமும் அவ்வப்போது கிடைக்கும்.

துன்பம் அப்படிப் பட்டதல்ல! அது தபால்காரரின் கையில் இருக்கும் கடிதத்தைப்
போன்றது. உங்களுக்கு வந்த கடித்தத்தை நீங்கள் வாங்கியாக வேண்டும். வீடு
தேடி வரும்.

வாங்க மறுத்தால்?

தபால்காரர் கதவு வழியாக அல்லது ஜன்னல் வழியாகக் கடிதத்தை உள்ளே வீசி
விட்டுப் போவதைப் போல அது வீசப்படும். யாரும் தவிர்க்க முடியாது அதை!

காலதேவன் கருணை மிக்கவன்.துன்பத்தையும் இன்பத்தையும் அவன் சமமாகத்தான்
அளிப்பான்.

எப்படி இரவு பகல் சமமாக இருக்கிறதோ எப்படி உறவும், பிரிவும் சமமாக
இருக்கிறதோ அப்படி இன்பமும், துன்பமும் சம அளவில்தான் அளிக்கப்படும்

உறவும், பிரிவும் எப்படி அளவில் சமமாகும்?

பிறப்பை உறவு என்கின்றோம், இறப்பைப் பிரிவு என்கின்றோம். அவை இரண்டும்
இல்லாதவன் யார்? ஆகவே அதுவும் சமம்தான்!

இன்னொரு எளிய உதாரணம் சொல்கிறேன். உலகில் ஜனித்த, ஜனிக்கின்ற அத்தனை
பேர்களுக்கும் அஷ்டகவர்க்கப் பரல்கள் மொத்தம் 337 தானே?

அம்பானிக்கு 674, அவருடைய வாகன ஓட்டுனருக்கு 337 என்றா இருக்கிறது?

இல்லையல்லவா?

ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும்
ஒன்றாகவே பாவியுங்கள். பிரச்சினை எதுவும் தெரியாது!

இன்பத்தைக் கொடுக்க சந்திரன், சுக்கிரன், குரு என்று மூன்று கிரகங்கள்
இருந்தால், துன்பத்தைக் கொடுக்க ராகு, கேது சனி என்று மூன்று கிரகங்கள்
உள்ளன.

ஆகவே இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் பாட்டில் இப்படிப் சொன்னார்.

"இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி"
---------------------------------------------------------------------------------------------------
ஆறு மனமே ஆறு -அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு..........!

(கட்டுரையின் நீளம் கருதி பாடல் வரிகளை இத்துடன் நிறுத்திவிட்டேன்
மன்னிக்கவும்)

கதை போதும். பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்!
----------------------------------------------------------------------
அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்!

ராகுவை அழகன் என்று யாராவது சொல்வார்களா? அவன்மேல் ஆசை
வைப்பார்களா என்று கேட்காதீர்கள்.

அழகிற்கு அளவுகோல் கிடையாது.எனக்கு கனகாவும் அழகுதான் காந்திமதியும்
அழகுதான். திரிஷவும் அழகுதான் மனோரமாவும் அழகுதான்.

அதுபோல சந்திரனும் அழகுதான்.ராகுவும் அழகுதான்

ஆனால் இருவரும் சேர்ந்தால் அழகாக இருக்காது!!!

இருவரும் சேர்ந்தால் என்ன ஆகும்?

சந்திரன் மனகாரகன். வாழ்க்கை மனப்போராட்டங்கள் மிகுந்ததாக மாறிவிடும்.
மனதிற்குப் பிடிக்காதவைகளே அதிகமாக நடக்கும். சிலருக்கு மனநோய்
ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகும்

வந்ததும் சரியில்லை, வாய்த்ததும் சரியில்லை பிறந்ததும் சரியில்லை. பிடித்ததும்
சரியில்லை என்று ஜாதகனை ஜனகராஜ் ரேஞ்சிற்குப் புலம்ப வைத்துவிடும்
சந்திரனுடன் சேரும் ராகு.

வந்தது = மனைவி
வாய்த்தது = பெற்றவள்
பிறந்தது = பிள்ளைகள்
பிடித்தது = தேடிப் பிடித்தது = வேலை அல்லது தொழில் அல்லது வியாபாரம்
--------------------------------------------------------------------------
ராகு யாருடன் சேர்ந்தாலும், சேர்த்துக் கொள்கிறவன் வலிமையாக இருந்தால்
மட்டுமே அழகு. சேர்த்துக் கொள்கிறவன் லக்கினாதிபதியாகவோ அல்லது
லக்கினத்திற்கு யோககாரகனாகவோ அல்லது லக்கினத்தில் இருந்து கேந்திரம்
அல்லது திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது உச்சமாக இருந்தாலோ
அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ
மட்டுமே அவன் வலிமையுடையவனாகக் கருதப்படுவான். அப்போது மட்டுமே
அவன் ராகுவோடு சேர்ந்திருக்கலாம்.

இல்லை என்றால் ராகு படுத்தி எடுத்துவிடுவான். முறையில்லாத காதலில்
ஒரு பஜாரியைக் காதலித்த கதைபோல் ஆகிவிடும்.

ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. ஆகவே தான் நுழையும் வீட்டில் ஜம்'மென்று
இருந்து விடுவான். அதைத் தன் சொந்த வீடாக ஆக்கிக்கொள்ள முயற்சிப்பான்.
உள்ளே அனுமதித்த அந்த வீட்டின் அதிபதி வலியவன் என்றால் வீடு தப்பிக்கும்.
இல்லை என்றால் இல்லை.

உதாரணத்திற்கு நான்காம் வீட்டை எடுத்துக் கொள்வோம்.

நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு.

1. தாய் ஸ்தானம் அது (ஜாதகனின் தாய் ஸ்தானம் சுவாமி! சொல்லிக் கொடுத்திருக்
கிறேன். மறக்கவில்லை அல்லவா?)

2. கல்வி ஸ்தானம்

3. சுக ஸ்தானம் (வீடு, வண்டி, வாகனம் போன்ற இகலோக வஸ்த்துக்களுடன்
சுகமாக இருப்பது. அதற்கான இடம்)

சரி, இந்த வீட்டில் ராகு இருந்தால் என்ன ஆகும்?

அதை இன்னும் ஃபைன் டியூனிங் செய்து பார்ப்போம்

தனுசு லக்கின ஜாதகன். 4ஆம் வீடு மீனம். இரண்டுமே குருவின் சொந்தவீடுகள்
4ல் ராகு இருக்கிறார். அதாவது மீனத்தில் ராகு இருக்கிறார்.

என்ன பலன்?

முதலில் மீனத்தை அவர் கைப்பற்றிகொண்டு விடுவார் (ஆமாம்,ஆக்கிரமிப்புதான்)
அந்த வீட்டை அவர் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார். சர்வ அதிகாரமும்
அவர் கையில். ஹிட்லரின் கையில் கிடைத்த ஜெர்மனி போல் ஆகிவிடும் அந்த வீடு.
தாய், கல்வி சுகம் என்று எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உருவாகும்.

எல்லோருக்குமா?

இல்லை! எல்லோருக்கும் இல்லை!

குருபகவான் ஜாதகனின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அது நடக்காது.
சந்திரன் வலிமையாக இருந்தால் ஜாதகனின் தாய்க்கு ஒன்றும் நேராது.
வித்யாகாரகன் புதன் நன்றாக இருந்தால் கல்வியில் தடங்கல் ஏற்படாது
அல்லது படிப்பு பாதியில் நின்று போகாது.
சுக்கிரன் நன்றாக இருந்தால் ஜாதகனின் சுகங்களுக்குக் கேடு வராது.

அதுதான் பலன். இல்லையென்றால் சொல்லப்படுள்ள நால்வரில் யார் யார் வீக்'காக
இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தகுந்த மாதிரிப் பலன்கள் மாறும்.

நான்கு பேருமே வீக்'காக உள்ளார்களா? ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம்.

ஒரே வரியில் சொல்லிவிடலாம்.

ஜாதகன் கஷ்டப்படவே பிறந்தவன்.

(தொடரும்)
---------------------------------------------------------------------------------------------------
அலசல் மூன்று பகுதிகளாகத் தொடரும்.
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

75 comments:

  1. Special Thanks for the long post. I will read and come up with questions, if I have any.

    Advance Happy Pongal wishes to all.

    -Shankar

    ReplyDelete
  2. ///Blogger hotcat said...
    Special Thanks for the long post. I will read and come up with questions, if I have any.
    Advance Happy Pongal wishes to all.
    -Shankar////

    வாருங்கள் சங்கர். நீண்ட பதிவிற்கு நீங்கள் நன்றி என்கிறீர்கள்.
    முன் பதிவில், ஐயா நீண்ட பதிவுகள் வேண்டாம். அப்லோடாக அதிக நேரம் பிடிக்கிறது என்கிறார் ஒரு அன்பர்!
    என்ன செய்யலாம் சொல்லுங்கள்!:-)))))

    ReplyDelete
  3. ஜோடதி பவுதி, உளேள்ன் !

    ReplyDelete
  4. Blogger கோவி.கண்ணன் said...
    ஜோடதி பவுதி, உளேள்ன் !

    நறின் கோயாவிரே!

    ReplyDelete
  5. ஐயா,

    பதிவு அருமை. எனக்கு மீன லக்கினத்தில் குரு. மிதுனத்தில் சந்திரனுடன் ராகு.ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. கோவி . கண்ணன் said>

    ஜோடதி பவுதி, உளேள்ன் !//

    ஐயா,
    கோவி.கண்ணன் அவர்களுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லையா?

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. ஐயா,

    ஒரு நீண்ட கடிதம். நாடிஜோதிடம் பற்றி சொன்னீர்கள். அதுபோல் குறி சொல்வதைபற்றியும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்கிற ஊரில் ஒருவர் குறி சொல்கின்றார். ஒரு நாளைக்கு 9 டோக்கன்தான்.(அது என்ன கணக்கோ). அதுவும் அதிகாலை 2 மணியிலிருந்து தான் கொடுப்பார்.
    காலை 6 மணியிலிருந்து டோக்கன் வரிசைப்படி குறி சொல்ல ஆரம்பிப்பார். தட்சணை நமது விருப்பம் தான். கற்பூரம் ஏற்றி பின் அதை பார்த்து சொல்ல ஆரம்பிப்பார்.
    கற் பூரம் அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.பலன்களை சோக ராகத்தில் தான் பாடுவார். பலன்கள் நாமே புரிந்து கொள்ள வேண்டும். இறந்த நமதுசொந்தங்களை வரவழைத்து ஒவ்வோரு பேராக சொல்லுவார்.(நான் தாத்தா வந்திருக்கேன்-பாட்டி வந்திருக்கேன்-சமிபத்தில் யார் இறந்தார்களோ அவர் வந்துள்ளேன் என சொல்லுவார். வந்தவரை தேர்வு செய்வது நமது விருப்பம்.சமயத்தில்
    இறந்த தலைவர்களும் வரலாம்)
    அவர் சொல்லும் பலன்கள் 70% சரியாக
    உள்ளது.மற்றவர்கள் இதுபோல்
    குறிகேட்ட அனுபவம் உண்டா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. ////Blogger வேலன். said...
    ஐயா,
    பதிவு அருமை. எனக்கு மீன லக்கினத்தில் குரு. மிதுனத்தில் சந்திரனுடன் ராகு.ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    வருகைக்கு நன்றி வேலன்!

    ReplyDelete
  9. ////Blogger வேலன். said...
    கோவி . கண்ணன் said>
    ஜோடதி பவுதி, உளேள்ன் !//
    ஐயா,
    கோவி.கண்ணன் அவர்களுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லையா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    அவர் தூங்குவதில்லை!
    அப்படியொரு வரம் அவருக்கு
    தமிழ்மனத்தில் நாளொன்றிற்கு 1,600 பின்னூட்டங்கள் விழுகின்றதாம்
    அதில் சரிபாதி அவருடைய கைங்கர்யம்!

    அப்படி (ஜோடதி பவுதி, உளேள்ன் !) எழுதியுள்ளது நக்கல்!
    நானும் அதே தொனியில் பதிலைச் சொல்லியுள்ளேன்:-)))
    பாருங்கள்

    ReplyDelete
  10. ////Blogger வேலன். said...
    ஐயா,
    ஒரு நீண்ட கடிதம். நாடிஜோதிடம் பற்றி சொன்னீர்கள். அதுபோல் குறி சொல்வதைபற்றியும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றேன்./////

    எனக்கு அதில் அனுபவம் இல்லை!

    ReplyDelete
  11. //அப்படி (ஜோடதி பவுதி, உளேள்ன் !) எழுதியுள்ளது நக்கல்!
    நானும் அதே தொனியில் பதிலைச் சொல்லியுள்ளேன்:-)))
    பாருங்கள்//

    சரியாக பிடிச்சு படிச்சிட்டிங்களே......சும்மாவா வாத்தியாராச்சே

    ReplyDelete
  12. பாசமுள்ள ஐயா அவர்களே!

    ராகு பற்றிய முதலாம் பாடம் நன்றாக உள்ளது!

    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.

    என்றும்அன்புடன்

    ReplyDelete
  13. Thanks Sir. I have read the first portion.

    ReplyDelete
  14. ஐயா,

    இந்தியாவைப் பற்றிய அனைத்துதகவல்களையும்(அட்சரேகை-தீர்க்கரேகை உட்பட)எனது பிளாக்கரில் பதிவிட்டுள்ளேன். வகுப்பறை மாணவர்களுக்கு படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவல் தளம் உபயோகமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
    முகவரி தளம்:-
    http://velang.blogspot.com/

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. Dear Sir

    Your Lesson Explanation(Rahu) is excellent. you are really a good professor. Iam waiting for your lessons....

    You draw synopsis(I mean Overview)of Astrology(Rahu)- Ph.d. I dont know how to express..Excellent sir.

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. ராகு, கேது இவர்களுக்குத் தனி ஃப்ளாட் இல்லையெனினும் எந்த ஃப்ளாட்டில் அவர்கள் இருக்கிறார்களோ அந்த ஃப்ளாட்டின் உரிமையாளர்கள்
    தொழிலைச் செய்வார்கள் என்றும் இருக்கிறதாமே ?

    அப்படி இருந்தால், அந்த ஃப்ளாட் சொந்தக்காரர்கள் லக்னாதிபதிக்கு எதிரிகளாக இருந்துவிடின், இன்னும் பேஜாராகப் போயிடுமே ?
    அப்படியா ?

    இன்னொரு கோணத்தில், ராகு செவ்வாயாகவும், கேதுவை சனியாகவும் எடுத்துக்கொண்டும் சொல்கிறார்களே ?

    ஐயா அவர்கள் தயை செய்து விளக்கவேண்டும்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  17. வாருங்கள் சங்கர். நீண்ட பதிவிற்கு நீங்கள் நன்றி என்கிறீர்கள்.
    முன் பதிவில், ஐயா நீண்ட பதிவுகள் வேண்டாம். அப்லோடாக அதிக நேரம் பிடிக்கிறது என்கிறார் ஒரு அன்பர்!
    என்ன செய்யலாம் சொல்லுங்கள்!:-)))))

    My answer is:

    :-))))

    ReplyDelete
  18. Blogger கோவி.கண்ணன் said...
    //அப்படி (ஜோடதி பவுதி, உளேள்ன் !) எழுதியுள்ளது நக்கல்!
    நானும் அதே தொனியில் பதிலைச் சொல்லியுள்ளேன்:-)))
    பாருங்கள்//
    சரியாக பிடிச்சு படிச்சிட்டிங்களே......சும்மாவா வாத்தியாராச்சே!/////

    அந்தக் காலத்து மூக்குப் பொடி டப்பா வாத்தியாரில்லை!
    மாணவர்களின் pulse தெரிந்த நவீன வாத்தியார்!
    அதனால்தான் உங்களுக்குபிடித்த நாயகிகள் எல்லாம் இடுகைக்குள்
    காட்சியளிக்கிறார்கள். இல்லாவிட்டால் வகுப்பிற்கு வரமாட்டீர்களே!

    ReplyDelete
  19. ////Blogger SP Sanjay said...
    பாசமுள்ள ஐயா அவர்களே!
    ராகு பற்றிய முதலாம் பாடம் நன்றாக உள்ளது!
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.
    என்றும்அன்புடன்/////

    நன்றி சஞ்சய்!

    ReplyDelete
  20. /////Blogger krish said...
    Thanks Sir. I have read the first portion.////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  21. Blogger வேலன். said...
    ஐயா,
    இந்தியாவைப் பற்றிய அனைத்துதகவல்களையும்(அட்சரேகை-தீர்க்கரேகை உட்பட)எனது பிளாக்கரில் பதிவிட்டுள்ளேன். வகுப்பறை மாணவர்களுக்கு படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவல் தளம் உபயோகமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
    முகவரி தளம்:-
    http://velang.blogspot.com/
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    தகவலுக்கு நன்றி வேலன். பார்க்கிறேன்!

    ReplyDelete
  22. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Your Lesson Explanation(Rahu) is excellent. you are really a good professor. Iam waiting for your lessons....
    You draw synopsis(I mean Overview)of Astrology(Rahu)- Ph.d. I dont know how to express..Excellent sir.
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    I am good reader (of books), then....a good writer (that too since last 5 years). Thanks for your comment!

    ReplyDelete
  23. /////Blogger sury said...
    ராகு, கேது இவர்களுக்குத் தனி ஃப்ளாட் இல்லையெனினும் எந்த ஃப்ளாட்டில் அவர்கள் இருக்கிறார்களோ அந்த ஃப்ளாட்டின் உரிமையாளர்கள்
    தொழிலைச் செய்வார்கள் என்றும் இருக்கிறதாமே ?//////

    அதைத்தானே சுவாமி பதிவில் சொல்லியிருக்கிறேன்! உரிமையாளர்கள் ஒழுங்காக இருந்தால்தான் அவர்களுடைய தொழிலைச் செய்வார்கள். இல்லையென்றால் சுருட்டல், உருட்டல் வேலைதான்!
    =========================================
    அப்படி இருந்தால், அந்த ஃப்ளாட் சொந்தக்காரர்கள் லக்னாதிபதிக்கு எதிரிகளாக இருந்துவிடின், இன்னும் பேஜாராகப் போயிடுமே ?///////

    ஆமாம். மரம் ஏறி விழுந்தவனை, கடா மாடும் மிதித்த கதையாகிவிடும்!
    ==========================================================
    அப்படியா ?
    இன்னொரு கோணத்தில், ராகு செவ்வாயாகவும், கேதுவை சனியாகவும் எடுத்துக்கொண்டும் சொல்கிறார்களே ?
    ஐயா அவர்கள் தயை செய்து விளக்கவேண்டும்.
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com/////

    மாற்றிச் சொல்கிறீர்களே! ராகு சனியைப் போலவும், கேது செவ்வாயைப் போலவும் நடந்து கொள்(ல்)வார்கள்!

    ReplyDelete
  24. For me n Lagna , Moon and Rahu both are there.. but Rahu is Malefic...Guru in 8th place and Sani in 10th place...

    Yenakku yeppadi ?

    thanks

    ReplyDelete
  25. பாடம் மிக அருமை கவியரசரின் பாடலுடன் பதிவு துவுங்குவது சுவரஸ்யமாக உள்ளது இதே போல் எல்லா பதிவுகலும் நீளமாக கொடுத்தால் நான்றாக இருக்கும் அய்யா

    ReplyDelete
  26. என்ன வாத்தியாரே பெண்கள்னாலே உடைகள்தான் பிடிக்கும்மா ? நீ வேஸ்ட் வாத்தியாரே!

    ReplyDelete
  27. அய்யா,

    ராகு - மூன்று பகுதிகளில் முதல் பகுதி - ஆரம்பமே சூப்பர். ஆண்டவன் படைப்பில் எல்லாமே சமம் தான். அதில் இன்பமும் துன்பமும் சரி நிகர் தானே?

    சிலருக்கு துன்பம் கூடி, சிலருக்கு இன்பம் கூடி இருக்கும். எல்லாம் முற்பிறவி பயன் தானே? யாரோ சொல்ல கேட்டு இருக்கிறேன் நவாம்சம் spouse மற்றும் முற்பிறவி பற்றிய ஒரு microscope details என்று! விளக்குவீர்கள?

    காலசர்ப்ப தோஷம் பற்றி விளக்கம் எந்த மூன்று பாடங்களில் விவரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    மிக்க நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  28. அய்யா ராகுவிடம் இருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா?

    ReplyDelete
  29. Sir,
    Saturn exalted (Thulam house) with 2 parals. so in this case the impact will be decided by its position or paral count? How the impact of saturn will be ? I have VIRGO sign and running 7 1/2 year saturn period.
    Thanks,
    Subbi.

    ReplyDelete
  30. அழகா சொல்லியிருக்கீங்க.

    ஒரு பெண்ணிற்கு 5 ஆம் இடத்தில் ராகுவும் கேதுவும் இருந்தால் என்ன பிரச்சனையாகு? அதற்கு என்ன செய்யலாம்?

    விரிவாகச் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  31. If Jupiter aspects the Rahu-Moon combination, what will be the effect sir? Will The bad effects of rahu-moon combination be reduced?

    ReplyDelete
  32. ///Blogger மிஸ்டர் அரட்டை said...
    For me n Lagna , Moon and Rahu both are there.. but Rahu is Malefic...Guru in 8th place and Sani in 10th place...
    Yenakku yeppadi ?
    thanks/////

    ராகுவைப் பற்றிய பாடம் இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றையும் படியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை அவற்றிலேயே இருக்கும்!

    ReplyDelete
  33. /////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    பாடம் மிக அருமை கவியரசரின் பாடலுடன் பதிவு துவுங்குவது சுவாரஸ்யமாக உள்ளது இதே போல் எல்லா பதிவுகளும் நீளமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் அய்யா////

    நீங்கள் ஒருவர்தான் வரிகளைக் கவனித்திருக்கிறீர்கள்.நன்றி!

    ReplyDelete
  34. ////Blogger Raji said...
    என்ன வாத்தியாரே பெண்கள்னாலே உடைகள்தான் பிடிக்கும்மா ? நீ வேஸ்ட் வாத்தியாரே!/////

    எங்கள் ஊர்ப் பெண்களுக்கு வைர நகைகள் என்றால் பிடிக்கும். பூச்சரம், வைரத் திருமாங்கல்யம், வைர வளையல்கள்
    வைரத்தில் லாங் செயின் என்று ஒரு பெண்னிற்கு 50 லட்ச ரூபாய் அளவிற்கு நகைகளைக் கொடுத்து மகிழ்விக்கலாம்
    அதைப் பதிவில் எழுதி மற்ற ஊர்ப் பெண்களை எதுக்காகப் பெருமூச்சுவிட வைக்க வேண்டும் என்று உடைகளோடு
    நிறுத்திக் கொண்டேன்.

    நீங்கள் என்ன வென்றால் ......... என்று சொல்லிவிட்டீர்களே சகோதரி. மறு பரிசீலனை செய்யுங்கள்!

    நீங்கள் டீச்சராக இருந்து கொண்டு இன்னொரு டீச்சரை அப்படிச் சொல்லலாமா?

    ReplyDelete
  35. /////Blogger Sridhar said...
    அய்யா,
    ராகு - மூன்று பகுதிகளில் முதல் பகுதி - ஆரம்பமே சூப்பர். ஆண்டவன் படைப்பில் எல்லாமே சமம் தான். அதில் இன்பமும் துன்பமும் சரி நிகர் தானே?
    சிலருக்கு துன்பம் கூடி, சிலருக்கு இன்பம் கூடி இருக்கும். எல்லாம் முற்பிறவி பயன் தானே? யாரோ சொல்ல கேட்டு இருக்கிறேன் நவாம்சம் spouse மற்றும் முற்பிறவி பற்றிய ஒரு microscope details என்று! விளக்குவீர்களா?/////

    நவாம்சம்திற்கும் spouseற்கும் உள்ள தொடர்பு பற்றி முன் பாடங்களில் எழுதியிருக்கிறேன் சுவாமி. படித்துப் பாருங்கள்

    ////// காலசர்ப்ப தோஷம் பற்றி விளக்கம் எந்த மூன்று பாடங்களில் விவரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    மிக்க நன்றி,
    ஸ்ரீதர் S///////

    ஆகா எழுதுகிறேன்

    ReplyDelete
  36. /////Blogger N.K.S.Anandhan. said...
    அய்யா ராகுவிடம் இருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா?///////

    எதற்காகத் தப்பிக்க வேண்டும்? God is with us! we will face it!

    ReplyDelete
  37. ////Blogger PrakashMani said...
    Sir,
    Saturn exalted (Thulam house) with 2 parals. so in this case the impact will be decided by its position or paral count? How the impact of saturn will be ? I have VIRGO sign and running 7 1/2 year saturn period.
    Thanks,
    Subbi.////

    சனியைப் பற்றிய பாடம் வர உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  38. Blogger புதுகைத் தென்றல் said...
    அழகா சொல்லியிருக்கீங்க.
    ஒரு பெண்ணிற்கு 5 ஆம் இடத்தில் ராகுவும் கேதுவும் இருந்தால் என்ன பிரச்சனையாகும்? அதற்கு என்ன செய்யலாம்?
    விரிவாகச் சொல்ல முடியுமா?//////

    ராகுவைப் பற்றிய பாடம் இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றையும் படியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடை அவற்றிலேயே இருக்கும்!

    ReplyDelete
  39. /////Blogger Geekay said...
    Present Sir.
    GK,BLR////

    நன்றி ஜீக்கே

    ReplyDelete
  40. Blogger Ragu Sivanmalai said...
    If Jupiter aspects the Rahu-Moon combination, what will be the effect sir? Will The bad effects of rahu-moon combination be reduced?

    Yes, that will be reduced!

    ReplyDelete
  41. Dear Sir,
    In my horoscope rahu is in 4th house(danusu) rahu, Guru with 5 parals in Mahara.

    In Lagna (Kanni) Sukran with 7 parals.

    9th house chandran with 5 parals.

    Plese help me how to predict this situation.

    Please explain the use of Bhava chart and how to use it.

    Thanks,

    GK,BLR

    ReplyDelete
  42. OK Sir ... i think i will get most of the answers in my life from your blog itself !!!

    ReplyDelete
  43. ///Blogger Geekay said...
    Dear Sir,
    In my horoscope rahu is in 4th house(danusu) rahu, Guru with 5 parals in Mahara.
    In Lagna (Kanni) Sukran with 7 parals.
    9th house chandran with 5 parals.
    Plese help me how to predict this situation.
    Please explain the use of Bhava chart and how to use it.
    Thanks,
    GK,BLR/////

    In this topic 2 more chapters are yet to be posted. Please wait!

    ReplyDelete
  44. ////Blogger மிஸ்டர் அரட்டை said...
    OK Sir ... i think i will get most of the answers in my life from your blog itself !!!////

    Yes! That is a good and nice idea! Thanks!

    ReplyDelete
  45. ஐயா,
    பதிவு அருமை.
    எனக்கு 7ல் ராகு, லக்னாதிபதி சனியுடன் (2 பரல்கள்).

    திருமணத்தை தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறார் ஐயா :-))

    ReplyDelete
  46. திருமணத்தை தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறார் ஐயா :-))

    தனுசு ராசி கும்ப லக்னத்திற்கு ராகு யோகதிபதியா?

    ReplyDelete
  47. ஒரு பெண்ணிற்கு 5 ஆம் இடத்தில் ராகுவும் கேதுவும் இருந்தால் என்ன பிரச்சனையாகும்? அதற்கு என்ன செய்யலாம்?
    விரிவாகச் சொல்ல முடியுமா?//////


    ஐயா கேள்வியில் ஒரு தவறு இருப்பது போல் தெரிகிறதே?
    ஐயா ஒறே வீட்டில் ராகு,கேது இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

    ReplyDelete
  48. பாடம் அருமை.

    "கஷ்டப்பட பிறந்தாலும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என முடித்திருக்கலாமே!

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  49. //நவாம்சம்திற்கும் spouseற்கும் உள்ள தொடர்பு பற்றி முன் பாடங்களில் எழுதியிருக்கிறேன் சுவாமி. படித்துப் பாருங்கள்//

    நவாம்சம், கணவன் அல்லது மனைவி பற்றியது என்று வகுப்பறையிலே படித்து இருக்கிறேன்.

    என் கேள்வி நான் சரியாக கேக்கவில்லை என்று நினைக்கிறேன், நவாம்சம் spouse மற்றும் முன்பிறவி பற்றியும் குறிக்கும் என்று படித்தேன். அது உண்மையா?
    காலசர்ப்ப தோஷம் என்பது முற்பிறவி செய்த பாவம்/புண்ணியம் காரணமாக credit/debit account போல என்று கேள்விப்பட்டேன். இது சரியா?

    நன்றி!

    ஸ்ரீதர்

    ReplyDelete
  50. Thanks sir, good explanation.

    my horoscope
    lagnam - rishabam,- suriyan

    3rd cusp-(kadagam) - guru exalted
    4th cusp(simmam) - sani,raghu
    10th cusp - kumbam- chandran,kethu

    12th cusp-mesham - budhan,mars,sukran

    same as per your lesson i am facing the life sir.
    thank you verymuch sir.

    ReplyDelete
  51. thanks for the post.eagerly waiting for the remaining posts.No problem if it is long.It may take some time to load for dialup users only but since they are reading the post it will finish loading quite soon.

    Sir when you wrote abt kaalasarpa dosham you had written abt rahus placement only in first six houses from lagna.Please write about the remaining houses.Thanks.

    ReplyDelete
  52. ராகுவும், கேதுவும், சனியும், செவ்வாயுமே, வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. Happy new year and Happy pongal sir.

    ReplyDelete
  53. Dear Sir,
    I have asked this question before but still I want to make it clear...

    If ragu in 2nd house simha with sani, guru, mars....which role will ragu take? or no matter what...it will do good if its with guru?

    Thanks
    Shankar

    ReplyDelete
  54. // If ragu in 2nd house simha with sani, guru, mars....which role will ragu tஅகெ?//


    சபாஷ் ! சரியான கேள்வி.
    சிம்மம் சூரியனுடைய ஃப்ளாட். ஆகவே நியாயமாக சூரியன் செய்யவேண்டிய வேலையைத் தான் ராகு செய்யவேண்டும்.
    இருப்பினும் ஃப்ளாட் ஓனர் எத்துணை வலிமையானவரோ அதைப்பொருத்துத் தான் இருக்கும் என்பதை சுப்பையா ஸார்
    சொல்லி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வேளை, 2க்குடைய சூரியன் 3, 6, 8, 11 ல் ஏன்? 12ல் விரயஸ்தானத்தில் அமைந்துவிட்டால், அப்போது
    ராகுவை அதிகாரம் செலுத்துவது அல்லது ராகு இன்னதைத் தான் செய்யவேண்டும் எனத் தீர்மானம் செய்வது, கூட சிம்மத்திலேயே
    இருக்கிற சனி, குரு, அல்லது செவ்வாய் செய்வார்களோ? இவர்களில் யார் பலவானோ அவர் சொற்படி நடப்பாரோ ?

    சுப்பையா ஸார் தீர்ப்பு தான் ஃபைனல்.

    சற்று, away from the line of discussion of discussion
    ஆக இருந்தாலும் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு கோரிக்கை.

    கோசரத்தில் தற்பொழுது ராகு மகரத்திலும், மகரத்திற்கு சொந்தக்காரரான சனி சிம்மத்திலும், அதாவது ஒன்றுகொன்று
    ஷஷ்டாஷ்டகமாக உள்ளது. இப்படிப்பட்ட கிரக நிலை கோசரத்தில் வரும்போது பொது விதிகள் யாவை எனத்
    தயைசெய்து விளக்க வேண்டும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  55. /////Blogger dubai saravanan said...
    ஐயா,
    பதிவு அருமை.
    எனக்கு 7ல் ராகு, லக்னாதிபதி சனியுடன் (2 பரல்கள்).
    திருமணத்தை தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறார் ஐயா :-))//////

    ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் ராகு இருப்பவர்களுக்கு தாமதமாகத் திருமணமாவது நல்லதுதான்.
    பொதுவாக 30 வயதிற்கு மேல் ஜாதகத்தில் உள்ள களத்திர தோஷங்கள் நீங்கிவிடும் என்பார்கள்

    ReplyDelete
  56. /////Blogger dubai saravanan said...
    திருமணத்தை தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறார் ஐயா :-))
    தனுசு ராசி கும்ப லக்னத்திற்கு ராகு யோகதிபதியா?//////

    ராகு உச்சமாக இருந்தாலும் அல்லது நீசபங்க ராஜயோகம் பெற்று ஜாதகத்தில் இருந்தாலும் யோகத்தைக் கொடுப்பான். அதுபோல குருவோடு சேர்ந்திருக்கும் ராகுவும் யோகத்தைக் கொடுப்பான்.மற்றபடி லக்கினத்தை வைத்தோ அல்லது ராசியைவைத்தோ அவனுக்கு யோக அமைப்புக்கள் இல்லை!

    ReplyDelete
  57. //////Blogger N.K.S.Anandhan. said...
    ஒரு பெண்ணிற்கு 5 ஆம் இடத்தில் ராகுவும் கேதுவும் இருந்தால் என்ன பிரச்சனையாகும்? அதற்கு என்ன செய்யலாம்?
    விரிவாகச் சொல்ல முடியுமா?//////
    ஐயா கேள்வியில் ஒரு தவறு இருப்பது போல் தெரிகிறதே?
    ஐயா ஒறே வீட்டில் ராகு,கேது இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?/////

    ராகுவும் கேதுவும் 180 பாகைகள் இடைவெளியில் எதிர் எதிராக வானில் வலம் வரும் கிரங்கங்கள். இருவரும் சேர்வதற்கு
    நோ சான்ஸ்!

    ReplyDelete
  58. //////Blogger இராசகோபால் said...
    பாடம் அருமை.
    "கஷ்டப்பட பிறந்தாலும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என முடித்திருக்கலாமே!
    அன்புடன்
    இராசகோபால்/////

    இப்போதுதானே முதல் வரியை எழுதியிருக்கிறேன். கடவுள் ஒரு கதவைச் சாத்தினால், இன்னொரு கதவைத் திறந்து விடுவார்.
    அடுத்த பகுதிகளைப் படித்த பிறகு சொல்லுங்கள்

    ReplyDelete
  59. /////Blogger Sridhar said...
    //நவாம்சம்திற்கும் spouseற்கும் உள்ள தொடர்பு பற்றி முன் பாடங்களில் எழுதியிருக்கிறேன் சுவாமி. படித்துப் பாருங்கள்//
    நவாம்சம், கணவன் அல்லது மனைவி பற்றியது என்று வகுப்பறையிலே படித்து இருக்கிறேன்.
    என் கேள்வி நான் சரியாக கேக்கவில்லை என்று நினைக்கிறேன், நவாம்சம் spouse மற்றும் முன்பிறவி பற்றியும் குறிக்கும் என்று படித்தேன். அது உண்மையா?

    முன்பிறவியைக் குறிப்பது ஐந்தாம் வீடு
    ----------------------------------------------------------
    காலசர்ப்ப தோஷம் என்பது முற்பிறவி செய்த பாவம்/புண்ணியம் காரணமாக credit/debit account போல என்று கேள்விப்பட்டேன். இது சரியா?
    நன்றி!
    ஸ்ரீதர்///////

    மொத்தப் பிறவியுமே முன் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான்
    அதனால்தான் பட்டினத்தார் இப்படிக்குறிப்பிட்டார்.

    "பற்றித் தொடரும் இருவினைப் பாவமும், புண்ணியமுமே!

    ReplyDelete
  60. //////Blogger sridhar said...
    Thanks sir, good explanation.
    my horoscope
    lagnam - rishabam,- suriyan
    3rd cusp-(kadagam) - guru exalted
    4th cusp(simmam) - sani,raghu
    10th cusp - kumbam- chandran,kethu
    12th cusp-mesham - budhan,mars,sukran
    same as per your lesson i am facing the life sir.
    thank you verymuch sir./////

    அதெல்லாம் கவலைப் படாதீர்கள். எதுவுமே நிரந்தரமில்லை. இரவு பகலைப்போல துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும்.
    அதுதான் வாழ்க்கை! இரண்டையும் ஒன்றாகப் பாவியுங்கள். எப்போதும் கவலையின்றி இருக்கலாம்!

    ReplyDelete
  61. //////Blogger vinoth said...
    thanks for the post.eagerly waiting for the remaining posts.No problem if it is long.It may take some time to load for dialup users only but since they are reading the post it will finish loading quite soon.
    Sir when you wrote abt kaalasarpa dosham you had written abt rahus placement only in first six houses from lagna.Please write about the remaining houses.Thanks.

    வாருங்கள் விணொதவேல். உங்களைக் காணோமே என்று நினைத்துக் கொண்டேன். ஒரு நாள் வெளியூர்ப்பயணம். பொருள் ஈட்டல் என்று எனக்கு ஒரு தொழில் இருக்கிறதல்லவா? அதனால் உங்கள் அனைவருக்கும் தாமதமான பதில். அதாவது கடைசிப் பத்து பின்னூட்டங்களுக்கும்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளைக் கண்டிப்பாக எழுதுவேன். சற்றுப் பொறுத்திருங்கள்

    ReplyDelete
  62. /////Blogger That Subtle Something... said...
    ராகுவும், கேதுவும், சனியும், செவ்வாயுமே, வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. Happy new year and Happy pongal sir./////

    ஆமாம் சகோதரி. இல்லையென்றால் சஸ்பென்ஸ் இல்லாத திரைப்படம்போல வாழ்க்கை 'சப்' பென்று ஆகிவிடும்.
    காரம்,புளிப்பு, உப்பு இல்லாத உணவுபோல ஆகிவிடும் வாழ்க்கை! அந்த சுவைகளைத் தருவது நீங்கள் கூறியுள்ள கிரகங்கள்தான்!

    ReplyDelete
  63. ////Blogger hotcat said...
    Dear Sir,
    I have asked this question before but still I want to make it clear...
    If ragu in 2nd house simha with sani, guru, mars....which role will ragu take? or no matter what...it will do good if its with guru?
    Thanks
    Shankar////

    அடுத்த பகுதியில் அது விளக்கமாக வரும் சங்கர்!

    ReplyDelete
  64. /////Blogger sury said...
    // If ragu in 2nd house simha with sani, guru, mars....which role will ragu tஅகெ?//
    சபாஷ் ! சரியான கேள்வி.
    சிம்மம் சூரியனுடைய ஃப்ளாட். ஆகவே நியாயமாக சூரியன் செய்யவேண்டிய வேலையைத் தான் ராகு செய்யவேண்டும்.
    இருப்பினும் ஃப்ளாட் ஓனர் எத்துணை வலிமையானவரோ அதைப்பொருத்துத் தான் இருக்கும் என்பதை சுப்பையா ஸார்
    சொல்லி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வேளை, 2க்குடைய சூரியன் 3, 6, 8, 11 ல் ஏன்? 12ல் விரயஸ்தானத்தில் அமைந்துவிட்டால், அப்போது
    ராகுவை அதிகாரம் செலுத்துவது அல்லது ராகு இன்னதைத் தான் செய்யவேண்டும் எனத் தீர்மானம் செய்வது, கூட சிம்மத்திலேயே இருக்கிற சனி, குரு, அல்லது செவ்வாய் செய்வார்களோ? இவர்களில் யார் பலவானோ அவர் சொற்படி நடப்பாரோ ?///

    ஒரு வீட்டில் மூன்று கிரகங்கள் இருப்பது விரும்பத்தக்கதல்ல! அது கிரகயுத்தம் எனப்படும்.(Planetary War) அதோடு மூவரில் இரண்டு பேர்கள் அஸ்தமணம் (combust) ஆகியிருந்தால் சிக்கல். சிம்மத்திற்கு சனி பகைவன். வீட்டில் அமீனா உட்கார்ந்திருப்பதைப்போல அது!
    ----------------------------------------------------------------------------------------------------------
    ////சுப்பையா ஸார் தீர்ப்பு தான் ஃபைனல்./////

    கற்றது கை மண் அளவு சார்.
    ஜோதிடம் என்பது கடல்! அதை முழுதாக அறிந்தவர் எவருமில்லை! வராஹிமிஹிரர், ஜெய்மானி, பராசுரர், ஆதி சங்கரர் போன்ற மகான்கள் மட்டும் அத்ற்கு விதிவிலக்கு!

    ---------------------------------------------------------------------------------------------------------
    /////சற்று, away from the line of discussion of discussion
    ஆக இருந்தாலும் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு கோரிக்கை.
    கோசரத்தில் தற்பொழுது ராகு மகரத்திலும், மகரத்திற்கு சொந்தக்காரரான சனி சிம்மத்திலும், அதாவது ஒன்றுகொன்று
    ஷஷ்டாஷ்டகமாக உள்ளது. இப்படிப்பட்ட கிரக நிலை கோசரத்தில் வரும்போது பொது விதிகள் யாவை எனத்
    தயைசெய்து விளக்க வேண்டும்.
    சுப்பு ரத்தினம்.///////

    இப்படி இரண்டு தீய கிரகங்கள் கோச்சாரத்தில் ஒன்றுற்கொன்று அஷ்டம சஷ்டமமாக இருந்தால் ஜாதகனுக்கு அந்தக் காலகட்டம் ஷெனாய் வாத்தியம் ஒலிக்க (மிகவும் தொல்லைகள், துயரங்கள், கஷ்டங்கள் நிறந்த) சோகமாக இருக்கும்!
    இருவரில் ஒருவர் இடம் மாறும் போது அது நீங்கும்!

    ReplyDelete
  65. ஐயா இந்த வலைப்பூவை பாருங்க! இதே சப்ஜெக்ட்தான்!
    http://jayasreesaranathan.blogspot.com/

    ReplyDelete
  66. Dear Sir,

    Iam Waiting for your next lesson ...

    Keep on refresh my Browser(internet explorer(nternet Explorer), Mozilla Firefox(Mozilla Corporation)).sir time is 12:50 p.m.(PST).

    "Wish you a very happy pongal".

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  67. ////Blogger திவா said...
    ஐயா இந்த வலைப்பூவை பாருங்க! இதே சப்ஜெக்ட்தான்!
    http://jayasreesaranathan.blogspot.com///////

    பார்த்தேன் நண்பரே! இன்றைய ஹாட் டாபிக்கான திரு.ராமலிங்க ராஜீவின்
    வாழ்க்கையை அசத்தலாக அலசி இருக்கிறார். தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  68. ////Blogger N.K.S.Anandhan. said...
    sir, waiting for your next lesson,///

    உங்களின் ஆர்வத்திற்கு நன்றி, என் சொந்த அலுவல்கள் காரணமாக இரண்டு நாட்கள் தாமதம். தவிக்க முடியவில்லை.
    நாளை (12.1.2009 திங்கள் காலை) அது பதிவிடப் பெறும்!

    ReplyDelete
  69. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir,
    Iam Waiting for your next lesson ...
    Keep on refresh my Browser(internet explorer(nternet Explorer), Mozilla Firefox(Mozilla Corporation)).sir time is 12:50 p.m.(PST).
    "Wish you a very happy pongal".
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்களின் ஆர்வத்திற்கு நன்றி ராஜாராமன்! என் சொந்த அலுவல்கள் காரணமாக இரண்டு நாட்கள் தாமதம். தவிக்க முடியவில்லை. நாளை (12.1.2009 திங்கள் காலை) அது பதிவிடப்பெறும்!

    உங்கள் பொங்கல் வாழ்த்திற்கு நன்றி! பொங்கல் விடுமுறை நாளில் பாடங்களை வலை ஏற்றலாமா? சொல்லுங்கள்!

    ReplyDelete
  70. ஐயா அவர்களே!

    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்...............:)
    அன்புடன்

    ReplyDelete
  71. Dear Sir,

    You are a Professor. Iam a student.
    So I will wait for your lesson sir.

    Iam always respect my elders and Professor(Sir Neengathan).

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  72. ////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    ஐயா அவர்களே!
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்...............:)
    அன்புடன்////

    அடுத்த பதிவை வலையில் ஏற்றிவிட்டேன் நண்பரே!
    படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  73. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir,
    You are a Professor. Iam a student.
    So I will wait for your lesson sir.
    Iam always respect my elders and Professor(Sir Neengathan).
    Loving Student
    Arulkumar Rajaraman////

    I am not a professor. I am only a teacher!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com