இந்தப் பாடத்தின் முன் பகுதிக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது
எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் யாருக்குத்தான் குதூகலம் இருக்காது?
பதினைந்து வயது முதல், எண்பது வரை அதற்கு விதிவிலக்கானவர்கள்
எவரும் இல்லை!. இறை நம்பிக்கை இல்லாத சிலருக்குக்கூட ஜோதிடத்தில்
நம்பிக்கையுண்டு. அதை நான் அறிவேன்.
அதுவும் ஜோதிடர், ஒரு பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து "இவளுக்கென்று ஒரு
ராஜகுமாரன் வருவான். அதுவும் அந்தக் காலம் மாதிரிக் குதிரையில் வராமல்
பென்ஸ் காரில் வருவான். வந்து இவளைக் கொத்திக்கொண்டு போய்விடுவான்,
அதற்குப் பிறகு இவளது வாழ்வில், தேனும் பாலும் கரை புரண்டு ஒடும்" என்று
சொல்லவிட்டாலும், "அன்பான, அழகான, நன்றாகச் சம்பாதிக்கக்கூடிய வரன்
கிடைக்கும்" என்று சொல்லிவிட்டால் போதும். அவள் அப்போதே கலர் கலராய்
கனவுகளில் மிதக்கத் துவங்கிவிடுவாள்.
அதே நிலைதான் பல இளைஞர்களுக்கும்.
நடுத்தர வயதுக்காரர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் பலவிதமான
பிரச்சினைகள் அவைகள் எப்போது தீரும், தாங்கள் எப்போது நிம்மதியாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருப்போம் - அதற்குரிய காலம் எப்போது கனிந்து வரும்
என்று தெரிந்து கொள்வதில் முனைப்பாகவும், ஆர்வமாகவும் இருப்பார்கள்
ஆனால் ஜோதிடரைப் பார்த்துவிட்டு வந்தவர்களில் பாதிப்பேர்களுக்குத் திருப்தி
இருப்பதில்லை.
ஏன் திருப்தி இருப்பதில்லை, அதற்கு ஜோதிடர் என்ன செய்ய முடியும் என்பதை
அல்லது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பாடத்தில் அலசுவோம்
இப்போது பன்னிரெண்டாம் பாடத்தின் நிறைவுப்பகுதி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பன்னிரெண்டாம் பாடத்தின் நிறைவுப்பகுதி!
1. செல்வத்தை (பணத்தை) விரும்பாத மனிதனே கிடையாது. செல்வத்தைத் தருவது
பத்தாம்வீடும், பதினொன்றாம் வீடும், அவை இரண்டைவிட முக்கியமாக இரண்டாம்
வீடுமே ஆகும். அப்படி அந்த வீட்டு நாயகர்கள் நமக்கு அள்ளித்தரும் பணத்தை
நம் கைகளில் இருந்து கரைப்பவர்கள், 6, 8, மற்றும் 12ஆம் வீட்டு நாயகர்களே.
முதலில் கூறிய மூவரும் (அதாவது 10th, 11th & 2nd Lords) நம்முடைய ஹீரோக்கள்
பின்னால் கூறிய மூவரும் (6, 8, மற்றும் 12ஆம் அதிபதிகள்) நம்முடைய வில்லன்கள்
2, ஹீரோக்களின் வீடுகளைப் பாருங்கள். அங்கே அஷ்டகவர்கத்தில் 30ம், அதற்கு
மேலும் பரல்கள் இருந்தால் நல்லது. கவலையே படவேண்டாம். வில்லன்கள்
எவ்வளவு வேகமாகக் கரைத்தாலும், அதற்கு மேலேயே உங்களுக்குப் பணம் வரும்
3. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகமாக இருந்தால், எவ்வளவு
பணம் வந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாத்தித்தாலும், அல்லது
உங்கள் தந்தைவழிச் சொத்து எவ்வளவு இருந்தாலும், அவ்வளவும் கரைந்து விடும்
கையில் ஒன்றும் தங்காது. பூட்டுப்போட்டுப் பூட்டிவைத்தாலும் தங்காது!
4. அப்படிக் கரையும் பணம்கூட, வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்
அந்த வீடுகளைச் சுபக்கிரகங்கள் பார்க்கும் என்றால், நல்ல வழியில் கரையும். உங்கள்
குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளும் வழியில் கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்கும்
வழியில் கரையும்.
5. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்,அந்த
வீடுகள் பாவக்கிரகங்கள் அல்லது தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் உங்கள்
பணம் தீய வழியில் கரையும். சீட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், குடி, பெண்பித்து,
என்று தீய வழியிலேயே கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்காத வழியில்
கரையும், நீங்கள் மற்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாத வழியில், ஏன் வெளியில்
சொல்ல முடியாத வழியில் கரையும்
6. அதுபோல 12ஆம் வீட்டை நல்ல கிரகங்கள் பார்த்தால், உங்கள் தந்தை அல்லது
மனைவி, அல்லது நண்பர்கள் உங்கள் மீது கவனம் செலுத்தி, உங்கள் பணம்
கரையாமல் காப்பார்கள்.
7. அதற்கு மாறாக 12ஆம் வீடு தீயகிரகங்களின் பார்வையில் இருந்தால்,
உங்களுக்குப் புத்தி சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஓட்டைப் பானையில்
ஊற்றும் தண்ணீர் போல உங்கள் பணம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.
8. 12ஆம் வீட்டுக்காரனும், ஒன்பதாம் வீட்டுக்காரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகன் தன் பணத்தை அறவழியில் செலவு செய்வான். நிறைய தர்ம கரியங்களைச்
செய்வான்.
9. 12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நட்பு வீட்டில்
இருந்தாலும் ஜாதகன் பெருந்தன்மையானவனாக இருப்பான்.
10. அதே அமைப்பில் (12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருத்தல் அல்லது நட்பு
வீட்டில் இருத்தல்) நல்ல வர்க்கத்துடன் கூடிய ஒன்பதாம் அதிபதியின் பார்வை
பெற்றால் ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான்.
11. பன்னிரெண்டாம் வீட்டில் குரு, சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்கள் இருக்கு
மென்றால் ஜாதகன் கஞ்சனாக இருப்பான். தன்னுடைய பணத்தை யாருக்கும்
கொடுக்க மாட்டான்.
12. 12ஆம் வீடும் நன்றாக இருந்து (நிறைய பரல்களுடன் இருப்பது) சுக்கிரனும்
நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு, அதீத பெண்சுகம் கிடிக்கும், அதுவும் வேண்டும்
போது வேண்டிய நேரத்தில் கிடைக்கும். 'அந்த' விஷயத்தில் கொடுத்து வைத்தவனாக
இருப்பான்.
13. அதே சுகம் 12ஆம் வீட்டு அதிபன், சுபக்கிரகத்துடன் கூட்டணி போட்டு
ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருந்தாலும், அப்படி அமைப்புள்ள ஜாதகனுக்கும்
கிடைக்கும்.
14. குடும்ப சூழ்நிலை, வறுமை, உடல் நலக்குறைவு, அல்லது உடல் ஊனம் இது
போன்ற இன்ன பிற காரணங்களால் சிலருக்கு 'அந்த' சுகம் (sexual pleasures)
கிடைக்காமல் இருக்கலாம். அல்லது மறுக்கப் பட்டிருக்கலாம். ஆண் அல்லது
பெண் - இருபாலருமே அதற்கு விதிவிலக்கல்ல! அப்படி அமைவதற்குக் காரணம்
லக்கின அதிபதி, 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்வதோடு, அல்லது நீசமாவதோடு
சனி, ராகு, மாந்தியுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு உள்ளவர்களுக்கு அது நடக்கும்!
15. பன்னிரெண்டில் சூரியன் இருந்து, அது தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது
பார்வை பெற்றிருந்தால், ஒருவனின் செல்வம் நீதிமன்றம், அரசு தண்டனை என்று
கரையும்.
16. அதே நிலைமையில் சூரியனுக்குப் பதிலாக செவ்வாய் இருந்தால், ஒருவனின்
செல்வம், அடிதடி, வம்பு, வழக்கு, எதிரிகள் என்கின்ற வகையில் கரையும்.
ஏமாற்றங்கள், துரோகங்கள் என்கின்ற வகையிலும் கரையும்.
17. அதே நிலைமையில் புதன் இருந்தால், ஒருவனின் செல்வம் அல்லது பணம்
வியாபாரம் அல்லது பங்கு வணிகம் என்று காணாமல் போய்விடும்.
18 அதே நிலைமையில் இருக்கும் சுக்கிரனால், ஒருவனின் செல்வம், பெண்பித்தால்
தொலைந்து போய்விடும். சிலருக்கு, ஊழலில் சிக்கிக் கொண்டு இழப்பாகிவிடும்.
19. பன்னிரெண்டில் சனியும், செவ்வாயும் கூட்டணி போட்டு, நல்ல கிரகங்களின்
பார்வையின்றி இருந்தால் பணத்தை, உடன்பிறப்புக்காளால் தொலைக்க நேரிடும்
அல்லது கரைக்க நேரிடும்.
20. பன்னிரெண்டாம் வீட்டில் லக்கினாதிபதியும் சந்திரனும் கூட்டணியாக அமர்ந்
திருந்து, குரு அல்லது சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின் பாரவையின்றி இருந்தால்
ஜாதகனின் பணம் மருத்துவச் செலவுகளிலேயே கரைந்து விடும். சிலருக்கு இந்த
அமைப்பில், பணம், பிறருக்குக் கடனாகக் கொடுத்து அல்லது ஷ்யூரிட்டிகளில்
கையெழுத்து இட்டு மாட்டிக் கொள்வதன் மூலம் காணாமல் போய்விடும்.
21. இவற்ரைப் பார்த்துப் பயந்து விடாமல், ஜாதகத்தை முழுமையாக அலசுவதன்
மூலமே அவற்றை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு அஷ்டகவர்க்கம்
உங்களுக்குத் துணை செய்யும்.
இந்தப் பலன்கள் எப்போது அரங்கேறும்? அந்தந்த கிரகங்களின் தசா புத்திகளில்
அரங்கேறும்!
பன்னிரெண்டாம் பாடம் நிறைவுறுகிறது!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

ஜாதகக் கட்டத்தில் கடைசி வீட்டுப் பாடம் அருமை. ஆனால் 12ம் வீடு காலியாய் இருப்பவர்கள் தான் தப்பிப்பார்கள் போலுள்ளதே!
ReplyDeleteஅடுத்த பாடம் படிக்க ஆவலாய் இருக்கும் மாணவர்களுடன் அடுத்த பதிவை வரவேற்கும்
Thanks for the 12th lesson. my 6,8 and 12th houses were 30,30, 18 points whereas 2, 10, 11 houses have 24, 38, 37.
ReplyDeleteHope some money will stay?
-Shankar
Thanks for the lesson....Very good explanations about 12 house.I liked the concept of Hero's and Villans..
ReplyDeletehello sir
ReplyDeletewhat if the twelth house belong to sani??
பன்னிரெண்டாம் வீட்டுப் பலன்களின் விளக்கம் அருமை.
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
12ம் வீடு விளக்கம் அருமை,அடுத்த பாடம் படிக்க ஆவலாய்..
ReplyDeleteGK, BLR
Dear Guru,
ReplyDeleteYou have mastered the art to teaching with appropriate examples and make them interesting (Heroes and Villans)
My lagnam is Mithunam and 12th house is the house of Sukran. In my horoscope, Sukran is located in 4th house (in Kanni) along with Budhan (Utcham) and has Neecha Banga Raja Yogam. How does the effect of 12th house classify.
Please clarify.
Thanks and regards
Sridhar
மிகவும் தெளிவான விளக்கம். எனக்கு 10,11,2 பரல்கள் 82 6,8,12 பரல்கள் 84. 12 வீடு சந்திரன்.சந்திரன் இருக்கும் இடம் 8.இப்போது சந்திர திசை நடைபெறுகிறது. வருமானத்துக்கு அதிகமாக செலவு.
ReplyDeleteஹலோ வாத்தியாரய்யா,
ReplyDelete12ம் வீடு பற்றிய பாடம் மிக மிக அருமையாக இருந்தது.எல்லாம் சரி,
எனக்கு இந்த 11, 12 வீடுகள் காலியாகவே இருக்கே, நீங்க ஏன் அத பத்தி இன்னுமே சொல்லலையே?
அப்படீன்னா நான் ஏதோ கொஞ்சமே
கொஞ்சம் தப்பித்தேன்னு அர்த்தமா?
இல்ல என்ன அர்த்தம் சொல்லுங்களேன்.சும்மா ஏதாவது ஒரு வீடு காலியாக இருந்தால் என்ன
அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேக்கறேன்.
உள்ளேன் அய்யா !
ReplyDeleteபன்னிரெண்டாம் வீட்டு பாடம் போலவே படமும் சிறப்பாக இருந்தது ஐயா!
ReplyDeleteஐயா...
ReplyDeleteதகவல் அனைத்தும் மிக அருமை.
நன்றி.
Dear sir,
ReplyDeletewhat will be the prediction for thula lagna if combination of moon and mandi in 12th house with sarvaastavarga paral of 17.... whereas 12th lord is placed in the 11th house(vargothamam) with the vision of vakra jupiter from 3rd house?...the astavarga parals for 10th, 11th & 12th are 35,32,17 parals respectively...
Regards
Vinodh.K
Coimbatore
////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteஜாதகக் கட்டத்தில் கடைசி வீட்டுப் பாடம் அருமை. ஆனால் 12ம் வீடு காலியாய் இருப்பவர்கள் தான் தப்பிப்பார்கள் போலுள்ளதே!
அடுத்த பாடம் படிக்க ஆவலாய் இருக்கும் மாணவர்களுடன் அடுத்த பதிவை வரவேற்கும்////
அவர்கள் எப்படித் தப்பிப்பார்கள்? 12ஆம் வீட்டு அதிபன் போய் எங்காவது உட்கார்ந்துகொண்டு, அந்த வீட்டைத் துவம்சம் செய்வானே? அல்லது வேறு முக்கியமான அதிபதியுடன் (உதாரணம் லக்கினாதிபதி) வேண்டாத கூட்டணி போட்டுக்கொண்டிருப்பானே?
யாரும் தப்பிக்க முடியாது!. நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்து அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 மட்டுமே! அதை அடிக்கடி மறந்து விடுகிறீர்களே?
/////hotcat said...
ReplyDeleteThanks for the 12th lesson. my 6,8 and 12th houses were 30,30, 18 points whereas 2, 10, 11 houses have 24, 38, 37.
Hope some money will stay?
-Shankar////
ஆமாம் சங்கர்!
/////Ragu Sivanmalai said...
ReplyDeleteThanks for the lesson....Very good explanations about 12th house.I liked the concept of Hero's and Villans./////
நன்றி சிவன்மலை!.
mannar said...
ReplyDeletehello sir
what if the twelth house belong to sani?/////
தன்னுடைய ரெகுலர் வேலைகளுடன், 12ஆம் வீட்டிற்குரிய வேலைகளையும்
அவன் சேர்த்துச் செய்வான்.only an additional portfolio!
////வேலன். said...
ReplyDeleteபன்னிரெண்டாம் வீட்டுப் பலன்களின் விளக்கம் அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.////
நன்றி வேலன்!
////Geekay said...
ReplyDelete12ம் வீடு விளக்கம் அருமை,அடுத்த பாடம் படிக்க ஆவலாய்..
GK, BLR////
நன்றி ஜீக்கே!
Sridhar said...
ReplyDeleteDear Guru,
You have mastered the art to teaching with appropriate examples and make them interesting (Heroes and Villans)
My lagnam is Mithunam and 12th house is the house of Sukran. In my horoscope, Sukran is located in 4th house (in Kanni) along with Budhan (Utcham) and has Neecha Banga Raja Yogam. How does the effect of 12th house classify.
Please clarify.
Thanks and regards
Sridhar///////
12ஆம் வீட்டதிபன் நீசபங்க ராஜ யோகம் பெற்றிருப்பதால், 12ஆம் வீட்டிற்குக் குறிப்பிட்டுள்ள தீயபலன்கள்
வெகுவாகக் குறைந்துவிடும். சுக்கிரனும் புதனும் சேர்ந்திருப்பதால், நிபுனத்துவ யோகத்தைக் கொடுப்பார்கள்.
/////krish said...
ReplyDeleteமிகவும் தெளிவான விளக்கம். எனக்கு 10,11,2 பரல்கள் 82 6,8,12 பரல்கள் 84. 12 வீடு சந்திரன்.சந்திரன் இருக்கும் இடம் 8.இப்போது சந்திர திசை நடைபெறுகிறது. வருமானத்துக்கு அதிகமாக செலவு./////
இந்தத் திசை முடிந்த பிறகு நல்லது நடக்கும்!
////Sumathi. said... ஹலோ வாத்தியாரய்யா,
ReplyDelete12ம் வீடு பற்றிய பாடம் மிக மிக அருமையாக இருந்தது.எல்லாம் சரி,
எனக்கு இந்த 11, 12 வீடுகள் காலியாகவே இருக்கே, நீங்க ஏன் அத பத்தி இன்னுமே சொல்லலையே?
அப்படீன்னா நான் ஏதோ கொஞ்சமே
கொஞ்சம் தப்பித்தேன்னு அர்த்தமா?
இல்ல என்ன அர்த்தம் சொல்லுங்களேன்.சும்மா ஏதாவது ஒரு வீடு காலியாக இருந்தால் என்ன
அர்த்தம்னு தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேக்கறேன்./////
12ஆம் வீடு காலியாக இருந்தால் பாதி நல்லது. மீதி, அந்த வீட்டுக்காரன் சென்று அமரும் இடத்தைப் பொறுத்தது சகோதரி!
////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா !/////
நன்றி பாஸ்கர்!
/////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteபன்னிரெண்டாம் வீட்டு பாடம் போலவே படமும் சிறப்பாக இருந்தது ஐயா!////
படத்தை நீங்கள் ஒருவர்தான் ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி பாலா!
////மதி said...
ReplyDeleteஐயா...
தகவல் அனைத்தும் மிக அருமை.
நன்றி.//////
நன்றி மதிவாணரே!
////cooljosh said...
ReplyDeleteDear sir,
what will be the prediction for thula lagna if combination of moon and mandi in 12th house with sarvaastavarga paral of 17.... whereas 12th lord is placed in the 11th house(vargothamam) with the vision of vakra jupiter from 3rd house?...the astavarga parals for 10th, 11th & 12th are 35,32,17 parals respectively...
Regards
Vinodh.K
Coimbatore/////
12ல் சந்திரனும், மாந்தியும் சேர்ந்தால் மனப் போராட்டம்!
தொழில் ஸ்தானத்தைவிட லாபஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருந்தால் செய்கின்ற வேலைக்குத் தகுந்த ஊதியமும், பாராட்டும், திருப்தியும் கிடைக்காது!
Dear Subbiya sir,
ReplyDeleteFor kumba lagna person, Sani is the load of the first house as well as the 12th house. How does the sani affect the horoscope?
Thnaks,
உள்ளேன் ஐயா! எனக்கு மேஷ லக்னம். 12ல் சந்திரன்,4ல் குரு இரண்டும் பரிவர்த்தனை. 12ல் பரிவர்த்தனை அவ்வளவு நல்லதல்ல என்பது உண்மையா?
ReplyDeleteகுருவே,
ReplyDelete12-க்கு உரியவன் (செவ்வாய்) 12-ல் இருந்தால் அதன் பலன் ?
அன்புடன்
இராசகோபால்
/////Monickam said...
ReplyDeleteDear Subbiya sir,
For kumba lagna person, Sani is the load of the first house as well as the 12th house. How does the sani affect the horoscope?
Thnaks,/////
கும்பலக்கினத்திற்கு உள்ள சிக்கல் இதுதான். லக்கினாதிபதி சனி கேந்திரம், மற்றும் திரிகோணங்களில் இருந்தால் சிறப்பான வாழ்க்கை. இல்லை 6, 8, 12ஆம் இடங்களில் அமர்ந்தால் போராட்டமான வாழ்க்கை!
either great success; or great failure!
//////தங்ஸ் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா! எனக்கு மேஷ லக்னம். 12ல் சந்திரன்,4ல் குரு இரண்டும் பரிவர்த்தனை. 12ல் பரிவர்த்தனை அவ்வளவு நல்லதல்ல என்பது உண்மையா?////
12 எனும்போது பலன் பாதியாகக் குறைந்துவிடும்!
/////Rajagopal said...
ReplyDeleteகுருவே,
12-க்கு உரியவன் (செவ்வாய்) 12-ல் இருந்தால் அதன் பலன் ?
அன்புடன்
இராசகோபால்/////
செவ்வாய் பன்னிரெண்டில் இருந்தால் என்ன பலன் என்று பதிவில்
எழுதியிருக்கிறேனே சுவாமி. மீண்டும் படியுங்கள்!
Sir, My twelfth house is occupied with 5 planets. They are sukran, suriyan, bhuthan, Sani and Guru. 12th house has 24 parals. Sevvai and kethu at 2nd house, Ragu at 8th house and Moon at 11th house. with this planet positions, pls ahortly tell me my 12th house impact (good and bad) and also your overall opinion about my zodiac.
ReplyDeleteThanks,
Prakash Mani,
subbi.prakash@gmail.com
Coimbatore. now @ bangalore..
/////இந்தப் பலன்கள் எப்போது அரங்கேறும்? அந்தந்த கிரகங்களின் தசா புத்திகளில்
ReplyDeleteஅரங்கேறும்!
/// ரகு
இந்த பாடத்தை மீண்டும் ஒருமுறை படிக்கும் போது இந்த வரிகள் மிகவும் சிந்திக்க வைத்து விட்டது. வாழ்க்கை என்பதே ஒரு அரங்கேற்றம் தானே. சிலருக்கு சோக நாடகங்கள் அரங்கேறுகின்றன . சிலருக்கு சந்தோஷ நாடகங்கள் அரங்கேறுகின்றன. சோகமா சந்தோஷமா என்பதை கிரகங்களின் தசை புக்திகள் முடிவு செய்கின்றன . அப்படித்தானே அய்யா
/*//////தங்ஸ் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா! எனக்கு மேஷ லக்னம். 12ல் சந்திரன்,4ல் குரு இரண்டும் பரிவர்த்தனை. 12ல் பரிவர்த்தனை அவ்வளவு நல்லதல்ல என்பது உண்மையா?////
12 எனும்போது பலன் பாதியாகக் குறைந்துவிடும்*/
Thank you!
அய்யா,
ReplyDeleteஎனக்கு 12ல் (கன்னியில்) செவ்வாய் எந்த சுப கிரகத்தின் பார்வையும் இல்லாமல் இருக்கிறது. 12ம் வீட்டு அதிபதி புதன், குரு + சூரியன் உடன் லக்னத்தில். கன்னியில் பரல் 28. கடகம் பரல் 37. சிம்மம் பரல் 40. லக்னம் துலாம். என்ன ஆகும்? பணம் கையில் நிற்குமா?
This comment has been removed by the author.
ReplyDeleteஐயா வணக்கமுங்கோ!
ReplyDelete12ம் வீட்டுப்பாடம் அருமை.
என் ஜாதகத்தில் 12ம் வீட்டு அதிபதி 10ல் உச்சம், ஆட்சி பெற்ற சுக்கிரனும் அவர் கூட.
10ம் வீட்டு சுக்கிரன் 12ம் வீட்டு அதிபனுடன் கூட்டனி போட்டால் அவர் பலன் குறைந்திடுமா? தொழிலில் எதாவது பங்கம் வருமா?
Dear Sir,
ReplyDeleteIn jagnath hora software, you mentioned GL is maandi.
But in the hora software under basic tab, the sign which maandi and gulika is mentioned corresponds to gk or md.
Can you please explain this.
/////PrakashMani said...
ReplyDeleteSir, My twelfth house is occupied with 5 planets. They are sukran, suriyan, bhuthan, Sani and Guru. 12th house has 24 parals. Sevvai and kethu at 2nd house, Ragu at 8th house and Moon at 11th house. with this planet positions, pls ahortly tell me my 12th house impact (good and bad) and also your overall opinion about my zodiac.
Thanks,
Prakash Mani,/////
5 கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் அதற்கு கிரக யுத்தம் என்று பெயர். ஒரு நல்ல ஜோதிடராகப் பார்த்து
overall opinionஐக் கேளுங்கள் நண்பரே! உங்கள் ஜாதகத்தை முழுமையாகக் கணித்துப் பார்த்துதான் பலன் சொல்ல முடியும். எனக்கு அதற்கு நேரமில்லை. நான் தொழில்முறை ஜோதிடனும் அல்ல! மன்னிக்கவும்.
////Ragu Sivanmalai said...
ReplyDelete/////இந்தப் பலன்கள் எப்போது அரங்கேறும்? அந்தந்த கிரகங்களின் தசா புத்திகளில்
அரங்கேறும்!
/// ரகு
இந்த பாடத்தை மீண்டும் ஒருமுறை படிக்கும் போது இந்த வரிகள் மிகவும் சிந்திக்க வைத்து விட்டது. வாழ்க்கை என்பதே ஒரு அரங்கேற்றம் தானே. சிலருக்கு சோக நாடகங்கள் அரங்கேறுகின்றன . சிலருக்கு சந்தோஷ நாடகங்கள் அரங்கேறுகின்றன. சோகமா சந்தோஷமா என்பதை கிரகங்களின் தசை புக்திகள் முடிவு செய்கின்றன . அப்படித்தானே அய்யா/////
அவைகள்தான் நடத்திவைக்கின்றன!
/////தங்ஸ் said...
ReplyDelete/*//////தங்ஸ் said...
உள்ளேன் ஐயா! எனக்கு மேஷ லக்னம். 12ல் சந்திரன்,4ல் குரு இரண்டும் பரிவர்த்தனை. 12ல் பரிவர்த்தனை அவ்வளவு நல்லதல்ல என்பது உண்மையா?////
12 எனும்போது பலன் பாதியாகக் குறைந்துவிடும்*/
Thank you!///
It is all right!
///////அமர பாரதி said...
ReplyDeleteஅய்யா,
எனக்கு 12ல் (கன்னியில்) செவ்வாய் எந்த சுப கிரகத்தின் பார்வையும் இல்லாமல் இருக்கிறது. 12ம் வீட்டு அதிபதி புதன், குரு + சூரியன் உடன் லக்னத்தில். கன்னியில் பரல் 28. கடகம் பரல் 37. சிம்மம் பரல் 40. லக்னம் துலாம். என்ன ஆகும்? பணம் கையில் நிற்குமா?//////
பணம் கையில் தங்குமா என்பதற்கு இரண்டாம் வீட்டைப் பாருங்கள் (House of finance)
///Aachi said...
ReplyDeleteஐயா வணக்கமுங்கோ!
12ம் வீட்டுப்பாடம் அருமை.
என் ஜாதகத்தில் 12ம் வீட்டு அதிபதி 10ல் உச்சம், ஆட்சி பெற்ற சுக்கிரனும் அவர் கூட.
10ம் வீட்டு சுக்கிரன் 12ம் வீட்டு அதிபனுடன் கூட்டனி போட்டால் அவர் பலன் குறைந்திடுமா? தொழிலில் எதாவது பங்கம் வருமா?/////
சுக்கிரனின் சுயவர்க்கப் பரல்கள் எத்தனை என்று பாருங்கள். அவர் வலுவாக இருந்தால் ஒன்றும் ஆகாது!
////hotcat said...
ReplyDeleteDear Sir,
In jagnath hora software, you mentioned GL is maandi.
But in the hora software under basic tab, the sign which maandi and gulika is mentioned corresponds to gk or md. Can you please explain this./////
Dear Shankar, I am also interested to know! Please send a mail to Jagannathahoro web site administrator and try to clear the doubt!
Pls not regret for this, i realize that your full time profession is not about Zodiac.. if you could write a lesson on the "Planet Wars" during your leisure then it will clear many misconceptions. Hope to see the lesson in near future..
ReplyDeleteThanks,
Prakash.
/////PrakashMani said...
ReplyDeletePls not regret for this, i realize that your full time profession is not about Zodiac.. if you could write a lesson on the "Planet Wars" during your leisure then it will clear many misconceptions. Hope to see the lesson in near future..
Thanks,
Prakash.///
பொறுத்திருங்கள். எழுதுகிறேன். பின்னால் அது வரும்!
This comment has been removed by the author.
ReplyDeleteRespected sir,
ReplyDeleteMy husband’s lagnam is Cancer.
SATURN is in the 12th house. Sun & Venus are seeing the Jupiter. JUPITER (vakram) is seeing the Saturn from 8th house.
Astavargam Paral:1-35,2-21,3-28,4-28,5-25,6-30,7-27,8-26,9-27,10-27,11-29,12-34
(From 2012- SATURN disha will begin.)
May I know some money will stay or not?
Thanking you,
With regards,
Vanathi
//////Vanathi said...
ReplyDeleteRespected sir,
My husband’s lagnam is Cancer.
SATURN is in the 12th house. Sun & Venus are seeing the Jupiter. JUPITER (vakram) is seeing the Saturn from 8th house.
Astavargam Paral:1-35,2-21,3-28,4-28,5-25,6-30,7-27,8-26,9-27,10-27,11-29,12-34
(From 2012- SATURN disha will begin.)
May I know some money will stay or not?
Thanking you,
With regards,
Vanathi///////
துவங்க இருக்கும் சனி திசை நாதன் சனீஷ்வரன் 12ல் (விரையத்தில்) இருப்பதால் சோதனையாகத்தான் இருக்கும். சுயபுத்தி (3 வருடங்கள்) காலத்தில் ஒன்றும் நேராது. நீங்கள் அதற்குள் இருக்கும் பணத்தை, சொத்துக்களை உங்கள் பெயருக்கும், குழந்தைகள் பெயருக்கும் மாற்றி வைத்துக்கொள்வது நலலது!
அருமையாக எழுதி உள்ளீர்கள் அய்யா ...
ReplyDeleteஎனக்கு இப்பொழுதுதான் ஜாதகத்தின் அடிப்படை விசயம் ஓரளவுக்கு புரிகிறது ..
உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் ..
அருண் பிரசாத் ஜெ