12.11.08

ஜோ.பா.எண்.132: பன்னிரெண்டாம் வீடு - பகுதி 3


இந்தப் பாடத்தின் முன் பகுதிக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது

பன்னிரெண்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்

1.
சூரியன்.
இளமையில் அல்லது முதுமமயில் ஏழ்மை நிலவும்.
ஜாதகன் பாவங்களைச் செய்யக்கூடியவன்,
திருட்டு எண்ணம் மிக்கவன்..
தோல்விகளை அதிகமாகச் சந்திப்பவன்,
ஒதுக்கப்பெற்றவன்.
தன் குழந்தைகளால் மகிழ்ச்சி இல்லாதவன்.
ஜாதகன் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும்.
இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவான்.
அவனுடைய வாழ்க்கை மொத்தத்தில் வெற்றிகரமாக இருக்காது.
மற்றவர்களால் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து நடப்பான்.
உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது சேதமாக இருக்கும்
அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல்
உள்ளேயும் இருக்கலாம்..
கண்பார்வைக் குறைபாடுகள் உண்டாகும்

ஆனாலும் ஜாதகன் சுறுசுறுப்பானவனாக இருப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
சந்திரன்
துயரங்களை அதிகமாகச் சந்திப்பவன்.
சிலர் கொடுர சிந்தைகளை உடையவர்களாக இருப்பார்கள்.
மகிழ்ச்சியில்லாதவன்.
அதிகாரமில்லாதவன்,
தடைகளை அதிகமாகப் பெறுபவன்.
விகாரமான தோற்றம், கோரம், அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு
குறைபாட்டினால் மனக்கஷ்டங்களை அனுபவிப்பவனாக இருப்பான்.
குறுகிய மனப்பான்மை உடையவனாக இருப்பான்.
கடின மனம் கொண்டவனாக இருப்பான்.
குறும்புத்தனம், நக்கல் மிகுந்தவனாக இருப்பான்.
மொத்தத்தில் மற்றவர்களுக்குப் புரியாத, மற்றவர்களால் தெரிந்து
கொள்ள முடியாத வாழ்க்கை வாழ்வான்.
இங்கே சந்திரன் பலமின்றி இருந்து, சனியின் பார்வை பெற்றாலும்
அல்லது சேர்க்கை பெற்றாலும் ஜாதகன் சோம்பேறித்தனமான
அல்லது மந்தமான வாழ்க்கை வாழ நேரிடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
செவ்வாய்.
வெற்றிகளை அடையாதவன்.
சிறு வயதில் அல்லது வயதான காலத்தில் ஏழ்மை தாண்டவமாடும்.
சுறுசுறுப்பானவன்.
காரியசித்தியற்றவன்.
நேர்மை தவறக்கூடியவன்.
பிரபலம் ஆகமுடியாதவன்.
ஜாதகன் சுயநலமிக்கவனாக இருப்பான்,
சிலர் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும்.
அதீத உடல் உஷ்ணத்தினால் உடல் உபாதைகள் ஏற்படும்.
அடிக்கடி வஞ்சிக்கப்படுபவனாக இருப்பான்.
அதன் காரணமாக அவன் தன்னுடைய செல்வம் அல்லது கைப்பணம்
அல்லது பொருளை முழுமமயாக இழக்க நேரிடும்.

செவ்வாய் 12ல், சந்திரன் 1ல், சனி 2ல், சூரியன் 7ஆம் இடத்தில்
அமையப்பெற்ற ஜாதகனுக்கு மேகநோய் (உடலின் நிறம் அங்கங்கே
மாறித் தோற்றமளிக்கும் நோய் - Luecoderma)உண்டாகும்.

(What exactly is Leucoderma?
Strictly speaking, Leucoderma is not a medical term, though it has
come to mean any white/light coloured skin patch. Very broadly,
white patches can be acquired or may be present at birth.
Again, both acquired and congenital skin patches can result from
hordes of reasons. While congenital patches are not of much
importance - since a majority of them are birthmarks anyway,
the disease wherein acquired patches develop is generally referred
to as Leucoderma (or Leucoderma in medical terms). Other acquired
white patches usually follow some preceding disorder.)

இங்கே இருக்கும் செவ்வாய், சூரியனின் பார்வை பெற்றால், ஜாதகன்
தீ விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. அல்லது
தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு.

12ல் செவ்வாய் இருக்க, 7 & 8 ஆம் வீடுகளில் தீய கிரகங்கள்
(Melefic Planets) இருந்தால், ஜாதகனுக்கு இரண்டு தாரங்கள் உண்டு
அதுவும் முதல் மனைவி இருக்கும்போதே, மற்றொரு பெண்ணையும்
மணப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
புதன்
ஜாதகன் சலன புத்தியுள்ளவன்.
அடங்காதாவன், ஸ்திரபுத்தி இல்லாதவன்
நிலையற்ற தன்மையுடையவன்.
பிறர்சொல் கேளாதவன்
முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பான்.
பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பான்.
அதன் காரணமாக தரம், வயதுவித்தியாசமின்றி பல பெண்களிடம்
தொடர்பு அல்லது ஈடுபாடு கொள்வான். அவர்களுடன் சுற்றித்திரிவான்.
சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும்.
நெறிதவறிய சிந்தனைகளள உடையவனாக இருப்பான்.
அதனால் மனதில் மிகிழ்ச்சி இல்லாதவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
குரு.
இறை நம்பிக்கை குறைந்தவனாக இருப்பான்.
இறைவனையும், மத நம்பிக்கையாளர்கலையும் பார்த்து எள்ளி
நகையாடுபவனாக இருப்பான்.
மற்றவர்களை ஏளனம் செய்பவனாக இருப்பான்.
மற்றவர்கள் பயப்படக்கூடிய அல்லது யோசிக்கக்கூடிய செயல்களைச்
செய்பவனாக இருப்பான்
சிலர் முறையற்ற சிந்தனை மற்றும் செயல்பாடுகள் உடைய வாழ்க்கை
(immoral sexual thoughts or actions) வாழ்வார்கள்.
சிலர் ஆடி அடங்கும் வயதில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து
திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் கடைசிவரை திருந்தாமல்
மண்ணோடு மண்ணாகிப்போவார்கள்.
சிலர் வாகனங்களின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.
பெண்களாக இருந்தால், நகைகள், உடைகள் மீது அதீதப் பிரியம்
உள்ளவர்களாக இருப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
சுக்கிரன்
உறவினர்களைக் கை கழுவும் சூழ்நிலைகள் உண்டாகும்,
சிலருக்கு உறவுகளை விட்டு ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்படும்.
வசதிகளைத் தேடி ஏங்கும் மனப்பான்மை உண்டாகும்.
அந்தத் தேடிலிலேயே சிலருக்கு வாழ்க்கை முடிந்துவிடும்.
வெற்றிகள் எளிதில் கிடைக்காது.
சிலர் வறுமையின் காரணமாக அல்லது அதீத பணச்செலவின்
காரணமாக துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்
சிலர் தரமற்ற அல்லது குணமற்ற பெண்களின் பிடியில் சிக்க நேரிடும்
பெண்களாக இருந்தால், அன்பு, அக்கறையற்ற கணவன் அல்லது
ஒருவனின் பிடியில் சிக்க நேரிடும்.
சிலருக்கு கண்பார்வை மங்கும் அபாயம் உண்டு.

இந்த இடத்துச் சுக்கிரன் உச்சமாக இருந்தால் (அதாவது மேஷம்
லக்கினமாக இருந்து சுக்கிரன் இங்கே மீனத்தில் இருந்தால்)
மேலே சொல்லிய எந்த பாதிப்புமின்றி, ஜாதகன் பல நன்மைகளுடன்
வாழ்வான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
சனி
வாழ்க்கை மங்கி இருக்கும். பிரகாசமாக இருக்காது.
பணம் மொத்தத்தையும் ஏதாவது ஒரு வழியில் இழப்பான்.
அனேக எதிரிகள் இருப்பார்கள் அல்லது உண்டாவார்கள்
அல்லது ஏற்படுத்திக்கொள்வான்
வியாபாரம் செய்பவனாக இருந்தால் அதன் மூலம் பொருளை
இழப்பான்.
மறைமுகமாக பல பாவங்களைச் செய்பவனாக இருப்பான்
அவநம்பிக்கை உடையவராக இருப்பான்.
ஒருவனையும் நம்பமாட்டான்.
சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு உடையவராக
இருப்பார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
ராகு
ஜாதகன் வாழ்க்கையில் வளம் காண்பவனாக இருப்பான்.
ஒழுக்கமற்றவனாக இருப்பான். ஆனாலும் பலருக்கும் உதவும்
மனப்பன்மை கொண்டவனாக இருப்பான்.
கண் பார்வைக் குறைபாடுகள் இருக்கும்

ராகு 12ல், 7ல் சூரியன், செவ்வாய் 10ல் இருக்கும் அமைப்புடன்
பிறந்த ஜாதகன் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையைப்
பறிகொடுக்க நேரிடும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
கேது.
ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன்.
மன அமைதியின்றி இருப்பவன்
சிலர் பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும்.
அடித்தட்டு மக்களோடு சினேகமாக இருப்பவன்.
பரம்பரைச் சொத்துக்களை இழக்க நேரிடும் அல்லது அவைகள்
கிடைக்காமல் போய்விடும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே கூறப்பட்டுள்ளவைகள் பொது விதிகள்.
மற்ற கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கைகளை வைத்து மாறக்
கூடியவைகள்.
சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை என்றால் அந்தப் பலன்கள்
இருக்காது அல்லது குறைந்துவிடும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கட்டுரையின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(இந்தப் பகுதியில் பாடம் இன்னும் உள்ளது. அது தொடர்ந்து வரும்)




வாழ்க வளமுடன்!

83 comments:

  1. Me the second !!

    I dont have any planet in 12 th..Thank God !!

    ReplyDelete
  2. me the third...

    I have 2 planets in 12th house! whereas 12th house lord in 12th house...

    -Shankar

    ReplyDelete
  3. வணக்கம் ஆசானே!
    இன்றைய பாடத்திற்கும் அந்த படத்திற்கும் என்ன தொடர்பு? (நானும் குப்புற படுத்து யோசித்தேன், மல்லாக்க படுத்து யோசித்தேன்... ம்ம்ம்ஹ்ம் பிடிபடவே இல்லை)

    ReplyDelete
  4. //சூரியன்.
    இளமையில் அல்லது முதுமமயில் ஏழ்மை நிலவும்.
    ஜாதகன் பாவங்களைச் செய்யக்கூடியவன்,
    திருட்டு எண்ணம் மிக்கவன்..
    தோல்விகளை அதிகமாகச் சந்திப்பவன்,
    ஒதுக்கப்பெற்றவன்.
    தன் குழந்தைகளால் மகிழ்ச்சி இல்லாதவன்.
    ஜாதகன் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும்.
    இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவான்.
    அவனுடைய வாழ்க்கை மொத்தத்தில் வெற்றிகரமாக இருக்காது.
    மற்றவர்களால் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து நடப்பான்.
    உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது சேதமாக இருக்கும்
    அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல்
    உள்ளேயும் இருக்கலாம்..
    கண்பார்வைக் குறைபாடுகள் உண்டாகும்

    ஆனாலும் ஜாதகன் சுறுசுறுப்பானவனாக இருப்பான்//

    I have sun in the 12th house except "இளமையில் ஏழ்மை நிலவும்." this point no others are matching. As you told all are generic prediction, we need to analyse properly.

    Thanks and Regards,
    G krishnan , BLR.

    ReplyDelete
  5. 12 ல் யார் வந்தாலும் bad ஆகிவிடுகிறார்களே... அது மறைவு ஸ்தானம் என்பதாலா? வகுப்புத்தோழர் ரகுசிவன்மலை போல் எனக்கும் 12 ல் யாரும் இல்லை... :‍ ) (உடனே இதெல்லாம் பொது விதிகள் இதை படித்து யாரும் சந்தோசபட வேண்டாம் அப்படின்னு குண்டு போடுவார் ஆசான்......)

    ஆசானே! ஒருவேளை 12 ம் வீட்டில் இருக்கும் கிரகம் உச்சமாக,நீச்சமாக,அஸ்தங்கமாக‌ இருந்தால் என்னவாகும்?

    ReplyDelete
  6. //(உடனே இதெல்லாம் பொது விதிகள் இதை படித்து யாரும் சந்தோசபட வேண்டாம் அப்படின்னு குண்டு போடுவார் ஆசான்......)
    //

    ஆசான் பேச்சுக்கு அப்பீல் உண்டா?

    ReplyDelete
  7. // dont have any planet in 12 th..Thank God !!//

    :) ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  8. அய்யா எனக்கு மூன்று கிரகங்கள் (குரு, சனி, சுக்கிரன்) உள்ளன.நான் மகிழ்ச்சியாக உள்ளேன். தலைக்கு மேல வெள்ளம் போனதுக்கு அப்புறம் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்றுதான்.

    என்ன சொல்றீங்க அய்யா?

    ReplyDelete
  9. Sir... what about the prediction of the upa grahas(mandhi,dhuma kethu, parivaedan, kalan...)? did this upagrahas will also affect the houses which they occupied?

    Regards
    Vinodh.K

    ReplyDelete
  10. //நானும் குப்புற படுத்து யோசித்தேன், மல்லாக்க படுத்து யோசித்தேன்... ம்ம்ம்ஹ்ம் பிடிபடவே இல்லை)
    //

    நமக்கு போட்டியா நிறைய பேர் கெளம்பீட்டாங்க போல!

    ReplyDelete
  11. //அய்யா எனக்கு மூன்று கிரகங்கள் (குரு, சனி, சுக்கிரன்) உள்ளன.நான் மகிழ்ச்சியாக உள்ளேன். தலைக்கு மேல வெள்ளம் போனதுக்கு அப்புறம் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்றுதான்.

    என்ன சொல்றீங்க அய்யா?

    //

    :)
    இதுக்கு ஒரு ஸ்மைலியை போட்டுட்டு "நான் வேறென்ன சொல்ல முடியும்"னு சொல்லுவார் பாருங்க!

    ReplyDelete
  12. :)
    இதுக்கு ஒரு ஸ்மைலியை போட்டுட்டு "நான் வேறென்ன சொல்ல முடியும்"னு சொல்லுவார் பாருங்க!

    Sibi,

    You are very funny :)

    ReplyDelete
  13. In my relative's horo there r 12 planets and it was told that it is called SANYASI yogam.and getting married would be difficult.kindly explain about sanyasi yogam

    ReplyDelete
  14. sorry sir it is 5 planets in 12th house.

    ReplyDelete
  15. சிபி அண்ணே ! நீங்க சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்.. உங்களுடன் போட்டியிட முடியுமா...... :‍-)

    ReplyDelete
  16. /சிபி அண்ணே ! நீங்க சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்.. உங்களுடன் போட்டியிட முடியுமா...... :‍-)
    //

    :)
    நான் வேறென்ன சொல்ல முடியும்!

    ReplyDelete
  17. //Sibi,

    You are very funny :)//

    Thank you very much Mr.Kannan!

    ReplyDelete
  18. //7. சனி

    வாழ்க்கை மங்கி இருக்கும். பிரகாசமாக இருக்காது.

    பணம் மொத்தத்தையும் ஏதாவது ஒரு வழியில் இழப்பான்.

    அனேக எதிரிகள் இருப்பார்கள் அல்லது உண்டாவார்கள்
    அல்லது ஏற்படுத்திக்கொள்வான்

    வியாபாரம் செய்பவனாக இருந்தால்
    அதன் மூலம் பொருளை
    இழப்பான்.

    மறைமுகமாக பல பாவங்களைச் செய்பவனாக இருப்பான்

    அவநம்பிக்கை உடையவராக இருப்பான்.

    ஒருவனையும் நம்பமாட்டான்.

    சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு உடையவராக
    இருப்பார்கள்.//

    முருகா.. எங்கடா இருக்க..

    ReplyDelete
  19. /சிபி அண்ணே ! நீங்க சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்.. உங்களுடன் போட்டியிட முடியுமா...... :‍-)
    //

    :)
    நான் வேறென்ன சொல்ல முடியும்!

    ///////

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி ஸ்டைல் பதில் சொல்வீங்கன்னு பார்த்தேன் .....

    ReplyDelete
  20. //முருகா.. எங்கடா இருக்க..//

    பிறர் படும் துன்பம் கண்டு தவிக்கிறதா உம் மனது?

    அழுபவரைக் காண்கையில் உமக்கும் அழுகை வருகிறதா?

    பட்டினிச் சாவுகள் பற்றிக் கேட்கையிலே பதறுகிறதா உம் மனம்?

    மேற்கண்ட கேள்விகளுக்கு உமது பதில் ஆம் எனில் நான் உனக்குள்ளேயே இருக்கிறேன்!

    ReplyDelete
  21. உன்னை உணர
    உன்னால் முடியுமெனில்
    இறைவனை உணரவும்
    உன்னால் முடியும்!

    துன்புறும் உயிர்கண்டு
    துடிக்குமுன் மனதெனில்
    உண்மையை உணர்வாய்!
    உனக்குள் கடவுள்!

    வறியவர்பசி கண்டு
    வதைபடும் உளமெனில்
    நிஜமதை அறிவாய்!
    நீதான் கடவுள்!

    பிற உயிர் அழுதிட
    நீயும் அழுதால்
    பிரிவினை இல்லை
    உனக்கும் இறைக்கும்!

    கருணையும், அன்பும்
    கலந்திட்ட இதயம்
    அதுதான் இறைவன்!
    அதுதான் கடவுள்!

    -சுவாமி பித்தானந்தா.

    ReplyDelete
  22. ///நாமக்கல் சிபி said...
    //முருகா.. எங்கடா இருக்க..//

    பிறர் படும் துன்பம் கண்டு தவிக்கிறதா உம் மனது?

    அழுபவரைக் காண்கையில் உமக்கும் அழுகை வருகிறதா?

    பட்டினிச் சாவுகள் பற்றிக் கேட்கையிலே பதறுகிறதா உம் மனம்?

    மேற்கண்ட கேள்விகளுக்கு உமது பதில் ஆம் எனில் நான் உனக்குள்ளேயே இருக்கிறேன்!///

    எனக்குள்ளேயே இருந்து கொண்டு ஏனப்பா கஷ்டப்பட வேண்டும்.. வெளியில் வந்தாலாவது நான் நானாக இருப்பேனே..

    12-ல் சனி மட்டுமல்ல பக்கத்திலேயே திருவாளர் மாந்தியும் அல்லவா வீற்றிருக்கிறார்கள்.

    ஓ.. அதனால்தான் எனக்குள்ளேயே இருக்கிறாயா..

    நல்லா இரு..

    ReplyDelete
  23. //நாமக்கல் சிபி said...
    உன்னை உணர
    உன்னால் முடியுமெனில்
    இறைவனை உணரவும்
    உன்னால் முடியும்!

    துன்புறும் உயிர்கண்டு
    துடிக்குமுன் மனதெனில்
    உண்மையை உணர்வாய்!
    உனக்குள் கடவுள்!

    வறியவர்பசி கண்டு
    வதைபடும் உளமெனில்
    நிஜமதை அறிவாய்!
    நீதான் கடவுள்!

    பிற உயிர் அழுதிட
    நீயும் அழுதால்
    பிரிவினை இல்லை
    உனக்கும் இறைக்கும்!

    கருணையும், அன்பும்
    கலந்திட்ட இதயம்
    அதுதான் இறைவன்!
    அதுதான் கடவுள்!

    -சுவாமி பித்தானந்தா.//

    சுவாமி.. கால் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்..

    முருகனை கண்டு கொண்டேன்..

    ReplyDelete
  24. ///நாமக்கல் சிபி said...
    //அய்யா எனக்கு மூன்று கிரகங்கள் (குரு, சனி, சுக்கிரன்) உள்ளன.நான் மகிழ்ச்சியாக உள்ளேன். தலைக்கு மேல வெள்ளம் போனதுக்கு அப்புறம் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்றுதான். என்ன சொல்றீங்க அய்யா?//
    :)இதுக்கு ஒரு ஸ்மைலியை போட்டுட்டு "நான் வேறென்ன சொல்ல முடியும்"னு சொல்லுவார் பாருங்க!///

    யோவ் முருகா.. அடங்க மாட்டியா நீயி..

    வாத்தியாரையே கலாய்க்குறியா..

    கேட்க ஆளில்லைன்னு நினைப்பா..

    ஒரு பதிவு விடாம வந்து 5, 6 கமெண்ட் போட்டு உசுப்பி விடுறியே முருகா.. அப்பா யாரு.. அம்பானி தோஸ்த்தா..

    சோத்துக்குக் கவலையில்லை போலிருக்கு.. நமக்கு ஆயிரம் இருக்கு..














    ம்.. பெருமூச்சு ஒண்ணு விட்டேன்.. அதான் கேப்பு..

    ReplyDelete
  25. Hello Sir ,
    Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house.
    If that is correct , what should be taken seriously ?
    Jathagam or kolcharam..?
    Kindly explain

    ReplyDelete
  26. Dear Sir ,second doubt :
    If Kolchara palan of one planet depends on that planet's position in the natal chart , then what is the whole point of publishing and reading 'Podhu kolchara palangal' for every guru peyarchi and sani peyarchi ?
    (thamil thattachchum menporul ennidaththil illai :( aagaiyaal aangilathil thattachchugiraen)

    ReplyDelete
  27. வகுப்பு மீண்டும் கலகலப்பு ஆகிவிட்டது.

    ReplyDelete
  28. அய்யா,

    எனக்கு 12ல் செவ்வாய், 7ல் சனி.

    //அடிக்கடி வஞ்சிக்கப்படுபவனாக இருப்பான்// உண்மைதான். அதும் பெற்றொர் மற்றும் உடன் பிறந்தவர்களாலேயெ. மற்றது எனக்கு பொருந்தவில்லையே அய்யா?

    ReplyDelete
  29. ////ஸ்ரீதர்கண்ணன் said...
    me the first////

    Yes you are the first to the classroom but not in reading the lesson!:-))))

    ReplyDelete
  30. /////Ragu Sivanmalai said...
    Me the second !!
    I dont have any planet in 12 th..Thank God !!////

    ஆமாம்! பன்னிரெண்டில் எந்தக் கிரகமும் சென்று அமராமல் இருப்பதும் பாக்கியம்தான்!

    ReplyDelete
  31. /////hotcat said...
    me the third...
    I have 2 planets in 12th house! whereas 12th house lord in 12th house...
    -Shankar/////

    அதனால் எதற்குக் கவலை? யார் எங்கே இருந்தாலும் (எப்படி இருந்தாலும்) அனைவருக்கும் மொத்த மதிப்பெண்

    ஒன்றுதானே! 337 என்ற அந்த மதிப்பெண் எல்லோருக்கும் பொதுவானது! அதில் ஒரு குறைவில்லை என்று மகிழ்வு கொள்ளுங்கள்!

    ReplyDelete
  32. //////அணுயோகி said...
    வணக்கம் ஆசானே!
    இன்றைய பாடத்திற்கும் அந்த படத்திற்கும் என்ன தொடர்பு? (நானும் குப்புற படுத்து யோசித்தேன்,

    மல்லாக்க படுத்து யோசித்தேன்... ம்ம்ம்ஹ்ம் பிடிபடவே இல்லை)//////

    நன்றாக யோசித்துப் பாருங்கள் பிடிபடும். அது ஒரு அளவைக்குறிக்கிறது.

    ReplyDelete
  33. /////Geekay said...
    //சூரியன்.
    இளமையில் அல்லது முதுமமயில் ஏழ்மை நிலவும்.
    ஜாதகன் பாவங்களைச் செய்யக்கூடியவன்,
    திருட்டு எண்ணம் மிக்கவன்..
    தோல்விகளை அதிகமாகச் சந்திப்பவன்,
    ஒதுக்கப்பெற்றவன்.
    தன் குழந்தைகளால் மகிழ்ச்சி இல்லாதவன்.
    ஜாதகன் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும்.
    இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவான்.
    அவனுடைய வாழ்க்கை மொத்தத்தில் வெற்றிகரமாக இருக்காது.
    மற்றவர்களால் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து நடப்பான்.
    உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது சேதமாக இருக்கும்
    அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல்
    உள்ளேயும் இருக்கலாம்..
    கண்பார்வைக் குறைபாடுகள் உண்டாகும்
    ஆனாலும் ஜாதகன் சுறுசுறுப்பானவனாக இருப்பான்//
    I have sun in the 12th house except "இளமையில் ஏழ்மை நிலவும்." this point no others are matching. As

    you told all are generic prediction, we need to analyse properly.
    Thanks and Regards,
    G krishnan , BLR./////

    அனைவருக்கும் பொதுவிதிகள் அவைகள்.
    உங்களுக்கு அதில் ஒன்று உள்ளது அல்லவா?
    இருக்கும் விதிகள் அத்தனையும் ஒரு ஜாதகத்திற்கானது அல்ல!
    கொடுக்கப்பட்டவற்றில் ஒன்று அல்லது இரண்டுதான் பொருந்தும்

    ReplyDelete
  34. /////அணுயோகி said...
    12 ல் யார் வந்தாலும் bad ஆகிவிடுகிறார்களே... அது மறைவு ஸ்தானம் என்பதாலா? வகுப்புத்தோழர்

    ரகுசிவன்மலை போல் எனக்கும் 12 ல் யாரும் இல்லை... :‍ ) (உடனே இதெல்லாம் பொது விதிகள் இதை படித்து

    யாரும் சந்தோசபட வேண்டாம் அப்படின்னு குண்டு போடுவார் ஆசான்......)
    ஆசானே! ஒருவேளை 12 ம் வீட்டில் இருக்கும் கிரகம் உச்சமாக,நீச்சமாக,அஸ்தங்கமாக‌ இருந்தால்

    என்னவாகும்?/////
    உச்சகிரகமாக இருந்தால் 12ல் இருப்பதால் அதன் செயல் குறைந்து பலனும் குறையும். அஸ்தமனம் பெற்றால் அது

    எந்தவிட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டின் பலன் ஜாதகனுக்கு இல்லாமல் போய்விடும்

    ReplyDelete
  35. ////நாமக்கல் சிபி said...
    வந்துட்டம்ல!////

    நீங்கள் வந்துவிட்டீர்கள். எங்கே உங்கள் கூட்டாளி?

    ReplyDelete
  36. /////நாமக்கல் சிபி said...
    //(உடனே இதெல்லாம் பொது விதிகள் இதை படித்து யாரும் சந்தோசபட வேண்டாம் அப்படின்னு குண்டு

    போடுவார் ஆசான்......) //
    ஆசான் பேச்சுக்கு அப்பீல் உண்டா?//////

    சாதகமாக இல்லாவிட்டால் அது உண்மையாக இருந்தாலும் கசக்கும்!
    நம் வகுப்புக் கண்மணிகள் சொன்னால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் சிபி!

    ReplyDelete
  37. /////நாமக்கல் சிபி said...
    // dont have any planet in 12 th..Thank God !!//
    :) ரிப்பீட்டேய்!/////

    பதிலும் ரிப்பீட்டே! அவருக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்!

    ReplyDelete
  38. /////ஸ்ரீதர்கண்ணன் said...
    அய்யா எனக்கு மூன்று கிரகங்கள் (குரு, சனி, சுக்கிரன்) உள்ளன.நான் மகிழ்ச்சியாக உள்ளேன். தலைக்கு

    மேல வெள்ளம் போனதுக்கு அப்புறம் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்றுதான்.
    என்ன சொல்றீங்க அய்யா?/////

    இந்தப் பக்குவம் வந்துவிட்டால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
    என்னுடைய பதிவின் சைடுபாரில் பாருங்கள் அதை எழுதி வைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  39. /////cooljosh said...
    Sir... what about the prediction of the upa grahas(mandhi,dhuma kethu, parivaedan, kalan...)? did this

    upagrahas will also affect the houses which they occupied?
    Regards
    Vinodh.K/////

    உப கிரகங்களைப் பற்றிய பாடங்கள் பின் பதிவுகளில் வரும் நண்பரே!

    ReplyDelete
  40. /////நாமக்கல் சிபி said...
    //நானும் குப்புற படுத்து யோசித்தேன், மல்லாக்க படுத்து யோசித்தேன்... ம்ம்ம்ஹ்ம் பிடிபடவே இல்லை)
    //
    நமக்கு போட்டியா நிறைய பேர் கெளம்பீட்டாங்க போல!////

    உங்களுக்கு யாரும் போட்டியில்லை! போட்டி போடவும் முடியாது!:-)))

    ReplyDelete
  41. //////நாமக்கல் சிபி said...
    //அய்யா எனக்கு மூன்று கிரகங்கள் (குரு, சனி, சுக்கிரன்) உள்ளன.நான் மகிழ்ச்சியாக உள்ளேன். தலைக்கு

    மேல வெள்ளம் போனதுக்கு அப்புறம் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்றுதான்.
    என்ன சொல்றீங்க அய்யா? // :)
    இதுக்கு ஒரு ஸ்மைலியை போட்டுட்டு "நான் வேறென்ன சொல்ல முடியும்"னு சொல்லுவார் பாருங்க!////

    இல்லை பதில் சொல்லியிருக்கிறேன். பாருங்கள்!

    ReplyDelete
  42. ஸ்ரீதர்கண்ணன் said... :)
    இதுக்கு ஒரு ஸ்மைலியை போட்டுட்டு "நான் வேறென்ன சொல்ல முடியும்"னு சொல்லுவார் பாருங்க!
    Sibi,
    You are very funny :)////

    always!

    ReplyDelete
  43. //////mannar said...
    In my relative's horoscope there are 5 planets and it was told that it is called SANYASI yogam.and getting

    married would be difficult.kindly explain about sanyasi yogam

    ஐந்து கிரகங்கள் ஒரே இடத்தில் இருப்பது கிரக யுத்தம் எனப்படும். அது பற்றிய பாடம் பின் பதிவுகளில் வரும்!

    ReplyDelete
  44. ////mannar said...
    sorry sir it is 5 planets in 12th house.////

    திருத்திவிட்டேன்

    ReplyDelete
  45. ////அணுயோகி said...
    சிபி அண்ணே ! நீங்க சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்.. உங்களுடன் போட்டியிட

    முடியுமா...... :‍-)//////

    போட்டி எதற்கு? எல்லாம் நம் வகுப்பறை மாணவர்கள்தானே!
    போட்டி போட்டு மதிப்பெண் வாங்கும்படி ஒரு பரிட்சை வைக்கட்டுமா?
    தயாரா?

    ReplyDelete
  46. /////அருப்புக்கோட்டை பாஸ்கர் said..
    உள்ளேன் அய்யா !/////

    வருகைப்பதிவு மட்டும்தானா?

    ReplyDelete
  47. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //7. சனி வாழ்க்கை மங்கி இருக்கும். பிரகாசமாக இருக்காது.
    பணம் மொத்தத்தையும் ஏதாவது ஒரு வழியில் இழப்பான்.
    அனேக எதிரிகள் இருப்பார்கள் அல்லது உண்டாவார்கள்
    அல்லது ஏற்படுத்திக்கொள்வான்
    வியாபாரம் செய்பவனாக இருந்தால் அதன் மூலம் பொருளை
    இழப்பான்.
    மறைமுகமாக பல பாவங்களைச் செய்பவனாக இருப்பான்
    அவநம்பிக்கை உடையவராக இருப்பான்.
    ஒருவனையும் நம்பமாட்டான்.
    சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு உடையவராக
    இருப்பார்கள்.//
    முருகா.. எங்கடா இருக்க../////

    உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறான் அவன்!

    ReplyDelete
  48. /////நாமக்கல் சிபி said...
    //முருகா.. எங்கடா இருக்க..//
    பிறர் படும் துன்பம் கண்டு தவிக்கிறதா உம் மனது?
    அழுபவரைக் காண்கையில் உமக்கும் அழுகை வருகிறதா?
    பட்டினிச் சாவுகள் பற்றிக் கேட்கையிலே பதறுகிறதா உம் மனம்?
    மேற்கண்ட கேள்விகளுக்கு உமது பதில் ஆம் எனில் நான் உனக்குள்ளேயே இருக்கிறேன்!/////

    கரெக்ட்!

    ReplyDelete
  49. நாமக்கல் சிபி said...
    உன்னை உணர
    உன்னால் முடியுமெனில்
    இறைவனை உணரவும்
    உன்னால் முடியும்!
    துன்புறும் உயிர்கண்டு
    துடிக்குமுன் மனதெனில்
    உண்மையை உணர்வாய்!
    உனக்குள் கடவுள்!
    வறியவர்பசி கண்டு
    வதைபடும் உளமெனில்
    நிஜமதை அறிவாய்!
    நீதான் கடவுள்!
    பிற உயிர் அழுதிட
    நீயும் அழுதால்
    பிரிவினை இல்லை
    உனக்கும் இறைக்கும்!
    கருணையும், அன்பும்
    கலந்திட்ட இதயம்
    அதுதான் இறைவன்!
    அதுதான் கடவுள்!
    -சுவாமி பித்தானந்தா./////

    வரிகளில் முத்தானந்தா அல்லவா தெரிகின்றார்!

    ReplyDelete
  50. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ///நாமக்கல் சிபி said...
    //முருகா.. எங்கடா இருக்க..//
    பிறர் படும் துன்பம் கண்டு தவிக்கிறதா உம் மனது?
    அழுபவரைக் காண்கையில் உமக்கும் அழுகை வருகிறதா?
    பட்டினிச் சாவுகள் பற்றிக் கேட்கையிலே பதறுகிறதா உம் மனம்?
    மேற்கண்ட கேள்விகளுக்கு உமது பதில் ஆம் எனில் நான் உனக்குள்ளேயே இருக்கிறேன்!///
    எனக்குள்ளேயே இருந்து கொண்டு ஏனப்பா கஷ்டப்பட வேண்டும்.. வெளியில் வந்தாலாவது நான் நானாக

    இருப்பேனே..
    12-ல் சனி மட்டுமல்ல பக்கத்திலேயே திருவாளர் மாந்தியும் அல்லவா வீற்றிருக்கிறார்கள்.
    ஓ.. அதனால்தான் எனக்குள்ளேயே இருக்கிறாயா..
    நல்லா இரு../////

    யார் இருந்தால் என்ன? அனைவருக்கும் 337 தான் மதிப்பெண். அதை அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள் தமிழரே!

    ReplyDelete
  51. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நாமக்கல் சிபி said...
    உன்னை உணர
    உன்னால் முடியுமெனில்
    இறைவனை உணரவும்
    உன்னால் முடியும்!
    துன்புறும் உயிர்கண்டு
    துடிக்குமுன் மனதெனில்
    உண்மையை உணர்வாய்!
    உனக்குள் கடவுள்!
    வறியவர்பசி கண்டு
    வதைபடும் உளமெனில்
    நிஜமதை அறிவாய்!
    நீதான் கடவுள்!
    பிற உயிர் அழுதிட
    நீயும் அழுதால்
    பிரிவினை இல்லை
    உனக்கும் இறைக்கும்!
    கருணையும், அன்பும்
    கலந்திட்ட இதயம்
    அதுதான் இறைவன்!
    அதுதான் கடவுள்!
    -சுவாமி பித்தானந்தா.//
    சுவாமி.. கால் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்..
    முருகனை கண்டு கொண்டேன்..////

    கந்தனை வணங்கினோர் கைவிடப்படார்!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  52. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ///நாமக்கல் சிபி said...
    //அய்யா எனக்கு மூன்று கிரகங்கள் (குரு, சனி, சுக்கிரன்) உள்ளன.நான் மகிழ்ச்சியாக உள்ளேன். தலைக்கு

    மேல வெள்ளம் போனதுக்கு அப்புறம் சாண் என்ன முழம் என்ன எல்லாம் ஒன்றுதான். என்ன சொல்றீங்க

    அய்யா?//
    :)இதுக்கு ஒரு ஸ்மைலியை போட்டுட்டு "நான் வேறென்ன சொல்ல முடியும்"னு சொல்லுவார் பாருங்க!///
    யோவ் முருகா.. அடங்க மாட்டியா நீயி..
    வாத்தியாரையே கலாய்க்குறியா..
    கேட்க ஆளில்லைன்னு நினைப்பா.
    ஒரு பதிவு விடாம வந்து 5, 6 கமெண்ட் போட்டு உசுப்பி விடுறியே முருகா.. அப்பா யாரு.. அம்பானி

    தோஸ்த்தா.. சோத்துக்குக் கவலையில்லை போலிருக்கு.. நமக்கு ஆயிரம் இருக்கு..
    ம்.. பெருமூச்சு ஒண்ணு விட்டேன்.. அதான் கேப்பு./////

    முருகனே உங்களுக்கு தோஸ்த்தாக இருக்கும்போது, அம்பாணிகளை எதற்கு நினைக்கிறீர்கள் உனாதானா?

    ReplyDelete
  53. /////DevikaArul said...
    Hello Sir ,
    Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as

    first house. If that is correct , what should be taken seriously ?
    Jathagam or kolcharam..?
    Kindly explain//////
    என்னுடைய முன் பதிவுகளை எல்லாம் படியுங்கள் சகோதரி!
    லக்கினம் தான் முதன்மையானது. சந்திர ராசியை சில விஷயங்களுக்கு சேர்த்துக்கொள்வதும் உண்டு.
    கோச்சாரம் என்பது தனி (That is present day planetary position)
    லக்கினத்தை வைத்துத்தான் ஜாதகத்தின் வீடுகளையும் அவற்றின் வலிமையையும் பார்ப்பது முறை!

    ReplyDelete
  54. /////DevikaArul said...
    Dear Sir ,second doubt :
    If Kolchara palan of one planet depends on that planet's position in the natal chart , then what is the whole

    point of publishing and reading 'Podhu kolchara palangal' for every guru peyarchi and sani peyarchi ?
    (thamil thattachchum menporul ennidaththil illai :( aagaiyaal aangilathil thattachchugiraen)/////

    குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சிப் பலன்கள் ஜாதகனுக்கு ஜாதகன் வேறுபடும். ஜாதகத்தின் வலிமை, நடப்பு

    தசாபுத்தி ஆகியவற்றை வைத்து வேறுபடும். விவரம் முன் பதிவுகளில் உண்டு.படித்துப் பாருங்கள்!
    ------------
    தமிழில் தட்டச்சும் மென்பொருளுக்கான சுட்டிகள் தமிழ்மணத்தில் முகப்பில் இருக்கின்றன. எல்லாம் இலவசம்
    தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  55. ////thenkasi said...
    வகுப்பு மீண்டும் கலகலப்பு ஆகிவிட்டது./////

    நான் எப்போதுமே கலகலப்பான ஆள்தான்!
    உங்களுக்கு கலகலப்பு வந்ததைப்போல அனைவருக்கும் வந்தால் போதும்!

    ReplyDelete
  56. ////அமர பாரதி said...
    அய்யா,
    எனக்கு 12ல் செவ்வாய், 7ல் சனி.
    //அடிக்கடி வஞ்சிக்கப்படுபவனாக இருப்பான்// உண்மைதான். அதுவும் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களாலேயே. மற்றது எனக்கு பொருந்தவில்லையே அய்யா?////

    இருக்கும் விதிகள் அத்தனையும் ஒரு ஜாதகத்திற்கானது அல்ல!
    கொடுக்கப்பட்டவற்றில் ஒன்று அல்லது இரண்டுதான் பொருந்தும்

    ReplyDelete
  57. Kethu in the 12th house is considered as end of birth cycle by some authors. In fact many Mahans have kedu in the 12th house. What is your opinion?

    ReplyDelete
  58. ///புருனோ Bruno said...
    உள்ளேன் ஐயா///

    வாருங்கள் டாக்டர்! உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  59. /////krish said...
    Kethu in the 12th house is considered as end of birth cycle by some authors. In fact many Mahans have kedu in the 12th house. What is your opinion?/////

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பார்கள்

    ReplyDelete
  60. //Mohandoss: யோவ்
    இதைக்கேக்கவா
    12 மணிக்கு

    என்னவோ நல்லாயிருந்தா சரி//

    ஒரு வார விடுப்பில் ஊருக்குப் போயிருக்கிறார்!

    லீவு சொல்லச் சொன்னார்!

    ReplyDelete
  61. //Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house//

    எனக்கும் இதே சந்தேகம்தான்!

    அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்றெல்லாம் சொல்லும்போது ராசி ஸ்தானத்தை வைத்துத்தான் சொல்கிறார்கள்!

    அதே போல இப்பொது குருபெயர்ச்சி பலன்கள் புத்தகம் வாங்கியபோதும் ராசி ஸ்தானத்தை மையப் படுத்தியே குரு பெயர்கிற இடத்தை வைத்து சொல்லி இருக்கிறார்கள்!

    ReplyDelete
  62. //இந்தப் பக்குவம் வந்துவிட்டால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்//

    இந்தப் பக்குவத்தை வரவைப்பதில் 12ம் இடத்திற்குப் பெரும்பங்கு உண்டு அல்லவா?

    ReplyDelete
  63. //அதனால்தான் எனக்குள்ளேயே இருக்கிறாயா//

    குன்றுகள் மட்டுமன்று!
    நல்லிதயங்கள் யாவும்
    நாமிருக்கும் இடமே!

    ReplyDelete
  64. //அதனால்தான் எனக்குள்ளேயே இருக்கிறாயா//

    மண்டு! மண்டு!
    குன்றுகள் மட்டுமன்று!
    நல்லிதயங்கள் யாவும்
    நாமிருக்கும் இடமே!

    ReplyDelete
  65. //முருகா.. எங்கடா இருக்க..//

    கூப்பிட்டா வந்துடுவம்ல!

    ReplyDelete
  66. //சுவாமி.. கால் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்..
    //

    உண்மைத் தமிழா!

    எல்லோருக்குமே கால்கள் கீழ்ப்பக்கமாகத்தான்(கீழ்ப்பாக்கம அல்ல) படைக்கப் பட்டிருக்கின்றன!

    ReplyDelete
  67. //யோவ் முருகா.. அடங்க மாட்டியா நீயி..

    வாத்தியாரையே கலாய்க்குறியா..

    கேட்க ஆளில்லைன்னு நினைப்பா..//

    ஔவைப் பாட்டி, பிரம்மா என ஒருவரையும் விட்டு வைக்காது கலாய்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  68. //அப்பா யாரு.. அம்பானி

    தோஸ்த்தா..//

    அம்பானியை(யும்) படைத்தவர் எம் அப்பாவுக்கு தோஸ்த்துதான்!

    //
    சோத்துக்குக் கவலையில்லை போலிருக்கு.. நமக்கு ஆயிரம் இருக்கு..
    //

    விரைவில் உமக்கான வழிகள் பிறக்கும்! அதுவரை என்னோடு பஞ்சாமிர்தமும், திணை மாவும் பங்கிட்டு உண்ணலாம்!

    ReplyDelete
  69. //நான் எப்போதுமே கலகலப்பான ஆள்தான்!
    //

    அதை விரும்பித்தான் நாமும் இங்கு நுழைந்திருக்கிறோம்!

    ReplyDelete
  70. உண்மைத் தமிழரே!
    எமது புகைப் படம் ஒன்றை உம்மிடம் கேட்டிருந்தேன்!

    இதுவரை எமக்கு வந்து சேரவில்லையே! நினைவிருக்கிறதா!

    ReplyDelete
  71. ஹைய்யா! 75 நான்தான் அடிச்சனா?

    ReplyDelete
  72. //எல்லோருக்குமே கால்கள் கீழ்ப்பக்கமாகத்தான்(கீழ்ப்பாக்கம அல்ல) படைக்கப் பட்டிருக்கின்றன!
    //

    நீர் கீழ்ப்பாக்கம் நோக்கிக் கூட விழுந்து வணங்கலாம்! சுவாமி பித்தானந்தாவின் ஆசிரமம் அங்கேதானே இருக்கிறது!

    ReplyDelete
  73. //நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பார்கள்
    //

    அருணகிரியாரின் ஜாதகம் தங்களிடம் இருக்கிறதா?

    12ம் வீட்டின் பலன்களுக்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!

    முத்தித்திரு பத்திருத் திருநகை என்று பாடி முக்தியை அடைந்தவர் அல்லவா?

    ReplyDelete
  74. Sir one fellow confused me that if mandhi in 12th house then there is no rebirth for the particular person...i waiting for your reply sir? pls clarify my doubts

    Regards
    Vinodh.K

    ReplyDelete
  75. நாமக்கல் சிபி said...
    //Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house//
    எனக்கும் இதே சந்தேகம்தான்!
    அஷ்டமச் சனி, ஏழரைச் சனி என்றெல்லாம் சொல்லும்போது ராசி ஸ்தானத்தை வைத்துத்தான் சொல்கிறார்கள்!
    அதே போல இப்பொது குருபெயர்ச்சி பலன்கள் புத்தகம் வாங்கியபோதும் ராசி ஸ்தானத்தை மையப் படுத்தியே குரு பெயர்கிற இடத்தை வைத்து சொல்லி இருக்கிறார்கள்!/////

    கோச்சாரத்திற்கு ராசியைவைத்துத்தான் பலன் சொல்வார்கள். அதனால் லக்கினம் பலவீனப்பட்டுவிடுமா என்ன?

    ReplyDelete
  76. நாமக்கல் சிபி said...
    //இந்தப் பக்குவம் வந்துவிட்டால் எதற்கும் கவலைப்பட வேண்டாம்//
    இந்தப் பக்குவத்தை வரவைப்பதில் 12ம் இடத்திற்குப் பெரும்பங்கு உண்டு அல்லவா?

    ஆமாம், ஆமாம், ஆமாம்! அதில் சந்தேகமில்லை!

    ReplyDelete
  77. ////யாமிருக்க பயமேன் said...
    //நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பார்கள்
    // அருணகிரியாரின் ஜாதகம் தங்களிடம் இருக்கிறதா?
    12ம் வீட்டின் பலன்களுக்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!
    முத்தித்திரு பத்திருத் திருநகை என்று பாடி முக்தியை அடைந்தவர் அல்லவா?/////

    முத்தித்திரு அல்ல முத்தைத்திரு!
    அருணகியார் ஜாதகம் என்னிடம் இல்லை!

    சிபி, உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இடுங்கள். யாமிருக்கப் பய்மேன் என்று பயமுறுத்த வேண்டாம்!:-)))

    ReplyDelete
  78. /////cooljosh said...
    Sir one fellow confused me that if mandhi in 12th house then there is no rebirth for the particular person...i waiting for your reply sir? pls clarify my doubts
    Regards
    Vinodh.K/////

    இல்லை. தவறான தகவல்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com