கங்கை பிரவாகம் எடுத்து இரண்டு பக்கக் கரைகளையும் தொட்டவாறு
அழகாக ஓடிக்கொண்டிருந்தது.
ரம்மியமாக இருந்த வடது பக்கக் கரையில் பரமசிவன் தன் தேவியுடன்
பேசிவாறு நடந்து கொண்டிருந்தார். நதியின் அழகில் மயங்கிய பார்வதி
தேவி, தன் அன்புக் கணவரிடம் அதைப் பற்றிப் பேசிவாறு நடந்தார்.
"நாதா, இந்த நதியின் சிறப்பு என்ன?"
"உலகில் புண்ணியம் வாய்ந்த நதி இந்த நதிதான். அதனாலதான் இந்த
நதிக்கு என் சிரசில் இடம் கொடுத்திருக்கிறேன். இந்த நதியில் குளித்தால்
செய்த பாவங்கள் போகும்"
"பாவங்கள் போனால் என்ன ஆகும்?" என்று தேவி ஒன்றும் அறியாதவர்
போலக் கேட்க, சிவனார் தொடர்ந்தார்.
"பாவங்கள் நீங்கப் பெற்றவன் சொர்க்கத்திற்கு வருவான்"
"அப்படியென்றால், இந்த நதியில் முங்கிக் குளித்தவர்கள் அத்தனை பேரும்
சொர்க்கத்திற்கு வருவார்களா?"
"அத்தனை பேரும் வரமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்"
"முரண்பாடாக இருக்கிறதே நாதா! இதில் குளித்தால் பாவம் போகும் என்றால்.
குளித்த அத்தனை பேருக்கும் பாவங்கள் போக வேண்டும். போன அத்தனை
பேர்களும் சொர்க்கத்திற்கு வரவேண்டுமல்லவா? சிலர் என்பது ஏன்? சற்று
விளக்கமாகச் சொல்லுங்களேன்"
"ஆகா, விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு நாம் இருவரும் ஒரு சிறு நாடகம்
நடத்த வேண்டும். ஒரு நொடியில் நான் வயோதிகம் அடைந்த தள்ளாத
முதியவனாகவும், நீ அந்த முதியவரின் மனைவியாகவும் உருமாற வேண்டும்.
மாறியவுடன் நாம் இருவரும் அடுத்த கணம் காசி நகரில் இருப்போம். அங்கே
நான் இறந்ததுபோல பேச்சு மூச்சில்லாமல் கிடப்பேன். என்னை மடியில் கிடத்திக்
கொண்டு நீ அழுது குரல் கொடுக்க வேண்டும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்!
நாடகத்தின் முடிவில் நீ கேட்ட கேள்விக்குத் தகுந்த விடை கிடைக்கும்"
"அப்படியே ஆகட்டும் நாதா!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசி நகரம். கங்கைக் கரையில் பிரதான இடம். படித்துறையின் அருகே
மக்கள் கூடும் இடம்
கிழவர் வேடத்தில் இருந்த சிவபெருமான் இறந்ததுபோலக் கிடந்தார்.
தேவியார் அவரை மடியில் கிடத்திக் கொண்டு குரல் கொடுத்து அழுது
கண்ணீர் விட கூட்டம் சேர்ந்து விட்டது.
கூட்டத்தினர் கேட்க, பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் விவரித்தார்.
"என் கணவர் பெரிய ரிஷி. சுவாமி தரிசனம் பண்ண வந்த இடத்தில்
இப்படி இறந்து விட்டார். அவருக்கு இறுதிக் காரியம் செய்ய வேண்டும்!"
"அதற்கு ஏன் விசனம்? ஆளுக்கு ஒரு காசு தருகிறோம். இங்கே
நிற்பவர்களில் பாதிப்பேர்கள் கொடுத்தால் கூட ஐம்பதுகாசு சேர்ந்து
விடும்.கவலைப் படாதீர்கள் தாயே!" என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்த
மற்றவர்களும் ஆமாம் என்று குரல் கொடுத்தார்கள்.
"பிரச்சினை பணமல்ல :கொள்ளி வைப்பது யார்?" என்று பாட்டி வேடத்தில்
இருந்த தேவியார் தொடர்ந்து கேட்க, கூட்டத்தில் இருந்தவர்களில் நான்கு
அல்லது ஐந்து பேர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தயாரென்றார்கள்
உடனே பாட்டி சொன்னார்," இவர் பெரிய ரிஷி. இவருக்குக் கொள்ளி
வைப்பவர் பாவம் எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டும். ஆகவே
உங்களில் யார் பாவம் எதுவும் செய்யாதவரோ அவரே முன் வருக!"
உடனே கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் சொன்னான்,"அதெப்படித்
தாயே, மனிதர்களில் பாவம் செய்யாத மனிதன் எங்கே இருப்பான்?
தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான்.
ஒரு எறும்பைத் தெரியாமல் மிதித்து, அது இறந்து போயிருந்தாலும் அது
பாவம்தானே? அதனால் பாவம் செய்திருக்காத மனிதன் கிடைப்பது
அரிதம்மா!"
அடுத்து ஒருவன் கேட்டான்,"பாவம் செய்திருப்பதை அறியாமல் அல்லது
உணராமல் ஒருவன் உன் கணவருக்குக் கொள்ளி வைத்தால் என்ன ஆகும்?"
அதற்குத் தேவி பதில் சொன்னார்:
"அவன் தலை வெடித்துவிடும்!"
அவ்வளவுதான் அங்கே இருந்தவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஆனால்
நேரம் ஆக நேரமாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. காலை
பதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் மதியம் மூன்று மணி வரைக்கும் நீடித்தது
மூன்று மணிக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் அங்கே
வந்து சேர்ந்தான். கூட்டத்தினரிமிருந்து விவரத்தை அறிந்து கொண்டவன்
தேவியின் அருகில் வந்து சொன்னான்:
"பாட்டி, கவலையை விடுங்கள். நான் வைக்கிறேன் கொள்ளி!"
"நிபந்தனை தெரியுமா உனக்கு?"
"பாவம் எதுவும் செய்திருக்கக்கூடாது.அவ்வளவுதானே? அறியாமல் பாவம்
செய்திருக்கலாம். ஆனால் அதைப்போக்குவதற்கு வழி இருக்கிறது "
"எப்படி?"
"இந்தக் கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும் என்று என் தாய்
சொல்லியிருக்கிறாள். என் தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்தக் கங்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னைப்படைத்த ஆண்டவன்
மீது நம்பிக்கை இருக்கிறது! இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்" என்று
சொன்னவன், "ஓம் நமச்சிவாயா!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தவாறு
கங்கையில் குதித்தான்.
குதித்தவன் மூன்று முறைகள் முங்கி விட்டு எழுந்து கரைக்கு ஓடிவந்தான்.
அங்கே கரையில் யாரும் இல்லை!
=====================================
கைலாயத்தில் சிவபெருமான் தேவியிடம் சொன்னார்."இவன்தான் வருவான்!
எவன் ஒருவன் நம்பிக்கையுடன் குளிக்கிறானோ அவன்தான் வருவான்.
மற்றவர்கள் வரமாட்டார்கள்!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே அடுத்தமுறை, கங்கை என்றில்லை, எந்த நதியில் சென்று
நீராடினாலும், செய்த பாவங்கள் நம்மை விட்டுப்போக இறை நம்பிக்ககை
யுடன் அதில் குளியுங்கள்.
இறை நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக்காக்கும்.
வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி
கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப
இந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.
கையில் ரேசன் கார்டு அல்லது அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம்
அல்லது விசா. மனதில் கவலை. மனைவியிடம் வாங்கிய திட்டு.
உடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோ
அல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோ
ஜென்மம் ஜென்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!
உய்வே கிடையாது.
வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
அருமை அய்யா
ReplyDeleteஐயா, அருமையான கதை!
ReplyDelete//வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!//
ReplyDeleteஉருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
குழு: கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா
குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா
super sir! Good moral story.
ReplyDelete-Shankar
உள்ளேன் ஐயா!
ReplyDeleteமுருகனருளில் போடுவதற்கு நல்ல பாடலை இங்கே கொடுத்த தென்காசி அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteதீபாவளிக்கு கங்கா ஸ்நானம் பற்றிய அருமையான பதிவு!
ReplyDeleteஆனா குளிக்கணுமா?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்//
ReplyDeleteஹைய்யா! புதன் கிழமை வரை வகுப்பு லீவேய்!
//நாமக்கல் சிபி said...
ReplyDeleteமுருகனருளில் போடுவதற்கு நல்ல பாடலை இங்கே கொடுத்த தென்காசி அவர்களுக்கு நன்றி!//
நன்றி. முருகன் அருள் பதிவு பக்தி ரசம் சொட்டுகிறது.
உங்களுக்கு இறை அருள் பரிபூரணமாய்
கிடைத்திட ,அந்த தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் துணை யுடன்
வணங்கும்
.
அருள்மிகு சுப்பையா வாத்தியார் அவ்ர்களுக்கும்
வகுப்பறை மாணவர்களுக்கும்( சிறப்பு மாணவர்கள்,சட்டாம்பிள்ளை உட்பட)
பின்னூட்ட அன்பர்களுக்கும்,ஆசிரியருடன் ஆரோக்கிய எதிர் வாதம் செய்யும் அன்பர்களுக்கும்,மாற்றுக் கருத்தைகூட் பண்புடன் தரும் பண்பாளர்களுக்கும்-
பொதிகை மலைச்சாரலின் குழுமையான மனதை இதமாய் வருடிச் செல்லும்
தென்றலின் "தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்"
//வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி
ReplyDeleteகேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப இந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்//
ஐயா இதுதான் தீபாவளி சூப்பர் பஞ்ச்...
நன்றி ஐயா...தங்களுக்கும் எனது தீபாவளி நமஸ்காரம்... வாழ்த்த வேண்டியது தாங்கள்தான்
//////ஸ்ரீதர்கண்ணன் said...
ReplyDeleteஅருமை அய்யா////
நன்றி ஸ்ரீதர்கண்ணன்!
//////திவா said...
ReplyDeleteஐயா, அருமையான கதை!////
நன்றி திவா!
/////thenkasi said...
ReplyDelete//வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!//
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
குழு: கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா
குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா////
பாட்டைப்போட்டுக் கலக்கிவிட்டீர்கள் தென்காசி! நன்றி!
////hotcat said...
ReplyDeletesuper sir! Good moral story.
-Shankar////
நன்றி சங்கர்!
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!/////
நானும் உள்ளேன் நண்பரே!
//////நாமக்கல் சிபி said...
ReplyDeleteதீபாவளிக்கு கங்கா ஸ்நானம் பற்றிய அருமையான பதிவு!/////
அருமை என்று மனமாரச் சொன்னமைக்கு நன்றி!
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஆனா குளிக்கணுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////
தங்கமணியைக் கேட்டுச் செய்யவும்!
//////நாமக்கல் சிபி said..
ReplyDelete//அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்//
ஹைய்யா! புதன் கிழமை வரை வகுப்பு லீவேய்!/////
ஆமாம், கணினியை மூடி வைத்து விட்டு, விடுபட்ட வேலைகளைப் பார்க்கலாம்
////thenkasi said...
ReplyDelete//நாமக்கல் சிபி said...
முருகனருளில் போடுவதற்கு நல்ல பாடலை இங்கே கொடுத்த தென்காசி அவர்களுக்கு நன்றி!//
நன்றி. முருகன் அருள் பதிவு பக்தி ரசம் சொட்டுகிறது.
உங்களுக்கு இறை அருள் பரிபூரணமாய்
கிடைத்திட ,அந்த தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் துணை யுடன்
வணங்கும் .
அருள்மிகு சுப்பையா வாத்தியார் அவ்ர்களுக்கும்
வகுப்பறை மாணவர்களுக்கும்( சிறப்பு மாணவர்கள்,சட்டாம்பிள்ளை உட்பட)
பின்னூட்ட அன்பர்களுக்கும்,ஆசிரியருடன் ஆரோக்கிய எதிர் வாதம் செய்யும் அன்பர்களுக்கும்,மாற்றுக் கருத்தைகூட் பண்புடன் தரும் பண்பாளர்களுக்கும்-
பொதிகை மலைச்சாரலின் குழுமையான மனதை இதமாய் வருடிச் செல்லும்
தென்றலின் "தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்"/////
நன்றி தென்காசியாரே!
/////கூடுதுறை said...
ReplyDelete//வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி
கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப இந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்//
ஐயா இதுதான் தீபாவளி சூப்பர் பஞ்ச்...
நன்றி ஐயா...தங்களுக்கும் எனது தீபாவளி நமஸ்காரம்... வாழ்த்த வேண்டியது தாங்கள்தான்//////
பஞ்ச்' எல்லாம் கதாநாயகர்கள் சொல்வது! நான் எளியவன். மனதில் தோன்றியதைச் சொன்னேன் கூடுதுறையாரே!
வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!
ReplyDeleteநானும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன் !
I have been following the posting for a few months !!
ReplyDeleteThe astro-posts are good and very informative and easy to understand ..
I am proud to say that i have also become your student..
Learning the basics now and hopefully will have good knowledge here,,
Happy Deepavali Sir !!
Regards,
Dhamodharan
//உடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோ
ReplyDeleteஅல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோ
ஜென்மம் ஜென்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!
//
போன ஜென்மத்தில் இந்த கதையை யாரோ உங்களுக்கு கூறிய போது நீங்கள் கேட்கலையாமே :)
/////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteவாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!
நானும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன் !/////
ஆகா, நன்றாக உரக்ககூவுங்கள். திருச்சுளியில் இருக்கும் பூமிநாதருக்கும் அது கேட்கவேண்டும்!
Dhamodharan said...
ReplyDeleteI have been following the posting for a few months !!
The astro-posts are good and very informative and easy to understand ..
I am proud to say that i have also become your student..
Learning the basics now and hopefully will have good knowledge here,,
Happy Deepavali Sir !!
Regards,
Dhamodharan////
உங்கள் வரவு நல்வரவாகுக நண்பரே!
/////கோவி.கண்ணன் said...
ReplyDelete//உடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோ
அல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோ
ஜென்மம் ஜென்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! //
போன ஜென்மத்தில் இந்த கதையை யாரோ உங்களுக்கு கூறிய போது நீங்கள் கேட்கலையாமே :)////
ஆமாம். அந்தப் பாவத்தைத்தான் இப்போது பதிவுகள் எழுதிக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த ஜென்மத்தில் வேண்டிய அளவு இறையுணர்வு கிடைத்துவிட்டது. தற்சமயம் மற்றவர்களுக்கும் அது கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் (உங்களுக்கும் சேர்த்துத்தான் - இல்லை என்றால் அடுத்த பிறவியில் நீங்கள் சீனாவில் பிறந்து, பூனைக் கறி, பாம்புக்கறியெல்லாம் சாப்பிட வேண்டியதிருக்கும்:-))) ]
Deepavali Vazthukal ayya...
ReplyDeleteDeepavali Special Video
ReplyDeleteQuick Gun Murugan
http://www.youtube.com/watch?v=OaoMDl7_w2s
This comment has been removed by the author.
ReplyDeletehaloo sir,
ReplyDeleteyes, I already heard this story.anyhow, nice to read once again. thanks for sharing at this time. HAPPY DIWALI TO U AND YOUR FAMILY.
//////Prabhu said...
ReplyDeleteDeepavali Vazthukal ayya...////
நன்றி பிரபு!
//////Dhamodharan said...
ReplyDeleteDeepavali Special Video
Quick Gun Murugan
http://www.youtube.com/watch?v=OaoMDl7_w2s/////
வீடியோ பார்த்தேன். ஒன்றும் புரியவில்லையே!
குயிக் கன் முருகன் என்ற தலைப்பு எதற்கு?
//////Sumathi. said...
ReplyDeletehaloo sir,
yes, I already heard this story.anyhow, nice to read once again. thanks for sharing at this time. HAPPY DIWALI TO U AND YOUR FAMILY./////
நன்றி சகோதரி!
Quick gun murugan - adhu mtv channel-la vandha program.
ReplyDeleteindha video quick gun murugan padathoda trailer . hindi padam which taked the theme about vegetarianism. expected to be released this month
ஐயா உள்ளிட்ட சகாக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐயா,நம்பிக்கை பற்றிய விளக்கம் சிறப்பாக இருக்கிறது.
நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்பதற்கு விளக்கமாகவும் அமைந்திருக்கிறது.
அன்பன்
தியாகராஜன்
Wonderful story indeed.
ReplyDeleteKeep posting such moral stories
Diwali Greetings and Best Wishes
Sridhar S
/////Dhamodharan said...
ReplyDeleteQuick gun murugan - adhu mtv channel-la vandha program.
indha video quick gun murugan padathoda trailer . hindi padam which taked the theme about vegetarianism. expected to be released this month////
Thanks for the information!
//////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா உள்ளிட்ட சகாக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ஐயா,நம்பிக்கை பற்றிய விளக்கம் சிறப்பாக இருக்கிறது.
நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்பதற்கு விளக்கமாகவும் அமைந்திருக்கிறது.
அன்பன்
தியாகராஜன்/////
நன்றி தியாகராஜன்!
/////Sridhar said...
ReplyDeleteWonderful story indeed.
Keep posting such moral stories
Diwali Greetings and Best Wishes
Sridhar S/////
நன்றி நண்பரே!
வழக்கம் போலவே கதை நன்றாக இருக்கிறது, ஐயா!
ReplyDeleteஉங்களுக்கும், நம் வகுப்பு அறை மாணவ கண்மணிகளுக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் தமாம் பாலா
திரு சுப்பையா அவர்களுக்கு,
ReplyDeleteதீபாவளிக்காக சொன்ன கங்கை கதை நன்றாக இருந்தது.
கதையின் நோக்கம் “நம்பிக்கையுடன் இருங்கள்” என்பதால் அதில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.
1) கங்கைகரையில் ஒரு நாளுக்கு சராசரியாக 3000 பிணங்கள் தகனம் செய்ய வருகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் வாரிசோ அல்லது யாரும் கொள்ளி வைக்க முடியாது. வெட்டியான் மட்டுமே கொள்ளிவைப்பான்.
2) ரிஷிகளை புதைக்க மட்டுமே செய்வார்கள். ரிஷிகளை எரிக்க கூடாது.
காசி மாநகரை பற்றி குறிப்பிடும் பொழுது ஒன்று சொல்ல வேண்டும். அங்கு உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் (நகரத்தார்) செய்யும் பணி அசாத்தியமானது.
அருமையான கேள்வி கேட்ட கோவி.கண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இனி அவரை கேள்வி.கண்ணன் என கூப்பிடலாம் :)
அருமை வாத்தியாரே அருமை..
ReplyDeleteசிறந்ததொரு பாடம்.. உண்மையான, கருத்தாழமிக்க விளக்கம்..
புரிந்து கொண்டவர்கள் முருகனடி சேரட்டும்.. இல்லையெனில் உழலட்டும்..
வாத்தியாருக்கும், மாணவர் சிகரங்களுக்கும், வாத்தியாரின் ரசிகர்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
///////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteவழக்கம் போலவே கதை நன்றாக இருக்கிறது, ஐயா!
உங்களுக்கும், நம் வகுப்பு அறை மாணவ கண்மணிகளுக்கும் என் உளம்
கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் தமாம் பாலா////
நன்றி பாலா!
//////ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteதிரு சுப்பையா அவர்களுக்கு,
தீபாவளிக்காக சொன்ன கங்கை கதை நன்றாக இருந்தது.
கதையின் நோக்கம் “நம்பிக்கையுடன் இருங்கள்” என்பதால் அதில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.
1) கங்கைகரையில் ஒரு நாளுக்கு சராசரியாக 3000 பிணங்கள் தகனம் செய்ய வருகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் வாரிசோ அல்லது யாரும் கொள்ளி வைக்க முடியாது. வெட்டியான் மட்டுமே கொள்ளிவைப்பான்.
2) ரிஷிகளை புதைக்க மட்டுமே செய்வார்கள். ரிஷிகளை எரிக்கக் கூடாது.///////
காசி மாநகரை பற்றி குறிப்பிடும் பொழுது ஒன்று சொல்ல வேண்டும். அங்கு உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் (நகரத்தார்) செய்யும் பணி அசாத்தியமானது.
அருமையான கேள்வி கேட்ட கோவி.கண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இனி அவரை கேள்வி.கண்ணன் என கூப்பிடலாம் :)/////
பாமர மக்களில் எத்தனை பேருக்குக் கங்கையின் அருமை தெரிந்திருக்கிறது என்பதைச் சோதித்துப்பார்க்க பரமன் நடத்திய திருவிளையாடல்களில் ஒன்று இது! முன்பு ஒருமுறை கேட்ட இக்கதை அப்படித்தான் என் மனதில் பதிவாகியுள்ளது. அதை அப்படியே எனது நடையில் விவரித்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கு நன்றி சுவாமிஜி!
////////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஅருமை வாத்தியாரே அருமை..
சிறந்ததொரு பாடம்.. உண்மையான, கருத்தாழமிக்க விளக்கம்..
புரிந்து கொண்டவர்கள் முருகனடி சேரட்டும்.. இல்லையெனில் உழலட்டும்..
வாத்தியாருக்கும், மாணவர் சிகரங்களுக்கும், வாத்தியாரின் ரசிகர்களுக்கும்
எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்..//////
நன்றி உண்மைத்தமிழரே!
//இந்த ஜென்மத்தில் வேண்டிய அளவு இறையுணர்வு கிடைத்துவிட்டது. தற்சமயம் மற்றவர்களுக்கும் அது கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் (உங்களுக்கும் சேர்த்துத்தான் - //
ReplyDeleteசுப்பையை சார்,
வெறும் ஏடுகளில் படித்த இறை இலக்கியம் தவிர்த்து, அவற்றை உணர்ச்சிப் பெருக்கால் போற்றுதல் தவிர்த்து உங்கள் ஜன்மம் கரை சேர என்ன செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?
ஏன் மற்றவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள், குறிப்பாக என்னைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? யாரும் அடுத்தவர் பாவங்களைப் போக்கி விட முடியாது, அப்படி செய்ய முயன்றால் புண்ணியம் பெற்று அதன் பலனை அறுவடை செய்ய மீண்டும் பிறக்க வேண்டி இருக்குமாம், நல்லா யோசிச்சி வேண்டிக் கொள்ளுங்கள் !
நாம போற்றும் ஒன்று தான் உயர்வானது என்று நினைப்பது மன மயக்கம் தான். ஒவ்வொருவருமே அவரவருக்கான வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஜன்மம் இருக்கிறது என்று நினைக்கும் மதங்களும் உண்டு, ஜன்மம் இல்லை என்று நினைக்கும் கிறித்துவ இஸ்லாமிய மதங்களும் உண்டு. நான் கிறித்துவனோ, இஸ்லாமியனாகவே மாறிவிட்டால் என் பொருட்டான உங்கள் வேண்டுதல் கூட தேவையற்றதாகிவிடும் :)
என்னை ஒரு பதிவு எழுத தூண்டுகிறீர்கள். :)
//Blogger கோவி.கண்ணன் said...
ReplyDeleteஉங்கள் ஜன்மம் கரை சேர என்ன செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?//
மற்றவர்களுக்கு பிராத்தனை செய்கிறாறே அது ஒன்று போதாதா அவரது ஜன்மம் கரை சேர?
கோவியாரே, பிரார்த்தனை என்பது அனைத்து பாவங்களையும் போக்கும் அதுவும் மற்றவர்கள் நமக்காக செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாக பலன் இருக்கும்.
ஏன் நீங்கள் சொல்லும் கிருத்துவ மதத்தில் ஊருக்கு ஊர் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கவில்லையா?
எப்போதும் ஒரு வாசகத்தை வாத்தியர் ஐயா தனது பதிவில் இடுவார் இந்தப்பதிவில் இதில் இடவில்லை போலிருக்கிறது.
நம்பிக்கை இல்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம் என்று.
அருமை... நல்ல கதையினுடாக இறை நம்பிக்கையினை விளக்கியுள்ளீர்கள். நாம் எக்காரியத்தைச் செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தால்த் தான் அதன் முழுப்பலனையும் பெறமுடியும்... :)
ReplyDeleteExcellent writeup ayya? Wish happy Deepavali.
ReplyDelete//////கோவி.கண்ணன் said...
ReplyDelete//இந்த ஜென்மத்தில் வேண்டிய அளவு இறையுணர்வு கிடைத்துவிட்டது. தற்சமயம் மற்றவர்களுக்கும் அது கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன் (உங்களுக்கும் சேர்த்துத்தான் - //
சுப்பையா சார்,
வெறும் ஏடுகளில் படித்த இறை இலக்கியம் தவிர்த்து, அவற்றை உணர்ச்சிப் பெருக்கால் போற்றுதல் தவிர்த்து உங்கள் ஜன்மம் கரை சேர என்ன செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?
ஏன் மற்றவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள், குறிப்பாக என்னைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? யாரும் அடுத்தவர் பாவங்களைப் போக்கி விட முடியாது, அப்படி செய்ய முயன்றால் புண்ணியம் பெற்று அதன் பலனை அறுவடை செய்ய மீண்டும் பிறக்க வேண்டி இருக்குமாம், நல்லா யோசிச்சி வேண்டிக் கொள்ளுங்கள் !
நாம போற்றும் ஒன்று தான் உயர்வானது என்று நினைப்பது மன மயக்கம் தான். ஒவ்வொருவருமே அவரவருக்கான வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஜன்மம் இருக்கிறது என்று நினைக்கும் மதங்களும் உண்டு, ஜன்மம் இல்லை என்று நினைக்கும் கிறித்துவ இஸ்லாமிய மதங்களும் உண்டு. நான் கிறித்துவனோ, இஸ்லாமியனாகவே மாறிவிட்டால் என் பொருட்டான உங்கள் வேண்டுதல் கூட தேவையற்றதாகிவிடும் :)
என்னை ஒரு பதிவு எழுத தூண்டுகிறீர்கள். :)////
நல்லது!நான் எளியவன். கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. உங்கள் பதிவுகள் எனக்கு உதவும் படியாக இருக்கட்டும். கடவுள் உங்களுக்குத் துணையிருப்பார்! ஒரு பதிவல்ல - ஓரயிரம் பதிவுகள் எழுதுங்கள்!
/////கூடுதுறை said...
ReplyDelete//Blogger கோவி.கண்ணன் said...
உங்கள் ஜன்மம் கரை சேர என்ன செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?//
மற்றவர்களுக்கு பிராத்தனை செய்கிறாறே அது ஒன்று போதாதா அவரது ஜன்மம் கரை சேர?
கோவியாரே, பிரார்த்தனை என்பது அனைத்து பாவங்களையும் போக்கும் அதுவும் மற்றவர்கள் நமக்காக செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாக பலன் இருக்கும்.
ஏன் நீங்கள் சொல்லும் கிருத்துவ மதத்தில் ஊருக்கு ஊர் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்கவில்லையா?
எப்போதும் ஒரு வாசகத்தை வாத்தியர் ஐயா தனது பதிவில் இடுவார் இந்தப்பதிவில் இதில் இடவில்லை போலிருக்கிறது.
நம்பிக்கை இல்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம் என்று.////
கூடுதுறையாரே, உணர்ச்சிப் பிரவாகம் எதற்கு? விட்டுவிடுங்கள். அவரும் நம் வகுப்பு மாணவர்தான்!
///////சுபானு said...
ReplyDeleteஅருமை... நல்ல கதையினுடாக இறை நம்பிக்கையினை விளக்கியுள்ளீர்கள். நாம் எக்காரியத்தைச் செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தால்த் தான் அதன் முழுப்பலனையும் பெறமுடியும்... :)/////
நன்றி நண்பரே!
//////Covai Ravee said...
ReplyDeleteExcellent writeup ayya? Wish happy Deepavali./////
நன்றி கோவை ரவியாரே!
////புருனோ Bruno said...
ReplyDeleteநல்ல கதை/////
நன்றி டாக்டர்!நட்சத்திர வாரத்தில் இதற்கு உங்களுக்கு நேரம் கிடைப்பதுதான் வியப்பாக உள்ளது!
குருவே,
ReplyDeleteமிகவும் அருமையான கதை. இல்லை! இல்லை!! படிப்பினை!!!
அன்புடன்
இராசகோபால்
/////Rajagopal said...
ReplyDeleteகுருவே,
மிகவும் அருமையான கதை. இல்லை! இல்லை!! படிப்பினை!!!
அன்புடன்
இராசகோபால்/////
நன்றி ராஜகோபால்!