StefanStenudd - Sweedish Astrologer
வாழ்க வளமுடன்!
அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?
US credit crisis as per it's transit horoscope
என்ன ஆனால் நமக்கென்ன என்று இருக்க முடியுமா?
நமது கண்மணிகள் பலபேர் அங்கே இருக்கிறார்கள். அதோடு அமெரிக்காவை
பற்றிய ஒவ்வொரு செய்திக்கும் நமது பங்குச் சந்தைக்கு வயிற்றுப் போக்கு
ஏற்பட்டு, 700 அல்லது 800 புள்ளிகளைப் பறிகொடுத்துவிட்டு அசந்து படுத்துக்
கொண்டு விடுகிறது. நமது மாண்புமிகு நிதியமைச்சர் என்ன மருந்து மாத்திரை
கொடுத்தாலும் எழுந்து உட்கார மறுக்கிறது. எழுந்தாலும் அடுத்தடுத்து வரும்
கலவரச் செய்திகளால் மறுபடியும், மறுபடியும் வயிற்றுப்போக்கால் அடிபட்டு
விழுந்துவிடுகிறது.
என்னதான் ஆகும்?
ஒரு வெளிநாட்டு ஜோதிடர் அது பற்றி விவரமாக எழுதியுள்ளார்.
அனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
Link to the article: Click here!
நமது வலையுலக 'சந்தேகப் பதிவருக்கு' (வாரத்திற்கு இருமுறை சந்தேகப்
பதிவுகள் போடுவார். எல்லாப் பதிவுகளுமே சந்தேகக் கேள்விகளுடன் முடியும்)
இது குறித்து - அதாவது இந்த ஜோதிடரின் ஜோதிடப் பதிவு குறித்து
ஏற்படும் சந்தேகங்களுக்கும், இந்தச் சரிவு நிரந்தமானால் மற்ற நாடுகளுக்கு
என்ன ஆகும் என்கின்ற நியாமான சந்தேகங்களுக்கும், அதேபோல இதை
வானத்தில் விட்டேறியாகச் சுற்றும் கோள்களை வத்து எந்த ஆதாரத்துடன்
எழுதினார் என்பது போன்ற அதிரடியான சந்தேகங்களுக்கும், அவரையே
தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்:-))))))
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
பின் குறிப்பு: ப்ளூட்டோ கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள்
ஆகும். அதனால் அதைத் தனி மனிதர்களின் ஜாதகக் கணக்கிற்கு எடுத்துக்
கொள்வதில்லை. அதேபோல நெப்டியூன் கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர
164.8 ஆண்டுகள் ஆகும்.நாடுகளின் ஜாதகத்திற்கு அவற்றை எடுத்துக்
கொள்வார்கள்

சுருக்கமாக வரும் டிசம்பரில் ஆரம்பித்து ஜனவரியில் ரியல் எஸ்டேட் பிரச்சினை கொஞ்சம் அமைதி ஆகிவிடுமென்கிறார். ஆனால் குடும்பம் போன்ற கட்டுமானங்கள் மாறி எல்லாமே புரட்டிப்போடப்பட்டு நல்லபடியாக 2022இல் புதிய அமேரிக்கா உருவாகும் என்கிறார்.
ReplyDeleteநம் ஜ்யோதிஷம் ப்ளூடோவை கணக்கில் கொள்வது இல்லை அல்லவா? அப்போது நாட்டுக்கு ஜாதகம் கணித்து பலன் சொல்வது எப்படி சமன் செய்யப்படுகிறது?
Guru is turning as neecham by this december.Thanakarakan neecham agumpodhu indha madiri nidhi chikkal vara vaippu undu illengala vathiyarayya
ReplyDeleteவாத்தியாரே..
ReplyDeleteசுருக்கமாக நீங்களே தமிழில் மொழி பெயர்த்திருக்கலாம்..
இருந்தாலும் பரவாயில்லை.. தகவலுக்கு மிக்க நன்றி..
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
சுருக்கமாக நீங்களே தமிழில் மொழி பெயர்த்திருக்கலாம்..
இருந்தாலும் பரவாயில்லை.. தகவலுக்கு மிக்க நன்றி..//
இதில் முழு உண்மை யிருக்கிறது போல் தெரிகிறது.
//டவுசர் கிழியும் டாலர் அரசியலும் குப்பை கூட்டுபவர்களும் -அமேரிக்க பொருளாதார ... (4)
ம ஜமாலன்
http://jamalantamil.blogspot.com/2008/10/blog-post_19.html
ஜமாலன்,நல்ல கட்டுரை.பாராட்டுக்கள்.
ReplyDeleteஇது தொடர்பில் நண்பர் சதுக்கபூதம் இரு நல்ல கட்டுரைகள் எழுதி இருந்தார்;அவற்றில் நடந்த அலசல்களும் சுவாரசியமானவை.
அவசியம் படித்துப் பாருங்கள் !
//////திவா said...
ReplyDeleteசுருக்கமாக வரும் டிசம்பரில் ஆரம்பித்து ஜனவரியில் ரியல் எஸ்டேட் பிரச்சினை கொஞ்சம் அமைதி ஆகிவிடுமென்கிறார். ஆனால் குடும்பம் போன்ற கட்டுமானங்கள் மாறி எல்லாமே புரட்டிப்போடப்பட்டு நல்லபடியாக 2022இல் புதிய அமேரிக்கா உருவாகும் என்கிறார்.
நம் ஜ்யோதிஷம் ப்ளூடோவை கணக்கில் கொள்வது இல்லை அல்லவா? அப்போது நாட்டுக்கு ஜாதகம் கணித்து பலன் சொல்வது எப்படி சமன் செய்யப்படுகிறது?//////
நாடுகளுக்கும் அதே வீடுகள் கணக்குதான். மனிதனுக்கு இரண்டாம் வீடு = House of Finance
அதே வீடு நாட்டிற்கு House of Economy. நேரம் இருக்கும்போது அதை விவரித்து ஒரு பதிவு எழுதுகிறேன் நண்பரே!
/////Ragu Sivanmalai said...
ReplyDeleteGuru is turning as neecham by this december.Thanakarakan neecham agumpodhu indha madiri nidhi chikkal vara vaippu undu illengala vathiyarayya/////
ஆமாம் நண்பரே!
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
சுருக்கமாக நீங்களே தமிழில் மொழி பெயர்த்திருக்கலாம்..
இருந்தாலும் பரவாயில்லை.. தகவலுக்கு மிக்க நன்றி..////
நேரம் இல்லை.அதோடு இந்த மின்வெட்டு. பொறுத்துக்கொள்ளுங்கள் உனாதானா!
//////புரட்சித் தமிழன் said...
ReplyDeleteஉண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
சுருக்கமாக நீங்களே தமிழில் மொழி பெயர்த்திருக்கலாம்..
இருந்தாலும் பரவாயில்லை.. தகவலுக்கு மிக்க நன்றி..//
இதில் முழு உண்மை யிருக்கிறது போல் தெரிகிறது.
//டவுசர் கிழியும் டாலர் அரசியலும் குப்பை கூட்டுபவர்களும் -அமேரிக்க பொருளாதார ... (4)
ம ஜமாலன்
http://jamalantamil.blogspot.com/2008/10/blog-post_19.html/////
நன்றி நண்பரே!
அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteஜமாலன்,நல்ல கட்டுரை.பாராட்டுக்கள்.
இது தொடர்பில் நண்பர் சதுக்கபூதம் இரு நல்ல கட்டுரைகள் எழுதி இருந்தார்;அவற்றில் நடந்த அலசல்களும் சுவாரசியமானவை.
அவசியம் படித்துப் பாருங்கள் !////
தகவலுக்கு நன்றி நண்பரே! படித்துப் பார்க்கிறேன்!
சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவிற்கு நல்ல நேரம் சமீபத்தில் இல்லை.. அப்படித்தானே
ReplyDelete/சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவிற்கு நல்ல நேரம் சமீபத்தில் இல்லை.. அப்படித்தானே//
ReplyDeleteஆடுகிறவன் களைத்துப் போனால் கொஞ்சம் காலம் ஓய்வு எடுக்கத்தானே வேண்டும்!
I went the blog and read it.
ReplyDelete-shankar
I went the blog and read it.
ReplyDelete-shankar
////புருனோ Bruno said...
ReplyDeleteசுருக்கமாக சொன்னால் அமெரிக்காவிற்கு நல்ல நேரம் சமீபத்தில் இல்லை.. அப்படித்தானே?/////
ஆமாம் டாக்டர்!
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete/சுருக்கமாக சொன்னால் அமெரிக்காவிற்கு நல்ல நேரம் சமீபத்தில் இல்லை.. அப்படித்தானே//
ஆடுகிறவன் களைத்துப் போனால் கொஞ்சம் காலம் ஓய்வு எடுக்கத்தானே வேண்டும்!////
ஆமாம், ரொம்பவுமே ஆடிவிட்டார்கள்!
////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!////
இதற்கு முன் உள்ள பின்னூட்டத்தின் மூலமே வருகைப் பதிவு ஆகிவிட்டது!
/////hotcat said...
ReplyDeleteI went the blog and read it.
-shankar////
நன்றி சங்கர்!
//ஆமாம், ரொம்பவுமே ஆடிவிட்டார்கள்!//
ReplyDeleteஇந்தியாவின் ஜாதகப் படி, இனி இந்தியா ஆடக் கூடிய காலம் வந்துவிட்டதா?
தங்கள் பதிவையும், வலை இணைப்பையும் படித்து அறிந்து கொண்டேன் ஐயா. நன்றி.
ReplyDeleteமூணு தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை என்பார்கள்
காலச்சக்கர சுழற்சியில் இப்போது அமெரிக்காவுக்கு இறங்குமுகம் போலிருக்கிறது.
நாமக்கல் சிபி said...
ReplyDelete//ஆமாம், ரொம்பவுமே ஆடிவிட்டார்கள்!//
இந்தியாவின் ஜாதகப் படி, இனி இந்தியா ஆடக் கூடிய காலம் வந்துவிட்டதா?////
இந்தியா ஆடவேண்டாம்.நன்றாக ஓடினால் போதும். (இப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருக்கிறது)
/////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteதங்கள் பதிவையும், வலை இணைப்பையும் படித்து அறிந்து கொண்டேன் ஐயா. நன்றி.
மூணு தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை என்பார்கள்
காலச்சக்கர சுழற்சியில் இப்போது அமெரிக்காவுக்கு இறங்குமுகம் போலிருக்கிறது./////
ஆமாம் இந்தக் காலச் சுழற்சியைப் பற்றி முன் பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறேன் பாலா!
மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்!மூன்று தலைமுறைகள் என்பது சுமார் 100 ஆண்டுகள்!