எல்லோரும் விடுபட்டவை எழுதுவதுபோல வாத்தியாரும் விடுபட்டவை எழுதுகிறார்
என்று நினைக்க வேண்டாம்.
உண்மையிலேயே விடுபட்ட சின்னச் சின்ன விஷயங்களை இதில் எழுதலாம் என்று
உள்ளேன்.
தமிழக அரசின் மின்வெட்டு உயிரை வாங்குகிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்
விட்டு விட்டு மின் வெட்டு என்றால் என்ன செய்ய முடியும்? சொந்த வேலைகளை
ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. ஒரு பதிவை விவரமாக எழுத முடியவில்லை.
நேரா நேரத்திற்குப் பின்னூட்டங்களைப் படித்துப் பதில் எழுத முடியவில்லை.
என்ன வாழ்க்கை போங்கள்!
தமிழ் நாட்டிற்கே சனி பிடித்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வரும்.
சார், மிகவும் சிரமப் படுகிறேன். கிரகங்களுக்குப் பரிகாரம் ஏதாவது
செய்ய வேண்டுமா?
கிரகங்களுக்குப் பரிகாரமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை!
நீங்கள் கிரகங்களை வழிபடலாம். மனம் உருகி வழிபடலாம். அதுதான் உண்மையான பரிகாரம்.
உங்கள் ஊரில் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதானம் இருக்கும்.
வாரத்தில் ஒரு நாள். குறிப்பாக சனிக்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ
சென்று நவக்கிரகங்களை ஒன்பது முறைகள், வேறு சிந்தனைகள் எதுவுமின்றி, சுற்றி
வந்து வழிபட்டு விட்டு வரலாம்.
கிரக தோஷங்களுக்கென தமிழ் நாட்டில் இரண்டு பரிகார ஸ்தலங்கள் (இடங்கள்) உண்டு!
ஒன்று இராமேஸ்வரம். இன்னொன்று ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள
தேவிபட்டணம். அங்கே சென்று வழிபடலாம்.
இராமேஸ்வரத்திற்குச் செல்பவர்கள். ராமேஸ்வரம் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிரில்
இருக்கும் கடலில் நவக்கிரகங்களை வழிபட்டு விட்டுக் கடலில் குளித்துவிட்டுப் பிறகு
கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.
கடற்கரையில் நவக்கிரகங்களுக்கு எங்கே போவது? அதை நாமே உண்டாக்கித்
தரிசிக்கலாம். ஒன்பது தொன்னைகளில் நவக்கிரகங்களுக்கு உரிய நவதான்யங்களை
வைத்து. அதை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டுவிட்டு, அந்தத் தொன்னைகளை
அப்படியே கடலில் கொண்டுபோய்க்கொட்டிவிட்டுப் பிறகு அங்கே குளித்து விட்டு,
கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.
ராமேஸ்வரம் போக முடியாதவர்கள், உள்ளூரில் உள்ள ஆற்றங்கரையிலும் அதைச்
செய்யலாம். ஆறு இல்லாத ஊரில் உள்ளவர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அதைச்
செய்துவிட்டு, தங்கள் வீட்டுக் கிணற்று நீரில் குளித்துவிட்டு, கிரகங்களை வழிபடலாம்.
வழிபட்ட பிறகு அந்த நவதான்யங்கள் காலில் மிதிபடக்கூடாது. நீரில் கலந்துவிட
வேண்டும் அதை மட்டும் நினைவில் வையுங்கள்.
இதை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டும்.
ஆதாரம் கேட்பவர்கள் இதைப் படித்தவுடன் மறந்து விடலாம்.
கிரங்களும் (அவை கோவில்களில் உள்ள அமைப்பின்படி), அவற்றிற்கு உரிய
தானியங்களையும் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன்.
கஷ்டங்கள், துன்பங்கள் என்றில்லாமல் காரியத் தடை உள்ளவர்களும், காரியத்
தாமதம் உள்ளவர்களும் இதைப் பின்பற்றலாம்.
எல்லாவற்றையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
me the first.....
ReplyDelete>>>அதை நாமே உண்டாக்கித்
ReplyDeleteதரிசிக்கலாம். ஒன்பது தொன்னைகளில் நவக்கிரகங்களுக்கு உரிய நவதான்யங்களை
வைத்து. அதை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டுவிட்டு<<<<
முற்றிலும் புதிய தகவல்,நன்றி
வழிபாட்டு சுலோகங்கள் ஏதேனும் உண்டா..?
மணி(நவரத்தினம்) அணிவதை பற்றி தங்களின் கருத்து....
This comment has been removed by the author.
ReplyDeleteபரிகாரம் செய்யவேண்டும் என்று கேட்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்....
ReplyDeleteபயனுள்ள பதிவு!
ReplyDeleteபின்னூட்டமிட இந்த பாப் அப் விண்டோ அவசியமா என்று பரிசீலிக்கவும்!
ReplyDeleteநன்றி!
////hotcat said...
ReplyDeleteme the first.....///
You are the first! Okay! what about the posting? Have you read it or not?
/////மதி said...
ReplyDelete>>>அதை நாமே உண்டாக்கித்
தரிசிக்கலாம். ஒன்பது தொன்னைகளில் நவக்கிரகங்களுக்கு உரிய நவதான்யங்களை
வைத்து. அதை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டுவிட்டு<<<<
முற்றிலும் புதிய தகவல்,நன்றி
வழிபாட்டு சுலோகங்கள் ஏதேனும் உண்டா..?//////
கோளறு திருப்பதிகம் என்ற வழிபாட்டுப்பாடல் உண்டு. தேடிப்பிடித்துப் பதிவிடுகிறேன் நண்பரே!
/// மணி(நவரத்தினம்) அணிவதை பற்றி தங்களின் கருத்து....////
நவரத்தினங்களைப் பற்றி நான் அறிந்தது குறைவான செய்தியே. ஒரு பதிவாகப் பிறகு தருகிறேன்.
////கூடுதுறை said...
ReplyDeleteபரிகாரம் செய்யவேண்டும் என்று கேட்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்....////
ஆமாம். அதற்காகத்தான் பதிவிட்டுள்ளேன்!
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteபயனுள்ள பதிவு!///
நன்றி சிபியாரே! (கலாய்ப்பில்லாத பின்னூட்டத்திற்காக இது)
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteபின்னூட்டமிட இந்த பாப் அப் விண்டோ அவசியமா என்று பரிசீலிக்கவும்!
நன்றி!////
நீக்கி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
//நீக்கி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!//
ReplyDeleteமிக்க நன்றி! இப்பொழுது வசதியாக இருக்கிறது!
//நன்றி சிபியாரே! (கலாய்ப்பில்லாத பின்னூட்டத்திற்காக இது)
ReplyDelete//
நவதானியங்களை நவகிரகங்களாக வைத்து வழிபடுதல் பற்றி முன்பே கூறியிருந்தீர்கள்! இப்போது தெளிவாகத் தெரிந்து கொண்டேன்!
இவர் என்ன போலி நாமக்கல் சிபியா?
ReplyDeleteகலாய்ப்பில்லாத சிபி உப்பில்லா பண்டம்...
/////கூடுதுறை said...
ReplyDeleteஇவர் என்ன போலி நாமக்கல் சிபியா?
கலாய்ப்பில்லாத சிபி உப்பில்லா பண்டம்...////
எதற்காக இந்தக் கொம்பு சீவிவிடுகிற வேலை?
உள்ளேன் ஐயா.
ReplyDelete//வழிபட்ட பிறகு அந்த நவதான்யங்கள் காலில் மிதிபடக்கூடாது. நீரில் கலந்துவிட
ReplyDeleteவேண்டும் அதை மட்டும் நினைவில் வையுங்கள்.//
உடனே செய்ய வேண்டுமா எப்போ வேண்டுமானாலும் செய்யலாமா?
//உடனே செய்ய வேண்டுமா எப்போ வேண்டுமானாலும் செய்யலாமா?
ReplyDelete//
நினைவில் வைத்துக் கொள்ளுவதையா கேட்கிறீர்கள்!
உடனே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!
(நினைவூட்டிய கூடுதுறையாருக்கு நன்றி!)
பயனுள்ள பதிவு!
ReplyDeleteUllen Aiya!
ReplyDeleteIs wheat one of the Navathaniyam?
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//நீக்கி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!//
மிக்க நன்றி! இப்பொழுது வசதியாக இருக்கிறது!/////
வசதிக்காகத்தானே கூகுள் எல்லாவற்றையும் வாரிக்கொடுத்திருக்கிறது!
//////நாமக்கல் சிபி said...
ReplyDelete//நன்றி சிபியாரே! (கலாய்ப்பில்லாத பின்னூட்டத்திற்காக இது)
// நவதானியங்களை நவகிரகங்களாக வைத்து வழிபடுதல் பற்றி முன்பே கூறியிருந்தீர்கள்! இப்போது தெளிவாகத் தெரிந்து கொண்டேன்!////
தெளிவு எத்தனை சதவிகிதம்?
/////ஜே கே | J K said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா.///
சிபி பார்ப்பதற்குள் உங்கள் இடத்தில் உட்கார்ந்துவிடுங்கள்
/////ஜே கே | J K said...
ReplyDelete//வழிபட்ட பிறகு அந்த நவதான்யங்கள் காலில் மிதிபடக்கூடாது. நீரில் கலந்துவிட
வேண்டும் அதை மட்டும் நினைவில் வையுங்கள்.//
உடனே செய்ய வேண்டுமா எப்போ வேண்டுமானாலும் செய்யலாமா?////
வழிபட்டு முடித்தவுடன் செய்ய வேண்டும்! அதில் என்ன கஷ்டம்?
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//உடனே செய்ய வேண்டுமா எப்போ வேண்டுமானாலும் செய்யலாமா?
// நினைவில் வைத்துக் கொள்ளுவதையா கேட்கிறீர்கள்!
உடனே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!
(நினைவூட்டிய கூடுதுறையாருக்கு நன்றி!)////
கூடுதுறையார், அவர் பதிவில் இதை அனுபவிக்கப்போகிறார் என்று நினைக்கிறேன்! நீங்கள் அவர் பதிவில் பின்னூட்டம் போடுவது உண்டு அல்லவா?
/////கடையம் ஆனந்த் said...
ReplyDeleteபயனுள்ள பதிவு!////
நன்றி நண்பரே!
////தங்ஸ் said...
ReplyDeleteUllen Aiya!
Is wheat one of the Navathaniyam?////
ஆமாம், அது முக்கிய கிரகமான சூரியனுக்கு உடையது
நெல் - சந்திரனுக்கு உரியது!
Dear sir
ReplyDeleteI did finished reading.
Thanks for sharing valuable information. I have heard about "Navagraha kolam and cloth piece(different color)" to represent navagraha...But Navadhaniyam is different. But I have seen this while doing Navagraha Homam.
-Shankar
/////hotcat said...
ReplyDeleteDear sir
I did finished reading.
Thanks for sharing valuable information. I have heard about "Navagraha kolam and cloth piece(different color)" to represent navagraha...But Navadhaniyam is different. But I have seen this while doing Navagraha Homam.
-Shankar////
ஆமாம்! வீடுகளில் நவக்கிரஹ ஹோமம், மற்றும் வழிபாடுகளைச் செய்பவர்கள் இதைத்தான் பின்பற்றுவார்கள்!
உபயோகமான தகவல்கள்
ReplyDeleteநன்றி ஆசானே
I have just returned from Rameshwaram and opened the classroom2007 blog.. What a coincidence? You have written about Rameshwaram.But I could have read this before going to rameswaram.Because I did not goto Devipattanam.I only went to 22 Theerthams ,Ramar Patham, Pancha Muga Anjaneyar Temple, Naganatha Swamy Temple and Seetha Ramar temple.I did not know about this Devipattanam..I missed it.
ReplyDelete//Blogger SP.VR. SUBBIAH said...
ReplyDelete/////கூடுதுறை said... இவர் என்ன போலி நாமக்கல் சிபியா? கலாய்ப்பில்லாத சிபி உப்பில்லா பண்டம்...////
எதற்காக இந்தக் கொம்பு சீவிவிடுகிற வேலை?//
அப்படியிருந்தால் தானே ஐயா வகுப்பு கலகலப்பாக இருக்கும்... முன்பு கோவை விமல் அந்த வேலையை வைத்துக்கொண்டிருந்தார்... என்ன காரணமோ அவரை இப்பொது காணவில்லை...
//கூடுதுறையார், அவர் பதிவில் இதை அனுபவிக்கப்போகிறார் என்று நினைக்கிறேன்! நீங்கள் அவர் பதிவில் பின்னூட்டம் போடுவது உண்டு அல்லவா?//
இந்தக் கவலை இல்லை... எனது மாவட்டத்துக்காரராக இருந்தாலும் எனது பதிவுக்கு வருவேதேயில்லை... ஒரு வேளை எனது எழுத்து பிடிக்கவில்லையோ என்னவோ?
/////புருனோ Bruno said...
ReplyDeleteஉபயோகமான தகவல்கள்
நன்றி ஆசானே////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி டாக்டர்!
//////Ragu Sivanmalai said...
ReplyDeleteI have just returned from Rameshwaram and opened the classroom2007 blog.. What a coincidence? You have written about Rameshwaram.But I could have read this before going to rameswaram.Because I did not goto Devipattanam.I only went to 22 Theerthams ,Ramar Patham, Pancha Muga Anjaneyar Temple, Naganatha Swamy Temple and Seetha Ramar temple.I did not know about this Devipattanam..I missed it.////
அதனால் என்ன? அடுத்தமுறை வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று பாருங்கள்!
/////கூடுதுறை said...
ReplyDelete//Blogger SP.VR. SUBBIAH said...
/////கூடுதுறை said... இவர் என்ன போலி நாமக்கல் சிபியா? கலாய்ப்பில்லாத சிபி உப்பில்லா பண்டம்...////
எதற்காக இந்தக் கொம்பு சீவிவிடுகிற வேலை?//
அப்படியிருந்தால் தானே ஐயா வகுப்பு கலகலப்பாக இருக்கும்... முன்பு கோவை விமல் அந்த வேலையை வைத்துக்கொண்டிருந்தார்... என்ன காரணமோ அவரை இப்பொது காணவில்லை...
//கூடுதுறையார், அவர் பதிவில் இதை அனுபவிக்கப்போகிறார் என்று நினைக்கிறேன்! நீங்கள் அவர் பதிவில் பின்னூட்டம் போடுவது உண்டு அல்லவா?//
இந்தக் கவலை இல்லை... எனது மாவட்டத்துக்காரராக இருந்தாலும் எனது பதிவுக்கு வருவேதேயில்லை... ஒரு வேளை எனது எழுத்து பிடிக்கவில்லையோ என்னவோ?////
அதெல்லாம் இருக்காது. வலைப் பதிவர்களில், அதிக நேரம் பதிவுகளில் தங்கள் நேரத்தைச் செலவழிப்பவர்களும், அதிக நண்பர்களையும் பெற்ற பத்துப் பதிவர்கள் என்று கண்க்கிட்டால் அதில் கோவி.கண்ணனும், சிபியாரும் வருவார்கள். ஆகவே எல்லாப் பதிவுகளையும் படிக்கும் போது பின்னூட்டம் போடுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கலாம். பின்னூட்டங்களை வைத்துப் பதிவைச் சிலர் படிப்பதில்லை என்ற முடிவிற்கு வராதீர்கள்!
வாத்தியாரே..
ReplyDeleteஇதுவும் பாடங்களில் ஒன்றுதான்.. தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
நானும் பரிகாரம் செய்துவிட்டு பின்பு சொல்கிறேன்.
டிஸ்கி - நாமக்கல் சிபி என்கிற அன்பர் வெகு காலமாகவே குறைந்தபட்சம் ஒரு பதிவுக்கு 10 கமெண்ட்டுகளாவது போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஜாதகத்தை நீங்கள்தான் பார்த்துக் கொடுத்தீர்களா..
ஆம் எனில் அவருக்கு சனி தசை எப்போது ஆரம்பிக்கிறது என்று பார்த்து என்னிடம் மட்டும் சொல்லவும்..
//சிபி பார்ப்பதற்குள் உங்கள் இடத்தில் உட்கார்ந்துவிடுங்கள்
ReplyDelete//
சுபரின் பார்வை பட்டால் நல்லதுதானே!
//ஆம் எனில் அவருக்கு சனி தசை எப்போது ஆரம்பிக்கிறது என்று பார்த்து என்னிடம் மட்டும் சொல்லவும்..//
ReplyDeleteஇத்தனை வகுப்புகள் முடிந்தும் அவர் பார்த்துச் சொல்ல வேண்டுமா?
இந்த அளாவுக்கு பயிற்சிகளுக்குப் பின் நாமே அல்லவா பார்த்துத் தெரிந்து கொள்ள வாண்டும்!
சனி தசை - 2023 ம் வருடம் ஆரம்பிக்கிறது! நீங்க காத்திருந்துதான் ஆகணும்!
//பின்னூட்டங்களை வைத்துப் பதிவைச் சிலர் படிப்பதில்லை என்ற முடிவிற்கு வராதீர்கள்!
ReplyDelete//
உண்மைதான்!
//தெளிவு எத்தனை சதவிகிதம்?//
ReplyDeleteஅது அடிக்கிற சரக்கைப் பொறுத்தது! மன்னிக்கவும்! படிக்கிற பாடத்தைப் பொறுத்தது!
இந்த பாடம் 100%
////////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
இதுவும் பாடங்களில் ஒன்றுதான்.. தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
நானும் பரிகாரம் செய்துவிட்டு பின்பு சொல்கிறேன்.
டிஸ்கி - நாமக்கல் சிபி என்கிற அன்பர் வெகு காலமாகவே குறைந்தபட்சம் ஒரு பதிவுக்கு 10 கமெண்ட்டுகளாவது போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஜாதகத்தை நீங்கள்தான் பார்த்துக் கொடுத்தீர்களா..
ஆம் எனில் அவருக்கு சனி தசை எப்போது ஆரம்பிக்கிறது என்று பார்த்து என்னிடம் மட்டும் சொல்லவும்../////
பதிவர்களில் இருவருக்கு மட்டும்தான் வேலை செய்யாமல் சம்பளம் கிடைக்கிறது. ஒருவர் இவர். இன்னொருவர் சிங்கையில் இருக்கிறார்.
எல்லாம் வாங்கிவந்த வரம்!
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//சிபி பார்ப்பதற்குள் உங்கள் இடத்தில் உட்கார்ந்துவிடுங்கள்
// சுபரின் பார்வை பட்டால் நல்லதுதானே!////
சுபரின் பார்வை பட்டால் சுகஜீவனம் ஆகி, மனிதன் சோம்பேறி ஆகிவிடுவான்!
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//ஆம் எனில் அவருக்கு சனி தசை எப்போது ஆரம்பிக்கிறது என்று பார்த்து என்னிடம் மட்டும் சொல்லவும்..//
இத்தனை வகுப்புகள் முடிந்தும் அவர் பார்த்துச் சொல்ல வேண்டுமா?
இந்த அளாவுக்கு பயிற்சிகளுக்குப் பின் நாமே அல்லவா பார்த்துத் தெரிந்து கொள்ள வாண்டும்!
சனி தசை - 2023 ம் வருடம் ஆரம்பிக்கிறது! நீங்க காத்திருந்துதான் ஆகணும்!////
மகரராசிக்காரர் சனி ஒன்றும் செய்யாது என்கின்ற துணிவில் சொல்கிறீர்!
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//தெளிவு எத்தனை சதவிகிதம்?//
அது அடிக்கிற சரக்கைப் பொறுத்தது! மன்னிக்கவும்! படிக்கிற பாடத்தைப் பொறுத்தது!
இந்த பாடம் 100%////
புகைக்க மாட்டும்தான் தடை போலிருக்கிறது.
வாரத்தில் ஒரு நாள். குறிப்பாக சனிக்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ
ReplyDeleteசென்று நவக்கிரகங்களை ஒன்பது முறைகள், வேறு சிந்தனைகள் எதுவுமின்றி, சுற்றி
வந்து வழிபட்டு விட்டு வரலாம்.///
இதைப்படித்ததும் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.( எங்கோ படித்தது...
நவக்கிரகங்களைச் சுற்றுகையில் ,
சுற்றுக்களை எண்ணுவதிலேயே
சிக்கிக்கொள்கிறது மனசு..!!!
//புகைக்க மாட்டும்தான் தடை போலிருக்கிறது//
ReplyDeleteகுடிக்கத் தடை போட்டால் அரசு திவால் ஆகி விடும்! அல்லது ஆட்சி திவால் ஆகிவிடும் என்று ஆள்பவர்களுக்குத் தெரியாதா என்ன>?
:)
//மகரராசிக்காரர் சனி ஒன்றும் செய்யாது என்கின்ற துணிவில் சொல்கிறீர்!//
ReplyDeleteஅவர் கடமை தவறாதவராயிற்றே! இருந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் கொடுப்பார்தானே!
வாழ்வில் தோன்றும் கஷ்டங்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள்/படிப்பினைகள்! இதன் மூலம் நாம் நல்லது/கெட்டது ஆகியவற்றைப் அறிந்து கொள்ள முடியும்!
பார்க்க : http://manamumninavum.blogspot.com/2006/07/21.html
/////மதிபாலா said...
ReplyDeleteவாரத்தில் ஒரு நாள். குறிப்பாக சனிக்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ
சென்று நவக்கிரகங்களை ஒன்பது முறைகள், வேறு சிந்தனைகள் எதுவுமின்றி, சுற்றி
வந்து வழிபட்டு விட்டு வரலாம்.///
இதைப்படித்ததும் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.( எங்கோ படித்தது...
நவக்கிரகங்களைச் சுற்றுகையில் ,
சுற்றுக்களை எண்ணுவதிலேயே
சிக்கிக்கொள்கிறது மனசு..!!!////
இன்னொன்றும் இருக்கிறது:
உடம்பு கர்ப்பக்கிரகத்தின் எதிரில் கூப்பிய கைகளுடன்;
மனது பரிதவிப்புடன் வெளியே விட்டுவிட்டுவந்த புதுச்செருப்பின்மீது!
////நாமக்கல் சிபி said...
ReplyDelete//புகைக்க மாட்டும்தான் தடை போலிருக்கிறது//
குடிக்கத் தடை போட்டால் அரசு திவால் ஆகி விடும்! அல்லது ஆட்சி திவால் ஆகிவிடும் என்று ஆள்பவர்களுக்குத் தெரியாதா என்ன>?
:)/////
கடைசியில் இவன் திவாலாகிக்கிடக்கும்போது, கை கொடுக்க அரசு வராது!:-)))
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//மகரராசிக்காரர் சனி ஒன்றும் செய்யாது என்கின்ற துணிவில் சொல்கிறீர்!//
அவர் கடமை தவறாதவராயிற்றே! இருந்தாலும் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் கொடுப்பார்தானே!
வாழ்வில் தோன்றும் கஷ்டங்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள்/படிப்பினைகள்! இதன் மூலம் நாம் நல்லது/கெட்டது ஆகியவற்றைப் அறிந்து கொள்ள முடியும்!
பார்க்க : http://manamumninavum.blogspot.com/2006/07/21.html/////
படித்தேன்: ஆன்மாவிற்கு ஏது மரணம்?