1.10.08

என்ன சொன்னார் ஞானி?

குமுதத்தில் எழுதுகிறாரே அந்த ஞாநி சொன்னதல்ல இது. இது வேறொரு
ஞானி சொன்னது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

படித்துப் பாருங்கள்!

ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவற்றையெல்லாம்
முன் பாடங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

புதிதாக வருபவர்கள் அதை முதலில் படித்தால்தான் இப்போது நடத்தும்
பாடங்கள் பிடிபடும். இல்லையென்றால் குழப்பம்தான்

மிஞ்சும்.

1. 12 ராசிகளின் பெயர்கள் என்ன?
2. ராசி அதிபதியின் பெயர்கள் என்ன?
3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
4. லக்கினம் என்பது என்ன?
5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?
6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?
9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?
11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?
12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?
13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?
14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?
15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?
16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?
17. நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?
18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?

என்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல், அதை மனதில் அல்லது நினைவில்
கொள்ளாமல் மேலும் மேலும் ஜோதிடத்தை நீங்கள் படிப்பது வீண் செயலாகும்.
எத்தனை பேர்கள் அப்படி வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

மேலே உள்ள கேள்விகளுக்கு தயக்கம் இன்றி பதில் சொல்பவர்கள்தான்
அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்கள். தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும்
பதில் சொல்ல வேண்டும்.

ஒரு ஞானி சொன்னார்:

"சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்
கொடை, தயை, ஈகை
மூன்றும் குடிப்பழக்கம்"

பயிற்சியின் (That is by practice) மூலம் வருவது எதெது - பயிற்சியால்
வராதது எதெது என்று அந்த ஞானி பகுத்துச் சொன்னார்.

ஆகவே பாடங்களை (atleast the basic lessons) மனதில் ஏற்றுங்கள்
-----------------------------------------------------------------------------
எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

"சார், என்னுடைய பத்தாம் வீட்டில் யாருமே இல்லை? காலியாக
இருக்கிறது? அதற்கு என்ன செய்வது?"

"காலியாக இருப்பதால் ஏதாவது கிரகத்தைப் பிடித்துக் கொண்டு
வந்து குடிவைக்க முடியுமா என்ன?"

ஒன்பது கிரகங்கள், ஒரு லக்கினம் ஆக மொத்தம் 10 - ஆனால்
இருக்கும் வீடுகள் பன்னிரெண்டு. நிச்சயம் 2 வீடுகள் காலியாகத்தான்
இருக்கும். கால சர்ப்ப தோஷக்காரர்களுக்கு 5 கட்டங்கள் காலியாக
இருக்கும். சிலருக்கு பிரம்மச்சாரிகள் குடியிருக்கும் வீடுகளைப் போல
3 வீடுகளில் எல்லாக் கிரகங்களும் அடைபட்டு 9 வீடுகள் காலியாக
இருக்கும். அதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா?

ஒரு வீட்டிற்கு ஒருகிரகம் என வரிசையாக அத்தனை கிரகங்களும்
ஒருவருடைய ஜாதகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் அமர்ந்திருந்தால்
பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு மாலையோகம் என்று பெயர்.
அதாவது பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போல கிரகங்களால்
தொடுக்கப் பட்ட மாலை என்று பெயர். (That yoga is called as Graha
Maalika Yogam) அந்த ஜாதகக்காரர் பல யோகங்களை உடையவராக
இருப்பார். ஆனால் அது அபூர்வமான யோகம். லட்சத்தில் ஒருவருக்கு
இருக்கலாம்.

ஆகவே வீடுகள் காலியாக இருந்தால் கவலைப் படாதீர்கள். காலியாக
இருக்கும் வீட்டின் அதிபர் வேறு எங்கே இருக்கிறார்?
அவர் இருக்கும் இடம் அவருக்கு சொந்த வீடா அல்லது உச்ச வீடா
என்று எல்லாம் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்

பத்தாம் வீட்டின் அடுத்த பகுதி சற்றுப் பெரியது. எழுதித் தட்டச்சிக்
கொண்டிருக்கிறேன். அது வெள்ளியன்று மாலை வரும்!

மேலே உள்ள பதினெட்டுக் கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கு
(அது உங்கள் சாய்ஸ்) பதில் எழுதி என்னுடைய மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்புங்கள் (mail ID; classroom2007@gmail.com)

எத்தனை பேர் எழுதுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில்
உள்ளேன்.

இதை வீட்டுப்பாடம் (Home Work') என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

39 comments:

  1. ஹைய்யா! இன்னைக்கு நான் தான் முதல்ல வந்தேன்!

    ReplyDelete
  2. //கொடை, தயை, ஈகை மூன்றும் குடிப்பழக்கம்//
    இந்த மூணும் எனக்கு இருக்கு. ஏன்னா எனக்கு குடிப்பழக்கம் இருக்கு. (கோச்சுக்காதீங்க சும்மா தமாஷ்)

    ReplyDelete
  3. ஜோதிடத்தின் அடிப்படைக்கு ஒரு வித்தியாசமான ஆதாரம்.

    ஜோதிடம் 12 ராசி அதன் அடிப்படை 18 விஷயங்கள்= 30


    1. In Particle Physics there are 30 fundamental subatomic particles.
    Antiparticles :
    anti leptons 6 + anti quarks 6 =12
    particles:
    leptons 6 + quarks 6 + bosons = 6 , total particles=18

    2. தமிழ் மொழி
    உயிர் எழுத்து 12
    மெய் எழுத்து 18

    3.In Human genetics:
    By The Y chromosome DNA (Y-DNA) marker மனித இனங்களின் பிரிவுகள்:
    M130, M89 ,M9,M175, M45, M173, M20, M242, M122, M3, M172, M17 = 12

    By the Mitochondrial DNA (mtDNA) haplogroups மனித இனங்களின் பிரிவுகள்:
    L,M,N,A,B,C,D,F,G,H,I,J,K,T,U,V,W,X=18

    ReplyDelete
  4. /////அணுயோகி said...
    ஹைய்யா! இன்னைக்கு நான் தான் முதல்ல வந்தேன்!////

    வீட்டுப்பாடத்தை எழுதுவதில் எப்படி வருகிறீர்கள் என்று பார்ப்போம்!:-)))

    ReplyDelete
  5. /////அமர பாரதி said...
    //கொடை, தயை, ஈகை மூன்றும் குடிப்பழக்கம்//
    இந்த மூணும் எனக்கு இருக்கு. ஏன்னா எனக்கு குடிப்பழக்கம் இருக்கு. (கோச்சுக்காதீங்க சும்மா தமாஷ்)////

    குடி = வாய்வழியாக உட்கொள்
    குடி = குடிமகன்
    குடி = குடும்பம்

    நீங்கள் சொல்லும் பழக்கம் இருந்தால் அது மூன்றும் போய்விடும்:-))))

    ReplyDelete
  6. /////மெளனம் said...
    ஜோதிடத்தின் அடிப்படைக்கு ஒரு வித்தியாசமான ஆதாரம்.
    ஜோதிடம் 12 ராசி அதன் அடிப்படை 18 விஷயங்கள்= 30
    1. In Particle Physics there are 30 fundamental subatomic particles.
    Antiparticles :
    anti leptons 6 + anti quarks 6 =12
    particles:
    leptons 6 + quarks 6 + bosons = 6 , total particles=18
    2. தமிழ் மொழி
    உயிர் எழுத்து 12
    மெய் எழுத்து 18
    3.In Human genetics:
    By The Y chromosome DNA (Y-DNA) marker மனித இனங்களின் பிரிவுகள்:
    M130, M89 ,M9,M175, M45, M173, M20, M242, M122, M3, M172, M17 = 12
    By the Mitochondrial DNA (mtDNA) haplogroups மனித இனங்களின் பிரிவுகள்:
    L,M,N,A,B,C,D,F,G,H,I,J,K,T,U,V,W,X=18
    Wednesday, October 01, 2008 10:58:00 PM ////

    நீங்கள் சொல்லியுள்ளதில் 1 & 3 எனக்குப் புதிய தகவல்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ஐயா வீட்டுப்பாடம் எழுதி அனுப்பிவிட்டேன்...

    வீட்டுப்பாடம் இருப்பதால் நிறைய மாணவர்கள் இன்றைய பாடத்திலிருந்து எஸ்கேப்....

    ReplyDelete
  8. //"சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
    நடையும் நடைப்பழக்கம்
    கொடை, தயை, ஈகை
    மூன்றும் குடிப்பழக்கம்"//


    "சித்திரமும் கைப்பழக்கம் ;
    செந்தமிழும் நாப்பழக்கம்,
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
    நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
    தானம் , தயை , நட்பு , பிறவி
    குணப்பழக்கம் .!"

    அய்யா இதில் எது சரியான து ?

    ReplyDelete
  9. பாஸ்கர் அண்ணே! இந்த வார ஆன்ந்த விகடன் ல தீதும் நன்றும் படிச்சீங்க போலிருக்கு?

    ReplyDelete
  10. /////Blogger கூடுதுறை said...
    ஐயா வீட்டுப்பாடம் எழுதி அனுப்பிவிட்டேன்...
    வீட்டுப்பாடம் இருப்பதால் நிறைய மாணவர்கள் இன்றைய பாடத்திலிருந்து எஸ்கேப்..../////

    கிடைத்தது. பார்த்துப் பதில் எழுதுகிறேன்
    அதெல்லாம் மெல்ல மெல்ல வருவார்கள் கூடுதுறையாரே!

    ReplyDelete
  11. Blogger Aruppukkottai Baskar said...
    //"சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
    நடையும் நடைப்பழக்கம்
    கொடை, தயை, ஈகை
    மூன்றும் குடிப்பழக்கம்"//
    "சித்திரமும் கைப்பழக்கம் ;
    செந்தமிழும் நாப்பழக்கம்,
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
    நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
    தானம் , தயை , நட்பு , பிறவி
    குணப்பழக்கம் .!"
    அய்யா இதில் எது சரியானது ?/////

    குடிப்பழக்கம் என்பது குடும்ப பாரம்பரியத்தால் வருவது என்று பொருள்படும். அதுதான் சரியானது!

    ReplyDelete
  12. /////Blogger அணுயோகி said...
    பாஸ்கர் அண்ணே! இந்த வார ஆனந்த விகடன்ல தீதும் நன்றும் படிச்சீங்க போலிருக்கு?///

    இருக்கலாம் சாமி! பலவற்றையும் படிப்பது நல்லதுதானே!

    ReplyDelete
  13. I have just sent to your mail id in the morning itself, attempted first 14 questions only. Will I get Pass Mark?


    Sridhar S

    ReplyDelete
  14. கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை முடித்து அனுப்பியவர்கள் இதுவரை 7 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    1. கே.தங்கராஜூ
    2. சங்கரலிங்கம் பிச்சையா
    3. சண்முகசுந்தரம் (கூடுதுறை)
    4. வி.என்.சுதாகர்
    5. Sridhar Subramaniam
    6. அருண் ராஜேஷ்
    7. வசந்தன் தேவநாதன்

    தற்சமயம் நேரமின்மையால், அவர்களுடைய விடைத்தாள் களைத் திருத்த முடியவில்லை. திருத்திய பிறகு அவர்களுக்குத் தனி மின்னஞ்சலில் வாங்கிய மதிப்பெண்களைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  15. //தற்சமயம் நேரமின்மையால், அவர்களுடைய விடைத்தாள் களைத் திருத்த முடியவில்லை. திருத்திய பிறகு அவர்களுக்குத் தனி மின்னஞ்சலில் வாங்கிய மதிப்பெண்களைத் தெரிவிக்கிறேன்.//

    அதுக்குத்தான் பரிட்சை வெச்சா லீவு விடுறது!

    (ம் எங்க பள்ளிக் கூடத்துல லீவு விட்டாக் கூட எல்லா வினாத்தாள்களுக்கும் சாய்ஸ்ல கூட விடாம திரும்ப எழுதிகிட்டு வரச் சொல்லுவாங்க! அதுக்கு லீவே விடாம இருந்திருக்கலாம்னு ஆயிடும்!)

    ReplyDelete
  16. //வீட்டுப்பாடம் இருப்பதால் நிறைய மாணவர்கள் இன்றைய பாடத்திலிருந்து எஸ்கேப்....//

    லீவு விட்டதால விளையாடப் போயிட்டோம்! கிளாஸ்லயே வந்து ஹோம்வொர்க் எழுதி முடிச்சிடுவோம்ல!

    ReplyDelete
  17. காரகன் - என்பதை துறை வாரியான மந்திரிகள்(அமைச்சர்கள்) என்று கூறலாம் அல்லவா?

    உம்: மின்சாரத் துறை - ஆற்காட்டார்!

    ReplyDelete
  18. //ஆகவே வீடுகள் காலியாக இருந்தால் கவலைப் படாதீர்கள்//

    என்கிட்டே சொல்லி வெச்சீங்கன்னா நல்ல வாடகைக்கு பேச்சிலர்/ஃபேமிலி பிடிச்சிக் கொண்டாந்துடுவேன்!

    - ஹவுஸ் புரோக்கர் கந்தசாமி!

    ReplyDelete
  19. /////நாமக்கல் சிபி said...
    //தற்சமயம் நேரமின்மையால், அவர்களுடைய விடைத்தாள் களைத் திருத்த முடியவில்லை. திருத்திய பிறகு அவர்களுக்குத் தனி மின்னஞ்சலில் வாங்கிய மதிப்பெண்களைத் தெரிவிக்கிறேன்.//
    அதுக்குத்தான் பரிட்சை வெச்சா லீவு விடுறது!
    (ம் எங்க பள்ளிக் கூடத்துல லீவு விட்டாக் கூட எல்லா வினாத்தாள்களுக்கும் சாய்ஸ்ல கூட விடாம திரும்ப எழுதிகிட்டு வரச் சொல்லுவாங்க! அதுக்கு லீவே விடாம இருந்திருக்கலாம்னு ஆயிடும்!)////

    நானும் அப்படியே செய்கிறேன்.

    ReplyDelete
  20. //////நாமக்கல் சிபி said...
    //வீட்டுப்பாடம் இருப்பதால் நிறைய மாணவர்கள் இன்றைய பாடத்திலிருந்து எஸ்கேப்....//
    லீவு விட்டதால விளையாடப் போயிட்டோம்! கிளாஸ்லயே வந்து ஹோம்வொர்க் எழுதி முடிச்சிடுவோம்ல!////

    இதுவரை 8 பேர்கள் மட்டுமே விடை எழுதியிருக்கிறார்கள்

    ReplyDelete
  21. ///////நாமக்கல் சிபி said...
    காரகன் - என்பதை துறை வாரியான மந்திரிகள்(அமைச்சர்கள்) என்று கூறலாம் அல்லவா?
    உம்: மின்சாரத் துறை - ஆற்காட்டார்!////

    காரகன் என்பதற்கு authority என்று கொள்ளலாம்.

    Steel authority of India
    Telephone regulatory authority of India (TRAI)
    இவைபோல

    ReplyDelete
  22. /////நாமக்கல் சிபி said...
    //ஆகவே வீடுகள் காலியாக இருந்தால் கவலைப் படாதீர்கள்//
    என்கிட்டே சொல்லி வெச்சீங்கன்னா நல்ல வாடகைக்கு பேச்சிலர்/ஃபேமிலி பிடிச்சிக் கொண்டாந்துடுவேன்!
    - ஹவுஸ் புரோக்கர் கந்தசாமி!////


    முதலில் உங்கள் ஜாதகத்தில் உள்ள காலி வீடுகளில் குடி அமர்த்துங்கள்:-)))

    ReplyDelete
  23. அலுவலகத்தில் வேலைப் பளு அதிகம் குருவே. இன்றிரவே வினாத்தாளை அனுப்பி விடுகின்றேன்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  24. //இன்றிரவே வினாத்தாளை அனுப்பி விடுகின்றேன்.//

    வினாத்தாளை அனுப்பாதீர்கள் ! மார்க் கிடைக்காது .
    விடைத்தாளை அனுப்புங்கள் .

    ReplyDelete
  25. //இதுவரை 8 பேர்கள் மட்டுமே விடை எழுதியிருக்கிறார்கள்//

    அப்போ எட்டாமிடம் எனக்குத்தானா?

    :)

    ReplyDelete
  26. //வினாத்தாளை அனுப்பாதீர்கள் ! மார்க் கிடைக்காது .
    விடைத்தாளை அனுப்புங்கள் //

    இதை நான் வன்மையாக வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  27. //அலுவலகத்தில் வேலைப் பளு அதிகம் குருவே. இன்றிரவே வினாத்தாளை அனுப்பி விடுகின்றேன்//

    எப்படி! வாத்தியார் விடைகளை எழுதி அனுப்புவாரா?

    ReplyDelete
  28. //ஹைய்யா! இன்னைக்கு நான் தான் முதல்ல வந்தேன்!//

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. //ஹைய்யா! இன்னைக்கு நான் தான் முதல்ல வந்தேன்!//

    முதலில் வந்தது இருக்கட்டும்!

    விடைகள் எங்கே என்று வாத்தியார் கேட்கிறார்!

    - வாத்தியார் சார்பாக,
    நாமக்கல் சிபி!

    ReplyDelete
  30. //அது வெள்ளியன்று மாலை வரும்//

    எந்த வெள்ளி என்று கேட்கத்தான் நினைக்கிறேன்! ஆனால் வாத்தியார் அனைத்து வேலைகளுக்கு நடுவிலும் இதையும் எழுதுகிறார். நேரமின்மையாக இருக்கலாம் என்பதைக் கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை உன்னால் என்று என் புத்தி கேட்கிறது?

    புத்தியா? குசும்பா? எது வெல்கிறது என்று தெரியவில்லை! இதனை எப்படித் தெரிந்து கொல்வது?

    ReplyDelete
  31. //Blogger நாமக்கல் சிபி said...
    //அது வெள்ளியன்று மாலை வரும்//
    எந்த வெள்ளி என்று கேட்கத்தான் நினைக்கிறேன்!//

    இதை சங்கத்தலைவர் கேட்காமல் யார் கேட்பது?

    //ஆனால் வாத்தியார் அனைத்து வேலைகளுக்கு நடுவிலும் இதையும் எழுதுகிறார். நேரமின்மையாக இருக்கலாம் என்பதைக் கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை உன்னால் என்று என் புத்தி கேட்கிறது?//

    இது உண்மை... அதிகம் வற்புறுத்தினால் ஜோதிடம் பாடம் நிறைவுபெறுகிறது என்று பதிவு வந்துவிடும் ஜாக்கிரதை...


    //புத்தியா? குசும்பா? எது வெல்கிறது என்று தெரியவில்லை! இதனை எப்படித் தெரிந்து கொல்வது?//

    என்னது தெரிந்து கொல்வதா? என்ன கொடுமை இது?

    ReplyDelete
  32. குருவே,

    விடைத்தாளை அனுப்பி விட்டேன். 5 பக்கம் தட்டச்சு செய்யவே கடினமாக உள்ளது. பல்வேறு அலுவல்களுக்கு இடையே, 120 பதிவுகளுக்கும் மேலாக தட்டச்சு செய்து எங்களுக்கு பாடம் நடத்தும் உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகின்றோம். அந்த கைகளை தனியாக ஒரு பதிவில் புகைப்படம் எடுத்து இடவும். கண்களில் ஒத்திக் கொள்கின்றோம்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  33. //அந்த கைகளை தனியாக ஒரு பதிவில் புகைப்படம் எடுத்து இடவும். கண்களில் ஒத்திக் கொள்கின்றோம்//

    ஆஹா! லீடர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டி இருக்கும்போல!

    :))

    (கோச்சிக்காதீங்க இராசகோபல் சும்மா லுலூங்காட்டிக்கு)

    எப்படி இருந்தாலும் லீடர் பதவி கிடைக்க ஜாதகத்துல அமைப்பு இருக்கணும்!

    ReplyDelete
  34. //புத்தியா? குசும்பா? எது வெல்கிறது என்று தெரியவில்லை! இதனை எப்படித் தெரிந்து கொல்வது?//

    என்னது தெரிந்து கொல்வதா? என்ன கொடுமை இது?
    //

    :))

    வெல்வது/கொல்வது என்ற எதுகை மோனையுடன் இருக்கும் அல்லவா! (அல்வா அல்ல)
    அதான்!

    ReplyDelete
  35. ஆமா! கூடுதுறை நாடி ஜோதிடத்துக்கு பேர் போன ஊராச்சே!

    ReplyDelete
  36. //Blogger நாமக்கல் சிபி said...
    ஆமா! கூடுதுறை நாடி ஜோதிடத்துக்கு பேர் போன ஊராச்சே!//

    ஆமாம் பெயர் போனதுதான்... போனால் இடுப்பில் உள்ள அன்னாகயிற்றைக்கூட உருவிக்கொண்டு விட்டுவிடுவார்கள்..

    the great group of TOBUKKOOURRSS..

    ReplyDelete
  37. தேர்வில் பிட் அடிக்க வழி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தயார் ஆனதும் தேர்வில் குதித்துவிடுகிறேன்

    ReplyDelete
  38. எல்லாப் பதிவுகளுமே நன்றாக் இருந்தது.

    சித்திரமும் கைப்பழக்கஞ் செந்தமிழு நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
    நடையு நடைப்பழக்க நட்புந் தகையும்
    கொடையும் பிறவிக்குணம.

    இது ஒளவையார் எழுதியது

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com