25.9.08

மன்னனிடம் என்ன சொல்லித் தப்பித்தார் ஜோதிடர்?

ஜாதகம், கைரேகை போன்று எந்தக் குறிப்பும் இல்லாமல், கேட்கும்
கேள்விகளுக்கு தன் ஞான திருஷ்டியால் சரியாக, துல்லியமாகப் பதில்
சொல்லும் ஜோதிடர் ஒருவர் இருந்தார். Nostradamus போல என்று
வைத்துக்கொள்ளுங்களேன்

அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன், அவரை அரண்மனைக்கு
அழைத்து, "என் அன்பு மனைவியோடு நான் எத்தனை காலம் வாழ்வேன்?
நான் முதலில் போவேனா? அல்லது அவள் முதலில் இறந்து போவாளா?
உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

தன் அகக்கண்களால் நடக்க இருப்பதை உணர்ந்த ஜோதிடர்,
மன்னனிடம் சொன்னார்,"மன்னா! சற்றுப் பொறு! மூன்று தினங்கள்
கழித்து இதற்குப் பதில் சொல்கிறேன்" என்றார். மன்னன் விடவில்லை!

வேறு வழியில்லாமல் ஜோதிடர் நடக்க இருப்பதை சொல்லித் தொலைத்தார்.

"மன்னா, இன்னும் மூன்று தினங்களில் உன் மனைவி இறந்து விடுவாள்!"
என்று அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.

சற்று நிலை குலைந்து போய்விட்ட மன்னன், "எப்படி இறப்பாள்?" என்று
வருத்தம் தொனிக்கக் கேட்டான்.

"அதைச் சொல்ல முடியாது. முடிந்தால் அருகிருந்து அவளைக் காப்பாற்ற
முயற்சி செய்" என்று சொல்லிவிட்டு, விடு விடுவென்று போய் விட்டார்.

அவர் சொன்னபடியே நடந்துவிட்டது. அரசரின் அன்பு மனைவி
மூன்றாவது நாள் காலையில் இறந்து போய் விட்டாள்.

அதிகாலையில் தன் தோழியுடன் அரண்மனைத் தோட்டத்தில் நடைப் பயிற்சி
மேற்கொண்டிருந்த அரிசியாரை, மதம் பிடித்து ஓடி வந்த யானை கீழே தள்ளி
மிதித்துக் கொன்று விட்டது.

அரசன் மிகுந்த துக்கத்திற்கு ஆளானான். ராணியின் அந்திமக் கிரியைகள்
நடந்து முடிந்தன.

அனால் மன்னனின் கோபம் மட்டும் தீரவில்லை. 3 தினங்களில் அவள்
இறந்துவிடுவாள் என்று துல்லியமாகச் சொன்ன ஜோதிடன், அவள்
யானையால் இறப்பாள் என்று சொல்லியிருந்தால், காப்பாற்றியிருக்கலாமே
என்ற வருத்தம் மேலிட்டு, அதுவும் கோபத்துடன் சேர்ந்துகொண்டது.

கோபத்தின் உச்சிக்குச் சென்ற மன்னன், தன் ஆட்களை அனுப்பி ஜோதிடரைப்
பிடித்துக் கொண்டு வரச்சொன்னான். வந்தவரிடம். கோபமாகக் கேட்டான்.

"உமது ஆயுள் இன்னும் எத்தனை வருடம்? சொல்ல முடியுமா?"

என்ன பதில் சொன்னாலும், அதாவது அயுளைப் பற்றிக் கூட்டிக் குறைத்து
என்ன சொன்னாலும், மன்னன், அந்தக் கனமே அதைப் பொய்யாக்கத் தன்னைக்
கொன்றுவிடத் தயங்க மாட்டான் என்பதை உணர்ந்த ஜோதிடர் ஒரு விநாடி
அரண்டு போய்விட்டார்.

இருந்தாலும் ஒரு வினாடியில் சுதாகரித்துக் கொண்டு, அதை வெளிக்காட்டாமல்
புத்திசாலித்தனமாக, துணிச்சலாக ஒரு பதிலை வேண்டுமென்றே, சொன்னார்.

இப்போது மன்னன் அரண்டு போய், அவரை உயிரோடு விட்டு விட்டான்!

என்ன சொல்லியிருப்பார் அவர்?

ஊகம் செய்து உங்கள் விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20 comments:

  1. மன்னர் உயிர் விடும் ஐந்து நிமிடத்திற்கு முன்பு என் உயிர் போகும் என்று...

    ReplyDelete
  2. நான் இறந்த மறு நிமிடமே நீயும் இறந்து விடுவாய். :-)))

    ReplyDelete
  3. மன்னன் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் தனக்கு மரணம் நேரும் என்று சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
  4. உள்ளேன் ஐயா !

    மன்னனின் இறப்புக்கு பின்பு தான் என்னுடைய மரணம் என்று கூரி இருபாரோ?

    ReplyDelete
  5. இப்படி சொல்லியிருப்பாரோ?

    விதிப்படி நீங்கள் இறந்த உடனே நானும் இறப்பேன்.

    ReplyDelete
  6. பதில் மன்னன் நம்பும்படியாக இருக்க வேண்டும் கண்மணிகளா!
    ஜோதிடர் சொன்னது அசத்தலான பதில். அரசன் நம்பிவிட்டான். அதனாலதான் அவரைக் கொல்லாமல் விட்டான்.
    கேள்வி இதுதான்: ஜோதிடர் அசத்தலாக - மன்னன் நம்பும்படியாக என்ன சொல்லியிருப்பார்?

    ReplyDelete
  7. என் விதியை என்னால் பார்க்க கூடாது, மிறி பார்க்கும்படிச் சொன்னால் சொன்னவர் மூன்று நாளில் மரணம் அடைவார். தங்கள் விருப்பம் அது எனில் கூறுங்கள். பார்த்துச் சொல்கிறேன்.

    ReplyDelete
  8. மன்னனின் பேரன் ஆட்சி காலத்தில்......என் சிற்றறிவிற்க்கு எட்டியது...

    ReplyDelete
  9. //ஜோதிடர் அசத்தலாக - மன்னன் நம்பும்படியாக என்ன சொல்லியிருப்பார்?//

    என்ன சொல்லியிருப்பார்?
    நீங்களே சொல்லீடுங்க சஸ்பென்ஸ் தாங்கலை. :-)

    ReplyDelete
  10. சோதிடர்: மன்னா ! தாங்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நான் இறப்பேன்.......

    மன்னர்: ????????

    எங்கோ படித்த ஞாபகம்....

    ReplyDelete
  11. ஜோதிடர் சொன்ன பதில்:

    "மன்னா, எனக்கு நானே கணிக்கும் சக்தி இல்லை. என் ஆயுள் எத்தனை ஆண்டுகள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு மரணம் சம்பவித்த மூன்றாம் நாள் இந்த நாட்டில் ஒரே நாளில் இரண்டு அசம்பாவிதங்கள் நடைபெறும். அதில் இந்த நாட்டு மன்னனும், பட்டத்து இளவரசனும் இறந்து போவார்கள்"

    உண்மையிலேயே பெரும் அதிர்ச்சிக்குள்ளான மன்னன் கேட்டான்," எப்படி இறந்து போவார்கள்?"

    "எதிரிகளின் சூழ்ச்சியால் விஷம் வைத்துக் கொல்லப்படுவார்கள்"

    இவன் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகுதானே அது நடக்கும் என்று நினைத்த மன்னன், இவன் சீக்கிரம் இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, வெளியே விட்டதோடு, ஜோதிடருக்கு, இடம், நிலம், பெரிய வீடு எல்லாம் கொடுத்து, பாதுகாப்பிற்கு ஆறு படை வீரர்களையும் அளித்து, நன்றாக உபசரித்துப் பார்த்துக்கொண்டான்!

    கதையின் முடிவு எப்படி இருக்கிறது கண்மணிகளா?

    ReplyDelete
  12. //ஜோதிடருக்கு, இடம், நிலம், பெரிய வீடு எல்லாம் கொடுத்து, பாதுகாப்பிற்கு ஆறு படை வீரர்களையும் அளித்து, நன்றாக உபசரித்துப் பார்த்துக்கொண்டான்!//

    அந்த காலத்து ஐயமாருங்க, மன்னர்களை பயமுறுத்தி
    சதுர்வேதி மங்கலம் பெற்ற கதை மாதிரி இருக்கு. :)

    ReplyDelete
  13. ஹலோ வாத்தியாரய்யா,

    அதி அற்புதமான கதை. நான் படிச்சதும் கேட்டதும் இல்லாதது.கதையின் முடிவு முதலில் நான் நினைச்சது "மன்னா! என் முடிவும் உங்கள் கையில தான் உள்ளது" என்று சொல்வார் னு நினைச்சேன்.
    ஆனால் முடிவும் நன்றாக தான் இருக்கிறது. அது சரி இன்றைய பாடமும் இனி வரும்பாடமும் இதை பற்றி தானா? காத்திருக்கிறேன், இதை பற்றிகேக்க தயக்கமாக இருந்தது, நீங்களே சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க, நன்றி.பாக்கலாம் எப்படி புரிந்து கொள்ளப் போகிறேன் என்று.

    ReplyDelete
  14. //கதையின் முடிவு எப்படி இருக்கிறது கண்மணிகளா?//

    ஐயா,
    அது என்ன மூணு கணக்கு? (மூணு முடிச்சு, மூணு காலம், மூணு மூர்த்தி... சரி "ஈஸ்வரான்னு" சொல்லி சங்கரனை பார்த்தேன் அவருக்கும் மூணு கண்ணு என்ன செய்யலாம்

    ஹர ஹர மஹாதேவான்னு கோஷம் போடலாம் :-)

    அருமையான கதைக்கு நன்றி வாத்தியாரைய்யா.

    ReplyDelete
  15. /////கோவி.கண்ணன் said...
    //ஜோதிடருக்கு, இடம், நிலம், பெரிய வீடு எல்லாம் கொடுத்து, பாதுகாப்பிற்கு ஆறு படை வீரர்களையும் அளித்து, நன்றாக உபசரித்துப் பார்த்துக்கொண்டான்!//
    அந்த காலத்து ஐயமாருங்க, மன்னர்களை பயமுறுத்தி
    சதுர்வேதி மங்கலம் பெற்ற கதை மாதிரி இருக்கு. :)/////

    "யாரங்கே?"
    "வந்தேன் மன்னா! என்ன செய்ய வேண்டும் உத்தரவு இடுங்கள்!"
    "சதா சர்வ காலமும், மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப்போடும் கோவியானந்தாவைப் பிடித்துக் கொண்டு வந்து நமது
    அரண்மனை சேடிப்பெண்கள் இருபது பேர்களோடு சேர்த்து ஒரு கொட்டடியில் அடைத்துவிடுங்கள். ஒருமாதம் வெளியே விடாதீர்கள்.அதற்குப் பிறகு ஹஹ்..ஹஹ்ஹா...நான் பார்த்துக்கொள்கிறேன்!":-))))

    ReplyDelete
  16. /////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    அதி அற்புதமான கதை. நான் படிச்சதும் கேட்டதும் இல்லாதது.கதையின் முடிவு முதலில் நான் நினைச்சது "மன்னா! என் முடிவும் உங்கள் கையில தான் உள்ளது" என்று சொல்வார் னு நினைச்சேன்.
    ஆனால் முடிவும் நன்றாக தான் இருக்கிறது. அது சரி இன்றைய பாடமும் இனி வரும்பாடமும் இதை பற்றி தானா? காத்திருக்கிறேன், இதை பற்றிகேக்க தயக்கமாக இருந்தது, நீங்களே சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க, நன்றி.பாக்கலாம் எப்படி புரிந்து கொள்ளப் போகிறேன் என்று./////

    நான் மிகவும் எளிமையாகத்தான் எழுதுகிறேன். அதனால் அனைவருக்கும் புரியும். கவலை வேண்டாம் சகோதரி!

    ReplyDelete
  17. //////சிவமுருகன் said...
    //கதையின் முடிவு எப்படி இருக்கிறது கண்மணிகளா?//
    ஐயா,
    அது என்ன மூணு கணக்கு? (மூணு முடிச்சு, மூணு காலம், மூணு மூர்த்தி... சரி "ஈஸ்வரான்னு" சொல்லி சங்கரனை பார்த்தேன் அவருக்கும் மூணு கண்ணு என்ன செய்யலாம்
    ஹர ஹர மஹாதேவான்னு கோஷம் போடலாம் :-)
    அருமையான கதைக்கு நன்றி வாத்தியாரைய்யா.///

    மூன்று என்ற எண்ணிற்கு ஒரு பவர் உண்டு. குருவின் (Jupiter) எண் அது! அதனால் நீங்கள் கோஷம் போடலாம் தவறில்லை!

    ReplyDelete
  18. கதையில் வரும் ஜோதிடரின் புத்தி கூர்மையும் அருமை :-)

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  19. /////Rajagopal said...
    கதையில் வரும் ஜோதிடரின் புத்தி கூர்மையும் அருமை :-)
    அன்புடன்
    இராசகோபால்///

    அந்தக் கூர்மையினால்தானே தப்பிக்க முடிந்தது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com