18.9.08

எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!

"சார், ரெம்ப நாளா, வீட்டில் வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், ஒன்றும்
முடிந்த பாடாக இல்லை! எப்போது திருமணம் நடைபெறும்? அதைத் தெரிந்து
கொள்ள வழி இருக்கிறதா?"

இப்படி எனக்கு மின்னஞ்சல்கள் வரும்.

குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம்
என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு
அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9
ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.

சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல
தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும்
திருமண யோகம் உண்டு.

அம்மாடியோவ், இத்தனை விஷயங்களைப் பார்க்க வேண்டுமா? குறுக்குவழி கிடையாதா?

ஏன் இல்லை? நமக்கு எப்போதும் குறுக்கு வழிதானே (short route) பிடிக்கும்!

ஒரு குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுக்கவுள்ளேன்.

திருமணமாகாதவர்களுக்கு அது பயன்படும். அதோடு திருமணமாகியவர்களுக்கு,
அவர்களுடைய வீட்டிலுள்ள மற்றவர்களுக்குப் பார்க்கப் பயன்படும்.

ஆகவே அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

விவரமாகவே கொடுத்துள்ளேன். தேவையானவர்கள், அவரவர்களாகவே பார்த்துக்
கொள்ள வேண்டுகிறேன்.பார்த்துச் சொல்லுங்கள் என்று யாரும் தங்களுடைய
ஜாதகத்தை அனுப்ப வேண்டாம். எனக்கு நேரமில்லை. நேரம்தான் என்னுடைய
முதல் பிரச்சினை. நாளொன்றுக்கு 48 மணி நேரமாக இருந்தால் நன்றாக இருக்கும்:-))))
---------------------------------------------------------------------------------
லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள் வகுத்தல்
30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது
திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
---------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில்
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில்
திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.

அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான
காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.

மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை
அமையாமலே போகலாம்!
--------------------------------------------------------------------------------
மனைவியின் நட்சத்திரம்:

லக்கினாதிபதியின் அட்ச ரேகை கூட்டல் சுக்கிரனின் அட்சரேகை வகுத்தல்
13.33 பாகைகள் = மனைவியின் நட்சத்திரம்.

சுக்கிரனை விட ஏழாம் வீட்டதிபன் வலுவாக இருந்தால்:

லக்கினாதிபதியின் அட்ச ரேகை கூட்டல் ஏழாம் வீட்டதிபனின் அட்சரேகை
வகுத்தல் 13.33 பாகைகள் = மனைவியின் நட்சத்திரம்.

எதற்காக வகுத்தல் 13.33 ?

360 பாகைகள் வகுத்தல் 27 நட்சத்திரங்கள் = 13.33 பாகைகள் (ஒரு நட்சத்திரத்தின் அளவு)

Example:
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினதிபதி நிற்கும் அட்சரேகை: 298.01 கூட்டல்
ஏழாம் வீட்டதிபதி நிற்கும் அட்சரேகை 117.27 = 415.28
கழித்தல் ஒரு முழுச்சுற்று 360.00 = மீதி 55.28
இந்த 55.28 என்பது 5வது நட்சத்திரம் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி
என்று எண்ணிக் கொண்டு வரும் போது ஐந்தாவது நட்சத்திரம். அதுதான் அந்த
ஜாதகரின் மனைவியின் நட்சத்திரம்.
---------------------------------------------------------------------------
திருமணம் ஆனவர்கள் வகுத்துப் பாருங்கள். சரியாக வந்தால் சந்தோஷப் படுங்கள்
வராவிட்டால் ஏன் வரவில்லை என்று மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள்.
அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பி என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பி விடாதீர்கள்

பின்னூட்டத்தில் பொதுவான கேள்விகளள மட்டும் கேளுங்கள்.

இது ஒரு பொது சூத்திரம்தான். லக்கினாதிபன், அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது
சுக்கிரன் ஆகியோர்கள், ஜாதகத்தில் மறைந்திருந்தாலும் அல்லது வேறு கிரகத்தோடு
மோதி அஸ்தனமாகியிருந்தாலும், அல்லது வேறு அவயோகத்தில் அல்லது தோஷத்தில்
சிக்கியிருந்தாலும் அல்லது லக்கினத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ ஒன்றிற்கு
மேற்பட்ட கிரகம் இருந்தாலும் (That is more than one wife yoga), இந்த Formula
வின்படி சரியான நட்சத்திரம் கிடைக்காது. அதனால்தான் அதை வலியுறுத்திச் சொல்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

36 comments:

  1. Dear Sir,

    This is a new and interesting way. Thank you for giving many useful informations. The links for astrology software in your blog page ask for license. Is it not free softwares?

    Thank you
    Sundar

    ReplyDelete
  2. ஐயா எனக்கு 72 மணி நேரம் வேண்டும். வாருங்கள் இருவரும் தமிழ்மணத்தில் பரிந்துரை பதிவு போடுவோம் கூட்டம் கூட்ட முடிகிறதா எனப் பார்க்கலாம். நல்ல பலன் என்றால் ஒரு புரட்ச்சி ஏற்பட்ட நற்பெயர் உங்களுக்கு... கூட ஒட்டி நின்ற எனக்கும்... :))

    இருங்க பதிவ படிச்சிட்டு 'செக்கண்ட்' ரவுண்டு வரேன்...

    ReplyDelete
  3. படித்துவிட்டேன்... மகிழ்ச்சியும் இல்லை கவலையும் இல்லை..

    ஒரு சந்தேகம்...

    இராஜ ராஜ சோழனுக்கு 24 மனைவிகளாம். மற்றவை சேர்த்தி இல்லை...

    அந்த மாறி துரதிஷ்டம் இருக்க இல்லையானு எப்படி தெரிந்துக் கொள்வது?

    ReplyDelete
  4. ஹலோ வாத்தியாரய்யா,

    என்ன இப்படி படுத்திட்டீங்க?
    இப்ப போயி கணக்குல்லாம் குடுத்து, அது சரி இவ்வளவு வருஷத்துக்கு அப்பறம் எனக்கு எதுக்கு இந்த வீண் வேலையெல்லாம்? இனி மேலே மாத்திக்க முடியுமா என்ன? ஆனாலும் தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு பாக்கலாம் னா ஒன்னும் புரிய மாட்டேங்குதே.

    ReplyDelete
  5. /////sundar said...
    Dear Sir,
    This is a new and interesting way. Thank you for giving many useful informations. The links for astrology software in your blog page ask for license. Is it not free softwares?
    Thank you
    Sundar/////

    ஜகந்நாத ஹோராவைப் பயன் படுத்துங்கள் அது இலவச மென்பொருள்தான்!

    ReplyDelete
  6. //////VIKNESHWARAN said...
    ஐயா எனக்கு 72 மணி நேரம் வேண்டும். வாருங்கள் இருவரும் தமிழ்மணத்தில் பரிந்துரை பதிவு போடுவோம் கூட்டம் கூட்ட முடிகிறதா எனப் பார்க்கலாம். நல்ல பலன் என்றால் ஒரு புரட்சி ஏற்பட்ட நற்பெயர் உங்களுக்கு... கூட ஒட்டி நின்ற எனக்கும்... :))
    இருங்க பதிவ படிச்சிட்டு 'செக்கண்ட்' ரவுண்டு வரேன்.../////

    இறைவனிடம் வேண்டி நின்றாலே நடக்காது அது! தமிழ்மணப் பதிவர்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?
    ஒரு புலம்பல் அவ்வளவுதான்!:-))))

    ReplyDelete
  7. /////VIKNESHWARAN said...
    படித்துவிட்டேன்... மகிழ்ச்சியும் இல்லை கவலையும் இல்லை..
    ஒரு சந்தேகம்...
    இராஜ ராஜ சோழனுக்கு 24 மனைவிகளாம். மற்றவை சேர்த்தி இல்லை...
    அந்த மாறி துரதிஷ்டம் இருக்க இல்லையானு எப்படி தெரிந்துக் கொள்வது?////

    அப்படி இருப்பது துரதிஷ்டம் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். பிறகு அதைப் பற்றி எதற்குக் கவலை?
    சுக்கிரன், சனி, ராகு அல்லது கேது, ஏழாம் வீட்டு அதிபதி இப்படி எல்லோரும் கூட்டணி போட்டிருந்தால்
    ஜாதகன் அப்படித்தான் ஸ்திரிலோலனாக இருப்பான். ராஜராஜன் அப்படியிருந்ததாகத் தெரியவில்லை!

    ReplyDelete
  8. //// sumathi. said...ஹலோ வாத்தியாரய்யா,
    என்ன இப்படி படுத்திட்டீங்க?
    இப்ப போயி கணக்குல்லாம் குடுத்து, அது சரி இவ்வளவு வருஷத்துக்கு அப்பறம் எனக்கு எதுக்கு இந்த வீண் வேலையெல்லாம்? இனி மேலே மாத்திக்க முடியுமா என்ன? ஆனாலும் தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு பாக்கலாம்னா ஒன்னும் புரிய மாட்டேங்குதே.////

    இரண்டு அல்லது மூன்று முரை படியுங்கள் சகோதரி. புரியும். எளிமையாகத்தான் எழுதியுள்ளேன்!

    ReplyDelete
  9. ஆசானே! இன்றைய கணிதம் கலந்த பாடம் எளிமையாக்வும்,புரியும்படியும் இருந்தது. நன்றி

    ReplyDelete
  10. hi master,
    i want you to write article on vakra planets i.e retrograde planets.
    thank you master

    ReplyDelete
  11. குருவே,

    பாடம் அருமை. குரு தசை, குரு புக்தி, 7-ல் குரு (லக்னத்தில் இருந்து) / 2-ல் குரு (ஜென்ம ராசியில் இருந்து) திருமணம் நடப்பது சிறந்ததா?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  12. எனக்கு என்னமோ யார் யார்-னெ விளங்கால தயவு சென்சு எனக்கு யார் வாருவாண்னு சொல்லுத்தீங்கனா வசதியா இருக்கும்.......!!!

    (சினேகா-னு சொல்லிடத்ீங்க...:-)))

    ReplyDelete
  13. ///// அணுயோகி said...
    ஆசானே! இன்றைய கணிதம் கலந்த பாடம் எளிமையாகவும்,புரியும்படியும் இருந்தது. நன்றி/////

    அனைவருக்கும் எளிமையாகப் புரிய வேண்டும். அதுதான் நான் சிரத்தையுடன் எழுதுவதன் நோக்கம்! நன்றி அணுயோகி!

    ReplyDelete
  14. //// gonzalez said...
    hi master,
    i want you to write article on vakra planets i.e retrograde planets.
    thank you master////

    Don't worry my dear friend.I will write it shortly!

    ReplyDelete
  15. //// rajagopal said...குருவே,
    பாடம் அருமை. குரு தசை, குரு புக்தி, 7-ல் குரு (லக்னத்தில் இருந்து) / 2-ல் குரு (ஜென்ம ராசியில் இருந்து) திருமணம் நடப்பது சிறந்ததா?
    அன்புடன்
    இராசகோபால்/////

    நல்லதுதான்.7ல் இருப்பவர் திசை அல்லவா? பொதுவாக எந்தத் திசையாக இருந்தாலும் அதில் வரும் சுக்கிர புத்தியில்தான் பெரும்பாலோருக்குத் திருமணம் நடைபெறும். சிலருக்கு மட்டும். எழாம் இடத்து அதிபதி அல்லது ஏழில் அமர்ந்திருப்பவனுடைய திசையில் திருமணம் நடக்கும். இதற்கு fixed rule என்று எதுவும் கிடையாது.

    ReplyDelete
  16. //// கோவை விமல்(vimal) said...
    எனக்கு என்னமோ யார் யாரென விளங்கவில்லை. தயவுசெய்து எனக்கு யார் வருவார்கள் என்று சொன்னால் வசதியாக இருக்கும்.......!!! //////

    குருவாயூரப்பனைக் கும்பிடுங்கள். நல்ல அன்பான மனைவியாகக் (ராதையைப் போல) கிடைப்பாள்.

    ReplyDelete
  17. Dear sir

    I finished reading, but I have not used formula yet...after trying that I will pose my questions. Thanks for your blog!

    -Shankar

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Dear Sir,

    How to calculate or how to see the lattitude on Jagnath horsocope, for example, if meena is ascendent with mercury on it...and 7th house is kanni. where as Jupiter in 9th house....how to calculate these? should jupiter and mercury longitude should be counted or what?

    Moreover, lagna longitude is not in jaganath hora...or I am lost!!! Please explain

    -Shankar

    ReplyDelete
  20. ////hotcat said...
    Dear Sir,
    How to calculate or how to see the lattitude on Jagnath horsocope, for example, if meena is ascendent with mercury on it...and 7th house is kanni. where as Jupiter in 9th house....how to calculate these? should Jupiter and mercury longitude should be counted or what?
    Moreover, lagna longitude is not in jaganath hora...or I am lost!!! Please explain
    -Shankar/////

    உங்கள் கேள்விக்கு உரிய பதிலை தனிப் பதிவாக இன்று பதிவிட்டுள்ளேன் சங்கர்! பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  21. மீண்டும் ஒரு னல்ல பதிவு..நன்றி.

    >>குருவாயூரப்பனைக் கும்பிடுங்கள். நல்ல அன்பான மனைவியாகக் (ராதையைப் போல) கிடைப்பாள்>>

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத வரம்....அதனால இறைவன் எப்படிப்பட்ட மனைவி கொடுத்தாலும் குறை சொல்வது நல்லது அல்ல...

    ReplyDelete
  22. இந்த பதிவு சூப்பர்!

    கணக்கு போட்டு காதல் வந்ததுன்னு ஒரு பாட்டு வரும். "கணக்கு போட்டு கல்யாணம் வந்ததுன்னு மாத்திக்கலாம்!"

    இரொண்டொரு முறை படித்து பின் கணக்க ஆரம்பிக்கிறேன்.

    வர்ர சனி-ஞாயிறு மதுரை செல்கிறேன். கைவசம் இரண்டு ஜாதகம் இருக்கிறது. அப்பாவிடம் ஒரு 25-30 ஜாதகம் உள்ளது அத்தனைக்கும் கணக்கு பார்த்து விடுகிறேன். என்ன சில பேர் இப்போ இல்லை அவங்களோடதை ஒதுக்கி விட வேண்டும்.

    ReplyDelete
  23. ஐயா,

    பிரச்சனைகளே இல்லாமல் இரண்டு திருமணங்கள் செய்து கொள்ளும் சாதகரின் அமைப்பு யோகம் எப்படி இருக்கும் ?
    (கலைஞரின் சாதகத்தைச் சுட்டாமல் சொல்லுங்கள்)
    :)

    ReplyDelete
  24. /////மதி said...
    மீண்டும் ஒரு னல்ல பதிவு..நன்றி.
    >>குருவாயூரப்பனைக் கும்பிடுங்கள். நல்ல அன்பான மனைவியாகக் (ராதையைப் போல) கிடைப்பாள்>>
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத வரம்....அதனால இறைவன் எப்படிப்பட்ட மனைவி கொடுத்தாலும் குறை சொல்வது நல்லது அல்ல...!//////

    கரெக்ட்! நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  25. //////சிவமுருகன் said...
    இந்த பதிவு சூப்பர்!
    கணக்கு போட்டு காதல் வந்ததுன்னு ஒரு பாட்டு வரும். "கணக்கு போட்டு கல்யாணம் வந்ததுன்னு மாத்திக்கலாம்!"
    இரொண்டொரு முறை படித்து பின் கணக்கை ஆரம்பிக்கிறேன்.
    வர்ர சனி-ஞாயிறு மதுரை செல்கிறேன். கைவசம் இரண்டு ஜாதகம் இருக்கிறது. அப்பாவிடம் ஒரு 25-30 ஜாதகம் உள்ளது அத்தனைக்கும் கணக்கு பார்த்து விடுகிறேன். என்ன சில பேர் இப்போ இல்லை அவங்களோடதை ஒதுக்கி விட வேண்டும்./////

    இரண்டு முறையல்ல - நான்கு முறைகள் வேண்டுமென்றாலும் படிக்கலாம். அதில் சிலருக்குச் சரியாக வராது என்று குறிப்புக்கொடுத்துள்ளேன். அதை மனதில் வைத்துக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்குங்கள்!

    ReplyDelete
  26. //////கோவி.கண்ணன் said...
    ஐயா,
    பிரச்சனைகளே இல்லாமல் இரண்டு திருமணங்கள் செய்து கொள்ளும் சாதகரின் அமைப்பு யோகம் எப்படி இருக்கும் ?
    (கலைஞரின் சாதகத்தைச் சுட்டாமல் சொல்லுங்கள்) :)/////

    பிரச்சினையே இல்லாமலா? சாத்தியம் இல்லை!
    பிரச்சினையே இல்லையென்றால் சனீஸ்வரன் விட்டு வைக்க மாட்டான். போர்டிங் பாஸ் கொடுத்து வலுக்கட்டாயமாக அனுப்பிவிடுவான்.

    ReplyDelete
  27. வணக்கம் ஐயா!

    நான் தங்கள் வகுப்பிற்கு புதிய மாணவன்!

    தங்கள் பாடங்கள் மிக அருமை. விஷயஞானம் மற்றும் அறிவியல் கண்ணோட்டமும் நிறைந்து பாலகுமாரனும் சுஜாதாவும் சேர்ந்து எழுதியது போல் very lucid and inspiring ஆக உள்ளன!

    தங்களது இந்த சேவைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்!

    நன்றி ஐயா!

    ReplyDelete
  28. ////Vinothavel said...
    வணக்கம் ஐயா!
    நான் தங்கள் வகுப்பிற்கு புதிய மாணவன்!
    தங்கள் பாடங்கள் மிக அருமை. விஷயஞானம் மற்றும் அறிவியல் கண்ணோட்டமும் நிறைந்து பாலகுமாரனும் சுஜாதாவும் சேர்ந்து எழுதியது போல் very lucid and inspiring ஆக உள்ளன!
    தங்களது இந்த சேவைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்!
    நன்றி ஐயா!/////

    வகுப்பறை என்று பெயர் வைத்துவிட்டு, நன்றாகச் சொல்லிக் கொடுக்க வேண்டுமல்லவா?
    அதுதான் சற்று சிரத்தையோடு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. இந்த பதிப்பிர்க்க்கு ஏதாவது உதாரணத்துடான் விளக்கம் கொடுத்தாய்ல் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  30. just now happen to read this lesson. Immediately worked out the star of my wife through my horoscope, and it worked out well and could be able to arrive at Avittam star. But she is Makaram where as the star arrived at my working was in kumbam part. The number is 308.27 I am not sure whether i made mistake or this logic is only to arrive at star in general does not have anything to do with 1 to 4 padams. Would appreciate your clarification please if possible.

    ReplyDelete
  31. would like to receive follow up to my earlier comment in email to balapulicat@gmail.com Thanks and best regards,

    ReplyDelete
  32. ////////Balasubramanian Pulicat said...
    just now happen to read this lesson. Immediately worked out the star of my wife through my horoscope, and it worked out well and could be able to arrive at Avittam star. But she is Makaram where as the star arrived at my working was in kumbam part. The number is 308.27 I am not sure whether i made mistake or this logic is only to arrive at star in general does not have anything to do with 1 to 4 padams. Would appreciate your clarification please if possible.////////

    தோஷங்கள் உள்ள ஜாதகங்களுக்கு, இந்தக் கணக்கு சரியாக வருவதில்லை.

    ReplyDelete
  33. 7 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரனகவும்,அவன் 7 ஆம் விட்டில் இருந்தால்.அதற்குரிய பலன் யென்ன?

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா!, its me t.dineshkumar. என்னுடைய ராசி கடகம் நச்சத்திரம் அயில்யம். லக்கினத்தில் (மேஷம்) ராகுவுடன் புதன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும். Date of birth-26-05-1985.time-5-am.when I will get married? totally confuced pls help sir.

    ReplyDelete
  35. சார் என் பெயர் க.துரை பிறந்த தேதி ௦1-01-1985 நேரம் 08.47am எனக்கு எப்போது திருமணம் நடக்கும் கணித்து கூறுங்கள் ஐயா!..... நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com