1.9.08

தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?


தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக அழகானவள். பார்த்தவர்களைத்
திரும்பப் பார்க்க வைக்கும் அழகு.

அழகு என்பது எதற்கு இங்கே வலியுறுத்திச் சொல்லப்படுகிறது?

அப்போதுதான் ஒரு சுவாரசியத்தோடு படிப்பீர்கள். பதிவிற்கு வந்து
செல்கிறவர்களில் எண்பது சதவிகிதம் இளைஞர்கள். அதாவது நாற்பது
வயது வரை உள்ள அனைவரும் இளைஞர்கள் என்று நீங்கள்
ஏற்றுக் கொண்டால்!:-))))

நாற்பதிற்கு மேல்தான் நாய்க்குணம்; அறுபதிற்கு மேல் பேய்க்குணம்
(என்பார்கள்) இந்த என்பார்கள் என்பது நான் தப்பித்துக் கொள்வதற்காக!
அதாவது அந்த வயதுக்காரர்களின் கேள்விக் கணைகளில் இருந்து
விடுபடுவதற்காக!:-))))

கோமதி கதைக்கு வருகிறேன்.

காலம் எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.அவளுடைய வீடு
பொதிகைத் தென்றல் வருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில்
இருந்தது.கோமதி நான்கு பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம்
செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும்
குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகமாக வாழ்ந்து
வந்தான்.

பொழுது போக்கு?

அதுதான் கோமதி இருக்கிறாளே!:-))))

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும்
என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல்,
மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி போன்றவற்றில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில் 20 லிட்டர்
பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு
பாத்திரங்களில் பால்.அதை வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை.அந்தக்
கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள
நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள் வீடுகளில் அவள்தான்
விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும்
காட்டாற்றையும் கடந்து சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால்
அளவிற்குத் தண்ணீர் ஓடும். மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெறுக்
கெடுக்கும். அப்போது ஆற்றைக கடக்க நினைப்பது முடியாத காரியம்.
கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக
நனைத்து விளையாடிக்கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு
கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்துவந்த
கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட காதலால், சம அளவு
தண்ணீர் கலந்து விற்க ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில்
சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து
கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர்
உன்னை நம்பி தங்கள் குழ்ந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி
றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான்
வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம்
சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப்
பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை
வீட்டில் வைக்க யோசனை செய்து தானே அணிந்து கொண்டு திரிவாள்.
ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச்
செய்யும் வலையல்கள் என்று ஒரு நகைக் கடைப் பொம்மை போல் ஆகி
விட்டாள். தாய் வீட்டுச் சீதனம், தான் வாங்கியது என அவள் மேனியில்
ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே
வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில் அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று
சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும்
சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான
முன்னோட்டம் அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக
ஆற்றைக் கடக்க முனைந்தவளை, அவள் பாதி ஆற்றை கடக்கும் முன்பே,
இடுப்பளவு உயர்ந்த ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது. அவள் சுதாகரிக்கும்
முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு
முழுமையாக விளையாட ஆரம்பித்தது.

ஈடு கொடுத்து அவளால் விளையாட முடியவில்லை. அதோடு பயத்தில்
மயங்கி விட்டாள்
--------------------------------------------------------------------
இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில்
மயங்கிக் கிடந்த கோமதி நினைவு திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள்.
ஆற்றில் வெள்ளம் வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய
பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே
இருப்பதை உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப்
போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு
விட்டுப் போன ஆற்றை நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள்
போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட
இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது
அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் எவனோ ஒருவன் அத்தனை
நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய
ஆடைகளைக்கூடச் சரி செய்யும் சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று
குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது
பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள்.
அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்துவரும்
ஓசை கேட்டு. அழுகையுடனேயே திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான்
வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய தோட்டத்துக்
காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின
உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி
விவரித்ததைக் கேட்ட பிள்ளை சொன்னார்.

"சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப்
போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள
முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே - அது பாவச்
செயல் என்று சொன்னேன். கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே
தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல்
விடமாட்டான். உன் கணக்கை இப்போது அவன் தீர்த்திருக்கிறான்.
தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த
உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது.வா போகலாம்!"
----------------------------------------------------------------
இந்தக் கதைக்கும் இன்றைய பாடத்திற்கும் சம்பந்தம்?

"ஆகா, இல்லாமலா, இன்றைய பாடம் தர்ம ஸ்தானத்தைப் (Ninth House)
பற்றிய பாடம்!

"ஒன்பதாம் வீட்டிற்குப் பாக்கியஸ்தானம் என்றல்லவா பெயர்?"

"இன்னொரு பெயரும் உண்டு. அதைத் தர்ம ஸ்தானம் என்றும் அழைப்பார்கள்!"
---------------------------------------------------------------
ஒன்பதாம் வீட்டிற்கான மேலதிக விபரங்கள்.

இதன் முன் பகுதிக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.
அதைப் படித்திராதவர்கள் அதை முதலில் படித்துவிட்டுப் பிறகு
இந்தப் பகுதிக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது இரண்டாவது பகுதி. முதல் பகுதிக்கான சுட்டி இங்கே
உள்ளது: சுட்டி!

அதைப் படித்துவிட்டீர்களா? சரி மேலே தொடர்ந்து படியுங்கள்!
-----------------------------------------------------------------
இங்கே சொல்லப்படும் நல்ல அமைப்பு என்பது உங்களுக்கெல்லாம்
தெரிந்ததுதான். நல்ல அமைப்பு என்பது ஒரு கிரகம் வலுவாக உச்சம்
அல்லது நட்பு வீடுகளில் அல்லது நல்ல கிரகங்களின் பார்வையுடன்
அமர்ந்திருப்பதாகும்.

அதுபோல கெட்டிருப்பது என்பது நீசம் அல்லது பகை வீடுகளில்
அல்லது சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பெற்று
அமர்வதாகும்.

அதை இரண்டையும் மனதில் அழுத்தமாகக் கொண்டு மேலே படிக்கவும்.

1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன்
பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக
இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்.
ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.

2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத
ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான்.

3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன்
நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும்
இருப்பான்.

4, இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின்
கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.

5. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும்
அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்)
அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன்
அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக
இருக்கும்.

6. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம்
பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது
(The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா
விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the
horoscope will be very lucky in all respects.

7. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த
இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம
அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால்
(அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது The ninth lord
and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர்
தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள்
ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத்
திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள்,
கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது,
ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம
காரியங்கள் ஆகும் (இது அதைப்பற்றித் தெரியாத இளைஞர்களுக்காக
விவரிக்கப்பட்டுள்ளது அல்லது எடுத்துச் சொல்லப்பட்டது என்று வைத்துக்
கொள்ளுங்கள்)

8. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து
அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

9. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால்,
ஜாதகன் துரதிர்ஷ்டமானவன்.

10. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின்
பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

11. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு
அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு.

12. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.
வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்
களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன்.
கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன்.

13. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன்
பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக்
குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான்.

14. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே
அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமான
துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

15. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன்
ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன்
ஒரு அரசனைப் போல வாழ்வான்.
(He will be a ruler)

16. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின்
தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம்.

17. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன்
நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு
கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான்.

18. Second lord in the 11th, 11th lord in the ninth and ninth lord in the
second (exchanges), the native will be very lucky. ஆதீதமான பொருள்
சேரும்.

19. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள்
மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான்.

20. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன்
தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக
வாழ்வான்.

21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல்
ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்.

22. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால்,
ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும்.

23. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை
யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்
கூடியவன்.

24. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது
மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத்
துன்பங்கள்தான் ஏற்படும்.

25. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத்
திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர்
களால் புறக்கணிக்கப்படுவான்.

26.ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள்
உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது
ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம்
அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து
மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.

27. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால்,
ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும்.
ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும்.

28. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு
அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக்
குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும்,
முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான்.

29. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன்
இருப்பான் (scholar).

30. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக
அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான்.
அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால்
மேதையாக இருப்பான்.

31. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக
இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன்
நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை
யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின்
பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான்.

32. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும்.
சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள
ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான்.

33.ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை
மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது.

34.ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை
யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும்
ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட
குணமுடையவனாகத்தான் இருப்பான்.

35.ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில்
நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான
பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய
வனாக இருப்பான்.

36.ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால்,
ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான்.

37. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை
சரியில்லாதவனாக ஆகிவிடுவான்.

38. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி,
வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக்
கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான்.

39. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப்
பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.

40. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப்
பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு
அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான்.
மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய
கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும்.

41.ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius
criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு
உடையவனாக இருப்பான்.

42. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல
கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக
இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.

43. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு
மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில்
மகிழ்ச்சி இருக்காது.

44. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது.
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு,
போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும்.

45. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered).
மனநிலை பிரள்பவன்.

46. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல
உறவை ஏற்படுத்தாது.

47. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள்,
வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக்
கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது.

48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப்
பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு
வாழ்வாள்.

49. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித
இன்னல்களுக்கு ஆளாவாள்.

50. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில்
அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது
உண்டாகும் அல்லது நடைபெறும்.
--------------------------------------------------
ஜோதிடம் என்பது கடல். வடமொழியிலும், தமிழிலும் ஜோதிட விதிகளை
எழுதிய விற்பன்னர்கள் சுமார் இரண்டு லட்சங்களுக்கும் மேற்பட்ட விதி
முறைகளை எழுதி வைத்துள்ளனர். சில முக்கியமான விதிகளை மட்டுமே
ஒருவர் தன் மனதில் தக்க வைத்துக் கொள்ள முடியும்

எல்லாவறையும் கற்று பண்டிதன் ஆவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியம்
இல்லாதது. ஒரளவு தெரிந்து கொள்ளலாம். அதுவும் அர்வம், தன் முனைப்பு,
முயற்சி, நேரத்தைச் செலவிட்டுக் கற்றுக்கொள்ளுதல், படித்தவற்றை
திரும்பத் திரும்பப் படித்து மனதில் உருவேற்றுதல், குறிப்பாக involvement
& dedication ஆகியவை இருந்தால்தான் ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி
அடைய முடியும்.

பிறகு, பல ஜாதங்களைப் பார்ப்பதன் மூலமும், பலருடன் உரையாடுவதன்
மூலமும், அனுபவம் பெற்று முழுமை பெறலாம்.

அனுபவம் முக்கியமானது. படித்தல் மட்டும் அல்லது மனதில் வைத்தல்
மட்டும் உதவாது. அதை நினைவில் கொள்ளவும்.

இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி (அவர்தான் சாமி முக்கியம்) மற்றும்
கிரகங்கள் சுயவர்க்கத்தில் பெற்றுள்ள பரல்கள், வீடுகளுக்குக் கிடைத்துள்ள
பரல்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டுக் காலரைத் தூக்கிவிட்டுக்
கொண்டு மகிழ்வதோ அல்லது கவலைப் பட்டுக் கலங்குவதோ வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

தொடர்ந்து படித்து வந்தால், பிறகு ஒரு தினம் உங்களுக்கு ஜோதிடத்தில்
பாண்டித்யம் ஏற்படலாம்.

அதற்கும் உங்கள் ஜாதகத்தில் ஒரு அமைப்பு இருக்க வேண்டும்:-))))))))
---------------------------------------------------------
இது சற்றுப் பெரிய பாடம். இரண்டு வகுப்புக்களுக்கான பாடம். ஸ்கீரின்
ஸைஸில் 17 பக்கங்கள். பாடத்தின் தன்மை கருதி, இரண்டாகப் பிரிக்காமல்
ஒரே பாடமாகக் கொடுத்துள்ளேன். ஆகவே பொறுமையாகப் படிக்கவும்.
மனதில் கொள்ளவும். ஒரே ஸ்ட்ரோக்கில் படித்துவிட்டு, சார் அடுத்தபாடம்
எப்போது என்று கேட்க வேண்டாம்.

அடுத்த பாடம் 8.9.2008 திங்களன்று. நடுவில் முடிந்தால் ஜோதிடத்தைப்
பற்றிய சில விறுவிறுப்பான தகவல்கள் அடங்கிய பதிவு ஒன்றை எழுதலாம்
என்று உள்ளேன்.

இடையில் 3, 4 & 5 ஆம் தேதிகளில் வெளியூர்ப் பயணம் உள்ளது! அந்த
மூன்று தினங்களுக்கும் வகுப்பறைக்கு விடுமுறை!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

70 comments:

  1. Dear Sir,

    Wow, you are really amazing...I totally understand the reason why 9th house lesson took so many days to complete this lesson...hats off to you. what is there is your horosocope to write lessons for us!! No words to describe your dedication. You are "a" TEACHER.

    -Shankar

    ReplyDelete
  2. ஐயா மிக நல்ல பதிவு , விரிவான பதிவு

    ஒருகேள்வி

    என்னுடைய ஜாதகத்தில் 9 இல் ராகு ,எனினும் நான் வெளிநாட்டில் உள்ளேன் ,தந்தை உயிருடன் உள்ளார் அவரின் வயது 69, இது எப்படி ?
    ( கடக லக்கினம் , குரு 3 இல் ,கேதுவுடன் ஒரு பாகை வித்தியாசத்தில், அஸ்த்ங்கம் )

    ReplyDelete
  3. /////தியாகராஜன் said...
    ஐயா வணக்கம்./////

    வெறும் வணக்கம் மட்டுமா தியாகராஜன்? பதிவைப் படித்தீர்களா?

    ReplyDelete
  4. ////hotcat said...
    Dear Sir,
    Wow, you are really amazing...I totally understand the reason why 9th house lesson took so many days to complete this lesson...hats off to you. what is there is your horosocope to write lessons for us!! No words to describe your dedication. You are "a" TEACHER.
    -Shankar////

    நன்றி சங்கர்!
    நான் மகர ராசிக்காரன். மகர ராசிக்காகரர்கள் கடும் உழைப்பாளிகள். உழைப்பு இருக்கும்போது டெடிகேசன் (dedication) வந்துவிடாதா என்ன?

    ReplyDelete
  5. /////Blogger தமிழன் said...
    ஐயா மிக நல்ல பதிவு , விரிவான பதிவு
    ஒருகேள்வி
    என்னுடைய ஜாதகத்தில் 9 இல் ராகு ,எனினும் நான் வெளிநாட்டில் உள்ளேன் ,தந்தை உயிருடன் உள்ளார் அவரின் வயது 69, இது எப்படி ?
    ( கடக லக்கினம் , குரு 3 இல் ,கேதுவுடன் ஒரு பாகை வித்தியாசத்தில், அஸ்த்ங்கம் )////

    ஒன்பதாம் வீட்டு அதிபதி குரு 3ஆம் இடத்தில் இருந்து தனது வீட்டை நேர் பார்வையில் வைத்திருக்கிறாரே - அதுதான் காரணம்! குரு பார்க்கக் கோடி தோஷம் போகும். குரு தன் பார்வையினால் வந்து அமர்ந்த ராகுவைச் செயல் இழக்க வைத்து விடுவார்.

    ReplyDelete
  6. //ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப் பேசக ்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.//

    வாத்தியாரே.. எனக்கும் 9-ல் சூரியனும், சுக்கிரனும் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். மேலே சொன்னது எனக்குத்தானா..?

    //ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்) அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.//

    இதில் எதிலோ, எங்கோ எனக்கு சறுக்கிவிட்டது என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  7. ///5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
    இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன்
    தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக
    வாழ்வான்.///

    In my case, 5th lord Jupiter and 9th Lord Mars is in 11house but 11th house is Gemini which is not favorable house for Jupiter. In Navamsa, Mars is exalted with venus and ketu, while jupiter is in own house sagittarius. So this may work for me rite?

    நன்றி சங்கர்!
    நான் மகர ராசிக்காரன். மகர ராசிக்காகரர்கள் கடும் உழைப்பாளிகள். உழைப்பு இருக்கும்போது டெடிகேசன் (dedication) வந்துவிடாதா என்ன?

    You are working for others to understand, that is really good in you Sir.

    -Shankar

    ReplyDelete
  8. ஹலோ வாத்தியாரய்யா,

    //ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால்,//
    இதில் நல்லவிதமாக என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அது தான் சரியா புரியலை, ஏன்னா எனக்கு 9ல் சூரியன் மட்டும் (பாவம்) தனியா உக்காந்து இருக்காரு.அதான் கேக்கறேன்.
    அப்பறம் இன்றைய பாடமும் நல்ல புரியும்படி அழகா விளக்கமா சொல்லியிருக்கிறீகள். நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. ///ஹலோ வாத்தியாரய்யா,

    //ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால்,//
    இதில் நல்லவிதமாக என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அது தான் சரியா புரியலை, ஏன்னா எனக்கு 9ல் சூரியன் மட்டும் (பாவம்) தனியா உக்காந்து இருக்காரு.அதான் கேக்கறேன்.
    அப்பறம் இன்றைய பாடமும் நல்ல புரியும்படி அழகா விளக்கமா சொல்லியிருக்கிறீகள். நன்றாக இருக்கிறது.
    ///

    I will try to help Sumathi Madam with your permisson Sir.

    Good placement of planet means, each planet has its own house, ucha house, neecha house, and unfavorable house. For eg.,simha is own house for Sun, while it gets exalted(ucha) in mesha, while gets debiliated(neecha) in thula. It has it unfavorbale houses too(I think makara). So if the planet gets deposited in unfavorable house.

    Or if the planet is aspected by planets like mars, sun, rahu and ketu, saturn then its also considered unfavorable. These planets aspects differ, mars aspect 4, 8, 7. saturn aspect 3,7, and 10 houses from the house they got deposited.

    For eg., If sun is depoisted in 9th house leo (which is own house), while mars is depoisted in 6th house that means rishabam, So malefic planet mars aspects the house simha (where sun is depoisted)is not good.

    I dont know whether my explanation was good enough for you to understand.

    -Shankar

    ReplyDelete
  10. மேட்டுப்பாளயம் கல்லாறு போல படமும், நேர்முக வர்ணனை போன்ற தண்ணீர் பால்காரி கதையும், பல்வேறு ஜோதிட விதிகள் அடங்கிய பாடமும் சூப்பர்; ஒரு முறைக்கு பல்முறை படிக்க வேண்டிய ஒன்று, ஐயா!

    ReplyDelete
  11. ஆசானே! கலக்கீட்டீங்க..... எப்படி இப்படியெல்லாம்..... இவ்வளவு விசயங்களை எப்படி நினைவில் வைத்து இருக்கிறீர்? புல்லரிக்குது..... ஒன்பதாம் பாவத்தை அக்குவேறு ஆணிவேறாய் அலசிடீங்க... மிக்க நன்றி.

    சரி! உங்க கடமையை அற்புதமா செஞ்சுடீங்க.. மாணவனா என் கடமை சந்தேகம் கேட்பது தானே... இதோ எனது சந்தேகம்

    1) எனக்கு மீன லக்கினம் so 9 ம் வீடு விருச்சகம். எனக்கு 9 ல் சூரியன்,புதன்,கேது அம்ர்ந்து இருக்கிறார்கள்... {(எப்படி அந்த சின்ன வீட்டில் மூன்று பேர் அமர முடிந்தது :‍))}

    2) மேலும் ராகு 3 ம் வீட்டில் (ரிசபம்) இருந்து தர்ம ஸ்தானத்தை பார்க்கிறார்.

    3) 9 ம் அதிபதி 11 ல்

    எனக்கு தலை சுற்றுகிறது........ இதை எப்படி பலன் சொல்வது?

    (எப்படி என் சந்தேகம்.... யோசிக்கிறீர் தானே........)

    ReplyDelete
  12. விரிவான பாடத்திற்கு நன்றி! நல்ல கிரகங்கள் வக்ரம் பெற்றால் தீய பலன்களை அளிக்குமா?

    ReplyDelete
  13. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப் பேசக ்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.//
    வாத்தியாரே.. எனக்கும் 9-ல் சூரியனும், சுக்கிரனும் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். மேலே சொன்னது எனக்குத்தானா..?
    //ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்) அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.//
    இதில் எதிலோ, எங்கோ எனக்கு சறுக்கிவிட்டது என்று நினைக்கிறேன்../////

    நமது வகுப்பறைக் கண்மணி சங்கரின் கிரக விளக்கம் கீழே உள்ளது. அதையும் பாருங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள் தமிழரே!

    ReplyDelete
  14. //////hotcat said...
    ///5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில்
    இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன்
    தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக
    வாழ்வான்.///
    In my case, 5th lord Jupiter and 9th Lord Mars is in 11house but 11th house is Gemini which is not favorable house for Jupiter. In Navamsa, Mars is exalted with venus and ketu, while jupiter is in own house sagittarius. So this may work for me rite?///

    அந்த அமைப்பிற்கு உரிய பலனை வழங்குவார்கள்!
    ------------------------------------------------
    நன்றி சங்கர்!
    நான் மகர ராசிக்காரன். மகர ராசிக்காகரர்கள் கடும் உழைப்பாளிகள். உழைப்பு இருக்கும்போது டெடிகேசன் (dedication) வந்துவிடாதா என்ன?
    You are working for others to understand, that is really good in you Sir.
    -Shankar/////
    மீண்டும் நன்றி சங்கர்!

    ReplyDelete
  15. /////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    //ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால்,//
    இதில் நல்லவிதமாக என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அது தான் சரியா புரியலை, ஏன்னா எனக்கு 9ல் சூரியன் மட்டும் (பாவம்) தனியா உட்கார்ந்து இருக்கார்.அதான் கேக்கறேன்./////

    உங்களுக்காகவே நமது வகுப்பறை மாணவர் சங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.அதைப் படியுங்கள் சகோதரி.
    -----------------
    /////அப்பறம் இன்றைய பாடமும் நல்ல புரியும்படி அழகா விளக்கமா சொல்லியிருக்கிறீகள். நன்றாக இருக்கிறது./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. //////hotcat said...
    ///ஹலோ வாத்தியாரய்யா,
    //ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால்,//
    இதில் நல்லவிதமாக என்று குறிப்பிட்டுள்ளீர்கள், அது தான் சரியா புரியலை, ஏன்னா எனக்கு 9ல் சூரியன் மட்டும் (பாவம்) தனியா உக்காந்து இருக்காரு.அதான் கேக்கறேன்.
    அப்பறம் இன்றைய பாடமும் நல்ல புரியும்படி அழகா விளக்கமா சொல்லியிருக்கிறீகள். நன்றாக இருக்கிறது.
    ///
    I will try to help Sumathi Madam with your permisson Sir.
    Good placement of planet means, each planet has its own house, ucha house, neecha house, and unfavorable house. For eg.,simha is own house for Sun, while it gets exalted(ucha) in mesha, while gets debiliated(neecha) in thula. It has it unfavorbale houses too(மகரம் & கும்பம்). So if the planet gets deposited in unfavorable house.
    Or if the planet is aspected by planets like mars, sun, rahu and ketu, saturn then its also considered unfavorable. These planets aspects differ, mars aspect 4, 8, 7. saturn aspect 3,7, and 10 houses from the house they got deposited.
    For eg., If sun is depoisted in 9th house leo (which is own house), while mars is depoisted in 6th house that means rishabam, So malefic planet mars aspects the house simha (where sun is depoisted)is not good.
    I dont know whether my explanation was good enough for you to understand.
    -Shankar///

    உங்கள் விளக்கம் சரியானதுதான் சங்கர். என்னுடைய வேலையை எளிதாக்கி விட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  17. //////தமாம் பாலா (dammam bala) said...
    மேட்டுப்பாளயம் கல்லாறு போல படமும், நேர்முக வர்ணனை போன்ற தண்ணீர் பால்காரி கதையும், பல்வேறு ஜோதிட விதிகள் அடங்கிய பாடமும் சூப்பர்; ஒரு முறைக்கு பல்முறை படிக்க வேண்டிய ஒன்று, ஐயா!////

    பாராட்டுக்களுக்கு நன்றி பாலா! உங்கள் பாராட்டுக்கள் டானிக் போன்றது. ஊக்க மருந்து.
    அடுத்த பாடத்தை இன்னும் உத்வேகத்துடன் எழுத அது உதவும்!

    ReplyDelete
  18. //////அணுயோகி said...
    ஆசானே! கலக்கீட்டீங்க..... எப்படி இப்படியெல்லாம்..... இவ்வளவு விசயங்களை எப்படி நினைவில் வைத்து இருக்கிறீர்? புல்லரிக்குது..... ஒன்பதாம் பாவத்தை அக்குவேறு ஆணிவேறாய் அலசிடீங்க... மிக்க நன்றி.
    சரி! உங்க கடமையை அற்புதமா செஞ்சுடீங்க.. மாணவனா என் கடமை சந்தேகம் கேட்பது தானே... இதோ எனது சந்தேகம்
    1) எனக்கு மீன லக்கினம் so 9 ம் வீடு விருச்சகம். எனக்கு 9 ல் சூரியன்,புதன்,கேது அமர்ந்து இருக்கிறார்கள்... {(எப்படி அந்த சின்ன வீட்டில் மூன்று பேர் அமர முடிந்தது :‍))}
    2) மேலும் ராகு 3 ம் வீட்டில் (ரிசபம்) இருந்து தர்ம ஸ்தானத்தை பார்க்கிறார்.
    3) 9 ம் அதிபதி 11 ல்////

    ராகு நீசம் பெற்றுள்ளதால் அவரைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்திருப்பது நல்லது.ஆனால் புதன் அஸ்தமனம் ஆகாமல் இருக்க வேண்டும். உச்சமாக உள்ள கேது இருப்பது தடைகளை ஏற்படுத்தும். முக்கியமானவரான ஒன்பதாம் வீட்டுக்காரர் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால். நல்ல பலன்களை ஏற்படுத்திக் கொடுப்பார். மற்ற கிரகங்கள்
    அதாவது 9ல் உள்ள கேது போன்றவர்களால் அது தாமதமாகக் கிடைக்கும்

    ReplyDelete
  19. /////தங்ஸ் said...
    விரிவான பாடத்திற்கு நன்றி! நல்ல கிரகங்கள் வக்ரம் பெற்றால் தீய பலன்களை அளிக்குமா?///

    நல்ல கிரகங்கள் வக்கிரம் பெற்றால் நல்ல பலன்களை உரிய அளவு வழங்காது. அவ்வளவுதான்.
    நல்லவன் கெட்டிருந்தாலும் (வலிமை இழந்திருந்தாலும் அல்லது வக்கிரமாகியிருந்தாலும்) நல்லவன்தான்!

    "கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!"

    ReplyDelete
  20. ஐயா,

    கும்ப லக்கினத்திற்கு 9மிடத்தில் ராகு இருந்து செவ்வாய் மட்டும் பார்த்தல் எப்படி கஷ்டம் தானா?

    மேல்வாரியாகத்தான் படித்துள்ளேன் ஆழ்ந்து படித்துவிட்டு அடுத்த கேள்விக்கணைகளை தொடுக்கிறேன்...

    ReplyDelete
  21. 9-வது இடத்தைப் பற்றிய பாடம் அருமை. 17 பக்கங்கள் தட்டச்சு செய்து எங்களுக்கு பாடம் நடத்தும் உங்கள் பெருந்தன்மைக்கும், நூற்றிக்கும் மேற்பட்டு வகுப்புகளை தொடர்ந்து நடத்தும் உங்கள் பொறுமைக்கும் நன்றி.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  22. வாத்தியரே எம்மா பெரிய பாடம்....
    (பஞ்ச தந்திரம் தேவயானி போல படிக்கவும்)

    நான் சொல்ல நினைத்ததை திரு. ராஜா கோபால் சொல்லி விட்டதால், அதை நான் வழி மொழிக்கிறேன்.

    எனது பர்வை..இந்த பத்திவை பற்றி...

    1.கோமதி கதை அருமை (என்ன அந்த சிறிய சிறிய டச் : எ.கா பொழுதுபோக்கு, மசாலா பாடம் பார்ப்பது போல ஞாபகம் வந்தது(வசூல் ராஜா கமல் சொல்வது போல)).

    2.கதையின் நெறியும் முடிவும் அருமை. (என்னை பொருத்த வரை இன்று இருப்பது நாளை இல்லை)

    3. //21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல்
    ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்//
    எனக்கறிந்த வரை இந்த விதி என் வாழ்வில் நடந்துள்ளது.

    3.எனது 9'ம் வீட்டில் யாருமில்லை பரல் எண்ணிக்கை 28. 9'ம் வீட்டின் அதிபதி குரு 5'ல் (விருச்சிகம் வீட்டில்) தனித்து உள்ளார் பரல் எண்ணிக்கை 23. சூரியன் லக்ணத்தில் பூதனுடன் உள்ளார் பரல் எண்ணிக்கை 30.

    4.//Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்// அதேதான் வாத்தியரே நாங்கள் இங்கு ஒன்று கூடி உள்ளோம், இதை படித்து தொழில் செய்யவோ இல்லை பணம் சம்பாதிபதற்கோ வரவில்லை, தெரிந்து கொண்டு, நல்ல ஜோதிடரை முடிந்த வரை அடையாளம் காண்பதற்கும், அடுத்தவருக்கு அடையாளம் கான்பிப்பதற்கும்-மே வந்தேன்.

    5.//தொடர்ந்து படித்து வந்தால், பிறகு ஒரு தினம் உங்களுக்கு ஜோதிடத்தில்
    பாண்டித்யம் ஏற்படலாம்.//
    இது மட்டும் எனக்கு சிரமம் என்று நன்றாகவே புரிகிறது.

    6.//அதற்கும் உங்கள் ஜாதகத்தில் ஒரு அமைப்பு இருக்க வேண்டும்:-))))))))//
    அதுதான் தெரியவில்லை.

    7.//அடுத்த பாடம் 8.9.2008 திங்களன்று. நடுவில் முடிந்தால் ஜோதிடத்தைப்
    பற்றிய சில விறுவிறுப்பான தகவல்கள் அடங்கிய பதிவு ஒன்றை எழுதலாம்
    என்று உள்ளேன்.//
    ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    8.//இடையில் 3, 4 & 5 ஆம் தேதிகளில் வெளியூர்ப் பயணம் உள்ளது! அந்த
    மூன்று தினங்களுக்கும் வகுப்பறைக்கு விடுமுறை!//
    ஐயா ஜாலி மீண்டும் விடுமுறை...:-))

    9.//அன்புடன்
    வகுப்பறை வாத்தியார்//

    அன்புடனும், பணிவுடனும்,
    உங்கள் மாணவன்
    விமல்

    ReplyDelete
  23. ஹாய் சங்கர்,

    உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது. புரிந்து கொண்டேன், விளக்கியதற்கு நன்றி.அழகாக சொல்லியிருந்தீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  24. அப்பாடா! என் கட்டத்தில் எதுவும் அஸ்தமனம் ஆக வில்லை...
    நன்றி ஆசானே! எனது பெயரையும் வருகை பதிவேட்டில் சேர்த்து தங்களின் மாணவனாய் அங்கீகரித்தத‌ற்கு.....

    ஆசானே! இன்னும் ஒரு சந்தேகம். கேட்கவா? (நீங்க‌ வேண்டாம்னா சொல்ல‌ போறீங்க‌.... :‍))

    காளிதாச‌ரின் உத்திர‌கால அமிர்த‌த்தில் (அத்தியாயம் 6 சுலோகம் 20) ரிச‌ப‌ம் ராகு வின் உச்ச‌ வீடு என்று உள்ள‌தே.... தாங்க‌ள் அது நீச்ச‌ வீடு என்று சொல்லி இருக்கீங்க‌ளே...( ஒரு வேளை நான் காளிதாச‌ரை த‌வ‌றாக‌ ப‌டித்து இருப்பேனோ?.....)

    சந்தேகத்தை தெளிவிப்பீரா?

    ReplyDelete
  25. நண்பர்களே, நண்பிகளே, பெரியோர்களே, அண்ணன்மார்களே, தம்பி யாரும் இல்லை என்று நினைக்குறேன்....:-D

    வாத்தியாரின் அனுமதியுடன் .. சில நாட்களுக்கு முன்பு வாத்தியார் அவர்கள் எனது சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பொழுது, நானும் நம்ப வாத்தியரும் எடுத்து கொண்ட புகை படங்களை எனது வலைப்பூவில் ஏற்றி இருக்கிறேன்.

    உங்கள் கவனத்திற்காக இந்த பின்னூட்டம் ...

    எனது வலை பூவிர்கான சுட்டி : vimalind.blogspot.com

    ReplyDelete
  26. /////கூடுதுறை said...
    ஐயா,
    கும்ப லக்கினத்திற்கு 9மிடத்தில் ராகு இருந்து செவ்வாய் மட்டும் பார்த்தல் எப்படி கஷ்டம் தானா?
    மேல்வாரியாகத்தான் படித்துள்ளேன் ஆழ்ந்து படித்துவிட்டு அடுத்த கேள்விக்கணைகளை தொடுக்கிறேன்...///

    நீங்களே சொல்லிவிட்டீர்கள் மேல்வாரியாகப் படித்துவிட்டேன் என்று!
    ஒன்பதாம் வீட்டு அதிபதி (ராசியிலும், அம்சத்திலும்) எங்கே இருக்கிறார் என்று பார்க்க வேண்டாமா?
    பரல்கள் கணக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தேனே அதையும் வைத்து அலசுங்கள்!

    ReplyDelete
  27. /////Rajagopal said...
    9-வது இடத்தைப் பற்றிய பாடம் அருமை. 17 பக்கங்கள் தட்டச்சு செய்து எங்களுக்கு பாடம் நடத்தும் உங்கள் பெருந்தன்மைக்கும், நூற்றிக்கும் மேற்பட்டு வகுப்புகளை தொடர்ந்து நடத்தும் உங்கள் பொறுமைக்கும் நன்றி.
    அன்புடன்
    இராசகோபால்//////

    பாராட்டுக்களுக்கு நன்றி கோபால்!

    ReplyDelete
  28. ///Sumathi. said...
    ஹாய் சங்கர்,
    உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது. புரிந்து கொண்டேன், விளக்கியதற்கு நன்றி.அழகாக சொல்லியிருந்தீர்கள்.
    நன்றி.////

    என் வேலையை அவர் எளிதாக்கிவிட்டார். அதனால் அவருக்கு நானும் எனது நன்றியைச் சொல்லிவிட்டேன் சகோதரி!

    ReplyDelete
  29. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே எம்மா பெரிய பாடம்....
    (பஞ்ச தந்திரம் தேவயானி போல படிக்கவும்)
    நான் சொல்ல நினைத்ததை திரு. ராஜா கோபால் சொல்லி விட்டதால், அதை நான் வழி மொழிக்கிறேன்.
    எனது பார்வை..இந்த பதிவை பற்றி...
    1.கோமதி கதை அருமை (என்ன அந்த சிறிய சிறிய டச் : எ.கா பொழுதுபோக்கு, மசாலா பாடம் பார்ப்பது போல ஞாபகம் வந்தது(வசூல் ராஜா கமல் சொல்வது போல)).
    2.கதையின் நெறியும் முடிவும் அருமை. (என்னை பொருத்த வரை இன்று இருப்பது நாளை இல்லை)
    3. //21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல்
    ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்//
    எனக்கறிந்த வரை இந்த விதி என் வாழ்வில் நடந்துள்ளது.
    3.எனது 9'ம் வீட்டில் யாருமில்லை பரல் எண்ணிக்கை 28. 9'ம் வீட்டின் அதிபதி குரு 5'ல் (விருச்சிகம் வீட்டில்) தனித்து உள்ளார் பரல் எண்ணிக்கை 23. சூரியன் லக்ணத்தில் புதனுடன் உள்ளார் பரல் எண்ணிக்கை 30.////

    லக்கினத்தில்தான் 30 பரல்கள் உள்ளதே!. கவலையை விடுங்கள்!
    ---------------------

    4.//Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்// அதேதான் வாத்தியரே நாங்கள் இங்கு ஒன்று கூடி உள்ளோம், இதை படித்து தொழில் செய்யவோ இல்லை பணம் சம்பாதிபதற்கோ வரவில்லை, தெரிந்து கொண்டு, நல்ல ஜோதிடரை முடிந்த வரை அடையாளம் காண்பதற்கும், அடுத்தவருக்கு அடையாளம் காண்பிப்பதற்குமே வந்தேன்.
    5.//தொடர்ந்து படித்து வந்தால், பிறகு ஒரு தினம் உங்களுக்கு ஜோதிடத்தில்
    பாண்டித்யம் ஏற்படலாம்.//
    இது மட்டும் எனக்கு சிரமம் என்று நன்றாகவே புரிகிறது.
    6.//அதற்கும் உங்கள் ஜாதகத்தில் ஒரு அமைப்பு இருக்க வேண்டும்:-))))))))//
    அதுதான் தெரியவில்லை.
    7.//அடுத்த பாடம் 8.9.2008 திங்களன்று. நடுவில் முடிந்தால் ஜோதிடத்தைப்
    பற்றிய சில விறுவிறுப்பான தகவல்கள் அடங்கிய பதிவு ஒன்றை எழுதலாம்
    என்று உள்ளேன்.//
    ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
    8.//இடையில் 3, 4 & 5 ஆம் தேதிகளில் வெளியூர்ப் பயணம் உள்ளது! அந்த
    மூன்று தினங்களுக்கும் வகுப்பறைக்கு விடுமுறை!//
    ஐயா ஜாலி மீண்டும் விடுமுறை...:-)) 9.//அன்புடன்
    வகுப்பறை வாத்தியார்//
    அன்புடனும், பணிவுடனும்,
    உங்கள் மாணவன்
    விமல்
    -------------
    நன்றி விமல்!

    ReplyDelete
  30. /////அணுயோகி said...
    அப்பாடா! என் கட்டத்தில் எதுவும் அஸ்தமனம் ஆக வில்லை...
    நன்றி ஆசானே! எனது பெயரையும் வருகை பதிவேட்டில் சேர்த்து தங்களின் மாணவனாய் அங்கீகரித்தத‌ற்கு.....
    ஆசானே! இன்னும் ஒரு சந்தேகம். கேட்கவா? (நீங்க‌ வேண்டாம்னா சொல்ல‌ போறீங்க‌.... :‍))
    காளிதாச‌ரின் உத்திர‌கால அமிர்த‌த்தில் (அத்தியாயம் 6 சுலோகம் 20) ரிச‌ப‌ம் ராகு வின் உச்ச‌ வீடு என்று உள்ள‌தே.... தாங்க‌ள் அது நீச்ச‌ வீடு என்று சொல்லி இருக்கீங்க‌ளே...( ஒரு வேளை நான் காளிதாச‌ரை த‌வ‌றாக‌ ப‌டித்து இருப்பேனோ?.....)
    சந்தேகத்தை தெளிவிப்பீரா?/////

    ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த வீடு இல்லை!
    உச்ச வீடு - விருச்சிகம்
    நீச வீடு - ரிஷபம்!
    இதுதான் சரியானது!

    காளிதாசர் சொன்னது பற்றி நான் அறியேன்!

    ReplyDelete
  31. //////கோவை விமல்(vimal) said...
    நண்பர்களே, நண்பிகளே, பெரியோர்களே, அண்ணன்மார்களே, தம்பி யாரும் இல்லை என்று நினைக்குறேன்....:-D
    வாத்தியாரின் அனுமதியுடன் .. சில நாட்களுக்கு முன்பு வாத்தியார் அவர்கள் எனது சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பொழுது, நானும் நம்ப வாத்தியரும் எடுத்து கொண்ட புகை படங்களை எனது வலைப்பூவில் ஏற்றி இருக்கிறேன்.
    உங்கள் கவனத்திற்காக இந்த பின்னூட்டம் ...
    எனது வலை பூவிர்கான சுட்டி : vimalind.blogspot.com////

    இப்படிப் படம் எடுத்து பதிவில் போடுவீர் என்று தெரிந்திருந்தால், வாத்தியார் கெட்-அப்'பில் வந்திருப்பேனே (அதாவது கையில் பிரம்புடன்) சுவாமி!:-))))
    தோளில் கைபோட்டு நெருக்கமாகப் போஸ் கொடுத்திருக்க மாட்டேனே!:-))))

    ReplyDelete
  32. வாத்தியார் அவர்களுக்கும் வகுப்பு அறை மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.

    நாளை,வருட விடுமுறைக்காக
    சென்னைக்கு புறப்படுகிறேன்
    ஒரு மாத விடுமுறையில்.

    உறவினர்களை பார்க்க கோவை
    வருவது வழக்கம்; இந்த முறை
    ஆசிரியரையும் பார்த்து விடலாம் என்று நம்புகிறேன் (ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். :)))

    அநேகமாக செப் 15-30க்குள்.. கோவை விஸிட் இருக்கலாம், சென்னை போனபின் தான் முடிவாகும்.

    விடுமுறையில் வலையில் நுழையும்
    வாய்ப்புகள், குறைவு. ஆகவே சந்திப்போம், சிறிது இடைவெளிக்கு பிறகு. வாழ்க வளமுடன், அது வரை நன்றி வணக்கம்!

    ReplyDelete
  33. ///////Sumathi. said...
    ஹாய் சங்கர்,
    உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது. புரிந்து கொண்டேன், விளக்கியதற்கு நன்றி.அழகாக சொல்லியிருந்தீர்கள்.
    நன்றி.////

    You are very welcome,Ms. Sumathi.

    ////என் வேலையை அவர் எளிதாக்கிவிட்டார். அதனால் அவருக்கு நானும் எனது நன்றியைச் சொல்லிவிட்டேன் சகோதரி!/////

    Sir, you dont have to mention.I just explained because I can make sure whether I understood right. I have learnt all this from your lessons.

    -Shankar

    ReplyDelete
  34. //SP.VR. SUBBIAH said...
    லக்கினத்தில்தான் 30 பரல்கள் உள்ளதே!. கவலையை விடுங்கள்!
    -------------
    நன்றி விமல்!//

    நீர் இருக்கும் பொழுது (அப்பன் விநாயகன்) கவலை எது ஐ \யா,
    நன்றிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் வாத்தியரே....

    விமல்

    ReplyDelete
  35. //SP.VR. SUBBIAH said...

    இப்படிப் படம் எடுத்து பதிவில் போடுவீர் என்று தெரிந்திருந்தால், வாத்தியார் கெட்-அப்'பில் வந்திருப்பேனே (அதாவது கையில் பிரம்புடன்) சுவாமி!:-))))
    தோளில் கைபோட்டு நெருக்கமாகப் போஸ் கொடுத்திருக்க மாட்டேனே!:-))))//


    இதுவும் சனி பகவானின் திரு விளையாடல் தான் வாத்தியரே, தங்கள் அறியாததா?

    எங்கணம் வந்தபின், தங்களை அக்கோலத்தில் தானே கண்டேன் (அதாவது கையில் பிரம்புடன்)

    ReplyDelete
  36. //தமாம் பாலா (dammam bala) said...
    வாத்தியார் அவர்களுக்கும் வகுப்பு அறை மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.

    நாளை,வருட விடுமுறைக்காக
    சென்னைக்கு புறப்படுகிறேன்
    ஒரு மாத விடுமுறையில்.

    உறவினர்களை பார்க்க கோவை
    வருவது வழக்கம்; இந்த முறை
    ஆசிரியரையும் பார்த்து விடலாம் என்று நம்புகிறேன் (ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். :)))

    அநேகமாக செப் 15-30க்குள்.. கோவை விஸிட் இருக்கலாம், சென்னை போனபின் தான் முடிவாகும்.

    விடுமுறையில் வலையில் நுழையும்
    வாய்ப்புகள், குறைவு. ஆகவே சந்திப்போம், சிறிது இடைவெளிக்கு பிறகு. வாழ்க வளமுடன், அது வரை நன்றி வணக்கம்!//


    அண்ணே வருக வருக என்று வரவேர்கிறேன் தாய் நாடாய் இந்தியாவிற்கு, கோவை வந்தால் மறக்காமல் இந்த தம்பிக்கும் தொலை பேசவும். தொலைபேசி என் அறிய vimalind@gmail.com மின்னன்சல் செய்யவும்....

    ஆவலுடன் ....
    தம்பி உடையான் படை கண்சாண் என,
    விமல்

    ReplyDelete
  37. வணக்கம் ஐயா, நான் இப்பகுதிக்குப் புதியவன்,

    எனது ஒன்பதுக்குரியவன் (மிதுனம்), 12 (கன்னி) ல் இருக்கிறான்.. அப்ப நானும் கடல் கடப்பேன் என்கிறீகளா...?

    ReplyDelete
  38. வாத்தியரே வணக்கம், நல்ல விளக்கங்கள், பாடம் தெளிவாக உள்ளதால் கேள்விகள் நிறைய இல்லை, ஒரு சிறிய கேள்வி, 9தில் அசுப கிரகம்(சனி,செவ்வாய்,சூரியன்)
    பரிவதனை என்றால் பலன்கள் எப்படி? mix result?

    ReplyDelete
  39. respected sir subbiah,
    i have sani aspect on 9th house cancer( kadagam). 9th lord moon is in aries 6th house with 8th and 11th lord mercury. guru is in own house but 2nd house is it OK. guru is aspecting seeing the moon(9th lord) and mercury (8th and 11th lord). will i go to foreign. because of guru aspect on 9th lord.

    lagna - scorpio(viruchigam)

    ReplyDelete
  40. //ஒன்பதாம் வீட்டில் குரு/ ஜாதகன் அதிர்ஷ்டமானவன்//

    நான் மண்டையை போடுவதற்குள் அதிஷ்டம் வந்திடுமா ஐயா?

    ReplyDelete
  41. ஆசானே! வகுப்புக்கு விடுமுறை விட்டாலும் விட்டீங்க ரொம்ப bore அடிக்குது... ஏதாவது home work கொடுத்துட்டு போயிருக்கலாம் இல்ல.. மண்ட காயுது..... ஹ்ம்ம்... என்ன பண்றது பழைய பாடங்களையே திரும்ப திரும்ப revise பண்ணிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  42. ///////தமாம் பாலா (dammam bala) said...
    வாத்தியார் அவர்களுக்கும் வகுப்பு அறை மாணவ கண்மணிகளுக்கும் வணக்கம்.
    நாளை,வருட விடுமுறைக்காக சென்னைக்கு புறப்படுகிறேன் ஒரு மாத விடுமுறையில்.
    உறவினர்களை பார்க்க கோவை வருவது வழக்கம்; இந்த முறை
    ஆசிரியரையும் பார்த்து விடலாம் என்று நம்புகிறேன் (ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். :)))
    அநேகமாக செப் 15-30க்குள்.. கோவை விஸிட் இருக்கலாம், சென்னை போனபின் தான் முடிவாகும்.
    விடுமுறையில் வலையில் நுழையும்
    வாய்ப்புகள், குறைவு. ஆகவே சந்திப்போம், சிறிது இடைவெளிக்கு பிறகு. வாழ்க வளமுடன், அது வரை நன்றி வணக்கம்!/////

    நன்று! கோவை வரும் தேதியை முன்னதாகவே மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்.

    ReplyDelete
  43. ///////hotcat said...
    ///////Sumathi. said...
    ஹாய் சங்கர்,
    உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது. புரிந்து கொண்டேன், விளக்கியதற்கு நன்றி.அழகாக சொல்லியிருந்தீர்கள்.
    நன்றி.////
    You are very welcome,Ms. Sumathi.
    ////என் வேலையை அவர் எளிதாக்கிவிட்டார். அதனால் அவருக்கு நானும் எனது நன்றியைச் சொல்லிவிட்டேன் சகோதரி!/////
    Sir, you dont have to mention.I just explained because I can make sure whether I understood right. I have learnt all this from your lessons.
    -Shankar//////

    நல்லது சங்கர்!

    ReplyDelete
  44. //////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    இப்படிப் படம் எடுத்து பதிவில் போடுவீர் என்று தெரிந்திருந்தால், வாத்தியார் கெட்-அப்'பில் வந்திருப்பேனே (அதாவது கையில் பிரம்புடன்) சுவாமி!:-))))
    தோளில் கைபோட்டு நெருக்கமாகப் போஸ் கொடுத்திருக்க மாட்டேனே!:-))))//
    இதுவும் சனி பகவானின் திரு விளையாடல் தான் வாத்தியரே, தங்கள் அறியாததா?
    அங்கணம் வந்தபின், தங்களை அக்கோலத்தில் தானே கண்டேன் (அதாவது கையில் பிரம்புடன்)////

    நன்று. அப்படியே காண்க!

    ReplyDelete
  45. /////SURESH.N said...
    வணக்கம் ஐயா, நான் இப்பகுதிக்குப் புதியவன்,
    எனது ஒன்பதுக்குரியவன் (மிதுனம்), 12 (கன்னி) ல் இருக்கிறான்.. அப்ப நானும் கடல் கடப்பேன் என்கிறீர்களா...?/////

    பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள் நண்பரே! அதில் விவரம் உள்ளது!

    ReplyDelete
  46. /////மதி said...
    வாத்தியரே வணக்கம், நல்ல விளக்கங்கள், பாடம் தெளிவாக உள்ளதால் கேள்விகள் நிறைய இல்லை, ஒரு சிறிய கேள்வி, 9தில் அசுப கிரகம்(சனி,செவ்வாய்,சூரியன்)
    பரிவர்த்தனை என்றால் பலன்கள் எப்படி? mix result?

    பரிவர்த்தனை என்றால் ஒருவர் வீட்டில் மற்றவர் மாறி அமர்வது. உச்சமாவதற்கு உரிய பலன் கிடைக்கும்

    ReplyDelete
  47. //////saravana martian said...
    respected sir subbiah,
    i have sani aspect on 9th house cancer( kadagam). 9th lord moon is in aries 6th house with 8th and 11th lord mercury. guru is in own house but 2nd house is it OK. guru is aspecting seeing the moon(9th lord) and mercury (8th and 11th lord). will i go to foreign. because of guru aspect on 9th lord.
    lagna - scorpio(viruchigam)

    லக்கினாதிபதி செவ்வாய் எங்கே இருக்கிறார்? அவர் முக்கியம் இல்லையா?

    ReplyDelete
  48. /////VIKNESHWARAN said...
    //ஒன்பதாம் வீட்டில் குரு/ ஜாதகன் அதிர்ஷ்டமானவன்//
    நான் மண்டையை போடுவதற்குள் அதிஷ்டம் வந்திடுமா ஐயா?////

    மண்டையைப் போடுவது அவ்வளவு சுலபமா என்ன நண்பரே?
    ஒன்பதாம் வீட்டில் குரு இருப்பது அதிர்ஷ்டமானதுதான். ஆனால் எந்த அளவிற்கு அதிர்ஷ்டம்
    என்பதற்கு வேறு பல விஷயங்கள் அந்த ஒன்பதாம் வீட்டோடு சம்பந்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஒன்பதாம் வீட்டு அதிபன் உள்ள இடம், வீட்டின் பரல்கள், அவனுடைய பரல்கள் போன்ற பல விஷயங்கள் உள்ளன. பதிவுகளைத்தொடர்ந்து படித்தால் அவை பிடிபடும்.

    ReplyDelete
  49. //////அணுயோகி said...
    ஆசானே! வகுப்புக்கு விடுமுறை விட்டாலும் விட்டீங்க ரொம்ப bore அடிக்குது... ஏதாவது home work கொடுத்துட்டு போயிருக்கலாம் இல்ல.. மண்டை காயுது..... ஹ்ம்ம்... என்ன பண்றது பழைய பாடங்களையே திரும்ப திரும்ப revise பண்ணிட்டு இருக்கேன்...//////

    பழைய படங்களைத் திரும்பவும் படியுங்கள். அவையும் சுவையாகப் புரியும்படியாகத்தான் எழுதப்பட்டுள்ளன நண்பரே!

    ReplyDelete
  50. ஒன்பதாம் வீடு தனுசு, குரு அதில் ஆட்சி. 5ம் பார்வை லக்கினம்(மேஷம்), 7ம் பார்வை மூன்றாம் வீடு 9ம் பார்வை இராசி(5ம் வீடு).

    7லில் உச்சம் பெற்ற சனி இருக்கிறார். அவரின் மூன்றாம் பார்வை தனுசு அல்லவா. அப்படினா குரு ஒன்னும் செய்ய முடியாதபடி சனி 3ம் பார்வையால் அடிச்சு போட்டுடாரா?

    ReplyDelete
  51. தங்களின் ஒவ்வொரு பதிவும் சுவையாக இருப்பதால் தான் அவை எங்களை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது....
    தங்களின் பாடங்கள் ஒவ்வொன்றும் அருமை....

    ReplyDelete
  52. respected subbaiha sir,
    my lagna is scorpio, lagna lord mars(retro) in 12th house libra(thulam), along with saturn (retro) 4th lord, in 2nd house from lagna that is sagittarius (dhanus) jupiter(retro) is present in it. in 6th house mercury (8th lord), moon 9th lord. 7th house have venus (7th lord),sun 10th lord, and rahu are present.

    scopio 1st house- ketu
    dhanu 2nd house-jupiter(retro
    aries 6th house- moon(9th lord)mercury(8&11 lord)
    taurus 7th house-venus(7th lord),sun(10th lord) , rahu
    thulam 12th house- mars(1agna lord) saturn(4th lord) both are retro.

    no one in 9th house will i go to foreign. at present i dont have job why

    ReplyDelete
  53. VIKNESHWARAN said...
    ஒன்பதாம் வீடு தனுசு, குரு அதில் ஆட்சி. 5ம் பார்வை லக்கினம்(மேஷம்), 7ம் பார்வை மூன்றாம் வீடு 9ம் பார்வை இராசி(5ம் வீடு).
    7லில் உச்சம் பெற்ற சனி இருக்கிறார். அவரின் மூன்றாம் பார்வை தனுசு அல்லவா. அப்படினா குரு ஒன்னும் செய்ய முடியாதபடி சனி 3ம் பார்வையால் அடிச்சு போட்டுடாரா?/////

    உங்கள் லக்கினத்திற்கு சனி 10 & 11 ஆம் இடங்களுக்கு உரியவர். அவர் தடை செய்ய மாட்டார்.
    முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும். உங்கள் லக்கின அதிபதி செவ்வாய் எங்கே இருக்கிறார்? ஏன் எல்லோரும் லக்கினாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை?

    ReplyDelete
  54. /////அணுயோகி said...
    தங்களின் ஒவ்வொரு பதிவும் சுவையாக இருப்பதால் தான் அவை எங்களை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது....
    தங்களின் பாடங்கள் ஒவ்வொன்றும் அருமை....////

    நன்று, நன்றாகப் படியுங்கள்!

    ReplyDelete
  55. ////saravana martian said...
    respected subbiah sir,
    my lagna is scorpio, lagna lord mars(retro) in 12th house libra(thulam), along with saturn (retro) 4th lord, in 2nd house from lagna that is sagittarius (dhanus) jupiter(retro) is present in it. in 6th house mercury (8th lord), moon 9th lord. 7th house have venus (7th lord),sun 10th lord, and rahu are present.
    scopio 1st house- ketu
    dhanu 2nd house-jupiter(retro
    aries 6th house- moon(9th lord)mercury(8&11 lord)
    taurus 7th house-venus(7th lord),sun(10th lord) , rahu
    thulam 12th house- mars(1agna lord) saturn(4th lord) both are retro.
    no one in 9th house will i go to foreign. at present i dont have job why?////

    What is the running dasa/bukthi? Dasa period is important in awarding a good job!

    ReplyDelete
  56. >>ஏன் எல்லோரும் லக்கினாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை?<<

    இதையேதான் நானும் யோசிக்கிரேன்?

    ஏன் பலர் இவரை கண்டுகொள்ளவில்லை...லக்கினாதிபதி ஒரு ஜதகத்தில் முதன்மையானவர், அதி மிக்கியமானவர்(மற்றவர்களை விட)இவர் இல்லாமல் ஜதக பலன் (சரியாக) சொல்ல முடியது.


    என்ன ஆசானே சரிதானே?

    ReplyDelete
  57. ayyo vathiyar sir my lagnam is viruchigam, rasi is mesham.

    sun dasa and moon bukthi running

    lot of confusion here.

    my birth time is 6:55 PM
    birth place :chennai
    date of birth: 27/05/1984

    lot of exalted planet in navansam.

    lagnadhipathi chevvai in 12th house
    thulam. 4th lord sani in also 12th house.
    in second house thanusu have jupiter.
    6ht house mesham have budhan, moon,
    7th house rishabham have 7th lord venus, 10 lord sun, and rahu
    viruchiga lagnam have ketu.
    i am also reading your all astro classes thank s

    ReplyDelete
  58. அன்புடன் ஆசிரியர்க்கு,

    வணக்கம். அண்மையில் ஒரு ஜாதகத்தைப் பார்த்தேன். மேஷ லக் ‍ புத சுக், 2 இல் ஷுரியன், 3 இல் ராகு 4 ‍ இல் சந்திரன், 5 இல் செவ்வாய் 9 ‍ இல் கேது, 11 இல் சனி. நடப்பு ‍ செவ்வாய் திசை‍ செவ்வாய் புத்தி.

    மிகவும் நோய் வாய்ப்பட்டு அண்மையில் இறந்து போனார்.


    லக்னாதிபன் 5இல். அவன் எப்படி மாரகத்தை கொடுத்தான். ஆய்விற்காக மட்டுமே கேட்கிறேன்.

    காலம் இருப்பின், விடையளிக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்,

    செந்தில்

    ReplyDelete
  59. //48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப் பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வாள்.//

    இது தொடர்பாக ஒரு சிறிய செய்தி (சரியில்லை என்றால் ஆசிரியர் கூறவும்)

    பெண்களைப்பொருத்த வரை 9ஆம் இடம் என்பதும் கூட மழலை பாக்கியம் குறித்து குறிப்பிடும் ஒரு இடமாகும்

    5ல் ராகு இருந்தால் கூட 9ல் குருவோ சுபக்கிரகங்களோ இருந்தால் (திருமணமான இரண்டாவது வருடம்) குழந்தை உண்டு

    ReplyDelete
  60. >>>பெண்களைப்பொருத்த வரை 9ஆம் இடம் என்பதும் கூட மழலை பாக்கியம் குறித்து குறிப்பிடும் ஒரு இடமாகும்

    5ல் ராகு இருந்தால் கூட 9ல் குருவோ சுபக்கிரகங்களோ இருந்தால் (திருமணமான இரண்டாவது வருடம்) குழந்தை உண்டு<<<<

    புதிய தகவல்...நன்றி புருனோ.

    ReplyDelete
  61. >>>பெண்களைப்பொருத்த வரை 9ஆம் இடம் என்பதும் கூட மழலை பாக்கியம் குறித்து குறிப்பிடும் ஒரு இடமாகும்

    5ல் ராகு இருந்தால் கூட 9ல் குருவோ சுபக்கிரகங்களோ இருந்தால் (திருமணமான இரண்டாவது வருடம்) குழந்தை உண்டு<<<<

    புதிய தகவல்...நன்றி புருனோ.

    ReplyDelete
  62. /////மதி said...
    >>ஏன் எல்லோரும் லக்கினாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை?<<
    இதையேதான் நானும் யோசிக்கிறேன்!
    ஏன் பலர் அவரைக் கண்டுகொள்ளவதில்லை...லக்கினாதிபதி ஒரு ஜாதகத்தில் முதன்மையானவர், அதி மிக்கியமானவர்(மற்றவர்களை விட)அவர் இல்லாமல் ஜாதக பலனைச் (சரியாக) சொல்ல முடியாது.
    என்ன ஆசானே சரிதானே?/////

    கரீக்ட் ராஜா!

    ReplyDelete
  63. saravana martian said...
    ayyo vathiyar sir my lagnam is viruchigam, rasi is mesham.
    sun dasa and moon bukthi running
    lot of confusion here.
    my birth time is 6:55 PM
    birth place :chennai
    date of birth: 27/05/1984
    lot of exalted planet in navansam.

    lagnadhipathi chevvai in 12th house
    thulam. 4th lord sani in also 12th house.
    in second house thanusu have jupiter.
    6ht house mesham have budhan, moon,
    7th house rishabham have 7th lord venus, 10 lord sun, and rahu
    viruchiga lagnam have ketu.
    i am also reading your all astro classes thanks/////
    ==========================================
    Your lagna lord Mars and Karmna karaga Saturn are in the 12th house which is not favourabale.
    Tenth lord Sun is aspecting the lagna from 7th place.

    dasa Lords
    Sun/Moon = 12/1 position
    Sun/Mars = 6/8 positions
    Sun/rahu (Rahu will act as Saturn) dasa will get you a job!

    ReplyDelete
  64. senthil said...
    அன்புடன் ஆசிரியர்க்கு,
    வணக்கம். அண்மையில் ஒரு ஜாதகத்தைப் பார்த்தேன். மேஷ லக் ‍ புத சுக், 2 இல் ஷுரியன், 3 இல் ராகு 4 ‍ இல் சந்திரன், 5 இல் செவ்வாய் 9 ‍ இல் கேது, 11 இல் சனி. நடப்பு ‍ செவ்வாய் திசை‍ செவ்வாய் புத்தி.
    மிகவும் நோய் வாய்ப்பட்டு அண்மையில் இறந்து போனார்.
    லக்னாதிபன் 5இல். அவன் எப்படி மாரகத்தை கொடுத்தான். ஆய்விற்காக மட்டுமே கேட்கிறேன்.
    காலம் இருப்பின், விடையளிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    செந்தில்
    --------------------------------
    என்ன வயதில் இறந்தார் என்பது தெரியவில்லையே சுவாமி?
    மிகவும் வயதானவர் என்றால், யாரும் வேண்டாம், கோச்சார சனியே போர்டிங் பாஸ் கொடுத்துவிடுவார்.
    ஜாதகருக்கு ஏழரைச் சனி நடப்பதையும் கவனியுங்கள்.அது மூன்றாவது சுற்றாக இருந்தால் சனிக்கு
    எல்லா அதிகாரமும் உண்டு. அவன் ஆயுள்காரகன். Your data is incomplete for giving proper answer!

    ReplyDelete
  65. /////புருனோ Bruno said...
    //48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப் பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வாள்.//
    இது தொடர்பாக ஒரு சிறிய செய்தி (சரியில்லை என்றால் ஆசிரியர் கூறவும்)
    பெண்களைப்பொருத்த வரை 9ஆம் இடம் என்பதும் கூட மழலை பாக்கியம் குறித்து குறிப்பிடும் ஒரு இடமாகும்
    5ல் ராகு இருந்தால் கூட 9ல் குருவோ சுபக்கிரகங்களோ இருந்தால் (திருமணமான இரண்டாவது வருடம்) குழந்தை உண்டு/////

    உண்மைதான் டாக்டர். பாக்யநாதன் தன்னுடைய "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி நீங்கள் சொல்வதைச் செய்வார்! தங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  66. ////மதி said...
    >>>பெண்களைப்பொருத்த வரை 9ஆம் இடம் என்பதும் கூட மழலை பாக்கியம் குறித்து குறிப்பிடும் ஒரு இடமாகும்
    5ல் ராகு இருந்தால் கூட 9ல் குருவோ சுபக்கிரகங்களோ இருந்தால் (திருமணமான இரண்டாவது வருடம்) குழந்தை உண்டு<<<<
    புதிய தகவல்...நன்றி புருனோ.////

    இப்படிச் சொல்வதுதான் உண்மையான நன்றி கூறல்!

    ReplyDelete
  67. வணக்கம் ஆசிரியரே,

    கால சர்ப்ப கட்டுரை அருமை. இளைய ராஜாவின் ஜாதகத்தை ஆய்வு எடுத்துக் கொன்டது மிகவும் சிறப்பு.

    சந்திரன் மட்டும் 2இல். மற்றவை 7 முதல் 12 வரை. இது கால சர்ப்ப யோக ஜாதகமா?

    தங்கள் கருத்தை வேண்டுகிறேன்.

    அன்புள்ள,

    செந்தில்.

    ReplyDelete
  68. //////senthil said...
    வணக்கம் ஆசிரியரே,
    கால சர்ப்ப கட்டுரை அருமை. இளைய ராஜாவின் ஜாதகத்தை ஆய்வு எடுத்துக் கொன்டது மிகவும் சிறப்பு.
    சந்திரன் மட்டும் 2இல். மற்றவை 7 முதல் 12 வரை. இது கால சர்ப்ப யோக ஜாதகமா?
    தங்கள் கருத்தை வேண்டுகிறேன்.
    அன்புள்ள, செந்தில்.////

    அடுத்த பதிவிற்கான பின்னூட்டம் ஆயிற்றே: அதைத்தான் பதிவில் விவரமாகச் சொல்லியிருக்கிறேனே நண்பரே! நீங்கள் சொல்லும் அமைப்பு கால சர்ப்ப தோஷம்தான்!

    ReplyDelete
  69. வணக்கம் ஐயா
    பாடங்களும் பின்னூட்டங்களும் அருமை .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com