17.7.08

உண்மையில் என்ன நடந்தது?

மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
பாடம் யூரின் என்ற தலைப்பில் நடந்து கொண்டிருந்தது.

பாடம் முடியும் தருவாயில், அரை லிட்டர் கொள்ளளவு உள்ள
ஒரு பாட்டிலை எடுத்துத் தன் மேஜையின் மீது வைத்துவிட்டுச்
சொன்னார். "இப்போது மிகுந்த கவனத்துடன் பாருங்கள். பாடத்தின்
இந்தப் பகுதி முக்கியமானது."

"மருத்துவராகப் போகும் நீங்கள் எதையுமே கவனத்துடன் பார்க்க
வேண்டும். இது மனித மூத்திரம் அடங்கிய பாட்டில். இதன் நிறம்,
வாசம்,தோற்றம், ருசி அனைத்துமே முக்கியம்."

இந்த இடத்தில் அதாவது ருசி என்ற சொல்லைக் கேட்டு, சிலர்
முகத்தைச் சுழித்தனர்.

ஆனால் பேராசியர் விடவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக
பட்டிலின் மூடியைத் திறந்தவர், தன்னுடைய விரலை உள்ளே விட்டு,
அந்தத் திரவத்தைத் தொட்டு எடுத்துச் சட்டென்று தன் வாயில்
விரலை வைத்து அசூசையின்றிச் சப்பினார்.

பலரும் அசந்து போயினர்!

ஆசிரியர், பாட்டிலை உள்ளே ஒரு சுற்று அனுப்பி அனைவரையும்
அதைப் பரிசோதனை செய்யச் சொன்னர்.

அனைவரும் பேராசிரியர் சொன்னபடியே, முகர்ந்து பார்த்துவிட்டு,
விரலை உள்ளே விட்டுத் திரவத்தைத் தொட்டு டேஸ்ட் செய்து
பார்த்தனர். சிலர் முகம் அஷ்டகோணலாகிவிட்டது.

கடைசி மாணவனும் அதைச் செய்த பிறகு ஆசிரியர் மெல்லிய
குரலில் சொன்னார்:

"உங்கள் அனைவரையும் கவனத்துடன் பார்த்துச் செய்யச் சொன்னேன்.
நீங்கள் யாரும் அதைச் செய்யவில்லை. நான் பாட்டிலின் உள்ளே விட்டது
என்னுடைய இரண்டாவது விரல். வாயில் வைத்துச் சப்பியது அந்த விரல்
இல்லை. அதற்கு அடுத்தவிரல்!''

--------------------------------
வாழ்க வளமுடன்!

55 comments:

  1. நுனிப்புல் மேயாதிர். க(தை)ருத்து சூப்பர்.

    ReplyDelete
  2. வாத்தியாரின் குல்மால் வேலை தெரியாமல் ( நான் மருத்துவ கல்லூரி வாத்தியாரை சொன்னேன்) நானும் பாட்டிலில் விட்ட விரலை சூப்பிவிட்டேன்.

    அய்ய.... உவ்வே.....
    ( கதைய ஆரம்பிக்கும் போது நல்லாத்தான்யா ஆரம்பிச்சீங்க கடைசியில இப்படி கவுத்திட்டீங்களே..)

    ReplyDelete
  3. நல்ல காமெடி
    ஆனா இப்படியெல்லாம் வாத்தியார்கள் அதாங்க பேராசிரியர் ஏமாற்றுவார்களா

    வால்பையன்

    ReplyDelete
  4. //வால்பையன் said...
    நல்ல காமெடி
    ஆனா இப்படியெல்லாம் வாத்தியார்கள் அதாங்க பேராசிரியர் ஏமாற்றுவார்களா //


    குற்றம் மாணவர் மிது இருக்கும் போழுது பேரசிரியரை குறைகூறளாமா.

    ReplyDelete
  5. கவனத்துடன் பாருங்கள் என்று பேராசிரியர் சொன்னதை அடியேன் கவனித்தேன் ஐயா.

    ReplyDelete
  6. I like to say it is one of the very good management related Story.

    It explain don't assume any thing by your self. If you have a doubt ask to clarify before doing that or don't do that. If the students are asked to do it again there may be chance of avoided the bitter experience.

    Thanks for sharing the Story in Tamil.

    ReplyDelete
  7. உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை.

    சரித்திரம் காணாத அளவிற்கு உங்களது பெயரும் புகழும் உயர்ந்திருக்கிறது.

    ReplyDelete
  8. இந்த பதிவு எதற்க்காக...

    மாணவ மணிகளே உஷார்... வாத்தியார் ஐயா எதற்கோ அடிபோடுகிறார்...

    (இன்றைய வாத்தியார் மொத்து எனக்குத்தான் கோவை விமலுக்கு இல்லை)!!!

    ReplyDelete
  9. இந்த சின்ன கதைக்குள்ள வாத்தியார் பெரிய தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்கிறார்.

    (வாத்தியாரிடம் மொத்து வாங்க கியூவில நிக்கிறாங்க, சாய்ஸ வாத்தியாரிடம் விட்டு விடலாம்.)

    ReplyDelete
  10. //(வாத்தியாரிடம் மொத்து வாங்க கியூவில நிக்கிறாங்க, சாய்ஸ வாத்தியாரிடம் விட்டு விடலாம்.)//

    மேலும் பலரது எழுத்துலக வாழ்வில் ஒளிவீச உதவிபுரியட்டும்

    ReplyDelete
  11. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    நுனிப்புல் மேயாதிர். க(தை)ருத்து சூப்பர்.////

    கரெக்ட், சொல்லவந்தது அதுதான்!

    ReplyDelete
  12. /////கல்கிதாசன் said...
    வாத்தியாரின் குல்மால் வேலை தெரியாமல் ( நான் மருத்துவ கல்லூரி
    வாத்தியாரை சொன்னேன்) நானும் பாட்டிலில் விட்ட விரலை சூப்பிவிட்டேன்.
    அய்ய.... உவ்வே.....
    ( கதைய ஆரம்பிக்கும் போது நல்லாத்தான்யா ஆரம்பிச்சீங்க
    கடைசியில இப்படி கவுத்திட்டீங்களே..)////

    ஒன்றையும் கவுக்கவில்லை என்றால் கதை எப்படி முடியும் நண்பரே?

    ReplyDelete
  13. //////வால்பையன் said...
    நல்ல காமெடி
    ஆனா இப்படியெல்லாம் வாத்தியார்கள் அதாங்க பேராசிரியர்
    ஏமாற்றுவார்களா
    வால்பையன்/////

    சொல்லாமல் கமுக்கமாக இருந்தால்தானே ஏமாற்றுவதாகும்! அவர்தான்
    உண்மையைச் சொல்லி ஏன் கவனிக்கவில்லை என்றுதானே கேட்கின்றார்
    அவருடைய நேர்மையைப் பாராட்டுங்கள்!

    ReplyDelete
  14. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    //வால்பையன் said...
    நல்ல காமெடி
    ஆனா இப்படியெல்லாம் வாத்தியார்கள் அதாங்க பேராசிரியர் ஏமாற்றுவார்களா //
    குற்றம் மாணவர் மிது இருக்கும் போழுது பேரசிரியரை குறைகூறலாமா?///

    வால்பையனின் பின்னுட்டத்திற்கு அளித்துள்ள பதிலைப் படியுங்கள்!

    ReplyDelete
  15. //////தியாகராஜன் said...
    கவனத்துடன் பாருங்கள் என்று பேராசிரியர் சொன்னதை
    அடியேன் கவனித்தேன் ஐயா./////

    கரூர்காரர்கள் எவ்வளவு உசாரானவர்கள்.கவனிக்காமல் விடுவீர்களா?

    ReplyDelete
  16. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    I like to say it is one of the very good management related Story.
    It explain don't assume any thing by your self.
    If you have a doubt ask to clarify before doing that or don't do that.
    If the students are asked to do it again there may be chance of
    avoided the bitter experience.
    Thanks for sharing the Story in Tamil.////

    பரவாயில்லை நண்பரே! உங்கள் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  17. /////புதுகைச் சாரல் said...
    உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை.
    சரித்திரம் காணாத அளவிற்கு உங்களது பெயரும் புகழும் உயர்ந்திருக்கிறது/////

    உயர்ந்திருக்கிறதா? எந்த ஊர் சரித்திரத்தில் ஸ்வாமி?.
    சரித்திரம் என்றாலே பயமாக இருக்கிறது!
    புகழ் என்றால் அதைவிடப் பயமாக இருக்கிறது!
    எனக்கு உங்களுடைய அன்பு ஒன்று போதும்!
    வேறு ஒன்றும் வேண்டாம்!

    ReplyDelete
  18. /////சரவணகுமரன் said...
    :)////

    வெறும் ஸ்மைலி மட்டும்தானா நண்பரே!

    ReplyDelete
  19. /////கூடுதுறை said...
    இந்த பதிவு எதற்க்காக...
    மாணவ மணிகளே உஷார்... வாத்தியார் ஐயா எதற்கோ அடிபோடுகிறார்...
    (இன்றைய வாத்தியார் மொத்து எனக்குத்தான் கோவை விமலுக்கு இல்லை)!!!////

    நீர் ஒருவரே போதும்! எதற்கும் அடிபோடவில்லை கூடுதுறையாரே
    It is just an interesting story.That is all! அவ்வளவுதான்!

    ReplyDelete
  20. /////Blogger கல்கிதாசன் said...
    இந்த சின்ன கதைக்குள்ள வாத்தியார் பெரிய தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்கிறார்.
    (வாத்தியாரிடம் மொத்து வாங்க கியூவில நிக்கிறாங்க, சாய்ஸ வாத்தியாரிடம் விட்டு விடலாம்.)////

    பெரிய தத்துவம் எல்லாம் இப்பொது எடுபடாது நண்பர்களே!
    ஒரு சுவையான' குட்டிக் கதை! அவ்வளவுதான்!

    ReplyDelete
  21. /////Blogger புதுகைச் சாரல் said...
    //(வாத்தியாரிடம் மொத்து வாங்க கியூவில நிக்கிறாங்க,
    சாய்ஸ வாத்தியாரிடம் விட்டு விடலாம்.)//
    மேலும் பலரது எழுத்துலக வாழ்வில் ஒளிவீச உதவிபுரியட்டும்//////

    ஆகா, அந்த வாய்ப்புக்கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.
    முதலில் ஆண்டவன் என் எழுத்துக்களை ஒளிவீச வைக்கட்டும்:-))))
    இப்போது பலர் திட்டிக்கொண்டிருப்பதால் இதைச் சொல்கிறேன்!

    ReplyDelete
  22. பழைய ஜோக் ஆக இருந்தாலும் வாத்தியார் சொன்னதால் சுவராசியமாகியது !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  23. நல்ல கருத்தான கதை வாத்தியாரைய்யா!

    ஆனால் ஆரம்ப காலத்தில் நீரிழிவு நோயை கண்டு பிடிக்க உபகரணங்கள் கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மருத்துவர்கள் மூத்திரத்தை ஒரு சொட்டு வாயில் வைத்துப் பார்த்தே நீரிழிவு நோயை கண்டு பிடித்தார்கள்.

    ReplyDelete
  24. தேன் மட்டும் தனியாகk கொடுத்துவிட்டீர்கள் கொடுத்துவிட்டீர்கலள்( நான் சொல்ல வருவது தேன்-மருந்து-கதை-ஜோதிட பாடம்) . இன்று பாடம் உண்டா அல்லது நாளையா?

    ReplyDelete
  25. நல்ல.. கதை.. அன்பு வாத்தியாரே..

    பேராசிரியர்+மாணவர்கள்+கதை என்று வகுப்புஅறையில் நீங்கள் போட்டிருந்தாலும், 'சுவை'சம்பந்தபட்டிருப்பதால், பல்சுவையில் போட்டிருக்கலாமோ என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் :))

    எதிலும் கண்கொத்திப்பாம்பாக கவனமாக இருக்கவேண்டும் என்ற பாடத்துக்கு நன்றி,ஐயா!

    ReplyDelete
  26. /////ARUVAI BASKAR said...
    பழைய ஜோக் ஆக இருந்தாலும் வாத்தியார் சொன்னதால் சுவராசியமாகியது !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்/////

    எல்லோருக்குமே பழசு ஆகிவிடாது. படித்திராதவர்களும் இருப்பார்கள்
    அல்லவா - அருப்புக்கோட்டையாரே?

    ReplyDelete
  27. //////அமர பாரதி said...
    நல்ல கருத்தான கதை வாத்தியாரைய்யா!
    ஆனால் ஆரம்ப காலத்தில் நீரிழிவு நோயை கண்டு பிடிக்க உபகரணங்கள்
    கண்டு பிடிக்கப் படாத காலத்தில் மருத்துவர்கள் மூத்திரத்தை ஒரு சொட்டு வாயில்
    வைத்துப் பார்த்தே நீரிழிவு நோயை கண்டு பிடித்தார்கள்./////

    இது புதிய செய்தி நண்பரே! அவர்களின் தியாக உணர்வை நினைத்துப்பாருங்கள்!

    ReplyDelete
  28. //////திருநெல்வேலி கார்த்திக் said...
    தேன் மட்டும் தனியாகk கொடுத்துவிட்டீர்கள் கொடுத்துவிட்டீர்கலள்
    ( நான் சொல்ல வருவது தேன்-மருந்து-கதை-ஜோதிட பாடம்) .
    இன்று பாடம் உண்டா அல்லது நாளையா?/////

    இந்தவாரம் எத்தனை பாடங்கள் நடந்திருக்கிறது என்று பாருங்கள் நண்பரே!
    இனி பாடம் அடுத்தவாரம்தான். தட்டச்ச வேண்டாமா?

    ReplyDelete
  29. ////hotcat said...
    Super!
    -Shankar/////

    நன்றி சங்கர்!

    ReplyDelete
  30. /////தமாம் பாலா (dammam bala) said...
    நல்ல.. கதை.. அன்பு வாத்தியாரே..
    பேராசிரியர்+மாணவர்கள்+கதை என்று வகுப்புஅறையில் நீங்கள்
    போட்டிருந்தாலும், 'சுவை'சம்பந்தபட்டிருப்பதால், பல்சுவையில் போட்டிருக்கலாமோ
    என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் :))
    எதிலும் கண்கொத்திப்பாம்பாக கவனமாக இருக்கவேண்டும்
    என்ற பாடத்துக்கு நன்றி,ஐயா!////

    இல்லை, வகுப்பறையில் வெறும் ஜோதிடம் என்ற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது
    என்பதற்காகத்தான் இதில் வலையேற்றினேன்!

    ReplyDelete
  31. //இது புதிய செய்தி நண்பரே! அவர்களின் தியாக உணர்வை நினைத்துப்பாருங்கள்!//

    உண்மை தான் அய்யா. மருத்துவம் தொழிலாக மாறாத காலத்தில் அவர்கள் தியாக உணர்வுடனும் அர்ப்பனிப்புடனும் இருந்தார்கள். இதை எனக்கு சொன்னவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவர் பெயர் முனி ரத்னம் செட்டி, கோவை ராம் நகரில் இருந்தார். டயாபெடிஸ் ரிசர்ச் சென்டர் நடத்திக்கொண்டு இருந்தார். உண்மையான சேவை மனப்பான்மை மிக்க மருத்துவர்.

    ReplyDelete
  32. ஜோக் சூப்பர் , இதைவிக பெரிய ஜோக் எல்லாம் என் சொந்த அனுபவமாக உள்ளன , எழுதினால் சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக்கொள்வார்களென்றுபார்க்கிறேன்
    sample
    ஒருமுறை ஒரு உடற்பாகமொன்றை ஒருமாணவியின் கைப்பையில் அவருக்குத்தெரியாமல் போட்டுவிட்டோம் , அவர் வீட்டுக்குச்சென்றுதான் பார்த்திருக்கிறார் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை , ஆனால் அவர்களின் வீட்டில் , பூசை , களிப்பு எல்லாம் செய்யவேண்டியதாகிவிட்டது.

    ReplyDelete
  33. ///////அமர பாரதி said...
    //இது புதிய செய்தி நண்பரே! அவர்களின் தியாக உணர்வை நினைத்துப்பாருங்கள்!//
    உண்மை தான் அய்யா. மருத்துவம் தொழிலாக மாறாத காலத்தில்
    அவர்கள் தியாக உணர்வுடனும் அர்ப்பனிப்புடனும் இருந்தார்கள். இதை
    எனக்கு சொன்னவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.
    அவர் பெயர் முனி ரத்னம் செட்டி, கோவை ராம் நகரில் இருந்தார்.
    டயாபெடிஸ் ரிசர்ச் சென்டர் நடத்திக்கொண்டு இருந்தார். உண்மையான
    சேவை மனப்பான்மை மிக்க மருத்துவர்.////

    அரிய தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. /////s arul said...
    ஜோக் சூப்பர் , இதைவிக பெரிய ஜோக் எல்லாம் என் சொந்த அனுபவமாக உள்ளன , எழுதினால் சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக்கொள்வார்களென்றுபார்க்கிறேன்
    sample
    ஒருமுறை ஒரு உடற்பாகமொன்றை ஒருமாணவியின் கைப்பையில் அவருக்குத்தெரியாமல் போட்டுவிட்டோம் , அவர் வீட்டுக்குச்சென்றுதான் பார்த்திருக்கிறார் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை , ஆனால் அவர்களின் வீட்டில் , பூசை , களிப்பு எல்லாம் செய்யவேண்டியதாகிவிட்டது.////

    படிக்கும்போது அப்படியெல்லாம்கூட செய்ததுண்டா?
    வியப்பாகவும் இருக்கிறது; அதிர்ச்சியாகவும் இருக்கிறது!

    ReplyDelete
  35. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  36. hehe...

    nice story....

    anyhow if we were in that place, we will be fool about this issue...

    --Mastan

    ReplyDelete
  37. வாத்தியாரய்யா,

    சூப்பர் சூப்பர், வாய்விட்டு ச்இரிச்சுட்டேன், தவராக நினைக்க தோன்றவில்லை. பாடத்துக்கு நடுவிலயும் இது போல சில சிரிப்புகலும் தமாஷுளும்தேவை தான். நல்லா இருக்கு.

    ReplyDelete
  38. தலைப்பைப் பார்த்து இது ஏதோ `இப்ப நடக்கறது' சம்பந்தமான பதிவுன்னு நெனச்சு பயந்து பயந்து திறந்தேன்! நல்லவேளை!

    ரசித்துச் சிரித்தேன்..
    சிரித்து ரசித்தேன்!

    ReplyDelete
  39. வாத்தியார் ஐயா...

    நாங்களும் வகுப்பறக்குள் வந்துட்டோம்ல.. ஹி ஹி ஹி அடடே அட்டாகாசம் போங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. தட்டச்சு பிழை ”வகுப்பறைக்குள்” தயவு செய்து திருத்து வாசியுங்கள் எல்லாம் அவசரம் தான் காரணம்.

    ReplyDelete
  41. //////Mastan said...
    hehe...
    nice story....
    anyhow if we were in that place, we will be fool about this issue...
    --Mastan/////

    Thanks Mr.Mastan for your comments!

    ReplyDelete
  42. /////Sumathi. said...
    வாத்தியாரய்யா,
    சூப்பர் சூப்பர், வாய்விட்டு சிரிச்சுட்டேன், தவறாக நினைக்க தோன்றவில்லை.
    பாடத்துக்கு நடுவிலயும் இது போல சில சிரிப்புக்களும் தமாஷுளும்தேவை தான்.
    நல்லா இருக்கு.///

    உங்கள் மனம் கனிந்த பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  43. //////பரிசல்காரன் said...
    தலைப்பைப் பார்த்து இது ஏதோ `இப்ப நடக்கறது' சம்பந்தமான
    பதிவுன்னு நெனச்சு பயந்து பயந்து திறந்தேன்! நல்லவேளை!
    ரசித்துச் சிரித்தேன்..
    சிரித்து ரசித்தேன்!/////

    அதற்குப் பெயர்தான் கொக்கித் தலைப்பு!
    ஆளை அப்படியே இழுக்கும் நண்பரே!
    நன்றி!

    ReplyDelete
  44. //////Covai Ravee said...
    வாத்தியார் ஐயா...
    நாங்களும் வகுப்பறக்குள் வந்துட்டோம்ல..
    ஹி ஹி ஹி அடடே அட்டாகாசம் போங்க. வாழ்த்துக்கள்.//////

    நன்றி! வகுப்பறைக்குள் எல்லாப் பாடங்களுமே நடக்கும்!

    ReplyDelete
  45. /////Covai Ravee said..
    தட்டச்சு பிழை ”வகுப்பறைக்குள்” தயவு செய்து திருத்து
    வாசியுங்கள் எல்லாம் அவசரம் தான் காரணம்./////

    பின்னூட்டத்திற்குப் பிழையெல்லாம் பார்ப்பதில்லை!:-)))

    ReplyDelete
  46. வாத்தியாருங்குறதை மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க :)

    ReplyDelete
  47. /////தஞ்சாவூரான் said...
    வாத்தியாருங்குறதை மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க :)/////

    வாருங்கள் நண்பரே! நெடுநாட்களாக உங்களைக் காணோமே?
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  48. //////Madurai citizen said...
    நல்ல காமெடி!////

    நன்றி மதுரைக்குடிமகனே!

    ReplyDelete
  49. அருமையான நகைச்சுவை. சிரிப்பை அடக்க முடியவில்லை.

    ReplyDelete
  50. ////vetri said...
    அருமையான நகைச்சுவை. சிரிப்பை அடக்க முடியவில்லை.///

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. /////Blogger goma said...
    viral sooppiya sooper comedy///

    நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com