நம்ம ஊர்லதான் படுத்துறாங்க என்றால், அங்கேயும் படுத்துறாங்களே சாமி?
தெய்வம், தெய்வக்குத்தம், குலதெய்வம், திருவிழா, அபிஷேகம், படையல்,
மொட்டை, காதுகுத்து, அழகர் ஆத்தில இறங்குகிறாரு, மீனாட்சிக்குக் கல்யாணம்
என்று வருஷம் முச்சூட்டும் நம்மளைத்தான் படுத்தி எடுக்குறங்கன்னா,
அங்கேயும் இதேதானா?
அறிவியல் கண்டு பிடிப்புக்கள்ள நம்மர் ஒன்னா இருக்கிற நாட்டுக்கா இந்தக்கதி?
நீங்களே பாருங்க!
இந்தக் கூத்து ஜப்பான்லதான்!
தங்கள் குலதெய்வத்தைப் பல்லக்கில் தூக்கிச் சென்று கடலில் புனித நீராட்டுகிறார்களாமே?
அவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?
அவங்களுக்குமா பகுத்து அறியத் தெரியலை?
படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
படம்: நன்றி - தினமலர்!
வாழ்க வளமுடன்!
கருவிப்பட்டை - அதான் சாமி Tool bar ஏன் இரண்டுமுறை வருகிறது?
ReplyDeleteமேலே பாருங்கள்!
ஒன்றை எப்படி நீக்குவது?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
ஆசிரியர் ஐயா இரட்டை பிறவியின்ன் ஜாதம் பற்றி எழுதப் போவது கருவிப் பட்டைக்கு தெரிந்துவிட்டது போலும்.நிற்க.
ReplyDeleteஅநேகமாக உங்கள் " setup" ல் கருவிப்பட்டை இனைப்பு உதவி மென்பொருள் வரிகள் இரு மூறை "paste" பண்ணப் பட்டிருக்காலாம்.
கருவிபட்டையை இணப்பதற்கு முன் சேமித்த "file" ல் கருவிபட்டையை மிண்டும் இணைத்தால் இது சரியாகலாம்.
இப்போது உள்ள் "file with two tool bars" நீக்கிவிடவும்.
வனக்கத்துடன்
தி.விஜய்
//////விஜய் said...
ReplyDeleteஆசிரியர் ஐயா இரட்டை பிறவியின் ஜாதகம் பற்றி எழுதப்
போவது கருவிப் பட்டைக்கு தெரிந்துவிட்டது போலும்.நிற்க./////
எழுதினால் கருவிப்பட்டையும் வந்து சான்று கேட்குமா? நான் எழுதவில்லை சாமி!
/////அநேகமாக உங்கள் " setup" ல் கருவிப்பட்டை இனைப்பு உதவி மென்பொருள் வரிகள் இரு மூறை "paste" பண்ணப் பட்டிருக்காலாம்.
கருவிபட்டையை இணப்பதற்கு முன் சேமித்த "file" ல் கருவிபட்டையை மிண்டும் இணைத்தால் இது சரியாகலாம்.
இப்போது உள்ள் "file with two tool bars" நீக்கிவிடவும்.
வனக்கத்துடன்
தி.விஜய்////
change to default template ற்கு மாற்றி, மீண்டும் கருவிபட்டையை ஒருமுறை இணத்துச் சரி செய்துவிட்டேன் விஜய்
நன்றி!
நன்று
ReplyDeleteவாத்தியார் ஐயா
ReplyDeleteஉலகம் முழுக்க ஆதிவாசி,நாகரிக மனிதன்,வெளியுலகமே அறியாத தீவுகளில் வாழ்ந்து,மறைந்த மனிதர்கள் என அனைத்து இன/நாடு/தேச மக்களுக்கும் பொதுவான விஷயம் கடவுள்..
அமேசான் காட்டில் வேறு எந்த இனத்தின் தொடர்புமின்றி வாழும் ஆதிவாசி இனம் இருந்தால் அவர்களுக்கும் கடவுள் என்ற ஒன்றை தெரிந்திருக்கிறது./.அதையும் அவர்கள் வழிபடத்தான் செய்கிறார்கள்..உலகம் முழுவதற்கும் அனைத்து காலத்திலும் வசித்த மனித இனங்கள் அனைத்துக்கும் பொதுவான விசயமாக இந்த கடவுள் என்ற கோட்பாடு தோன்றியது எப்படி?
நினைத்து பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
இதென்ன பிரமாதம் இங்கு கனடாவில்கூட பேய் வந்து தொலைபேசியில் message விடுவதாக நம்பும் கூட்டம் ஒன்று உள்ளது,
ReplyDelete//////மௌன விரதம் விமல்(vimal) said...
ReplyDeleteநன்று////
Thanks!
//////செல்வன் said...
ReplyDeleteவாத்தியார் ஐயா
உலகம் முழுக்க ஆதிவாசி,நாகரிக மனிதன்,வெளியுலகமே அறியாத தீவுகளில் வாழ்ந்து,
மறைந்த மனிதர்கள் என அனைத்து இன/நாடு/தேச மக்களுக்கும் பொதுவான விஷயம் கடவுள்..
அமேசான் காட்டில் வேறு எந்த இனத்தின் தொடர்புமின்றி வாழும் ஆதிவாசி
இனம் இருந்தால் அவர்களுக்கும் கடவுள் என்ற ஒன்றை தெரிந்திருக்கிறது./.
அதையும் அவர்கள் வழிபடத்தான் செய்கிறார்கள்..உலகம் முழுவதற்கும்
அனைத்து காலத்திலும் வசித்த மனித இனங்கள் அனைத்துக்கும் பொதுவான விசயமாக
இந்த கடவுள் என்ற கோட்பாடு தோன்றியது எப்படி?
நினைத்து பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.///////
உண்மை செல்வரே! குலதெய்வ வழிபாடும், முன்னோர்களை வழிபடுதலும் எல்லா
இடங்களிலும் நிலவுகிறது நண்பரே!
/////s arul said...
ReplyDeleteஇதென்ன பிரமாதம் இங்கு கனடாவில்கூட பேய் வந்து தொலை
பேசியில் message விடுவதாக நம்பும் கூட்டம் ஒன்று உள்ளது,//////
:-)))))
ஐயா, எச்சரிக்கை பதிவுக்கு மேல் முதலில் வருவதுதானே சரியாக இருக்கும்? பதிவை படித்த பிறகு எச்சரித்து என்ன பயன்?
ReplyDeleteஎழுதும் பதிவை ஏற்கெனவே இருக்கும் எச்சரிக்கையின் கீழே ஒட்டினால் சரியாகி விடும்.
/////திவா said...
ReplyDeleteஐயா, எச்சரிக்கை பதிவுக்கு மேல் முதலில் வருவதுதானே சரியாக இருக்கும்? பதிவை படித்த பிறகு எச்சரித்து என்ன பயன்?
எழுதும் பதிவை ஏற்கெனவே இருக்கும் எச்சரிக்கையின் கீழே ஒட்டினால் சரியாகி விடும்./////
நீங்கள் சொல்வது சரிதான். செய்துவிட்டேன். மேலே பாருங்கள்!
பார்த்தேன் ஐயா!
ReplyDeleteசொன்னதை நல்ல விதமாய் எடுத்துக்கொண்டது குறித்து நன்றி!
குலதெய்வ வழிபாடும், முன்னோர்களை வழிபடுதலும் எல்லா
ReplyDeleteஇடங்களிலும் நிலவுகிறது.
நீங்கள் சொல்வது சரிதான்.....
/////திவா said...
ReplyDeleteபார்த்தேன் ஐயா!
சொன்னதை நல்ல விதமாய் எடுத்துக்கொண்டது குறித்து நன்றி!/////
நல்லது என்றால் நல்லவிதமாக எடுத்துக்கொண்டு முன்னுதாரணமாகத்
திகழாவிட்டால் நான் எப்படி ஆசிரியராக இருக்க முடியும் நண்பரே?
//////Madurai citizen said...
ReplyDeleteகுலதெய்வ வழிபாடும், முன்னோர்களை வழிபடுதலும் எல்லா
இடங்களிலும் நிலவுகிறது. நீங்கள் சொல்வது சரிதான்..../////
மதுரைக்காரர்கள் பார்க்காத வழிபாடா?
அதனால்தான் ஓடிவந்து பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் -
இல்லையா நண்பரே?
பாராட்டுக்கள்
ReplyDelete//////////Blogger sankarfilms said...
ReplyDeleteபாராட்டுக்கள்/////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சங்கர்!