ஆரம்ப காலங்களில் மிகவும் ஆர்வமாக எல்லோருடனும் ஜோதிடத்தை சிலாகித்துப்
பேசிக் கொண்டிருப்பேன். ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு அதைக் குறைத்துக் கொண்டு
விட்டேன். அதாவது அத்தியாவசியத் தேவையின்றி வாயைத்திறக்காமல் இருப்பேன்.
வருகிறவர்களின் உபத்திரவம்தான் காரணம். என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
விட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச்
சொன்னதால். வருகிறவர்கள் என்னை இந்திரன், சந்திரன் என்று புகழ்வார்கள். ஒரு தர்ம
காரியத்தை செய்து கொண்டிருப்பதாகவும், நான் மேலே போகும் போது ஐந்தாறு லாரிலோடு
புண்ணியம் கூடவே வரும் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.
சொல்லிவிட்டுப் போன கையோடு, அவர்களுக்குத் தெரிந்த இரண்டு பேரை அனுப்பி
வைப்பார்கள். அந்த ஆசாமிகளும் பவ்வியமாகப் போனில் பேசுவார்கள்
”சார், உங்களைப் பற்றி உங்கள் நண்பர் வைத்தியநாதன் பிரமாதமாகச் சொன்னார்.
உங்களைப் பார்க்க வேண்டும் எப்போது ஃப்ரீயாக இருப்பீர்கள்?”
“என்ன விஷயம்?”
“ச்சும்மா கர்ட்டஸி கால். பத்து நிமிடமித்திற்கு மேல் ஆகாது!”
வேறு என்ன செய்வது?
நண்பருக்காக அந்த ஆசாமியை வர அனுமதிப்பேன்.
வந்த பிறகுதான் வம்பு ஆரம்பமாகும். வந்த ஆசாமி கழுத்துமேல் ஏறி உட்கார்ந்து
கொண்டு விடுவார். ஏறி உட்கார்ந்தது மட்டுமல்ல இறங்கச் சொன்னால், ஆயிரம் ப்ளீஸ்
போட்டு, சீரியலில் வரும் நடிகைகள் போலக் கண் கலங்கி வந்த காரியத்தைச்
சாதிக்காமல் போகமாட்டார்.
பரிதாபப்பட்டு அவருடைய ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால், கூட்டெழுத்தில் ஒரு
பழைய பஞ்சாங்க ஜோதிடர் அந்தக் காலத்தில் எழுதிக் கொடுத்த ஜாதகமாக இருக்கும்.
எழுத்துக்கள் ஒன்றும் புரியாது எல்லாப் பக்கங்களிலும் மஞ்சள் மட்டும் அம்சமாகத் தடவப்பட்டிருக்கும்.பரல்கள்.மாந்தியின் நிலைமை போன்ற முக்கியக் குறிப்புக்கள்
இருக்காது!
நான் சொல்லும் கதைகள் 1990 - 1995 கால கட்டங்களில் நடந்தவைகளாகும்.
அப்போது கணினியில் ஜாதகம் கணிக்கும் வசதி எல்லாம் கிடையாது.
நான் உடனே என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தொகுப்பு நூலை எடுத்து, அந்த ஜாதகத்
தைப் பரிசீலனை செய்வேன். 1921 முதல் 1991 உள்ள 70 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கத்
தொகுப்பு நூல் அது. காலசந்திப்புப் பிறப்பா, நட்சத்திரம் சரியாகக் குறிக்கப்பாட்டு
ள்ளதா, மற்ற கிரகங்களும் ஒழுங்காகக் குறிப்பிடப் பட்டுள்ளதா என்று பார்ப்பேன்.
பிறகு அந்த ஜாதகத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தசா இருப்பில் இருந்து அடுத்தடுத்துக்
கடந்துபோன தசா புத்திகளைக் கணக்கிட்டு அன்றைய தேதிவரை வந்து நடப்பு
தசா புத்திவரை குறிப்பெடுத்துக் கொள்வேன்.
பிறகுதான் ஆட்டம் ஆரம்பம் ஆகும். வந்தவர் பெளன்சராகப் போடுவார்.
உதாரணத்திற்கு ஒரு நிகழ்வைச் சொல்கிறேன் பாருங்கள்:
“உங்கள் பிரச்சினை என்ன வென்று சொல்லுங்கள்”
“நீங்கள் இதுவரை குறித்ததை வைத்து பிரச்சினை என்னவென்று சொல்ல முடியாதா?”
“முடியாது. மருத்துவரிடம் போய் சட்டையைக்கூடக் கழற்றாமல், என் உடம்பில் என்ன
பிரச்சினை இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் எப்படிச் சொல்வார்?
Scribbling Pad or Letter Headல் Full Body Scan, Blood & Urine Test, EGC Test என்று
எழுதிக்கொடுத்து உங்களுக்கு ஒரு ஆறாயிரம் ரூபாய்க்கு செலவு வைத்துத் திருப்பி
அனுப்பி விடுவார். உடலில் பிரச்சினை என்றால் தலைவலி, வயிற்று வலியில் இருந்து
கான்சர் வரை நூறு பிரச்சினைகளையாவது பட்டியல் இடலாம். அது போலத்தான்
இதுவும். பிரச்சினையைச் சொன்னால்தான் இதில் அது சம்பந்தமான Planetary
Combinationsகளை வைத்துப் பார்க்கமுடியும்.”
“சாரி சார், ஒரு ஆர்வத்தில் தெரியாமல் கேட்டுவிட்டேன். நான் வேலை பார்க்கும்
அலுவலகத்தில் ஒரு தவறான despatchஆல் கம்பெனிக்கு சில லட்சங்கள் நஷ்டம்
ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் காரணமல்ல.எனக்குக் கீழே இருக்கும் உதவியாளர்
களால் ஏற்பட்டுவிட்டது. இப்பொது எனக்கும் சேர்த்து சார்ஜ்சீட் கொடுத்துவிட்டார்கள்.
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிவு எப்படி வேண்டுமென்றாலும் ஆகலாம்.
அதிக பட்சம் அவர்கள் வேலையைவிட்டு என்னை அனுப்பி விடலாம். அல்லது ஒரு
வார்னிங் மட்டும் கொடுத்து வேலையிலே இருக்கச் சொல்லலாம். அல்லது பதவி
இறக்கம் செய்து விடலாம். என்ன நடக்குமோ என்று கவலையாக இருக்கிறது.
நீங்கள் பார்த்து ைதரியமாக ஒரு வார்த்தை சொன்னால் போதும்!”
பதிவின் நீளம் கருதி இங்கே கட் சொல்லி விட்டு அடுத்த ஸீனுக்குப் போகிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு அவர் பார்க்கும் வேலையில் பிரச்சினை என்றால் முதல் காரணம்
பாதக ஸ்தான அதிபதிகளின் தசாபுக்தி காரணமாக இருக்கும். அதோடு கர்மகாரகனின்
கோச்சாரம் (Transit Saturn) காரணமாக இருக்கும். பெரும்பாலும் இவைகள்தான்
காரணமாக இருக்கும். சில வேறு அமைப்புக்களும் உண்டு. காரணங்களும் உண்டு.
அவைகள் சில்லரை/உபரிக் கணக்கில் வரும் அதை விட்டு விடுவோம்
பாதக ஸ்தானம் = Inimical house, Hidden places, மறைவிடங்கள்! 6ஆம் இடம், 8ஆம்
இடம் & 12ஆம் இடம்
இங்கே Majorஐ மட்டும் பார்ப்போம் Ancillaryஐ விட்டு விடுவோம்.
எந்த ஒரு கேள்விக்குமே அது சம்பந்தப்பட்ட வீட்டை அதற்குரிய லக்கினமாக
எண்ணிக் கொண்டுதான் பரிசீலனை செய்ய வேண்டும்.
பணப்பிரச்சினை என்றால் 2ஆம் வீடு
படிப்பில் பிரச்சினை என்றால் 4ஆம் வீடு.
கடன் அல்லது நோயால் தொல்லை என்றால் 6ஆம் வீடு
வேலை அல்லது தொழிலில் பிரச்சினை என்றால் 10ஆம் வீடு
திருமணத்தில் பிரச்சினை என்றால் 7ஆம் வீடு.
இப்படியாக அதற்குறிய கட்டத்தை ஜாதகத்தின் ஒரிஜினல் லக்கினத்தில் இருந்து
எண்ணிக் குறித்துக் கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்
(இந்த ஆட்டம், பாட்டம் என்ற சொற்கள் எல்லாம் ஒரு சுவைக்காகத்தான்)
வந்த ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். அவருடைய பத்தாம் வீடு ரிஷபம்.கேள்வி வேலை
சம்பந்தப்பட்டது என்பதால் தற்காலிகமாக ரிஷபத்தை லக்கினமாக எடுத்துக் கொண்டு
பரிசீலிக்க வேண்டும். வந்தவருக்கு ரிஷபத்தில் 30 பரல்கள்.பத்தாம் இடத்து அதிபதி
சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கின்றார். இந்தக் காம்பினேஷனால்
அவருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. கோச்சாரத்தில் எட்டாம் இடத்தில்
தனுசு இராசியில் சனி. 10ஆம் வீட்டிற்கு, அதன் எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம்
செய்யும் போது பல இடையூறுகளை ஏற்படுத்துவார். இடையூறுகளைப் பட்டியல்
இட்டால் மாளாது. ஒரே வார்த்தையில் இடையூறுகள்.அவ்வளவுதான்.
அந்த இரண்டரை ஆண்டு (Transit Saturn - அந்த எட்டில் இருக்கும் காலம்) நடக்கும்
தாசபுத்தி நன்றாக இருந்தால், இடையூறுகளைத் தட்டி விடலாம் - அதாவது சமாளித்து
விடலாம். இல்லை என்றால் அது நம்மைத் தட்டி விடும்.
அவருடைய தசா புத்தி அந்த நேரத்தில் குரு திசையில் சனி புக்தி. அது முடிய 20 நாட்கள்
பாக்கி இருந்தது. அதற்குப் பிறகு, குரு திசையில் புதன் புத்தி. அது நல்லதாக இருக்கும்.
“பொறுமையாக இருங்கள்.இன்னும் ஒரு மாதத்தில் நிலமை சரியாகி விடும். உங்களுக்குப்
பெரிய பாதிப்பு ஒன்றும் வராது” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
அதுபோல்தான் நடந்தது!
வெறும் எச்சரிக்கைக் கடிதத்தோடு அவருடைய வேலை தப்பிப் பிழைத்தது!
இது போன்று பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
--------------------------------------------------------------------------
அடுத்த பிறவியில் என்னவாகப் பிறந்தான்?
உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர்
இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு இருந்தா
லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள்.
அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது
இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது. அவன் பெயர்
சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!.
அதுவா முக்கியம்?
அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக்
குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண்
குழந்தையும் பிறந்தது
எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது?
ஒரே ஒரு குறை இருந்தது.
சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன்
அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை
சந்தோஷப் படுத்தச் சொல்வான். அவளும் மனம் கோணாமல் எப்போது
அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள்.
யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள்
அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான்.
மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள்
எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள்
யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை!
ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி.
மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள்
பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.
அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு
சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது!
அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை!
ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து
வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள்.
அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார்.
அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது!
இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து
எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.
அதை அவள் அவரிடம் சொன்னாள்.
உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன்
ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு,
மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய
ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக்
கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன்
பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா"
என்றார்
அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து
நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு
பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள்.
என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக
ஒலித்தது.
"என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?"
"இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்"
"கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில்
நாம் மறுபடியும் இணவோம்!"
"அதற்கு எவ்வளவு நாளாகும்?"
"யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு
உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன்"
அவள் குளிர்ந்துபோய் விட்டாள். மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது.
உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள்,
ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்:
"அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே?
இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?"
"ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!"
நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்?
வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி
விளையாடுகிறீர்களா?"
"இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான்
முயலாகப் பிறந்துள்ளேன்
--------------------------------------------------------------------------------------
உடனே லாஜிக், சான்று என்று கேட்டு, வேட்டு வைக்க முயலாதீர்கள்.
ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!
அதை யாரும் கேட்டால்தானே?
(தொடரும்)
வாழ்க வளமுடன்!
///வருகிறவர்களின் உபத்திரவம்தான் காரணம். என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
ReplyDeleteவிட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச்
சொன்னதால். வருகிறவர்கள் என்னை இந்திரன், சந்திரன் என்று புகழ்வார்கள். ஒரு தர்ம
காரியத்தை செய்து கொண்டிருப்பதாகவும், நான் மேலே போகும் போது ஐந்தாறு லாரிலோடு
புண்ணியம் கூடவே வரும் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.///
this is hilarious...simply superb!
-Shankar
வாத்தியாரய்யா,
ReplyDeleteஎனக்கு ஒரு விளக்கம் தேவை. அதாவது ஒரு முறை மனித பிறவி எடுத்து விட்டால் மீண்டும் அதே மனித பிறவி தான் என்றும் வேற விதமாக அதாவது மிருகமாவோ இல்ல செடி,கொடிகளாவோ மாறாது என்றும் சொல்கிறார்களே இது உண்மையா?ப்ளிஸ் விளக்கவும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஆஹா..சூப்பர் ...
ReplyDeleteஆழ்ந்த கருத்து ..அருமையான நடை..
கலக்கிடீங்க வாத்தியார் அய்யா !!
இத இதத்தான் எதிர்பார்த்தேன் .
வாரத்தில் இரண்டு நாள் வகுப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.
அன்புள்ள மாணவன் .
GK, BLR
சூப்பராக இருந்தது... சுவைத்துப் படித்தேன்...
ReplyDeleteஐயா இந்தவாரமும் முழுப்பாடம் இல்லையா? கதை அதிக இடத்தினை எடுத்துக்கொண்டதே...
ReplyDelete////Anonymous said...
ReplyDelete///வருகிறவர்களின் உபத்திரவம்தான் காரணம். என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
விட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச்
சொன்னதால். வருகிறவர்கள் என்னை இந்திரன், சந்திரன் என்று புகழ்வார்கள். ஒரு தர்ம
காரியத்தை செய்து கொண்டிருப்பதாகவும், நான் மேலே போகும் போது ஐந்தாறு லாரிலோடு
புண்ணியம் கூடவே வரும் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.///
this is hilarious...simply superb!
-Shaந்கர்////
Thanks Mr.Shankar for your comment!
////Sumathi. said...
ReplyDeleteவாத்தியாரய்யா,
எனக்கு ஒரு விளக்கம் தேவை. அதாவது ஒரு முறை மனித பிறவி எடுத்து விட்டால் மீண்டும் அதே மனித பிறவி தான் என்றும் வேற விதமாக அதாவது மிருகமாவோ இல்ல செடி,கொடிகளாவோ மாறாது என்றும் சொல்கிறார்களே இது உண்மையா?ப்ளிஸ் விளக்கவும்.///
அப்படியெல்லாம் ஒரு கணக்கிருப்பதாகத் தெரியவில்லை சகோதரி!
/////Geekay said...
ReplyDeleteஆஹா..சூப்பர் ...
ஆழ்ந்த கருத்து ..அருமையான நடை..
கலக்கிடீங்க வாத்தியார் அய்யா !!
இத இதத்தான் எதிர்பார்த்தேன் .
வாரத்தில் இரண்டு நாள் வகுப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.
அன்புள்ள மாணவன் .
GK, ////
சராசரியாக வாரம் இரண்டு வகுப்புக்கள் நடைபெறுகிறதே ஜீக்கே!
/////VIKNESHWARAN said...
ReplyDeleteசூப்பராக இருந்தது... சுவைத்துப் படித்தேன்...////
சுவைத்தது எது முயலாகப் பிறந்தவன் கதையா?
அல்லது அதனால் கிடைத்த நீதியா?
/////Blogger shanmugs said...
ReplyDeleteஐயா இந்தவாரமும் முழுப்பாடம் இல்லையா? கதை அதிக இடத்தினை எடுத்துக்கொண்டதே..///
அடுத்த பதிவு முழுவதும் பாடமே!
கதைகளின் ஊடே பாடமும் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன் நண்பரே!
அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்?
மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பார்கள்.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கதை அதிரடி தான்!
ReplyDeleteநீங்கள் எடுப்பது ஜோதிடபாடம் மட்டுமல்ல ஐயா, time management கூட எவ்வளவு முக்கியம் என்பதையும் எங்களுக்கு சொல்லி தருகின்றீர்கள்,தூள்!
////தமாம் பாலா said...
ReplyDeleteமீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பார்கள்.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கதை அதிரடி தான்!
நீங்கள் எடுப்பது ஜோதிடபாடம் மட்டுமல்ல ஐயா, time management கூட எவ்வளவு முக்கியம் என்பதையும் எங்களுக்கு சொல்லி தருகின்றீர்கள்,தூள்!///
ஜோதிடத்தை தவிர்த்து மற்ற பாடங்களை நடத்தத்தான் எனக்கு விருப்பம்!
ஆனால் பலரின் ஏகோபித்த ஆதரவு இதற்குத்தான் பாலா!
//என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
ReplyDeleteவிட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச் பார்த்துச் சொன்னதால்
//
அய்யா,
இதை சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் சொல்லுகிறேன். உங்களுடைய நேரத்துக்கு உரிய விலையை சொல்லி அவர்களிடம் அதை கேட்டிருந்தால் அவர்கள் கொடுத்திருப்பார்களே. அப்படி கொடுக்காமல் போயிருந்தாலும் நீங்கள் இவ்வளவு நாள் கழித்து வருத்தப்படும் நிலைமை வந்திருக்காதே.
சூப்பர் கதை
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே,
ReplyDeleteஇப்பத்தான் வகுப்பறை களை கட்டுகின்றது. அசத்துங்க.
anonymous ன் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.
( நீங்கள் புத்திசாலியா? பதில் சொல்லுங்கள்! என்று கேள்வி மட்டும் கேக்காதீங்க. உண்மை வெளியில தெரிஞ்சு போகுது)
ஐயா,
ReplyDeleteஒரே பதிவில் கதைகள், கருத்துக்கள்,
பாடங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் என்று கலக்கீட்டீங்க. இதேபோல் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வேலை பற்றி பலன் கூறியது நன்றாக இருந்தது. நன்றி.
//
ReplyDeleteஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!//
அறைகுறை வயதில் இறப்பதே இறைவன் செய்ல் தானே???
அப்படி இருக்கும் போது அந்த வயசுல ஆசையில்லாம இருக்கனும்னு சொன்னா எப்படி?????
/////Anonymous said...
ReplyDelete//என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
விட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச் பார்த்துச் சொன்னதால்
//
அய்யா,
இதை சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் சொல்லுகிறேன். உங்களுடைய நேரத்துக்கு உரிய விலையை சொல்லி அவர்களிடம் அதை கேட்டிருந்தால் அவர்கள் கொடுத்திருப்பார்களே. அப்படி கொடுக்காமல் போயிருந்தாலும் நீங்கள் இவ்வளவு நாள் கழித்து வருத்தப்படும் நிலைமை வந்திருக்காதே.//////
கல்வி, வைத்தியம், ஜோதிடம் மூன்றும் தர்மத்தொழில்.இப்போது மூன்றுமே பணம் கொழிக்கும் தொழில் என்பது வேறு விஷயம்.அந்தக் காலத்தில் அரசன் இருந்தான்
மான்யம் கொடுத்தான். எல்லாம் தர்மமாகவே நடந்தது.
இப்போது அரசன் இல்லை. அரசு இருக்கிறது. அவர்களே நமது வரிப்பணத்தில்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வருத்தம் ஒன்றுமில்லை. அப்படி நடந்திராவிட்டால் அனுபவம் ஏது?
இப்போது அனுமதிப்பதில்லை. நேரம் எவ்வளவு முக்கியம் என்று தாமதமாக இப்போதுதான் தெரிந்திருக்கிறது:)))
அதுவும் தெரிந்து என்ன பயன்?
(ப்ளாக்கில் எழுதி நேரத்தை வீணடித்தோமோ என்று பின்னால் நினைக்க மாட்டேன்.இது ஆத்ம திருப்திக்காக எழுதுவது!)
////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteசூப்பர் கதை////
சொல்லுவீர்கள் என்று தெரியும்.விஷயம் 'அதை'ப் பற்றியதல்லவா?:)))
///கல்கிதாசன் said...
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே,
இப்பத்தான் வகுப்பறை களை கட்டுகின்றது. அசத்துங்க.
anonymous ன் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்.
( நீங்கள் புத்திசாலியா? பதில் சொல்லுங்கள்! என்று கேள்வி மட்டும் கேக்காதீங்க. உண்மை வெளியில தெரிஞ்சு போகுது)////
உண்மையை எங்கே வேண்டுமென்றாலும் சொல்லலாம் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல்!
////மணிவேல் said...
ReplyDeleteஐயா,
ஒரே பதிவில் கதைகள், கருத்துக்கள்,
பாடங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் என்று கலக்கீட்டீங்க. இதேபோல் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வேலை பற்றி பலன் கூறியது நன்றாக இருந்தது. நன்றி.////
நன்றி நண்பரே!
////வெட்டிப்பயல் said...
ReplyDelete//
ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!//
அறைகுறை வயதில் இறப்பதே இறைவன் செயல் தானே???
அப்படி இருக்கும் போது அந்த வயசுல ஆசையில்லாம இருக்கனும்னு சொன்னா எப்படி?????////
இறைவனுக்கும் நமது வாழ்க்கை அவலங்களுக்கும் சம்பந்தம் இல்லை!
இருந்திருந்தால் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறி அவரை வணங்கி விட்டு எல்லாத் தவறுகளையும் செய்யலாமே?
இறைவனை வணங்குவதால் என்ன பயன்? He will give us standing power! That too only in good deeds!:-)))
தசரதர்,ராமனைப் பிரிந்து புத்திர சோகத்தில் ஆழ நேரிட்டது, அவருடைய முன் வினைப்பயன் அல்லவா? தெரியுமே உங்களுக்கு!
அந்த வயதில் ஆசைப்படுவதில் தவறில்லை. அதிகமாக ஆசை வைத்து மயக்கத்துடன், கிறக்கத்துடன் திரிவதுதான் தவறு பாலாஜி!
மது, மாற்றான் தோட்டத்து மல்லிமகை, கஞ்சா, சிகரெட் எல்லாம் எந்தக்
கணக்கில் வரும் பாலாஜி, சிற்றின்பத்திலா அல்லது பேரின்பத்திலா?:)))))
வாழ்வு தந்த இடையூறுகளை இப்ப நீங்கள் தரும் படிப்போடு பொருத்திப் பார்த்தால் தெரிகிறது தசாபுக்திகளின் அருமை:-( //10ஆம் வீட்டிற்கு, அதன் எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம்
ReplyDeleteசெய்யும் போது // இது வாழ்வில் எத்தனை முறை நடைபெறும்?
நன்றி.
கரெக்ட் ஆகா சொன் னீங்க வாத்தியரே. எனக்கு ஜூன் 15 வரை குரு திசையில் சனி புக்தி, அது முடிந்து இப்போ குரு திசையில் புதன் புத்தி, இப்போ ஒரு நல்ல மாற்றம் தெரியுது வேலையில், நல்ல சம்பள உயர்வு கிடைத்தது.
ReplyDeleteஅப்புறம் வாத்தியரே நம்ப முன் பதிவு பின்னூட்ாத்தின் பதில் இன்னும் வரவில்லை......
////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said... வாழ்வு தந்த இடையூறுகளை இப்ப நீங்கள் தரும் படிப்போடு பொருத்திப் பார்த்தால் தெரிகிறது தசாபுக்திகளின் அருமை:-( //10ஆம் வீட்டிற்கு, அதன் எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது // இது வாழ்வில் எத்தனை முறை நடைபெறும்? நன்றி.////
ReplyDeleteஅதிகபட்சம் மூன்று முறைகள்!
3 rounds by rotation in one's life!
////கோவை விமல்(vimal) said... கரெக்ட் ஆகா சொன் னீங்க வாத்தியரே. எனக்கு ஜூன் 15 வரை குரு திசையில் சனி புக்தி, அது முடிந்து இப்போ குரு திசையில் புதன் புத்தி, இப்போ ஒரு நல்ல மாற்றம் தெரியுது வேலையில், நல்ல சம்பள உயர்வு கிடைத்தது.////
ReplyDeleteநல்லது! அடுத்து குரு திசை சுக்கிர sub period l உங்கள் காதைப் பிடித்துத் திருகி சம்பளக் கவரை வாங்கிக் கொள்ள ஒரு 50 kilos சொர்க்கம் வரும் அதுவரை ஜாலியாக இருங்கள்.
ஆசிரியர் ஐயா அலுவலக்த்தில் பணிபுரியும் உழியர்களில் சிலர் கைரேகை சாஸ்திரம்,கொஞ்சம் ஜாதகம் பார்ர்க்க தெரிந்ததை வைத்து உயர் அதிகாரிகளிடம் சர்வீஸ் முழுவதும் சலுகை களின் ருசியை அனுபவித்தவரே அதிகம்.
ReplyDeleteபிரதி பலனை எதிர் பார்க்கமால் தங்கள் செய்யும் இந்த அறிவுப் பரவலாக்கும்
வேள்வி பணிக்கு, அடுத்த பிறவியில்
அமோகமான பெரும் புகழுடன் வாழும் சான்றோராய் இருப்பீர்கள் இது உறுதி.
உங்க சந்ததியினர் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து சிறப்பபர்கள்.
வாழ்க வையகம்
வாழ்க வழமுடன்
இறையாற்றல் கருணை
புரியட்டும்.
இன்பம் பல்கி பெருகி
பரவட்டும்
///ஆசிரியர் ஐயா அலுவலக்த்தில் பணிபுரியும் உழியர்களில் சிலர் கைரேகை சாஸ்திரம்,கொஞ்சம் ஜாதகம் பார்ர்க்க தெரிந்ததை வைத்து உயர் அதிகாரிகளிடம் சர்வீஸ் முழுவதும் சலுகை களின் ருசியை அனுபவித்தவரே அதிகம்.////
ReplyDeleteI agree and I have heard this before....ppl who knows this think they are always right and will start advising(like somewhat commenting...) and will gain others favors at free of cost...
-Shankar
கலக்கிடீங்க
ReplyDeleteஅய்யா ,
ReplyDeleteபடித்தேன் ! ரசித்தேன் !!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//அவன் அதற்குத்
ReplyDeleteதகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!
அதை யாரும் கேட்டால்தானே?
//
ஆசையில் அதிகம் என்ன குறைவு என்ன ? பிறருக்கோ தனக்கோ யாதொரு துன்பமும் இல்லை என்றால் எல்லாம் ஒரே வகை ஆசைதான்.
ஆசையற்ற தன்மை, மந்தில் அலையற்ற தன்மை, தெளிவான சிந்தனை (நிர்குணம்) இருந்தால் கணக்கு வழக்கு இருக்காது, பிறவியும் கிடையாது !
:) மற்றதெல்லாம் உடான்ஸ் !
////பொதிகைத் தென்றல் said...
ReplyDeleteஆசிரியர் ஐயா அலுவலக்த்தில் பணிபுரியும் உழியர்களில் சிலர் கைரேகை சாஸ்திரம்,கொஞ்சம் ஜாதகம் பார்ர்க்க தெரிந்ததை வைத்து உயர் அதிகாரிகளிடம் சர்வீஸ் முழுவதும் சலுகை களின் ருசியை அனுபவித்தவரே அதிகம்.
பிரதி பலனை எதிர் பார்க்கமால் தங்கள் செய்யும் இந்த அறிவுப் பரவலாக்கும்
வேள்வி பணிக்கு, அடுத்த பிறவியில்
அமோகமான பெரும் புகழுடன் வாழும் சான்றோராய் இருப்பீர்கள் இது உறுதி.
உங்க சந்ததியினர் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து சிறப்பபர்கள்.
வாழ்க வையகம், வாழ்க வழமுடன்
இறையாற்றல் கருணை புரியட்டும்.
இன்பம் பல்கி பெருகி பரவட்டும்///
உங்கள் எண்ணம் இன்னும் சிறக்கட்டும்
உங்கள் வாக்கு என்றும் பலிக்கட்டும்!
///Anonymous said...
ReplyDelete///ஆசிரியர் ஐயா அலுவலக்த்தில் பணிபுரியும் உழியர்களில் சிலர் கைரேகை சாஸ்திரம்,கொஞ்சம் ஜாதகம் பார்ர்க்க தெரிந்ததை வைத்து உயர் அதிகாரிகளிடம் சர்வீஸ் முழுவதும் சலுகை களின் ருசியை அனுபவித்தவரே அதிகம்.////
I agree and I have heard this before....ppl who knows this think they are always right and will start advising(like somewhat commenting...) and will gain others favors at free of cost...
சங்கர்///
அது உலக இயல்புதான் நண்பரே!
///sahul said... கலக்கிடீங்க///
ReplyDeleteநன்றி சாஹுல்!
///ARUVAI BASKAR said...
ReplyDeleteஅய்யா , படித்தேன் ! ரசித்தேன் !!
அன்புடன் அருப்புக்கோட்டை பாஸ்கர்///
வருகைக்கு நன்றி அருப்புக்கோட்டையாரே!
////கோவி.கண்ணன் said...
ReplyDelete//அவன் அதற்குத் தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள் தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின் மேல் அதிக ஆசை வைக்காதேயென்று! அதை யாரும் கேட்டால்தானே? // ///ஆசையில் அதிகம் என்ன குறைவு என்ன ? பிறருக்கோ தனக்கோ யாதொரு துன்பமும் இல்லை என்றால் எல்லாம் ஒரே வகை ஆசைதான்.////
இல்லீங்கன்னா! ஆசையில் அதிகம் குறைவு உண்டுங்கன்னா!
இப்ப நீங்க வேலை பாக்கிற கம்பெனியில மானேஜரா வரணும்னு
ஆசைப்பட்ட அது குறைவான ஆசை கணக்கில வருமுங்க அண்ணா
அது ஒரு பக்கம் இருக்க, நீங்க சிங்கப்பூரு பிரதமரா வரனும்னு ஆசைப்பட்டா
அது அதிகமான ஆசையாயிப்போயிடுங்கண்ணா?
சரிதானே?
//SP.VR. SUBBIAH said..
ReplyDeleteநல்லது! அடுத்து குரு திசை சுக்கிர sub period l உங்கள் காதைப் பிடித்துத் திருகி சம்பளக் கவரை வாங்கிக் கொள்ள ஒரு 50 kilos சொர்க்கம் வரும் அதுவரை ஜாலியாக இருங்கள். //
அத நினைச்சாதான் வருத்தமா இருக்கு. சொர்கமா இல்ல நரகமானு தான் தெரியல....:-)))))
//நீங்க சிங்கப்பூரு பிரதமரா வரனும்னு ஆசைப்பட்டா
ReplyDeleteஅது அதிகமான ஆசையாயிப்போயிடுங்கண்ணா?
சரிதானே?//
நான் ஆசைப்படுவேனா இல்லையா என்பது வேண்டாம்.
லிங்கன் செருப்புதைக்கும் தொழிலாளியின் மகன்.
கென்னடியை மாணவ பருவத்தில் பார்த்த கிளிண்டன் தானும் ஒரு நாள் அமெரிக்க அதிபர் ஆவேன் என்று.
நீங்களே சொல்லுங்கள்,
உயர்பதவிகளை அடைந்தவர்கள் எல்லோரும் அப்துல்கலாம் போல் ஆசைப்படமால் முயற்சி செய்யாமல் அங்கே வந்தார்களா ?
தற்போது ஒரு நிலையில் இருப்பதை வைத்து எட்ட முடியாத இன்னொரு நிலையை ஒப்பிட்டு சொல்வது பேராசை என்று சொல்லவர்றீங்க. தகுந்த முயற்சி இருந்தால் நீங்கள் சொல்லும் உதாரணமே பொய்யாகிவிடும்.
லட்சியங்கள் பேராசையாக இருந்தாலும் கூட எல்லாவற்றையும் தகுதியினால் அடைந்துவிட முடியாது. தகுதியுடன் கூடிய திறமை இருந்தால் எதற்கும் பேராசைப்படலாம்.
:)
/////கோவை விமல்(விமல்) சைட்...
ReplyDeleteநல்லது! அடுத்து குரு திசை சுக்கிர சுப் பெரிஒட் ல் உங்கள் காதைப் பிடித்துத் திருகி சம்பளக் கவரை வாங்கிக் கொள்ள ஒரு 50 கிலொச் சொர்க்கம் வரும் அதுவரை ஜாலியாக இருங்கள். //
அத நினைச்சாதான் வருத்தமா இருக்கு. சொர்கமா இல்ல நரகமானு தான் தெரியல....:-)))))/////
அது உங்கள் கையில்தான் இருக்கிறது!
அதாவது வருகிற சொர்க்கத்தை கடைசிவரை சொர்க்கமாகவே நிலைநிறுத்திக்கொள்வது!
என்ன கொஞ்சம் அதிகமாக செலவு செய்ய வேண்டும்!:-)))))
கோவியார் சொல்லியது
ReplyDeleteமுதல் பின்னூட்டம்: ///ஒரே வகை ஆசைதான்.////
இரண்டாவது பின்னூட்டம்:///தகுதியுடன் கூடிய திறமை இருந்தால் எதற்கும் பேராசைப்படலாம்.///
அண்ணா, ஏனிந்த முரண்பாடு?:-))))))
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteகோவியார் சொல்லியது
முதல் பின்னூட்டம்: ///ஒரே வகை ஆசைதான்.////
இரண்டாவது பின்னூட்டம்:///தகுதியுடன் கூடிய திறமை இருந்தால் எதற்கும் பேராசைப்படலாம்.///
அண்ணா, ஏனிந்த முரண்பாடு?:-))))))
//
முரண்பாடு எதுவும் இல்லை,
ஆசை என்றால் எல்லாம் ஒரே வகை ஆசைதான். நீங்கள் பேராசை எது என்று சொல்லி இருப்பதற்கான மறுப்பு விளக்கம் சொன்னேன். அம்புட்டுதான்.
ஆசையை ஒழிக்க வேண்டும் என்று பொதுவாகத்தான் சொன்னார் புத்தர்.
ஐயா வணக்கம். வகுப்புக்கு வந்த இரண்டாவது மாணவன் அடியேன். வேலை காரணமாக தற்போதுதான் வருகைபதிவிடுகிறேன்.எம் கருத்தை பலரும் பதிந்திருக்கிறார்கள். தேன் சற்று அதிகம் கலந்திருக்கி்றீர்கள்.கதை மிகவும் நன்றாக உள்ளது. ///கல்வி, வைத்தியம், ஜோதிடம் மூன்றும் தர்மத்தொழில்./// தற்போது வைத்தியத்தை தொழிலாக பார்த்தாலும், சற்றும் தர்மம் பார்ப்பதெல்லாம் கிடையாது. ///பிரதி பலனை எதிர் பார்க்கமால் தங்கள் செய்யும் இந்த அறிவுப் பரவலாக்கும்
ReplyDeleteவேள்வி பணிக்கு, அடுத்த பிறவியில்
அமோகமான பெரும் புகழுடன் வாழும் சான்றோராய் இருப்பீர்கள் இது உறுதி.
உங்க சந்ததியினர் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து சிறப்பீர்கள்./// அடுத்த பிறவிக்கு முன் இப்போதே தாங்கள் சான்றோர் தான் ஐயா.
///கோவி.கண்ணன் said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
கோவியார் சொல்லியது
முதல் பின்னூட்டம்: ///ஒரே வகை ஆசைதான்.////
இரண்டாவது பின்னூட்டம்:///தகுதியுடன் கூடிய திறமை இருந்தால் எதற்கும் பேராசைப்படலாம்.///
அண்ணா, ஏனிந்த முரண்பாடு?:-)))))) //
முரண்பாடு எதுவும் இல்லை,
ஆசை என்றால் எல்லாம் ஒரே வகை ஆசைதான். நீங்கள் பேராசை எது என்று சொல்லி இருப்பதற்கான மறுப்பு விளக்கம் சொன்னேன். அம்புட்டுதான்.
ஆசையை ஒழிக்க வேண்டும் என்று பொதுவாகத்தான் சொன்னார் புத்தர்.////
அப்படிச் சொன்ன புத்தரை தாய்லாந்து இலங்கை சீனா போன்ற இன்னபிற நாடுகளில் தெய்வமாக வணங்குகிறார்கள்.நாம் யாரும் நினைவில் கொள்ளவில்லை!
அது ஏனுங்க அண்ணா?
ஆசையை ஒழிக்கச் சொன்னதால அவரை ஒழிச்சிட்டோமா?
////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா வணக்கம். வகுப்புக்கு வந்த இரண்டாவது மாணவன் அடியேன். வேலை காரணமாக தற்போதுதான் வருகைபதிவிடுகிறேன்.எம் கருத்தை பலரும் பதிந்திருக்கிறார்கள். தேன் சற்று அதிகம் கலந்திருக்கி்றீர்கள்.கதை மிகவும் நன்றாக உள்ளது. ///கல்வி, வைத்தியம், ஜோதிடம் மூன்றும் தர்மத்தொழில்./// தற்போது வைத்தியத்தை தொழிலாக பார்த்தாலும், சற்றும் தர்மம் பார்ப்பதெல்லாம் கிடையாது. ///பிரதி பலனை எதிர் பார்க்கமால் தங்கள் செய்யும் இந்த அறிவுப் பரவலாக்கும்
வேள்வி பணிக்கு, அடுத்த பிறவியில்
அமோகமான பெரும் புகழுடன் வாழும் சான்றோராய் இருப்பீர்கள் இது உறுதி.
உங்க சந்ததியினர் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து சிறப்பீர்கள்./// அடுத்த பிறவிக்கு முன் இப்போதே தாங்கள் சான்றோர் தான் ஐயா.///
அடுத்த பிறவி எல்லாம் வேண்டாம் சாமி!:))))))
எந்தப் பிறவியென்றாலும் பரல்கள் 337 தானே?
அது தெரிந்த பின்னும் பிறவி வேண்டுவேனா?:))))
ஐயா, மீண்டும் ஒரு தாயின் கருப்பை புகா வரம் வேண்டுகிறீர்.அதெல்லாம் நடக்காது ஐயா. உமது மாணாக்கர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசம் தங்களை மீண்டும் பிறப்பிக்க செய்ய வைக்காதோ.120 ஆண்டுகளுக்குப் பின்னும் எம் மீது பாசம் குறையுமோ?
ReplyDeleteஅடுத்த பிறவி எல்லாம் வேண்டாம் சாமி!:))))))
ReplyDeleteஎந்தப் பிறவியென்றாலும் பரல்கள் 337 தானே?
அது தெரிந்த பின்னும் பிறவி வேண்டுவேனா?:))))
மறு பிறவி பற்றி என்னுடைய கருத்து
முழு பிரபஞ்ச ஆன்மாக்களும் சேர்ந்த ஒரு பரமாத்மாவை ஒரு பெரிய கடலுக்கு ஒப்பிடுவோம். அதிலிருந்து ஒரு பாத்திரம் (உடல்) மூலம் சிறிது நீர் எடுப்போம் (பிறவி). பின் அந்த பிறவியின் கர்மத்தை பொருத்து அந்த நீரின் நிறம் (ஆன்மாவின் வாசனை) மாறுகிறது. இப்பொழுது அந்த நீரை மீண்டும் அந்த பரமாத்மாவான கடலில் கொட்டுவோம் (இறந்து படுவோம்). இப்பொழுது அந்த பாத்திரத்தின் நீர் அந்த பரமாத்மாவின் தன்மையுடன் ஒன்றி விடுகிறது. (ஆனால் அது ஒன்றும் முன்னால்) ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள சிவப்பு நிற திரவத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள தெளிந்த நீரின் மேல் கொட்டுவோம். அந்த கொட்டிய நீர் கலக்கும் முன்னால் வெகு வேகமாக அது வீழ்ந்த இடத்தில் இருக்கும் நீரை வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் (புது உடலில்) பிடித்தால் அந்த நீர் ஓரளவு பழைய சிவப்பு நிறத்தின் சாயல் இருக்கும். அது போல்தான் மறு பிறப்பு என்பது என் எண்ணம். இறந்த உடனடியாக மறு பிறப்பெடுத்தால் முன்பிறவி வாசனை இருக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிது காலம் கழித்து பிறந்தால் அது மற்றும் ஒரு புதிய பிறவி எனக் கொள்ளாமே தவிர அது மறுபிறப்பாகாது. மேலும் அந்தபிறவி பல்வேறு பிறவிகளின் ஒரு கலவையான பிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.(courtesy-supersubra )
////இறந்த உடனடியாக மறு பிறப்பெடுத்தால் முன்பிறவி வாசனை இருக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிது காலம் கழித்து பிறந்தால் அது மற்றும் ஒரு புதிய பிறவி எனக் கொள்ளாமே தவிர அது மறுபிறப்பாகாது. மேலும் அந்தபிறவி பல்வேறு பிறவிகளின் ஒரு கலவையான பிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.///
ReplyDeleteஇருக்கலாம் அனானி!
ஆனால் எப்போது பிறந்தாலும் முற்பிறவி பாவ புண்ணியங்கள் பற்றித் தொடரும்!
கோவில் சொத்துக்களைத் திருடித் தின்றவனை, காலன் (not God)அவன் எத்தனை வருடங்கள் கழித்துப் பிறந்தாலும், கோவில் வாசலில் தட்டோடு உட்காரவைத்து பழைய
கணக்கைத் தீர்க்காமல் விடாது!
////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா, மீண்டும் ஒரு தாயின் கருப்பை புகா வரம் வேண்டுகிறீர்.அதெல்லாம் நடக்காது ஐயா. உமது மாணாக்கர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசம் தங்களை மீண்டும் பிறப்பிக்க செய்ய வைக்காதோ.120 ஆண்டுகளுக்குப் பின்னும் எம் மீது பாசம் குறையுமோ?////
உங்கள் அன்பிற்கு நன்றி தியாகராஜன்!
அதென்ன 120 வருடக் கணக்கு?
மொத்த தசா காலமா? அதற்கும் அடுத்த பிறவிக்கும் என்ன சம்பந்தம் நண்பரே?
ஐயா
ReplyDeleteகதை super
பாதக ஸ்தானம் பற்றியும் , நமக்கு எந்த
பிரச்சினை இருக்கிறதோ அந்த வீட்டை
லக்கினமாக எடுக்க வேண்டும்
என்பதையும் தெரிந்துகொண்டேன் .
நன்றி .