22.6.08

மறுபிறவியைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மறுபிறவியைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது?

”மறுபிறவி என்பது இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். அதைத் தெரிந்து
கொண்டு என்ன ஆகப்போகிறது?”

“பைசா பிரயோஜனம் இல்லாத பதிவை எழுதிக்கொண்டிருக்கிறாய்? மாய்ந்து மாய்ந்து
பல பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறாயே - அவற்றால் என்ன பயன்? அந்த
நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாமே? நான்கு காசு அதிகமாகச் சம்பாதிப்
பதில் உன்னுடைய முனைப்பைக் காட்டலாமே?”

“உடல் முழுவதும் விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு மண்ணில் உருண்டாலும்
உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும்' என்று நீதானே சொன்னாய். அதனால் வருகிற
பணம் வரட்டும் என்று இப்போதெல்லாம் பணத்திற்காக அலைவதை நிறுத்திவிட்டேன்”

“வேறு எதை நிறுத்தினாய்?

“பலவற்றை நிறுத்தி விட்டேன். அவற்றையெல்லாம் பதிவில் சொல்ல முடியாது!”

“எப்போது நிறுத்தினாய்?”

“நாற்பது வயதில் நிறுத்தினேன். நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது!”

“அதென்ன கணக்கு நாற்பது வயது?”

“கண்ணதாசன் சொன்னார் - அனுபவம் என்பது சீப்பு; அது தலை வழுக்கையான
பிறகுதான் கிடைக்கும் என்று - எனக்கு நாற்பது வயதில்தான் சீப்புக் கிடைத்தது.
அதற்குள் பாதித்தலை வழுக்கையாகிவிட்டது. மீதித் தலையையாவது வருந்திக்
காப்போம் என்று நிறுத்திவிட்டேன்”

“ஓஹோ.. அனுபவம் பெற்று விட்டாயா? சரி, இப்போது சொல் - உலகில் எது நிலையானது?”

“நிலையானது எதுவும் இல்லை! நிலையாமைதான் நிலையானது - uncertainty is certain!"

“அதே கண்ணதாசன் உடமைகளைப் பற்றிச் சொன்னது தெரியுமா?”

“தெரியாது! சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்”

”ஒரு மனிதன் தன்னுடைய சொத்துக்களைப் பற்றிப் பெருமையாகச் சொன்னபோது,
கண்ணதாசன் சொன்னார் - உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை; நீயென்ன
உடமைகளைப் பற்றிப் பேசுகிறாய்? உன் ஆத்மா வாடகை வீட்டில் குடியிருக்கிறது.
அந்த வீட்டை ஒரு நாள் அது காலி செய்துவிட்டுப் போகவேண்டும் - தெரியுமா?”

“ஆமாம் படித்திருக்கிறேன்”

“அந்த ஆத்மா எங்கே இருந்து வந்தது? எங்கே போகிறது? என்பதுதான் இந்த மறுபிறவி
வியாக்கியானங்கள். அதையும் படி!”

"படித்தால் நம்பிக்கை வருமா?”

”நீ நம்புவதால் யாருக்கும் லாபம் இல்லை!; நம்பாவிட்டாலும் யாருக்கும் நஷ்டமும் இல்லை!
உன் பாடு உனக்கு; எழுதியவன் பாடு எழுதியவனுக்கு!”
------------------------------------------------------------------
மறுபிறவி என்பது ஒரு நம்பிக்கை! ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய உடல் அழிந்து
விடுகிறது. ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை! அந்த ஆன்மா முன் கர்மவினைகளுக்கேற்ப
வேறு ஒரு உடம்பில் ஐக்கியமாகி ஒரு புதுப்பிறவி எடுக்கிறது. அந்தப் புதுப்பிறவி மீண்டும்
மனித ஜென்மமாகத்தான் இருக்கும் என்பதில்லை.

டாபர்மேன் நாய் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறக்கலாம். மனிதன் அடுத்த பிறவியில்
கழுகாக அல்லது காட்டெருமையாகக் கூடப் பிறக்கலாம்.

இந்த நம்பிக்கையில்தான் மலைவாழ் பழங்குடி மக்கள் சில மிருகங்களை உணவாக்கிக்
கொள்வதில்லை. அது தங்களுடைய முன்னோர்களாக இருக்கலாம் என்பது அவர்களுடைய
நம்பிக்கை!

(Reincarnation is the belief that when one dies, one's body decomposes, but
something of oneself is reborn in another body. It is the belief that one has lived
before and will live again in another body after death. The bodies one passes in and
out of need not be human. One may have been a Doberman in a past life, and one
may be a mite or a carrot in a future life. Some tribes avoid eating
certain animals because they believe that the souls of their ancestors
dwell in those animals.)

மேலும் படிக்க: சுட்டியை அழுத்தவும்!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

44 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. என்ன மிஸ்டர் பாலா!

    புயலைக் கிளப்பும் நோக்குடன் பின்னூட்டம் போட்டு விட்டீர்கள்?

    எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.

    அதனால்தன் உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்! மன்னிக்கவும்!

    ReplyDelete
  3. //“நிலையானது எதுவும் இல்லை! நிலையாமைதான் நிலையானது - uncertainty is certain!"//

    நூற்றுக்கு நூறு உண்மை..

    //”நீ நம்புவதால் யாருக்கும் லாபம் இல்லை!; நம்பாவிட்டாலும் யாருக்கும் நஷ்டமும் இல்லை!
    உன் பாடு உனக்கு; எழுதியவன் பாடு எழுதியவனுக்கு!”//

    :-))

    Rgds.
    GK. BLR

    ReplyDelete
  4. வாத்தியார் அய்யா,

    பதில் தப்பா இருந்தா ஃபெயில் மார்க் போடுங்கய்யா.அதுக்காக எக்ஸாம் பேப்பரையே கிழிச்சுப் போட்டா எப்படீங்க?

    பாலா

    ReplyDelete
  5. ////Geekay said...
    //“நிலையானது எதுவும் இல்லை! நிலையாமைதான் நிலையானது - uncertainty is certain!"//
    நூற்றுக்கு நூறு உண்மை..
    //”நீ நம்புவதால் யாருக்கும் லாபம் இல்லை!; நம்பாவிட்டாலும் யாருக்கும் நஷ்டமும் இல்லை!
    உன் பாடு உனக்கு; எழுதியவன் பாடு எழுதியவனுக்கு!”// :-))
    Rgds.
    GK. BLR.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. அப்போதைக்கு இப்போதே சொல்லிவெய்தேன் - என்று சொன்னவர் அடிபணிவோம்.

    ReplyDelete
  7. /////bala said...
    வாத்தியார் அய்யா,
    பதில் தப்பா இருந்தா ஃபெயில் மார்க் போடுங்கய்யா.அதுக்காக எக்ஸாம் பேப்பரையே கிழிச்சுப் போட்டா எப்படீங்க?
    பாலா///////

    இது பாலர் பள்ளி!
    நீங்கள் முது நிலைப் பட்டதாரி!
    இங்கே வந்து பரீட்சை எழுதுவேன் என்று அடம் பிடித்தால் எப்படி?

    ReplyDelete
  8. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவெய்தேன் - என்று சொன்னவர் அடிபணிவோம்./////

    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தவரா?
    யாரைச் சொல்கிறீர்கள் கிருஷ்ணன்?

    ReplyDelete
  9. //இது பாலர் பள்ளி!
    நீங்கள் முது நிலைப் பட்டதாரி!
    இங்கே வந்து பரீட்சை எழுதுவேன் என்று அடம் பிடித்தால் எப்படி?//

    வாத்தியார் அய்யா,
    தங்கள் முன் நான் என்றென்றும் கை கட்டி,பாடம் கற்கும் பாலன்,மாணவன் என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்,நீங்கள் என் பேப்பரை கிழித்துப் போட்டால் கூட.

    பாலா

    ReplyDelete
  10. பதிவு அருமை, முன் பிறவி விளக்கம் அருமை வாத்தியரே, படித்து விட்டேன்.

    பாடதிற்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  11. வாத்தியரே உங்கள் கேள்வி பதில் தொகுப்பு அருமை.

    எனக்கு பெரியவர் திரு.கலைங்கர்(முறசொலி கடிதம்) நினைப்புத்தன் வந்தது முதலில்...

    ReplyDelete
  12. //“நாற்பது வயதில் நிறுத்தினேன். நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது!”
    //

    உங்களுக்கு 42 தான் ஆகுதா ?

    அதுக்குள்ளே 'எல்லாத்தையும்' விட்டுவிட்டேன் என்று சொல்லியதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கு ?

    நாகேஷ் ஒரு படத்தில பாடுவாரு...'காசிக்கு போறேன் சன்யாஷி....'

    :)

    ReplyDelete
  13. அடுத்த பிறவி என்னவென்று ஜாதகத்தில் கண்டுபிடிக்க இயலுமா என்று எழுதுவீர்கள் என நினைத்தேன்.. முடியுமா?

    அதே போல் முற்பிறவி பற்றியும் அறிய இயலுமா?

    முக்தி அடைவது எப்போது என?

    ReplyDelete
  14. //இது பாலர் பள்ளி!
    நீங்கள் முது நிலைப் பட்டதாரி!
    இங்கே வந்து பரீட்சை எழுதுவேன் என்று அடம் பிடித்தால் எப்படி?//
    வாத்தியார் அய்யா,
    தங்கள் முன் நான் என்றென்றும் கை கட்டி,பாடம் கற்கும் பாலன்,மாணவன் என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன்,நீங்கள் என் பேப்பரை கிழித்துப் போட்டால் கூட.
    பாலா ///

    பேப்பரைக் கிழித்துப்போடவில்லை! (Copy is in my mail box)!
    வாத்தியார்தான் கை கட்டிக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய காலம்!
    அது தெரியாதா உங்களுக்கு?

    ReplyDelete
  15. /////கோவை விமல்(vimal) said...
    பதிவு அருமை, முன் பிறவி விளக்கம் அருமை வாத்தியரே, படித்து விட்டேன்.
    பாடதிற்காக காத்திருக்கிறேன்.../////

    பாடம் தொடர்ந்து வரும்!

    ReplyDelete
  16. ///கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே உங்கள் கேள்வி பதில் தொகுப்பு அருமை.
    எனக்கு பெரியவர் திரு.கலைங்கர்(முறசொலி கடிதம்) நினைப்புத்தன் வந்தது முதலில்...////

    முதலில்தானே வந்தது.தப்பித்தேன்!:-))))

    ReplyDelete
  17. ////கோவி.கண்ணன் said...
    //“நாற்பது வயதில் நிறுத்தினேன். நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது!”
    // உங்களுக்கு 42 தான் ஆகுதா ?
    அதுக்குள்ளே 'எல்லாத்தையும்' விட்டுவிட்டேன் என்று சொல்லியதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கு ?
    நாகேஷ் ஒரு படத்தில பாடுவாரு...'காசிக்கு போறேன் சன்யாஷி....' :)////

    உரையாடலில் வரும் இரு நபர்களுமே வேறு நபர்கள்!
    (it is a different way of writing and expressing views/thoughts in an article)

    எனக்குப் பிடித்த பாடல் சந்திரபாபு அவர்கள் பாடிய "சிரிப்பு வருது....சிரிப்பு வருது... சின்ன மனிதன் பெரிய மனிதன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது"
    படத்தின் பெயர் தெரியுமா?

    ReplyDelete
  18. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவெய்தேன் - என்று சொன்னவர் அடிபணிவோம்./////

    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தவரா?
    யாரைச் சொல்கிறீர்கள் கிருஷ்ணன்///

    பிறப்பறுக்கும் வாசகத்தின் முதல்வரி அது. இறைவனைவிடவும் அடியவர் திருவடி பெரியது என்று பெரியவர்கள் சொல்லியுள்ளனர். நாளைய/இன்றைய மக்கள் நலம் விரும்பும், நற்பண்புகளை பரப்பும் அனைவரின் திருப்பாதம் பணிகிறேன். மேலும் விளக்க என்னிடம் தற்போழுது சரக்கில்லை.

    ReplyDelete
  19. /////கூடுதுறை said...
    அடுத்த பிறவி என்னவென்று ஜாதகத்தில் கண்டுபிடிக்க இயலுமா என்று எழுதுவீர்கள் என நினைத்தேன்.. முடியுமா?
    அதே போல் முற்பிறவி பற்றியும் அறிய இயலுமா?
    முக்தி அடைவது எப்போது என?////

    அதைக் கண்டுபிடிக்கும் ஞானத்தை இறைவன் எந்த ஜோதிடனுக்கும் கொடுக்கவில்லை! அதுதான் உண்மை!
    மரணத்தைக் கணித்துச் சொல்வதற்கு வழி உள்ளது. Formulaக்கள் உள்ளன!

    ReplyDelete
  20. ////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவெய்தேன் - என்று சொன்னவர் அடிபணிவோம்./////
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தவரா?
    யாரைச் சொல்கிறீர்கள் கிருஷ்ணன்///
    பிறப்பறுக்கும் வாசகத்தின் முதல்வரி அது. இறைவனைவிடவும் அடியவர் திருவடி பெரியது என்று பெரியவர்கள் சொல்லியுள்ளனர். நாளைய/இன்றைய மக்கள் நலம் விரும்பும், நற்பண்புகளை பரப்பும் அனைவரின் திருப்பாதம் பணிகிறேன். மேலும் விளக்க என்னிடம் தற்போழுது சரக்கில்லை.///

    பதிலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. //மரணத்தைக் கணித்துச் சொல்வதற்கு வழி உள்ளது. Formulaக்கள் உள்ளன!//

    மேல் குறிப்பிட்ட formula பற்றிய பாடங்கள் வந்துள்ளதா? இருந்தால் லிங்க் கொடுங்களேன்...

    ReplyDelete
  22. படித்துவிட்டேன்...

    ReplyDelete
  23. ஐயா,
    தங்கள் வகுப்பு அறையின் பதிவேட்டில் உள்ள மாணவனாகிய நான்(தமாம் பாலா) இன்று (controversial)பின்னூட்டம் எதுவும் போடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :-)

    உங்களைப் போலவே தென்றலை விரும்பும் நான் புயலை ஏன் கிளப்ப போகிறேன்? (யார் அந்த பாலா?)

    ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் கண்ணுறக்கம் மறந்ததம்மா-திரைப்பாடல்

    அப்போ மொத்தம் 7 பிறவி தானா மாஸ்டர்?

    ReplyDelete
  24. ////கூடுதுறை said...
    //மரணத்தைக் கணித்துச் சொல்வதற்கு வழி உள்ளது. Formulaக்கள் உள்ளன!//
    மேல் குறிப்பிட்ட formula பற்றிய பாடங்கள் வந்துள்ளதா? இருந்தால் லிங்க் கொடுங்களேன்...////

    இதற்கேது லிங்க்? கட்டுரையாக எழுத வேண்டும். பின்னால் எழுத உள்ளேன். அநேகமாக ஜோதிடப் பாடத்தின் கடைசி அத்தியாயமாக அது இருக்கும்!:-)))

    வயதானவர்களுக்கு வேண்டுமென்றால் அது உதவியாக இருக்கும். உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொண்டால் குழப்பம்தான் வரும் (மிஞ்சும்)!

    ReplyDelete
  25. உள்ளேன் ஐயா,
    வகுப்பறையில் பேப்பர் கிழிப்பு, ஆள்மாறாட்டம்! நான் வீட்டுக்குப்போறன்.
    ( அந்த KSD நமது பாடப்புத்தகத்தில் எத்தனையாவது பாடம்)

    ReplyDelete
  26. ////தமாம் பாலா said...
    ஐயா,
    தங்கள் வகுப்பு அறையின் பதிவேட்டில் உள்ள மாணவனாகிய நான்(தமாம் பாலா) இன்று (controversial)பின்னூட்டம் எதுவும் போடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் :-)
    உங்களைப் போலவே தென்றலை விரும்பும் நான் புயலை ஏன் கிளப்ப போகிறேன்? (யார் அந்த பாலா?)////

    இல்லை அந்த நண்பர் வேறு ஒருவர்.அவர் பெயரும் பாலாதான்!

    ////ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் கண்ணுறக்கம் மறந்ததம்மா-திரைப்பாடல்
    அப்போ மொத்தம் 7 பிறவி தானா மாஸ்டர்?////

    பாடல்களும் சொல்லடைகளும் அதைத்தான் சொல்கின்றன! ஜோதிடம் அதைக் (எண்ணிக்கையை) குறிப்பிடவில்லை!

    ReplyDelete
  27. ////Blogger VIKNESHWARAN said...
    படித்துவிட்டேன்...///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. //SP.VR. SUBBIAH said...
    மரணத்தைக் கணித்துச் சொல்வதற்கு வழி உள்ளது. Formulaக்கள் உள்ளன!//

    அப்போ LIFE INSURANCE கம்பெனிகாரர்களுக்கு திண்டாதம்தான்...:-))

    //தூக்கணாங்குருவி said...
    வகுப்பறையில் பேப்பர் கிழிப்பு, ஆள்மாறாட்டம்! நான் வீட்டுக்குப்போறன்...//

    நண்பரே இதுக்கெல்லாம் கோவிதது கொண்டால் எப்படி,
    எத்தனை முறை உங்களுக்காக நான் வருகை பதிவேட்டில் PROXY குடுத்ிருக்கிறேன்

    ReplyDelete
  29. //certain animals because they believe that the souls of their ancestors
    dwell in those animals.)//

    அட இதான் விஷயமா?இதுக்காகத் தான் சில பேர் பன்னி சாப்பிட மாட்டாங்களாம்மா?

    சப்பமூக்கு சீனாக்காரங்க எல்லா எழவையும் சாப்பிடறாங்களே,அவிங்களுக்கு சோல் கிடையாதா?

    ReplyDelete
  30. Dear Sir

    I did voted in previous blog,but forgot to mention...

    OK, All comments and answers are good though but with lot of seriousness....

    Is this one for purvapuniyam? or this is different!

    All in all, your efforts in writing your thoughts with lessons is appreciated from my end as always.

    -Shankar

    ReplyDelete
  31. எனக்கு நம்பிக்கை இருக்கு வாத்தியார் ஐயா.
    அதனால்தான் எங்க கோகிகிட்டே அடுத்த ஜென்மத்தில் அவனையே கல்யாணம் கட்டுறதாச் சொல்லி இருக்கேன்.

    ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.

    நான் 'அவனா' இருப்பேன். அவன் 'அவளா' இருந்து இப்போ நான் செய்யும் சேவைகளையெல்லாம் திருப்பிச் செய்யணும்.

    மியாவ்.......

    ReplyDelete
  32. /////கோவை விமல்(vimal) said...
    //தூக்கணாங்குருவி said...
    வகுப்பறையில் பேப்பர் கிழிப்பு, ஆள்மாறாட்டம்! நான் வீட்டுக்குப்போறன்...//
    நண்பரே இதுக்கெல்லாம் கோவிதது கொண்டால் எப்படி,
    எத்தனை முறை உங்களுக்காக நான் வருகை பதிவேட்டில் PROXY குடுத்ிருக்கிறேன்////

    இதையெல்லாமா சொல்லிக் கொண்டிருப்பார்கள்? நான் வகுப்பறையில் கண்டு கொள்ளாமல்
    இருக்கிறேன் என்ற அவப் பெயர் வந்துவிடாதா?

    ReplyDelete
  33. ////Anonymous said...
    //certain animals because they believe that the souls of their ancestors
    dwell in those animals.)//
    அட இதான் விஷயமா?இதுக்காகத் தான் சில பேர் பன்னி சாப்பிட மாட்டாங்களாம்மா?
    சப்பமூக்கு சீனாக்காரங்க எல்லா எழவையும் சாப்பிடறாங்களே,அவிங்களுக்கு சோல் கிடையாதா?//////

    ஏன் ஆப்பிரிக்காவில் கூடத்தான் எல்லாவற்றையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  34. ////Anonymous said...
    Dear Sir
    I did voted in previous blog,but forgot to mention...
    OK, All comments and answers are good though but with lot of seriousness....
    Is this one for purvapuniyam? or this is different!
    All in all, your efforts in writing your thoughts with lessons is appreciated from my end as always.
    -Shankar///

    What is in iT? No problem my dear friend!
    Yes it is related to Purvapunniyam!

    ReplyDelete
  35. ////துளசி கோபால் said...
    எனக்கு நம்பிக்கை இருக்கு வாத்தியார் ஐயா.
    அதனால்தான் எங்க கோகிகிட்டே அடுத்த ஜென்மத்தில் அவனையே கல்யாணம் கட்டுறதாச் சொல்லி இருக்கேன்.
    ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.
    நான் 'அவனா' இருப்பேன். அவன் 'அவளா' இருந்து இப்போ நான் செய்யும் சேவைகளையெல்லாம் திருப்பிச் செய்யணும்.////

    நிறைய தாய்க்குலங்கள் அந்த வேண்டுதலுடன்தான் இருக்கிறார்கள்!

    ////மியாவ்.......///

    இது சூப்பர். உங்கள் சிக்னேச்சர் டியூன் ஆயிற்றே!
    உங்கள் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்தினாலும் இந்த ‘மியாவ்' சத்தம்தான் கேட்குமா?

    ReplyDelete
  36. //அதைக் கண்டுபிடிக்கும் ஞானத்தை இறைவன் எந்த ஜோதிடனுக்கும் கொடுக்கவில்லை! அதுதான் உண்மை!
    மரணத்தைக் கணித்துச் சொல்வதற்கு வழி உள்ளது. Formulaக்கள் உள்ளன!//

    முற்பிறவியை பற்றி நாடி ஜோசியங்கள் (கர்மசாந்தி காண்டாம்) சொல்வதை பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிஞ்சி மூணு பேர் கேசட் கேட்டிருக்கிறேன். அவர்கள் மூன்று பேர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கு இந்த பிறவியில் அனுபவிப்பதும் சரியாகவே இருந்தது. நாடி ஜோசியத்தில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் என்பதால் நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.

    அப்பா, அம்மாவை கவனிக்காதவர்களுக்கு அதன் படி தண்டனை அதிகம்.

    அது ஏன் முற்பிறவிக்கும் இந்த பிறவிக்கும் லிங்னு எனக்கு புரியல :-(

    அதுல முக்தி பற்றியும் வருதுனு நினைக்கிறேன்.

    இது எல்லாம் நம்பறவங்களுக்கு தான்.

    ReplyDelete
  37. வெட்டிப்பயலுக்கு:

    இங்கே வலையில் ஒரு டெத் க்ளாக் வந்துக்கிட்டு இருந்துச்சே.... அதன்படி நான் செத்து பலவருசங்களாச்சு:-)))))

    நாடி ஜோசியம் எங்க மாமா பார்த்துக்கிட்டாராம். சொல்லி இருக்கார். ஆனால் அதிலும் இறுதி பற்றிச் சொல்லலை.

    ReplyDelete
  38. /////வெட்டிப்பயல் said...
    //அதைக் கண்டுபிடிக்கும் ஞானத்தை இறைவன் எந்த ஜோதிடனுக்கும் கொடுக்கவில்லை! அதுதான் உண்மை!
    மரணத்தைக் கணித்துச் சொல்வதற்கு வழி உள்ளது. Formulaக்கள் உள்ளன!//
    முற்பிறவியை பற்றி நாடி ஜோசியங்கள் (கர்மசாந்தி காண்டாம்) சொல்வதை பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிஞ்சி மூணு பேர் கேசட் கேட்டிருக்கிறேன். அவர்கள் மூன்று பேர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கு இந்த பிறவியில் அனுபவிப்பதும் சரியாகவே இருந்தது. நாடி ஜோசியத்தில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம் என்பதால் நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.
    அப்பா, அம்மாவை கவனிக்காதவர்களுக்கு அதன் படி தண்டனை அதிகம்.
    அது ஏன் முற்பிறவிக்கும் இந்த பிறவிக்கும் லிங்னு எனக்கு புரியல :-(
    அதுல முக்தி பற்றியும் வருதுனு நினைக்கிறேன்.
    இது எல்லாம் நம்பறவங்களுக்கு தான்.////

    நாடி ஜோதிடத்தில் இறந்த காலத்தை ஓரளவிற்குச் சொல்லி விடுவார்கள். அதுவும் சில
    செய்திகளை நம்மிடம் கேட்டுக்கொண்டு அதற்குரிய ஓலையை எடுத்துச் சொல்வார்கள்
    ஆனால் எதிர்காலப் பலன்களில் சொதப்பி விடுவார்கள்!

    ஆனால் இன்று குடும்பச் சண்டைகளில் பல நாடி ஜோதிடர்களின் பிள்ளைகள் அசையாத சொத்துக்களுடன் இந்த ஏடுகளையும் பங்கு வைத்துக் கொண்டு விட்டார்கள். ஆகவே
    முழுமையான நாடித் தொகுப்பு என்பது இருப்பதற்கு வாய்ப்பில்லை!

    ReplyDelete
  39. /////துளசி கோபால் said...
    வெட்டிப்பயலுக்கு:
    இங்கே வலையில் ஒரு டெத் க்ளாக் வந்துக்கிட்டு இருந்துச்சே.... அதன்படி நான் செத்து பலவருசங்களாச்சு:-)))))
    நாடி ஜோசியம் எங்க மாமா பார்த்துக்கிட்டாராம். சொல்லி இருக்கார். ஆனால் அதிலும் இறுதி பற்றிச் சொல்லலை.////

    இப்பவும் அந்தக் கடிகாரம் தளத்தில் இருக்கிறது டீச்சர்!
    சுட்டி: http://www.deathclock.com/
    அது ஒரு தமாஷ்! அவ்வளவுதான்!
    மறுபடியும் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்:-)))))))

    ReplyDelete
  40. //நாடி ஜோதிடத்தில் இறந்த காலத்தை ஓரளவிற்குச் சொல்லி விடுவார்கள். அதுவும் சில
    செய்திகளை நம்மிடம் கேட்டுக்கொண்டு அதற்குரிய ஓலையை எடுத்துச் சொல்வார்கள்
    ஆனால் எதிர்காலப் பலன்களில் சொதப்பி விடுவார்கள்!//

    எதிர்கால பலனும் நான் கேட்ட வரையில் ஓரளவு சரியாகவே இருந்தது.

    நான் கேட்ட வரையில் சரியாக இருந்தது என்பதற்காக நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. காரணம் நீங்க மேல சொன்னதுதான். யார்கிட்டயும் முழுமையா இருக்காது. ஏமாற்றுபவர்கள் அதிகம்.

    டீச்சர் :
    இதுல மரணம் பற்றி தெளிவாகவே வருகிறதே. அம்மா, அப்பா இருந்தா அவுங்களோடது கூட வரும். அது எந்த அளவுக்கு உண்மையா நடக்கும்னு தெரியாது. ஆனா அதை பற்றி பொது காண்டத்திலே வருது.

    ReplyDelete
  41. // SP.VR. SUBBIAH said...
    இதையெல்லாமா சொல்லிக் கொண்டிருப்பார்கள்? நான் வகுப்பறையில் கண்டு கொள்ளாமல்
    இருக்கிறேன் என்ற அவப் பெயர் வந்துவிடாதா?//

    நான்தான் இருக்கானே, தமாஷ் Student-யாய், என்னை தான் எல்லோரும் ITHARKU உபயோகபடுத்தி கொள்கிறார்கள், சிறியவனா இருப்பதால். அவர்களின் குறை போக்க. நான்தான் உங்களிடம் மாட்டி கொள்கிறேன்...:-((

    வாத்தியரே, மாணவர்கள் சிறிது லேட்டாக வரும் பொழுது நடந்து விட்டது, அருமை வாத்தியாரின் பாடத்தை MISS பண்ண முடியாமல் அங்கணம் ஆகிவிட்டது. இது எல்லாம் உங்கள் வகுப்பின் மேல் உள்ள அன்பிற்க்ாக.

    அது சரி எப்போது வாத்தியரே மறு ஜென்ம ஜாதக கணிப்பு குறித்து நமது பாடம்... ?

    ReplyDelete
  42. /////வெட்டிப்பயல் said...
    //நாடி ஜோதிடத்தில் இறந்த காலத்தை ஓரளவிற்குச் சொல்லி விடுவார்கள். அதுவும் சில
    செய்திகளை நம்மிடம் கேட்டுக்கொண்டு அதற்குரிய ஓலையை எடுத்துச் சொல்வார்கள்
    ஆனால் எதிர்காலப் பலன்களில் சொதப்பி விடுவார்கள்!//
    எதிர்கால பலனும் நான் கேட்ட வரையில் ஓரளவு சரியாகவே இருந்தது.
    நான் கேட்ட வரையில் சரியாக இருந்தது என்பதற்காக நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. காரணம் நீங்க மேல சொன்னதுதான். யார்கிட்டயும் முழுமையா இருக்காது. ஏமாற்றுபவர்கள் அதிகம்.
    டீச்சர் :
    இதுல மரணம் பற்றி தெளிவாகவே வருகிறதே. அம்மா, அப்பா இருந்தா அவுங்களோடது கூட வரும். அது எந்த அளவுக்கு உண்மையா நடக்கும்னு தெரியாது. ஆனா அதை பற்றி பொது காண்டத்திலே வருது./////

    உங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி பாலாஜி!

    ReplyDelete
  43. /////கோவை விமல்(vimal) said...
    // SP.VR. SUBBIAH said...
    இதையெல்லாமா சொல்லிக் கொண்டிருப்பார்கள்? நான் வகுப்பறையில் கண்டு கொள்ளாமல்
    இருக்கிறேன் என்ற அவப் பெயர் வந்துவிடாதா?//
    நான்தான் இருக்கானே, தமாஷ் Student-யாய், என்னை தான் எல்லோரும் ITHARKU உபயோகபடுத்தி கொள்கிறார்கள், சிறியவனா இருப்பதால். அவர்களின் குறை போக்க. நான்தான் உங்களிடம் மாட்டி கொள்கிறேன்...:-((
    வாத்தியரே, மாணவர்கள் சிறிது லேட்டாக வரும் பொழுது நடந்து விட்டது, அருமை வாத்தியாரின் பாடத்தை MISS பண்ண முடியாமல் அங்கணம் ஆகிவிட்டது. இது எல்லாம் உங்கள் வகுப்பின் மேல் உள்ள அன்பிற்க்ாக.
    அது சரி எப்போது வாத்தியரே மறு ஜென்ம ஜாதக கணிப்பு குறித்து நமது பாடம்... ?/////

    இப்போது மூன்று நாட்களாக தொடர்ந்து போடும் பதிவுகளும் பாடம்தான்!
    அடுத்த பாடம் நாளை மாலை! (24.6.2008)

    ReplyDelete
  44. //SP.VR. SUBBIAH said...
    இப்போது மூன்று நாட்களாக தொடர்ந்து போடும் பதிவுகளும் பாடம்தான்!
    அடுத்த பாடம் நாளை மாலை! (24.6.2008)//

    பாடதிற்காக காத்திருக்கிறேன். உங்கள் அருமை குட்டி தமாஷ் மாணவானய்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com