21.5.08

ஜோ.தொ: அட்டவனை வாரம்! அடுத்த அட்டவனை!

ஜோ.தொ: அட்டவனை வாரம்! அடுத்த அட்டவனை!

இதற்கு முன் பதிவில் ஒரு அட்டவனை கொடுத்திருக்கிறேன். பார்த்தீர்களா?
சுட்டி இங்கே!

கணிதத்தையும், வான சாஸ்திரத்தையும், ஜோதிடத்தையும் நாம்தான் உலகிற்குக் கொடையாக அளித்தோம்.

எந்தக் கொம்பனாலும் இதை மறுக்க முடியாது!

1,500 வருடங்களுக்கு முன்பே நாலந்தா பல்கலைக்கழகத்தில் பத்து லட்சம் ஓலைச்
சுவடிகளுக்கு மேல் இருந்ததாகவும், பல படையெடுப்புக்களால் அவைகளில் பாதிக்கு மேல்
தீக்கு இறையானதாகவும் சரித்திரம் சொல்கிறது. வரலாறு குறித்து வைத்துள்ளது.

அதற்கான சுட்டி இங்கே!

****************************************************************************
கொலம்பஸ் கண்டுபிடிக்காவிட்டால் அமெரிக்காவெல்லாம் இன்று இல்லை!

இந்தியா, சீனம், கிரேக்கம் ஆகியவைதான் உலகின் ஆதி நாடுகள்!

மற்ற நாடுகள் எல்லாம் இந்த மூன்று நாடுகளின் பாரம்பரியத்திற்கு நிகரானவை அல்ல!

அதை மனதில் வையுங்கள்!
---------------------------------------------------------------------
சூரியனை வைத்து ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். சந்திரனை வைத்துத் திங்கட்கிழமை
என்கிறோம் இப்படி சனி வரை வார நாட்களுக்குப் பேர் சூட்டிப் பொட்டு வைத்தது நாம்தான்.

இதைத்தான் ஒன்றும் செய்ய முடியாமல் ஆங்கிலேயர்கள், SUNday (Sunday) MOONday
(Monday) Saturnday என்று ஒப்புக்கொண்டு அழைக்கிறார்கள். இல்லையென்றால்
ராபர்ட் டே, ஜார்ஜ் டே, சோபியா டே ஒபாமா டே என்று இஷ்டப்படி வைத்திருப்பார்கள்!

அதைப் பற்றி நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன்
-------------------------------------------------------------------------------------------

என்னென்ன கிழமைகள் எதெதற்கு உகந்தது?

அட்டவனை ஒன்று கிடைத்தது. தந்திருக்கிறேன்.



*********************************************************************************
பயனானதுதானா?

நீங்கள்தான் சொல்லவேண்டும்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------------------------
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
-------------------------------------------------------------------------

15 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //ஸ்கோர் எவ்வளவு சுவாமி?//
    வாத்தியரே,
    என்னுடாயா ஸ்கோர் பார்க்க, பெண்ணின் நட்சத்திரம் அறிய வேணும் அல்லவா. இன்னும் தங்கள் மாணவனுக்கு அப்பாகியம் அமையவில்லை வாத்தியரேய்!!

    //பயனானதுதானா?//
    மிகவும் பயனுள்ளது , அட்டவணை வாரம் ...கலக்குரீங்க வாத்தியரே

    விமல்

    ReplyDelete
  3. //////vimal said...
    //ஸ்கோர் எவ்வளவு சுவாமி?//
    வாத்தியரே,
    என்னுடாயா ஸ்கோர் பார்க்க, பெண்ணின் நட்சத்திரம் அறிய வேணும் அல்லவா. இன்னும் தங்கள் மாணவனுக்கு அப்பாகியம் அமையவில்லை வாத்தியரேய்!!

    //பயனானதுதானா?//
    மிகவும் பயனுள்ளது , அட்டவணை வாரம் ...கலக்குரீங்க வாத்தியரே

    விமல்////

    நீங்களும்தான் கலக்குறீங்க!
    பின்னூட்டம் போட வேண்டியது. உடனே அதை நீக்க வேண்டியது:-)))
    என்ன சுவாமி அவசரம்?

    ReplyDelete
  4. //நீங்களும்தான் கலக்குறீங்க!
    பின்னூட்டம் போட வேண்டியது. உடனே அதை நீக்க வேண்டியது:-)))
    என்ன சுவாமி அவசரம்?//

    எல்லாம் முதல் ஸீட் முதல் வருகை பதிவெட்டுக்காகத்தான், #!!#$#!!

    சிரிய தவறு நடந்து விட்டது அதுதான் நீக்கி விட்டேன் முதல் பின்னுடத்தை.
    தடங்களுக்கு மணிக்கவும்.

    விமல்

    ReplyDelete
  5. //சிரிய தவறு நடந்து விட்டது அதுதான் நீக்கி விட்டேன் முதல் பின்னுடத்தை.
    தடங்களுக்கு மணிக்கவும். //

    அதானே!
    ஆசிரியரே, உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  6. wow...too many blogs within couple of days with charts..Is it "Chart week"

    -Shankar

    ReplyDelete
  7. //////vimal said...
    //நீங்களும்தான் கலக்குறீங்க!
    பின்னூட்டம் போட வேண்டியது. உடனே அதை நீக்க வேண்டியது:-)))
    என்ன சுவாமி அவசரம்?//
    எல்லாம் முதல் ஸீட் முதல் வருகை பதிவெட்டுக்காகத்தான், #!!#$#!!
    சிரிய தவறு நடந்து விட்டது அதுதான் நீக்கி விட்டேன் முதல் பின்னுடத்தை.
    தடங்களுக்கு மணிக்கவும்.
    விமல்/////

    அதனாலென்ன? மன்னிப்பெல்லாம் எதற்கு?
    ஆர்வம் புரிகிறது. தொடருங்கள்!நன்றாகப் படியுங்கள்(ஜோதிடப் பாடங்களை)

    ReplyDelete
  8. //////திவா said...
    //சிரிய தவறு நடந்து விட்டது அதுதான் நீக்கி விட்டேன் முதல் பின்னுடத்தை.
    தடங்களுக்கு மணிக்கவும். //
    அதானே!
    ஆசிரியரே, உள்ளேன் ஐயா!////

    என்ன வருகைப்பதிவு மட்டும்தானா? பாடங்களில் குறிப்பு எடுத்துக்கொண்டீர்களா?

    ReplyDelete
  9. //////Anonymous said...
    wow...too many blogs within couple of days with charts..Is it "Chart week"
    -Shankar////

    Number of posts for (all of) you only!

    ReplyDelete
  10. Dear sir,

    Very useful charts.

    Asthavarga lessons are pending..

    ReplyDelete
  11. பொன்/பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்களே?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  12. //////Geekay said...
    Dear sir,
    Very useful charts.
    Asthavarga lessons are pending..////

    அடுத்த பாடம் செவ்வாயன்று. நடுவில் வெளியூர் பயணம் உள்ளது!

    ReplyDelete
  13. /////Anonymous said...
    பொன்/பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்களே?
    அன்புடன்
    இராசகோபால்////

    எதை வைத்துச் சொன்னார்கள் என்று தெரியவில்லை!
    கிழமைகளைவிடப் பெண் உயர்ந்தவள் சுவாமி!

    ReplyDelete
  14. உலக அரங்கில் சோதிடக் கலையிலும்,வானியலிலும் நமது பாரத தேசத்தின் பெருமை பற்றிய உங்கள் பதிவுக்கு பாராட்டுக்கள்.
    தொலை நோக்கிகளும்,இன்னும் பிற வானியல் சாதனங்களும் கண்டுபிடிபதற்கு முன்னே நம் முனிவர்களும்,யோகிகளும்,குருமார்களும் நிஷ்டையிலே அனைத்து கிரகங்களையும் மனக் கண்ணால் பார்த்து (செவ்வாய் கிரகம் சிவப்பு நிறம்)நமக்கு தந்துள்ள அரி பொக்கிஷங்கள் பற்றி இத்தலைமுறையினருக்கு கதை சொல்லி விளக்கும் ஆசிரியருக்கு கோடானகோடி நன்றி.
    கிழமைகளில் அன்னை பராசக்திக்கு உகந்த நாளாம் செவ்வாய்க் கிழமைகளில் சில மங்கல காரியங்கள் செய்வதற்கு பெரியவர்கள் தடை விதித்ததன் காரனம் யாது ?

    ReplyDelete
  15. /////நெல்வேலி கார்த்திக் said...
    உலக அரங்கில் சோதிடக் கலையிலும்,வானியலிலும் நமது பாரத தேசத்தின் பெருமை பற்றிய உங்கள் பதிவுக்கு பாராட்டுக்கள்.
    தொலை நோக்கிகளும்,இன்னும் பிற வானியல் சாதனங்களும் கண்டுபிடிபதற்கு முன்னே நம் முனிவர்களும்,யோகிகளும்,குருமார்களும் நிஷ்டையிலே அனைத்து கிரகங்களையும் மனக் கண்ணால் பார்த்து (செவ்வாய் கிரகம் சிவப்பு நிறம்)நமக்கு தந்துள்ள அரி பொக்கிஷங்கள் பற்றி இத்தலைமுறையினருக்கு கதை சொல்லி விளக்கும் ஆசிரியருக்கு கோடானகோடி நன்றி.
    கிழமைகளில் அன்னை பராசக்திக்கு உகந்த நாளாம் செவ்வாய்க் கிழமைகளில் சில மங்கல காரியங்கள் செய்வதற்கு பெரியவர்கள் தடை விதித்ததன் காரணம் யாது?////

    செவ்வாய்க்கிழமை & சனிக்கிழமைகளில் மங்கல காரியங்களைச் செய்வதில்லை.
    அவ்விரண்டு கிரகங்களும் தோஷங்களையும், தீமைகளையுமே அதிகமாகச் செய்யும் என்பதால்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com