19.5.08
பயிற்சியில் பெற்ற அதிர்ச்சி!
===========================================================
பயிற்சியில் பெற்ற அதிர்ச்சி!
பன்னாட்டு நிறுவனம். பயிற்சி வேலை என்று உத்தரவு வந்தது.
பயிற்சியில் ஒழுங்காகத் தேறினால், ஆறு இலக்கத்தில் சம்பளம் உண்டு.
குஷியான இளைஞன் வேலையில் சேர்ந்தான்.
ஆசாமி அதிகம் படித்தவன். கொஞ்சம் சுழி சரியில்லாதவன்.
சேர்ந்த அன்றே கலாட்டா!
என்னவென்று பார்ப்போம்
--------------------------------------------------------------------
வேலை செய்யும் மேஜையில் இருந்து, எக்ஸ்டென்சன் தொலைபேசி மூலம்
கேன்டீனைத் தொடர்புகொண்டான்.
“ஏய், சூடாக ஒரு கப் காப்பி வேண்டும். உடனே அனுப்பு!”
எதிப்புறம் இருந்து பதில் சூடாக வந்தது.
“ஏய், மடச் சாம்பிராணி, நீ தவறான எக்ஸ்டென்சக் கூப்பிட்டிருக்கிறாய்! அதோடு
நீ காப்பி கொண்டு வரச் சொல்லி உத்தரவு போட்டது யாரிடம் தெரியுமா?”
“தெரியாது! சொன்னால்தானே தெரியும்?”
“இடியட், நீ சொன்னது உன் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரிடம்”
இடியட் என்று சொன்னவுடன் நம்ம ஆளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
இப்போது டிரெய்னி கோபமாகக் கத்திப் பேசினான்:
“அடி முட்டாளே, நீ யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா?”
“எப்படித் தெரியும்? எக்ஸ்டென்சன் நம்பரை நான் கவனிக்கவில்லை! சீக்கிரம் சொல்
யார் நீ?”
“இந்தக் கம்பெனியிலேயே பெரிய இடியட் நீதான்!” என்று சொல்லியவன், இணைப்பைப்
படாரென்று துண்டித்து விட்டு, நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொன்னான்:
“கடவுளே, கோடி நன்றி!”
--------------------------------------------------------------
(படமும், கதையும் மின்னஞ்சலில் வந்தது)
சூப்பர்...! [ஒரு வரி ஊக்கமருந்து :)]
ReplyDelete////நிமல்/NiMaL said...
ReplyDeleteசூப்பர்...! [ஒரு வரி ஊக்கமருந்து :)]/////
பிழை உள்ளது.
ஒரு வரி அல்ல!; ஒரு வார்த்தை!:-)))
where is this week lesson today monday sir
ReplyDeleteஇதைவிட சுவையான உண்மை சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக டாக்டர் புருனோ அவர்கள் தெரிவித்துள்ளார்கள். உங்கள் பார்வைக்கு.
ReplyDelete//மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றும் கும்பல்//
மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றுவது சுலபம் (காசு நிறைய வைத்திருக்கிறார்கள் செலவழிக்க தயங்க மாட்டார்கள்) என்று நினைத்து இப்பொழுது அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனங்களை குறி வைத்திருக்கிறார்கள்//
சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அலுவலகத்திற்கு சென்ற சில நபர்கள், தாங்கள் -----------ல் இருந்து வருவதாகவும், ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மலிவு விலையில் மொத்தமாக இதய பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்காக விடுப்பு எடுக்க தேவை யில்லை என்றும் அலுவலகத்திலேயே பரிசோதனை செய்யலாம் என்றும், ஒரு நபருக்கு 500 ரூபாய் மட்டும்தான் என்றும், 5 நிமிடங்கள் கூட ஆகாது, இரத்தம் எடுக்க தேவையில்லை, உடனிருக்கும் மருத்துவர் முடிவுகளை உடனடியாக கூறி விடுவார் என்றும் கூறியதில் அங்குள்ள 2000 நபர்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சம்மதித்து விட்டதாக தெரிகிறது
(e.g.c மட்டும் அதுவும் தவறாக எடுத்து ஏமாற்றியுள்ளார்கள்)
பின்குறிப்பு 1:
1500 x ரூபாய் 500 = ரூபாய் 7,50,000
அதில் அவர்களுக்கு செலவு 30,000 கூட இருக்காது
மோசடி செய்தவர்களுக்கு கண்டிப்பாக 7 லட்சம் லாபம் தான்
மின்னஞ்சலில் வந்து,தெரிந்த கதையானாலும்(கருத்தானாலும்)சொல்லப்பட்ட விதத்தால் பெருமையை தக்கவைத்துக் கொள்கிறார் நமது குரு.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteகதை நல்லா இருக்கிறது !! :-))
இந்த வார பாடம் ??
உங்கள் பாடத்தை எதிர் நோக்கும் மாணவர் .
//////கூடுதுறை said..
ReplyDeletewhere is this week lesson today monday sir////
எனக்கு நினைவில்லாமலா? எத்தனை பேர் பாடத்தில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் நடுவில் ஒரு வேறு இடுகையைப் பதிந்தேன் - வேண்டு மென்றே!
இப்போது சென்று பாருங்கள். பாடம் உள்ளது! (இரண்டு மணி நேர இடைவெளி அவ்வளவுதான்)
உங்கள் ஆர்வம் வாழ்க!
////Anonymous said...
ReplyDeleteஇதைவிட சுவையான உண்மை சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக டாக்டர் புருனோ அவர்கள் தெரிவித்துள்ளார்கள். உங்கள் பார்வைக்கு.
//மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றும் கும்பல்//
மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றுவது சுலபம் (காசு நிறைய வைத்திருக்கிறார்கள் செலவழிக்க தயங்க மாட்டார்கள்) என்று நினைத்து இப்பொழுது அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனங்களை குறி வைத்திருக்கிறார்கள்//
சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அலுவலகத்திற்கு சென்ற சில நபர்கள், தாங்கள் -----------ல் இருந்து வருவதாகவும், ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மலிவு விலையில் மொத்தமாக இதய பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்காக விடுப்பு எடுக்க தேவை யில்லை என்றும் அலுவலகத்திலேயே பரிசோதனை செய்யலாம் என்றும், ஒரு நபருக்கு 500 ரூபாய் மட்டும்தான் என்றும், 5 நிமிடங்கள் கூட ஆகாது, இரத்தம் எடுக்க தேவையில்லை, உடனிருக்கும் மருத்துவர் முடிவுகளை உடனடியாக கூறி விடுவார் என்றும் கூறியதில் அங்குள்ள 2000 நபர்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சம்மதித்து விட்டதாக தெரிகிறது
(e.g.c மட்டும் அதுவும் தவறாக எடுத்து ஏமாற்றியுள்ளார்கள்)
பின்குறிப்பு 1:
1500 x ரூபாய் 500 = ரூபாய் 7,50,000
அதில் அவர்களுக்கு செலவு 30,000 கூட இருக்காது
மோசடி செய்தவர்களுக்கு கண்டிப்பாக 7 லட்சம் லாபம் தான்////
உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே!
//ஒரு வரி அல்ல!; ஒரு வார்த்தை!:-)))//
ReplyDeleteஒரு வார்த்தை ஒரு வரியாகக்கூடாதா?
அல்லது
ஓ!
ஒரு
வார்த்தை
ஒரு
வரியாகக்
கூடாதா?!
என ஒரு வரி ஒரு கவுஜையாகக் கூடாதா?
////தியாகராஜன் said...
ReplyDeleteமின்னஞ்சலில் வந்து,தெரிந்த கதையானாலும்(கருத்தானாலும்)சொல்லப்பட்ட விதத்தால் பெருமையை தக்கவைத்துக் கொள்கிறார் நமது குரு./////
அடடா, அடிக்கடி இப்படிச் சொல்லி (குரு) எனக்கு காவி கட்டி விடாதீர்கள் நண்பர்களே!
எனக்கு ஆசிரியர் என்ற ஜிப்பாவே போதும்!
////Geekay said...
ReplyDeleteஅய்யா,
கதை நல்லா இருக்கிறது !! :-))
இந்த வார பாடம் ??
உங்கள் பாடத்தை எதிர் நோக்கும் மாணவர் /////
எனக்கு நினைவில்லாமலா? எத்தனை பேர் பாடத்தில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் நடுவில் ஒரு வேறு இடுகையைப் பதிந்தேன் - வேண்டு மென்றே!
இப்போது சென்று பாருங்கள். பாடம் உள்ளது! (இரண்டு மணி நேர இடைவெளி அவ்வளவுதான்)
உங்கள் ஆர்வம் வாழ்க!
////இலவசக்கொத்தனார் said...
ReplyDelete//ஒரு வரி அல்ல!; ஒரு வார்த்தை!:-)))//
ஒரு வார்த்தை ஒரு வரியாகக்கூடாதா?
அல்லது
ஓ!
ஒரு
வார்த்தை
ஒரு
வரியாகக்
கூடாதா?!
என ஒரு வரி ஒரு கவுஜையாகக் கூடாதா?/////
கொத்தனாரே நீங்கள் சொன்னால் ஒரு எழுத்துக்கூட கவிதையாகி விடும்
......ம்!
உங்க வகுப்புச் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழனா? !!!!
ReplyDelete///////துளசி கோபால் said...
ReplyDeleteஉங்க வகுப்புச் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழனா? !!!!////////
இரண்டு சட்டாம்பிள்ளைகள் டீச்சர்:
பல்சுவை வகுப்பிற்கு: கொத்தனார் சட்டாம் பிள்ளை
வகுப்பறைக்கு: உண்மைத்தமிழர் சட்டாம்பிள்ளை
வாத்தியாரே...
ReplyDeleteமுன்பு சர்தார்ஜி ஜோக்ஸ் ரொம்பப் பிரபலம். அவங்களுக்குப் பிறகு இப்போதைக்கு ஐ.டி.பசங்கதான் நம்மகிட்ட சிக்கிருக்காங்கன்னு நினைக்கிறேன்..
நல்ல ஜோக்தான்..
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஅடடா, அடிக்கடி இப்படிச் சொல்லி (குரு) எனக்கு காவி கட்டி விடாதீர்கள் நண்பர்களே! எனக்கு ஆசிரியர் என்ற ஜிப்பாவே போதும்!//
ஜிப்பா போட்ட ஆசிரியரா நீங்கள்..?
உங்களை ஜீன்ஸ் பேண்ட் போட்டு, பிரிட்னி ஸ்பியர்ஸ் பனியன் போட்டிருக்கும் ஸ்டூடண்ட் மாதிரியான வாத்தியாருன்னு யாரோ இங்க மண்டபத்துல சொல்லிக்கிட்டாங்க..
உண்மையா வாத்தியாரே..
//துளசி கோபால் said...
ReplyDeleteஉங்க வகுப்புச் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழனா?!!!!//
ஆஹா.. டீச்சரம்மா கண் வைச்சுட்டாங்களே..
வாத்தியாரே.. இதுக்கு எதுனாச்சும் திருஷ்டி பரிகாரம் இருந்தா சொல்லிருங்க..
இல்லாட்டி 'இது என்ன தசை'ன்னு மட்டும் சொல்லிருங்க.. பரிகாரத்தை நானே செஞ்சுர்றேன்..
இதோ ஊக்கமருந்து. :-)
ReplyDeleteஉண்மைத்தமிழன் தான் சட்டாம்பிள்ளையா. தெரியாமல் போச்சே:)
ReplyDelete////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே...
முன்பு சர்தார்ஜி ஜோக்ஸ் ரொம்பப் பிரபலம். அவங்களுக்குப் பிறகு இப்போதைக்கு ஐ.டி.பசங்கதான் நம்மகிட்ட சிக்கிருக்காங்கன்னு நினைக்கிறேன்..
நல்ல ஜோக்தான்..//////
இல்லையில்லை, இப்பவும் சர்தார்ஜி ஜோக்குகள்தான் முதலிடத்தில்!
///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
அடடா, அடிக்கடி இப்படிச் சொல்லி (குரு) எனக்கு காவி கட்டி விடாதீர்கள் நண்பர்களே! எனக்கு ஆசிரியர் என்ற ஜிப்பாவே போதும்!//
ஜிப்பா போட்ட ஆசிரியரா நீங்கள்..?
உங்களை ஜீன்ஸ் பேண்ட் போட்டு, பிரிட்னி ஸ்பியர்ஸ் பனியன் போட்டிருக்கும் ஸ்டூடண்ட் மாதிரியான வாத்தியாருன்னு யாரோ இங்க மண்டபத்துல சொல்லிக்கிட்டாங்க..
உண்மையா வாத்தியாரே..//////
அதுவும் உண்டு மனதளவில்!
///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDelete//துளசி கோபால் said...
உங்க வகுப்புச் சட்டாம்பிள்ளை உண்மைத்தமிழனா?!!!!//
ஆஹா.. டீச்சரம்மா கண் வைச்சுட்டாங்களே..
வாத்தியாரே.. இதுக்கு எதுனாச்சும் திருஷ்டி பரிகாரம் இருந்தா சொல்லிருங்க..
இல்லாட்டி 'இது என்ன தசை'ன்னு மட்டும் சொல்லிருங்க.. பரிகாரத்தை நானே செஞ்சுர்றேன்../////
டீச்சரம்மாவின் கண் நல்ல கண்! ஒன்றும் செய்யாது. பயப்படாதீர் தமிழரே!
/////குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇதோ ஊக்கமருந்து. :-)/////
குமரன் என்ற பெயரே ஊக்கம் கொடுக்கக்கூடியதுதானே!
//////வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஉண்மைத்தமிழன் தான் சட்டாம்பிள்ளையா. தெரியாமல் போச்சே:)/////
ஆமாம் சகோதரி! அவர்தான் அவ்வப்போது மிரட்டும்தொனியில் - தேவையா இது வாத்தியாரே?
என்று தட்டிக் கேட்கக் கூடியவர்.
ஒரு தடவை பதிவில் ஒரு மங்கையின் படத்தை (பதிவிற்குத் தோதாகத்தான்) போட்டுவிட்டு அவரிடம் இருந்து விடுபடுவதற்குள் பெரும் பாடாகி விட்டது:-)))
Ullen Iyahaa
ReplyDeleteit is not fun think your 3 view
How IT people mentality is not for all but not more.
siva
siva said...
ReplyDeleteUllen Iyahaa
it is not fun think your 3 view
How IT people mentality is not for all but not more.
siva////
என்ன சிவா சொல்கிறீர்கள்? ஒன்றும் புரியவில்லையே!
வருத்தப்படுகிறீகள் என்று மட்டும் தெரிகிறது
என்து பதிவுகள் யாரையும் வருத்தப்பட வைப்பதற்காக எழுதப்படுவதில்லை!
ஆகவே விவராமாகச் சொல்லுங்கள்
சரிபண்ணி விடலாம்!