5.5.08

பயனற்றவை எது?

நெத்தியடியான பாடல் வரிகள் - 1

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

பயனற்றவை எது?

1. பெற்றோர்களை - அவர்கள் துயர் உற்றிருக்கும் காலத்தில் கவனித்துப் போற்றாத பிள்ளை
2. நன்றாகப் பசிக்கும்போது கிடைக்காத உணவு - அது எவ்வளவு சுவையானதாக இருந்தாலும்
3. தாகத்தைத் தவிர்க்க முடியாத தண்ணீர்.
4. கணவனின் வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத பெண் (மனைவி)
5. கோபத்தை அடக்கி ஆளத்தெரியாத ஆட்சியாளர்கள்
6. தன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தன்படி நடக்காத மாணவன்
7. பாவம் போக்கும் புனிதத்தன்மை இல்லாத திருக்குளம்

ஆகிய இந்த ஏழும் பயனற்றவை ஆகும்!
யார் சொன்னது?
ஞானி ஒருவன் சொன்னது!
பாடலைப் பாருங்கள்

“ஆபத்துக்கு உதவாப்பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாபத்தைத் தீராத தண்ணீர் தரித்திரம் அறியாத பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே!”
--------------------------------------------------

14 comments:

  1. பயனற்றவை எவை?

    விவேக சிந்தாமணிப் பாடலா?

    ReplyDelete
  2. ///நா. கணேசன் said...
    பயனற்றவை எவை?
    விவேக சிந்தாமணிப் பாடலா?///

    கணேசன் சார் வணக்கம். நீங்கள் தமிழ் ஆர்வலர். உடனே கண்டுபிடித்துச் சொல்லிவிட்டீர்கள். நன்றி!

    அது விவேகசிந்தாமணிப் பாடல்தான்!

    யாராவது அதைக் கவனித்து எழுதுகிறார்களா - பார்ப்போம் என்றுதான் பதிவில் சொல்லாமல் விட்டேன்:-)))

    ReplyDelete
  3. ஐயா சுப்பையா,பார்த்த உடன் தெரிந்தது பாடல் விவேக சிந்தாமணி என்று.
    ஐயா கணேசன் முந்திக்கொண்டு விட்டார்.
    அது சரி,புகைப்படத்தில் இருக்கும் அம்மணி என்ன சொல்கிறார்?

    ReplyDelete
  4. /////அறிவன்#11802717200764379909 said...
    ஐயா சுப்பையா,பார்த்த உடன் தெரிந்தது பாடல் விவேக சிந்தாமணி என்று.
    ஐயா கணேசன் முந்திக்கொண்டு விட்டார்.
    அது சரி,புகைப்படத்தில் இருக்கும் அம்மணி என்ன சொல்கிறார்?////

    விவேக சிந்தாமணியை அறிந்து ரசிப்பவர்களுக்குப் பாட்டு!
    மற்றவர்களுக்கு அம்மணியின் படம்:-))))

    ReplyDelete
  5. குருவிற்கு நமஸ்காரம்.என் தந்தையார் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்ன விவேக சிந்தாமணி புத்தகத்தில், அவர் விளக்கமும் கூறிய பாடல்.வாழ்வில் மறக்கக் கூடாத வரிகள்.

    ReplyDelete
  6. /////தியாகராஜன் said...
    குருவிற்கு நமஸ்காரம்.என் தந்தையார் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்ன விவேக சிந்தாமணி புத்தகத்தில், அவர் விளக்கமும் கூறிய பாடல்.வாழ்வில் மறக்கக் கூடாத வரிகள்.////

    நீங்கள் உங்கள் தந்தையாரைப் பற்றிச் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது!

    நன்றி

    ReplyDelete
  7. //6. தன் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததன்படி நடக்காத மாணவன்.//

    வாத்தியாரே.. இப்படி ஒரு நீதிக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு பிகரோட போட்டோவைக் காட்டி பாடம் நடத்துறீங்களே.. இது நியாயமா..?

    அப்போ இனிமே, நாங்க இது மாதிரி 'படம் போட்டு' பாலோ பண்ணலைன்னா, எல்லாம் வேஸ்ட்தானா..?

    சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரே இந்த ரேஞ்ச்ல இருந்தா.. எங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க..?

    ம்ஹ¤ம்.. நீங்களும் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க வாத்தியாரே..

    'கூடா சகவாசத்தைக்' கொஞ்சம் குறைச்சுக்கறது..

    ReplyDelete
  8. /////வாத்தியாரே.. இப்படி ஒரு நீதிக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு பிகரோட போட்டோவைக் காட்டி பாடம் நடத்துறீங்களே.. இது நியாயமா..?

    அப்போ இனிமே, நாங்க இது மாதிரி 'படம் போட்டு' பாலோ பண்ணலைன்னா, எல்லாம் வேஸ்ட்தானா..?

    சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரே இந்த ரேஞ்ச்ல இருந்தா.. எங்களைப் பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க..?

    ம்ஹ¤ம்.. நீங்களும் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க வாத்தியாரே..

    'கூடா சகவாசத்தைக்' கொஞ்சம் குறைச்சுக்கறது..////

    அந்தப் பெண் செவிட்டில் அறைய வருவதைப்போல கையக்காட்டியதால், பொருத்தமாக இருக்கிறதே என்று போட்டேன். நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்டு என்னைத் திட்டித்தீர்த்துவிட்டீர்.

    எதற்கு என்று படத்தைதூக்கிவிட்டேன்

    எனக்கு ஒரே சகவாசம்தான். அது பழநியில் இருக்கும் அந்த ஆண்டியோடுதான்!

    ReplyDelete
  9. நான் வகுப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த படத்தை மிஸ் பன்னிட்டேன்... மறுபடியும் போடுவிங்களா???

    ReplyDelete
  10. //நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்டு என்னைத் திட்டித் தீர்த்துவிட்டீர்.//

    வாத்தியாரே.. உங்கள் அன்பு சீடனை இப்படியா பழி தீர்ப்பது?

    //எனக்கு ஒரே சகவாசம்தான். அது பழநியில் இருக்கும் அந்த ஆண்டியோடுதான்!//

    எனக்கும் அவன் சகவாசம்தான் வாத்தியாரே.. ஆனா உங்களக்குத் தோணுற இந்த ஐடியாகூட எனக்குத் தோண மாட்டேங்குதே.. ஏன் வாத்தியாரே..?

    ReplyDelete
  11. //////விக்னேஸ்வரன் said...
    நான் வகுப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த படத்தை மிஸ் பன்னிட்டேன்... மறுபடியும் போடுவிங்களா???/////

    உண்மைத்தமிழரின் பின்னூட்டத்தைப் படியுங்கள். சில சமயங்களில் நான் படம் போடும் நோக்கம் திசை மாறிவிடுகிறது. ஆகவே இனி படங்கள் இந்தப்பதிவில் அதிகம் இருக்காது. மன்னிக்கவும்!

    ReplyDelete
  12. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நீங்கள் ஓங்கிய கையைத் தவிர மற்றதைப் பார்த்துவிட்டு என்னைத் திட்டித் தீர்த்துவிட்டீர்.//
    வாத்தியாரே.. உங்கள் அன்பு சீடனை இப்படியா பழி தீர்ப்பது?
    //எனக்கு ஒரே சகவாசம்தான். அது பழநியில் இருக்கும் அந்த ஆண்டியோடுதான்!//
    எனக்கும் அவன் சகவாசம்தான் வாத்தியாரே.. ஆனா உங்களக்குத் தோணுற இந்த ஐடியாகூட எனக்குத் தோண மாட்டேங்குதே.. ஏன் வாத்தியாரே..?/////

    தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை.
    ஆசிரியர் மாணவர் உறவும் அப்படிப்பட்ட உறவு. இதில் பழிக்கு, பாவத்திற்கு இடமேது சுவாமி?

    உங்களுக்கும் தோன்றும்! அவனுடைய நட்பை இன்னும் நெருக்கப்படுத்துங்கள்!

    ReplyDelete
  13. சிறுவயதில் என் அன்னை நான் ஒழுக்கமாக வளர வேண்டி சிறு சிறு பாடல்களை நேரத்துக்கேற்றாற் போல் சொல்வது வழக்கம். அவற்றுள் இதுவும் ஒன்று. ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  14. எனக்கு இதில் சில அபத்தமா படுது..

    //தன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தன்படி நடக்காத மாணவன்
    //

    குருவை மிஞ்சின சீடர்கள் இருக்கும் இந்த காலத்துக்கு பொருந்துமா? குருவுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் இந்த கால மாணவர்கள். மேலும், இது மாணவர்களின் கிரியேட்டிவிட்டியை தடை செய்வது போன்ற வாசகம்.

    குரு சொல்றத கேட்டு, அது சரியா, தவறான்னு ஆராய்ந்து அப்புறம் அதன்படி நடக்கலாமான்னு யோசிக்கலாம்.

    //கணவனின் வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத பெண்//

    கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போகும் பெண்ணீய காலத்திலா? என்னை கேட்டால் இது இப்படி மாறனும்

    "வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத ஆண் / பெண் (இரு பாலாரும்) பயனற்றவர்கள்"

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com