21.5.07
கோவையைக் குளிர்வித்த வலைப்பதிவர் சந்திப்பு!
==================================================
கோவையைக் குளிர்வித்த வலைப்பதிவர் சந்திப்பு!
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை உள்ள காலம்
தவிர்த்து மற்ற காலங்களில் குளிரான ஊர் கோவை.
ஆனால் மே மாதத்தில் - அதுவும் அக்னி நட்சத்திர
நாளில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பிற்குச் சிறப்பாக
ஏற்பாடு செய்து,அதைச் சிறப்பாக நடத்தி பாலபாரதி
அவர்கள் எங்களைக் குளிவித்துவிட்டார்
என்றால் அது மிகையல்ல!
காலை மணி 10.20ற்கு நிகழ்ச்சி நடக்கவிருந்த (பெரிய)
அறைக்குள் நான், என் வலைப்பதிவு நண்பரும், உள்ளூர்க்
காரரும் 'பாடும் நிலா பாலா' வலைப்பதிவின் பங்காளி
யுமான கோவை ரவி அவர்களுடன் நுழைந்தேன்.
நுழைந்த அடுத்த கணமே என்னை அடையாளம்
கண்டுகொண்ட ஐந்து அல்லது அறு வலைப்பாதிவாளர்கள்
ஒருமித்த குரலில் 'எதிர்பார்த்த்தை விட நீங்கள்
இளமையாக இருக்கிறீர்கள்" என்று சொல்லி என்
தலையில் பத்துக் கிலோ பனிக்கட்டியை ஏற்றி
வைத்து விட்டார்கள்.
அங்கே முன்பாகவே வந்து அமர்ந்திருந்த என்
வகுப்பறை முதல் பெஞ்ச் மாணவர் சென்ஷி, அந்தப்
பனிக்கட்டியை இறக்கி வைக்க உதவியதோடு எனக்கு
உதவியாகவும், பாதுகாப்பாகவும், என் அருகில்
வந்து அமர்ந்து கொண்டார்
நிகழ்ச்சி அமைப்பாளர்களான பால்பாரதி, ஓசை செல்லா,
செந்தழல் ரவி ஆகிய மூவரில் ஓசை செல்லா அவர்கள்
உடல் நலமின்மை காரணமாக வரவில்லை.
அவரைக் காணும் ஆவலில் வந்திருந்தவர்களுக்கு அது
ஏமாற்றமாக இருந்தது
ஆனால் அந்த ஏமாற்றத்தை பாமரன் அவர்கள் போக்கி
விட்டார். ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அவர்
கலகல்ப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.
அவர் நாவில் தங்கு தடையின்றித் தமிழ் நர்த்தனமாடியது.
பாலபாரதி தன்னைச் சுய அறிமுகம் செய்து கொண்டு
நிகழ்ச்சியைத்துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர் மணி
வண்ணனின் குரல் வளத்திற்குச் சற்றும் குறையாத
வளமான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய குரல்வளம்
மிக்கவர் அவர். முதன் முதலாக அவரை நேரில் பார்த்த
எனக்கு, அவர் இனி பதிவில் எழுதுவதோடு மேடைகளிலும்
பேசினால் தமிழ்கூறும் நல்லுலகம் மகிழ்வுறும் என்று
தோன்றுகிறது!
தமிழ் வலைப் பதிவுகளுக்குத் தொழில்நுட்ப விஷயங்
களில் பெரும் அளவில் கைகொடுத்து உதவி வரும்
முகுந்தராஜ் அவர்களும் வந்திருந்து அனைவரையும்
பரவசப் படுத்தினார்.
மோகன் தாஸ், பி வின்சென்ட், தாமோதரன் சந்துரு,
சேகுவேராஜெயகுமார், லிவிங் ஸ்மைல் வித்யா,
ராஜா வனஜ, பாரதி ராஜா, சுகுணாதிவாகர் ஆகியோரும்
சிரமம் பாராமல் வந்திருந்து சந்திப்பில்
கலந்துகொண்டு உரையாடிய்து மகிழ்வாக இருந்தது!
பழம் பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு
அவர்களிடம் சுமார் முப்பது ஆண்டுகாலம் உதவியாளராக
இருந்த ஆறுமுகசாமி அவர்களை பாமரன் அவர்கள்
நேர்காணல் செய்ய - பிறகு அது கலந்துரையாடலாகி
அரை மணி நேரம் அந்த நிகழ்ச்சி சுவையாக நடைபெற்றது.
பொறுமையின் சிகரம் மா.சிவகுமார் அவர்கள் தன் மடிக்
கணினியில் அந்த நிகழ்ச்சியையும் அதற்குப் பிற்கு
பேராசிரியர் ரமணி அவர்கள் 'பின் நவீனத்துவம்'
என்ற தலைப்பில் ஆற்றிய உரையையும் பதிவு செய்து
வைத்திருப்பதால், அவர் பதிவிடுவார் என்கின்ற நம்பிக்
கையில் நான் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாளர் புகைப்ப்டம்
எடுக்க, இந்து நாளிதழில் இருந்து வந்திருந்த சகோதரி
ஒருவர் எங்களைப் பேட்டி எடுக்க அது மிகவும் சுவாரசி
ய்மாக இருந்தது.( அதை வினையூக்கி அல்லது
உண்மைத் தமிழன் போன்ற நண்பர்கள் சுவை மாறாமல்
பதிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் விலகிக் கொள்கிறேன்)
பிறகு பாமரன் அவர்கள் தனது கொஞ்சு தமிழில் தான்
கணினி பயின்றவிதம் பற்றியும், பதிவுலகில் எட்டிப்
பார்த்துப் பிறகு உள்ளே வந்த விதம் பற்றியும்
சுவையாகச் சொன்னார்.
இன்று நடந்த பதிவர்கள் சந்திப்பின் நாயகன் அவர்தான்!
வந்திருந்த வலைப் பதிவர்களில் ஒருவர் - தோற்றம் நடை,
உடை பாவனைளில் நாயகனாக வந்திருந்தார். நாயகன்
என்றால் நம்மூர் குத்துப் பாட்டு நாயகனை நினைத்துக்
கொள்ளாதீர்கள். உண்மையிலேயே Hollywood திரைப்பட
நாயகன் போல - குறிப்பாகச் சொன்னால் 1994ம் ஆண்டு
வந்த் SPEED' பட நாயகன் Keanu Reeves போன்ற பொலிவான்
தோற்றத்துடன் வந்திருந்தார்.
அவர்தான் செந்தழல் ரவி!
அதிரடி நாயகர் லக்கிலுக், பா.க.ச தலைவர்
We the people ஜெய்சங்கர், பொன்ஸ் அம்மணி, மற்றும்
தூத்துக்குடிக்காரர் வரவனையான் ஆகியோர்
வருவார்கள் என்றிருந்தேன். வரவில்லை!
எனக்கு அது சற்று ஏமாற்றம்தான்!
வந்திருந்த அனைவருக்கும் பாலபாரதி அவர்கள்
'Scripling Pad ஒன்றையும், Ball Point பேனா ஒன்றையும்
இலவசமாக வழங்கினார். அடுத்த முறை கோவை
வலைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனை
வருக்கும் அவர் மடிக்கணினி ஒன்றைப் பரிசாக
வழங்கும் அளவிற்கு அவருடைய பொருளாதார நிலை
உயரவும் அதே நேரத்தில் மடிக்கணினியின் விலை
இரண்டாயிரம் ரூபாய்க்கும் கீழே இறங்குவதற்கும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!
அன்புடன்
SP.VR.சுப்பையா
சந்திப்பு சிறப்பானது குறித்து மகிழ்ச்சி.
ReplyDeleteநானும் வர நினத்தேன்.வேலை இடம்தர மறுத்தது. இருப்பினும் உங்கள் உடனடிப் பதிவு எங்களையும் இணைத்துக்கொண்டது.
எனக்கும் ஒரு மடிக்கணினி.. :-))
ReplyDeleteஎன்ன சார் ரொம்ப நாட்களாக இங்கு பார்க்கமுடியவில்லை? பள்ளி விடுமுறையில் இருக்கீங்களா?
நேத்து போட்ட புகைப்படங்கள் எல்லாம் பல தடவை பார்த்துட்டேன்..
ReplyDeleteஉண்மைய ஒத்துக்குறேன...
ஏதோ கோவைல இருந்த மாதிரி ஒரு உணர்வு அத பார்த்த போது...:-)
//ஆனால் மே மாதத்தில் - அதுவும் அக்னி நட்சத்திர
ReplyDeleteநாளில் ஒரு வலைப் பதிவர் சந்திப்பிற்குச் சிறப்பாக
ஏற்பாடு செய்து,அதைச் சிறப்பாக நடத்தி பாலபாரதி
அவர்கள் எங்களைக் குளிவித்துவிட்டார்
என்றால் அது மிகையல்ல!//
வாத்தியார் ஐயா ஏமாற்றப் பட்டுவிட்டீர்கள் !
எனக்கு வந்த ரகசிய தகவல் படி பாலபாரதியின் மொட்டைத் தலை சென்னை வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் போனதால் ஒரு வாரம் கோவை சென்று வரலாம் என்று நினைத்தாரம். அதை மறைத்துவிட அந்த பதிவர் சந்திப்பு ஏற்பாடாம். உங்க கிட்ட சொன்ன இந்த ரகசியதத்தை போட்டு கொடுத்துடாதிங்க.. பாகச பாசக்கார புள்ளைங்க என்னை பிராண்டிவிடுவார்கள்.
ஐயா, மீண்டும் தங்கள் வலையிலக மீள்காட்சி (ப்ரவேஷம்) பாராட்டுக்கள் ! மற்றும் மகிழ்ச்சி !
//காலை மணி 10.20ற்கு நிகழ்ச்சி நடக்கவிருந்த (பெரிய)
ReplyDeleteஅறைக்குள் நான், என் வலைப்பதிவு நண்பரும், உள்ளூர்க்
காரரும் 'பாடும் நிலா பாலா' வலைப்பதிவின் பங்காளி
யுமான கோவை ரவி அவர்களுடன் நுழைந்தேன்/
வாத்தியார் ஐயா அவர்களூக்கு
எனது பிரியமான பாலு அவர்களின் தளத்தை உங்கள் பதிவில் குறிப்பிட்டு ஆதரவு தந்து
தங்கள் பதிவர்களை சந்திக்க வைத்து. பதிவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தற்க்கு மிக்க நன்றி.
மிகவும் அருமையான சந்திப்பின் நிகழ்வுகளை பதிந்து எனக்கு உற்சாகமூட்டியுள்ளீர்கள். மற்ற பதிவர்கள் இன்னும் அதிக விளக்கங்களூடன் பதிவார்கள் என்ற எதிர்ப்பாக்கிறேன். கோவை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதற்க்கு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களூக்கும் டாக்டர். எஸ்.பி.பாலு அவர்கள் சார்ப்பாகவும் அவரின் ரசிகர்கள் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வாத்தியார்
பின்னவீனத்துவம் குறித்து பேசினபோது நீங்கள் இடையாடியது அருமை...(எனக்குத்தான் ஒன்னும் புரியவில்லை)
ReplyDeleteபாலபாரதி கொடுத்த கேட்பரீஸ் பெர்க்ஸ் சாக்லேட் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்...!!! :))))
சிறுகதை வினையூக்கியை லைட்டாக கலாய்த்ததை நீங்கள் தவறாக எழுத்துக்கொள்ளவில்லையே ??
குருவே,
ReplyDeleteசிறிது இடைவெளிக்குப் பின்னால் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அன்புடன்
இராசகோபால்
திரு.கோவி.கண்ணன் சார், நானும் நினைச்சேன். ஏதாவது இருக்கும்னு. நல்ல வேளை ஊட்டியில் பட்டறை போடாம வுட்டூட்டாங்களே. கோவையிலே போட்டதுக்கே இப்படி மேலே பட்டறை போட்டிருந்தா? நேரடியாவே மோதிடுவீங்களே? அப்படிதானே சார்?
ReplyDeleteஅய்யோ... ரவி... அந்த சாக்லேட் நான் கொடுக்கலை.. சந்திப்புக்கு வந்த.. மணிமொழியன் கொடுத்தது.
ReplyDeleteசெந்தழல் ரவி சார், இன்னொன்றும் குறிப்பிட நம்ம வாத்தியார் மறந்துட்டாங்க. இந்த வேகாத வெயிலில் சந்திப்பை இரண்டாவது மாடியில் வைத்தது. அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஒரே "தஸ் புஸ் தான்" போங்க சார்.
ReplyDeleteஇது போன்ற ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
ReplyDeleteவிரைவில் நாம் சந்திப்போம்.
வாத்தியாரை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஉள்ளேன் ஐயா. என்ன குருவே என்னை அழைக்க மறந்து விட்டீர்களே? உங்களை எல்லாம் பார்க்க எவ்வளவு ஆர்வமாக இருந்தேன்!!!
ReplyDeleteWhen shall be the next class? Eagerly waiting
ReplyDelete