25.4.07

அம்மாவின் ஜாதகம் – தொடர்ச்சி!

=============================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 30
அம்மாவின் ஜாதகம் – தொடர்ச்சி!

நேற்று என் பதிவில் வந்து ஒரு அன்பர் கேட்டிருந்தர்ர்
செல்வி ஜெயலலிதா என்ன உங்கள் அம்மாவா ?
அம்மாவின் ஜாதகம் என்று எப்படிப் போடலாம்
என்று கேட்டிருந்தார்.

மகாத்மா காந்தியை Father of the nation என்கிறோம்.
அதுபோல தமிழகத்தில் இரண்டுமுறை முதல் அமைச்சராக
இருந்த மதிப்பிற்குரிய பெண்மணியை அம்மா என்று
விளிப்பதில் தவறில்லை. ஐம்பது வயது தாண்டிய
பெண்கள் அனைவரையுமே (ofcourse - except wife)
அம்மா என்று அழைப்பதுதான் தமிழ்ப்ப்ண்பாடு.

மேலும் நான் அரசியல் ஈடுபாடு இல்லாத நடுநிலைவாதி!
பெரியார் தந்தைபெரியார்தான், காமராஜர் கர்மவீரர்
காமராஜ்தான். கலைஞர்கருணாநிதி அய்யாகருணாநிதிதான்
ஜெயலலிதா அம்மாஜெயலலிதாதான். இதை எங்கே
வேண்டுமென்றாலும் நான் சொல்லுவேன்
எழுதுவேன். யாராயிருந்தாலும் கொடுக்க வேண்டிய
மரியாதையைக் கொடுப்பேன்.

அப்படி இடக்கான சிந்தனை உள்ளவர்கள் - அவர்கள்
மொழியில் சொன்னால் கோக்குமாக்கான சிந்தனை
உள்ள் ஆசாமிகள் எல்லாம் என் பதிவிற்குள் வர
வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்--------------------------------------------------------
அம்மாவின் ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள்.


=======================================
1. அவர் மிதுன லக்கினக்காரர். மிதுன லக்கினக்காரர்கள்
அனைவருமே அழகிய தோற்றமுடையவர்களாக
இருப்பார்கள். (உதாரணம், - மறைந்த நடிகர்
திரு.ஜெமினி கணேசன் மற்றும் மத்திய நிதியமைச்சர்
திரு. ப. சிதம்பரம் போன்றவர்கள்)

2. லக்கினாதிபதி புதன் 9ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
அது மிதுன லக்கினக்காரர்களுக்குத் திரிகோண வீடு.
பாக்கிய ஸ்தானம் (House of Gains)
புதனுக்கு முதல்தர நண்பனான் சனியின் வீடு.
ஆக்வே அங்கே சிறப்பாக அமர்ந்த புதன் அவருக்குச்
சிறிய வயதிலேயே பணம் புகழ், செல்வாக்கு
அனைத்தையும் பெற்றுத்தந்தார்.

3. ஐந்தாம் வீடான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு
அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். பத்தாம்
வீட்டில் அமர்ந்துள்ளார். அது மிதுன லக்கினக்காரர்
களுக்குக் கேந்திர ஸ்தானம். சுக்கிரன் வாழக்கை
வசதிகளுக்கெல்லாம் அதிபதி அவர் உச்சம் பெற்றதால்
எல்லா வசதிகளையும் கொடுத்திருக்கிறார்.

4. பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன்
உச்சம் பெற்று அமர்ந்த பத்தாம் வீட்டிற்கு அதிபதியான்
குரு பகவான் 7ம் வீட்டில் சிறப்பாக அமர்ந்து லக்கினத்
தைப் பார்வையில் வைத்திருப்பதோடு, தன்னுடைய
10ம் வீடான தொழில் ஸ்தானத்திற்குரிய பணியைச்
சிற்ப்பாகச் செய்து அம்மையாரை முதலமைச்சர் பத்விவரை
கொண்டுபோய் உட்காரவைத்தார்.

5. ஐந்தாம் வீட்டில் அமர்ந்த ஞானகாரகனான் கேது
அம்மையாருக்குப் பன்மொழித் திறமையையும், ஆழ்ந்த்
நுண்ணறிவையும் கொடுத்தார்.

6. பதினொன்றில் அமர்ந்த ராகு அவருக்குப் பெரும்
புகழையும், செல்வாக்கையும், ஏராளமான தொண்டர்களையும், விசுவாசிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

7. சூரியனும், புதனும் சேர்க்கை பெற்று (Association) 9ல்
அமர்ந்துள்ளதைக் கவனியுங்கள். அரசியலிலும், அரசிலும்
அம்மையாருக்கு அரும்பணிகளை ஏற்படுத்திக் கொடுத்தது
அவர்களின் சேர்க்கைதான்

8. செவ்வாயும், சந்திரனும் சிம்மத்தில் சேர்ந்து சசி மங்கள
யோகத்தை ஏற்படுத்தினார்கள். பெண்ணாகப் பிறந்தாலும்
பெண்களுக்குள் பிரபலமாகி நாட்டின் மிகப் பிரபல்மான பத்துப் பெண்மணிகளில் ஒருவராக அம்மையாரை
முன்னிறுத்தியது அந்த சேர்க்கைதான்

9. குறையில்லாத் ஜாதகமே இருக்காது என்ற நியதிக்கு
ஏற்ப அம்மையாரின் ஜாதகத்தில் லக்கினத்தில் மாந்தி
அமர்ந்தது குறைதான். அவருடைய அதீத
கோப உணர்வும், பிடிவாதமும் பிரசித்தமானது அல்லவா
அத்ற்குக் காரணம் லக்கினத்தில் அமர்ந்த மாந்திதான்.

10. அதுபோல இரண்டாம் வீடான் குடும்பஸ்தானத்தில்
(House of Family Affairs) வந்து அமர்ந்த சனியால் அவருக்குக்
குடும்ப வாழவு அமையாமல் போய்விட்டது.

11. தொழில் ஸ்தானமான் மீனத்தில் கலைகளுக்கு
அதிபதியான் சுக்கிரன் இருப்பதால்தான் அவர் திரைத்
துறையில் நுழைந்து பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டினார்.

12. பதினொன்றில் அமர்ந்த ராகு ராஜயோகத்தைக்
கொடுத்தார். அவர் அமர்ந்த இடத்திற்கு நாயகனான
செவ்வாயின் திசையில்தான் அவர் முதலமைச்சர் ஆனார்.
திசை புக்திகள் விவரம்

1948. 02.24 ...பிறந்த தேதி
0002.09.00 .. கேது திசை இருப்பு
0020.00.00.. சுக்கிர திசை
0006.00.00 .. சூரிய திசை
0010.00.00.. சந்திர திசை
---------------------
1986.11.24 .... செவ்வாய் திசை ஆரம்பம்
0007.00.00... செவ்வாய் திசை
---------------------
1993.11.24 ....ராகு திசை ஆரம்பம்
0018.00.00... ராகு திசை
------------------
2011.11.24 .....ராகு திசை முடிந்து குரு திசை ஆரம்பம்

ராகு திசை முடிய இன்னும் நான்கு வருடங்கள் ஏழு
மாதங்கள் பாக்கியுள்ளது. அதற்கு அடுத்துவரும்
குரு திசை அவருக்குச் சிறப்பாக இருக்கும்!
------------------------------------------------------------------------------------
கோச்சார பலன்கள் ( தொடர்ச்சி)

சந்திரனின் கோச்சாரபலன்கள்
1ல் நல்ல பலன்கள் நடைபெறும்
2ல் தீய பலன்கள்
3ல் நல்ல பலன்கள் நடைபெறும்
4ல் சுமாரான் பலன்கள்
5ல் தீய பலன்கள்
6ல் நல்ல பலன்கள் நடைபெறும்
7ல் நல்ல பலன்கள் நடைபெறும்
8ல் மோசமான பலன்கள்
9ல் தீய பலன்கள்
10ல் நல்ல பலன்கள் நடைபெறும்
11ல் நல்ல பலன்கள் நடைபெறும்
12ல் தீய பலன்கள்

குறுக்கு வழியில் கணக்கிட்டால் சந்திரன் ஒரு சுற்றில்
அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் நல்ல பலன்களையும்,
மீதி நாட்கள் தீய ப்லன்களையும் கொடுக்கும்.

அஷ்டவர்க்கத்தில் சந்திரன் சுற்றிவரும் வீடுகளில்
அதனுடைய சுயவர்க்க எண் 4ற்கு மேற்பட்டால்
மேற்கூறிய விதிகளை மீறி நல்ல பலன்களே நடைபெறும்!

அது அஷ்ட வர்க்கப் பாடம் நடத்தப்படும்போது உங்களுக்குப்
ப்டிபடும் (புரியும்)
-------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். கோச்சாரப் பாடம்
நாளையும் தொடரும்!

15 comments:

  1. ஜாதகத்தில் லக்கினத்தில் மாந்தி
    அமர்ந்தது குறைதான்

    what is the meaning of manthi sir??

    ReplyDelete
  2. மாந்தி என்பது உபகிரகம். ஜாதகத்தில் 11ம் வீட்டைத்தவிர அது எங்கே அமர்ந்திருந்தாலும் பாதகம்தான்

    அதற்கென்று தனிப் பாடம் உள்ளது. பின்னால் வரும்!
    பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  3. 7ல் குரு ஆட்சியாக இருந்தாலும் திருமண வாழ்வு அமையாததற்கு காரணம் என்ன ஐயா?.

    -கிச்சா.

    ReplyDelete
  4. ////7ல் குரு ஆட்சியாக இருந்தாலும் திருமண வாழ்வு அமையாததற்கு காரணம் என்ன ஐயா?.
    -கிச்சா. ///

    அதுதான் பதிவிலேயே சொல்லி யிருக்கிறேனே நண்பரே!

    இரண்டில் அமர்ந்த சனியும், ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய்டன் சேர்ந்து நலிந்த சந்திரனும்தான் காரணம்(அவ்ர்
    இந்த ஜாதகத்திற்கு குடும்ப ஸ்தான அதிபதி)

    ReplyDelete
  5. குருவே,

    பாடங்கள் மிக சுவாராசியமாக போகின்றது. ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு உங்கள் நேரம், உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு சரியான முறையில் பயன்படுகின்றது. எங்களது மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  6. /////பாடங்கள் மிக சுவாராசியமாக போகின்றது. ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு உங்கள் நேரம், உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு சரியான முறையில் பயன்படுகின்றது. எங்களது மனமார்ந்த நன்றி.
    அன்புடன்
    இராசகோபால்////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    இந்தத் தொடரை எழுதுவதன் நோக்கம்
    1. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
    2. எனக்கு நன்றாகத் தெரிந்ததை நான்கு பேர்களுக்காவது
    கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம்!

    தினமும் சராசரியாக 300 பேர்கள் வந்து போவதாக Hit Counter எண்ணிக்கை காட்டுகிறது
    அதில் எத்த்னைபேர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு வருகிறார்களோ - தெரியவில்லை!

    ReplyDelete
  7. அய்யா
    எனக்கு 1976 ல் நான் பிறந்த போது கணித்த ஜாதகம் வாக்கியப் படி எழுதப்பட்டது

    ஆனால் தாங்கள் கொடுத்த இணைய இணைப்பில் http://www.planetarypositions.com/birthchart.html

    வரும் ஜாதக கட்டததிற்கும் ஜோதிடர் கணித்த ஜாதக கட்டததிற்கும் வேறுபாடுகள் உள்ளன

    லக்னமும் ஒரு கிரகமும் ஒரு கட்டம் வேறுபடுகிறது . எனவே நான் எதை பின்பற்றுவது

    ReplyDelete
  8. ////ஆனால் தாங்கள் கொடுத்த இணைய இணைப்பில் http://www.planetarypositions.com/birthchart.html

    வரும் ஜாதக கட்டததிற்கும் ஜோதிடர் கணித்த ஜாதக கட்டததிற்கும் வேறுபாடுகள் உள்ளன

    லக்னமும் ஒரு கிரகமும் ஒரு கட்டம் வேறுபடுகிறது . எனவே நான் எதை பின்பற்றுவது ////

    கால சந்திப்பில் பிறந்தவர்களுக்கு இந்த் வித்தியாசம் வரும்!
    அதாவது Borderல் பிறந்தவர்களுக்கு!
    8.00 மணிக்கு ஒரு லக்கினம் முடிந்து 8.01 ற்கு அடுத்தலக்கினம் துவங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்
    7,59ற்குப் பிறந்தவர்களுக்கு வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் இந்த லக்கினக் குழப்பம் வரும்

    திருக்கணிதம்தான் சரியானது!

    ஆக்வே நீங்கள் http://www.planetarypositions.com/birthchart.html கணித்த ஜாகத்தையே உபயோகிக்கலாம்!

    ReplyDelete
  9. Ayya,

    I just seen ur blog and now reading all your old posts. But I can't read ur posts 21-27. Can you pls tell me how to view all this posts

    vj

    ReplyDelete
  10. /////கடைசி பக்கம் said...
    Ayya,
    I just seen ur blog and now reading all your old posts. But I can't read ur posts 21-27. Can you pls tell me how to view all this posts
    vj///
    சைடுபாரில் லேபிள்ஸ் என்ற பகுதியில் சுட்டி உள்ளது. (Lessons 21 to 30) அதைக் கிளிக் செய்து பாருங்கள். தெரியும் உங்கள் பொருட்டு சோதித்துப் பார்த்தேன். சரியாக உள்ளது!

    ReplyDelete
  11. தயவு செய்து எனது கத்துக் குட்டி தனமான கேள்விகளுக்கு மனம் கோணாமல் பதில் அளிக்கவும் ஐயா...

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ஜோகம் என்பது அம்மாவின் ஜாதகத்தில் ராகு 11 ம் வீடான பகை வீட்டில் தங்கியிருப்பதால் தான் (மேஷம்) ராஜஜோகம் கிட்டியது...எனது கருத்து சரியா ஐயா?

    ReplyDelete
  12. தயவு செய்து எனது கத்துக் குட்டி தனமான கேள்விகளுக்கு மனம் கோணாமல் பதில் அளிக்கவும் ஐயா...

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ஜோகம் என்பது அம்மாவின் ஜாதகத்தில் ராகு 11 ம் வீடான பகை வீட்டில் தங்கியிருப்பதால் தான் (மேஷம்) ராஜஜோகம் கிட்டியது...எனது கருத்து சரியா ஐயா?

    ReplyDelete
  13. /////தயவு செய்து எனது கத்துக் குட்டி தனமான கேள்விகளுக்கு மனம் கோணாமல் பதில் அளிக்கவும் ஐயா...
    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ஜோகம் என்பது அம்மாவின் ஜாதகத்தில் ராகு 11 ம் வீடான பகை வீட்டில் தங்கியிருப்பதால் தான் (மேஷம்) ராஜஜோகம் கிட்டியது...எனது கருத்து சரியா ஐயா?////

    இல்லை. அத்ற்கு வேறு ஒரு காரணம். நீங்கள் ஜோதிடர் என்று எழுதியுள்ளீர்களே. காணத்தைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!

    ReplyDelete
  14. காரணம் பிடிபடவில்லை ஐயா..
    நான் ஜோதிடன் இல்லை..
    மாணவன்
    சற்றே புரிய வையுங்கள்...
    நேரம் உள்ள போது மட்டும்
    அவசரம் இல்லை..
    நன்றி

    ReplyDelete
  15. நலிந்த சந்திரன் என்று குறிபபிட்டு உள்ளீர்கள் அய்யா. ஆனால் சந்திரன் பூரண சந்திரன் அல்லவா.. (சூரியனுக்கு 7 ஆம் இடம்) அப்படி இருக்கும் போது எதனால் பலம் குறைந்தது ? (ஆட்சி பெற்ற குருவின் 9 ஆம் பார்வை வேறு பலம் சேர்க்கும் அல்லவா ?)

    பதில் அளித்தால் மிகவும் மகிழ்வேன்.

    நன்றி. தங்கள் புதிய மாணவன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com