ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 23
தசா புக்திப் பலன்கள்
மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும்
9 புக்திகள். ஆக மொத்தம் 81 புக்திகள். அவற்றின்
மொத்தகாலம் 120 ஆண்டுகள்
நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா
என்றால் இல்லை!
முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலத்தில் போதிய மருத்துவ வசதி இன்மையால்
ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.
ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச்
சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது
ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி
நடக்கும் பொதுப் பலன்களைப் பழைய நூல் ஒன்றி
லிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறேன்
அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை
வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு பெரிய
முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!
அவருடைய பெயர் 'புலிப்பாணி'.
ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை
ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி
அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக
இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு செய்து, வரிகளின்
அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட்
எடுத்து, Scan செய்து பதிவிட்டிருக்கிறேன்
எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான்.
மேலும் "செய்வன திருந்தச் செய்" என்பதை வாத்தியார்
கடைப்பிடிக்க வேண்டாமா? அதற்காகவும்தான்
பதிவின் நீளம் கருதி அதை 3 பகுதிகளாகப் பிரித்து
ள்ளேன். இன்று, முதல் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.
யாரையும் கேட்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே
நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று
தெரிந்து அதற்குத தகுந்த மாதிரி வாழ்க்கையின்
இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்
சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள்
அதில் உள்ள மாதிரிதான் இருக்கும். மீதமுள்ள
25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள
கிரக நிலைகளின் மேம்பாட்டைப் பொறுத்து
பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில்
நான் சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக்
கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்
ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை
என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும் சம்பவங்களை
வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம்
உள்ளது என்று தசா புத்தி சொல்லும் போது
எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?
வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த
மூன்று வருடத் துன்பங்களைத் தெம்புடன் ஏற்றுக்
கொள்வோமா - மாட்டோமா?
அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.
ஒரு முக்கியமான விஷ்யம். " மனைவி தன்னை
நாசம் பண்ணும்" என்று போட்டிருந்தால் Don't jump to
any harsh conclusion. மனைவியுடன் கருத்து வேறுபாடு
ஏற்படலாம் என்று பொருள் கொள்ளவும். அதுபோல
களவு போகும் என்று போட்டிருந்தால் பயப்பட
வேண்டாம். இளைஞராக இருந்ததால் உங்கள்
உள்ளத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடன் வேலை பார்க்கும் மெல்லியலாள் எடுத்துக்
கொண்டு போய் விடும் வாய்ப்பு உண்டு!:-))))
Over to Dasa puththi Results:-
(படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால்
அவைகள் பெரிதாகத் தெரியும்)============================================
==================================================
மற்ற கிரகங்களுக்குரிய திசைப் பலன்கள்
அடுத்தடுத்து வரும்
--------------------------------------------------------
கடைசி பெஞ்ச் கண்மணிகளூக்காக வழக்கம்போல
குறுக்கு வழியையும் கொடுத்துள்ளேன்
அவர்களால் - அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்
எங்கள் பகுதி சொல் வழக்கில் சொன்னால்
சமர்த்தர்கள்தான் - இருந்தாலும் பாடலைப்
படிக்கும் பொறுமை அவர்களுக்கு இருக்காது
என்பதனால் ரத்தினச் சுருக்கமாகப் பலன்கள்
அட்டவணையில் கொடுத்துள்ளேன்!
குறிப்பாக அந்த டில்லிப் பையனுக்கும், மற்றும்
பொன்முட்டை அவர்களூக்குமாகத்தான் அந்த
அட்டவணையைத் தயார செய்தேன்!
மற்றவர்களும் அதைப் படிக்கலாம். இரண்டில்
எது பிடித்துள்ளது அல்லது சுலபமாக உள்ளது
என்று பின்னூட்டத்தில் சொல்ல வேண்டுகிறேன்
I want your feed back!
=========================================
(தொடரும்)
==========================================
தசா புக்திப் பலன்கள்
மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும்
9 புக்திகள். ஆக மொத்தம் 81 புக்திகள். அவற்றின்
மொத்தகாலம் 120 ஆண்டுகள்
நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா
என்றால் இல்லை!
முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலத்தில் போதிய மருத்துவ வசதி இன்மையால்
ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.
ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச்
சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது
ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி
நடக்கும் பொதுப் பலன்களைப் பழைய நூல் ஒன்றி
லிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறேன்
அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை
வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு பெரிய
முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!
அவருடைய பெயர் 'புலிப்பாணி'.
ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை
ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி
அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக
இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு செய்து, வரிகளின்
அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட்
எடுத்து, Scan செய்து பதிவிட்டிருக்கிறேன்
எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான்.
மேலும் "செய்வன திருந்தச் செய்" என்பதை வாத்தியார்
கடைப்பிடிக்க வேண்டாமா? அதற்காகவும்தான்
பதிவின் நீளம் கருதி அதை 3 பகுதிகளாகப் பிரித்து
ள்ளேன். இன்று, முதல் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.
யாரையும் கேட்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே
நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று
தெரிந்து அதற்குத தகுந்த மாதிரி வாழ்க்கையின்
இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்
சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள்
அதில் உள்ள மாதிரிதான் இருக்கும். மீதமுள்ள
25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள
கிரக நிலைகளின் மேம்பாட்டைப் பொறுத்து
பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில்
நான் சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக்
கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்
ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை
என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும் சம்பவங்களை
வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம்
உள்ளது என்று தசா புத்தி சொல்லும் போது
எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?
வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த
மூன்று வருடத் துன்பங்களைத் தெம்புடன் ஏற்றுக்
கொள்வோமா - மாட்டோமா?
அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.
ஒரு முக்கியமான விஷ்யம். " மனைவி தன்னை
நாசம் பண்ணும்" என்று போட்டிருந்தால் Don't jump to
any harsh conclusion. மனைவியுடன் கருத்து வேறுபாடு
ஏற்படலாம் என்று பொருள் கொள்ளவும். அதுபோல
களவு போகும் என்று போட்டிருந்தால் பயப்பட
வேண்டாம். இளைஞராக இருந்ததால் உங்கள்
உள்ளத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடன் வேலை பார்க்கும் மெல்லியலாள் எடுத்துக்
கொண்டு போய் விடும் வாய்ப்பு உண்டு!:-))))
Over to Dasa puththi Results:-
(படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால்
அவைகள் பெரிதாகத் தெரியும்)============================================
==================================================
மற்ற கிரகங்களுக்குரிய திசைப் பலன்கள்
அடுத்தடுத்து வரும்
--------------------------------------------------------
கடைசி பெஞ்ச் கண்மணிகளூக்காக வழக்கம்போல
குறுக்கு வழியையும் கொடுத்துள்ளேன்
அவர்களால் - அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்
எங்கள் பகுதி சொல் வழக்கில் சொன்னால்
சமர்த்தர்கள்தான் - இருந்தாலும் பாடலைப்
படிக்கும் பொறுமை அவர்களுக்கு இருக்காது
என்பதனால் ரத்தினச் சுருக்கமாகப் பலன்கள்
அட்டவணையில் கொடுத்துள்ளேன்!
குறிப்பாக அந்த டில்லிப் பையனுக்கும், மற்றும்
பொன்முட்டை அவர்களூக்குமாகத்தான் அந்த
அட்டவணையைத் தயார செய்தேன்!
மற்றவர்களும் அதைப் படிக்கலாம். இரண்டில்
எது பிடித்துள்ளது அல்லது சுலபமாக உள்ளது
என்று பின்னூட்டத்தில் சொல்ல வேண்டுகிறேன்
I want your feed back!
=========================================
(தொடரும்)
==========================================
அந்த கடைசி பெஞ்சுக்காரர் பண்ணுவதைத்தான் நானும் செய்தேன்!!
ReplyDeleteகண்டுபிடித்துவிட்டீர்களே.
பாடல்களை அருமையாக ஸ்கேன் பண்ணி ஏற்றி இருக்கீற்கள்.
நன்றி ஐயா, நன்றி.
அய்யா,
ReplyDeleteசொல்லப்பா அட்டவனை தான் சுலபமப்பா,
ஆமப்பா உங்கள் முயற்சி தான் பெரிதப்பா,
இதற்கு நன்றி கூறும் நாள்தான் எப்போதப்பா,
இந்த பொக்கிஷத்தை பாதுகாத்தே வருவோமப்பா.
அய்யா,
ReplyDeleteகுட் அல்லது பேட் மட்டும்தானா?. நார்மல் பீரியட் என்று ஒன்றும் இல்லையா?
அய்யா,
ReplyDeleteபுலிப்பானி முனிவர் எழுதிய இந்த நூல் இப்பொழுது எங்கு கிடைக்கும்?.
வாத்தியாரய்யா, நானெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சப்ப உங்கள மாதிரி ஆசிரியர்கள் குறைவு:-((( நன்றி, நன்றி, நன்றி - கடோசி பெஞ்சு தான் நான், ரொம்ப உபயோகமாக இருந்தது. உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.
ReplyDelete/////வடுவூர் குமார் said..அந்த கடைசி பெஞ்சுக்காரர் பண்ணுவதைத்தான் நானும் செய்தேன்!!
ReplyDeleteகண்டுபிடித்துவிட்டீர்களே.////
வாத்தியார் வேலையென்றால் சும்மாவா?
எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்!:-))).
/////அமர பாரதி said... அய்யா,
ReplyDeleteசொல்லப்பா அட்டவனை தான் சுலபமப்பா,
ஆமப்பா உங்கள் முயற்சி தான் பெரிதப்பா,
இதற்கு நன்றி கூறும் நாள்தான் எப்போதப்பா,
இந்த பொக்கிஷத்தை பாதுகாத்தே வருவோமப்பா.////
ந்ன்றியெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா
தொடரைப் புத்தகமா வெளியிட உள்ளேனப்பா
அப்போது ஒரு பிரதி வாங்கினால் போதுமப்பா
உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டுமப்பா!
//////அமர பாரதி said..அய்யா, குட் அல்லது பேட் மட்டும்தானா?
ReplyDeleteநார்மல் பீரியட் என்று ஒன்றும் இல்லையா?/////
மருத்துவ மனையில் படுத்திருக்கும்போது ந்ல்ல டாக்டர்
ந்ல்ல அன்பான செவிலிப் பெண்கள், பக்கத்தில் இரண்டு
பணக்கார பேஷண்டுகள் இப்படியெல்லாம் வந்து
அந்த் சூழலிலும் ஒரு கலகலப்புக் கிடைக்குமல்லவா?
அதுபோல Bad Period களிலும் சில சின்னச் சின்ன
சந்தோஷங்கள் கிடைக்கும்.
இறைவன் கருணை மிக்கவர்
உங்களுக்கு என்ன் வேண்டும் என்று உங்களைவிட
அவருக்குத்தான் என்றாகத் தெரியும்!
அதனால் Good Period , Bad Period இரண்டையுமே
Normal Period என்று நினைத்துக் கொள்ளுங்கள்!
நான் அப்படித்தான் நினைப்பது வழக்கம்!
////monickam said...
ReplyDeletei really like the songs but the tables are really good for quick reference
-Monickam ////
கருத்திற்கு நன்றி நண்பரே!
/////அமர பாரதி said... அய்யா,
ReplyDeleteபுலிப்பானி முனிவர் எழுதிய இந்த நூல் இப்பொழுது எங்கு கிடைக்கும்?.///
மதுரை புது மண்டபத்தில் ஜோதிடம் சம்பந்தமான அத்தனை நூல்களும் கிடைக்கும்!
(புது மண்டபம் அமமன் சன்னதிக்கு அருகில் உள்ளது!)
///// kekkE PikkuNi said... வாத்தியாரய்யா, நானெல்லாம் பள்ளிக்கூடம்
ReplyDeleteபடிச்சப்ப உங்கள மாதிரி ஆசிரியர்கள் குறைவு:-((( நன்றி, நன்றி, நன்றி
கடோசி பெஞ்சு தான் நான், ரொம்ப உபயோகமாக இருந்தது.
உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி./////
உங்களை மாதிரிப் பாராட்டுகிற மாணவர்களும்
அந்தக் காலத்தில் (ஏன் எந்தக் காலத்திலும்) குறைவுதான்!
வணக்கம் வாத்தியார் அய்யா
ReplyDelete1)சாதாரனமா எந்த ஒரு திசையிலும் தனது புத்தி நன்மையை செய்யாது என்று சொல்வார்கள், ஆனால் சந்திர திசை தனது புத்தி நன்மை தரும் என்று சொல்வது சரியா.
2) தசா நாதன் இருக்குமிடத்தில் இறுந்து புத்தி நாதன் அமர்ந்திறுக்கும் இடத்திறுக்கும் பலத்தைப் பொறுத்தெ புத்தி வேலை செய்யும்
இல்லை இவையெல்லாம் exclusionsஅ
தங்களுடன் தொலைபேசலாமா
உங்களுடைய புத்தகம் பதிப்பில் உதவ அவா.
என்னுடய மின்ன்ஞ்சல் whoami00712@yahoo.com
நிச்சயமாக வாங்குவேன் அய்யா.
ReplyDeleteDear sir,
ReplyDeleteSome of the songs are bit difficult to interpret and understand. The table is straight forward to get it.
But still I think the table is very generic to take as it is. Is there any other table that you could provide that would rate the individual dasa/bhuki's based on the relative plantes in the horoscope.
Dear sir,
ReplyDeleteSome of the songs are bit difficult to interpret and understand. The table is straight forward to get it.
But still I think the table is very generic to take as it is. Is there any other table that you could provide that would rate the individual dasa/bhuki's based on the relative plantes in the horoscope.
ஐயா!
ReplyDeleteரெண்டு நாளுக்கு முன்னாடியே கிளாஸ் பக்கம் வந்தேன். யாரையும் காணோமே!
//ந்ன்றியெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா
ReplyDeleteதொடரைப் புத்தகமா வெளியிட உள்ளேனப்பா
அப்போது ஒரு பிரதி வாங்கினால் போதுமப்பா
உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டுமப்பா!
//
அப்பப்பா! புத்தகமாய் வருகுதப்பா!
கேட்கையிலே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியப்பா!
நல்லபல சேதிதரும் முயற்சியப்பா!
அருள்தருவான் முன்னின்று ஆறுபடையப்பா!
குருவே,
ReplyDeleteஎளிமையான நடை, அருமையான விளக்கம், பிரபலங்களை வைத்து மேற்கோள் ...
உங்கள் எப்பொழுது வரும் என ஆவலாக உள்ளேன். ஆர்வமும், நம்பிக்கையும் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக பரிந்துரை செய்வோம்.
ராஜா
உள்ளேன் ஐயா.
ReplyDelete//// whoami said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் அய்யா
1)சாதாரனமா எந்த ஒரு திசையிலும் தனது புத்தி நன்மையை
செய்யாது என்று சொல்வார்கள், ஆனால் சந்திர திசை தனது
புத்தி நன்மை தரும் என்று சொல்வது சரியா.////
நீங்கள் சொவது சரிதான் எந்தக் கிரகத்திற்கும்
சுயபுத்தியில் பலன் கொடுக்கும் அதிகாரம் இல்லை!
சந்திரனுக்கு மட்டும் உண்டு என்று புலிப்பாணி சொல்கிறார்
நம்புவோம். வேண்டுமென்றால் யாரருக்காவது
சந்திரதிசை சுயபுத்தி நடந்தால் சொல்லுங்கள்
கேட்டுப் பார்த்து விடுவோம்!
2) தசா நாதன் இருக்குமிடத்தில் இருந்து புத்தி நாதன்
அமர்ந்திருக்கும் இடத்திற்க்கும் பலத்தைப் பொறுத்தே
புத்தி வேலை செய்யும்///
இதுவும் உண்மை. கொடுக்கப்பட்டிருக்கும் பலன்கள் எல்லாம்
பொதுப் பலன்களே. அவரவர்களுடைய ஜாதகத்தை வைத்துப்
பலன்கள் கூடவும் செய்யும்; குறையவும் செய்யும்.
////தங்களுடன் தொலைபேசலாமா////
நிறையப் பேர்கள் மின்னஞ்சலில் தொலைபேசி எண்ணைக்
கேட்டுள்ளார்கள். நான் என்ன பெரிய ஆளா மறுப்பதற்கு?
மன்னிக்கவும் நேரமின்மைதான் குறுக்கிடுகிறது
தொடர் முடியட்டும்
ஒரு Get together வைத்து அசத்தி விடலாம்.
அதுவரை உங்கள் சந்தேகங்களுக்கு
எனக்கு எழுதுங்கள் - பின்னூட்டம் அல்லது email:
classroom2007@gmail.com
///உங்களுடைய புத்தகம் பதிப்பில் உதவ அவா.///
இதற்கு விஷேச நன்றி! தொடர் முடியட்டும்
/////அமர பாரதி said...
ReplyDeleteநிச்சயமாக வாங்குவேன் அய்யா.///
இதற்கு விஷேச நன்றி! தொடர் முடியட்டும்
//// meenaksi_rm said...///
ReplyDeleteIs there any other table that you could provide that
would rate the individual dasa/bhuki's based on the
relative plantes in the horoscope.///
It is based on individual maha dasas and bhuki's only
I have posted one more chart today and another one
will be posted tomorrow. All these three charts will
cover the entire dasa period of 120 years
Please once again go through them!
//// நாமக்கல் சிபி said... ஐயா!
ReplyDeleteரெண்டு நாளுக்கு முன்னாடியே கிளாஸ் பக்கம் வந்தேன். யாரையும் காணோமே! ///
சீருடை நம் வகுப்புச் சீருடை இல்லையே?
இப்படிக் கூட நம் வகுப்பிற்கு ஆள் பிடிக்கலாம் போலிருக்கிறதே!
இலவச முழுப்பக்க விளம்பரத்திற்கு நன்றி சிபி!
//// நாமக்கல் சிபி said...
ReplyDeleteஅப்பப்பா! புத்தகமாய் வருகுதப்பா!
கேட்கையிலே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியப்பா!
நல்லபல சேதிதரும் முயற்சியப்பா!
அருள்தருவான் முன்னின்று ஆறுபடையப்பா!////
அதானே! ஆறு படையப்பாவிடம் பொறுப்பைக்
கொடுத்து விட்டு நீங்கள் நழுவப் பார்க்கிறீர்களாக்கும்!:-))))
//// Rajagopal said...
ReplyDeleteஎளிமையான நடை, அருமையான விளக்கம், பிரபலங்களை வைத்து மேற்கோள் ...
உங்கள் புத்தகம் எப்பொழுது வரும் என ஆவலாக உள்ளேன்.
ஆர்வமும், நம்பிக்கையும் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக
பரிந்துரை செய்வோம். ராஜா///
கோபாலன் சொன்னால் போதும். கோகுலமே வந்து வாங்காதா!:-)))
தொடர் முடியட்டும். நன்றி நண்பரே!
விடுமுறை நாட்களிலும் தவறாமல் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு நன்றி. பாட்டும் வேணும், அட்டவணையும் வேணும். முன் பெஞ்சுக்கு முன்னேறமுல்ல. புத்தகமா ? அய்ய்ய்.... ரொம்ப நல்ல விஷயம் ஆசிரியரே. "உங்கள் ஜாதகத்தை நீங்களே கணிப்பது எப்படி ?" "அனைவருக்கும் சுலப முறை ஜாதக கணிப்பு.". எப்படி இருக்கு என்னோட தலைப்புகள் ?
ReplyDeleteவாத்தியாரைய்யா,
ReplyDelete//அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு செய்து, வரிகளின் அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட் எடுத்து, Scan செய்து பதிவிட்டிருக்கிறேன்//
நீங்க எடுத்துக்கற சிரத்தை வியக்க வைக்கிறது. ஆனா இப்படி செய்வதற்கு பதிலா PDF அல்லது திரைச் சிறைப்பிடிப்பு (Screen Capture) நுட்பங்களைப் பயன்படுத்தலாமே. இது குறித்து மேலும் உதவி தேவையெனில் எனக்கு தனிமடல்(higopi[at]gmail[dot]com) இடுங்கள்.
வாத்தியாருக்கு Print/Scan செலவைக் குறைக்கலாமேங்கற நல்ல எண்ணம்தான். :-)
/அப்போது ஒரு பிரதி வாங்கினால் போதுமப்பா
ReplyDeleteஉங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டுமப்பா! /
கண்டிப்பாக, அய்யா!
மிக்க நன்றி!!
//// கூமுட்டை said...
ReplyDeleteவிடுமுறை நாட்களிலும் தவறாமல் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு நன்றி. பாட்டும் வேணும், அட்டவணையும் வேணும். முன் பெஞ்சுக்கு முன்னேறமுல்ல. புத்தகமா ? அய்ய்ய்.... ரொம்ப நல்ல விஷயம் ஆசிரியரே. "உங்கள் ஜாதகத்தை நீங்களே கணிப்பது எப்படி ?" "அனைவருக்கும் சுலப முறை ஜாதக கணிப்பு.". எப்படி இருக்கு என்னோட தலைப்புகள் ?////
:-))))
//////கோபி(Gopi) said...
ReplyDeleteவாத்தியாரைய்யா,
நீங்க எடுத்துக்கற சிரத்தை வியக்க வைக்கிறது. ஆனா இப்படி செய்வதற்கு பதிலா PDF அல்லது திரைச் சிறைப்பிடிப்பு (Screen Capture) நுட்பங்களைப் பயன்படுத்தலாமே. இது குறித்து மேலும் உதவி தேவையெனில் எனக்கு தனிமடல்(higopi[at]gmail[dot]com) இடுங்கள்.////
PDF File ஐ பதிவில் ஏற்றுவது எப்படி? அதைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள்!
///வாத்தியாருக்கு Print/Scan செலவைக் குறைக்கலாமேங்கற நல்ல எண்ணம்தான். :-)///
Scanner, Printer எல்லாம் வீட்டிலேயே Full System உடன் உள்ளது
அதனால் செலவு ஒன்றும் இல்லை!
///////தென்றல் said... /அப்போது ஒரு பிரதி வாங்கினால் போதுமப்பா
ReplyDeleteஉங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டுமப்பா! /
கண்டிப்பாக, அய்யா!
மிக்க நன்றி!!////
நன்றி நண்பரே!
தொடர் முடியட்டும்!
ஐயா, மிகவும் அழகான விளக்கமான தெளிவு, புலிப்பாணி சித்தரின் பாடல்கள் எளிதாக புரிகின்றன.
ReplyDeleteமிகவும் நன்றி
////Blogger சி.தவநெறிச்செல்வன் said...
ReplyDeleteஐயா, மிகவும் அழகான விளக்கமான தெளிவு, புலிப்பாணி சித்தரின் பாடல்கள் எளிதாக புரிகின்றன.
மிகவும் நன்றி/////
நன்றி தவநெறிச்செல்வரே! அருமையான பெயர்!
உங்கள் இயற்பெயரே அதுதானா? அல்லது நீங்கள் வைத்துக்கொண்ட பெயரா நண்பரே?
ஐயா எனக்கு செவ்வாய் தசை தான் நடக்கிறது.. ரகு புத்தி.. (25.10.2009 - 26.4.2011). இந்த வருடங்களில் நான் அதிக சிரமங்களை அனுபவித்தேன்.. கிட்டத்தட்ட 7 வகையான அமெரிக்க விசாக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.. ஆனால அவை அனைத்துமே நன்மைக்கு தான் என்று நினைத்துக்கொண்டேன்.. என் மனைவி கூட இதில் என்ன நன்மை என்றாள்? ஆனால 3 வருடம் கழித்து எனது சுற்றம், நண்பர்கள், கோவில், நான் வாழ்ந்த இடங்கள், வீடு வாங்குதல் போன்ற மனதுக்கு நிம்மதி தரும் விடயங்கள் நிறைய நடந்தன.. இப்போது என் மனைவி கூறுகிறாள்.. ஆமாம்.. அனைத்தும் நன்மைக்குதான் என்று.. எனது பிறந்த நாள் 2 June 1978 8:02 AM - பிறந்த இடம் : திருச்சி.
ReplyDeleteநக்ஷத்ரம் : அஸ்வினி
ராசி : மேஷம்
லக்கினம் : மிதுனம்
நீங்கள் சந்திர தசை நடக்கும் நண்பர்கள் பற்றி கேட்டதால் கூறுகிறேன்..
நன்றி.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
Dear sir, namaskaram. I have been going through your blog and found it extremely valuable and interesting. I particularly liked your table regarding dasa buktis. I am wondering if you can send this as email? I am unable to copy and paste! My email is geetha.rangarajan2008@gmail.com
ReplyDeleteThank you for your help
Geetha
I am seeing / reading this only today (03JUL15) VERY Happy about your writing. God Bless you.
ReplyDeleteஎன்ன செய்ய நாங்கள் படித்த பள்ளி அரசு பள்ளி, மாணவர்களாய் முயற்ச்சித்து படித்தாள் உண்டு தாங்களுக்கு கிடைத்த ஆசிரியர் போன்று என் போன்றோறுக்கு எ
ReplyDeleteத்தனை பேர்களுக்கு கிடைத்து இருக்கும் என்பது.. ?... குறிதான் சரி அந்த வய்ப்புக்கு பதிலாக பகவான் கிருபையில் உங்களை பொன்ற குருமார்கள் கிடைப்பதால் மிகவும் சந்தொஷமாக உள்ளது நன்றி அய்யா