17.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 15

Pandit Jawaharlal Nehru being sworn in as India's
first Prime Minister by
Lord Mountbatten on
August 15, 1947 At 00.01 Hours at New Delhi

===========================================
அடியவன் ஜோதிடப் பாடங்களைப் படிக்கும்
காலங்களில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன்.
ஜோதிடத்தில் ஒரு புது விதியைப் படிக்கும்
போது அல்லது ஒரு புதுச்செய்தியைத் தெரிந்து
கொள்ளும்போது, முதலில் அது என்னுடைய
ஜாதத்திற்குப் பொருந்தி வருகிறதா என்றுதான்
என் மனம் நினைத்துப் பார்க்கும்.

இது அனைவருக்கும் பொருந்தும்

உதாரணத்திற்கு சனி இரண்டாம் வீட்டில் இருந்தால்
காசு த்ங்காது (Expense oriented horoscope) என்று
படித்தால் என் ஜாதகத்தில் சனி எங்கே உள்ளது
என்றுதான் மனம் ச்டாரென்று யோசிக்கும்

அதுபோல லக்கினாதிபதி (Owner of the first house
or Lagna) 11ம் வீடாகிய லாப ஸ்தானத்தில்
(That is in the 11th house) என்று படித்தால் என்னுடைய
சிம்ம லக்கின அதிபதியான சூரியன் 11ம் வீட்டில்
இருக்கின்றாரா? என்றுதான் மனம் அலை பாய்ந்து தேடும்

(If the lagna lord is in the 11th house, the native will
have less efforts and maximum benefits)

எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும்

இனி வரும் பாடங்களில் பல விதிகளை
உதாரணத்துடன் சொல்ல உள்ளேன்

ஆகவே நீங்கள் உங்கள் ஜாதகத்தை மனனம் செய்து
விடுங்கள்.அல்லது ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அல்லது கணினியில் சேமித்து வையுங்கள்
அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்!
-------------------------------------------------
இன்றைய பாடம்: ஜாதகம் கணிப்பது எப்படி?

பத்து வருடங்களுக்கு முன் என்றால் யாராவது
ஜோதிடர் கணித்துக் கொடுத்தது இருக்க வேண்டும்
நாமே கணிப்பது என்றால் பஞ்சாங்கத்தை வைத்துக்
கொண்டு கணிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்

இப்போது கணினியில் பல மென்பொருள்கள் உள்ளதால்
அதெல்லாம் 'just like that' என்று படு சுலபமாகி
விட்டது. நாம் புத்தகத்தை வைத்துக் கணிக்கும் போது
தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கணினி முறையில் அந்தக் கஷ்டமெல்லாம் இல்லை
--------------------------------------------------------
தேவையானவை:
1. பெயர்
2. பிறந்த் ஊர்
3. பிறந்த நேரம் (அந்த நாட்டின் Standard Time)
4. அந்த நாட்டின் Standard Timeற்கும் GMTக்கும்
உள்ள நேர வித்தியாசம்
(இந்தியா என்றால் 5.Hours 30 Minutes East)
5. பிற்ந்த அட்ச ரேகை, மற்றும் தீர்க்க ரேகை
(Longitude and Lattitude)
Heavens above என்னும் இணைய தளத்தில்
20 லட்சம் ஊர்களுக்கு அட்ச ரேகை, மற்றும் தீர்க்க
ரேகைகள் கொடுக்கப்பட்டுள்ளன
--------------------------------------------
ஜாதகம் கணித்துத் தரும் தளத்தின் முகவரி
=================================

ப்திய வேண்டிய முறை:
கீழே உள்ள Screen Shot படத்தில் உள்ளது
(அதில் உள்ள Window வில் இந்தத் தகவல்களை
நிரப்பி - உடன் Chart Type - என்றுள்ளதை
South Indian என்று டிக் செய்யவேண்டும்!)

===================================
==============================================
என்ன புரியும்படியாக சொல்லியிருக்கின்றேனா?
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது
பின்னூட்டம் - வாருங்கள்
------------------------------------------------------

இன்று உதாரண ஜாதகமாக ந்மது தாய் நாட்டின்
ஜாதகத்தைக் கணித்துக் காட்டியுள்ளேன்
என்ன நாட்டிற்குச் ஜாதகமா என்கிறீர்களா?
ஆமாம் கண்மணிகளே நம் நாட்டிற்கும் ஜாதகம்
உண்டு! அதைப் பத்திரப்ப்டுத்தி வைத்துக் கொள்ளுங்கள்
அதை வைத்துப் பல சுவாரசியமான செய்திகள் உண்டு!
அவைகள் பின் பதிவுகளில் வரும்
--------------------------------------
பெயர்: India
பிறந்த தேதி: 15.08.1947 Friday
பிறந்த நேரம்: 00.01 Hours
அட்சரேகை: 28.39 North
தீர்க்க ரேகை: 77.13 East
Indian Standard Time (IST) ற்கும் GMTக்கும்
உள்ள நேர வித்தியாசம் 5.30 East
----------------------------------------

===================================================
தமிழ்மண்ம் முகப்பில் பதிவு இரண்டு அல்லது
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு கண்ணில்
படாமல் போய்விடும். அதை அங்கேயே நிறுத்தும்
ஜகஜால வித்தைகள் எனக்குத் தெரியாது.
அப்படியே ஒருநாள் தாக்காட்டினாலும், அடுத்தநாள்
காணாம்ற் போய்விடும்

ஆகவே பதிவைப் போட்டவுடன் எனது மாணவ
மணிகளூக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த
உள்ளேன். ஆகவே முதல் பெஞ்சாக இருந்தாலும்
சரி, கடைசி பெஞ்சாக இருந்தாலும் சரி அல்லது
வாரத்திற்கு ஒருமுறைதான் வகுப்பிற்கு வருவேன்
என்று அடம் பிடிப்பவர்களாக இருந்தாலும் சரி
உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப் படுத்த
வேண்டுகிறேன்.

ரகசியம் காக்கப்படும். Mass Mail முறையில்
வராமல் தனித்தனி மின்னஞ்சல் உங்களுக்கு வரும்
(அதற்குரிய நுடபம் அடியவனுக்குப் பழக்கமான
ஒன்று. நான் எனது வியாபார சம்பந்தமான செய்திகளை
அப்படி அனுப்புவதுதான் வழக்கம். 100 மின்னஞ்சல்கள்
என்றாலும் ஒன்றில் கூட அடுத்தவருடைய முகவரியைப்
பார்க்க முடியாது!)
--------------------------------------------------------
அன்புடன்,
SP.VR. சுப்பையா, கோயமுத்தூர்
Email ID: classroom2007@gmail.com

6 comments:

  1. Vanakkam Guruve,

    Though I have been reading your posts right from the first part, this is my first Pinnootam.

    "Thanks for the informative and useful blogspot".

    Raja

    ReplyDelete
  2. படிக்கனும் என்று இருந்தால்,ஒரு பதிவை படிக்கும் போது வலது பக்கத்தில் தான் ஆர்சிவ் இருக்கே!!
    அதில் இருந்து இழுத்து வந்து படிப்போம் ஐயா.

    ReplyDelete
  3. rajapushpa@gmail.com
    i read ur pages. its nice to learn astrology. thanks for ur blog.

    ReplyDelete
  4. Ivvalvu velaikalilum intha muyarchi paratathakkathu

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com