
*************************************************
Astrology: எனக்காக அவள்.அவளுக்காக நான்! Made for each other!
”Made for each other!” என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு என்ன?
ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பெற்றவர்கள் என்பது சரியாக இருக்கும்!
திருமண வாழ்வில் ஆதர்ச தம்பதிகள் அப்படித்தான் இருக்க வேண்டும்.
எனக்காக அவள். அவளுக்காக நான்!
ஆங்கிலத்தில் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்வார்கள்
Better Half அல்லது Bitter Half
பழ.கருப்பையா அவர்கள் அற்புதமான மேடைப்பேச்சாளர். அவர் ஒரு முறை
சொன்னார் நாம் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை. அது ஆங்கிலேயர்
களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது. பண்டைய தமிழ் மரபில் அவ்வழக்கம்
இல்லை!
அவர்கள் (ஆங்கிலேயர்கள்) ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் அடுத்த
வருடம் அவன் யாரோடு வாழப்போகிறானோ அல்லது அவள் யாரோடு வாழப்
போகிறாளே - ஒரு நிச்சயமற்ற தன்மை. ஆகவே ஒன்றாக இருக்கும்வரை
அதைக் கொண்டாடுவார்கள்
-------------------------------------------------------------------------
'இல்லறமல்லது நல்லறமன்று' என்றார் வான்புகழ் வள்ளுவர் பெருமான்.
இல்லறம் கிடைத்துவிட்டால் போதுமா? அது நல்லறமாக அமைய அன்பான
கணவன் அல்லது மனைவி கிடைக்க வேண்டாமா?
எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?
ஒருவன் தன் நண்பனிடம் கேட்டான், “டேய் பிசாசைப் பார்த்திருக்கிறாயா?”
அவன் உடனே பதில் சொன்னான், “பார்த்திருக்கிறாயா என்று கேட்கிறாயே?
ஏழு ஆண்டுகளாக அதோடுதான் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறேன்”
சிரிக்காதீர்கள். இதே போல ஒரு கதையை ஒரு பெண்ணும் சொன்னாள்
அடித்து தண்ணீர் எடுக்கும் பம்ப்பைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த
ஊர்க்காரர் கேட்டார், “ இரண்டு பேருமே, தண்ணீர் அடிப்பீர்களா?”
அந்தப் பெண் வருத்தம் கலந்த நகைச்சுவையுடன் பதில் சொன்னாள்
“வீட்டில் நான் அடிப்பேன். அவர் கடைக்குச் சென்று அடித்துவிட்டு வருவார்!”
-----------------------------------------------------------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த ்விஷயத்திற்கு வருகிறேன். எத்தனை பேருக்கு மகிழ்வைத்
தரக்கூடிய, இல்லறம் அமைந்திருக்கிறது?
உத்தேசமாக ஒரு 50 சதவிகித மக்களுக்குக் கிடைத்திருக்கலாம். அந்த ஐம்பதில்
கூடப் பாதிப்பேர்கள், தங்கள் அதிருப்தியை வெளியே சொல்லாமல், பெருந்தன்மை
யோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கலாம்.
நெருக்கிக் கேட்டால் சொல்வார்கள்,
“நாம் நினைத்தபடியா எல்லாம் நடக்கிறது? ஏதோ நடந்துவிட்டது. பெற்றோர்களின்
கட்டாயத்தில் தாலி கட்டிவிட்டேன் (அல்லது கழுத்தை நீட்டி விட்டேன் - இது
பெண்கள்). நான் எதிர்பார்த்த சந்தோஷம் இல்லைதான். அதற்காக வாழ்க்கையை
rewind செய்து பழையபடி துவங்க முடியுமா? அதானால் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
எல்லாம் தலைவிதி. அவ்வளவுதான். ஒன்றும் சொல்வதற்கில்லை!”
ஏன் இப்படிப் பலதரப்பட்ட நிலைமை?
எல்லாம் கிரகக் கோளாறு. வாங்கிவந்த வரம்!
வேறேன்ன சொல்ல முடியும்?
திருமணத்திற்கு முன்பு, பெரும்பாலான ஆண்கள் தங்களை மன்மதன்களாக நினைத்துக்
கொள்வார்கள். தங்களூக்குக் கழுத்தை நீட்டி மணம் செய்துகொண்டு, காலைத் தொட்டு
வணங்க சிநேகாக்களும், பிரியாமணிகளும், பாவ்னாக்களும் காத்திருப்பதாகக் கனவு
கண்டு கொண்டிருப்பார்கள்.
திருமணத்திற்கு முன்பு, பெரும்பாலான பெண்களும் அப்படித்தான் கனவுகளோடு
இருப்பார்கள். தங்களைத் தேவதைகளாக நினைத்துக்கொள்வார்கள். பண்ணுகிற
அழும்பு தாங்காது. சூரியாக்களும், அஜீத்களும், விஷால்களும் குதிரையில் வந்து
தங்களைக் கந்தர்வமணம் புரியக் காத்திருக்கும் கனவுகளுடன் இருப்பார்கள்
மணம் முடித்த பிறகு அவர்கள் தங்கள் காலடியில் கிடப்பார்கள் என்று எண்ணிக்
கொண்டும் இருப்பார்கள்.
ஆனால் உண்மை எதிர்மாறாக இருக்கும் - நடக்கும்!
கனவில் மிதக்கும் கன்னிகளுக்கு, கல்கி பட பிரகாஷ்ராஜ் போல ஒரு கணவன் வந்து
சேருவான். காளைகளுக்கு, தஞ்சாவூர் தவில் என்று புகழ்பெற்ற காந்திமதி போன்ற
நாயகி வந்து சேருவாள்.
அதுதான் வாழ்க்கை!
அதுதான் விதியின் விளையாட்டு!
விதி பாதி நேரம் எதிர் அணியோடுதான் விளையாடும். அந்த சமயங்களில் பந்தோடு
சேர்த்து நம்மையும் கோல் போஸ்டிற்குள் தள்ளிவிட்டுப் போய்விடும்!
------------------------------------------------------------------------------
கணவன், மனைவி அமைப்பு என்பது ரயிலும் தண்டவாளமும் போல இருக்கும்.
கணவன் ரயில்போல சுறுசுறுப்பாக வேகமாக செயல் படுபவனாக இருந்தால், மனைவி
அசமந்தமாக, சோம்பேறியாக, தூங்குமூஞ்சியாக இருப்பாள். அதே போல மனைவி
ரயிலாக இருந்தால், கணவன் தண்டவாளம் போல செயலற்று இருப்பான்.
இருவருமே ரயிலாக இருப்பதில்லை!
இரண்டுமே ரயிலாக இருந்தால் எப்படி ஓடும்? ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு நிற்காதா?
பாடகனுக்கு, பாடகியும், நடன ஆசியருக்கு நடனமாடத்தெரிந்த பெண்ணும், எழுத்தாளனுக்கு
எழுதத் தெரிந்த பெண்ணும் கலா ரசிகனுக்கு, கலாரசிகையும், இப்படித் துறை சார்ந்த,
திறமை ஒற்றுமை, மன ஒற்றுமை நிறைந்த பொருத்தமான மனைவி அமைவதில்லை.
அதுபோல பெண்ணிற்கும் கணவன் அமைவதில்லை!
ஏட்டிக்குப் போட்டியாக சிந்துபைரவி படத்தில் இருந்ததைப் போன்றுதான் அமையும்
ஏன் இப்படி?
எல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தின் அமைப்பு. கிரகங்கள் பண்ணுகிற வேலை!
ஒரே வரியில் சொன்னால்: வாங்கி வந்த வரம்!
ஜாதகத்தில் இது தெரியுமா?
ஏன் தெரியாது? நன்றாகத் தெரியும்!
------------------------------------------------------------------------------------------------------
1. லக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் 30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்களோ இருந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.
2. 25 - 30 பரல்கள் இருந்தால் சராசரியான மணவாழ்க்கை அமையும்
3, 25ற்குக் குறைவான பரல்கள் இருந்தால் சுமாரான மணவாழ்க்கை அமையும்
4. 20ம் அதற்குக் கீழேயும் இருந்தால் மணவாழ்க்கை சிறக்காது. பொதுவாகத்
திருமணமே ஆகாது. அப்படியே ஜாதகத்தின் வேறு உள் அமைப்புக்களால்
ஒருவேளை திருமணம் ஆனாலும், இழுத்துக்கொள், பறித்துக்கொள், ஒட்டிக்கொள்
ஓட்டிக்கொள் என்பது மாதிரியான மணவாழ்க்கை அமையும்
இப்படிக் குறைவாக இருக்கும் வாசகர்கள் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு
உட்கார்ந்து விடாதீர்கள். இது பொது விதி! சில ஜாதகங்களில் இதற்கு விதி
விலக்கு இருக்கும். அது அதன் அமைப்பைப் பொறுத்தது. சந்தேகம் இருப்பவர்கள்
நல்ல ஜோதிடரிம் காட்டி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்!
---------------------------------------------------------------------------------------------
இங்கே வாழ்க்கை என்பது திருமண வாழ்க்கையை மட்டுமே குறிக்கும்
திருமண வாழ்க்கை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்
Married life is only a part of the life.
When we say something about the married life. It is about the benefits or losses
out of the married life. It is about the span of the married life.
About the happiness and sorrows out of the married life.
In one sentence, It is the outcome of married life!
-------------------------------------------------------------------------------------------------
திருமண வாழ்வைப்பற்றிச் சொல்லிவிட்டீர்கள். மனைவியைப் பற்றித் தனியாகச்
சொல்ல அல்லது கணவனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா?
சொல்லமுடியும்!
5. லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக லக்கினத்தில் 25 பரல்கள் என்றால், ஏழாம் வீட்டில் அதைவிட
அதிகமான பரல்கள் இருக்க வேண்டும் 27 அல்லது அதற்கு மேல் எண்ணிக்
கையுடன் பரல்கள் இருக்க வேண்டும்!
அப்படி இருந்தால் உங்களைவிடத் தகுதி வாயந்த மனைவி அல்லது கணவன்
கிடைப்பான். அப்படி எண்ணிக்கை இல்லையென்றால் உங்களைவிடத் தகுதி
குறைவான மனைவி அல்லது கணவன் கிடைப்பான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
சரி, எதிர்பார்த்தபடி கணவன் அல்லது மனைவி கிடைக்கும் என்பதைத்
தெரிந்துகொள்ள வழி இருக்கிறதா?
எதிர்பார்த்தபடி மனைவியோ அல்லது கணவனோ அமைந்து விட்டால், வாழ்க்கை
சொர்க்கமாக அல்லவா மாறிவிடும்!
அதைத் தெரிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது!
6. ஏழாம் வீடு, ஏழாம் வீட்டின் நாயகன் (Lord of the seventh house) சென்று
அமர்ந்த இடம், களத்திரகாரகன் (Authority for marriages) அமர்ந்த இடம் ஆகிய
மூன்று இடங்க்ளும் 30 பரல்களுக்குமேல் கொண்டிருந்தால் அப்படிக் கிடைக்கும்
இல்லையென்றால் எதிர்பார்ப்பு நடக்காது!
வந்ததை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்!
--------------------------------------------------------------------------------------------------------
சிலருக்கு உரிய காலத்தில் திருமணமாவதில்லை. சிலருக்குக் கடைசிவரை
திருமணமே ஆவதில்லை. அவறிற்கு என்ன காரணம்?
தாமதத்திற்குப் பல காரணங்கள் உண்டு. Misplacement of planets concerned,
malefic planets like Saturn, Rahu or Ketu in those houses, improper Dasa
and bukthi in the young age என்று பல கண்டிஷன்கள் அல்லது நிலைமைகள்
அல்லது அமைப்புக்கள் உள்ளன. அதைத் தனிப்பதிவாக எழுத வேண்டும்
அது பத்துப் பக்கங்கள் வரும்!. இப்போது நேரமில்லை. பின்னால் எழுதுகிறேன்.
அதுபோல திருமணம் ஆகாமலேயே போய்விடுகின்ற நிலைமைக்கும் பல
காரணங்கள் உண்டு ( 6 அல்லது 8 அல்லது 12ல் - இவற்றை மறைவிடங்கள்
என்பார்கள். இந்த இடங்களில் திருமணத்திற்கு உரிய கிரகம் அமர்ந்து வலுவிழந்து
போய்விடுவது காரணமாகும்) மேலும் ஒரு முக்கியமான காரணம் 6ம் எண்ணாகச்
சொல்லியிருக்கின்ற இடங்களில் (மூன்றிலுமே) பரல்கள் மிகக் குறைவாக இருந்தாலும்
அந்த நிலைமை ஏற்படும்
உதாரணத்திற்குக் கீழே ஒரு மாதிரி ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
அதில் பாருங்கள் 7th House, 7th lord Jupiter, Karaga Venus all the 3 are
associated with only 15 (பரல்கள்) இந்த ஜாதகருக்குக் கடைசிவரை
திருமணமே நடைபெறவில்லை! It is called as denial of marriage!
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்!
****************************************************

++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிலருக்கு மண வாழ்வு முறிந்து, விவாகரத்தில் கொண்டுபோய் விட்டு விடுகிறதே
அதற்கு என்ன காரணம்?
சிலர் இளம் மனைவியைக் கைக் குழந்தையுடன் இங்கே விட்டுவிட்டு, மலேஷியா,
துபாய், அபுதாபி என்று பொருள் ஈட்டப் போய் விடுகிறார்கள். வருடத்திற்கு
ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் இங்கே வந்து
போகிறார்கள் ஒருவாரம் இருந்து விட்டு மீண்டும் போய் விடுகிறார்கள். அது
இருபது அல்லது 25 வருட காலங்கள் நீடிக்கிறது. மனைவி இங்கே. கணவன்
அங்கே. இந்த மாதிரியான அரைகுறை இல்லற வாழ்விற்கு என்ன காரணம்?
இவை இரண்டுமே சற்று விரிவாகப் பதில் எழுத வேண்டிய கேள்விகள்
தனித்தனிப் பதிவாகப் பின்னால் எழுதுகிறேன்
-----------------------------------------------------------------------------------------------------------
காதல் திருமணம் என்பதைச் சொல்ல ஜாதகத்தில் வழி இருக்கிறதா?
இருக்கிறது!
அதை மட்டும் எழுதுதாக இல்லை!
இங்கே பதிவுகளில் வளைய வருகிறவர்களில் பலர் திருமணம் ஆகாத
இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள்.
அவர்களைத் திசை திருப்பும் விதமாகப் பதிவில் செய்திகள் வருவதை நான்
விரும்பவில்லை.
அத்துடன், அதை விவரமாக எழுதும்போது சமூகம் பற்றிய மற்ற குறிப்புக்களையும்
எழுத வேண்டியதிருக்கும். அது இங்கே வேறு விதமான புயலைக் கிளப்பும்
ஆகவே எழுதப் போவதில்லை. யாரும் அதை வலியுறுத்த வேண்டாம்
காதல் திருமணங்களிலும் மேலே பதிவில் சொன்னபடி, பல குளறுபடிகள்
மணமுறிவு உட்பட்ட பல விவகாரங்கள் உள்ளன! அவற்றையும் சொல்ல வேண்டு
மென்றால், தனித்தனியாக - அதை அறிந்து கொள்ள விரும்புகிறவரின் அல்லது
விரும்புகிற பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல முடியும்
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
அத்துடன் ஜோதிடம் என்பது எனக்கு தொழில் அல்ல! எனக்கு வேறு தொழில்
இருக்கிறது.
நான் படித்ததை, பார்த்ததை, என் அனுபவங்களை ஒரு ஆர்வத்தில் உங்களுக்கு
அறியத் தந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
ஆகவே யாரும் அதை வலியுறுத்த வேண்டாம்!!!!!!!!!!
------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!