மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.10.18

எது மாயை? எது நிஜம்?


எது மாயை? எது நிஜம்?

ஹலோ நீங்க என்னிக்கு வந்தீங்க ? ஜெட்லேக் எல்லாம் போயிடுத்தா?
போன வாரம்  வந்தேம்ப்பா. எனக்கெல்லாம் ஜெட்டும் கிடையாது லேக்கும் கிடையாது, மறுநாளே வாக்கிங் 
ஆரம்பிச்சிட்டேன். உங்க பக்கத்து வீட்டு சீனு வந்தாச்சா?.

அடடே சீனு, உன்னை தாம்ப்பா  விசாரிச்சுண்டு இருந்தேன், நீ எப்ப வந்தே?

நான் நேத்திக்கு விடிய காலம்பற வந்தேன். பிரிட்டிஷ்  ஏர்வேஸ், லண்டன்ல நாலுமணி நேரம் ஸ்டாப் ஓவர்..

நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல வந்தேன்..

என்ன  அங்கிள் எப்படி இருந்துச்சு உங்க முதல்  யு எஸ் ட்ரிப்?

ஊருக்கு என்னப்பா குறைச்சல். ரோடெல்லாம்  இழைச்சுருக்கான். எல்லா இடத்துக்கும் பொண்ணோ, மாப்பிள்ளையோ கூட்டிண்டு  போயிடறா..  கௌசல்யா, எவ்வளவு ஜோரா கார் ஓட்டறா தெரியுமோ? அவ ஒரு டொயோட்டா வேன் வச்சுருக்கா, 
மாப்பிள்ளை பி எம் டபுள்யூ எடுத்துண்டு போயிடுவார்.. சைல்ட் கேர்லெந்து பேரன் நாலு மணிக்கு  வந்துருவான், அப்புறம் அவனை பாத்துக்கறது தான் வேலை. ஷாப்பிங் காஸ்ட்கோ போவோம் வால்நட்,  திராட்சை, முந்திரி எல்லாம் கடையில சாம்பிள் காசே கொடுக்காம எடுத்து சாப்பிடலாம், யாரும்  ஒண்ணும் சொல்லமாட்டான். ஒரு சட்டை வாங்கினேன்னு வச்சுக்கோ ஒரு மாசம் போட்டுண்டு திருப்பி கொடுத்தாக் கூட கடைக்காரன் வாங்கிப்பான்.. நம்மூர் மாதிரி பொல்லாத்தனமும் போக்கிரித்தனமும்  கிடையாது, பீப்பிள் ட்ரஸ்ட் பீப்பிள்.. இங்க பண்ணுவானா, பென்ஷன் வாங்கறதுக்கு வருஷா வருஷம்  நான் உயிரோடுதான் இருக்கேன்னு நேர்ல  போய் சொல்லிட்டு வரணும்.. என்ன சிஸ்டமோ.. நம்மூர்  மாதிரி ஒவ்வொண்ணுலயும் கரப்ஷன் இல்லை, அதான் பொங்கி பொழிஞ்சிண்டு ஓஹோன்னு  இருக்கான்.         

சீனு நியூ ஜெர்சி எப்படி இருந்தது ? ஜெர்சி கவுஸ் நிறையா பாத்தேளா?

நான் கிளம்பும்போதே நல்ல குளிர் வந்துடுத்து..  நிறைய குஜராத்திஸ் தான். மெட்றாஸ்ல என்ன  கிடைக்கறதோ, அத்தனையும் 'படேல்ஸ்'ல வாங்கிடலாம். இந்த வருஷம் கொலுப்படியே வந்துடுத்தே..  நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயர் பார்த்துண்டே இருக்கலாம்.. அந்த நியூ யார்க் சென்ட்ரல் இருக்கு பார் ,  எவ்வளவு பெரிசுப்பா, பிரமிப்பு தான். நான் எல்லாத்துக்கும் என் பொண்ணு மாப்பிள்ளையை எதிர்பார்க்க  மாட்டேன், பஸ்ஸ பிடிப்பேன் மெட்ரோபார்க் வந்து ட்ரைன் பிடிச்சு எல்லா இடத்துக்கும் போயிட்டு  வந்துருவேன்..சனி, ஞாயிறு பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க கூட்டிண்டு போறாளோ போவோம். கனடா போயி நயாகரா பாத்தோம், அப்பப்பா.. பிரிட்ஜ் வாட்டர் கோயில் பார்க்கணுமே, பிட்ஸ்பர்க்ல  பெருமாள் கோவில் அப்படியே திருப்பதிதான், எல்லாருக்கும் ஃபர்ஸ்ட்  க்ளாஸ் சாப்பாடு ஃப்ரீ. கல்ச்சர்னா  அங்க தான். இங்கயும் இருக்காளே!!   என் பேத்தி எப்படி பாடறா தெரியுமோ. பியானோ வேற  வாசிக்கறா.தியாகராஜ  உத்சவம் பிரமாதமா நடத்தறா.. உன் பொண்ணும் கத்துண்டு இருந்தாளே,  வர்ணம் வந்துட்டாளா?

இல்லை அங்கிள் , கீதம் தான் வந்திருக்கா..
 
இன்னும் அவன்ட்ட தான் போறாளா ? அந்த மனுஷன் படு ஓ.பி ஆச்சே... அமெரிக்காவுல ரொம்ப சின்ஸியர்ப்பா இருபது டாலரை 
வாங்கிண்டாலும், சிரத்தையா சொல்லி கொடுக்கறா. சாஸ்திரிகள் கூட கிரஹப்பிரவேசம் எவ்வளவு  ஸ்ரத்தையா பண்ணி வைக்கிறாங்கற.. இங்க மாதிரியா, மஹாளய பக்ஷத்துக்கு ஐநூறு வாங்கிண்டு பாதி  நேரம் போன் பேசிண்டே இருக்கா?..

சீனு, உங்க பொண்ணு வாங்கியிருக்கிறது சிங்கிள் ஃபேமிலியா?

இல்ல சார், ரோ ஹவுஸ் தான்..

கௌசல்யாவுது சிங்கிள் ஃபேமிலி.. என் மாப்பிள்ளை ஐ ஐ டி தெரியுமோல்யோ ?. அங்க போய் வேற யேல் யூனிவர்சிட்டில மேல படிச்சார்..

ஆமாம், முன்னமே  சொல்லியிருக்கேள்.     

உங்க போன் தான் அடிக்கறதுன்னு நினைக்கிறேன்..

அட ஆமாம்..  கொஞ்சம்  இருங்கோ வந்துடறேன்..

(அவர் வீட்டு மாப்பிள்ளை வெறும் பி காம் தான், கம்ப்யூட்டர் டிப்ளமா அது  இதுன்னு படிச்சு அங்கே போய் செட்டில் ஆயிட்டார்..எங்காத்து மாப்பிள்ளைக்கு ஒரு கோடிக்கும் மேலே 
சம்பளம்..நம்மூர் ரூபாயில் சொன்னேன். மெரிட்டுக்கு அந்த ஊர்ல மதிப்பு கொடுக்கறாம்ப்பா,) 

ஐந்து  வருடம் கழித்து
----------------------------------
என்ன அங்கிள் திருச்சிக்கு போற மாதிரி பொசுக்கு  பொசுக்குன்னு அமேரிக்கா போயிட்டு வந்திட்டு இருக்கீங்களே, எப்படி இருந்தது ட்ரிப்பு ?

ஊர்  நல்லாத்தான் இருக்கு. இருபது மணி நேரம் பிளேன் பிரயாணம் உட்கார முடியலப்பா. கால் முழுக்க வீங்கிடுத்து.. அவா இரண்டு பேரும் ஆபீசுக்கு போயிடறாளா. வீட்டுக்குள்ள ஜெயில் தான்.. என்  மூஞ்சியை இவ பாத்துண்டு அவ மூஞ்சிய நான் பார்த்துண்டு எவ்வளவு நேரம் தான் சன் டி வியை பாத்துண்டு இருக்கறது?  திருப்பி திருப்பி அதே மால், திருப்பி அதே குப்பைகளை வாங்கிண்டு பேஸ்மெண்ட் கராஜுல எல்லா குப்பையையும் பிரிச்சு. போட்டுண்டு .ஆச்சுடியம்மா  நான்  சொல்லிடப்போறேன்..  உன்  குழந்தையை ஓரளவு பார்த்துண்டாச்சு .

எட்டு வருடம் கழித்து
--------------------------------
மறுபடியும் மறுபடியும் வான்னா பக்கத்துலயா இருக்கு.. அவங்களை வேணா  இந்தியாவுக்கு வர சொல்லுங்கோ. திருப்பி திருப்பி அதே வால்மார்ட்டும், காஸ்ட்கோவும், காருக்குள்ளயும், வீட்டுக்குள்ளயும்  அடைஞ்சு கிடந்தது, குளிரோடையும் ஐஸோடையும் ஷூவை  போட்டுண்டு போராடி போறும்ப்பா..என்னால வர முடியாது. கஷ்டமோ கிஷ்டமோ ஒரு வத்த குழம்போ, மிளகுரஸமோ நம்மால  முடிஞ்சதை சமைச்சு அக்கம் பக்கம் நாலு பேரிடம் பேசிண்டு , கோயிலுக்கு  காலாற நடந்து போயிட்டு வந்தா தான் எனக்கு நிம்மதி. அரசியலோ, கரப்ஷனோ, கரெண்ட் கட்டோ  என்னவேணா இருந்துட்டு போகட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருங்க சாமிகளா!!

நன்றி: ஆர்  ஸ்வாமிநாதன்
---------------------------------------
படித்ததில் உணர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.10.18

தாமிரபரணி புஷ்கர் விழா!


தாமிரபரணி புஷ்கர் விழா!

சிருங்கேரி ஆச்சார்யர்கள் மஹா தாமிரபரணி புஷ்கர் விழாவிற்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்  அனைத்து படித்துறைகளையும் பல கோடி ரூபாய் செலவு செய்து மிக பிரமாண்டமாக ஏற்பாட்டை இரவு  பகலாக ஆச்சார்யாள் தலைமையில் ஒரு குழு அசுர வேகத்தில் வேளைகளில் செய்து கொண்டு  இருக்கிறார்கள்.

அனைத்து படித்துறைகளையும் சுத்தம் செய்து பக்தர்கள்
ஸ்நானம் செய்து விட்டு போக  மிக சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பல இடங்களில் அன்னதானம், வஸ்திர விநியோகம்,
சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு என களைகட்ட ஆரம்பித்து விட்டது
என்றே சொல்ல  வேண்டும்.

அவ்வளவு சிறப்பாக கடந்த ஐந்து, ஆறுமாதமாக சிறப்பாக
தங்களது பணிகளை  செய்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அலங்காரம், இரண்டு பெரியவர்களின் புகைப்பட பேனர்கள்
என்று  பட்டையை கிளப்பறார்கள் சிருங்கேரி பெராயவர்களின் பக்தர்கள் மிகவும் அருமையான ஏற்பாட்டை  செய்து வருகிறார்கள்.

இப்போது பார்பதற்கே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறதென்றால் விழா நெருங்க நெருங்க இன்னும்
பிரமிப்பாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இவை  அனைத்தும் சிருங்கேரி பெராயவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம்  இப்படி இருக்க
மறுபுறம் நாம் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த புஷ்கரத்தில்
நாம் இதுவரை என்ன செய்தோம்? இனி என்ன செய்ய
போகிறோம்?  என்று தெரியவில்லை.

கர்நாடகாவில் இருந்து சிருங்கேரி  பெரியவர்கள் மற்றும் அவாளோட பக்தர்கள் நம் தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தாமிரபரணி புஷ்கரில்  இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு
செய்கிறார்கள் நாம் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருக்கிறோம்.

வெட்கமும், வேதனையையும் பட வேண்டும்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்  மஹா தாமிரபரணி
புஷ்கர் அழைப்பிதழ். அனைவரும் இந்த ஆண்டு அக்டோபர்
பதினொன்றாம் தேதி  முதல் இருபத்தி மூன்றாம் வேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் மஹா புஷ்கர விழாவில் கலந்து 
கொள்வோம்.

இந்த தாமிரபரணி புஷ்கரில் ஏராளமான சாதுக்கள்,
ஆச்சார்யர்கள், மஹான்கள், துறவிகள், ஆதீன மடாதிபதிகள் போன்ற ஏராளமானவர்கள் ஸ்நானம் செய்ய உள்ளனர். இதில் நாமும் கலந்து  கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு புனித
நீராடி நம் பாபங்களை போக்கி புண்ணியத்தை அடைய  தாமிரபரணியில் ஸ்நானம் செய்ய வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
-----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.10.18

ஆலயம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்!!!


ஆலயம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!