கோவை வாத்தியார் சுப்பைய்யாவுக்கு ஒரு கேள்வி! சோதிடம் - கிரகங்கள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள் அல்லவா...அது சம்பந்தமான ஒரு கேள்வி..
கேட்டவர் எனது அன்பிற்கு உரிய நண்பர் செந்தழல் ரவி: சுட்டி இங்கே!
இப்போது எனது பதில். நீல நீறத்தில் உள்ள எழுத்துக்கள் அவருடையது.
சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் எனது பதில்
-----------------------------------------------------------------------
///////சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...
ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா,
பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி
ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...
(ஒரு தமிழ் வலைப்பதிவர் நாசாவுல பணியாற்றுகிறார், டவுட் இருந்தால்
அவரை கேட்டுக்கொள்ளலாம்...)/////
நீங்கள் சொல்கின்ற கோள்களையெல்லாம் L & T மாதிரிக் கம்பெனிக்காரர்கள்
செய்து கொண்டு போய் வானத்தில் வைத்ததல்ல - இப்போது கண்டுபிடிப்பதற்கு!
வானத்தில் உள்ள அத்தனை கோள்களுமே காலம் காலமாக இருப்பதுதான்.
புதிய விஷயமில்லை!
அவற்றில் எதை எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அவற்றை மட்டுமே கணிக்கிட்டு
நமது ரிஷிகள் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்துவிட்டுப் போனதுதான்
ஜோதிடக் கலை! (ரிஷிகள் என்றால் தெரியுமல்லவா?)
/////இன்னும் கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப்பெறாத விடயங்களை வைத்து வகுப்பறை
நடத்துக்கிறீர்களே ? இவற்றில் எல்லாம் மருந்துக்கு கூட பகுத்தறிவு என்பதே இல்லையே?
யோசிக்கமாட்டீங்களா வாத்யாரே?////
சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அல்லவா உப்பிருக்கிறதா, உரைப்பிருக்கிறதா?
அல்லது இனிப்பிருக்கிறதா? என்று தெரியும்? ஜோதிடத்தில் இதுவரை 93 பதிவுகள்
எழுதியிருக்கிறேன்! விக்கிபீடியாவில் இருந்து பல விஞ்ஞான சான்றுகளைக்
கொடுத்துள்ளேன். நீங்கள் எத்தனை பதிவுகளைப் படித்திருக்கிறீர்கள்?
வகுப்பறை மட்டும் நடத்தவில்லை. பல்சுவை அரங்கமும் நடத்துகிறேன். அதில்
இதுவரை 293 பதிவுகளை எழுதியிருக்கிறேன். நட்சத்திர வாரத்தில் 33 பதிவுகள்
எழுதியிருக்கிறேன் அது தெரியுமல்லவா உங்களுக்கு?
////////பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு
கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும்
வேண்டுமா?///////
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? அதுபோல இருக்கும் முதிர்
கன்னிகளின் லிஸ்ட்டைக் கொடுங்கள். பெண்கள் நல வாரியத்திற்கு அனுப்பி
நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்!
//////வாஸ்து என்ற பெயரில் ஒழுங்கா இருக்க வீட்டை சனிமூலை, சூரிய மூலைன்னு பணக்காரனுங்க
மாத்தினா பரவாயில்லை...நடுத்தரவர்க்கத்துக்காரனும் கையில் இருக்கும் காசை வாஸ்து
மேஸ்திரியிடம் கொடுத்து வீணாகிறார்களே ? அந்த பணத்தை பிள்ளைங்க படிப்பு
செலவுக்கு பயன்படுத்தலாம் என்று பகுத்தறிவோடு ஆலோசனை சொல்வீரா,/////
நான் ஆலோசனை சொன்னால் யார் கேட்பார்கள்? நீங்களே கேட்க மாட்டீர்கள்.
பிறகு நூற்றுக் கணக்கான தந்தைமார்கள் அல்லது நீங்கள் சொல்வதுபோல
ஆயிரக்கணக்கான நடுத்தரவர்க்கத்துக்காரர்கள் எப்படிக்கேட்பார்கள்?
//////////கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன்
ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க?////
கிளி ஜோதிடம் பார்த்தால், வாழ்க்கை மாறிவிடும் என்று யார் சொன்னது? உங்க
கிராமத்துக் கிளி ஜோதிடன் சொன்னானா? ஐந்து ரூபாய்க்கு ஏனடா அலைகிறாய்
என்று நீங்கள் அவனை அல்லவா கேட்டிருக்க வேண்டும்? நாய் கடித்தவனுக்கு ஊசி
போடாமல், கூட வந்தவனுக்கு ஊசி போட்டால் எப்படி? அதாவது சொன்னவனை
அல்லவா நீங்கள் கேட்டிருக்க வேண்டும்? என்னைக் கேட்பது என்ன நியாயம்?
////////ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட்
திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா?///////
கிளி ஜோதிடத்திற்கு சொன்ன பதில்தான் இதற்கும்!
//////சாமியை நம்புறீங்க, அதனால பேயையும் நம்புறீங்க, ராவுல பிஸ்ஸடிக்க போகும்போது
கூட "அய்யோ அங்கன பேய் இருக்கும்" என்று அலறும் சிறுவன் - பிரச்சினை எங்கே
இருக்கிறது ? சாமியிலா, பேயிலா?/////
சாமி,, பேய்,, பிஸ்சடிக்கும்போது வரும் நினைவுகள் என்பது பற்றி எனக்கெப்படித்
தெரியும்? இந்தக் கேள்வியை நீங்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கேட்டால்
சரியான பதில் கிடைக்கும்.
///////பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கரடியாக கத்திக்கினு இருந்தாரே - ஒருத்தர் - மிஸ்டர் பெரியார்...
அவரை பற்றி உங்கள் கருத்து என்ன ? /////
பெரியார் பற்றிச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் ஆசான் கவியரசர்
கண்ணதாசன் பெரியாரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். தேவைப்பட்டால்
அவருடைய புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
Now it is my turn!
உங்களுக்கான ஒரே கேள்வி!
இது நீங்களே எழுதிய பதிவா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததைப்
பதிவிட்டிருக்கிறீர்களா? (உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான்
இந்தக் கேள்வி)
மண்டபத்தில் எழுதிக்கொடுத்தது என்றால் இத்தோடு விட்டு விடுகிறேன்!
இல்லையென்றால் சொல்லுங்கள். பகுத்து அறியும் அறிவை வைத்து என் மனதில்
நிறையச் சந்தேகங்கள் உள்ளன. அவற்றைப் பத்துப் பத்தாகப் பிரித்து, பதிவுகளில்
எழுதி உங்களிடம் கேட்டு , அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் சந்தேகங்களைப்
போக்கிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
அன்புடன்
சுப்பையா வாத்தி (யார்)
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
8.7.08
4.7.08
ஜோதிடம்: என்னதான் ரகசியமோ இதயத்திலே!

இன்று பாடம் மட்டுமே! அரட்டைக் கச்சேரி, கதை எதுவும் இல்லை!
தேனில்லாத மருந்து;. எப்படியிருக்கிறது என்று பாருங்கள்!
முன் பதிவில் ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார். கதை அதிகமாகி
விட்டதகவும், பாடம் குறைந்துவிட்டதாகவும். அவருக்கு இந்தப் பதிவு
சமர்ப்பணம்!
----------------------------------------------------------------
1. ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை முறையே பூரவ
புண்ணியம், குழந்தைபாக்கியம், நுண்ணறிவு!
2. பூர்வபுண்ணியம் என்பது முன் பிறவியில் நாம் செய்த நன்மைதீமை
களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் சான்றிதழ். அந்த சான்றிதழை
வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை
உள்ளதாக அமையும்!
3. நிறைய ஜோதிடர்கள் இங்கேதான் சறுக்கிவிடுவார்கள். பூர்வ ஜென்
மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது.
ஓரளவிற்குச் சொல்லலாம்!
4 இந்த 5ஆம் வீட்டிற்குக் காரகன் (authority) குரு. அவர் அந்த 5ஆம்
வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன்
மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர்
(காரகன் குரு) பெற்றுத்தருவார்.
5. 1ஆம் வீடு லக்கினம், 5 ஆம் வீடு அவனுடைய குழந்தை. 9ஆம்
வீடு அவனுடைய (ஜாதகனுடைய) தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து
5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது
9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!! என்ன அற்புதம் பாருங்கள்!
6. ஐந்தாம் வீடு எண்ணங்களையும், உணர்வுகளையும் குறிப்பதாகவும்
இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல அமைப்புக்களைப் பெற வில்லை என்றால்
ஜாதகன் வில்லங்கப் பார்ட்டி அல்லது டென்சன் பார்ட்டி!
7. ஐந்தாம் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று.
ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் காரகன் குரு.
அவைகள் நன்றாக இருந்தால் நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர,
கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.
8. அடுத்து உபரியாகப் பார்க்க வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து
அமர்ந்திருக்கும் கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந்
திருக்கும் கிரகம், அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை
களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!
9. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் இயற்கையாகவே நேர்மையான வராக இருப்
பார். அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க முடியாது
ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர்
நேர்மை தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!
10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும்.
ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன
உறுதியுடன் இருப்பார்கள்..
ஐந்தாம் வீடு மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று
எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்! (அப்பா, தலைப்பைப்
பிடித்து விட்டேன்!:_)))))
11. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி
ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.
12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த
உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக
இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
வைத்து இது மாறுபடும் (இது பின்னூட்டத்தில் வருபவர்களுக்காக
முன்பே சொல்லி வைக்கிறேன்)
13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்
14. மகர ராசியை ஐந்தாம் வீடாகப் பெற்றவர்கள் பொதுவாக டென்சனா
கும் ஆசாமிகள் Highly pessimistic and takes life seriously கரணம்
அதிபதி சனி!
15. கன்னி ராசியை ஐந்தாம் வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும்
மகர ராசிகளின் பலன்கள் கலவையாக இருக்கும். காரணம் அதிபதி புதன்
அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடு
வார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை களைப்
பொறுத்து மாறுபடும்!
16. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள்
அடுத்த பிரிவினர். They will have different emotional set up. They are concerned
with conduct rather than motive. They are concerned with action rather than
thought or feeling. செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.
17. துலா ராசியை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள் யாதார்த்தமானவர்
கள். More practical people!
18. கும்பராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள். உண்மையான
மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக நம்பலாம்.
19. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
ஆகவே விளக்கம்/ கதை இல்லை!
20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால்
அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்க
கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.
21. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபல
மான Philosopherகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே
இருப்பார்கள். இயற்கையாகவே இந்த அமைப்பைக் கொண்டவர்கள்
தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!
22. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமான
பார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட இவர்கள் ஒன்றைப் பார்த்து
எடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான் சிறந்ததாகவும்
இருக்கும்
23. இந்த அமைப்பினர் தலைமை ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்த
மூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது.
காரணம் அதிபதி சந்திரன்.
24. மீனத்தை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை
மற்றும் செயலை உடையவர்கள். அவர்களுடைய மன ஒட்டத்தை யாராலும்
ஊகிக்க முடியாது.
25. ஜாதகத்தில் லக்கினம், ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம்
வீடும் அதி முக்கியமானது. அத்னால அவை மூன்றிற்கும் திரிகோணம்
எனப்படும் முதல் நிலை அந்தஸ்து (status) கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் வீட்டைவைத்து இங்கே குறிப்பிட்டுள்ள யாவுமே பொது விதிகள்
ஆகும். மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
அவற்றை அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)
வாழ்க வளமுடன்!
லேபிள்கள்:
Astrology,
classroom,
Lessons 91 - 100
2.7.08
அடுத்த பிறவியில் என்னவாகப் பிறந்தான்?
ஆரம்ப காலங்களில் மிகவும் ஆர்வமாக எல்லோருடனும் ஜோதிடத்தை சிலாகித்துப்
பேசிக் கொண்டிருப்பேன். ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு அதைக் குறைத்துக் கொண்டு
விட்டேன். அதாவது அத்தியாவசியத் தேவையின்றி வாயைத்திறக்காமல் இருப்பேன்.
வருகிறவர்களின் உபத்திரவம்தான் காரணம். என்னுடைய நேரத்தை உறிஞ்சிக் குடித்து
விட்டுப்போய் விடுவார்கள்.அதிலும் காசு பணம் இல்லாமல் இலவசமாகப் பார்த்துச்
சொன்னதால். வருகிறவர்கள் என்னை இந்திரன், சந்திரன் என்று புகழ்வார்கள். ஒரு தர்ம
காரியத்தை செய்து கொண்டிருப்பதாகவும், நான் மேலே போகும் போது ஐந்தாறு லாரிலோடு
புண்ணியம் கூடவே வரும் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.
சொல்லிவிட்டுப் போன கையோடு, அவர்களுக்குத் தெரிந்த இரண்டு பேரை அனுப்பி
வைப்பார்கள். அந்த ஆசாமிகளும் பவ்வியமாகப் போனில் பேசுவார்கள்
”சார், உங்களைப் பற்றி உங்கள் நண்பர் வைத்தியநாதன் பிரமாதமாகச் சொன்னார்.
உங்களைப் பார்க்க வேண்டும் எப்போது ஃப்ரீயாக இருப்பீர்கள்?”
“என்ன விஷயம்?”
“ச்சும்மா கர்ட்டஸி கால். பத்து நிமிடமித்திற்கு மேல் ஆகாது!”
வேறு என்ன செய்வது?
நண்பருக்காக அந்த ஆசாமியை வர அனுமதிப்பேன்.
வந்த பிறகுதான் வம்பு ஆரம்பமாகும். வந்த ஆசாமி கழுத்துமேல் ஏறி உட்கார்ந்து
கொண்டு விடுவார். ஏறி உட்கார்ந்தது மட்டுமல்ல இறங்கச் சொன்னால், ஆயிரம் ப்ளீஸ்
போட்டு, சீரியலில் வரும் நடிகைகள் போலக் கண் கலங்கி வந்த காரியத்தைச்
சாதிக்காமல் போகமாட்டார்.
பரிதாபப்பட்டு அவருடைய ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால், கூட்டெழுத்தில் ஒரு
பழைய பஞ்சாங்க ஜோதிடர் அந்தக் காலத்தில் எழுதிக் கொடுத்த ஜாதகமாக இருக்கும்.
எழுத்துக்கள் ஒன்றும் புரியாது எல்லாப் பக்கங்களிலும் மஞ்சள் மட்டும் அம்சமாகத் தடவப்பட்டிருக்கும்.பரல்கள்.மாந்தியின் நிலைமை போன்ற முக்கியக் குறிப்புக்கள்
இருக்காது!
நான் சொல்லும் கதைகள் 1990 - 1995 கால கட்டங்களில் நடந்தவைகளாகும்.
அப்போது கணினியில் ஜாதகம் கணிக்கும் வசதி எல்லாம் கிடையாது.
நான் உடனே என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தொகுப்பு நூலை எடுத்து, அந்த ஜாதகத்
தைப் பரிசீலனை செய்வேன். 1921 முதல் 1991 உள்ள 70 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கத்
தொகுப்பு நூல் அது. காலசந்திப்புப் பிறப்பா, நட்சத்திரம் சரியாகக் குறிக்கப்பாட்டு
ள்ளதா, மற்ற கிரகங்களும் ஒழுங்காகக் குறிப்பிடப் பட்டுள்ளதா என்று பார்ப்பேன்.
பிறகு அந்த ஜாதகத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தசா இருப்பில் இருந்து அடுத்தடுத்துக்
கடந்துபோன தசா புத்திகளைக் கணக்கிட்டு அன்றைய தேதிவரை வந்து நடப்பு
தசா புத்திவரை குறிப்பெடுத்துக் கொள்வேன்.
பிறகுதான் ஆட்டம் ஆரம்பம் ஆகும். வந்தவர் பெளன்சராகப் போடுவார்.
உதாரணத்திற்கு ஒரு நிகழ்வைச் சொல்கிறேன் பாருங்கள்:
“உங்கள் பிரச்சினை என்ன வென்று சொல்லுங்கள்”
“நீங்கள் இதுவரை குறித்ததை வைத்து பிரச்சினை என்னவென்று சொல்ல முடியாதா?”
“முடியாது. மருத்துவரிடம் போய் சட்டையைக்கூடக் கழற்றாமல், என் உடம்பில் என்ன
பிரச்சினை இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் எப்படிச் சொல்வார்?
Scribbling Pad or Letter Headல் Full Body Scan, Blood & Urine Test, EGC Test என்று
எழுதிக்கொடுத்து உங்களுக்கு ஒரு ஆறாயிரம் ரூபாய்க்கு செலவு வைத்துத் திருப்பி
அனுப்பி விடுவார். உடலில் பிரச்சினை என்றால் தலைவலி, வயிற்று வலியில் இருந்து
கான்சர் வரை நூறு பிரச்சினைகளையாவது பட்டியல் இடலாம். அது போலத்தான்
இதுவும். பிரச்சினையைச் சொன்னால்தான் இதில் அது சம்பந்தமான Planetary
Combinationsகளை வைத்துப் பார்க்கமுடியும்.”
“சாரி சார், ஒரு ஆர்வத்தில் தெரியாமல் கேட்டுவிட்டேன். நான் வேலை பார்க்கும்
அலுவலகத்தில் ஒரு தவறான despatchஆல் கம்பெனிக்கு சில லட்சங்கள் நஷ்டம்
ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் காரணமல்ல.எனக்குக் கீழே இருக்கும் உதவியாளர்
களால் ஏற்பட்டுவிட்டது. இப்பொது எனக்கும் சேர்த்து சார்ஜ்சீட் கொடுத்துவிட்டார்கள்.
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிவு எப்படி வேண்டுமென்றாலும் ஆகலாம்.
அதிக பட்சம் அவர்கள் வேலையைவிட்டு என்னை அனுப்பி விடலாம். அல்லது ஒரு
வார்னிங் மட்டும் கொடுத்து வேலையிலே இருக்கச் சொல்லலாம். அல்லது பதவி
இறக்கம் செய்து விடலாம். என்ன நடக்குமோ என்று கவலையாக இருக்கிறது.
நீங்கள் பார்த்து ைதரியமாக ஒரு வார்த்தை சொன்னால் போதும்!”
பதிவின் நீளம் கருதி இங்கே கட் சொல்லி விட்டு அடுத்த ஸீனுக்குப் போகிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு அவர் பார்க்கும் வேலையில் பிரச்சினை என்றால் முதல் காரணம்
பாதக ஸ்தான அதிபதிகளின் தசாபுக்தி காரணமாக இருக்கும். அதோடு கர்மகாரகனின்
கோச்சாரம் (Transit Saturn) காரணமாக இருக்கும். பெரும்பாலும் இவைகள்தான்
காரணமாக இருக்கும். சில வேறு அமைப்புக்களும் உண்டு. காரணங்களும் உண்டு.
அவைகள் சில்லரை/உபரிக் கணக்கில் வரும் அதை விட்டு விடுவோம்
பாதக ஸ்தானம் = Inimical house, Hidden places, மறைவிடங்கள்! 6ஆம் இடம், 8ஆம்
இடம் & 12ஆம் இடம்
இங்கே Majorஐ மட்டும் பார்ப்போம் Ancillaryஐ விட்டு விடுவோம்.
எந்த ஒரு கேள்விக்குமே அது சம்பந்தப்பட்ட வீட்டை அதற்குரிய லக்கினமாக
எண்ணிக் கொண்டுதான் பரிசீலனை செய்ய வேண்டும்.
பணப்பிரச்சினை என்றால் 2ஆம் வீடு
படிப்பில் பிரச்சினை என்றால் 4ஆம் வீடு.
கடன் அல்லது நோயால் தொல்லை என்றால் 6ஆம் வீடு
வேலை அல்லது தொழிலில் பிரச்சினை என்றால் 10ஆம் வீடு
திருமணத்தில் பிரச்சினை என்றால் 7ஆம் வீடு.
இப்படியாக அதற்குறிய கட்டத்தை ஜாதகத்தின் ஒரிஜினல் லக்கினத்தில் இருந்து
எண்ணிக் குறித்துக் கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்
(இந்த ஆட்டம், பாட்டம் என்ற சொற்கள் எல்லாம் ஒரு சுவைக்காகத்தான்)
வந்த ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். அவருடைய பத்தாம் வீடு ரிஷபம்.கேள்வி வேலை
சம்பந்தப்பட்டது என்பதால் தற்காலிகமாக ரிஷபத்தை லக்கினமாக எடுத்துக் கொண்டு
பரிசீலிக்க வேண்டும். வந்தவருக்கு ரிஷபத்தில் 30 பரல்கள்.பத்தாம் இடத்து அதிபதி
சுக்கிரன் தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கின்றார். இந்தக் காம்பினேஷனால்
அவருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கிறது. கோச்சாரத்தில் எட்டாம் இடத்தில்
தனுசு இராசியில் சனி. 10ஆம் வீட்டிற்கு, அதன் எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம்
செய்யும் போது பல இடையூறுகளை ஏற்படுத்துவார். இடையூறுகளைப் பட்டியல்
இட்டால் மாளாது. ஒரே வார்த்தையில் இடையூறுகள்.அவ்வளவுதான்.
அந்த இரண்டரை ஆண்டு (Transit Saturn - அந்த எட்டில் இருக்கும் காலம்) நடக்கும்
தாசபுத்தி நன்றாக இருந்தால், இடையூறுகளைத் தட்டி விடலாம் - அதாவது சமாளித்து
விடலாம். இல்லை என்றால் அது நம்மைத் தட்டி விடும்.
அவருடைய தசா புத்தி அந்த நேரத்தில் குரு திசையில் சனி புக்தி. அது முடிய 20 நாட்கள்
பாக்கி இருந்தது. அதற்குப் பிறகு, குரு திசையில் புதன் புத்தி. அது நல்லதாக இருக்கும்.
“பொறுமையாக இருங்கள்.இன்னும் ஒரு மாதத்தில் நிலமை சரியாகி விடும். உங்களுக்குப்
பெரிய பாதிப்பு ஒன்றும் வராது” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
அதுபோல்தான் நடந்தது!
வெறும் எச்சரிக்கைக் கடிதத்தோடு அவருடைய வேலை தப்பிப் பிழைத்தது!
இது போன்று பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
--------------------------------------------------------------------------
அடுத்த பிறவியில் என்னவாகப் பிறந்தான்?
உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர்
இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு இருந்தா
லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள்.
அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது
இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது. அவன் பெயர்
சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!.
அதுவா முக்கியம்?
அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக்
குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண்
குழந்தையும் பிறந்தது
எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது?
ஒரே ஒரு குறை இருந்தது.
சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன்
அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை
சந்தோஷப் படுத்தச் சொல்வான். அவளும் மனம் கோணாமல் எப்போது
அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள்.
யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள்
அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான்.
மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள்
எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள்
யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை!
ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி.
மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள்
பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.
அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு
சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது!
அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை!
ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து
வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள்.
அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார்.
அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது!
இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து
எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.
அதை அவள் அவரிடம் சொன்னாள்.
உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன்
ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு,
மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய
ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக்
கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன்
பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா"
என்றார்
அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து
நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு
பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள்.
என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக
ஒலித்தது.
"என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?"
"இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்"
"கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில்
நாம் மறுபடியும் இணவோம்!"
"அதற்கு எவ்வளவு நாளாகும்?"
"யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு
உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன்"
அவள் குளிர்ந்துபோய் விட்டாள். மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது.
உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள்,
ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்:
"அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே?
இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?"
"ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!"
நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்?
வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி
விளையாடுகிறீர்களா?"
"இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான்
முயலாகப் பிறந்துள்ளேன்
--------------------------------------------------------------------------------------
உடனே லாஜிக், சான்று என்று கேட்டு, வேட்டு வைக்க முயலாதீர்கள்.
ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!
அதை யாரும் கேட்டால்தானே?

Subscribe to:
Posts (Atom)