6.12.25

Short Cut Astrology - 6 குறுக்குவழி ஜோதிடம் புகுதி 6

 Short Cut Astrology - 6

 குறுக்குவழி ஜோதிடம் புகுதி 6

 அடுத்து ராசிகளைப் பற்றிப் பார்ப்போம்

 ஜோதிட  ராசிகள் விபரம்

 ஜோதிடத்தின்படி 12 ராசிகள் உள்ளன:

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி,

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,

 இவை சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களும்  மற்ற கிரகங்களும் 

ஆட்சி செய்யும் இடங்கள் ஆகும்,

 மேலும் ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மற்றும் குணாதிசயங்கள்

உள்ளன, அவை தனிப்பட்ட ஜாதகத்தை தீர்மானிக்க உதவுகின்றன.

 12 ராசிகளின் தமிழ் மற்றும்  ஆங்கில பெயர்கள் விபரம்

:மேஷம் (Aries)

ரிஷபம் (Taurus)

மிதுனம் (Gemini)

கடகம் (Cancer)

சிம்மம் (Leo)

கன்னி (Virgo)

துலாம் (Libra)

விருச்சிகம் (Scorpio)

தனுசு (Sagittarius)

மகரம் (Capricorn)

கும்பம் (Aquarius)

மீனம் (Pisces)

ஒவ்வொரு ராசியின் அளவும் 30 டிகிரிகள் 12 ராசிகளின் மொத்த அளவு 360 டிகிரிகள்

வட்ட வடிவில் இருக்கும்

 முதலில் இருப்பது மேஷ ராசி. அது  0 டிகிரியில் துவங்கி 30 டிகிரியில் முடியும்

அடுத்து வரும் ராசிகள் ஒவ்வொன்றிற்கும் 30 டிகிரிகள் தான்                                                                                                                                                                                                                            

 டிகிரி என்பதன் தமிழாக்கம் பாகை

 ஆனால் நாம் நம் வசதிக்காக சதுர வடிவில் அவற்றை எழுதி வைதிருக்கிறோம்/ ஏழுதுகிறோம்                                       

 ராசிகளுக்கு உள்ளடக்கம் உள்ளது அது என்ன என்பதை அடுத்த பாடத்தில் பார்ப்போம்

 அன்புடன் வாத்தியார்

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.12.25

Short Cut Astrology - 5 குறுக்கு வழி ஜோதிடம் - 5




Short Cut Astrology  - 5

குறுக்கு வழி ஜோதிடம் - 5

 அடுத்த பாடம் நட்சத்திரங்களைப் பற்றியது.

 வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு (அசுவினி முதல் ரேவதி வரை)

 ஒவ்வொருவரும் ஒரு நட்சத்திரத்தில் பிறக்கிறார்கள், அது அவர்களின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்

மேலும் அது குணங்கள், பலன்கள், பரிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிப்பதில்

முக்கியப் பங்கு வகிக்கிறது.

 இந்த நட்சத்திரங்கள் ராசிகளுடன் இணைந்து, வாழ்க்கைத் துணை, நண்பர்கள், எதிரிகள்

போன்ற உறவுகளைக் கணிக்கவும் உதவுகின்றன.

 27 நட்சத்திரங்களின் விபரம்

 அசுவினி, பரணி, கார்த்திகை

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை 

புனர்பூசம்பூசம், ஆயில்யம்


 மகம், பூரம், உத்திரம்

அஸ்தம், சித்திரைசுவாதி,

விசாகம் , அனுஷம், கேட்டை ,


 மூலம், பூராடம், உத்திராடம்,

திருவோணம், அவிட்டம்சதயம்,

பூரட்டாதி , உத்திரட்டாதி, ரேவதி


 ஒன்பது ஒன்பதாக 3 பிரிவுகளாகப் பிரித்து மனப்பாடம் செய்யுங்கள்

அதில் ஒரு வசதி இருக்கிறது

 ஒவ்வொரு பிரிவிலும் உள்ள முதல் நட்சத்திரம் ஒரு கிரகத்திற்கு

சொந்தமானது அடுத்தடுத்து வரும் நட்சத்திரம் மற்றும் ஒரு கிரகத்திற்கு

சொந்தமானது. தொடர்ந்து அப்படியே மற்றும் உள்ள கிரகங்களுக்கு சொந்தமாகும்

 

அசுவினி,மகம்,மூலம் ஆகிய 3 நட்சத்திரங்களும் கேதுவிற்கு உரியது

பரணி,பூரம்,பூராடம், ஆகிய 3 நட்சத்திரங்களும் சுக்கிரனுக்கு உரியது

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ஆகிய 3 நட்சத்திரங்களும் சூரியனுக்கு உரியது

ரோகிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய 3 நட்சத்திரங்களும் சந்திரனுக்கு உரியது

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களும் செவ்வாய்க்கு உரியது

திருவாதிரை, சுவாதி, சதயம்,ஆகிய 3 நட்சத்திரங்களும் ராகுவிற்கு உரியது

புனர்பூசம், விசாகம் ,பூரட்டாதி  ஆகிய 3 நட்சத்திரங்களும் குருவிற்கு உரியது

பூசம்,அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களும் சனீஷ்வரனுக்கு உரியது

ஆயில்யம்,கேட்டை ,ரேவதி ஆகிய 3 நட்சத்திரங்களும் புதனுக்கு உரியது

 

இப்படி பிரித்துப் படிப்பதில் என்ன வசதி என்பதை இப்போது சொல்கிறேன்.

 

ஒரு நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு, அது எந்த கிரகத்தின் நட்சத்திரமோ

அந்த கிரகத்தின் மகாதிசைதான் முதல்  திசையாக வரும்.

 

திசைகளைப் பற்றிய செய்திகளை அந்த பாடம் நடத்தும் போது பார்ப்போம்

பொறுத்திருந்து படியுங்கள்

 

அன்புடன்

வாத்தியார்

 

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.12.25

Short Cut Astrology -4 குறுக்குவழி ஜோதிடம்-4


Short Cut Astrology -4

குறுக்குவழி ஜோதிடம்-4

 

 நேற்றைய பாடத்தின் தொடர்ச்சி

 

ராகு & கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் சொந்த வீடும் இல்லை சொந்த நாட்களும் இல்வை என்பதை

முன் பாடத்தில் படித்தோம்

 

ஆனால் தினமும் ராகுவிற்கு ஒன்றரை மணி நேரமும் கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப் பெற்றுள்ளது

 அதை ராகு காலம் என்றும் எம கண்டம் (கேது காலம்) எனறும் சொல்வோம்

 

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் கிரக பலனுக்கு உரிய காலம

அதில் ராகு மற்றும் கேதுவிற்கு 3  மணிநேரம் கழித்தால் மீதம் உள்ள 9 மணி நேரம்தான் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு உரிய கிரகத்திற்கு கிடைக்கும்

 

ராகுவும் கேதுவும் தீய கிரகங்கள்

அவர்களுடைய காலத்தில் சுப காரியங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது

 

நாள்   -- ராகு காலம்

திங்கள்        07:30 - 09:00

செவ்வாய்     15:00 - 16:30

புதன்                   12:00 - 13:30

வியாழன்     13:30 - 15:00

வெள்ளி      10:30 - 12:00

சனி                     09:00 - 10:30

ஞாயிறு      16:30 - 18:00

 

கேது காலத்தின் நேரம்:

இது ராகு காலத்திற்குப் பிறகு வரும் நேரமாகும். ராகு காலம் காலை

6 -7:30 மணி எனறால்  அதற்கு அடுத்து 6 மணி நேரம் கழித்து வரும் 1.5 மணி நேரம் கேது காலம் ஆகும்.

உதாரணமாக, காலை 7.30 முதல் 9 மணி வரை ராகு காலம் என்றால், மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை

கேது காலம் இருக்கும்.

 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.12.25

Short cut Astrology -3



சிவமயம்

 

Short cut Astrology - 3

முதலில் அடிப்படைப் பாடங்கள்

Basic Lessons

அடிப்படை் பாடங்கள  தெரிந்தவர்ள் மீண்டும் ஒரு முறை படியுங்ஙள்

தவறில்லை

புது முகங்கள் கவனமாகப் படித்து மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்

1 கிரகங்கள் -Planets

சூரியன்

சந்திரன்

(இவை இரணாடும் அரச கிரகங்கள்)

செவ்வாய்

புதன்

வியாழன் (குரு,)

வெள்ளி

(சுக்கிரன்)

சனி

ராகு

கேது

மொத்தம் 9 கோள்கள்/கிரகங்கள்

நவ கிரகங்கள் என்போம்

 ------------------

1 சூரியனை வைத்துத்தான் - ஞாயிற்றுக் கிழமை (Sun = Sunday)

2 சந்திரனை வைத்து திங்கட் கிழமை (Moon = Monday)

3 செவ்வாய் 4 புதன், 5 குரு, 6 சுக்கிரன், 7 சனி ஆகியவற்றை வைத்துத்தான்

மற்ற 5 கிழமைகளூம்

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை

இந்த ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடுகளும் உண்டு, காரகத்துவமும் உண்டு.

 

"காரகத்துவம்" என்பது ஜோதிடத்தின்படி, ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்தையும்,

அது குறிக்கும் செயல்களையும், பொருட்களையும் குறிக்கிறது.

 

உதாரணமாக, சூரியன் தந்தை, அரசு, புகழ் போன்றவற்றின் காரகத்துவம் ஆகும்,

சந்திரன் மனம், தாய், உடல் போன்றவற்றின் காரகத்துவம் ஆகும்.

கிரகங்களின் காரகத்துவத்தை புரிந்துகொள்வது, தனிமனிதர்களின் வாழ்வில்

 நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவும்.

கிரக காரகத்துவத்திற்கான சில உதாரணங்கள்:

 

சூரியன்: தந்தை, அரசு, அதிகாரம், ஆன்மா, புகழ்

சந்திரன்: தாய், மனம், உடல், உணர்ச்சிகள்

செவ்வாய்: பூமி, சகோதரர்கள், தைரியம், ஆற்றல்

புதன்: புத்தி, கல்வி, வியாபாரம், பேச்சுத்திறன்

குரு: அறிவு, செல்வம், குரு, குழந்தைகள், ஆசிரியர்

சுக்கிரன்: மனைவி, வாகனம், ஆடம்பரம், அழகு, கலை

சனி: கஷ்டங்கள், உழைப்பு, ஆயுள், நீதி

ராகு/கேது: எதிர்ரகசியம்

----------------------------------------------------------------

ராகு மற்றும் கேது கியவற்றிற்கு சொந்த வீடும் கிடையாது சொந்த கிழ்மைகளும் கிடையாது

ஆனால் அவற்றிற்காக தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கீடு உண்டு அவற்றை

ராகு காலம் கேது காலம் என்போம்

அதன் விபரத்தை இங்கேயே இப்போதே சொன்னால் ஓவர் டோஸ் ஆகி விடும்

ஆகவே அடுத்த பாடத்தில் அதைப் பார்ப்போம்

 

அன்புடன்

வாத்தியார்



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!