26.2.21

Astrology: ஜோதிட ம்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது?


Astrology: ஜோதிட ம்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் (அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்

ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.? 

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!! 

கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் சிக்கியதோடு. பாபகத்தாரி யோகத்திலும் சிக்கி கெட்டுப்போய் உள்ளார். ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.

இது அல்ப ஆயுசு ஜாதகம். அல்ப ஆயுசிற்கான எல்லா அம்சங்களும் ஜாதகத்தில் உள்ளன.

1. இரண்டு கேந்திரங்களில் தீய கிரகங்கள். 4ல் சனி, 7ல் செவ்வாய்.

2. லக்கினாதிபதியைவிட சனீஷ்வரன் வலுவாக (strong) உள்ளான்

3. சனியின் பார்வை லக்கினத்தின் மேல், அத்துடன் லக்கினாதிபதியின் மேல். சனி உச்சம் பெற்றுள்ளான்

4. செவ்வாயின் பார்வையும் லக்கினத்தின் மேல்.

5. எந்த சுபகிரகமும் கை கொடுத்து உதவக்கூடிய நிலையில் இல்லை. சந்திரன், குரு, சுக்கிரன், புதன் என்று நான்கு சுபக்கிரகங்களும் ஆறாம் வீட்டில் மொத்தமாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவை அனைத்திற்கும் பாபகர்த்தாரி யோகம் வேறு.

ஆகவே ஜாதகர் அல்ப ஆயுளில் போய்ச் சேர்ந்து விட்டார் (இறைவனடிக்குத்தான்

கேள்விக்குரிய ஜாதகம்:


அன்புடன்

வாத்தியார்

------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.2.21

வாத்தியாரின் அடுத்த புத்தகம்!



வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

வாத்தியாரின் அடுத்த புத்தகம் அச்சாகி வந்துவிட்டது
குறைந்த பிரதிகளே அச்சிடப்பெற்றுள்ளது
தேவைப் படுவோர் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
மின்னஞ்சல் முகவரி
umayalpathippagam@gmail.com

அன்புடன்
வாத்தியார்
============================================== 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: ஜோதிடம்: ராஜா கைய வச்சா ராங்காகிப் போனதேன்?


Astrology: ஜோதிடம்: ராஜா கைய வச்சா ராங்காகிப் போனதேன்? 

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!! 

இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!! 

அன்பர் கடக லக்கினக்காரர். லக்கினநாதன் சந்திரன் பாக்கியநாதன் (9th Lord) குருவுடன் சேர்ந்து 2ம் வீட்டில் சிறப்பாக உள்ளார். ஆனால் 10ம் வீட்டுக்காரரான செவ்வாய் ராகுவுடன் சேந்து கெட்டுப் போய் உள்ளார். 7 மற்றும் 8ஆம் இடத்துகாரர் சனீஷ்வரனும் ராகுவுடன் சேர்ந்து கெட்டுப் போயிருக்கிறார்

பிறப்பில் ஒரு ஆண்டு 7 மாதங்கள் இருந்த சுக்கிர திசை, பிறகு சூரியன் (6) சந்திரன் (10) செவ்வாய் (7) ஆகிய தசா மாற்றங்களுகுப் பிறகு அவர் வேலைக்குச் சேர்ந்த உடனேயே ராகு மகா திசை ஆரம்பித்து விட்டது. துவங்கியதில் இருந்தே அவருக்கு செக் வைத்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் அவருக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ஜாதகப்படி அவர் பட்ட வேதனைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்

அதற்கு அடுத்து வந்த குரு மகாதிசையில் அவருக்கு எல்லாம் கூடி வந்தது. கர்மகாரகன் சனீஷ்வரனின் பார்வை குருவின் மேல் விழுவதைக் கவனியுங்கள்

தசா புத்திகளின் முக்கியத்துவம் அதுதான். நல்ல மகா திசை நடக்கும்காலம்தான் எல்லாம் நன்மையாக இருக்கும்

கேள்விக்குரிய ஜாதகம் கீழே உள்ளது

அன்புடன்

வாத்தியார்

-----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.21

சிறுகதை: என்ன சொன்னார் பரமசிவன்?


சிறுகதை: என்ன சொன்னார் பரமசிவன்? 

கங்கை பிரவாகம் எடுத்து இரண்டு பக்கக் கரைகளையும் தொட்டவாறு அழகாக ஓடிக்கொண்டிருந்தது. 

ரம்மியமாக இருந்த வடது பக்கக் கரையில் பரமசிவன் தன் தேவியுடன் பேசிவாறு நடந்து கொண்டிருந்தார். நதியின் அழகில் மயங்கிய பார்வதி தேவி, தன் அன்புக் கணவரிடம் அதைப் பற்றிப் பேசிவாறு நடந்தார். 

"நாதா, இந்த நதியின் சிறப்பு என்ன?" 

"உலகில் புண்ணியம் வாய்ந்த நதி இந்த நதிதான். அதனாலதான் இந்த நதிக்கு என் சிரசில் இடம் கொடுத்திருக்கிறேன் இந்த நதியில் குளித்தால் செய்த பாவங்கள் போகும்" 

"பாவங்கள் போனால் என்ன ஆகும்?" என்று தேவி ஒன்றும் அறியாதவர் போலக் கேட்க, சிவனார் தொடர்ந்தார். 

"பாவங்கள் நீங்கப் பெற்றவன் சொர்க்கத்திற்கு வருவான்" 

"அப்படியென்றால், இந்த நதியில் முங்கிக் குளித்தவர்கள் அத்தனை பேரும் சொர்க்கத்திற்கு வருவார்களா?" 

"அத்தனை பேரும் வரமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்" 

"முரண்பாடாக இருக்கிறதே நாதா! இதில் குளித்தால் பாவம் போகும் என்றால். குளித்த அத்தனை பேருக்கும் பாவங்கள் போக வேண்டும். போன அத்தனை பேர்களும் சொர்க்கத்திற்கு வரவேண்டுமல்லவா? சிலர் என்பது ஏன்? சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்" 

"ஆகா, விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு நாம் இருவரும் ஒரு சிறு நாடகம் நடத்த வேண்டும். ஒரு நொடியில் நான் வயோதிகம் அடைந்த தள்ளாத முதியவனாகவும், நீ அந்த முதியவரின் மனைவியாகவும் உருமாற வேண்டும். மாறியவுடன் நாம் இருவரும் அடுத்த கணம் காசி நகரில் இருப்போம். அங்கே நான் இறந்ததுபோல பேச்சு மூச்சில்லாமல் கிடப்பேன். என்னை மடியில் கிடத்திக் கொண்டு நீ அழுது குரல் கொடுக்க வேண்டும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்!

நாடகத்தின் முடிவில் நீ கேட்ட கேள்விக்குத் தகுந்த விடை கிடைக்கும்" 

"அப்படியே ஆகட்டும் நாதா!" 

                              &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

காசி நகரம். கங்கைக் கரையில் பிரதான இடம். படித்துறையின் அருகே மக்கள் கூடும் இடம் 

கிழவர் வேடத்தில் இருந்த சிவபெருமான் இறந்ததுபோலக் கிடந்தார் தேவியார் அவரை மடியில் கிடத்திக் கொண்டு குரல் கொடுத்து அழுது கண்ணீர் விட கூட்டம் சேர்ந்து விட்டது. 

கூட்டத்தினர் கேட்க, பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் விவரித்தார்.                  

 "என் கணவர் பெரிய ரிஷி. சுவாமி தரிசனம் பண்ண வந்த இடத்தில் இப்படி இறந்து விட்டார். அவருக்கு இறுதிக் காரியம் செய்ய வேண்டும்!" 

"அதற்கு ஏன் விசனம்? ஆளுக்கு ஒரு காசு தருகிறோம். இங்கே நிற்பவர்களில் பாதிப்பேர்கள் கொடுத்தால் கூட ஐம்பதுகாசு சேர்ந்து விடும்.கவலைப் படாதீர்கள் தாயே!" என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்த மற்றவர்களும் ஆமாம் என்று குரல் கொடுத்தார்கள். 

"பிரச்சினை பணமல்ல :கொள்ளி வைப்பது யார்?" என்று பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் தொடர்ந்து கேட்க, கூட்டத்தில் இருந்தவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தயாரென்றார்கள் 

உடனே பாட்டி சொன்னார்," இவர் பெரிய ரிஷி. இவருக்குக் கொள்ளி வைப்பவர் பாவம் எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டும். ஆகவே உங்களில் யார் பாவம் எதுவும் செய்யாதவரோ அவரே முன் வருக!" 

உடனே கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் சொன்னான்,"அதெப்படித் தாயே, மனிதர்களில் பாவம் செய்யாத மனிதன் எங்கே இருப்பான்? தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான். ஒரு எறும்பைத் தெரியாமல் மிதித்து, அது இறந்து போயிருந்தாலும் அது பாவம்தானே? அதனால் பாவம் செய்திருக்காத மனிதன் கிடைப்பது

அரிதம்மா!" 

அடுத்து ஒருவன் கேட்டான்,"பாவம் செய்திருப்பதை அறியாமல் அல்லது உணராமல் ஒருவன் உன் கணவருக்குக் கொள்ளி வைத்தால் என்ன ஆகும்?" 

அதற்குத் தேவி பதில் சொன்னார்: 

"அவன் தலை வெடித்துவிடும்!" 

அவ்வளவுதான் அங்கே இருந்தவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஆனால் நேரம் ஆக நேரமாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் மதியம் மூன்று மணி வரைக்கும் நீடித்தது 

மூன்று மணிக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான். கூட்டத்தினரிமிருந்து விவரத்தை அறிந்து கொண்டவன் தேவியின் அருகில் வந்து சொன்னான்: 

"பாட்டி, கவலையை விடுங்கள். நான் வைக்கிறேன் கொள்ளி!" 

"நிபந்தனை தெரியுமா உனக்கு?" 

"பாவம் எதுவும் செய்திருக்கக்கூடாது.அவ்வளவுதானே? அறியாமல் பாவம் செய்திருக்கலாம். ஆனால் அதைப்போக்குவதற்கு வழி இருக்கிறது " 

"எப்படி?"

 "இந்தக் கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும் என்று என் தாய் சொல்லியிருக்கிறாள். என் தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கங்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னைப்படைத்த ஆண்டவன் மீது நம்பிக்கை இருக்கிறது! இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்" என்று சொன்னவன், "ஓம் நமச்சிவாயா!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தவாறு கங்கையில் குதித்தான். 

குதித்தவன் மூன்று முறைகள் முங்கி விட்டு எழுந்து கரைக்கு ஓடிவந்தான். அங்கே கரையில் யாரும் இல்லை!

                                      &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

கைலாயத்தில் சிவபெருமான் தேவியிடம் சொன்னார்."இவன்தான் வருவான்! எவன் ஒருவன் நம்பிக்கையுடன் குளிக்கிறானோ அவன்தான் வருவான். மற்றவர்கள் வரமாட்டார்கள்!" 

ஆகவே அடுத்தமுறை, கங்கை என்றில்லை, எந்த நதியில் சென்று நீராடினாலும், செய்த பாவங்கள் நம்மை விட்டுப்போக இறை நம்பிக்ககையுடன் அதில் குளியுங்கள். 

இறை நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காக்கும். 

வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப இந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான். 

கையில் ரேசன் கார்டு அல்லது அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது விசா. மனதில் கவலை. மனைவியிடம் வாங்கிய திட்டு. உடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோ அல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோ ஜென்மம் ஜென்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! 

உய்வே கிடையாது. 

வாழ்க இறை நம்பிக்கை!  வளர்க பக்தி நெறி!

============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!