29.1.21

பிஸினெஸ் தந்திரங்கள்..!!


பிஸினெஸ் தந்திரங்கள்..!! 

Business Tactis 

*சிந்தனை கதை...* 

*பிஸினெஸ் தந்திரங்கள்..!!* 

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர்

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாய கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித்

அது பொய், அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார்

சித், கடைக்கு பின்னால் துணி தைத்துக் கொண்டிருக்கும் ஹாரியிடம் 'இந்த ட்ரெஸ் என்னப்பா விலை' என்று கத்துவார்

ஹாரி அங்கிருந்து '800 ரூபாய்' என்பார்

சித், உடனே 'எவ்வளோ' என்று மீண்டும் கேட்பார்

'800 ரூபாய்டா செவிட்டு முண்டமே' என்று ஹாரி பதிலுக்கு கத்துவார் 

சித், கஸ்டமரிடம் திரும்பி '300 ரூபாய்' என்பார்

கஸ்டமரும் செவிட்டு காதிற்கு, மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்து விட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்

800 ரூபாய் என்று கேட்ட மனதிற்கு 300 ரூபாய் என்பது மகா சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது

இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு 150 ரூபாய் தான்..!! 

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

======================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.1.21

கலியுகக் கர்ணன் சிவாஜி கணேசன்!


கலியுகக் கர்ணன் சிவாஜி கணேசன்! 

திருச்சி அருகே  திருவானைக்காவல் கோவிலில் உள்ள  யானைநடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது

அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம்திரு.சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்குத் தீனி போடமுடியவில்லை. வேறு கோவிலுக்கு யானையை கொடுத்து விடுங்கள்என்று கூறினார்களாம்

அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன்.என்று கூறினாராம். ஒருவாரம் வரைபதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தைக் காணச் சென்றபோது அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சிஅளித்தது. என்ன நடந்தது என்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும். அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும். யானை பாகனுக்கும். விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும். யானை பாகனுக்கும். விவசாயிக்கும்.வீடு ஒன்று அமைத்து தருவதாகவும்  கூறி  அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் .நடிகர் திலகம்

இன்று வரை அது நடந்து கொண்டிருக்கிறது. அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார். கலைவாரிசு இளைய திலகம் பிரபு அவர்கள் என்று கோவிலுக்கு சமீபத்தில் சென்றபோது இதைச் சொன்னார் யானைப்பாகன்

சொல்லாமல் செய்யும் கலியுகக்  கர்ணன் குடும்பம்

கஜதானம் (யானைதானம்) செய்வது நாடு செழிப்புடன் எந்தவிதப் பஞ்சமும் இல்லாமல் மக்களை வாழச் செய்யும் தானம். இதுபோல் கோவில்களுக்கு ஆறு யானை வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிட தக்கது.

படித்ததில் வியந்தது

அன்புடன்

வாத்தியார் 

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.1.21

சோவியத் நாட்டின் மாமேதை ஸ்டாலின்!!!


சோவியத் நாட்டின் மாமேதை ஸ்டாலின்!!! 

*ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்.. 

*அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.* 

*கோழி வலியால் கத்தியது துடிதுடித்தது.* 

*முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார்.* 

*பின்பு அதன் முன்னாள் சிறிது தானியத்தை தூவினார் .* 

*அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,* 

*மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி....* 

*அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.* 

*அப்போது ஸ்டாலின் கூறினார் இதுதான் அரசியல்,* 

*மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு...* 

*கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் என்று கூறினார்.* 

*அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இன்று வரை கட்சிகள் இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து....,* 

*மக்களை கொத்தடிமைகளாக மாற்றி வைத்துள்ளனர்.* 

*பணத்திற்கு ஓட்டை விற்கும் தேசத்தில் இனி நல்ல ஆட்சி அமைவது ஏது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை தானே.* 

 படித்ததில் பிடித்தது!

அன்புடன்

வாத்தியார் 

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.1.21

சிவகங்கை இளவரசி வேலு நாச்சியாரின் மேன்மை


சிவகங்கை இளவரசி வேலு நாச்சியாரின் மேன்மை 

சிவகங்கை அரண்மனையின் ஆலோசனை கூடத்தில், கால் மேல் கால் போட்டு, கம்பீரமாய், கர்வமும், ஆணவமும் நிரம்பி வழியும், முகத்துடன் அமர்ந்திருக்கின்றான் கவர்னர் லாட்டீ காட்.

சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் உள்ளே நுழைகிறார்

நாற்காலியில் மேலும் பின்னோக்கி சாய்ந்து, இடது காலின் மேல், இருக்கும் வலது காலினை ஆட்டியபடியே, அதிகாரத் தோரணையில் பேசுகிறான் கவர்னர் லாட் டீ

மிஸ்டர் முத்து வடுகநாதர், நீர் எமக்குக் கொடுக்க வேண்டிய வரியை, வெகு காலமாக கட்டவில்லை. ஏன்? விளக்கம் தேவை?

மன்னருக்கு ஆங்கிலம் தெரியாது,

கவர்னருக்கோ தமிழ் தெரியாது.

கவர்னருடன் வந்த மொழிபெயர்ப்பாளனோ, கைகட்டி, வாய் பொத்தி ஓரமாய், அமைதியாய் நிற்கிறான்

மன்னரின் குழப்பத்தைக் கண்டும், தனது பேச்சினை புரிந்து கொள்ள முடியாத, இயலாமையைக் கண்டும், கவர்னரின் கண்களில் ஒரு எகத்தாளச் சிரிப்பு. ஆங்கிலம் தெரியாதா உனக்கு? என்னும் ஒரு கேலிப் பார்வை

அறையின் வெளியில் இருந்து, இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வேலு நாச்சியார், அறைக்குள் புயலென புகுந்தார்.

எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான், எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை

ஒரு நிமிடம்தான், ஒரே நிமிடம், வாரி சுருட்டிக் கொண்டு, தன்னையும் அறியாமல் எழுந்து நிற்கிறான் லாட் டீ.

யார் இவள்? என் மொழியில், ஆங்கிலத்தில், வீர முழக்கமிடுகிறாரே யார் இவள்? புரியவில்லை அவனுக்கு

உனக்கு ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்? இதோ, இப்பொழுது நான் பேசியதை, தெலுங்கில் சொல்கிறேன் கேள்.

கவர்னர் விழித்தான்

இதோ, மலையாளத்தில் சொல்கிறேன் கேள்.

கவர்னரின் விழிகள் வியப்பால் விரிந்தன.

இதோ கன்னடத்தில் கூறுகிறேன் கேள்.

லாட் டீ தவிக்கத் தொடங்கினான்.

இதோ உருதுவில் கூறுகிறேன் கேள்

அறையை விட்டு வெளியே ஓடிவிடலாமா? என்ற எண்ணம் லாட் டீயின் மனதில் நுழைந்தது.

ஒரு பெண்மணிக்குள், இத்தனை மொழிகள் அடைக்கலமா?

கம்பீரமாக அமர்ந்திருந்த கவர்னர், இப்பொழுது கைகட்டி நிற்கின்றான்

இது எங்கள் மண். எங்கள் நாடு. எங்கள் மக்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும், ஒவ்வொரு அணுவும், எங்களின் உழைப்பைச் சொல்லும

எங்கள் மக்களின் உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் உருவானது எங்கள் நாடு.

இங்கே ஓடுகின்ற நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும், பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்

அன்புக்கு எங்கள் தலை என்றும் குனியும், ஆணவத்தோடு நெருங்கினால், தலை மண்ணில் உருளும்.

எங்கிருந்தோ பிழைக்க வந்த நீ, எங்களிடமே வரி கேட்கின்றாயா? வரி கொடுத்து எமக்குப் பழக்கமில்லை.

உதவி என்று கேள், வாரி வாரி வழங்குகின்றேன். இனியொரு முறை, வரி என்று கேட்டால், வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது

வேலு நாச்சியார் ஆங்கிலத்தல் முழங்கி முடித்த பின்பும், வெகுநேரம், கவர்னரின் காதுகளில், வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன

இனியும் இங்கே நின்றால், உயிரும் மிஞ்சாது என்பதை அறிந்த கவர்னர், வேகமாய் அரண்மனையை விட்டு வெளியேறினான் 

#வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி வென்ற வீரத் தமிழச்சி வேலு நாச்சியார்

--------------------------------------------------

படித்தேன்; விரும்பிப் பகிர்ந்தேன்!

அன்புடன்

வாத்தியார்

==================================.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.1.21

சங்கீத மேதை சுப்புடு


சங்கீத மேதை சுப்புடு 

சுற்றளவைக் குறைத்தால் உலகம் சுற்றலாம்” - இது நாட்டிய அரங்கேற்றம் செய்த பிரபல பாடகியின் மகளுக்கான விமர்சனம்

காதிலும் கம்மல்; குரலிலும் கம்மல்” - இது பிரபல சங்கீத வித்வான் ஒருவருக்கு

கேதாரம் சேதாரமாகிவிட்டது” - இது பாடலைப் பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் சேர்த்து வைத்த குட்டு

“best luck for next year” - இது ஒரு பிரபல இசைக் கலைஞருக்குத் தெரிவித்த அனுதாபம்

இப்படி நறுக், சுருக் சொற்களில் காரசாரமாக விமர்சனம் எழுதி, இசை விமர்சனத் துறைக்குப் புத்துயிரூட்டியவர் சுப்புடு என்றழைக்கப்படும் பி.வி. சுப்பிரமணியம். இவர், மார்ச் 27, 1917 அன்று பர்மாவில், வெங்கட்ராம ஐயர், சரஸ்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். சிறுவயது முதலே இவருக்கு இசையார்வம் இருந்தது. சகோதரிகளுக்கு இசை கற்பிக்கவந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூலம் இசை கற்றுக்கொண்டார். மிமிக்ரியும் கைவந்தது. நடிப்பு, கேட்கவே வேண்டாம். பதினைந்து வயதிலேயே 'பிரஹலாதா', 'சீதா கல்யாணம்' போன்ற நாடகங்களை எழுதி நடித்தார். உயர்கல்வியை முடித்த இவருக்கு ரங்கூனில் கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. படிக்கும்போதே பள்ளி இதழில் எழுதிய அனுபவம் இருந்ததால், 1938 இல் இசை பற்றிய சிறு விமர்சனக் குறிப்புகளை Rangoon Times பத்திரிகைக்கு எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின. 1942 இல் போர் சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் நடந்தே இந்தியா வந்துசேர்ந்தார். சிம்லாவில் சில வருடங்கள் இருந்தார். பின் டெல்லியை அடைந்தார்

டெல்லியில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். டெல்லியே இவரைச் சிறந்த இசை விமர்சகர் ஆக்கியது. ஓய்வுநேரத்தில் நாட்டியம், நாடகம், இசைக்கச்சேரி போன்றவற்றிற்குச் செல்வார். ஒருமுறை பிரபல இசைக்கலைஞர் ஒருவரது கச்சேரிக்குச் சென்றுவந்த சுப்புடு, அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றைஆனந்த விகடன்இதழுக்கு எழுதி அனுப்பினார். அதில்அந்த வித்வான் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான். ஆனால்தாயே நீ இரங்காய்என்று பாடும்போது ஏன்இற்றங்காய்என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தின் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் பக்கத்துவீட்டுப் பையன் மாங்காய் பறிக்கிறான் போலிருக்கிறது. நீ இறங்காவிடில் பல்லை உடைச்சிடுவேன் என்று சொல்கிற மாதிரி கொஞ்சம்கூட பாவம் இல்லாமல் இருந்தது. இந்த அதிகப்பிரசங்கத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்த ஆசிரியர் கல்கி, “உங்கள் அதிகப்பிரசங்கம் ஜோரைய்யா. மேலும் மேலும் எழுதுங்களைய்யா!” என்று பதில் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அதுமுதல் விகடனில் இசை விமர்சனம் வெளியானது. அடுத்து கல்கி, சதாசிவத்துடன் இணைந்துகல்கிஇதழை ஆரம்பிக்கவே அதிலும் சுப்புடுவின் கைவரிசை தொடர்ந்தது. கல்கியையே மானசீக குருவாகக் கொண்டார் சுப்புடு

முன்னோடி: சுப்புடு

வாசிக்க: http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11928 கேட்க: http://www.tamilonline.com/thendral/playaudio.aspx?aid=11928 

#மார்கழி #சுப்புடு #முன்னோடி #தென்றல் #தமிழ்ஆன்லைன் #TamilOnline

 படித்தேன்: பகிர்ந்தேன்!

அன்புடன்

வாத்தியார்

=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.1.21

Astrology ஜோதிடம்: அலசல் பாடம் - உலகைக் கலக்கியவரின் ஜாதகம்!!!!


----------------------------------------------------------------------------------------------------
Astrology ஜோதிடம்: அலசல் பாடம் - உலகைக் கலக்கியவரின் ஜாதகம்!!!!

அடால்ஃப் ஹிட்லர் 

இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியுமா? உலகம் முழுவதும் அறிந்த பெயர். உலகையே ஆட்டிவைத்த பெயர். இரண்டாம் உலக யுத்தத்தின் நாயகனே அவர்தான். 1933 முதல் 1945 வரை சுமார் 12 ஆண்டுகள் அவர் தலைமைப் பதவியில் இருந்தார். எண்ணற்ற நாடுகளை யுத்தங்களின் மூலம் தன் வசப்படுத்தினார். ஜெர்மனியை வல்லரசாக்க வேண்டும் என்ற அவருடைய கனவு நிறைவேறவில்லை. அது அவரையே காவு வாங்கியது

பிறந்தது: 20.4.1889 - தற்கொலை செய்து கொண்டு இறந்தது: 30.4.1945 மொத்தம் வாழ்ந்தது 56 ஆண்டுகளே ஆயினும் உலக சரித்திரத்தில் தனக்கென்று ஒரு பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போனார்

அவருடையநாஜிபடையால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை தெரியுமா? மொத்தம் ஒரு கோடி எழுபது லட்சம் மக்கள். அதில் 60 லட்சம் யூத இனத்தைச் சேர்ந்த மக்களும் அடக்கம்

முழுமையாக அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்திக் கிடைக்கும் பகுதியைப் படியுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Adolf_Hitler

-------------------------------------------------------------------------

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்


Example horoscope for the terrible desire of power 

பதவி, அதிகாரம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் யாருக்குத்தான் ஈடுபாடு இருக்காது? இருந்தாலும் அதை தன் முனைப்போடு சாதித்துக் காட்டுவதற்கு ஜாதகமும் துணை செய்ய வேண்டுமல்லவா

ஒருபடி மேலே சென்று சொன்னால், பதவி, அதிகாரம், அந்தஸ்து, ஆகியவற்றின் மேல் ஈடுபாடு, ஆர்வம், பக்தி என்று இல்லாமல் வெறியும் கொண்டு அலைந்தவர்களில் முதன்மையானவர் ஹிட்லர் என்று சொன்னால், மறுப்பதற்கில்லை. அவருடைய ஜாதகமும் அதைத்தான் சொல்கிறது

பத்தாம் வீட்டின் மேல் செவ்வாயின் பார்வை விழுந்தவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் மற்றகிரகங்களின் அமைப்பும் சேர்ந்து அதைச் சாதிக்கவைக்கும்

முதலில் ஹிட்லரின் லக்கினத்தைப் பாருங்கள். துலா லக்கினம். லக்னாதிபதி சுக்கிரன் 7ல், ஏழாம் வீட்டுக்காரன் செவ்வாயுடன் சேர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார். ஒரு இடத்தில் இருப்பதைவிட, பார்வைக்கு வலிமை அதிகம்.

அத்துடன் உச்சம் பெற்ற லாபாதிபதி சூரியனும் அந்த இடத்தில் கூட்டாக இருக்கிறார். அவருடன் பாக்யாதிபதி புதனும் சேர்ந்து கொண்டுள்ளார். 4 வலிமையான கிரகங்கள் ஏழில். அவைகள்தான் அவருக்கு உலகப் புகழைக் கொடுத்தன. அதே 4 கிரகங்கள்தான் அவருக்கு ஆளுமை சக்தியைக் கொடுத்தன. மற்றவர்களின் பலவீனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுத்தன

அந்த ஆளுமை சக்தி நல்ல வழியில் செல்லவில்லை. அதற்குக் காரணம் என்ன

துலாலக்கினத்தின் நம்பர் ஒன் வில்லனான குரு, தனது சொந்தவீட்டில் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக அந்த 7ஆம் வீட்டை, அதாவது அந்த 4 கிரகங்களையும் தன் பார்வையின் கீழ் வைத்திருப்பதைக் கவனியுங்கள். அந்த நிலைதான் அவரை ஒரு சர்வாதிகாரியாக, கொடுங்கோல் ஆட்சியாளராக மாற்றியது.

 ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்க்கும் சூரியனால், அசாத்திய மனவுறுதி கிடைக்கும். அவரிடம் அது இருந்தது

சந்திரன் மற்றும் குருவுடன் சேர்ந்த கேது, சண்டாள யோகத்தை வலுவாகக் கொடுத்தது. ஆனால் கொடூர மன நிலைமையும் அதுதான் கொடுத்தது 

ஆறாம் வீட்டுக்காரனின் பார்வை பெற்ற ஏழாம் வீட்டால் அவருக்கும் உலகம் முழுவதும் பல எதிரிகள் உருவானார்கள். அவருடைய அழிவிற்கும் அதுவே காரணம் ஆனது

செவ்வாயும் சுக்கிரனும் கூட்டணி போட்டால், ஆசாமி பெண்கள் விஷயத்தில் பலவீனமாக இருப்பான். அவரும் அப்படித்தான் இருந்தார்

லக்கினம் (1) சந்திர லக்கினம் (3) சூரியன் (7) ஆகியவைகள் ஒற்றைப்படை ராசிகளில் அமரும்போது மகாபாக்கிய யோகம் கிடைக்கும். அவருக்கும் அது இருந்தது. இல்லையென்றால் வெறும் 12 ஆண்டுகளில் உலகின் பாதியை அவர் எப்படி தன்வசப் படுத்தி ஆண்டிருக்க முடியும்

துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அதாவது 4 & 5ஆம் வீடுகளுக்கு உரியவன். அவன் பத்தாம் வீட்டில் அமர்ந்து அவரை ஆட்சியாளராக்கினான். Saturn gave him the power and he became a ruler. 

The same Saturn aspected by Mars also gave him the fall in the end. He committed suicide and died 

விளக்கம் போதுமா?

அன்புடன்

வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!