29.10.21

Astrology: ஜோதிடம்: 28-10-2021ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 28-10-2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த டாக்டர் திரு.சுப்பிரமணியன் சுவாமி 

பிறந்ததேதி: 15-9-1939 காலை 4:30 மணி சென்னை



நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! 

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 28-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!












Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  28-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். நீண்ட நாட்களாக தில்லியில் வாசம். அகில இந்தியப் பிரபலம்!!!! 

சரியான விடை நாளை வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.21

Astrology: Jothidam: 25-10-2021 அலசுங்கள் புதிருக்கான விடை!!!!




Astrology: Jothidam: 25-10-2021 அலசுங்கள் புதிருக்கான விடை!!!!

அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் கொடுத்திருந்த பெண்ணின் திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு  ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தோம். 

லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் கூட்டணி வேறு. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் 12ல் உடன் 12ம் வீட்டுக்காரன் பதனுடன் கூட்டணி. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். மொத்தத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட மூவருமே விரைய ஸ்தானமான 12ல். ஆகவே திருமணம் நிலைக்கவில்லை. திருமண வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவதற்கான அமைப்பு இல்லை. அத்துடன் லக்கினம் பாபகர்த்தாரி என்னும் அவ யோகத்தில் சிக்கியுள்ளது. லக்கினத்திற்கு ஒரு பக்கம் சனீஷ்வரன். மறுபக்கம் செவ்வாய்

இவைதான் பிரச்சினைக்கான முக்கிய காரணம்

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.10.21

ஆன்மிகம் வடபழநி முருகன் கோவில்



ஆன்மிகம் வடபழநி முருகன் கோவில்

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப் பெரிமானுக்கு உகநத நாள். வாருங்கள் இன்று ஒரு முருகன் ஸ்தலத்திற்கு சென்று, வணங்கி வருவோம்

26-10-2021

வடபழநி முருகன் கோவில்

வடபழநி முருகன் கோவில் என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்) அமைந்துள்ளதாலும் தமிழ் திரைப்படத்துறையினர் வருகை அதிகமிருப்பதாலும் மக்களிடையே பிரபலமான கோவிலாக உள்ளது.

வரலாறு

1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. இன்று மக்களின் ஆதரவால் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

வடபழநி கோவிலின் முன்புற நுழைவாயிலில் உள் வளைவுச் சாலை உள்ளது

இக் கோவிலின் தலபுராணத்தில், முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் முதலில் இருந்த கொட்டகையை அவரின் சொந்த வழிபாட்டிற்காக அமைத்தார் எனவும், அங்கு தென்பழநி முருகனின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் தீவீர வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பின்னர், தென்பழநி யாத்திரையின் போது ஒரு சாது சொல்லியதற்கிணங்க, தான் தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகனின் உருவப்படத்தை வைத்து வழிபடலானார். தன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு "பாவாடம்" என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின. அதனால் மக்கள் அவர் சொல்வதை "அருள்வாக்கு" என்று எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான நோய் தீருதல், வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆக வேண்டி அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர் என்ற விபரம் கூறப்படுகிறது. அது முதல் அவர் அண்ணாசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.

அவருக்குப்பின், அவரின் பிரதான சீடரான இரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865ம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல சிலை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் இரத்தினசாமி செட்டியாரின் கனவில் அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி தன்னைப்போலவே "பாவாடம்" தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அதனால் இவரும் பாவாடம் தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்று இரத்தினசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள கர்ப்பக்கிருகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை இரத்தினசாமித் தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் செங்குந்தர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இம் மூன்று தம்பிரான்களின் (சித்தர்கள்) சமாதியும் தமிழ்நாட்டில் உள்ள நெற்குன்றம் போகும் பாதையில் அமைந்துள்ளன. இங்கு சித்தர்கள் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூசை மற்றும் குரு பூசை போன்றவை விமரிசையாக நடைபெறுகிறது.

தனிச் சன்னதிகள்

இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.

இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது. மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது. இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது. இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

கோவிலின் சிறப்பு

தங்க ரதம்: வைகாசி விசாகம்
பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சனேயர் சன்னதி இங்கு உண்டு.
மூன்று சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வளரப்பட்டது இந்தத் திருக்கோயில்.
தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவது.

வழிபாடு

இக் கோவிலில் வழிபாடு அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து காலசந்தி பூசை 7 மணிக்கும், உச்சிக்கால பூசை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை மாலை 5 மணிக்கும் மற்றும் அர்த்தசாம பூசை இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது. (விழாக்காலங்களில் பூசை நேரங்கள் மாறுபடும்)

திருவிழாக்கள்

இங்கு தமிழ் மாதம் பன்னிரெண்டிலும் விழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூசை மேற்கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆறு நாட்களிலும் முருகப் பெருமானுக்கு "லட்சார்ச்சனை" நடைபெறுகிறது. மேலும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகருக்கு 9 நாட்கள் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

ஒருமுறை வடபழநி முருகன் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் எல்லா ந்லமும் கிடைக்கப் பெறுவீர்கள்

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.10.21

Astrology: Jothidam: Quiz: நீங்களே கண்டுபிடியுங்கள் - பகுதி 6


Astrology: Jothidam: Quiz: நீங்களே கண்டுபிடியுங்கள் - பகுதி 6 

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். திருமணமான மூன்றாவது மாதமே அந்தப் பெண் தன் கணவனைப் பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையே வேண்டாமென்று தன் தாய் வீட்டிலேயே இருந்து விட்டாள். 

கேள்வி இதுதான். அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு  ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!! 

சரியான விடை 27-10-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்! 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.21

Astrology: ஜோதிடம்: 20-10-2021ம் தேதி புதிருக்கான விடை!



Astrology: ஜோதிடம்: 20-10-2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். 

பிறந்த தேதி: 16-9-1945  காலை11.47 மணி, காரைக்குடி

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! 

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வியாழக்கிழமை (28-10-2021) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 21-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!



Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  21-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். அரசியல்வாதி அகில இந்தியப் பிரபலம்!!!! 

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.21

Astrology: Jothidam: 18-10-2021 அலசலுக்கான விடை


Astrology: Jothidam: 18-10-2021 அலசலுக்கான விடை

கொடுத்திருந்த பெண்ணின் ஜாதகத்தில் கர்ப்பப்பை கோளாறு. ஜாதகப்படி என்ன காரணம் என்று கேட்டிருந்தோம்

ஆறாம் வீட்டுக்காரனான சந்திரன் (Villain for this horoscope) 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்துள்ளான்.

அத்துடன் செவ்வாயின் விஷேசப் பார்வை சந்திரனின் மேல் விழுகிறது. 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் கர்ப்பப்பையைக் குறிக்கும். கர்ப்பப்பை கோளாறிற்கு சந்திரனே காரணம். செவ்வாயின் பார்வை கருப்பையில் நீர்க்கட்டியை  (Cyst) உருவாக்கி கோளாறை உண்டாக்கியது

கர்ப்பப்பை கோளாறுக்கு அந்த இருவருமே காரணம்.

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு அலசல் பாடத்துடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்

வாத்தியார்

------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.21

Astrology: Jothidam: நீங்களே கண்டு பிடியுங்கள்!!!!



Astrology: Jothidam: நீங்களே கண்டு பிடியுங்கள்!!!!

19-10-2021 

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு. கருப்பையில் நீர்க் கட்டியும் உள்ளது. சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திருமணமாகி குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர் நொந்து போய் விட்டார். 

கேள்வி இதுதான். கர்ப்பபப்பைக் கோளாறுக்கு  ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 20-10-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்! 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Devotional அருள் தரும் சிறுவாபுரி முருகன்!



Devotional அருள் தரும் சிறுவாபுரி முருகன்!

19-10-2021
 
இன்று செவ்வாய்க்கிழமை. முருகப் பெருமானுக்கு உகந்த நாள். 

வாருங்கள் இன்று முருகப்பெருமான் உறையும் ஒரு தலத்தைப் பார்ப்போம்

சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன். 

ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து  3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.

சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

ஐந்து நிலைகளைக்  கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

 பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.

ஒருமுறை சிறுவாபுரி முருகணை தரிசித்து வாருங்கள். வளமோடு வாழலாம்

அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.10.21

வாத்தியாரின் வாழ்த்துகள்!!!!


அன்புடையீர் அனைவருக்கும் 
வாத்தியாரின் வாழ்த்துகள்!!!


வகுப்பரை மாணவக் கண்மணிகளுக்கு  2 நாட்கள் விடுமுறை!
அடுத்த வகுப்பு திங்கட்கிழமை அன்ரு நடைபெறும்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.21

Astrology: ஜோதிடம்: 11-10-2021ம் தேதி புதிருக்கான விடை!



Astrology: ஜோதிடம்: 11-10-2021ம் தேதி புதிருக்கான விடை!

13-10-2021

அந்த ஜாதகத்திற்கு உரியவர் இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் அம்மையார்  

6-2-1952ல் அரசியானவர் தொடர்ந்து 69 ஆண்டுகளாக அந்தப் பதவியில் நிலைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது!!!!

பிறப்பு விபரம்: 21-4-1926 2:40 AM London

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.10.21

Devotional ஆன்மிகம் மருதமலை கோவில்


Devotional" ஆன்மிகம் மருதமலை கோவில்

இன்று செவ்வாய்க் கிழமை. முருகனுக்கு உகந்த நாள். இன்று ஒரு மிருகன் தலத்தைப் பார்ப்போம் வாருங்கள்!!!!

மருதமலை!

மருதமலை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள  ஒரு மலை ஆகும். 

இது கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோயில் முருகனின் ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக் கோவில் மிகவும் பழமையானது.

 திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. 

இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.இக்கோயில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் இன மன்னர்களின் சொத்தாக விளங்கியது.

முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.

ஒருமுறை மருதமலைக் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். எல்லா நல்ன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 11-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 11-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா? பெண்மணி. வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்!!!! 

சரியான விடை நாளை மறுநாள் (13-10-2021) வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.10.21

Astrology:ஜோதிடம்: 7-10-2021 அலசுங்கள் பதிவிற்கான விடை!!!!




Astrology:ஜோதிடம்: 7-10-2021 அலசுங்கள் பதிவிற்கான விடை!!!!

8-10-2021

கேட்டிருந்த கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்றிருந்தேன்!!!!

நான் அடிக்கடி சொல்வதைப்போல மகா திசைகளும் புத்திகளும்தான்  (sub periods) ஜாதகப் பலனை வழங்கக்கூடியவை. நல்லதோ அல்லது கெட்டதோ அவைகள்தான் வழங்கும்.

கொடுத்துள்ள ஜாதகத்தில் எட்டாம் அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டாகச் சேர்ந்து 10ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னுடைய மகா திசை துவங்கியவுடன் ஜாதகரைப் புரட்டிப்போட்டார். அந்த வீட்டின் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை! எட்டாம் அதிபதியால் கஷ்டங்களைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? ஆகவே ஜாதகர் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாக நேரிட்டது!!!

அடுத்த வாரம் மீண்டும் ஒரு ஜாதக அலசலைப் பார்ப்போம்!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.10.21

Astrology: Jothidam: நீங்களே அலசுங்கள்!


Astrology: Jothidam: நீங்களே அலசுங்கள்!

6-10-2021

ஜாதகத்தை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அல்லது பயிற்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்111

ஒரு அன்பரின்  ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தனது 44 வது வரை செளகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அவரை காலதேவன் புரட்டிப் போட்டுவிட்டான். பார்த்துவந்த உத்தியோகத்தில் பல பிரச்சினைகள். வேலையை உதறிவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய் பல மடங்கு பிரச்சினை. அந்த நிறுவனம் கடும் நிதி நெறுக்கடியில் உள்ளதை அங்கே சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டார். என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. உடனடித் தீர்விற்கும் வழி தெரியவில்லை.

கேள்வி இதுதான். வேலையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 7-10-2021 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:



==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.21

Astrology: ஜோதிடம்: 4-10-2021ம் தேதி புதிருக்கான விடை!



Astrology: ஜோதிடம்: 4-10-2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தன்னுடைய அற்புதக் குரலால் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல பிண்ணனிப் பாடகி இசையரசி M.S. சுப்புலெட்சுமி  அவர்கள்

பிறந்த தேதி 16-09-1916 காலை 8.50 மணி மதுரை

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.10.21

ஆன்மிகம் பழமுதிர் சோலை கோவில்!


ஆன்மிகம் பழமுதிர் சோலை கோவில்!

இன்று செவ்வாய்க் ,இழமை.முருகனுக்கு உகநத நாள். இன்று பழமித்ஜிர் சோலை திருத்தலத்தைப் பார்ப்போம் வாருங்கள்!

பழமுதிர்சோலை முருகன் கோயில், (Pazhamudircholai Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான் என்று நம்பப்படுகிறது. விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

சோலைமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகன் அழைத்த தலம் பழமுதிர்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்சோலையே முருகனின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்சோலை முருகனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகனுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

தல வரலாறு

பழமுதிர் சோலை அருகே சில மரங்களில் நூற்றுக்கணக்கான வௌவால்கள்
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.

தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்."சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

அதிசய நூபுர கங்கை

பழமுதிர்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

விழாக்கள் விவரம்

இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன.

பயண வசதி
மதுரை மாநகரில் இருந்து வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

ஒருமுறை சென்று வாருங்கள். முருகனின் அருளை முழுமையாகப் பெற்று வாருங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 4-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 4-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!




க்ளூ வேண்டுமா? தமிழ் நாட்டில் பிறந்தவர். பெண்மணி. அகில இந்திய பிரபலம். 

சரியான விடை 6=10=2021 புதனன்று  வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.10.21

Astrology Quiz 30-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை


Astrology Quiz 30-9-2021 ஜோதிடப் புதிருக்கான விடை 

கொடுத்திருந்த ஜாதகம் பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்களின் ஜாதகம்! 

அவர் 29=12=1042ம் ஆண்டு மாலை 5-45 மணிக்கு அம்ரிட்சர் நகரில் பிறந்தவர் 

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வாரம் சந்திப்போம் 

அன்புடன்

வாத்தியார்

================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!