7.5.21
கலங்காதே மனமே.!
4.5.21
Astrology: ஏன் திருமணம் கூடி வரவில்லை?
Astrology: ஏன் திருமணம் கூடி வரவில்லை?
ஒரு சகோதரியின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திர நட்சத்திரக்காரர். 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. ஜாதகத்தைப் பார்த்த பெரிய ஜோதிடர் ஒருவர், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே திருமணமாகக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று கூறிவிட்டார். அது போலவே அவருக்கு கடைசிவரை திருமணமாகவில்லை.
திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!
ஜாதகி ரிஷப லக்கினக்காரர். உத்திர நட்சத்திரம். திருமண பாக்கியத்திற்கு உரிய எல்லா வீடுகளுமே கெட்டுப்போய் உள்ளன, லக்கினத்திற்கு 7ம் வீட்டில் சனி வக்கிர நிலைமையில் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனுக்கும் சனீஷ்வரனால் அதே நிலைப்பாடுதான், பூர்வ புண்ணியாதிபதி (5th Lord) புதன் 12ம் வீட்டில் போய் அமர்ந்துள்ளார், 2ம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) விரையாதிபதி செவ்வாயின் ஆதிக்கம். மேலும் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்கிறார், ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். இக்காரணங்களால் அந்த சகோதரிக்கு திருமணம் கூடிவரவில்லை.
அன்புடன்
வாத்தியார்
http://classroom2007.blogspot.com/
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
--------------------------------------------------------------------------------3.5.21
Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!
Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்.
அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!
ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கேட்டை நட்சத்திரக்காரர். ராசியும் அதுவே. 9ம் அதிபதி - பாக்கியாதிபதி - சந்திரன் லக்கினத்திலேயே உள்ளார், 9th Lord in the Lagna will confer huge wealth. அதீதமான பண வரவிற்கு அதுவே காரணம். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 10ம் வீட்டில் (தொழில் ஸ்தானத்தில்) உடன் குரு பகவான். தொழில் மேன்மைக்கு அதுவே காரணம். அவர் தொழில் செய்து பணம் ஈட்டுவதற்கு இந்த அமைப்பே உதவியது. அத்துடன் குரு பகவான் தன்னுடைய விசேட பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அத் அவருடைய சொந்த வீடு மட்டுமல்ல, தன ஸ்தானமும் ஆகும். செல்வம் சேர்ந்தமைக்கு இந்த அமைப்பும் காரணமாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்