31.8.20

கம்ப ராமாயணம் அரங்கேறிய இடம்!


கம்ப ராமாயணம் அரங்கேறிய இடம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் இயற்றிய அந்த ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் சந்நிதியில் அரங்கேற்ற ஆசை கொண்டார்

ஆனால் அதற்கு பல தடங்கல்கள் எழுந்தன.

தடை பல தாண்டி, அவர் ஸ்ரீரங்கம் சென்று வைணவ சமய ஆசார்யராக அப்போது வீற்றிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அனுமதி கேட்டார். அவர் அனுமதியளித்த பின்னே, ஆலயத்தினுள் ஒரு மண்டபம் எழுப்பி நல்லதோர் நாளில் தம் ராமாயணத்தை அரங்கேற்ற முனைந்தார் கம்பர்.

ஆனால் அப்போதும் ஏதோ தடங்கல். கம்பர் அரங்கநாதனை மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கம்பரின் கனவிலே‘ எம்மைப் பாடினாய் அன்றி நம் சடகோபனைப் பாடினாயோ? அவனையும் பாடினால்தான் உன் ராமாயணத்தை நாம் ஏற்போம்!’ என்று கூறினார்.

அதனால் கம்பர் நம்மாழ்வாரான சடகோபர் மீது நூறு பாக்களால் சடகோபர் அந்தாதியை இயற்றினார். அதன் பிறகே அவருடைய ராமாயணம், நாதமுனிகளின் முன்னிலையில், அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் தாயார் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் அரங்கேறியது.

அப்போது, தாயார் சந்நிதி முன் இருந்த மேட்டு அழகிய சிங்கப் பிரான் சப்தம் எழுப்பிச் சிரித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மண்டபம், இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் என்று அரங்கநாயகித் தாயார் சந்நிதி முன்னால் உள்ளது.

கம்பர் தம் சடகோபர் அந்தாதியில்  ‘நம்மாழ்வாரே எனக்குக் காப்பு’ என்று சொல்லி ஒரு காப்புச் செய்யுள் படைத்து அந்தாதியைத் தொடங்கினார். அந்த துதிப்பாடல்…

தருகை நீண்ட தயரதன் தான் தரும்
இருகை வேழத்தி ராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிடக்
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

-இந்தக் காப்புச் செய்யுளார் நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றிக் கொண்டாடுகிறார் கம்பர்.

இதன்பிறகு வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும்போது முதலில் நம்மாழ்வாருக்குத் துதி கூறும் வழக்கம் உண்டானது.

கம்பரின் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது. அதில் ஒரு சம்பவம்…

நம்மாழ்வாரின் சிறப்புகளை விருது கூறிக்கொண்டு மதுரகவியார் அவருடைய விக்கிரகத்தை எழுந்தருளச் செய்துகொண்டு வீதியுலா வருவார்.

அப்போது மதுரைச் சங்கத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

நம்மாழ்வாரின் பெருமையைப் பறைசாற்ற, ‘கண்ணன் கழலிணை’ என்னும் ஒரு பாசுரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மதுரை சங்கத்தைச் சேர்ந்த புலவர்களுடன் வாதுக்குச் சென்றார் மதுரகவியாழ்வார். அப்போது நம்மாழ்வாரின் அந்த ஒரு பாடலுக்கு சங்கப் பலகை இடம் தந்து மற்றவர்களைக் கீழே தள்ளியது (இந்த நிகழ்ச்சியை மதுரகவியாழ்வாரின் சரித்திரத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இந்த நிகழ்ச்சியை கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் சிறப்புறக் காட்டுகிறார்.

தமிழிலக்கியத்தில் மிக மிக உயர்வான கருத்துகள் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன.

நம்மாழ்வார் தனக்காகப் பாடாது, உலக மக்களின் நலனுக்காக எம்பெருமானிடம் அவர்கள் சார்பில் ஒரு விண்ணப்பம் செய்கிறார்…

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

பொருள்: பொய்யான அறிவு; தவறான ஒழுக்கங்கள்; அழுக்கான உடம்பு- இத்தகைய குணங்கள் இனி எங்களுக்கு ஏற்படாதபடியான வாழ்வினைத் தருவாய். வானவர் தலைவனே, அடியேன் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள் என்று உலக மக்களின் சார்பில் எம்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கிறார்.

ஆழ்வார் ஸாதிக்கிறார், "எம்பெருமான் என்னுடன் சேர்ந்து தன்னுடைய அளவில்லாத அழகைக் காட்டி என்னை வசப்படுத்தி என் மனதில் எழுந்தருளியிருக்கிறான். அந்த அழகு எப்படியிருக்கிறது என்றால், என்னைவிட்டு பிரிந்த போது அவனுடைய திருக்கண்கள் வெளுத்திருந்தன. இப்போது என்னுடன் சேர்ந்த ப்ரீத்தியாலே பெருமாளுக்கும் என்னுடைய கண்களைப் போலவே செந்தாமரை போல சிவந்து இருக்கிறதே, இது என்ன விந்தை! என்ன விந்தை!" என்று சொல்லிக்கொண்டே ஆறுமாத காலம் மோஹித்தாராம்.

குருவடி திருவடி சரணம் !
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.20

Astrology: Quiz: புதிர்: 28-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!



Astrology: Quiz: புதிர்: 28-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் திருவாதிரை நட்சத்திரம். துலா லக்கினக்காரர். அன்பர் குணக்கேடானவர். எதையும் யார் பேச்சையும் கேட்க மாட்டார். எல்லாவற்றையும் எதிர்பார்ப்பிற்கு மாறாகச் செய்வார். அத்துடன் Moody, short tempered மனநிலை பிறன்றவர், குறுகிய மனநிலை உடையவர். குடும்பத்திலுள்ள பெற்றோர்களுக்கும் உடன் பிறப்புக்களுக்கும் தொல்லையாக இருந்தார். ஜாதக்கப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: புத்திநாதன் புதன் கேதுவோடு சேர்ந்து கெட்டிருக்கிறார். நல்ல மன நிலைமைக்கு புதனும், மனகாரகன் சந்திரனும் முக்கியம் இங்கே சந்திரனும் செவ்வாயின் பார்வையால் கெட்டிருக்கிறார். அத்துடன் குணத்திற்கு லக்கினமும் முக்கியம். லக்கினம் பாபகர்த்தாரி அமைப்பில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் சூரியன் மறுபக்கம் செவ்வாய் . குணக்கேட்டிற்கு இவைதான் காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 4-9-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த குண கேடான ஜாதக அமைப்பிற்கான காரணங்கள்
துலா லக்கின திருவாதிரை நக்ஷத்திர மிதுன ராசி ஜாதகரின் லக்கினத்திலேயே கேது அமர்ந்து ராகுவின் பார்வை யில் உள்ளது . மேலும் மனோகாரகன் சந்திரன் ராகுவின் நேரடி பார்வையில் உள்ளது. இது நிலையற்ற மனோ நிலையை குறிக்கும்.
மேலும் ஜாதகரின் லக்கினத்தின் பகை கிரகமான செவ்வாயின் எட்டாம் பார்வை சந்திரனின் மேல் உள்ளதால் ஜாதகர் எவரின் பேச்சையும் கேட்காமல் கட்டுக்கடங்காமல் இருந்தார்.
இதற்கு ஜாதகரின் இளம் வயதில் வந்த ஆறாம் அதிபதி குரு தசை மேலும் இந்த தன்மையை அதிக படுத்தியது. ஏனென்றால் குருவும் ஜாதகருக்கு பகை கிரகமாக உள்ளது...
குருவின் தசைக்கு பின் வந்த சனி தசையில் ஜாதகரின் கோப தன்மை குறைந்த பாடில்லை. ஏனென்றால் ஜாதகரின் பாதகாதிபதி சூரியனின் நேரடி பார்வையில் சனி உள்ளதால் அதிக கோபத்தையும் அடங்க தன்மையும் ஏற்படுத்தியது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, August 28, 2020 10:18:00 AM
---------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1.லக்கினாதிபதி சுக்ரன் லாபஸ்தானத்தில் குருவுடன் நல்ல நிலையில்
2 . லக்கினத்தில் விரயாதிபதி புதனுடன் கேது
3 .இரண்டில் செவ்வாய் (ஜாதகன் அதிரடியாக பேசுபவன் மேலும் செவ்வாயின் எட்டாம் பார்வை மனோகாரகன் சந்திரனின் மீது
மேலும் மாந்தியுடன் சேர்ந்ததால் மனநிலை பாதிக்க பட்டிருக்கிறார்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, August 28, 2020 12:32:00 PM
---------------------------------------------
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
இன்று வகுப்பறை ஜோதிடம் புத்தகம் அஞ்சலில் வந்தது.
வலைத்தளத்தில் படிப்பதை விட புத்தக வடிவில் படிப்பது மனதில் எளிதில் நிற்கிறது.
மிக்க நன்றி ஐயா
கண்ணன்
Friday, August 28, 2020 12:36:00 PM
---------------------------------------------------
3
Blogger K. Ravi said...
ஐயா,
லக்கினம் பாவகர்தாரி தோஷத்தில் உள்ளது'. ராகுவின் பார்வை.
ராகு மற்றும் கேதுவால் பாதிப்பு. லக்கினாதிபதி சுக்கிரன் ஆறாம் அதிபதி குருசுடன் சேர்க்கை. மேலும் எட்டாம் அதிபதியும் அவரே. எனவே லக்கினம் அவுட்.
மனோகாரகன் சந்திரன் அவனுடைய வீட்டிற்கு 12 இல் மேலும் செவ்வாயின் பார்வையில்.
இரண்டாம் வீடான வாக்குஸ்தாதி செவ்வாய் காட்சியுடன் இருந்தும் மாந்தியுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார்.
லக்கினத்திற்கும் சந்திரனுக்கும் சுபர் பார்வையில்லை
லாபாதிபதி சூரியன் விரயஸ்தானத்தில் சனியின் பார்வையில்
மேலும்
தசை புக்திகளும் சரியில்லை.
கே. ரவி
Friday, August 28, 2020 12:50:00 PM
------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 27 செப்டமபர் 1967 ல் காலை 8.56 மணிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்
1.லக்கினம் பாபகர்தாரியில் மாட்டியுள்ளது.
2.இரண்டாம் இடத்தில் செவ்வாய் தடித்த கோபமான வார்த்தைகளைப் பேச வைத்தது.
3. சூரியன் சனி பகைவர்கள் எதிர் எதிரே நின்றது
4. 4 தாய் ஸ்தானாதிபதி சனி 6ல் நின்றதால் தாயுடன் இணக்கம் இல்லை.
5. 9ம் அதிபதி புதன் லக்கினத்தில் கேதுவுடன் இணைந்தது மற்றும் பாபகர்தாரியில் மாட்டியது தந்தையினுறவை பாதித்தது.
6. 3க்கு உரிய குரு 11ல் அமர்ந்தாலும் எட்டாம் அதிபதியுடன் நின்றது சகோதர உறவை பாதித்தது.
7.மனோகாரகனான சந்திரன் தன் வீட்டுக்கு 12 ல் அமர்ந்து செவ்வாய் பார்வை பட்டதால் மனப்பிறழ்வு, கோபதாபங்கள் எல்லாம் வந்தன.
8.சனியும் சுகரன் குருவும் 6க்கு8ஆக நின்றது பல கோளாறுகளை உண்டாக்கியது.
Friday, August 28, 2020 1:16:00 PM
-----------------------------------------------
5
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா 28/8/20 புதிருக்கு பதில்.ஜாதகர் துலா லக்னம் மிதுன ராசி. லக்ன பாவம் ராசி பாபகத்தரி யோகத்தில் இருப்பதும் மன ஸ்தானாதிபதி சனி ஆறில் அமர்ந்து சூரியன் பார்வை பெற்றதும் மனோகாரகன் சந்திரன் பாப வலு பெற்ற செவ்வாய் பகவானின் எட்டாம் பார்வையில் இருப்பதும் அம்சத்தில் பாபர் வீட்டில் இருப்பதும் ஜாதகர் குணக் கேட்டுக்கு காரணமாகும் .ஜாதகர் வாக்கு ஸ்தானம் கெட்டதால் இவர் பேச்சால் எல்லோரையும் பகைத்து கொள்வார்.
Friday, August 28, 2020 9:20:00 PM
--------------------------------------------
6
Blogger Haripriya Sathish said...
சார், இந்த பகுதிக்கு நான் புதியவள். வகுப்பில் சேர்ந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது, இதுவரை 40 படங்கள் தான் படித்துள்ளேன், இருந்தாலும் ஆர்வக்கோளாறால் , எனக்கு தெரிந்த அரைகுறை ஞானத்தில் எனது பதிலை பதிவிடுகிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். .
லக்கினத்தில் கேது உள்ளதால், ஜாதகர் மூடியாக இருப்பர். இரண்டாம் இடத்தில மந்தி உள்ளதால், குடும்பத்தினருடன் ஒத்துப்போகவில்லை, மற்றும் ஆட்சிபெற்ற செவ்வாயால் கோபக்காரராக இருப்பர். மூன்றாம் இடத்தை சனி பார்ப்பதால் சகோதரர்களுடன் ஒத்துப்போகாது, மற்றும் ராகு தசை நடப்பதால் தீய குணங்கள் பழக்க வழக்கங்கள் ஏற்பட்டிருக்கும்.
Saturday, August 29, 2020 1:18:00 PM
-----------------------------------------------------
7
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில், லக்னம் பாபகத்திரி தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, லக்னாதிபதி தனது பகை வீட்டில் இன்னொரு ஜென்ம பகைவரும், லக்னத்திற்கு 6ஆம் இட அதிபதியுமான குருவுடன் இணைந்து பலவீனமாக உள்ளார். லக்னத்தில் திக்பலம் பெற்று அமர்ந்துள்ள புதன், கேதுவின் பிடியிலும், பாபகத்திரி தோஷத்தினாலும் பாதிக்கப்பட்டு பலவீனம் அடைந்துள்ளார். ஆக லக்னம், லக்னாதிபதி, லக்னத்தில் அமர்ந்த கிரகம் அனைத்தும் பலவீனம் அடைந்துள்ளது.
வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடனும், மாந்தியுடனும் கூடி அமர்ந்துள்ள அங்காரகன் தனது 8வது சிறப்புப் பார்வையால், தன் வீட்டுக்கு 12ல் மறைந்துள்ள மனோகாரகனான தேய்பிறைச் சந்திரனை பார்ப்பதால் மனோகாரகன் சந்திரன் மிகவும் பலவீனமடைந்துள்ளார்.
லக்ன கேந்திரம் தவிர்த்து, பிற கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் ஒரு சுப கிரகமும் இடம் பெறவில்லை.
மாதுர் காரகனான சந்திரன் தன் வீட்டுக்கு 12லும், பிதுர் காரகரான சூரியன் லக்னத்திற்கு 12லும் மறைந்துள்ள நிலையில், சனி பகவான் சமசப்தமாக சூரியனை பார்ப்பதால் தாய், தந்தையருடன் ஜாதகருக்கு இணக்கமான உறவு இல்லாத நிலை.
இக்காரணங்களால் ஜாதகர் குணக்கேடானவராக செயல்பட்டுள்ளார்.
நன் மதிப்புக்களுடன்,
இராம. சீனிவாசு,
திருச்செங்கோடு.
Saturday, August 29, 2020 7:57:00 PM
----------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
வணக்கம்.
துலாம் இலக்கினம்,மிதுன ராசி ஜாதகர்.அவரின் குணக் கேடான நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
1) இலக்கினம் கத்திரியின் பிடியிலுள்ளது. அதிபதி சுக்கிரன் 11ல் சிம்ம ராசியில் அமர்ந்தாலும், அது அவரின் பகை வீடு. கூடவே அவரின் எதிரி ஆறாம் அதிபதி தேவகுரு, மேலும் வலுவற்ற நிலையை உண்டாக்கினார்.
2) நல்ல புத்தி மற்றும் பண்புகளை கொடுக்கும் காரகன் புதன், இலக்கினத்தில் அமர்வு நல்லதுதான் என்றாலும், கேது பகவானின் கூட்டணியில், பாப கர்த்தாரி தோசத்திலகப்பட்டு கெட்டுள்ளார். ஏழிலுள்ள ராகுவும் தன் பார்வையால் நிலைமையை மேலும் கெடுத்தார்.
3) மனோகாரகன் சந்திரன் ராகுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். அவரின் மேல் குடும்ப ஸ்தானாதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வை விழுவது நல்லதல்ல.
4) குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் மாந்தி + அதனதிபதி செவ்வாயின் கூட்டணி.
இப்படி இலக்கினம், இரண்டாமிடம், புத்தி+ மனோகாரகர்கள் கெட்டதனால் ஜாதகருக்கு இந்த நிலைமை உண்டாயிற்று.
Saturday, August 29, 2020 9:13:00 PM
------------------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
The following are the main reasons for the person is not having good behaviour
1.in the Lagnam bhuthan kethu serkai affects mind
2.Sevvai in Irandam idanam makes person speaking harsh words and always angry.
3.Lagnathipathy sukran also in simmam( pagai veetil).so less help from him
4.Sani looks sooriyan 7th paarvai affects son father relationship.
5.brothers sthanam (3rd house ) athipathi guru is with sukran In 12th place
6. Manakkaragan Chandran having Mars paarvai
Saturday, August 29, 2020 10:36:00 PM
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.20

Astrology: ஜோதிடம், புதிர்: குணக் கேடான இளைஞனின் ஜாதகம்!



Astrology: ஜோதிடம், புதிர்: குணக் கேடான இளைஞனின் ஜாதகம்!

கீழே ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். திருவாதிரை நட்சத்திரம். துலா லக்கினம். அன்பர் குணக்கேடானவர். எதையும் யார் பேச்சையும் கேட்க மாட்டார். எல்லாவற்றையும் எதிர்பார்ப்பிற்கு மாறாகச் செய்வார். அத்துடன் Moody, short tempered மனநிலை பிறன்றவர், குறுகிய மனநிலை உடையவர். குடும்பத்திலுள்ள பெற்றோர்களுக்கும் உடன் பிறப்புக்களுக்கும் தொல்லையாக இருந்தார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 30-8-2020 ஞாயிற்றுக் கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.8.20

இறையாற்றல் மீது நம்பிக்கை வையுங்கள்!!!


இறையாற்றல் மீது நம்பிக்கை வையுங்கள்!!!

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் இறை நம்பிக்கை அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை வழிபட்டு விட்டு செய்வதும், ஒவ்வொரு நன்மையிலும் நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ இறை நம்பிக்கை கிடையாது.

"திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்கு கடவுளே தேவையில்லை" என்று அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். இறை நம்பிக்கையுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை . உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது இறை நம்பிக்கையுள்ள அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் பட வில்லையென்ற போதிலும் , கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.

"பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி" என்றது. இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது.

"கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன்" என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.  பக்தியுள்ள அணில் சொன்னது,

"கடவுளை நம்புற நாங்கள்லாம் துன்பப்பட்டாலும் கைவிடப் படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. அதனால கடவுள் எங்கள கீழே தள்ளி விடப்பட அனுமதித்தால் அதுலயும் காரணம் இருக்கும் " என்றது. ஆமாமாம் . கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை " மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது,
கண்களை மூடி விண்ணை நோக்கி,

"கடவுளே, இந்த அவமானத்துக்கும், வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க" என்றது. அது கண்களைத் திறக்கும் போது  கண்ட  காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

"டேய், உன் பக்கத்துல பாம்புடா" என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் மெதுவாய் கேட்டது! கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பிடமிருந்து தப்பிக்க மரத்தில் இருந்து கீழே விழுந்தது! தப்பித்தது!! தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணர்ந்த்து !

*சில வேளையில் நாம் விழும் போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்மை காப்பதற்காகவே..!*

*நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடமில்லை..!!* *💗சிந்தனை கதை...*
-------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.20

மகிழ்ந்து பாராட்டிய வகுப்பறை மாணவர்



மகிழ்ந்து பாராட்டிய வகுப்பறை மாணவர்

வகுப்பறை ஜோதிடம் தொகுதி 2

manick vasagam
Aug 25, 2020, 10:29 PM (7 hours ago)
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
to SP.VR.SUBBAIYA, me
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
உயர் திரு வாத்தியார் அவர்களுக்கு.

வகுப்பறை ஜோதிடம் தொகுதி 2 கிடைத்தது
புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வகுப்பறையில் பல மாதங்கள், வருடங்கள் வந்தவை  ஒரு நேர்த்தியான  வரிசையில் உள்ளன
நான் உங்கள் வகுப்பறை கண்டுபிடிப்பதற்கு முன் ஆர்வத்தில் ஜாதக அலங்காரம், ஜாதக சிந்தாமணி, மகரிஷி ஜெமினி ஜோதிட விளக்கம், குமாரசுவாமி யம், கிருஷ்ணமூர்த்தி ஜோதிட விளக்கம், உத்தர காலாமிர்தம், புலிப்பாணி ஜோதிடம், How to Judge A Horoscope by B. V. Raman போன்ற பல புத்தகங்கள் வாங்கி படித்தாலும் புரியாமல் இருந்தது, உங்கள் வகுப்பறை படித்த பின்னர் ஜோதிடம் பிடிபட்டது

வகுப்பறை பாடம் மற்றும் Galaxy 2007 & Stars 2015ல் வந்த முக்கிய மேல்நிலைப் பாடங்கள் உள்ளதால் தேடாமல் ஓர் இடத்தில் உள்ளது சிறப்பு

உங்களுடைய வகுப்பறை ஜோதிடம் 1&2 மற்றும் வரப்போகும் புத்தகங்கள் புதிதாக கற்போர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், கற்றவர்களுக்கு சிறந்த கையேடு ஆக இருக்கும்

என்னை பற்றி
சிறு வயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை.

Speak Japanese lived about 6 years in Tokyo, teach Japanese to many people, now also teaching. Worked few Japanese companies and did many interpretation, my last company closed India operations in last November due to low price market. Waiting for corona to fix my next project. 

இப்படிக்கு
உங்கள் மாணவன்
மாணிக்கவாசகம்
----------------------------------------------------------------------
இந்த அன்பான மாணவக் கண்மணிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்றென்றும் அன்புடன்
வாத்தியார்
=================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

ஆடிப் பெருக்கும் அன்பர் வந்தியத்தேவனும்!!!!


ஆடிப் பெருக்கும் அன்பர் வந்தியத்தேவனும்!!!!

29.10.1950 அன்று வெளியான கல்கி வார இதழில் ஒரு புதிய தொடர்கதை ஆரம்பமானது. பெரிய அளவில் எந்த விதமான முன் அறிவிப்போ,மிகைப்படுத்தலோ இல்லாமல் இராஜராஜரின் இளவயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு தொடர்கதை என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது.

பொன்னியின் செல்வனின் பயணம் இவ்வாறு எளிமையாகவே தொடங்கியது.

மூன்று ஆண்டுகள் கல்கி வார இதழில் கதை தொடராக வந்தது,அதன் பின்னர் பலமுறை கல்கி வார இதழில் தொடராகவும்,முழுப்புத்தகமும் வெளிவந்தது.

இந்த கதையின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும்  இருக்கும் என்பதை கல்கியே எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

கதையின் தலைப்பு அருள்மொழிவர்மரை குறிப்பிட்டாலும்,நிஜத்தில் நாயகன் வந்தியத்தேவன் தான்.

யார் இந்த வந்தியத்தேவன்? எந்த அரச பரம்பரையில் வந்தவர்?
வாணர் குலம்,கீழைச்சாளுக்கியம்,வேங்கி,இராஷ்டிரகூடம் என பல்வேறு (குழப்பத்தோடு கூடிய) கருத்துக்கள் உள்ளது. ஏதாவது போரில் ஈடுபட்டரா? சோழர் படை பிரிவில் தளபதியா அல்லது சோழர் துணையோடு  எதாவது ஒரு  நிலப்பரப்பை ஆட்சி செய்தாரா? இதற்கான பதில் இன்னும் ஆதாரத்தோடு தெரியவில்லை. ஆனாலும் 1950 ல்ஆரம்பித்த வந்தியத்தேவனின்  பயணம் இன்னும் உற்சாகம் குறையாமல் தொடர்கிறது.

நட்பு,காதல்,குறும்புத்தனம்,சமயோஜித புத்தி என  பல்வேறு குணங்களால் பலபேரின் (குறிப்பாக பெண்கள்) ஆதர்ச நாயகனாக இன்றும் வலம் வருவதற்கு காரணம் கல்கியின் மந்திர எழுத்துக்கள்.

குந்தவையின் காதல் கணவனாக நாம் அறிந்த வந்தியத்தேவனுக்கு நிஜத்தில் ஐந்து மனைவிகள் என்று குழுவில் ஒரு முறை கல்வெட்டு புகைப்படத்தோடு பதிவிட்ட போது, இல்லை நீங்கள் சொல்வது பொய்,வந்தியத்தேவன் அப்படிபட்டவர் இல்லை என பொங்கியவர்கள் ஏராளம்.கல்கியின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி அது.

 வந்தியத்தேவன் ஆடி பெருக்கு அன்று வீரநாராயண ஏரிக்கரையில் இருந்து மீண்டும் ஒரு முறை தனது சோழ தேசத்து பயணத்தை தொடங்குகிறார்.அன்போடு வரவேற்போம் நமது வந்தியத்தேவனை!!!!!!

(ஆண்டவர் கனி முகநூல் பதிவு) நன்றி
--------------------------------------------
படிதத்தில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.20

காது எதற்கு இருக்கிறது - சொல்லுங்கள் பார்க்கலாம்!!!!


காது எதற்கு இருக்கிறது - சொல்லுங்கள் பார்க்கலாம்!!!!

காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.!

ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது     
#நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும்  சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

#ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்?  மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

#பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

#ஆனால் மனிதனால் அது முடியும், அவன்  வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா"  திரவத்தினால் தான். 

#ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,

#காது கேட்பதற்கும்  காக்லியா திரவம்  உதவுகிறது,  ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் நம் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

 #10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,

 #முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

#காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?

#அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே நம்மைக் கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.

#அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.
இறைவனின் படைப்பில் அற்புதமே இது.......... அதுமட்டுமல்ல தினமும் காலையில் தோப்புக்கரணம் போடுவது மிகவும் காதுகளுக்கு நல்லது....
----------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.8.20

காலத்தின் ஆளுமை பற்றி வாலி அவர்கள் அசத்தலாகச் சொன்னது!!!!


காலத்தின் ஆளுமை பற்றி வாலி அவர்கள் அசத்தலாகச் சொன்னது!!!!

*கவிஞர் வாலி ஐயாவின் "நினைவு நாடாக்கள்"*

*செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது.*

இதைத்தான் 'விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!

*இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்கவைக்கிறது!*

'இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படிஒரு சிரமம்?

ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.

அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவிவிட்டு, ''வாலி! உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!''

எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கி யவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?

என் வீட்டு வாசலில் ஒரு Taxi; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் - நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப் போனேன்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன்தான்; இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.

'ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன் -

அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!

காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை! இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!

என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய *திரு.இளங்கோவன்!*

என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான *திரு.சந்திரபாபு அவர்கள்!*

நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் *திருமதி.சாவித்திரி அவர்கள்!*

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - *திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்!*

இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: *அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!*
-------------------------------------------------------
படித்ததில் நெகிழ்ந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.20

Astrology: Quiz: புதிர்: 21-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 21-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி மேஷ லக்கினம். ஜாதகருக்கு நண்பருடன் சேர்ந்து கூட்டாகத் தொழில் செய்ய ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு அதில் விருப்பமில்லை. குடும்ப ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் கூட்டுத் தொழில் கூடாது என்று சொல்லி விட்டார். ஜாதக ரீதியான காரணத்தையும் அவர் சொல்லித் தேற்றி அனுப்பினார், ஜாதகப்படி கூட்டுத் தொழில் கூடாது என்று அவர் சொன்னதற்கான காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: 7ம் வீடு திருமணத்திற்கு மட்டுமல்ல. Partnerships களுக்கும் அதுதான் இடம். அங்கே செவ்வாயும் ராகுவும் கூட்டாக இருக்கிறார்கள். அது நன்மையான சேர்க்கையல்ல. லக்கினாதிபதியாக இருந்தாலும் 7ம் இடம் செவ்வாய்க்கு உகந்த இடம் அல்ல. தீமையானது. ராகுவுடன் சேர்ந்ததால் கூட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும். ஏமாற்றம், தோல்வி, துரோகச் செயல்கள் போன்றவை ஏற்படும். ஆகவே கூட்டு உகந்ததல்ல!. 7ல் இருக்கும் லக்கினாதிபதி செவ்வாய் 4ம் பார்வையாக 10ம் வீட்டைப் பார்ப்பதால் ஜாதகர் தனியாகவே தொழில் செய்யலாம். வெற்றியும் பெறலாம். அதற்கான அமைப்பு அது. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 28-8-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த ஜாதகரின் கூட்டு தொழில் இல்லாமையிற்கான காரணங்கள் :
மேஷ லக்கின ஹஸ்த நக்ஷத்திர கன்னி ராசி ஜாதகரின் கூட்டு தொழில் பற்றிய நிலை அறிய ஜாதகரின் ஏழாம் வீட்டையும் பத்தாம் வீட்டையும் பார்க்க வேண்டும்.
ஜாதகரின் ஏழாம் வீடு ராகுவினால் சூழ பட்டு இருக்கிறது.. ஜாதகரின் ஏழாம் வீட்டில் ராகு அவரின் சொந்த நக்ஷத்திரமான சுவாதி நக்ஷத்திரத்தில் லக்கின அதிபதி செவ்வாயோடு இணைந்து உள்ளார். இது கூட்டு தொழிலை கெடுக்கும் நிலை ஆகும். மேலும் லக்கின அதிபதி அதன் பகை வீட்டில் ஏழாம் வீட்டில் உள்ளதால் ராஹுவுடன் உள்ளதால் கூட்டு தொழில் செய்வது சரிவராது.
மேலும் மேஷ லக்கினத்திற்கு தொழில் காரகனும் லாப அதிபதியும் மான சனி எட்டில் தனது எதிரி வீட்டில் எட்டாம் வீட்டில் மறைந்து இருப்பது தொழில் லாபத்தை தடை செய்யும் நிலை ஆகும்.
ஆதலால் கூட்டு தொழில் செய்வது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, August 21, 2020 8:45:00 AM
-----------------------------------------------
2
Blogger ஜகதீஸ்வரன் said...
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 7ஆம் இடம் பாதிப்பு. லக்னாதிபதி ராகுவுடன் கிரகணம்.ஜீவனாதிபதி சனி பாதிப்பு.
Friday, August 21, 2020 9:40:00 AM
-----------------------------------------------------
3
Blogger C Jeevanantham said...
Dear Sir,
The person's 7th place Rahu, and 8th lord placement in 7th is not good for companion and not good for the partnership business.
Thanking you,
Friday, August 21, 2020 12:49:00 PM
-----------------------------------------------------
4
Blogger Tamil selvan K. said...
க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம்
ஐயா, வணக்கம்!
"Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏன் ஒத்து வராது?"
பதில்: தொழில் காரகன், பத்தாம் வீட்டு அதிபதியுமான சனியும், வியாபரத்திற்கு காரகன், மூன்று மற்றும் ஆறாம் வீட்டதிபதியுமான புதனும் எட்டாம் வீட்டில் சூரியனுடன் அஸ்தமனம் ஆகி விட்டனர். தொழில் சேய்ய மறுக்கப் பெற்ற ஜாதகம். பத்தாம் வீட்டின் மேல் குருவின் பார்வை உள்ளது ஜீவனித்திற்கு குறைவில்லை. ஏதாவது பிழையிருந்தால் திருத்திக் கொள்கிறேன்.
Friday, August 21, 2020 7:47:00 PM
--------------------------------------------------
5
Blogger gkc said...
Partner என்றாலே அது 7 ஆம் பவாகம் தான். அது life partner and business partner. இங்கு 7 இல் செவ்வாய் ராகு சேர்க்கை. செவ்வாய் 8 ஆம் அதிபதி வேறு. அம்சத்தில் செவ்வாய் சனி உடன் சேர்க்கை.7 ஆம் அதிபதி அம்சத்தில் நீசம் வேறு. அதனால் தொழில் கூட்டு ஆகாது.
Friday, August 21, 2020 10:15:00 PM
---------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்தை நேரடி பார்வையில் வைத்துள்ளார் ராகுவுடன் கூட்டு
2 .பத்தாம் அதிபதி சனி ஆறாம் அதிபதி புதனுடன் ஆறாம் வீட்டில் (தொழிலில் ஏமாற வாய்ப்பு உள்ளது)
3 .மேலும் ஆறாம் அதிபதி செவ்வாய் ,பனிரெண்டாம் அதிபதி குரு பார்வை பத்தாம் வீட்டின் மேல்
4 .இரண்டாம் அதிபதி சுக்கிரன் தன வீட்டிற்கு எட்டில்
இந்த காரணத்தால் ஜாதகருக்கு கூட்டு தொழில் கூடாது
தங்களின் பதிலை ஆவலுடன் நன்றி
Saturday, August 22, 2020 2:14:00 PM
-----------------------------------------------------------
7
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா. 22/8/20 புதிருக்கு பதில் ஜாதகர் மேச லக்னம். கன்னி ராசி. ஏழுக்குடைய சுக்ரன் ராசியில் பகை வீட்டில் அமர்ந்து அம்சத்தில் குருவுடன் இணைந்து நீசம் பெற்றார்.ஏழில் எட்டுக்குடைய செவ்வாய் அமர்ந்து ராகு கேதுவும் இணைந்து ஏழாமிடம் பலம் இழந்தது.எனவே கூட்டு தொழில் ஒத்து வராது.
Saturday, August 22, 2020 6:52:00 PM
--------------------------------------------------------
8
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் கூட்டுத் தொழிலுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய இடமான ஏழாம் பாவகத்தில் இயற்கைப் பாவர்களான செவ்வாய் மற்றும் ராகு இருவரும் அமர்ந்துள்ளதோடு, பாவ கத்திரி தோசத்தாலும் 7ம் பாவகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஜாதகர் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவது சிறப்பாக அமையாது.
நன்மதிப்புக்களுடன்
இராம. சீனிவாசு, திருச்செங்கோடு.
Saturday, August 22, 2020 11:01:00 PM
-------------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
Assumed DOB 18/11/1957 15/55 hrs Chennai.
Agree with jadagar’s astrologer and parents.
A connection between the 7th house and the 2nd or 11th houses indicates income from partnership.
2nd house owner/ 7th house owner Venus is in 8th /3rd place from 2nd house and 7th house. Also in amsam Venus is debilitation in kanni house.
Rahu is sitting in 7th house lead to conflict with partner always.
Virayastanathpathy guru in 6th house looking 9th Drishti for 2nd house
Saturday, August 22, 2020 11:52:00 PM
==================================================================



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏன் ஒத்து வராது?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு கூட்டுத் தொழில் ஏன் ஒத்து வராது?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஹஸ்த நட்சத்திரம் கன்னி. ராசி மேஷ லக்கினம். ஜாதகருக்கு நண்பருடன் சேர்ந்து கூட்டாகத் தொழில் செய்ய ஆசை. ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு அதில் விருப்பமில்லை. குடும்ப ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் கூட்டுத் தொழில் கூடாது என்று சொல்லி விட்டார். ஜாதக ரீதியான காரணத்தையும் அவ்ர் சொல்லித் தேற்றி அனுப்பினார், ஜாஅதகப்படி கூட்டுத் தொழில் கூடாது என்று அவர் சொன்னதற்கான காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 23-8-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.8.20

நீங்களும் நானும் சகட யோகமும்!


நீங்களும் நானும் சகட யோகமும்!

வாழ்க்கை இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதுதான் சகடயோகம் உணர்த்தும் உண்மை.

குருவுக்கு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த சகட யோகம் உருவாகிறது.

இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்திருக்கும்.

ஒரு தொகை செலவழிந்த பிறகே, மற்றொரு தொகை வந்து சேரும்.

ஆகவே உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு சகடயோகம் உள்ளதா என்று பாருங்கள்!

இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை எதிர் கொள்ளத் தயங்காதீர்கள்

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.20

கடவுளின் அமிர்தம் எது?


கடவுளின் அமிர்தம் எது?

பெருங்காயம் ஃபெருலா அசஃபொட்டிடா ( Ferula asafoetida )  என்ற செடியின் வேர், தண்டிலிருந்து சுரக்கும்  ஒருவித பசையிலிருந்து  கிடைக்கிறது .

இயற்கையாக கிடைக்கும் பெருங்காயம் துர்நாற்றம் கொண்டதாக இருப்பதால் இதை ஆரம்ப காலத்தில் 'சைத்தானின் கழிவு' என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

ஆனால் இது பல வைரஸ்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது என்று ஒரு காலத்தில் நிரூபணம் ஆனதும் 'கடவுளின் அமிர்தம் ' என்று கொண்டாடப்பட்டது.

இது பெர்சியாவை பிறப்பிடமாகக் கொண்டது என்றாலும் துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது.

பெருங்காயச் செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும் வேரையும் கீறிவிட்டு அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால் அதுதான் பெருங்காயம்.

இதில் வெள்ளை பெருங்காயம் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

கலப்படம் இல்லாத பெருங்காயம் எளிதில் தீப்பற்றிக் கொண்டு எரியும் தன்மை கொண்டது. பெருங்காய வாசனை காற்றில் கரையக் கூடியது என்பதால் அதை திறந்து வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் அது வெறும் பெருங்காய டப்பா.

பெருங்காயத்தைப் பற்றி  இந்த தகவல் உங்களுக்கு உபயோகப் படலாம். அதற்காகத்தான் பதிவிட்டேன்

படத்தில் இருப்பது பெருங்காயச் செடி.

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.20

நீதிக் கதை: நாம் எப்படியிருக்க வேண்டும்?


நீதிக் கதை: நாம் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்!

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உ௩்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளு௩்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்! ஒருவர் சூரியன்! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்!

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம், இரண்டு இளமை! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று பூமி! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தா௩்கும்! மற்றொன்று மரம்! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்! அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்! ஒன்று முடி! மற்றொன்று நகம்! இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்! உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன்! மற்றவன் அவனுக்கு துதிபாடும் அமைச்சன்! என்றாள்!

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றாள்! காளிதாசர் கைகூப்பி வண௩்கியதும், தேவி தாசரைப்பார்த்து காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! நீ மனிதனாகவே இரு என்று தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்!

           இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும்! பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை யென வாழ்க்கையை இயந்திரமயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!

அதனால்தான் ஒருமா௩்கனிக்காக பெற்றோரை விட்டு பிரிந்த முருகனை ஈசனும், பார்வதியும் பிள்ளையாரும் சேர்ந்து அழைத்து வந்து அவர் செய்ய வேண்டிய கடமையை உணர்த்கியதாக புராணங்கள் கூறுகின்றன!

நீ நீயாகவே (மனிதனாகவே ) இரு! 
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.20

தொழில் நுட்பம் ( Technology) வாழ்க!


தொழில் நுட்பம் ( Technology) வாழ்க!

அந்தக் காலத்தில் தபால் தந்தி அலுவலகத்திற்குச் சென்று கால் புக் செய்து காத்திருந்துதான் வெளியூரில் உள்ள உறவினர்களுடன் பேச முடியும். பேசுவதற்கு இணைப்பு கிடைக்கும் வரை காத்துக் கிடக்க வேண்டும்!

இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பையில் போனை வைத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. புது இணைப்பை ஒரு மணி நேரத்தில் வாங்கி விடலாம். கடிதம் எழுதும் பழக்கம் எல்லாம் ஒழிந்து விட்டது. தந்தி எல்லாம் காலாவதியாகிவிட்டது.

ஆஃப்செட் பிரிண்டிங் முறையிலும், பிளேட் பிரிண்டிங் முறையிலும் 1000 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தால்தான் அச்சிட்டுத் தருவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. டிஜிட்டல் டெக்னாலஜி முறையில் 50 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தாலும் அச்சடித்துக் கொடுப்பார்கள்.

அதனால் என்னைப் போன்ற Writer cum Publisher களுக்கெல்லாம் கடவுள் கொடுத்த வரம் போல் ஆகிவிட்டது,

ஒரு நல்லதில் ஒரு கெட்டதும் இருப்பதைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் அச்சடிக்கும் செலவு இரு மடங்காகிவிட்டது. 60 ரூபாய்க்கு அடிக்க வேண்டிய புத்தகத்தை 120 ரூபாய் கொடுத்து அடிக்க வேண்டும். அதனால் என்ன? ஆயிரக் கணக்கில் புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொண்டு முன்பு அவதிப் பட்டதைப் போன்ற அவதி இப்போது இல்லை!

வரத்தைப் பெற்றவுடன் முதல் வேலையாக 2 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளாக எழுதி, ஒரு மாசு இதழில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கதைகளை எல்லாம் (மொத்தம் 40 சிறுகதைகள்) புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு புத்தகத்திலும் 20 கதைகள்.

புத்தகங்களின் பெயர்கள்: செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் - தொகுதி 5 (192 பக்கங்கள்) மற்றும் தொகுதி 6 (144 பக்கங்கள்)

உங்களின் பார்வைக்காக புத்தகங்களின் அட்டைப் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
SP VR சுப்பையா
--------------------------------------------------------------------------

===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.8.20

Astrology: Quiz: புதிர்: 14-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 14-8-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி. மகர லக்கினம். ஜாதகருக்கு அவருடைய 20 முதல் 25 வயது வரை எல்லா வகையிலும் தொடர் தோல்விகள். நொந்து போய்விட்டார், தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!! ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: 10ம் வீட்டதிபதி சுக்கிரன் 7ல் அமர்ந்திருப்பது நன்மையானது. ஆனால் அவருடன் 8ம் அதிபதி சூரியனும் அமர்ந்ததுதான் கேடானது. உடன் கேதுவும் இருந்து கெடுதல்களை அதிகப்படுத்தியது. ஜாதகருக்கு 20 வயது முதல் 26 வயது வரை சூரியனின் மகா திசை. அந்த திசை முழுவதும் கேடாக - தோல்விகளாகவே இருந்தது. அடுத்து வந்த சந்திர திசையில் எல்லாம் தலைகீழாக மாறியது. 7ம் அதிபதி சந்திரன் 4ல் (கேந்திர ஸ்தானத்தில் இருப்பதைக் கவனியுங்கள்) வெற்றிக்கான அமைப்பு அது. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 11 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 21-8-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 12 ஆகஸ்டு 1971 அன்று மாலை 5 மணி 42 நிமிடங்கள் 30 வினாடிக்குப் பிறந்த‌வர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
அவருடைய 20வது வயதில் சரியாக 1 ஸெப் 1991ல் சூரிய தசா துவங்கிவிடடது.சூரியன் ஜாதகருக்கு 8ம் இடத்துக்காரன். சூரியன் தன் வீட்டுக்கு 12ல் மறைந்து ராகு, கேது சம்பந்தப்பட்டார். 8ம் இடத்துக்காரனான சூரியன் தன் தசாவில் ஜாதகருக்குப் பல தொடர் தோல்விகளைக் கொடுத்தார்.
Friday, August 14, 2020 5:17:00 AM
----------------------------------------------------
2
Blogger ஜகதீஸ்வரன் said...
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: சனி மற்றும் செவ்வாயின் பார்வையை வாங்கிய அஷ்டாமதிபதி சூரியன் தசை. மகர லக்னத்திற்கு வரக்கூடாத தசை.
Friday, August 14, 2020 9:32:00 AM
-----------------------------------------------
3
Blogger selvaspk said...
Reasons:
1. Weak saturn as lagnathipathy
2. 9th lord in 8th house
3. Weak Mars in lagna shadowed by Raghu
4. 6/8, 12/2 Jupiter moon positioned
Friday, August 14, 2020 11:23:00 AM
------------------------------------------------
4
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த ஜாதகரின் தொடர் தோல்விகளுக்கான காரணங்கள் :
மகர லக்கின அஸ்வினி நக்ஷத்திர மேஷ ராசி ஜாதகரின் லக்கினத்திலேயே பாதகாதிபதி செவ்வாய் உச்சமாக ராகுவின் பிடியில் உள்ளது
ஜாதகரின் 20 முதல் 25 வயதுவரை லக்கினத்திற்கு அசுப கிரகமான எட்டாம் அதிபதி சூரியனின் தசை நடைபெற்றது எட்டாம் அதிபதியின் தசை யோடு ராகுவின் பார்வை பெற்ற சூரியன், உச்ச செவ்வாய் யின் பார்வையால் , எட்டாம் அதிபதி சூரியனின் தசை அவரின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது .
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, August 14, 2020 1:52:00 PM
---------------------------------------------------------
5
Blogger K. Ravi said...
ஆசானுக்கு வணக்கங்கள்,
ஜாதகருக்கு 20 வயது முதல் 26 வயது வரை சூரிய திசை
சூரியன் எட்டாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில். தன வீட்டிற்கு 12 இல்
கேதுவோடு சேர்க்கை. ராகு, செவ்வாய்,மற்றும் சனியின் பார்வை.
இதனால் சூரிய திசை அவரை பாடாய் படுத்திவிட்டது.
கே. ரவி
Friday, August 14, 2020 4:41:00 PM
-----------------------------------------------------------
6
Blogger gkc said...
Sivalingam Coimbatore
Mahara லக்னத்திற்கு வர கூடாத சூரிய தசா தொடங்கியதும் பிரச்சினை ஆரம்பித்தது. சூரியன் எட்டாம் அதிபதி ஆறாம் அதிபதி புதன் சாரம் பெற்று உட்ச செவ்வாய் பார்வை பெற்று சனி கிரகத்தின் பார்வையும் பெற்று பாபதுவம் பெற்றது. அதனால் சூரிய தசா தொடங்கியதும் கடன் நோய் எதிரிகளால் தொல்லை அவமானம் வம்பு வழக்கு அத்தனையும் கொடுத்து இருப்பார்.7 இல் சூரியன் சுக்ரணுடன் இணைந்து இருப்பதால் காதல் பிரச்சினையும் வர வாய்ப்பு உண்டு.
Friday, August 14, 2020 10:26:00 PM
------------------------------------------------------------
7
Blogger க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம். (tamilselvanabr@gmail.com) said...
Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு தொடர்ந்து தோல்விகள் ஏன்?
பதில் : 1.முதல் தசை சுக்கிரனுடைய தசை - 20 ஆண்டுகள் குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும், நன்மையை செய்யவில்லை, 2.இரண்டாம் தசை: சூரிய தசை - எட்டாம் அதிபதியின் தசை நன்மையை செய்யாது அது மட்டுமல்லாமல் லத்னாதிபதிக்கு எதிரியின் தசை ஆகவே ஜாதகருக்கு 26 வயது வரை எந்த வித பயனும் இல்லை
Saturday, August 15, 2020 1:19:00 PM
----------------------------------------------------------
8
Blogger csubramoniam said...
ஐயா , கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சனி திரிகோணத்தில்
2 .எட்டாம் அதிபதி சூரியன் லக்கினத்தை நேரடி பார்வையில் வைத்துள்ளார்
3 .ஜாதகரின் இருவது வயது வரை சுக்கிரனின் திசை முடிந்து சூரிய திசையில் எல்லா இன்னல்களையும் அனுபவித்து உள்ளார் ,கேந்திரத்தில் அமர்ந்த சந்திரனுடைய திசை ஆரம்பமானவுடன் நிலை சீராகியுள்ளது
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Saturday, August 15, 2020 5:12:00 PM
------------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
வணக்கம்.
மகர லக்கினம், மேஷ ராசி ஜாதகர்.
அவருடைய 20 முதல் 25 வயது வரை எல்லா வகையிலும் தொடர் தோல்விகள்.அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதி சனி பகவான் நவாம்சத்தில் நீசமடைந்து 5மிடத்தில் 12ம் அதிபதி குரு பகவானின் நேரடி பார்வையில் அமர்ந்துள்ளார்.
2) அவரின் 20 வயதில் அட்டமாதிபதி சூரியனின் தசை ஆரம்பித்து 26 வயது வரை நடந்துள்ளது.
3) சூரியன் 7மிடத்தில் கேது மற்றும் யோகாதிபதி சுக்கிரனின் கூட்டணியில் அமர்ந்துள்ளார்.
4) அவரின் மேல் லக்கினத்திலுள்ள செவ்வாய் மற்றும் ராகுவின் பார்வையுள்ளது.
5) 5லுள்ள சனியின் மூன்றாம் தனிப்பார்வை வேறு சூரியனின் மேலுள்ளது.தவிர விரையாதிபதி குருவின் 9ம் பார்வையும் உள்ளது.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு எல்லா வகையிலும் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு நொந்து போய்விட்டார்.
அட்டமாதிபதி தன் தசையில் கஷ்டங்களைத்தான் கொடுப்பார். ஆனால், கடவுள் மேல் நம்பிக்கை வைத்து பக்தியுடன் பிரார்த்தனை செய்து வந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோபலம் ஏற்படும்.
Saturday, August 15, 2020 8:34:00 PM
---------------------------------------------------------
10
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
ஜாதகர் தமது 20 வயது முதல் 25 வயது வரை தொடர் தோல்விகள் அடைந்ததற்கு காரணம், அவ்வயதில் அவருக்கு நடைபெற்ற எட்டவன் (சூரிய தசை) தசையே முழு காரணம் ஆகும். மேலும் எட்டவன் தசையில் வந்த அனைத்து புத்திநாதர்களும் ஜாதகத்தில் வலுவிலந்து அவர்கள் புத்தியில் எவ்வித நன்மையும் செய்ய முடியாமல் போனதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு எவ்வித நன்மையும் ஏற்படாதவாறு தடை செய்ததும் ஜாதகர் நொந்து போனதற்கு காரணமாகும்.
நன்மதிப்புக்களுடன்,
இராம. சீனிவாசு,
திருச்செங்கோடு.
Saturday, August 15, 2020 11:16:00 PM
--------------------------------------------------------
11
Blogger RAMVIDVISHAL said...
Reason is sun dasa sun under control of kethu
Rahu direct drishthi on sun/Venus and kethu
Saturn’s 3rd drishthi And Mars 7th drishthi In 7th place
8th sthanithipahy sun hidden its 12th place so sun dasa gave trouble in may be parents/ loss of father/ non support/ love affair trouble since Venus also affected due to kethu and mars dosam/ imprisonment
Subsequent moon dasa stabilizes his life since Jupiter drishthi on saturn lagnathipathy
Sunday, August 16, 2020 4:20:00 AM
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு தொடர்ந்து தோல்விகள் ஏன்?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு தொடர்ந்து தோல்விகள் ஏன்?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி.மகர லக்கினம். ஜாதகருக்கு அவருடைய 20 முதல் 25 வயது வரை எல்லா வகையிலும் தொடர் தோல்விகள். நொந்து போய்விட்டார், தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 16-8-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.20

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை!!!!

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை!!!!

ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.

கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார்.

வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும்.

ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,

வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.

எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ!

அதனால் சொல்லித்தான் தீர வேண்டும். எம்பெருமானே!

எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை.

நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே!

என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா?

நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது.

நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!

எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...

என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.

எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.

ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்...

எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?

அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது.

ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள்.

கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்.

ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை.

எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும்.

பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.

இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்...

அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.
எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே.

ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை.

உன் கோரிக்கை நியாயமானது தான்.

ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன்.

அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.

எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.
உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.

ஈசன் சொன்னார்...

பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில்,

நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும்.

சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்' என்றார்.

எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.

அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;
சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது.

சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று.

அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை.

என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது.

நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து; மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.

ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...

கோரிக்கையில் தவறில்லை நந்தி...

 அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என.
அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும்.

நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது.

*இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.*

*வாழ்வின் ரகசியம் இது தான்.*

*ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள்.*

*அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி.*

அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை.

அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார்.

இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்..
---------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!