30.6.19

Astrology: ஜோதிடம்: 10-5-2019ம் தேதி புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 10-5-2019ம் தேதி புதிருக்கான விடை!!!!

ஒன்றிற்கு இரண்டு ஏன்?

அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ”ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் (That is more than one marriage) 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மனத்திற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை:
கன்னி லக்கினம். லக்கினாதிபதி நீசம். அத்த்துடன் எட்டாம் அதிபதியுடன் சேர்க்கை. மேலும் 7ம் அதிபதியும் எட்டாம் அதியும் பரிவர்த்தனை. அது நன்மையான பரிவர்த்தனை அல்ல! 2ல் சனி. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை. 7ம் அதிபதி 8ல் அது மனைவிக்கு கேடானது.
ஜாதகருக்கு துவக்கத்தில் சுமார் 11 ஆண்டுகள் சனி மகா திசை. பிறகு 17 ஆண்டுகள் புதன் மகா திசை (லக்கினாதிபதியின் திசை) அதில் திருமணம் நடந்தது.  பிறகு வந்த கேது மகா திசையில் மனைவி நோய் வாய் பட்டு இறந்து விட்டார். பிறகு சுக்கிர மகாதிசை குரு புத்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இந்த புதிர் போட்டியில் 15 அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடல் நிலை காரணமாக பதிலை வழங்குவதில் அதீத தாமதம் ஏற்பட்டது. அதற்காக அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
1
Blogger dhanasekar said...
2 la sani so family life affecte and 7 chavvay so shevvay thosam
Friday, May 10, 2019 11:18:00 AM
----------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா,கல்விக்கான பதில்
1 .இரண்டில் சனி
2 .லக்கினாதிபதி புதன் லக்கினத்தை நேரடி பார்வையில் வைத்துள்ளார்
2 .எட்டாம் அதிபதி செவ்வாயின் பிடியில் புதன்
3 . செவ்வாயின் நேரடி பார்வையில் இரண்டாம் வீடும் லக்கினமும்
௪.இரண்டாம் அதிபதி சுக்ரன் தன வீட்டை நேரடி பார்வையில் வைத்துள்ளார் (காரகன் பாபா நாசம் )
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, May 10, 2019 3:44:00 PM
--------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 7 மார்ச் 1953 அன்று மாலை 7 20 போல் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
7ம் இடமான மனைவிக்கான இடம் 8ம் அதிபனால் நிரப்பப் பட்டுள்ளது. 7ம் அதிபன் 8ல் சென்று அமர்ந்தார். இது பரிவர்தனை என்றாலும் மனைவிக்கு ஆகாது.எட்டாம் அதிபனுக்கும் களத்திரகாரகனுக்கும் சனியின் பார்வை.
ஜாதகருக்கு புதன் தசா(லக்கினாதிபதி தசா, குருபுக்தியில் 7ம் அதிபன் புக்தியில்) 25 வயதில் திருமணம் நட‌ந்தது. லக்கினாதிபதியும் 7ல் நின்றதால் அந்த திருமணம் நடந்தது.
அதன் பின்னர் கேது தசாவில் 7 ஆண்டுகள். மனைவிக்கு நோய் வாய்ப்பட்ட நிலை இருந்திருக்கும். ஏனெனில் மனைவிக்காகப் பார்க்கப்பட வேண்டிய 3,7,11 ஸ்தானங்களில் 11ல் கேது. 11ம் அதிபதி சந்திரன் 3ல் அமர்ந்து மாந்தியுடன் நீசம்,இவையெல்லாம் சேர்ந்து முதல் கல்யாணம் சோகத்தில் முடிந்தது.
சுக்கிரன் குருவுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானமான இரண்டைப் பார்ப்பது மீண்டும் திருமணத்தை நடத்திவைத்தது.அது சுக்கிரத்சா சுக்கிர புக்தி யில் நடந்தது.சுக்கிரன் இரண்டாம் அதிபதியும் ஆனதால் அவர் பார்வையும் 7ம் அதிபன் பார்வைய்ம் குடும்ப ஸ்தானத்தினைப் பார்ப்பதால் மீண்டும் குடும்பம் அமைந்தது. சுக்கிர தசாவும் உத‌வியது.
Friday, May 10, 2019 4:12:00 PM
-----------------------------------------
4
Blogger ஐ எஸ் ஃபெர்னாண்டோ said...
ஆசிரியர் அவர்களுக்கு
ராசியில் நீசம் அடைந்த லக்னாதிபதி புதன், அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்தாலும், அம்சத்தில் அவர் உச்சம் பெற்று, சந்திரனுடன் கூடி வலுப் பெற்றுள்ளார். களஸ்திர ஸ்தானாதிபதி குரு எட்டில் மறைந்தாலும், செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று, ஆட்சி பலம் அடைந்துள்ளார். களஸ்திர காரகன் சுக்கிரன் அம்சத்தில் ஆட்சி வலுப் பெற்றுள்ளார். எனவே, லக்னாதிபதி புதன் தசையில், களஸ்திர ஸ்தானதிபதி குரு புக்தியில் திருமணம் நடந்தது.
ஏழில் செவ்வாய் அமர்ந்ததும், ஏழுக்கு உடையவன், பரிவர்த்தனை பெற்றாலும், 8-ல் மறைந்ததும், வர்கோத்தம உச்சம் பெற்று அளவுக்கு மீறிய கெடுவலு பெற்ற சனி களஸ்திர காரகன் சுக்கிரனையும் ஏழுக்குரிய குருவையும் பார்த்ததாலும், ராசிக்கு ஏழுக்குடைய சுக்கிரன் ராசிக்கு ஆறில் மறைந்ததாலும், சுக்கிர தசை சுய புக்தியில் ஜாதகர் மனைவியை இழந்தார். ஜாதகத்தில் குடும்ப, புத்திர ஸ்தானங்கள் கெட்டுள்ளதும், ராசிக்கு 2, 5-ம் அதிபதியும், குடும்ப, புத்திர காரகனான குரு ராசிக்கு 6-ல் மறைந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பதினொன்றாம் வீட்டதிபதி சந்திரன் நீசம் அடைந்தாலும், அம்சத்தில் அவர் உச்ச புதனோடு இணைந்து வலுப் பெற்றுள்ளார். ஆகவே, ஜாதகருக்கு சுக்கிர தசை, சுய புக்தி இறுதியில் மறுமணம் நடந்தது. - ஐ எஸ் ஃபெர்னாண்டோ
Saturday, May 11, 2019 12:18:00 PM
-----------------------------------------
5
Blogger Ram Venkat said...
ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்?
ஆசிரியருக்கு வணக்கம்.
கன்னி லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் நடந்தது. 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மணத்திற்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி புதன் 7ல் நீசமடைந்து அட்டமாதிபதி வர்கோத்தம‌ செவ்வாயுடன் கூட்டணியில் கத்திரியின் பிடியுலுள்ளார்.
2) களத்திராதிபதி குருவும், குடும்பாதிபதி சுக்கிரனும் 8ல் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளனர்.
3) குடும்ப ஸ்தானமான 2ல் உச்சமடைந்த வக்கிர வர்கோத்தம சனி அமர்ந்துள்ளார். அவரின் நேர் பார்வையில் களத்திர குரு மற்றும் குடும்ப சுக்கிரன்.
4) அட்டமாதிபதி செவ்வாயின் 8ம் தனிப்பார்வை 2மிடம் மற்றும் அதிலுள்ள சனியின் மேலுள்ளது.
6) 2மிடத்திற்கு 22 பரல்கள், 7மிடத்திற்கோ 20 பரல்கள் மட்டுமே.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் தன் 37 வயதில் வந்த சுக்கிர தசை, சுக்கிர புத்தி, சனியின் அந்தரத்தில் முதல் மனைவியை இழக்க நேரிட்டது.
7ம் அதிபதி குரு பகவான், 8ல் மறைந்து அட்டமாதிபதி வர்கோத்தம செவ்வாயுடன் தைன்ய பரிவர்த்தனையில் கெட்டு வலுவிழந்ததால் (சுய பரல் 4), ஜாதகருக்கு இரு தார தோசம் உண்டானது. 40 வயதில் சுக்கிரன் தசை, சந்திரன் புத்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
வாத்தியாரின் அலசல் விடைக்கு காத்திருக்கும்,
இராம. வெங்கடேஷ்.
Saturday, May 11, 2019 3:18:00 PM
-----------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
7இல் எட்டாம் இட அதிபதி மற்றும் விரயாதிபதி நீசபுதன் ஆகியோரின் பாதிப்பு.
களத்திர காரகன் மற்றும் களத்திர காரகாதிபதி எட்டில் மறைவு, இவர்கள் மேல் சனியின் பார்வை.
7-8 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றது காரணம் ஆகும்.
Sunday, May 12, 2019 8:55:00 AM
------------------------------------------
7
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேள்விக்கான பதில்
இரண்டு திருமணங்கள் ஏற்பட்ட திற்கான காரணங்கள்
ஏழாம் இடத்து அதிபதி குரு மற்றும் எட்டாம் இடத்து அதிபதி செவ்வாய் பரிவர்த்தனை. , இது கேடு விளைவிக்கும் பரிவர்த்தனை ஆகும்.
ஏழாம் இடத்தில் லக்கின அதிபதி புதன் நீசம். மேலும் எட்டாம் இடத்து அதிபதி செவ்வாயுடன் கூட்டு. இது முதல் திருமணத்தை காலி செய்தது.
இரண்டாம் இடத்தில் சனி உச்சம் பெற்று , களத்திர காரகன் சுக்கிரன் மற்றும் குருவின் பார்வை பெற்றதால் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
Monday, May 13, 2019 10:23:00 AM
-------------------------------------------------
8
Blogger classroom2007 said...
இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
ஏழாம் வீட்டில் தீய கிரகம் செவ்வாய் அமர்ந்து இருப்பதால் முதல் திருமணம் பிரிவில் முடிந்தது.
லக்கினாதிபதி புதன் 7ல் மீனா ராசியில் நீசம்.
Monday, May 13, 2019 10:57:00 PM
---------------------------------------------
9
Blogger Raman Santhanam said...
Dear Sir.,
I am waiting for the complete predictions, but not recd yet, Please advise.
Tuesday, May 14, 2019 9:50:00 PM
------------------------------------------------
10
Blogger Unknown said...
வணக்கம் ஐயா.வியாழன் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றதால் உபய லக்னத்திற்கு கேந்திராதிபத்திய தோசம். இரண்டாம் அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி எட்டில் மறைந்து வர்கோத்தம உச்ச பலம் பெற்ற ஆறாம் அதிபதி சனியின் பார்வை.எட்டாம் அதிபதி செவ்வாய் எழில் வர்கோத்தம பலம் பெற்றதும், ஆறாம் அதிபதி சனி குடும்ப ஸ்தானத்தில் உச்ச வர்கோத்தம பெற்றதும் முக்கியமான காரணம்.
குறிப்பு.பதினோராவது அதிபதி நீசம் மற்றும் பதினோராம் இடத்திற்கு சனி பார்வை.
நன்றி.
அருள்.
Wednesday, May 15, 2019 12:21:00 PM
------------------------------------------
11
Blogger Unknown said...
Sir, 3rd Lord in 7th house indicates more than one marriage
Friday, May 17, 2019 3:54:00 PM
-------------------------------------------
Blogger kmr.krishnan said...
Sir how are you ? We are anxious. You are absent for more than a week!!
Sunday, May 19, 2019 8:32:00 AM
---------------------------------------------
12
Blogger Vaalga valamudan-Saravanan said...
வியாழன் மற்றும் சுக்கிரன் இணைவு, இந்த அமைப்பு கண்டிப்பாக திருமணத்தில் தீமையினை செய்யும்...இவர் இருவரும் ஒருவரை ஒருவர் பங்கப்படுத்தி பலவீனமடைவார்கள். இந்த இருவரையும் உச்ச சனி நேரிடையாக பார்த்து, மேலும் பலம் குறைந்து திருமண பந்தம் சீக்கிரத்தில் முடிவுற்றது...
Friday, May 31, 2019 5:44:00 PM
---------------------------------------------------------------------
13
Blogger Selvaraj said...
1) 2m edathil Sani ucham parukirar.
2) 7m edathu athipathi 8il maraigirar + Sani 7m parvaiyaga parkirar.
3) kalatharakaragan sukiran 8il maraigirar + Sani 7m parvaiyaga parkirar.
4) 7m edathil erukkum sevvai, 2m edathil erukkum saniyai 8m parvaiyaga parkirar.
5) 7m edathil sevvai + buthanudan erukirar. Buthan erattai Graham nu solluvanga, athuvum oru karanamaga erukkalam.
6) sevvaiyum, Guruvum parivarthanai yogam nu vachikita (8il sevvai ucham, sani - sevvai sarkai + 7m parvaiyaga parkirargal
Nan kuriyathil thavaru erunthal mannikkavum.
Sunday, June 02, 2019 10:31:00 AM
--------------------------------------------------
14
Blogger Santhanam Salem said...
விருட்சிக ராசியிலேயே லாபஸ்தான அதிபதி சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலை
ஒருவரின் ஜாதகத்திலே களத்திரம் எனப்படுகின்ற 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின நிலை அமைவதும் களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெறுவதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.
அதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு.
4 ஆம் அதிபதிக் கிரகம், களத்திரஸ்தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை.
செவ்வாய் தோஷமுடன் அட்டமாதிபதிக் கிரகம் களத்திரஸ்தான நிலையிலே அமைவதும் சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ இருதாரப் பலன் கொடுக்கும் நிலையுண்டு.
Santhanam, salem
Tuesday, June 04, 2019 9:13:00 PM
-----------------------------------------------
15
Blogger Umaganesh said...
ஏழாம் வீட்டில்) இரண்டு
தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு அலலது
பெண்ணாக இருந்தால் ஜாதகிக்குத் தீமை.
அது களத்திர ஸ்தானம். திருமண வாழ்க்கைக்கான
இடம் அங்கே பெண் ஜாதகத்தில் இரண்டு தீய
கிரகங்கள் இருந்தால் அவளுடைய மண வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். நிம்மதியில்லாத
மண வாழ்க்கை அமைந்து விடும.
அந்த இடம் குருவின் பார்வை பெற்றிருந்தால் அந்தத்
தீமை குறைந்து விடும் அல்லது முற்றிலும் விலகி
விடும். குரு பார்ககக் கோடி தோஷம் நீங்கும் என்
கிறார்களே அதுதான் இது!
ஆண் ஜாதகமாக இருந்தால் இதே அமைப்பிற்கு
அவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு
ஏற்பட்டு விடும் ( தொடர்பு ஏற்பட்டால் சந்தோஷமா?
அல்ல!) ஆரம்பத்தில் அவனுக்கு அது சந்தோஷமாகத்தான்
இருக்கும். பின்னால் அவஸ்தையாக மாறிவிடும்###
இது உங்களின் ஒரு பழைய பதிவில் படித்தேன்.இதுவாக இருக்குமோ என ஊகிக்கிறேன்.
Wednesday, June 05, 2019 7:08:00 PM
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.6.19

எவரையும் விடமாட்டார் சனீஷ்வரன்!!!!!


எவரையும் விடமாட்டார் சனீஷ்வரன்!!!!!

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர்.

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள்.

 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து,''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.

அதற்கு சனீஸ்வரன்,

'இதுவரை இல்லை.

ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.

'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க,

'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.

''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.

''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பிடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.

''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.

''ஆம் ஸ்வாமி!

நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன்.

ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பிடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.

''ஏழரை நாட்கள் என்ன,ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பிடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான்,

பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.

ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது.

அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாழிகை கடந்தது.

சிவபெருமான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.

சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.

''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பிடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.

'சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.

ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை.

திரேதா யுகத்தில்,

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பிடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.

இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.

 வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது,

அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள்.என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.

'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பிடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி,  ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப் பிடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.

''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்'' என்றான் அனுமன்.

''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.

''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்!  எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.

அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது.'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன்,''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால்,  நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள்.  முந்தைய யுகத்தில்
தங்களை நான் பிடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.

''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பிடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,

''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.

''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார்.

பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பிடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து  🌿 மங்குசனி,  🌹தங்குசனி,  🌿பொங்குசனி, என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள்
நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.6.19

Astrology: ஜோதிடம்: இயற்கைக்கு மாறாக கிடைக்கும் யோகம்!


Astrology: ஜோதிடம்: இயற்கைக்கு மாறாக கிடைக்கும் யோகம்!

Vipareetha Raja Yoga

விபரீத ராஜயோகம்

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் அதை விபரீதம் என்போம்.

அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

இன்று அதை விவரித்து எழுதியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------
ராஜயோகம் என்பது அதிகாரம் மற்றும் உயர்வான நிலைக்கு ஜாதகனை உயர்த்தும் யோகம் ஆகும். கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகள் தங்களின் சேர்க்கையால் (கூட்டால்) அல்லது பார்வையால் உருவாக்கிக் கொடுப்பது ராஜயோகம்  ஆகும். அதற்குச் சிறந்த உதாரணம் ”தர்மகர்மாதிபதி யோகம்” 9ஆம், 10ஆம் அதிபதிகளின் சேர்க்கையால் அந்த யோகம் ஏற்படும். அவர்களின் பரிவர்த்தனையாலும் அது ஏற்படும். அதனால் ஜாதகனுக்கு அதீத செல்வமும், செல்வாக்கும், பதவியும் அதிகாரமும் கிடைக்கும்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual reception (parivartan), or mutual aspect, the planetary combination as Dharma Karma Adhipati Yoga. As soon as a Raja yoga of this prominence shows up in a chart, it is natural  to anticipate obtaining lots of wealth and power.

மேலே குறிப்பிட்டுள்ளது வழக்கமான ராஜ யோகத்திற்கு உதாரணம்!ஆனால் விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி, சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி,
மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?
------------------------------------------------------------------
The vipareeta rajayogas are somewhat different from the normal  rajayogas as mentioned above. These rajayogas are formed due to downfall of someone, based on which the native's fortune is reversed. The downfall can be of an enemy or a someone near to the native,
however the combinations are somewhat different for both circumstances.

இந்த விபரீதம் என்னும் சொல், மாறுபட்டு வருவதைக் குறிக்கும். The term vipareeta imply reversal of something

ஒன்றின் வீழ்ச்சி, அல்லது ஒருவரின் வீழ்ச்சி, உங்களுக்கு சகாயமாகிக் கிடைப்பதுதான் விபரீத ராஜயோகம்.

”அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்பக் காலியாகும்?” என்று கிராமங்களில் கூறுவார்களே, அதை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும்
அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.
---------------------------------------------------------------------------------
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.6.19

மீண்டும் வாத்தியார்!


மீண்டும் வாத்தியார்!

பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்தது போல் என்று கிராமங்களில் சொல்வார்கள். அதாவது ஒருவன் பனை மர உச்சியில் இருந்து பிடி தவறி தடால் என்று கீழே விழுந்து அடிபட்டு எழ முடியாத நிலையில் இருக்கும் போது, அந்தப் பக்கமாக தெறி கெட்டு ஓடி வந்த கடா மாடு ஒன்று அவன் மேல் ஏறி அவனை மிதித்து விட்டுச் சென்றதாம்.

அதைப்போல் என் உடல் நிலையில் எனக்கு அடுத்தடுத்து இரண்டு பிரச்சினைகள். முதலில் எனது இரத்தத்தில் அமிலம் அதிகமாக உள்ளது என்று கோவை KMCH மருத்துவ மனையில் சிகள்கிச்சை அளித்தார்கள். அது முடிந்து வெளி வந்த மறு வாரமே இரண்டு சக்கர வாகன விபத்தில் காலில் அடிபட்டு விட்டது.

இரண்டுமாக தொடர்ந்து என்னை 45 நாட்கள் படுத்தி எடுத்து விட்டன.

இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. பூரண நலம்.

நாளை முதல் பதிவுகள் தொடரும்.

கால தாமதத்திற்கு அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அன்பிற்கு என்றும் நான் கட்டுப்பட்டவன்!!!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================================================